Tuesday, April 19, 2011

இருளிலிருந்து ஒளியை நோக்கி …

இருளிலிருந்து ஒளியை நோக்கி …


முஸ்லிம் சமூகப் பிளவும், இஸ்லாம் சொல்லும் தீர்வும்
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்இன்று முஸ்லீம்கள் தாங்கள் அறிவு தரவேறுபாட்டால் இஸ்லாத்திற்க்கு பல்வேறு வகையான விளக்கங்களை அளித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் வழிகேடர்கள் என்றும் முஷ்ரிக்குகள் என்று செல்லி திரிகிறார்கள். இப்படி அலைவது சரிதான ? இதற்க்கான தீர்வு தான் என்ன ? அல்லாஹ்வின் வேதமும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள் தான் என்ன என்று பார்ப்போம்.
இறை நம்பிக்கை கொண்டவர்களே அல்லாஹ்விற்குக் கட்டுப்படுங்கள், இன்னும் (அவனுடைய) தூதருக்கு கட்டுப்படுங்கள், உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கு கட்டுப்படுங்கள். (அல் குர்ஆன் 4:59)
இறை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணமடைய வேண்டாம்.
நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றை பற்றி பிடித்துக் கொள்ளுங்கள், பிரிந்து விடாதீர்கள்...(அல் குர்ஆன் 3:102,103)
நிச்சயமாக நீங்கள் ஒரே சமுதாயம் தான். நான் தான் உங்கள் இறைவன். எனக்கே அஞ்சுங்கள்.(அல் குர்ஆன் 23:52)
ஈயத்தால் வார்க்கப்பட்ட கட்டிடத்தைப் போல் ஓரணியில் நின்று அல்லாஹ்வின் பாதையில் போரிடக்கூடியவர்களை அல்லாஹ் விரும்புகிறான்.(அல் குர்ஆன் 61:4)
தம் மார்க்கத்தைப் பிளந்து பலபிரிவுகளாகிவிட்ட இணைவைப்பேரில் ஒருவராக ஆகிவிட வேண்டாம்.(அல் குர்ஆன் 30:31)
சண்டையிடாதீர்கள். இதனால் கோழைகளாகிவிடுவீர்கள். அப்போது உங்கள் பலம் போய்விடும்.(அல் குர்ஆன் 8:46)
தெளிவான சான்றுகள் தம்மிடம் வந்த பின்னரும் கருத்து முரண்பட்டு பிரிந்துவிட்டவர்கள் போல் ஆகிவிடாதீர்கள். அவர்களுக்கு கடும் தண்டனையுண்டு.(அல் குர்ஆன் 3:105)
(தண்டணை வழங்கப்படும்) அந்த நேரத்தில் (இவ்வுலகில்) பின்பற்றப்பட்டு வந்த (வழிகாட்டிகள் மற்றும் தலை)வர்கள் தம்மை பின்பற்றி வந்தோரை விட்டு (அவர்களுக்கும் தமக்குமிடையில் எந்த தொடர்புமில்லை என்று கூறி) விலகி விடுவார்கள். ஆயினும் அவர்கள் தண்டணை பெற்றே தீர்வார்கள் மேலும் அவர்களுக் கிடையே இருந்த எல்லா உறவுகளும் முற்றிலும் அறுந்துவிடும்(அல் குர்ஆன் 2:166)
இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள், என அபூ ஹீரைரா (ரலி) அறிவித்தார்கள்.இமாம் ஒரு கேடயம் ஆவர். அவருக்கு பின்னால் நின்று மக்கள் போர் புரிவார்கள். அவர் மூலமாகவே பாதுகாப்புத் தேடிக் கொள்வார்கள். (முஸ்லிம்)
இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள், என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்கள். அல்லாஹ்வின் பாதையில் பைஆ செய்பவர் மறுமை நாளில் எந்த ஆதாரமும் தேவையின்றி இறைவன் முன் தோன்றுவார். ஆனால் பைஆ செய்யாத நிலையில் மரணிப்பவரோ ஜாஹிலியா மரணமடைபவராவர் (முஸ்லிம்)
இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள், என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள். எனக்குப் பின்னர், உங்களில் ஒருவர் மற்றவரின் பிடரியை வெட்டிக்கொள்ளும் நிராகரிப்பாளர்களாய் மாறிவிடாதீர்கள். (புகாரி)
இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள், என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள். தம்(ஆட்சி) தலைவரிடமிருந்து (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் (கண்டு அதை)வெறுப்பவர் பொறுமையாக இருக்கட்டும். ஏனெனில், ஆட்சியாள(ருக்குக் கட்டுபடாமல்அவ)ரிடமிருந்து ஒரு சாண் அளவு வெளியேறுகிறவர் ஜாஹிலிய மரணத்தை அடைவார். (புகாரி)
இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள், என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள். தம்(ஆட்சி) தலைவரிடமிருந்து மார்க்க விஷயத்தில் தமக்குப் பிடிக்காத (குறை) ஒன்றைக் காண்பவர் அதைப் பொறுத்துக் கொள்ளட்டும் ஏனெனில், ஒருவர்(இஸ்லாமியக்)கட்டமைப்பிலிருந்து பிரிந்து, அதே நிலையில்) இறந்துவிட்டால் அவர் ஜாஹிலிய மரணத்தை தழூவியவர் ஆவார். (புகாரி)
முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறினார்கள்,இஸ்லாத்தின் வளங்கள் ஒவ்வொன்றாக அழிந்து போய்விடும் அவற்றில் ஒன்று அழியும்போது அடுத்துள்ளதை மக்கள் பற்றிப் பிடித்துக்கொள்வார்கள் அவ்விதம் தலைமைத்துவமே முதலில் அழிந்துபோகும் இறுதியாக அழிந்து போவது தொழூகையாகும். (அஹ்மத்)
உமர்(ரலி)அவர்கள் கூறினார்கள்,
நிச்சயமாக கூட்டமைப்பு இன்றி இஸ்லாம் இல்லை, தலைமைத்துவம் இன்றி கூட்டமைப்பு இல்லை, அடிபணிதல் இன்றி தலைமைத்துவம் இல்லை. (தாரமி)
...அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் தனக்கு கட்டளையிட்டுள்ள ஐந்து விசயங்களை நான் உங்களுக்கு எடுத்துரைக்கிறேன் என்று கூறினார்கள். அவை 1.ஜமாத் - ஒன்றினைந்து வாழ்தல் 2. அஸ்ஸம்உ – தலைமையின் ஆணையைச் செவியேற்றல் 3. தாஅத் - தலைமைக்குக் கட்டுபடுதல் 4. ஹிஜ்ரத் - தியாகப்பயணம் மேற்க்கொள்தல் 5. ஜிஹாத் - அல்லாஹ்வின் பாதையில் போர் புரிதல். ஒருங்கினைந்து வாழூம் சமுதாய அமைப்பிலிருந்து ஒருவர் ஒரு சாண் அளவு வெளியே சென்றாலும் அவர் தனது கழூத்திலிருந்து இஸ்லாத்தின் கட்டை அவிழ்த்து விட்டார். மீண்டும் தீரும்பிவரும்வரை இதே நிலையில்தான் இருப்பார். யார் ஜாஹிலிய்யாவை செயல்படுத்திட அழைப்பு விடுகிறாரோ முழந்தாளிட்டவராக நரகத்தில் நுழையும் கூட்டத்திலிருப்பார். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதும் நபித்தோழர்கள் கேட்டனர். அவர் தொழூதாலும் நோன்பு நோற்றாலும் இதே நிலைதானா? அதற்கு ஆம் அவர் தொழூபவராக நோன்பு நோற்பவராக தன்னை முஸ்லிம் என்று கருதிக் கொள்பவராக இருப்பினும் சரிதான் என்று கூறிய நபி (ஸல்) தொடர்ந்து சொன்னார்கள். ஆனால் (உண்மையான)முஸ்லீம்களை அல்லாஹ் அவர்களுக்குச் சூட்டிய பெயரான முஸ்லிம்கள்இ முஃமின்கள் அல்லாஹ்வின் அடியார்கள் என்று அழையுங்கள். (அறிவிப்பாளர்: அல்ஹாரிஸ் அல் அஷ்அரீ (ரலி) (அஹ்மத் இப்னு கதீர்)
இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள், அல்லாஹ்வின் கரங்கள் கூட்டமைப்புடனேயே இருக்கும் யார் கூட்டமைப்பிலிருந்து தனிமைப்படுகிறாரோ அவர் தன்னை நரக நெருப்புக்குத் தனிமைப்படுத்திக் கொண்டவராவர் (திர்மதி)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்,நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள். முஸ்லிம்களே உங்களுக்கு பொருப்பாரை ஏற்படத்தி அதன் மூலம் இருலகிலும் வெற்றி பெற போகிறீர்களா ? இல்லை நாளை மறுமையில் உங்களுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்று விரண்டோடும் தலைவர்கள் பின்னால் செல்லப் போகிறீர்களா ?
