Friday, January 28, 2011

துனிஷியா : அரபு ஆட்சியாளர்களுக்கு ஓர் அபாய சங்கு

துனிஷியா : அரபு ஆட்சியாளர்களுக்கு ஓர் அபாய சங்கு
சிறு சிறு கோஷ்டி சண்டைகளையும், நடிகைகள் ஆடை அணியாததையும் எல்லாம் தலைப்பு செய்தியாக வெளியிடும் இந்திய ஊடகங்கள் அதிலும் குறிப்பாக தமிழக ஊடகங்கள் துனிஷியாவில் நடந்த மக்கள் எழுச்சியை குறித்து எவ்வித பரபரப்பும் காட்டாதது அதியசமில்லை. ஆனால் தமிழ் முஸ்லீம் குழுமங்களிலும் கூட இது அவ்வளவாக விவாதிக்கப்படாததும் அரபுலகில் நிகழவிருக்கும் மிகப் பெரும் மாற்றத்திற்கு கட்டியம் கூறவிருக்கும் இந்நிகழ்வு குறித்து இந்திய முஸ்லீம் தலைமைகளும் மெளனம் காப்பது தான் ஆச்சர்யமளிக்கிறது.
சரி, அப்படி என்ன தான் நடந்தது துனிஷியாவில் ? துனிஷியாவில் பிற அரபு நாடுகளை போல் சர்வதிகார ஆட்சியின் பிடியில் இருந்தது. 1987 அக்டோபரில் பிரதம மந்திரியாக அமர்த்தப்பட்டு பின் ரத்தமில்லா புரட்சியின் மூலம் நவம்பர் 1987ல் ஆட்சியை பிடித்த ஜைனுல் ஆபிதின் பின் அலி 23 ஆண்டு காலமாக தன் எதிர்ப்பாளர்களை துவம்சம் செய்து போலி தேர்தல்கள் மூலம் விடாப்பிடியாக ஆட்சி செய்து கொண்டிருந்த பின் அலி மக்களின் பேரெழுச்சியின் காரணமாக பதவி விலகி சவூதி அரேபியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
வேலை வாய்ப்பின்மையும் வறுமையும் மக்களை ஆட்டி படைத்தாலும் பின் அலி சுகவாசியாய் ராஜ வாழ்க்கை வாழ்ந்துள்ளார். எதிர்கட்சிகளை குறிப்பாக ஊழல்மய ஆட்சியை அகற்றி இஸ்லாமிய ஆட்சியை நிறுவ உழைத்த இஸ்லாமிய இயக்கத்தினரை சித்ரவதை செய்து சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தினார். மக்கள் மேல் தான் கட்டவிழ்த்து விட்ட கொடுமைகளுக்கெல்லாம் அமெரிக்கா பாணியில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கட்டுபடுத்தவே செய்ததாக நாடகமாடினார்.
பின் அலியின் 23 ஆண்டு கால கொடூர சர்வதிகார ஆட்சியின் முடிவு இப்படி தான் ஆரம்பமானது. வேலை வாய்ப்பின்றி அவதிப்பட்ட ஏராளமான துனிஷியர்களில் ஒரு இளைஞன் வேலை தர கோரி அதிகார வர்க்கத்திடம் முறையிட்டு அங்கு அவமானப்படுத்தப்பட்டதால் மனமுடைந்து தன்னை நெருப்பில் பொசுக்கி கொண்டு இறந்து போனான். அவனின் மரணத்தை தியாகமாக சித்தரித்து ஓட்டு மொத்த துனிசியா மக்களும் தங்கள் 23 ஆண்டு கால கோபத்தை வெளிக்காட்ட கிடைத்த தருணமாக வீதியில் வந்து போராட, போராடிய மக்களை ராணுவம் சுட்டு தள்ள, கடைசியில் மக்கள் எதிர்ப்பை தாங்க இயலாமல் அதிபர் பின் அலி நாட்டை விட்டு ஓடி சவூதி அரேபியாவில் தஞ்சம் புகுந்தார்.
இம்மக்கள் எழுச்சி துனிஷியாவை விட மத்திய கிழக்கு உள்ளிட்ட அரபு நாடுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. துனிஷியாவை தூக்கி எறிந்த மக்கள் எழுச்சி தங்கள் நாட்டிலும் ஏற்பட்டு விடுமோ என்ற பயம் எல்லா நாட்டு தலைவர்களுக்கும் ஏற்பட்டு உள்ளது. இது வரை பின் அலியின் ஆட்சியை புகழ்ந்து வந்த அரபு நாடுகள் இம்மக்கள் எழுச்சிக்கு பிறகு மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல் இவ்வெழுச்சியை கண்டிக்காமலும் வரவேற்காமலும் பொதுவாக துனிஷியாவில் அமைதி திரும்ப வேண்டும் எனும் தொனியில் அறிக்கை விட்டுள்ளன.
பின் அலி நாட்டை விட்டு தப்பி ஓடியதுமே ஏற்கனவே ஏமனில் சர்வதிகார ஆட்சியை நடத்தி வரும் அலி அப்துல்லா சலேஹ்வுக்கு எதிராக பல்கலைகழக மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் “ கவிழ்க்கப்படும் முன் விலகி கொள்ளுங்கள்” எனும் பதாகையை தாங்கியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் துனிஷியாவின் மக்கள் எழுச்சியை பார்த்து பிற அரபு மக்களும் ஆட்சியாளருக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
ஏமனை போலவே தற்போது சவூதியும் உள்நாட்டு குழப்பத்தில் மூழ்கும் ஆபத்தில் உள்ளது. மன்னர் அப்துல்லாவின் உடல்நலக் குறைவால் அடுத்து யார் ஆட்சிக்கு வருவது என்ற வாரிசுரிமை போராட்டத்தால் சவூதி அரச குடும்பம் கலகலத்து கிடக்கிறது. இளவரசர் ஃபைசல் மன்னர் ஆவதற்கு வாய்ப்புகள் இருந்தாலும் அவர் அமெரிக்காவுக்கு எதிர்ப்பானவர் என்பதால் அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிப்பதாக வந்துள்ள செய்திகள் ஒரு முஸ்லீம் நாட்டின் மன்னராக யார் வர வேண்டும் என்பதை கூட முடிவு செய்யும் பொறுப்பை எடுக்க லாயக்கற்ற நிலையை நிதர்சனமாய் காட்டுகிறது.
துனிஷியாவை தங்கள் நட்பு நாடாக பாவித்து வந்த அமெரிக்கா இப்போராட்டத்திற்கு பின் பட்டும் படாமல் காவல்துறையால் 40 நபர்கள் கொல்லப்பட்டது போன்ற அதிகார அத்துமீறல்கள் தவிர்த்து கொள்ளப்பட வேண்டியது என்றும் இனி மேலாவது ஜனநாயக பாதைக்கு துனிஷியா செல்லும் என்று எதிர்பார்ப்பதாக ஜனநாயக கோஷத்தை எழுப்பியுள்ளது. இஸ்லாமிய எழுச்சிக்கு பாடுபடுவோரை எல்லாம் நாட்டை விட்டு துரத்தும் அல்லது நாட்டுக்குள்ளே சிறை வைக்கும் சவூதி அரேபியா, முஸ்லீம் உம்மாவின் செல்வங்களை கொள்ளையடித்த ஒரு சர்வதிகாரிக்கு, இஸ்லாம் இம்மண்ணில் மேலோங்க பாடுபட்டோரை சித்ரவதை செய்தவருக்கு தஞ்சமடைய இடம் கொடுத்துள்ளது ஆச்சரியமான ஒன்றல்ல.
சிரியாவிலிருந்து வெளிவரும் அரசு ஆதரவு பத்திரிகையான அல்-வதான் தன் தலையங்கத்தில் “ அமெரிக்காவுக்கும் மேற்குலகுக்கும் விலை போன அரசுகள் துனிஷியாவிலிருந்து பாடம் கற்க வேண்டும். மக்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ளாமல் தங்களுக்கு சாதகமாக முடிவு எடுக்காமல் தங்கள் புத்தியை அடகு வைத்து விட்டு மேற்குலகின் வசதிக்கேற்ப முடிவு எடுக்கும் நாடுகளுக்கு தங்களுக்கு பிரச்னை வந்தால் அவர்கள் கை விட்டு விடுவார்கள்” என்பதை உணர வேண்டும் என்று எழுதியுள்ளது.
துனிஷியா ஆட்சி கவிழ்ப்பு பற்றி கருத்து தெரிவித்த ஜோர்டானின் மிகப் பெரும் இஸ்லாமிய அமைப்பான இக்வானுல் முஸ்லீமின் இனி மேலாவது அரபு நாடுகள் இஸ்லாமின் அடிப்படையில் சரியான சீர்திருத்தத்தை மேற் கொள்ள வேண்டும் என்றும் சர்வதிகாரமே அரபு நாடுகளில் காணப்படும் அனைத்து தீமைகளுக்கும் ஆணி வேர் என்று வர்ணித்துள்ளது. துனிஷியாவை போலவே தாங்கள் இஸ்லாமிய மலர்ச்சிக்கு உழைப்பதால் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளது.
இன்னொரு மத்திய கிழக்கு நாடான குவைத்தின் எதிர்கட்சி இஸ்லாமிய உறுப்பினர் வலீத் அல் தபத்ததி துனிஷிய மக்களின் தைரியத்தை பாராட்டுவதாகவும் தங்கள் மக்களை ஒடுக்கி இஸ்லாமிய தனித்துவத்தை கைவிட்டு மேற்குலகின் பாதையில் அடியெடுத்து செல்ல முற்படும் எல்லா நாடுகளுக்கும் இதே நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.
துனிஷியாவில் நிகழ்ந்துள்ள நிகழ்வுகளிலிருந்து இஸ்லாத்தின் பெயரால் ஆட்சி செய்து கொண்டு இஸ்லாத்தை ஆளும் கொள்கையாக இப்புவியில் நிலைநாட்ட பாடுபடுவோரை சித்ரவதை செய்யும் அரசுகள், முஸ்லீம் உம்மாவை சில சட்ட பிரச்னைகளில் மாத்திரம் காலம் முழுக்க உழல வைக்கும் அடிப்படையில் செயல்படும் முஸ்லீம் அரசுகள் பாடம் கற்க வேண்டும்.
இறைவன் தந்த கனிம வளங்களை கொண்டு கொழிக்கும் பொருளாதரத்தை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆடம்பர ஹோட்டல்கள், தீவுகள், விமானங்கள் என சொகுசாகவும், துப்பாக்கியே தூக்க தெரியாத ராணுவத்துக்காக பில்லியன் கணக்கில் அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை கொள்முதல் செய்து அமெரிக்காவிற்கு அடிமை சேவகம் செய்யும் அரபு நாடுகள் அப்பணத்தை ஏழை முஸ்லீம் நாடுகளுக்கு பொருளாதார ரீதியாக உதவ வேண்டும். தங்களிடம் எஞ்சியுள்ள பணத்தை தானமாகவோ அல்லது வட்டியில்லா கடனாகனோ கொடுத்து அவர்களையும் வளப்படுத்த வேண்டும். மன்னராட்சியை ஒழித்து, அமெரிக்காவுக்கு கால் பிடிக்காமல் இஸ்லாத்தை முழுமையாய் நிலைநாட்ட முயன்றால் குறைந்த பட்சம் மத்திய கிழக்கு நாடுகள் ஓரே குடையின் கீழ் வரலாம். அவை விரிந்து 56 முஸ்லீம் நாடுகளும் ஓரே தலைமையின் கீழ் கிலாபத்தை புனர்நிர்மாணம் செய்ய அது அடித்தளமாய் விளங்கலாம். இஸ்லாத்திற்கு முரணாக செயல்படுவதை நிறுத்தா விட்டால், துனிஷியாவிலிருந்து பாடம் கற்காவிட்டால் துனிஷியா உங்கள் வீட்டு கதவையும் தட்டும். அடக்கி வைக்கப்பட்டுள்ள முஸ்லீம் உம்மாவின் எழுச்சி வெடித்து சிதறும் போது நிச்சயம் ஆட்சியாளர்கள் தூக்கி எறியப்படுவார்கள். முஸ்லீம் ஆட்சியாளர்களே துனிஷியா உங்களுக்கு ஓர் அபாய சங்கு, கிலாபத்திற்கு இது ஓர் எழுச்சி கீதம்.