முஸ்லீம்களே, உங்கள் ஈருலக வெற்றி உங்கள் கையில்!!!

Friday, April 15, 2011

ஹிஜாப்பை குர்ஆனை மூடிவைக்கும் ஒரு துணியாக மாற்றாத வரைக்கும் கிழக்கிலே எமது நிலை மேம்பட மாட்டாது

ஹிஜாப்பை குர்ஆனை மூடிவைக்கும் ஒரு துணியாக மாற்றாத வரைக்கும் கிழக்கிலே எமது நிலை மேம்பட மாட்டாதுமுஸ்லிம் பெண்களின் ஆடைகளில் ஒன்றான நிகாப் அணிவதற்கு தடையை பிரான்சு அரசாங்கம் கொண்டுவந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் சகோதரி உம்முமர்யாமின் முஸ்லிம் பெண்கள் எதிர் நோக்கும் சவால்களும் அவற்றைத் தீர்பதற்கான வழிமுறைகளும் என்ற உரையிலிருந்து சில விடயங்களைப் உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நாடுகிறேன். நான்கு முறை பிரித்தானியாவின் பிரதமராக பதவி வகித்த வில்லியம் கிலாட்ஸ்டோன் 1894ம் ஆண்டு பாராளுமன்றத்திலே ஆற்றிய உரையொன்றின்; ஒரு பகுதியில் சொன்னார் “ முஸ்லிம் பெண்களிடமிருந்து அவர்களது ஹிஜாப்பை பறித்து அதனை குர்ஆனை மூடிவைக்கும் ஒரு துணியாக மாற்றாத வரைக்கும் கிழக்கிலே (அதாவது உத்மானிய கிலாபத்திலே)எமது நிலை மேம்பட மாட்டாது” விரிவாக பிரித்தானிய பிரதமரின் மிகவும் வெளிப்படையான இந்தக்கூற்று எமக்கு வலியுறுத்துவது என்ன? முதலாவது : மேற்குலகின் இஸ்லாத்திற்கு எதிரான போராட்டத்தில் முஸ்லிம் பெண்களுக்கு எதிரான அவர்களது ஆடைக்கு எதிரான போராட்டம் என்பது காலங்காலமாக தொடர்ந்து வந்த ஒன்று என்பதும் . இரண்டாவது : இஸ்லாத்துக்கெதிரான போராட்டத்தில் முஸ்லிம் பெண்களுக்கெதிரான தாக்குதல் மிகவும் முக்கியம் பெறுகிறது என்பதுமாகும். இதே தொடரில்; தான் இஸ்லாமிய எழுச்சியின் முக்கிய அடையாளமாக முஸ்லிம் பெண்ளும், அவளது ஆடையும் இஸ்லாத்தின் எதிரிகளால் நோக்கப்படுகிறது. இதனால் தான் இஸ்லாத்திற்கு எதிரான அவர்களது முயற்சியில் பெண்களும் அவர்களது ஹிஜாபும் பலமாக சாடப்படுவதைக் காண்கிறோம். இன்றைய உலகில் நாங்கள் தான் நாகரீகம் அடைந்தவர்கள் என்று வாதாடுபவர்கள் முஸ்லிம் பெண்களை பிற்போக்கு வாதிகளாகவும்., நாகரீகம் தெரியாதவர்களாகவும்., சமூகத்துக்கு எந்த வித பங்களிப்பும் செய்யத் தகுதி அற்றவர்களாகவுமே சித்தரிக்க முயற்சிக்கின்றார்கள்.. இஸ்லாத்தின் எதிரிகள் இப்படி எதிர்ப்பது ஒரு பக்கம் இருக்க.. மறு பக்கத்தில் இஸ்லாத்தைத் தமது வாழ்வு நெறியாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களில் பலர் முஸ்லிம் பெண் என்பவள் வீட்டிற்குள் முடங்கிக்கிடப்பவள், சமைத்துத்தருபவள், வீட்டின் பணிகளை மட்டும் மேற்கொள்பவள், பிள்ளைகளை வளர்ப்பதில் தனது வாழ்நாளை கழிப்பதற்காக படைக்கப்பட்டவள் போன்றதொரு தோரணையில் அவளை நடாத்தி வருவதைப் பெரும் பாலும் காண்கிறோம். அண்மைக்கால அனுபவங்களைப் நாம் நன்கு அறிவோம் முஸ்லிம் பெண்ணுக்கும் அவளது; ஆடைக்கும் எதிரான போர் அதன் உச்ச கட்டத்தை அடைந்து விட்டது என்பதை பிரான்சின் அதிபா நிக்கொலா சர்கோசி தமது நாட்டின் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது. அவர் தனது உரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார் ‘முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிவது மார்க்க அடையாளமல்ல அடிமைத்தனத்தின் அடக்குமுறையின் அடையாளம் இழிவு தாழ்வின் அடையாளம் எமது நாட்டில் சகல விதமான சமூக வாழ்விலிருந்தும் தன்னை ஒதுக்கிக் கொண்டு திரைக்குப் பின்னால் பெண்கள் சிறை வைக்கப்படுவதை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.’ இது போன்ற தாக்குதல்களின் விளைவு பொது இடங்களில் ஹிஜாப் அணிவது தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டு விட்டது. பிரித்தானியா உட்பட ஐரோப்பாவின் ஏனைய நாடுகளிலும் இத்தகைய தடைகளை ஏற்படுத்த வேண்டும் என்ற பேச்சுக்கள் மிகவும் வலுப்பெற்று வருவதும் இங்கே மறுப்பதற்கில்லை. எனவே இங்கே ஒரு முக்கிய விடயத்தை நாம் மிகத்தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அதாவது முஸ்லிம் பெண்களுக்கு எதிரான, குறிப்பாக அவர்களின் ஆடைக்கு எதிரான இத்தகைய தாக்குதல்கள் இஸ்லாத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு முக்கிய பரிமாணமே ஒழிய அது ஒரு தனிமைப்பட்ட விடயமல்ல. இத்தகைய தாக்குதல்களை முஸ்லிம் சமூகமும், முஸ்லிம் பெண்களும் எவ்வாறு எதிர்கொள்வது என்பதை புரிவதற்கு இத்தகைய தாக்குதல்களின் பின்னணியில் காணப்படும் அவர்களின் நோக்கங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவற்றில் பிரதான முன்று காரணங்கள் இருக்கின்றன. ஓன்று: மேற்குலகப் பெண்கள் விடுதலையும் சுதந்திரமும் அடைந்துள்ளார்கள். இவர்களைப் போலவே முஸ்லிம் பெண்களும் சுதந்திரம் பெற வேண்டும் என்ற மேற்கின் போலித்தனமான கோஷமே முதலாவது காரணம். அதாவது பெண்ணியம் அல்லது பெண் விடுதலை என்ற பேரில் மேற்குலகப் பெண்களின் வாழ்க்கை எந்த சந்தேகமுமின்றி சீரழிந்து அதல பாதாளத்தில் கிடக்கிறது.இதனை நடுநிலையாக நின்று பார்ப்பவர்கள் எவரும் மறுக்க மாட்டார்கள். இத்தகைய அசிங்கமான பாதையிலேயே முஸ்லிம் பெண்களையும் அழைத்துச்சென்று அவர்கள் இஸ்லாமிய விழுமியங்களையும், ஒழுக்கங்களையும் தவிடுபொடியாக்கி தமது சமூகச் சீரழிவுகளை மறைக்க நினைக்கின்றார்கள். இவர்களின் திட்டங்கள் மேற்குலக அரசுகளாலும், மீடியாக்களாலும் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றன. இது