சமூகத்தின் உண்மையான பிரச்னை - தலைமைத்துவமே

சமூகத்தின் உண்மையான பிரச்னை - தலைமைத்துவமே
முஸ்லீம் உம்மாவின் நலனில் அக்கறை கொண்ட முஸ்லீம் சிந்தனையாளர்கள் சிலர் முஸ்லீம் நாடுகள் பொருளாதர வலிமை இல்லாததே முஸ்லீம் உம்மாவின் பிரச்னைக்கு காரணம் என நினைப்பது தவறு. ஏனென்றால் உலகின் இயற்கை வளங்களில் 60 சதவிகிதம் முஸ்லீம் நாடுகளிலேயே கிடைக்கின்றன. 54 முஸ்லீம் நாடுகளில் ஒன்றான பாகிஸ்தான் மாத்திரம் ப்ரான்ஸ் மற்றும் இங்கிலாத்தின் கூட்டு நிலப்பரப்பை கொண்டுள்ளது. உலகின் 6வது மிகப் பெரும் மனித வளமும் கொண்டுள்ளது. மேலும் பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, இந்தோனேஷியா, சிரியா, சவூதி அரேபியா மற்றும் மொராக்காவின் ராணுவ பலத்தை ஒன்றாக்கினால் ஈராக்கில் இருந்த அமெரிக்க படைகளை விட 20 மடங்கு அதிக ராணுவத்தை திரட்ட முடியும். எனவே முஸ்லீம் நாடுகளில் வளங்களில் பிரச்னை இல்லை. அவை பங்கிடுப்படுவதில் தான் பிரச்னை உள்ளது. இஸ்லாமிய அடிப்படையில் பங்கிடப்படாமல் மேற்கின் கட்டளை படி நடப்பதில் தான் பிரச்னை புதைந்துள்ளது.
எனவே பிரச்னை சமூக வளங்களில் அல்ல, மாறாக இஸ்லாத்தின் அடிப்படையிலான ஒருங்கிணைந்த தலைமை இல்லாததே பிரச்னையின் ஆணிவேராகும். நபி (ஸல்) பரிந்துரைத்த, நம்மை பாதுகாக்கும் கேடயம் இல்லாததே பிரச்னையாகும். அக்கேடயத்தை குறித்து முஸ்லீமில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீத் பின் வருமாறு பேசுகிறது :
"உங்களின் இமாம் (கலீபா) ஒரு கேடயம் ஆவார், அவரின் பின்னால் போராடுவதற்கும் உங்களை பாதுகாத்து கொள்வதற்கும்"
நம்மை படைத்த சர்வ வல்லமையுள்ள இறைவன் ஆட்சியதிகாரத்தில், மக்களின் பொருளாதர விவகாரங்கள், சமூக பிரச்னைகள் உள்ளிட்ட அனைத்திலும் குரான் மற்றும் சுன்னாவை கொண்டே தீர்ப்பளிக்க சொல்லியுள்ளான். இறைவனின் வேதத்தின் படி ஆட்சி செய்யாத முஸ்லீம் பெயர்தாங்கிகள் அல்லது நிராகரிப்பாளர்கள் குறித்து நாம் திருப்திபட்டு கொள்ள கூடிய மக்களாக இருந்தால் நம் நிலை பின் வரும் குரான் வசனம் குறிப்பதை போல் தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
நபியே ! அல்லாஹ் இறக்கி வைத்ததே கொண்டு அவர்களிடம் தீர்ப்பளிப்பீராக.அவர்களின் ஆசாபாசங்களை பின்பற்றினால் அவர்கள் இறைவன் இறக்கி வைத்ததிலிருந்து உங்களை திருப்பி விடக் கூடும் (திருக்குரான் 5:49 வசனத்தின் கருத்து)
கிலாபத்தை மீண்டும் நிலைநாட்டுவதின் மூலம் - நீதித்துறை, சமூக விவகாரங்கள், பொருளாதரம், குடும்ப விவகாரங்கள் இப்படி வாழ்வின் அத்துணை நிலைகளிலும் குரான் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் வழிகாட்டுதல் பெறக் கூடிய முழுமையான இஸ்லாமிய அரசை அமைப்பதின் மூலமே குப்ரின் ஆதிக்கம் மற்றும் பாதிப்பிலிருந்து விடுபட்டு முழுமையான இஸ்லாத்தை நம் வாழ்வில் கொண்டு வர முடியும் என்பது நிச்சயம். வல்ல இறைவன் அப்பாக்கியத்தை நம் வாழ்விலேயே காணும் பாக்கியத்தை அளிப்பானாக.