முஸ்லிம் பெண்கள் எதிர்நோக்கும் முக்கிய சவாலாகும். மேற்கு விரும்புகின்ற பெண் விடுதலை எவ்வளவு தூரம் மனித வாழ்வை சீரழித்துள்ளது என்பதை அவர்களின் புள்ளிவிபரங்களிலிருந்தே நாம் தெளிவாக காணக்கூடியதாக உள்ளது. பெண்களை மோகப்பொருளாகப் பயன்படுத்தி இளம்யுவதிகளை யெல்லாம் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி போதைப் பொருளுக்கு அடிமையாக்கி பலரும் பணம் சம்பாதிப்பதை அறிவோம். இந்த நிலைக்கு நமது பெண்களையும் இழுத்துச் செல்வது அவர்களின் நோக்கம்..எமது பெண்களிடம் இருக்கின்ற இஸ்லாம் என்கின்ற அடையாளத்தை விட்டும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றுவதற்கு பயன் படுத்துகின்ற வார்த்தை ஜாலமே பெண் விடுதலை பெண் சுதந்திரம் என்பதாகும். முஸ்லிம் பெண்களை நோக்கிய அவர்கள் பயன்படுத்தும் இரண்டாவது யுக்கிதான் கிழக்கிலே அதாவது எமது முஸ்லிம் நாடுகளில் எமது முஸ்லிம் பெண்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளை அடக்குமுறைகளை காரணங்காட்டி அவற்றை தந்திரமாக இஸ்லாத்துடன் இணைத்து போலிப்பிரச்சாரகம் செய்கின்றனர். துரதிஸ்டவசமான இந்நிலைக்கு எமது நாடுகளில் முஸ்லிம் சமூகம் இஸ்லாத்திற்கு முரணாக பின்பற்றி வரும் விடயங்கள் காரணமாக அமைந்து விடுகின்றன. உதாரணமாக: ‘தலபுல் இல்மி பரீளதுன் அலா குள்ளி முஸ்லிமின்’ ‘அறிவைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை’ என்று நபிகளார் கூறினார்கள். அறிவைத் தேடுவதை ஆணுக்குப்போலவே பெண்ணுக்கும் இஸ்லாம் கடமையாக்கி இருந்தாலும் கல்வித்துறையில் பெண்களை மிகவும் பின் தங்கியவர்களாக வைத்துக் கொண்டிருப்பதும் கனவனின் கைக்குள் அடிமையைப் போல் இருப்பதே நல்ல மனைவிக்கு அடையாளம் என்று தவறான கருத்தில் பெண்களை அதட்டி வைத்துக் கொண்டிருப்பதும் வரதட்சனைக் கொடுமை சிறு வாய்த் தர்க்கத்திற்கெல்லாம் தலாக் சொல்லும் துஷ் பிரயோகமும் பலதார மணம் என்ற அனுமதியை மிகவும் துஷ்பிரயோகம் செய்வதும் சமூகப்பணியில் பங்கேற்க அனுமதிக்காதிருப்பதும் பொறுத்தப்பாடு பார்க்காது வற்புறுத்தல் திருமணங்கள் செய்விப்பதும் honor killing எனப்படும் கௌரவக் கொலைகள் புரிவதும் பார பட்சம் காட்டி பிள்ளைகளை வளர்ப்பதும் முறை தவறிவிட்ட மஹர் கொடுப்பனவும் என பல பிரச்சினைகளைக் காணலாம். இவ்வாறு நமது நாடுகளில் முஸ்லிம் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு இஸ்லாம்தான் காரணம் என அவர்கள் நிறுவ முற்படுகிறார்கள். இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன்பே தனது ஆட்சியாளரை தெரிவுசெய்யும் உரிமையிலிருந்து, தனது கனவனை விரும்பினால் தலாக் செய்யும் உரிமை வரைக்கும் பெண்களுக்கான உரிமைகளை வழங்கியிருந்தும் எமது சமூகத்தில்; இஸ்லாத்தை முழமையாக பின்பற்றாமலும், அறியாமையாலும் அவர்களுக்கு இஸ்லாம் வழங்கிய பல உரிமைகளை பறித்து வைத்துள்ளோம். இந்நிலை பெண்களை மோகப்பொருளாக தரம் தாழ்த்தியும், விலைமாதுகளாகவும், வியாபாரப்பொருட்களாகவும் பார்த்து வருகின்ற மேற்குலகிற்கு சாதாகமான சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கிறது. நாம் எமது நாடுகளில் முஸ்லிம் பெண்களை அவர்களுக்குரிய அந்தஸ்த்தில் வைத்து பாதுகாக்காமைக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஓன்று இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளை முழுமையாக எமது சமூகம் வழங்கத் தவறியிருப்பதும் இரண்டாவது இஸ்லாம் என்று எண்ணிக் கொண்டு கிழக்கின் பிற மத கலாச்சாரங்களைப் இது நாங்கள் காலங்காலமாக பின்பற்றி வருகின்ற கலாசாரங்கள் என்று பிதற்றிக்கொண்டு பின்பற்றி வருகின்றைமையும் பிரதானமாக காரணங்களாகும். இப்படி முஸ்லிம் பெண்களை முஸ்லிம் நாடுகள் நடத்துகின்ற விதத்தைப் பார்க்கின்ற மேற்குலகு இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்று தமது வாதத்தை உறுதிப்படுத்த பயன்படுத்தி வருகிறது. இந்த நிலைமை எமது நாடுகளில் தொடரும் காலம் எல்லாம் மேற்குலகின் இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரத்துக்கு நாமே எண்ணை ஊற்றி வருகின்றோம் என்பதே உண்மை. மூன்றாவது காரணம் மேற்கு விரும்புகின்ற வாழ்வு முறையைப் புறக்கணித்து விட்டு கிழக்கில இருக்கினற் மரபு முறை கலாச்சார வாழ்வு முறையையும் ஒதுக்கி விட்டு இஸ்லாம் பெண்களைப் பார்க்கின்ற விதத்தில் தூய இஸ்லாத்தைப் பின்பற்றுகின்றமை யாலும் தாக்கப்படுகிறாள். அதி வேகமாக இஸ்லாம் வளர்ந்து வருகின்றமையும் அதன் எழுச்சியும் இன்று மேற்கிற்கு இருக்கின்ற முழுமுதற் பிரச்சனை. அவ்வாறெனில் இஸ்லாமிய எழுச்சியின் மிக முக்கிய பௌதீக அடையாளமாக ஆண்களை விட பெண்களே விளங்குவதால் அவளை தாக்குவதை இஸ்லாமிய அடையாளத்தை தாக்குவதாகவே இஸ்லாத்தின் எதிரிகள் கருதுகிறார்கள். எனவே அதன் காரணமாகவும் அவர்கள் அவளை எதிர்க்க நினைக்கிறார்கள். முஸ்லிம் பெண்கள் தமது கலாசார ஆடைகளிலிருந்து விடுபட்டு தற்போது இஸ்லாமிய ஆடைகளை அணிகின்ற வீதம் முஸ்லிம் உலகில் மட்டுமல்ல மேற்குலகிலும் மற்றும் கிழக்கு தேசங்களிள எல்லாம் அதிகரித்து வருகின்றமை முஸ்லிம் சமூகத்தின் அல்லது இஸ்லாத்தின் பிரசன்னத்ததை உலகிலே பட்டவர்த்தனமாகக்காட்டப்படும் காட்சியாக அவர்கள் காண்கின்றார்கள். முஸ்லிம் உலகில் ஆழமாக இஸ்லாத்தை பின்பற்றி ஒழுகுகின்ற இஸ்லாமிய குடும்பங்கள் உருவாகி