Thursday, January 27, 2011

கிலாஃபத் எவ்வாறு வீழ்த்தப்பட்டது - பகுதி 01

கிலாஃபத் எவ்வாறு வீழ்த்தப்பட்டது - பகுதி 01
'கிலாஃபத் எவ்வாறு வீழ்த்தப்பட்டது' என்பதை மிக ஆழமாக ஆராயும், காலம் சென்ற பலஸ்தீனிய அறிஞர் அஷ் ஷேக் அப்துல் கதீம் ஸல்லும் (ரஹ்) எழுதிய 'கைப குதிமத்துல் கிலாஃபா' என்ற அரபு நூலின் தமிழாக்கத்தை இங்கே பகுதி பகுதியாக வழங்குகிறோம்!
இஸ்லாத்திற்கும் குஃப்ருக்கும் இடையிலான போராட்டம்
இஸ்லாம் அருளப்பட்ட நாளிலிருந்து இஸ்லாமிய சிந்தனை களுக்கும் குஃப்ர் சிந்தனைகளுக்கும் மத்தியிலும் முஸ்லிம்களுக்கும் காஃபிர்களுக்கும் மத்தியிலும் போராட்டம் உருவாகிவிட்டது. அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அனுப்பப்பட்ட துவக்க காலத்தில் இந்த போராட்டம் அறிவார்ந்த போட்டமாகவே (Intellectual struggle) இருந்து வந்தது. அதில் எத்தகைய ஆயுத போராட்டமும் இடம் பெறவில்லை. மதினா மாநகரில் இஸ்லாமிய அரசு நிறுவப் படும் வரை இத்தகைய சூழலே நீடித்து வந்தது. இஸ்லாமிய அரசு நிறுவப்பட்ட பின்னர் இராணுவமும் அதிகார அமைப்பும் உரு வாக்கப்பட்டன. அதன் பின்னர் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அறிவார்ந்த போராட்டத்தை ஆயுதபோரட்டத்துடன் இணைத் தார்கள். இதைத் தொடர்ந்து ஜிஹாது தொடர்பான வசனங்கள் அருளப்பட்டன. காஃபிர்களுக்கு எதிரான முஸ்லிம்களின் போராட் டமும் தொடர்ந்தது. அறிவார்ந்த போராட்டத்துடன் இணைந்த இந்த இரத்தம் சிந்தும் ஆயுத போராட்டம் கியாமநாள் வரை தொடர்ந்து நடைபெறும் என்று அல்லாஹ்வின் தூதர் அறிவித் திருக்கிறார்கள். அந்த நாள் வரும்போது அல்லாஹ் பூமியையும் அதில் வசிப்பவர்களையும் சுவீகரித்துக் கொள்வான். இதன் காரணமாகத்தான் குஃபர் என்பது இஸ்லாத்தின் கடும்பகையாக இருந்து வருகிறது! இவ்வாறே இந்த உலகத்தில் குஃபர் இருக்கும் வரை காஃபிர்கள் முஸ்லிம்களுக்கு எதிரியாகவே இருந்து வருவார்கள்! மறுமை நாள் வரும் வரை முஸ்லிம்களுக்கும் காஃபிர் களுக்கும் இடையில் நடக்கும் இந்த போராட்டம் தொடர்ந்துகொண்டேயிருக்கும்! இது திட்டவட்டமானதும், என்றும் மாறாதது மான சத்தியமாகும். எனவே இந்த கருத்து எப்போதும் முஸ்லிம் களின் உள்ளத்தில் தெளிவாக நிலைத்திருக்க வேண்டும், மேலும் இந்த அளவுகோலின் அடிப்படையில் மட்டுமே இஸ்லாத்திற்கும் குஃப்ருக்கும் இடையிலுள்ள உறவும் முஸ்லிம்களுக்கும் காஃபிர் களுக்கும் இடையிலுள்ள உறவும் தீர்மானிக்கப்பட வேண்டும்.
கடுமையும் உக்கிரமும் நிறைந்த திட்டவட்டமான அறிவார்ந்த போராட்டம் பதிமூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றது. இஸ்லாமிய சிந்தனைகளுக்கும் குஃப்ர் சிந்தனைகளுக்கும் மத்தியில் நடந்த இந்த கடுமையான போராட்டத்தில் இஸ்லாமிய சிந்தனைகள் வெற்றிபெற்றதன் விளைவாக அல்லாஹ் இஸ்லாத்திற்கு வெற்றியளித்தான். முஸ்லிம்களை பாதுகாக்கக்கூடியதும், இஸ்லாத் தின் பாதுகாப்பு கேடயமாக இருக்கக் கூடியதும், ஜிஹாது மூலமாக மக்களுக்கு நேர்வழியை காட்டுவதற்கு ஆற்றல் கொண்டதுமான ஓர் அரசு மதினாவில் நிறுவப்பட்டது. அடுத்தடுத்து நிகழ்ந்த தொடர்ச்சி யான யுத்தங்களில் இஸ்லாத்திற்கும் குஃப்ருக்கும் மத்தியிலும் முஸ்லிம்களின் படைகளுக்கும் காஃபிர்களின் படைகளுக்கும் மத்தி யிலும் உக்கிரமான போர்கள் நிகழ்த்தப்பட்டன. அனைத்து போர் களிலும் முஸ்லிம்கள் வெற்றியை தக்கவைத்துக் கொண்டனர். சில யுத்தங்களில் முஸ்லிம்களுக்கு பின்னடைவு ஏற்பட்டபோதிலும் எப்போதும் போர்க்களத்தில் முஸ்லிம்களே வெற்றிவாகை சூடி னார்கள். ஏறத்தாழ ஐந்து நூற்றாண்டுகளுக்கு மேலாக முஸ்லிம்கள் தொடர்ந்து வெற்றிக் கொடி நாட்டினார்கள்.
இந்த காலகட்டத்தில் இஸ்லாமிய அரசு முன்னணி அரசாகவும் முஸ்லிம்கள் உலகின் முன்னணி சமுதாயமாகவும் திகழ்ந்து வந்தார்கள். மானுட வரலாற்றில் முஸ்லிம்கள் நீங்கலாக வேறெந்த சமுதாயமும் இத்தகைய ஒரு மாபெரும் வெற்றியை அடைந்திட வில்லை. மாறாக இந்த ஒப்பற்ற வெற்றி இஸ்லாமிய அரசிற்கு மட்டுமே உரியதாக இருக்கிறது. எனினும் காஃபிர்கள் குறிப்பாக ஐரோப்பிய ஆட்சியாளர்களாக இருந்துவந்தவர்கள் இஸ்லாத்தின் இந்த வெற்றியை நோட்டமிட்டு வந்தார்கள். ஏனெனில் இஸ்லாத்தை தாக்கி அழித்துவிட அவர்கள் சரியான தருணம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். முஸ்லிம்கள் குறித்து காஃபிர்கள் தங்கள் நெஞ்சங்களில் வஞ்சக எண்ணம் கொண்டிருந்தார்கள், ஏனெனில் முஸ்லிம்களையும் இஸ்லாத்தின் எழுச்சியையும் அவர்கள் பெரும் அச்சுறுத்தலாகவே கருதினார்கள். ஆகவே
முஸ்லிம்களை சுவடுதெரியாமல் அழித்துவிட அவர்கள் விரும்பி னார்கள். வாய்ப்புகள் கிடைத்தபோதெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் தொகுப்பதிலும் இஸ்லாத்திற்கு எதிராக சதித் திட்டங்கள் தீட்டுவதிலும் அவர்கள் பெருமுயற்சி எடுத்துக் கொண்டார்கள்.
ஹிஜ்ரி ஆறாம் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்திலும் (கி.பி. பதினோராம் நூற்றாண்டு) ஹிஜ்ரி ஏழாம் நூற்றாண்டின் துவக்கத் திலும் இஸ்லாமிய அரசின் மாகாணங்களில் (Wilayah) பிளவு ஏற்பட்டிருந்த நிலையையும், உள்விவகாரக் கொள்கை, நிதியியல், இராணுவம் மற்றும் அதிகாரம் ஆகிய விஷயங்களில் சில முக்கிய பிராந்தியங்களிலும் மாகாண ஆளுநர்கள் தன்னிச்சையாக செயல் பட்டு வந்த நிலையையும் காஃபிர்கள் கண்ணுற்றார்கள். ஒருமைத் துவம் கொண்ட அரசாக (Unitary state) இல்லாமல் கூட்டாட்சி முறையில் (Federal state) இயங்கும் அரசு போன்றே இஸ்லாமிய அரசு இயங்கிவந்து. மிம்பர்களில் நின்றவாறு கலீஃபாக்களுக்காக துஆ மேற்கொள்வது, கலீஃபாவின் பெயர் பொறித்த நாணயங்களை அச்சிடுவது மற்றும் கராஜ் நிதியின் ஒரு பகுதியை கலீஃபாவுக்கு அனுப்புவது போன்ற சில சம்பிதாயங்களை மட்டும் மாகாண ஆளுநர்கள் பின்பற்றுவது என்ற நிலைக்கு கலீஃபாவின் அதிகாரம் சுருட்டப்பட்டது. இந்த நிலையை கண்ணுற்ற ஐரோப்பிய அரசுகள் முஸ்லிம்களுக்கு எதிராக சிலுவை யுத்தக்காரர்களை அனுப்பி கடும்போர் தொடுத்தன. கடுமையாக நடந்த இந்த யுத்தத்தில் முஸ்லிம்கள் தோல்வியை தழுவினார்கள். பாலஸ்தீனம், லெபனான் மற்றும் சிரியா ஆகியவை அடங்கிய ஷாம் பிராந்தியத்தை காஃபிர்கள் கைப்பற்றினார்கள். இந்த பிராந்தியத்தை அவர்கள் பல ஆண்டுகளுக்கு தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்தார்கள். திரிபோலி என்ற பகுதியை ஒரு நூற்றாண்டிற்கு மேலாக தங்கள் கட்டுப் பாட்டில் வைத்திருந்தார்கள்.
முஸ்லிம்களுக்கும் சிலுவையுத்தக்காரார்களுக்கும் மத்தியில் நடைபெற்ற யுத்தங்கள் ஒரு நூற்றாண்டு காலம் நடைபெற்று வந்தது. காஃபிர்கள் கைப்பற்றிய பகுதிகளை மீட்பதற்கு கடுமை யான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், இந்த யுத்தத்தின் விளைவாக முஸ்லிம் உம்மா குழப்பமான நிலையையே எதிர் கொள்ள நேரிட்டது. மேலும் இஸ்லாமிய அரசின் அந்தஸ்தை இந்தயுத்தம் வெகுவாக குறைத்துவிட்டது. இந்த யுத்தத்தில் முஸ்லிம்கள் தோல்வியை தழுவினார்கள். அவர்கள் மீது காஃபிர்கள் தங்கள் வெற்றியை நிலைநாட்டினார்கள். இந்த யுத்தத்தில் காஃபிர்கள் திட்டவட்டமான வெற்றியை நிலைநாட்டினார்கள். இஸ்லாத்திற்கு எதிராக காஃபிர்கள் அறிவார்ந்த முறையிலோ அல்லது ஆன்மீக ரீதியாகவோ வெற்றி பெறுதல் என்பது ஒருபோதும் நிகழமுடியாது என்றபோதிலும் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு இழிவும் தலைக்குனிவும் முஸ்லிம்கள் மீது விழுந்தன. சிலுவை யுத்தங்களின் இறுதிக் கட்டத்தில் ஷாம் பிராந்தியத்தில் இருந்து காஃபிர்களை விட்டியடிப்பதில் வெற்றி கண்ட போதிலும் சிலுவை யுத்தம் நடந்த காலகட்டம் முஸ்லிம்கள் தோல்வியுற்ற காலகட்டமாகவே கருதப்படுகிறது. ஏனெனில், காஃபிர்களுடன் நிகழ்ந்த சிலுவை யுத்தத்தை முஸ்லிம்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் சிலுவை யுத்தம் முடிந்த உடனேயே மங்கோலியர்களின் படையெடுப்பும் பாக்தாத் நகரில் அவர்கள் நிகழ்த்திய படுகொலை சம்பங்களும் அடுத்தடுத்து நிகழ்ந்தன. இந்த பின்னடை வின் தொடர்ச்சியாக அதே வருடத்தில் (ஹிஜ்ரி 656, கி.பி. 1258) டமாஸ்கஸ் நகம் மங்கோலியர்களின் கைகளில் வீழ்ந்தது. இதன் பின்னர் (ஹிஜ்ரி 658, கி.பி. 1260) செப்டம்பர் 3ல் அய்ன் ஜாலூத் யுத்தம் நிகழ்ந்தது. அதில் மங்கோலியர்கள் முறியடிக்கப்பட்டனர். மங்கோலியர்களுக்கு எதிராக பெற்ற மாபெரும் வெற்றியின் காராணமாக முஸ்லிம்கள் உள்ளத்தில் பெரும் எழுச்சி தோன்றியது. அவர்கள் சிந்தனையில் ஜிஹாது பற்றிய புத்துணர்வு எழுந்து அலைமோதியது. உலகமெங்கும் இஸ்லாத்தின் செய்தியை எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை அவர்கள் உணர்ந்து கொண் டார்கள். எனவே, ஜிஹாதின் வழியிலான முஸ்லிம்களின் வெற்றிப் பயணம் மீண்டும் தொடர்ந்தது. பைஸாந்திய பேரரசிற்கு எதிரான ஜிஹாது மறுபடியும் தொடர்ந்தது. அடுத்தடுத்து யுத்தங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மேற்கொள்ளப்பட்டன. முஸ்லிம்கள் வெற்றிக்குமேல் வெற்றியை ஈட்டினார்கள். ஹிஜ்ரி ஏழாம் நூற்றாண்டு வாக்கில் முஸ்லிம் உம்மா மறுபடியும் ஜிஹாது என்ற வெற்றிப் பயணத்தை தொடங்கியது; தொடர்ச்சியாக பல யுத்தங்கள் நிகழ்ந்தன. சில தருணங்களில் முஸ்லிம்கள் பின்னடைவு எய்தியபோதிலும் எப்போதும் அவர்களே வெற்றி வீரர்களாக திகழ்ந்தார்கள். பல யுத்தங்களில் வெற்றியை ஈட்டியதன் மூலமாக பல நிலப்பரப்புக்களை முஸ்லிம்கள் கைப்பற்றினார்கள். ஹிஜ்ரி 12ம் நூற்றாண்டு (கி.பி. 18ஆம் நூற்றாண்டு) வரை அது உலகின் முன்னணி அந்தஸ்து பெற்ற மாபெரும் வல்லரசாக விளங்கியது!
பிற்காலத்தில் ஐரோப்பாவில் நிகழ்ந்த மாற்றங்கள் முஸ்லிம் உம்மத்தில் எதிர் விளைவுகளை ஏற்படுத்தின. ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட தொழிற்புரட்சி (Industrial revolution) உலக நாடுகளில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தின. தொழிற்புரட்சியால் விளைந்த தாக்கங்களின் முடிவாக முஸ்லிம்கள் குழப்பம் அடைந்து செயலற்றுப் போகும் நிலை ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக உலக நாடுகளின் அரசியல் அணிகளிலும் அவற்றின் பலத்திலும் மாற்றம் ஏற்பட்டு இஸ்லாமிய அசு தனது உயர்ந்த நிலையிலிருந்து சிறிது சிறிதாக வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டது! இறுதியாக, ஐராரோப்பியர்களின் கட்டுக்கடங்காத பேராசைகளுக்கு இரையாகிப் போகும் கொள்ளைப் பொருளாக மாறி அழிவை எதிர்கொண்டது! இதன்விளைவாக இஸ்லாமிய அரசு வெற்றிகொண்ட நிலப்பரப்புகளையும் ஏற்கனவே அதன் அதிகாரத்தில் இருந்துவந்த நிலப்பரப்பு களையும் காஃபிர்களிடம் விட்டுவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. இஸ்லாமிய அரசின் நிலப்பரப்புகளை காஃபிர்கள் சிறிதுசிறிதாக ஆக்கிரமித்தார்கள்.
இஸ்லாமிய அரசு பலவீனம் அடைந்துவிட்டதைவும் முஸ்லிம் களின் எழுச்சி முற்றாக முடிந்துபோய்விட்டதையும் இந்நிகழ்ச்சி உறுதிப்படுத்தியது! அதன் பின்னர் இஸ்லாமிய அரசை சர்வதேச அரசியல் அரங்கிலிருந்து முழுமையாக நீக்குவதற்கும் அதன் மூலமாக மக்களின் வாழ்க்கை விவகாரங்களிலிருந்து இஸ்லாத்தை அகற்றுவதற்கும், ஐரோப்பிய அரசுகள் திட்டம் தீட்டி செயல் பட்டன. வேறு வகையில் கூறுவதென்றால் முஸ்லிம்களின் மீது புதிய சிலுவையுத்தத்தை துவக்குவதற்கு ஐரோப்பியர்கள் திட்டம் வகுத்தார்கள்! எனிலும் முதல் சிலுவை யுத்தம் போல அல்லாமல் முஸ்லிம்களின் மீது போர் தொடுப்பது மற்றும் இஸ்லாமிய அரசை வெற்றி கொள்வது ஆகிய நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு பல வஞ்சக நோக்கங்களுடன் புதிய சிலுவை யுத்தம் தொடுக்கப்பட்டது. இந்த சிலுவை யுத்தத்தின் பின்னணியில் படுபயங்கரமான நோக்கங்களும் ஆழமான சதித்திட்டங்களும் இடம்பெற்றிருந்ததால் அதன் விளைவு மிக ஆழமானதாகவும் தீவிரமானதாகவும் இருந்தது. இஸ்லாமிய அரசை முற்றாக வீழ்த்தி அதன் ஆழமான வேர்களை அடிச்சுவடு தெரியாமல் அழித்துவிடுவது புதிய சிலுவையுத்தத்தின் நோக்கமாக இருந்தது. மேலும் சில புரோகித சம்பிரதாயங்களையும் ஆன்மீக சடங்குகளையும் தவிர்த்து இஸ்லாத்தின் வேறொன்று மில்லை என்ற சிந்தனையை உருவாக்குவதன் மூலம் முஸ்லிம்களின் உள்ளங்களிலிருந்து இஸ்லாத்தை வேரோடு பிடுங்கி எறிந்து
விடுவது புதிய சிலுவை யுத்தக்காரர்களின் நோக்கமாக இருந்தது.

ஒற்றுமை

நாம் நன்றாக இல்லை !
காரணம் நாம் ஒன்றாக இல்லை !
ஒரே இறை – எத்தனை இயக்கங்கள் !
ஒரே மறை – எத்தனை குழப்பங்கள் !
ஒரே பிறை – எத்தனை பெருநாட்கள் !
மார்க்கம் வலியுறுத்தும் பிரியம் !
தெரியவில்லை – நமக்கு !
மார்க்கத்தை வைத்தே பிரியத் தெரிகிறது !
முஃமின்கள் கண்ணாடி போன்றவர்கள் !
துவேச கற்களை வீசினோம் !
ஒவ்வொரு திசையிலும் சிதறினோம் ! காலமெல்லாம் நாம் கதறினோம்!
கபர்ஸ்தானாய் மாறும் ஆப்கானிஸ்தான் !
உணவின்றி மடியும் சோமாலியா !
பற்றி எரியும் பாலஸ்தீன் !
உயிர்களின் புதைகுழி காஷ்மீரின் சோகம் !
பாங்கோசை ஒலிக்கின்ற பூமியெங்கும் இரத்தம் !
இருந்தும் திருந்தவில்லை நம் சித்தம் !
இஸ்லாமிய இயக்கங்களே – நீங்கள் !
வேற்றுமையில் ஒற்றுனை காண வேண்டாம் !
ஒற்றுமையில் வேற்றுமை என்ன? கூறுங்கள் !
இஸ்லாம் தான் பேரியக்கம் என்று !
ஓர் குடையின் கீழ் நின்று !
இவ்வுலகுக்கு உரக்கச் சொல்லுங்கள் !
*சிந்திப்போம் ! வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமமக்காகப் பிரார்த்திப்பொம்!*

Sunday, January 23, 2011

துனீசியாவில் ஏற்பட்டுள்ள புரட்சி அரபுநாடுகள் முழுவதும் தாக்கம்

துனீசியாவில் ஏற்பட்டுள்ள புரட்சி அரபுநாடுகள் முழுவதும் தாக்கம் -
யெமென் நாட்டில் ஆயிரக்கணக்கான பல்கலைகழக மாணவர்கள் மற்றும் சமுக செயல்பாட்டாளர்கள் , எதிர் கட்சிகளின் உறுப்பினர்கள் என்று பலரும் நாட்டின் ஜனாதிபதிக்கு எதிரான ஆர்பாட்டம் ஒன்றை ஷனா பல்கலைகழகத்தில் நடத்தியுள்ளனர் யெமென் 98 வீதம் முஸ்லிம்களை கொண்ட ஒரு நாடு இது தென்மேற்கு ஆசியாவில் அரேபிய தீபகற்பத்தின் தென்மேற்குக் கரையில் அமைந்து உள்ளதுடன் வடக்கில் சவூதி அரேபியாவையும் வடகிழக்கில் ஓமானும் எல்லைகளாக கொண்டுள்ளது.
1999 ஆம் ஆண்டு வடக்கு தெற்காக பிரித்திருந்த யெமென் ஒன்றாக இணைக்கப்பட்டு அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாக இருந்து வருகின்றார்.
நேற்று நடைபெற்றுள்ள ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நாட்டைவிட்டும் தலைமறைவான துனீசியா ஜனாதிபதி பின் அலியுடன் யெமென் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ்வை ஒப்பிட்டு கோசங்களை எழுப்பியுள்ளனர் இந்த ஆர்பாட்டம் நாட்டின் ஜனாதிபதிக்கு எதிராக நடைபெற்றுள்ள பாரிய ஆர்ப்பாட்டமாக பதிவாகியுள்ளது இதில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் துனீசியாவில் ஏற்பட்டு வரும் மக்கள் புரட்சி அரபுநாடுகள் முழுவதும் தாக்கம் -domino effect- செலுத்த தொடங்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காடுகின்றனர்.
இதேபோன்று ஜோர்டான் , அல்ஜீரியா , எகிப்து , போன்ற நாடுகளிலும் மேற்குலக ஆசான்களுக்கு வழிப்படும் அரசுகளுக்கும் அரச தலைவர்களுக்கும் ஆபத்து நெருங்கி வருவதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்
யெமென் நாட்டில் வறுமை, ஊழல் என்பன அதிகரித்துள்ளதுடன் அமெரிக்காவின் செறிவான புலனாய்வாளர்களின் கோட்டையாக விளங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது அமெரிக்கா பல தடவைகள் நடாத்திய விமான தாக்குதலை யெமென் அரசு தாம் நடத்துவதாக கூறிவருகின்றது என்று குற்றம் சாட்டப்படுகின்றது
ஆசியாவின் நுழைவாசல் என்று கூறப்பட்டு Aden port – the “gate to Asia” யெமென் நாட்டின் அடேன் போர்ட் என்ற துறைமுக பகுதியை அமெரிக்கா தனது மறை முகமான கட்டுபாட்டின் கீழ் வைத்துள்ளது என்பதுடன் யெமென் ஜனாதிபதி அமெரிக்காவுடன் மிகவும் ரகசியமான உறவுகளை கொண்டுள்ளார் என்று விமர்சிக்க படுகின்றார் யெமென் நாட்டின் இஸ்லாமிய பயங்கரவாதிகளை தாக்குகின்றோம் என்று கூறி பல நூறு அப்பாவி பொதுமக்களை அமெரிக்காவின் குண்டுகள் கொன்று குவித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது

Monday, January 17, 2011

துனிசியா: சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்த மக்கள் புரட்சி!

இந்தியாவில் வெங்காயம் கிலோ 80 ரூபாய்க்கு விற்கிறது என்றால் மற்ற பொருட்களின் விலையை விளக்க வேண்டியதில்லை. உழைக்கும் மக்களில் பெரும்பான்மையோர் தற்போது ஓரிரு வேளை உணவை ரத்து செய்திருக்கின்றனர். ஆனாலும் இத்தகைய காந்திய வழி உண்ணாவிரதம் இன்னும் எத்தனை நாளைக்கு தொடர முடியும்?ஏகாதிபத்தியங்களின் சுரண்டலால் உலக பொருளாதாரம் தோற்றுவித்த ‘நெருக்கடி’ அமெரிக்காவில் துவங்கி, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா என்று எந்த கண்டத்தையும் விட்டுவைக்கவில்லை. முதலாளித்துவத்தின் சூதாட்டத்தால் வந்த நட்டத்தை இப்போது ஏழை நாடுகளின் மேல், உலக மக்களின் மேல் ஏற்றி வருகிறார்கள். விளைவு எங்கும் வேலை இழப்பு, விலைவாசி உயர்வு, அரசு மானியம் ரத்து…. ஆயினும் இந்த அநீதிகளை மக்கள் தொடர்ந்து சகிக்க மாட்டார்கள் என்பதற்கு கிரீசீல் எழுந்த தெருப்போராட்டம் ஒரு துவக்கம் என்றால் அந்த போராட்டத்தையே புரட்சியாக சாதித்திருக்கிறது துனீசிய மக்களின் எழுச்சி. ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்ட அந்த மக்கள் புரட்சியை தோழர் கலையரசன் விளக்குகிறார்.26 வயதேயான வேலையற்ற பட்டதாரி இளைஞன் முஹமத்தின் தற்கொலை மரணம்,ஒரு மக்கள் புரட்சியாக மாறும் என்று எவரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். பட்டப் படிப்பு முடித்தும் வேலை வாய்ப்பு இல்லை. ஜீவனத்திற்காக நடைபாதையோரமாக காய்கறி விற்றுக் கொண்டிருந்தவன். போலிஸ் லைசன்ஸ் கேட்டு தொந்தரவு செய்ததன் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டான். ஊர், பேர் தெரியாத இளைஞனின் மரணச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.விரைவிலேயே அவர்களது சீற்றம் அதிகார வர்க்கம் மீது திரும்பியது. அரசு நிறுவனங்கள் தாக்கப்பட்டன. கடைகள் சூறையாடப்பட்டன. 23 வருடங்களாக துனீசியாவின் சர்வாதிகார ஆட்சி நடத்த உறுதுணையாக இருந்த பிரெஞ்சு தூதரகம் கூட சுற்றி வளைக்கப்பட்டது. வேலையற்ற இளைஞர்களின் கலகமாக ஆரம்பித்தாலும், வழக்கறிஞர்களும், தொழிற்சங்கமும் தமது ஆதரவை தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் குதித்தனர். உழைக்கும் வர்க்கமும், இழப்பதற்கு எதுவுமற்ற மக்களும் ஒன்று சேர்ந்து போராடினால் புரட்சி நிச்சயம் என்பதை துனீசியா மக்கள் சாதித்துக் காட்டியுள்ளனர்.அரபுலகில் முதன் முதலாக இணையம் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட புரட்சியும் இதுவாகும். கொடுங்கோல் அரசின் இணையத் தடையை மீறி, டிவிட்டர், முகநூல் (Facebook) போன்ற சமூக வலையமைப்புகள் எதிர்ப்பு நடவடிக்கைகளை உடனுக்குடன் அறிவித்துக் கொண்டிருந்தன. போலிஸ் அடக்குமுறைகளை காட்டும் வீடியோக்களை, Youtube உடனுக்குடன் அழித்துக் கொண்டிருந்தது. ஆயினும் எல்லாவித தடைகளையும் மீறி, இறுதியில் புரட்சி வென்றது. “இணையத்தில் புரட்சி செய்கிறார்கள்!” என்று பரிகசிக்கும் கூட்டத்திற்கு இது சமர்ப்பணம்.கலகத்தை அடக்க அனுப்பப்பட்ட போலிஸ் படை, வழமையான துப்பாக்கிச் சூடு, கைதுகள், என்று மக்கள் எழுச்சியை அடக்கப் பார்த்தது. இறுதியில் துனிசியா சர்வாதிகாரி பென் அலியே முன் வந்து கைது செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. திடீரென்று உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட பென் அலி, வேலையற்ற மக்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தப் போவதாக விடுத்த அறிவிப்பை யாரும் பொருட்படுத்தவில்லை. இறுதியில் நாட்டை விட்டு வெளியேறி, சவுதி அரேபியாவில் அகதித் தஞ்சம் கோர வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.உல்லாசப் பயணிகளால் அதிக வருமானம் கிடைக்கும் கரையோர நகரங்கள் என்றும் போல அமைதியாகத்தான் இருந்தன. ஆனால் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உள்நாட்டு நகரங்களில் தான் மக்கள் வீதிக்கு வந்து போராடத் தொடங்கினார்கள். உணவுப் பொருட்களின் விலையேற்றம், ஏற்கனவே தொழில் வாய்ப்பற்ற பகுதிகளை மோசமாகத் தாக்கியது.உலகம் முழுவதும் பொருளாதாரப் பிரச்சினைகளால் மக்கள் கிளர்ச்சிகள் வெடிப்பதைப் பற்றி நான் எழுதினால், பலருக்கு பிடிப்பதில்லை. “மக்களுக்கு வாயும், வயிறும் முக்கியமல்ல, இன மான உணர்வே பெரிதென்று” வாதாடுகின்றார்கள். ஊடகங்களும் அரபு நாடுகளைப் பற்றியும் அப்படியான கருத்துகளைத்தான் பரப்பி வந்தன. “கலாச்சார மோதல்” தத்துவப் படி, அரேபியர்கள் முஸ்லிம்கள், வயிற்றை விட மதமே பெரிதென்று வாழ்பவர்கள் என்று தான் பிரச்சாரம் செய்தார்கள். “அரபு நாடுகளில் அல்கைதாவும் இல்லை, அரேபியர்கள் எல்லோரும் முஸ்லிம் மத அடிப்படைவாதிகளும் இல்லை,” என்று கடந்த பத்து வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன். உண்மையான பிரச்சினை என்ன என்றும் தெளிவு படுத்தியிருந்தேன்.மேற்கத்திய நாடுகளால் ஆதரவளிக்கப்படும் சர்வாதிகாரிகள், ஜனநாயக சுதந்திரத்தை மறுக்கும் அரசு அடக்குமுறை, வேலைவாய்ப்பின்மை, வறுமை, இவை சாதாரண மக்களை பாதிக்கும் பிரச்சினைகள். விரக்தியுற்ற இளைஞர்கள் பட்டப் படிப்பு படித்தாலும் வேலையின்றி, வெளிநாடுகளுக்கு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாடு போக வசதியற்றவர்கள், தீவிரவாதிகளாக மாறுகிறார்கள். அமெரிக்காவும், உள்நாட்டு சர்வாதிகாரிகளும் அவர்களை அல்கைதா என்று முத்திரை குத்தி அடக்கினார்கள்.துனிசியாவில் கலகம் செய்தவர்களையும், பென் அலி அப்படி சொல்லிப் பார்த்தார். யாரும் நம்பியதாகத் தெரியவில்லை. கடைசியாக அவரே முன் வந்து, நாட்டில் வேலையில்லாப் பிரச்சினையை தீர்ப்பது முக்கியம் என்பதை ஒத்துக் கொண்டார். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய முடியுமா? மக்களின் கோபாவேசத்திற்கு முகம் கொடுக்க முடியாமல், நாட்டை விட்டு தப்பியோடி விட்டார்.துனிசியா கலவரத்தை சர்வதேச பொருளாதார நெருக்கடியில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கிரேக்க மக்கள் என்ன காரணத்திற்காக கிளர்ந்தெழுந்தார்கள்? வேலை, ஊதியம், உணவு பறிபோவதை எந்த மனிதன் தான் பொறுத்துக் கொண்டிருப்பான்? (இனமான உணர்வாளர்களுக்கு சுடலை ஞானம் பிறப்பதற்கு இன்னும் காலம் இருக்கிறது.) வளர்ச்சியடைந்த ஐரோப்பாவை சேர்ந்த கிரேக்கர்களாக இருந்தால் என்ன, வறிய நாடான மொசாம்பிக்கை சேர்ந்த மக்களாக இருந்தால் என்ன, எல்லோரும் வயிற்றுக்காக போராடக் கிளம்புகின்றனர். “முஸ்லிம் நாடுகளான” துனீசியா, அல்ஜீரியா, சூடான் போன்ற நாடுகளிலும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் மக்களை போராடத் தூண்டுகின்றது.“சிங்களப் பேரினவாதிகளின்” சிறிலங்காவிலும், “தமிழ் இனப்பற்றாளர்களின்” ஈழத்திலும் மக்கள் பொருளாதார பின்னடைவுகளை எதிர்த்து போராடுகின்றனர். முதலாளித்துவ தமிழ் ஊடகங்கள் அத்தகைய செய்திகளை கூறாமல் இருட்டடிப்பு செய்கின்றன. எல்லா நாடுகளிலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு அரசு மானியம் அளிக்கின்றது. அரசு மானியத்தை விலக்கிக் கொண்டால் விலை ஏறும் என்பதும், அதனால் மக்கள் கலகம் செய்வார்கள் என்பதும், ஓரளவு பொருளாதாரம் தெரிந்த அனைவருக்கும் தெரியும்.2009ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி துனிசியாவையும் பாதித்தது. பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்டித் தந்த உல்லாசப் பயணத் துறை, நஷ்டத்தை நோக்கி சென்றது. ஏற்றுமதி, அந்நிய முதலீடு அரைவாசியாக குறைந்தது. இதனால் வேலையற்றோர் தொகை அதிகரித்தது. பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்த காலத்தில், துனிசியா அரசு அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கியது. இதனால் படித்த வாலிபர்கள் பெருகினார்கள். அரபு நாடுகளில் அதிகளவு படித்த மத்தியதர வர்க்கத்தை கொண்ட நாடுகளில் துனிசியா முன்னணியில் திகழ்கின்றது. அது மட்டுமல்ல, ஒரு சராசரி ஐரோப்பிய நாட்டில் உள்ளதைப் போல, பெண்கள் சம உரிமையுடன் அனைத்து துறைகளிலும் பிரகாசித்தனர். ஆனால் அத்தகைய அபிவிருத்திக்குப் பின்னால், சர்வாதிகார கொடும்கோன்மை மக்களை அடக்கி வைத்திருந்தது. அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் தடை செய்யப்பட்டன.எகிப்து போன்ற நாடுகளில் இருப்பதைப் போல, அன்றாட உணவுக்கே அல்லாடும் பரம ஏழைகள் துனிசியாவில் இல்லை. இருப்பினும்,Tunis, Sousse , Sfax, போன்ற நகரங்கள் சுற்றுலாத் துறை, சர்வதேச வணிகம் காரணமாக அதிக வளர்ச்சியடைந்திருந்தன. அப்படி எந்த அதிர்ஷ்டமும் வாய்க்கப் பெறாத பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு, குறைந்த ஊதியத்துடன் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ வேண்டிய நிர்ப்பந்தம். மொத்த தேசிய வருமானத்தில் 30 % செல்வத்தை, 10 % பணக்கார கும்பல் அனுபவிக்கின்றது. கீழ் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் பொருளாதார பிரச்சினைகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.திறந்த சந்தை, நவ தாராளவாத பொருளாதார சீர்திருத்தங்கள் எதுவும் அவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை தோற்றுவிக்கவில்லை. சாதாரண பணியாளர்களும், பாவனையாளர்களும் வரி செலுத்திக் கொண்டிருக்கையில், பணக்காரர்களும், வணிக நிறுவனங்களும் வரிச் சலுகை பெற்று வந்தனர். நாட்டின் பெரிய வர்த்தக நிறுவனங்கள் ஜனாதிபதி பென் அலியின் குடும்ப சொத்தாக இருந்தன. பென் அலி குடும்பத்தின் பேராசையும், அகங்காரமும் ஊழலுக்கு காரணம் என்று துனீசியா பொது மக்கள் குறைப் பட்டுக் கொள்கின்றனர்.துனிசியா மக்களின் புரட்சியை சர்வதேச சமூகம் இரு கரம் நீட்டி வரவேற்க தயாராக இல்லை. மேற்குலக ஊடகங்கள் ஏதோ கடமைக்கு செய்தி வாசித்து விட்டுப் போகின்றன. உலகம் முழுவதும் மனித உரிமைகளை ஏற்றுமதி செய்யும் மேற்கத்திய நாடுகள் மௌனம் சாதிக்கின்றன. இரு வருடங்களுக்கு முன்னர் துனிசியாவுக்கு அரசு முறை விஜயம் செய்த பிரெஞ்சு ஜனாதிபதி சார்கோசி, “மனித உரிமைகள் நிலவரம் திருப்தியளிப்பதாக” நற்சான்றிதழ் அளித்தார். இன்று மக்கள் எழுச்சியை அடக்க, துனிசியா அரசு கேட்டுக் கொண்டால் படை அனுப்ப தயாராக இருப்பதாக பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார். துனிசியா முன்னாள் பிரெஞ்சுக் காலனி என்பதும், பிரான்ஸ் முக்கியமான வர்த்தக கூட்டாளி என்பதும் குறிப்பிடத் தக்கது. சிறிய நாடான துனிசியாவில் மக்கள் புரட்சி வென்று விட்டது. அடுத்தது இயற்கை வளம் நிறைந்த அல்ஜீரியா புரட்சிக்காக தயாராகி வருகிறது.

Monday, January 10, 2011

ஒரு முஸ்லிம் தேசம் மேற்கின் சதிகளால் உடைக்கப்படுமா : சூடான்

சூடான் இரண்டாக உடைக்கப் படுகின்றது மேற்கின் திட்டம் வெற்றிபெறுகின்றது
ஒரு தொகுப்பாக: டொக்டர் யூசுப் அல் கரழாவி சூடானின் தென்பகுதியில் வாழும் முஸ்லிம்கள் சூடான் வடக்கு , தெற்காக பிரிவதற்கு ஆதரவாக வாக்களிக்க கூடாது என்று மார்க்க தீர்ப்பு வழங்கியுள்ளார் இந்த பிரிவினை அமெரிக்காவும் ,மேற்கு நாடுகளும் முஸ்லிம் உலகின் ஒற்றுமையை உடைக்கும் இலக்குடன் ஆதரவளிக்கும் பிரிவினை இன்று தெற்கு பிரிவினை நாளை சூடானிலிருந்து டார்பூரை பிரிக்கும் பிரிவினை தொடரும் முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைந்து ஒரு அமைப்பை உருவாக்கவேண்டும் இன்று மேற்கு நாடுகள் ஒன்றாக இருக்கின்றன நாம் பிரித்து போய் இருக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆபிரிக்க நாடுகளில் பெரிய நிலபரப்பை கொண்ட நாடான சூடானின் விளங்குகின்றது சூடானில் கடந்த 16 வருடங்களாக சூடுபிடித்துள்ள சூடான் அரசுக்கும் தென்பகுதி ஆபிரிக்கப் பழங்குடியின சூடான் மக்கள் விடுதலை இராணுவம்-SPLA- இடையிலான 2005 ஆம் ஆண்டு வரை நடந்த கலகத்தில் பல ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளனர்
வடக்குச் சூடானில் முஸ்லிம்களும் தெற்குச் சூடானில் ஆபிரிக்கப் பண்டைய மதநம்பிக்கைகளை, மரபுப்பழக்கங்களை பின்பற்றி வருகின்ற இனக்குழுக்களும் வாழ்கின்றன இன்று BBC போன்ற மீடியாக்களில் கூறப் படுவது போன்று தெற்குச் சூடானில் கிறிஸ்தவம் பெரும்பான்மையாக இன்றும் என்றும் இருந்ததில்லை BBC போன்ற ஊடகங்கள் தென்பகுதியில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்வதா உண்மைக்கு புறம்பான தகவல்களை முன்வைக்கின்றது என்பது குறிபிடத்தக்கது.
19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் பிரித்தாளும் சூட்சி சூடானிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆங்கிலேயர் முஸ்லிம்களையும் பழங்குடியின மக்களையும் எப்போதும் ஒன்று சேர்ந்து விடாது பார்த்து கொண்டனர் இதற்கான முஸ்லிம்களை கொண்ட வட சூடானில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்டும்போது அவை தெற்கில் மேற்கொள்ளப்படவில்லை தெற்கில் திட்டமிட்டு கிறிஸ்தவ மிசசொனரிகளிடம் பழங்குடியின மக்களை கிறிஸ்தவர்களாக மாற்றும் பணி ஒப்படைக்கப்பட்டது வறுமையில் முழ்கி இருந்த மக்ககளை கிறிஸ்தவ மிசசொனரிகள்- மிசநரிகள்- பொருளாதார உதவி திட்டங்களின் ஊடாக பாரிய அளவில் கிருஸ்தவர்களா மாற்றியதுடன் வட பகுதி முஸ்லிம்கள் பற்றிய வெறுப்புணர்வுகளையும் வளர்த்தது.
அந்த கால பிரிவில் ஆங்கிலேயரின் கட்டுபாட்டில் இருந்த அரபு முஸ்லிம் தலைமைகள் இதனை விளங்கிகொள்ளவிலை அல்லது அது பற்றி அலட்டிக்கொள்ளவில்லை இதனால் தென்பகுதி, வடபகுதி என்ற பாரிய இடைவெளி ஏற்பட்டு வந்தது இந்த சூழ்ச்சி வலையில் சிக்குண்ட வடக்கு முஸ்லிம் அரசியல் தலைமையும் பெரிதாக அபிவிருத்திகளை தென்பகுதியில் மேற்கொள்ளவில்லை அங்கு தேற்று விக்கப்பட்ட கலகமும் அதற்கு இடம்கொடுக்கவில்லை .
இந்த நிலை தொடர்ந்த போது சூடானில் திடீர்ச் சதிப்புரட்சி மூலம், 1969 ல், கேர்ணல் நிமேரி ஆட்சிக்கு வந்தார். 1980 வரை சர்வாதிகார ஆட்சி நடாத்திய நிமேரி அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் நண்பராகவிருந்தார். ஆனால் 1983 ல் நிமேரியின் அரசு தீடிரென இஸ்லாமிய “ஷரியா” சட்டத்தை அமுல்படுத்துவதாக கூறியது இது முஸ்லிம்கள் அல்லாத தென்சூடானியர் மத்தியில் மேலும் எதிர்ப்பலைகளைத் தூண்டிவிட்டது “பொர்” என்ற நகரிலிருந்த இராணுவ முகாம் அரசுக்கெதிராகக் கலகம் செய்தது. இக்கலகத்தை அடக்கவென அரசால் அனுப்பப்பட்ட ஜோன் கரெங் என்ற இராணுவத் தளபதி கலக்காரர்களுடன் சேர்ந்து விடுதலை இராணுவத்தை உருவாக்கினார் அந்த போராட்டம் இன்று பிரிவினையாக விஸ்வரூபம் எடுத்து தென் பகுதி மக்களின் தேர்தல் மூல தீர்மானத்தின் மூலம் சூடானை வடக்கு , தெற்கு என்று இரண்டு தேசங்களாக பிரிப்பதா இல்லையா என்ற மேற்குலகின் சதிகளின் முடிவை காண சூடான் காத்திருக்கின்றது .
இன்று ஜனாதிபதி உமர் பஷீர் இவற்றை மாற்றி தென்பகுதியில் அபிவிருத்திகளை மேற்கொள்ள பல திட்டங்களை முன்வைத்தாலும் அவற்றை மேற்கொள்ளமுடியாத பொருளாதார நிர்பந்தங்களை எதிர்நோக்கி வந்தார் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்
தற்போது ஜனதிபதிய இருக்கும் உமர் பஷீர் ஜூன் மாதம் 1986 ஆம் ஆண்டு அமைதியான இராணுவ புரட்சியின் மூலம் ஆட்சியைப்பிடித்து இராணுவ அரசை அமைத்ததுடன், சூடானை இஸ்லாமிய கோட்பாடுகளை நோக்கி நகர்த்த முற்பட்டார் இதற்கு முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பு அதன் தலைவரான பிரான்சில் சட்டக்கல்வி பயின்ற ஹசன் துராபியும் பஷீருக்கு துணையாக இருந்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது
பஷீர் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 75 வீதத்துக்கும் அதிகபடியான வாக்குகளால் ஜனாதிபதியாக தெரிவானார் பின்னர் 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது தேர்தலிலும் 86 வீதத்துக்கும் அதிகபடியான வாக்குகளால் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவானார் மேற்கு நாடுகளில் சதி நாசவேலைகளை புரிந்து கொண்ட பஷீர் 1997 ஆம் ஆண்டு அமெரிக்காவினதும் மேற்கு நாடுகளினதும் ஆதிக்கத்திலிருந்த வர்த்தகம் அனைத்தையும் தடை செய்ததுடன் கிறிஸ்தவ மிசசொனரிளின் நடவடிக்கைகள் அனைத்தையும் முற்றாக தடை செய்தார்.
இதனால் கோபம் கொண்ட அமெரிக்கா உஸாமா பின் லாடனுக்கும் அவரது போராளிகளுக்கும் சூடானில் அடைக்கலம் வழங்கியுள்ளது என்று குற்றம் சுமத்தி , ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் சூடானுக்கெதிரான பொருளாதாரத்தடைகளை விதித்தது. 1998 ம் ஆண்டு சூடானில் மலேரியாத் தடுப்பு மருந்து தயாரிக்கும் – Al-Shifa pharmaceutical factory தொழிற்சாலையொன்றில் இரசாயன ஆயுதங்கள் தயாரிப்பதாகக் குற்றம் சாட்டி, அமெரிக்க அரசு ஏவுகணை வீசி அத்தொழிற்சாலையை அழித்தது. இதன் விளைவாக பத்தாயிரம் நோயாளிகள் மருந்து கிடைக்காமல் மலேரியாவால் இறந்துபோனார்கள் என்பது வேறுவிடையம்
பொருளாதார இலாபங்களை இழந்தமையாலும் புதிய சூடானின் இஸ்லாமிய கோட்பாடுகள் நோக்கிய நகர்வினாலும் கோபம் கொண்ட அமெரிக்காவும் ,மேற்கு நாடுகளும் தமது வழமையா பிரித்தாளும் உளவு சதி நாசவேலைகளை பெரிய அளவில் சூடானில் அரங்கேற்றினர் இதன் விளைவாக தென்பகுதியில் மட்டுமின்றி மேற்கு மாகாணமான டார்பூரிலும் கலகங்கள் உருவாக காரணமாக இருந்தது என்று குற்றசாட்டுக்கள் பலமாக உண்டு தற்போது சூடானின் தென்பகுதியை பிரிக்க போடப்பட்ட திட்டங்களை போல் எதிர்காலத்தில் டார்பூர் பிராந்தியத்தையும் பிரிக்கும் வேலைத் திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்
சூடானின் டார்பூரை-Darfur- நகரில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை அதிபர் உமர் அல்-பஷீர் தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டதற்கு உரிய ஆதாரம் உள்ளதாக கூறி மேற்கு நாடுகளின் கட்டுபாட்டின் கீழ் இயங்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்-பஷீருக்கு 2009 ஆம் ஆண்டு பிடி ஆணை பிறப்பித்து எனினும் குறிப்பிட்ட இனங்கள் இலக்கு வைத்து அழிக்கப்பட்டமைக்கு ஆதாரங்கள் போதாமையால் இன ஒழிப்பு குற்றச்சாட்டு குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படுவதை நீதிமன்றம் நிராகரித்து. இவை உண்மைக்கு புரம்பாகசோடிக்கபட்டவை என்று உமர் அல்-பஷீர் தெரிவித்திருந்தார் இந்த அனைத்து நாடகங்களையும் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் அரங்கேற்றிய நாடகமாக பார்கபடுகின்றது
தென்பகுதியில் 1995 ஆம் ஆண்டளவில் அமெரிக்க , பிரித்தானிய , இஸ்ரேலிய கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட ஜோன் கரெங் தலைமையிலான “சூடான் மக்கள் விடுதலை இராணுவம்- SPLA- அரசுக்கெதிரான கலகத்தை ஆயுதப்போராட்டமாக தீவிரப்படுத்தியது. அமெரிக்கக் கிறிஸ்தவ சபைகளுடன் கொண்ட உறவினால் பலத்தால் அமெரிக்கா தனது திட்டத்தை செய்து முடிக்க கென்யா வழியாக ஆயுதத் தளபாடங்களை அனுப்பியது.
சூடான் பல அழிவுகளை சந்தித்தது இறுதியாக 2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தோடு உள்நாட்டு கலகம் முடிவுக்கு வந்தது இந்த ஒப்பந்தத்தில் சூடானின் வடக்கும் , தெற்கும் ஒரு நாடாக இருப்பது அல்லது சுதந்திரத்தை தெரிவு செய்வது தென்பகுதியின் விருப்பம் மற்றும் உரிமை என்று ஒப்பந்தம் ஏற்றுகொள்ளப்பட்டது .
இதற்கமைய சூடான் வடக்கு தெற்கு என்று இரண்டு நாடாக பிரிவது தொடர்பான மக்கள் வாக்கெடுப்பு எதிர்வரும் ஞாயிற்றுகிழமை நடைபெறவுள்ளது. குறைந்தப்பட்சம் 90 சதவீதம் பேராவது நாடு இரண்டாக பிரிய ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று BBC தெரிவிக்கின்றது இந்த நிலையில் இந்த வாரம் தென்பகுதியின் ஜூபா நகரத்திற்கு சென்று இருந்த சூடான் அதிபர் உமர் அல் பஷீர், சூடான் பிரிவது வருத்தமாக இருந்தாலும் மக்கள் விரும்பினால் அதனை தான் ஏற்று கொள்வதாக கூறியுள்ளார் ஞாயிற்றுக்கிழமையன்று ஆரம்பிக்கும் வாக்கெடுப்பு ஒரு வார காலத்திற்கு இடம்பெறும். வாக்கெடுப்பில் பதிவு செய்த வாக்காளர்களில் குறைந்தப்பட்சம் 60 சதவீதத்தினராவது வாக்களித்தால் மட்டுமே தீர்மானம் செல்லுபடியாகும்.
இந்த நிலையில் அரபு நாடுகள் சுடானுக்கு போதுமான எந்த உதவிகளையும் செய்யவில்லை என்று குற்றம் சுமத்த படுகின்றது இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டு ஐந்து வருடங்களில் வடபகுதியால் தென்பகுதிக்கு எந்த பெரிய அபிவிருத்திகளையும் செய்யமுடிய வில்லை அவ்வாறு செய்திருந்தால் இந்த பிரிவினையை தடுக்க முடியுமாக இருக்கும் ஒரு முஸ்லிம் தேசம் பிரியபோகின்றது அதுவும் வளம் கூடிய பகுதி முஸ்லிகளின் கையை விட்டும் போகபோகின்றது.
இதன் குற்றங்கள் அனைத்தும் முஸ்லிம் நாடுகளின் மீதுதான் ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர் காரணம் குறைத்து கடந்த ஐந்து ஆண்டுகளிலாவது போதுமான அபிவிருத்திகளை தென்பகுதியில் செய்து மக்களின் மனதை வெல்லும் எந்த முயற்சிக்கும் முஸ்லிம் நாடுகள் சூடானுக்கு உதவவில்லை என்பதுதான்.
டொக்டர் யூசுப் அல் கரழாவி சூடானின் தென்பகுதியில் வாழும் முஸ்லிம்கள் சூடான் வடக்கு , தெற்காக பிரிவதற்கு ஆதரவாக வாக்களிக்க கூடாது என்று மார்க்க தீர்ப்பு வழங்கியுள்ளார் இந்த பிரிவினை அமெரிக்காவும் ,மேற்கு நாடுகளும் முஸ்லிம் உலகின் ஒற்றுமையை உடைக்கும் இலக்குடன் ஆதரவளிக்கும் பிரிவினை இன்று தெற்கு பிரிவினை நாளை சூடானிலிருந்து டார்பூரை பிரிக்கும் பிரிவினை தொடரும் முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைந்து ஒரு அமைப்பை உருவாக்கவேண்டும் இன்று மேற்கு நாடுகள் ஒன்றாக இருக்கின்றன நாம் பிரித்து போய் இருக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஒரு முஸ்லிம் தேசம் மேற்கின் சதிகளால் உடைக்கப்படுமா சில நாட்களில் தெரியும் இன்ஷா அல்லாஹ்

Friday, January 7, 2011

இஸ்லாம் மேற்கின் அடையாளங்களுக்கு எதிரானதாக கருதப்படுகினறது: ஒரு ஆய்வின் முடிவு

இஸ்லாம் மேற்கின் அடையாளங்களுக்கு எதிரானதாக கருதப்படுகினறது: ஒரு ஆய்வின் முடிவு

பிரிட்டனைத் தளமாக கொண்டு இயங்கும் டெய்லி மெயில் -DailyMail- என்ற பத்திரிகையில் நேற்று -6.01.2011 -பிரான்ஸ், ஜேர்மன் ஆகிய நாடுகளில் அரைவாசி மக்கள் தொகையினரால் இஸ்லாம் தற்போது தேசிய அடையாளத்துக்கு எதிரான அச்சுறுத்தலாக பார்க்கப்படுகின்றது-Islam now considered ‘a threat’ to national identity by almost half of French and Germans, according to new poll- என்ற தலைப்பில் பீட்டர் அலலென்-Peter Allen- என்பவரால் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் வெளியான கட்டுரையை ourummah.org உங்களுக்கு தமிழில் தருகின்றது.
பிரான்ஸ், ஜேர்மன் ஆகிய நாடுகளில் இஸ்லாம் தற்போது தேசிய அடையாளத்துக்கு எதிரான அச்சுறுத்தலாக பார்க்கப்படுகின்றது இஸ்லாம் தேசிய அடையாளத்துக்கு எதிரான அச்சுறுத்தலாக பிரான்ஸ், ஜேர்மனிய மில்லியன்கணக்கான மக்களால் கருதப்படுகின்றது விரிவாக பார்க்க
பிரான்ஸ் லீ மொண்டே செய்தி பத்திரிகை -Le Monde newspaper- நடத்திய ஒரு ஆய்வில் இரண்டு நாடுகளிலும் பெரும்பான்மையான மக்கள் முஸ்லிம்கள் -அந்த நாடுகளின் சமூகங்களுடன்- சரியாக ஒருங்கிணைய வில்லை என்று நம்புவதாக தெரிவித்துள்ளது
லீ மொண்டே பத்திரிகை தனது கணிப்பீட்டின் முடிவுகளை வித்தியாசமான மத சமூகங்களை அருகருகில் வாழவைக்க எடுக்கப்பட்ட முயற்சி ஒரு தோல்வி என்று தலைப்பிட்டுள்ளது.
பிரான்சில் 70 லட்சம் முஸ்லிம்களும் , ஜேர்மனியில் 43 லட்சம் முஸ்லிம்களும் பிரிட்டனில் 24 லட்சம் முஸ்லிம்களும் வாழ்கின்றனர்
கடந்த வருடம் ஜேர்மன் சான்சலர்- Chancellor- அங்கெல மெர்கல்- Angela Merkel- ஜேர்மணியின் பன்முக கலாச்சார சமுகம் தோற்று விட்டது என்று தெரிவித்தார் அதேவேளை பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி – Nicolas Sarkozy-பிரான்சில் இஸ்லாமிய அடிப்டைவாதம் பற்றி முறைப்பாடுகளை தெரிவித்திருந்தார்.
லீ மொண்டே பத்திரிகை பத்திரிகை IFOP என்ற சந்தைப்படுதல் தொடர்பான அமைப்புடன் இணைந்து நடத்திய ஆய்வுகளின் படி 68 வீதமான பிரான்ஸ் மக்களும் 75 வீதமான ஜேர்மன் மக்களும் ‘முஸ்லிம்கள் சமூகத்துடன் முறையாக ஒருங்கிணைய வில்லை என்று தெரிவிக்கின்றது.
ஏனைய 55 வீதமான பிரான்ஸ் மக்களும், 49 வீதமான ஜேர்மன் மக்களும் இஸ்லாத்தின் செல்வாக்கும், அதன் தோற்றப்பாடும் மிகப் பெரியதாக இருப்பதா நம்புவதாகவும் இரண்டு நாடுகளிலும் 60 வீதமான மக்கள் இந்த பிரச்சினைக்கான காரணம் முஸ்லிம்கள் அவர்களின் ஒருங்கிணைவதற்கான சுய மறுப்பு -Muslims’ own ‘refusal’- என்று தெரிவித்துள்னர் என்று அந்த ஆய்வு கூறுகின்றது.
மிக காட்டமாக 40 வீதமான பிரான்ஸ் மக்களும், 42 வீதமான ஜேர்மன் மக்களும் இஸ்லாமிய சமூகங்களில் இருப்பு தமது தேசிய அடையாளத்துக்கு- national identiy – ஓரு அச்சுறுத்தலாக கருதுவதாக தெரிவித்துள்ளது.
லீ மொண்டே பத்திரிகை இந்த ஆய்வு பற்றி கூறும்போது இஸ்லாம் நிலையானதாகவும் ஐரோப்பிய சமூகங்களில் தெளிவான போட்டியுடன் முன்னேறும் போது மக்கள் அபிப்பிராயம் தெளிவாக வெறுப்புற்றதாக இருக்கிறது ஆனாலும் -அபிப்பிராயங்களில்- இளையவருக்கும் முதியவருக்கும் இடையிலும் இடது சாரிக்கும் , வலது சாரிக்கும் இடையிலும்வித்தியாசங்கள் காணப்படுகின்றது என்று தெரிவிக்கின்றது.
இந்த ஆய்வை இணைந்து மேற்கொண்ட மற்ற நிறுவனமான IFOP யை சேர்ந்த ஜெரோமி பெர்குட்- Jerome Fourquet- என்பவர் இது தொடர்பில் கருத்துரைகையில் இந்த கணிப்பீட்டின் முடிவு குடியேற்றத்தையும் பாதுகாப்பையும் குடியேற்றத்தையும் வேலை இன்மையையும் தொடர்பு படுத்துவதற்கு அப்பால் சென்று இஸ்லாத்தையும் அடையாளத்துக்கு எதிரான அச்சுறுத்தலையும் தொடர்பு படுத்துகின்றது என்று தெரிவிக்கின்றார் .
அவர் மேலும் கருதுரைகையில் தான் இந்த ஆய்வை பிரிட்டன் போன்ற ஏனைய நாடுகளுக்கும் விஸ்தரிக்க விரும்புவதாகவும் அங்கும் ஆய்வின் முடிவு இதை ஒத்ததாகத்தான் இருக்கும் என்று தான் நம்புவதாகவும் கூறுகின்றார்.
2001 ஆண்டு 9/11 தாக்குதல் , மற்றும் 2005 ஆண்டு லண்டன் 7/7 தாக்குதல் ஆகிய வற்றிலிருந்து அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் உள்ள முஸ்லிம் சமூகங்களை பயங்கரவாத அச்சுறுத்தலுடன் தொடர்புபடுத்துவது அதிகரித்து வருகின்றது
பிரான்சில் சர்கோசியின் அரசு மத தீவிரவாதத்திற்கு எதிரான அதிகப்படியான கடும்போக்கை காட்டியதுடன் அண்மையில் முகத்தை முடி அணியும் இஸ்லாமிய உடையையும் தடை செய்ததது.
பிரான் வெளிநாட்டமைச்சர் மிச்செலி அல்லிஒட் மாறி -Michele Alliot-Marie- மொடரேட் முஸ்லிம்களை கடும்போக்கான அல்லது அடிப்படைவாத அமைப்புகளுடன் சேர்த்து குழம்பிவிடாமம் இருப்பது முக்கிமானது என்று தெரிவித்தார் அவர் மேலும் தெரிவித்ததாவது அல் கைதா ஒரு பொறியை தாயர்படுதியுள்ளது அது எம்மை பொதுவான யுத்தகளம் நோக்கியும் முஸ்லிம்களுக்கும் மேற்குலகத்துக்கும் இடையான யுத்தம் ஒன்றை நோக்கியும் தள்ளுவதாகும் நாம் கண்டிப்பாக அந்த திசை நோக்கி செல்லும் அனைத்தையும் அவதானிக்கவேண்டும் நாம் கண்டிப்பாக இஸ்லாம் , பயங்கரவாதம் என்பனவற்றில் குழம்பிக் கொள்ள கூடாது என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வு பிரான்சிலும் ஜேர்மனியிலும் 1600 நபர்களிடம் கேள்விகளின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Thursday, January 6, 2011

இஸ்லாமிய பாடசாலைகளுக்கு பாடத்திட்டம் தயாரிக்கும் அமெரிக்காவும் பிரிட்டனும்

இஸ்லாமிய பாடசாலைகளுக்கு பாடத்திட்டம் தயாரிக்கும் அமெரிக்காவும் பிரிட்டனும்

பயங்கரவாதம் மீதான பிராந்திய போரின் ஒரு பகுதி என்ற வகையில் பிரிட்டிஷ் அரச அதிகாரிகள் பங்களாதேஷ் இஸ்லாமிய கல்வி நடவடிக்கைகளில் தமது செல்வாக்கை செலுத்துவதாக விக்கிலீக் தெரிவித்துள்ளது. விக்கிலீக் பிரிட்டிஷ் சர்வதேச அபிவிருத்திக்கான அலுவலகம்- Department for International Development (DFID)- பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் பொது இலக்கு என்ற வகையில் அவ்வாறு அமெரிக்காவுடன் இணைந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பாடசாலைகளின் பாடத்திட்டங்களை மாற்றுவதில் ஈடுபட்டு வருகின்றது என்பதை தெரிவித்துள்ளது.
பங்களாதேஷ்சுக்கான அமெரிக்க தூதுவர் ஜேம்ஸ் மொரியார்ட்டி- James Moriarty- எவ்வாறு தான் பங்களாதேஷ் பிரதமர் ஹசீனாவை- இஸ்லாமிய பாடசாலைகளுக்கு முறையான பாடத்திட்டத்தை – standardized curriculum- உருவாக்கி அமுல்படுத்துமாறு வேண்டினார் என அவர் குறிப்பிட்டதை விக்கிலீக் தெரிவித்துள்ளது
இவரின் இந்த வேண்டுகோள் அமெரிக்க அரச அபிவிருத்தி நிறுவனம்- US government development agency- மற்றும் USAid ஆகிய அமைப்புகள் பாடவிதான அபிவிருத்தி செயல்திட்டம்- “curriculum development programme” என்ற திட்டத்தின் ஊடாக – இஸ்லாமிய பாடசாலைகளுக்கான பாடத்திட்ட மாதிரியை தயாரித்து பங்களாதேஷ்சுக்கு வழங்கியத்தை தொடர்ந்து அமெரிக்க துதுவர் ஜேம்ஸ் மொரியார்ட்டி பிரதமரை வேண்டியுள்ளார்.
பங்களாதேஷ்சில் 60,000 இஸ்லாமிய பாடசாலைகள் இருப்தாகவும் அவை பங்களாதேஷ் கல்வி முறையில் முக்கிய பங்காற்றுவதாகவும் சாதாரண பாடசாலைகளுக்கு செல்ல முடியாதவர்களுக்கு இலவச கல்வியை இவை பெரும்பாலும் வழங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கு இருக்கும் 15,000 வரையான இஸ்லாமிய சிறிய பாடசாலைகள் முறையான பாடத்திட்டங்கள் இன்றி செயல்படுவதாகவும் பொதுவான கல்வி தரத்தை விடவும் குறைவான கல்வி போதனை முறையை கொண்டிருபதாகவும் பங்களாதேஷ் அரசு தெரிவிக்கின்றது.
பங்களாதேஷ் பல இஸ்லாமிய நிறுவனங்களையும் , அமைப்புகளையும் இராணுவ அமைப்புகள் என்று போலியான மேற்கு முத்திரைகளை குத்தி தடை செய்வதாக பல மாக குற்றம்சாட்டப்டுகின்றது ஜமாஅத்தே இஸ்லாமி , ஹிஸ்புத் தஹ்ரீர் போன்ற சிறந்த இஸ்லாமிய அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளாக போலி குற்றசாடுகளின் பெயரில் தடைசெய்யப்பட்டுள்ளன என்பது குறிபிடத்தக்கது மேற்கு உலகம் தான் உருவாக்க நினைக்கும் மனிதர்களை உருவாக்க தேவையான முன்மொழிவுகளை தனது பாடத்திட்டங்களில் கண்டிப்பாக கொண்டிருக்கும் என்பது அவதானிக்கத்தக்கது, அமைதியான அமெரிக்க பொம்மை என வர்ணிக்கப்படும் ஹசீனாவின் ஆட்சியில் பங்களாதேஷ் மிக வேகமாக அமெரிக்க ,மேற்குலகின் குகையா மாறிவருவதாக குற்றம் சாட்டப்டுகின்றது

Monday, January 3, 2011

நெதர்லாந்தில் செய்தான் வேதம் எழுதுகின்றது !!

நெதர்லாந்தில் செய்தான் வேதம் எழுதுகின்றது !!

நெதர்லாந்து பாராளுமன்ற உறுப்பினரும் நெதர்லாந்தில் மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்துள்ள Party for Freedom -PVV- என்ற கட்சியின் தலைருமான கீரட் வில்டர்ஸ்- Geert Wilder- என்பவர் இஸ்லாத்தை முழுஅளவில் போலியாக விமர்சிக்கும் நூல் ஒன்றை எழுதிவருகின்றார் அந்த நூல் இஸ்லாம் சர்வதேச அளவில் வளர்வதை எப்படி தடுப்பது போன்ற விடியங்களை கொண்டதாக எழுதப்படுவதாகவும் அந்த நூல் இந்த வருடம் நடுப்பகுதியில் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார்.
அல் குர்ஆன் பாசிச புத்தகம் அதை தடை செய்யவேண்டும் முஸ்லிம்களை நெதர்லாந்தில் இருந்து விரட்ட வேண்டும், முஸ்லிம்கள் நெதர்லாந்தில் வாழ விரும்பினால் அல் குர்ஆனின் பாதியை அவர்கள் கிழிந்து வீசவேண்டும் – “tear out half of the Koran if they wished to stay in the Netherlands” , இஸ்லாம் என்ற பாசிச சக்தி மேற்கில் வளர்த்து வருவது தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்ற பயங்கரவாத கருத்துகளை கூறி இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக பகிரங்கமாக செயல்படுபவர் தான் இந்த Geert Wilder விரிவாக பார்க்க
கீரட் வில்டர்ஸ்- Geert Wilder- எங்கு பேசினாலும் எழுதினாலும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் மிகவும் மோசமான பயங்கரவாத சக்தியாக சித்தரிக்க தவறுவதில்லை, கீரட் வில்டர்ஸ் ஒரு கத்தோலிக கிறிஸ்தவனாக இருந்தாலும் பல வருடங்கள் ஆக்கிரமிப்பு தேசமான இஸ்ரேலில் இருந்துள்ளார் இவர் அங்கு இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்னால் பயிற்றப்பட்டு பின்னல் அதன் ஏஜண்டாக செயல்படுவதாக நம்பப்படுகின்றது இவரின் கட்சிக்கு நிதி உதவி முழுவதும் யூத அமைப்புகள் வழங்கி வருகின்றன என்பது பகிரங்கமான விடையம் .
கடந்த வருடம் இஸ்லாமிய போதனைகளை முற்றிலும் தவறாக சித்தரித்து தாயரிக்கப்பட்ட பித்னா என்ற குறும் படத்தை பிரிட்டனில் திரையிட இவன் பிரதம அதீதியாக அழைக்கப்பட்டிருந்தான் என்பதும் அந்த படம் இவரினால் தாயரிக்கபட்டது என்பதும் குறிபிடத்தக்கது.
இன்று ஐரோப்பா முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறி மிகவும் வேகமாக பரவி வருகின்றது என்பது பல பொது அமைப்புகள் சுட்டிகாட்டுகின்றன. ஐரோப்பாவின் பல நாடுகளில் முஸ்லிம்கள் கொடுமைகளை எதிர் கொள்வது அதிகரித்துள்ளது குறிப்பாக பெண்கள் அதிகமாக பாதிக்க பாதிக்கபடுகின்றனர் இந்த இனவெறி சில மேற்கு நாடுகளில் அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் நடைபெற்று வருகின்றது இந்த வகையில் நெதர்லாந்தில் இனவாதத்தை பகிரங்கமாக போதிக்கும் முஸ்லிம்களை ஐரோப்பாவிலிருந்து விரட்டும், அல் குர்ஆனை ஐரோப்பாவில் தடை செய்யும் நீண்ட கால இலக்குகளுடன் இவனின் தலைமையிலான சுதந்திர கட்சி இயங்கி வருகின்றது

காஸா

காஸா மீதான முற்றுகையை உடைத்துகொண்டு உள்நுழைந்தது ஆசிய நிவாரண அணி !

முற்றுகைக்கு உள்ளாகியுள்ள காஸா மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க சென்ற The Asia to Gaza Solidarity Caravan, -Asia 1- என்று அழைக்கபடும் ஆசிய நிவாரண குழு பல தடைகளையும் கடந்து நேற்று-2.01.2011- மலை காஸாவை அடைந்துள்ளது இந்த ஆசிய நிவாரண குழுவில் 120 உதவியாளர்கள் சென்றடைந்துள்ளனர் இவர்கள் ஆசியாவின் 18 நாடுகளை சேர்ந்த பல்கலை கழக பேராசிரியர்கள் , மாணவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் பொது சிவில் செயல்பாட்டாளர்கள் என்று பலரையும் உள்ளடகியுள்ளது.
இந்த ஆசிய நிவாரண அணி இந்திய தலைநகரான நியூ டில்லி துறைமுகத்திளிருந்து புறப்பட்டு ஈரான், துருக்கி, லெபனான் ஊடாக சிரியாவை அடைந்து பல செயல்பாட்டாளர்களையும் இணைத்து கொண்டு 7000 கிலோமீற்றர் பயணம் செய்து சிரியாவின் எல்லையில் எகிப்தின் அனுமதிக்காக ஒரு வாரம் காத்திருந்தது. எகிப்திய இஸ்ரேல் சார்பான அரசு 180 ஆசிய நிவாரண அணியின் உறுப்பினர்களில் 120 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கியது எகிப்திய ரபாஹ் எல்லையில் இருந்து தரை வழியாக புறப்பட்ட நிவாரண அணி இறுதியாக காஸா அடைந்துள்ளது விரிவாக
இந்த ஆசிய நிவாரண அணி எட்டு லொறிகளிலும் நான்கு அம்புலன்ஸ்களிலும் 1000 தொன் மருத்துவ பொருட்கள், குழந்தைகளின் பால்மா, உடை போன்றவற்றை கொண்டு சேர்த்துள்ளது. காஸா முற்றுகையை உடைத்த முதல் ஆசிய நிவாரண குழுவாக இந்த குழு கருதப்படுகின்றது.