வருகின்றமையும் அதற்கு முஸ்லிம் பெண்களின் பங்களிப்பும் குழந்தை வளர்ப்பும் இஸ்லாமிய சமூக எழுச்சிக்கு முக்கிய பங்களித்து வருகின்றமை மேற்குலகால் தீவிரமாக நோக்கப்படுகின்றது. இவ்வாறு இன்றைய உலகில் உம்மத் எதிர்நோக்கும் முக்கிய சவால்களில் முஸ்லிம் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் மிகப்பெரிய பங்கை வகிக்கின்றது. எனவே இந்த நிலையிலிருந்து மீண்டு வருவதற்கான மிகமுக்கிய தேவை ஒட்டு மொத்த முஸ்லிம் உம்மத்திற்கும் இருக்கின்றது. அதிலும் குறிப்பாக எமக்கெதிராக முன்வைக்கப்படுகின்ற சிந்தான ரீதியான, கலாசார ரீதியான மற்றும் பௌதீக ரீதியான தாக்குதல்களிலிருந்து நாம் விடுதலையாவதற்கும் – எமது கண்ணியம் காக்கப்படுவதற்கும் நாம் என்ன செய்தாக வேண்டும் என்பதை நாம் மிகத்தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். உலகில் பெண்களுடைய உரிமைகளும் கண்ணியமும் பாதுகாக்கப்பட்ட நிலையில் பல நூற்றாண்டுகளைக் கடந்து வந்தோம். ஆட்சியாளனும் ஆட்சியும் பலவீனமாக இருந்தாலும் பெண்களுடைய உரிமைகளும் கண்ணியமும் அவர்களால் பாதுகாக்கப்பட்டதைக் கண்டோம். முஃதஸிம் பில்லாஹ் என்ற கலீபாவின் ஆட்சியின் போது ஒரு காபிர் ஒரு முஸ்லிம் பெண்ணை அவமதித்தான் என்பதற்காக..அவர் தனது படையைத் திரட்டி காபிர்களோடு போராடி முஸ்லிம் பெண்களுடைய உரிமைகளையும் கண்ணியத்தையும் பாதுகாத்தமை மிக அழகிய முன்மாதிரியாகும். இன்று பலஸ்தீனிலும் காஷ்மீரிலும் ஈராக்கிலும் அப்கதானிஸ்த்தானிலும் முஸ்லிம் பெண்கள் எதிர் நோக்கும் சவால்கள் ஒன்றிரண்டல்ல. மேற்கிலே இஸ்லாமிய எதிர்ப்பு அலைகள் கருத்தாக மட்டுமில்லாமல் தாக்குதல்களாக உருப்பெற்றிருப்பதைக் காண்கிறோம். இந்தப் பெண்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பாதுகாக்கப்பது யார்? நுபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘இன்னமல் இமாமு ஜுன்னா’ நிச்சியமாக ஆட்சியின் தலைவர் தான் கேடயம். மேலும் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அல் இமாமு ராஇன் வஹவ மஸ்ஊலுன் அன் ரஇய்யதிஹி’ ஆட்சியின் தலைவர் பொறுப்பு தாரி அவர் அவரது பொறுப்பு பற்றி கேட்கப்படுவார். இப்படியான ஆட்சியும் ஆட்சித்தலைவரும் உலகிலிருந்து நீக்கப்பட்டு 86 வருடங்கள் ஆகின்றன முஸ்லிம் ஆட்சியாளர்கள் என கூறக்கூடிய எவரும் முஸ்லிம் பெண்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பாதுகாப்பது ஒரு புறம் இருக்கட்டும் அவர்கள் தான் இஸ்லாத்தின் எதிரிகளின் இஸ்லாத்துக்கு எதிரான திட்டங்களை நடைமுறைப்படுத்தக கூடியவர்களாக உளளனர். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாக்கின்ற அரசாங்கம் இல்லாததன் காரணமாக முஸ்லிம் பெண் தொடர்ந்தும் அவமதிக்கப்படுகிறாள் எனவே இந்த இஸ்லாமிய ஆட்சியை மீண்டும் உலகில் நிலைநாட்டுவதற்காக வேலை செய்வது எம்மீது கட்டாயக் கடமையாகிறது இஸ்லாமிய ஆட்சிக்காக எப்படி வேலை செய்வது? இஸ்லாத்தை சமூக அரங்கிலே நிலை நாட்டுவதற்கு சகாபாப் பெண்மணிகளைப் போல் பாடுபடவேண்டும் அதறகான நடை முறை சாத்தியமான செயற்திட்டமாக பின்வரும் அம்சங்களை கூறலாம். 1. இஸ்லாமிய கிலாபா ஆட்சியால் மாத்திரமே பெண்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பாதுகாக்க முடியும்.இந்த யதார்த்தத்தை உண்மையை அறிவு பூர்வமாகவும் ஆதாரபூர்வமாகவும் விளங்கிக் கொள்ளுதல்.. 2. அறிவு தேடுவது எமது கடமை என்பதை உணர்ந்த பின்பு வெறுமனே தனிப்பட்ட இபாதத்துக்காக மட்டும் அதனைத் தேடாது சம்பூரணமாக இஸ்லாத்தைப் அறிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தோடு தேடிக் கற்க வேண்டும். இஸ்லாமிய பொருளாதாரம் சமூகவியல் குற்றவியல் அரசியல் என எல்லா வற்றையும் ஆழமாக கற்க வேண்டும். 3. இஸ்லாத்தின் பால் அழைப்பது எமது கடமை என்பதை உணர்த த பிறகு பிறரைச் சந்திக்கின்ற எல்லா சந்தர்ப்பத்திலும் இஸ்லாத்தை அழகிய வாழ்வு முறையாக சமூகத்திலே நடை முறைப்படுத்துவது எப்படி என்பதைப் பற்றி பேசுவதும் அதற்காக பாடுபடுவதும் அவசியமாகும். 4. இறுதியாக சஹாபாப் பெண்மணிகளே எமது உதாரண புருஷிகளாக எடுத்துக் கொள்ள வேண்டும். இஸ்லாத்தை பூரணமாக நடை முறைப்படுத்தும் பணியில் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களுக்கு எல்லாச் சந்தர்ப்பத்திலும் பக்க பலமாக இருந்த கதீஜாவைப் போல் பூரண இஸ்லாமிய அறிவைப் பெற்று அதனைப 50 வருடங்களுக்கு மேலாக போதித்து வந்த ஆஇஷாவைப் போல் பல யுத்தங்களில் கலந்து போராடிய வீரத் தாய் உம்மு அம்மாராவைப் போல் இஸ்லாத்தில் இறைபாதையில் கொல்லப்பட்ட முதலாவது நபர் தியாகிகளின் தாய் சுமைய்யாவைப் போல் வயோதிப வயதிலும் இஸ்லாமிய அழைப்பில் மும்முரமாக ஈடுபட்டு வந்த அஸ்மா பின்தி அபீ பக்ரைப் போல்நாம் ஒவ்வொருவரும் இன்ஷா அல்லாஹ் மாற வேண்டும்தலைவர்களையும் வீரர்களையும் அழைப்பாளர்களையும் அறிஞர்களையும் உருவாக்குகின்ற முஸ்லிம் மகளாகவும் மனைவியாகவும் தாயாகவும் மாற வேண்டும் என்ற ஆசையையும் ஆர்வத்தையும் வளர்ப்போமாக.

Thursday, April 14, 2011

இஸ்லாமிய நாகரீகம் - Islamic Civilisation - Al Hadarah Al Islamiyyah

இஸ்லாமிய நாகரீகம் - Islamic Civilisation - Al Hadarah Al Islamiyyah நாகரீகம் (Hadarah) என்பதற்கும் பொருளியல் முன்னேற்றம் ; (Madaniyyah) என்பதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. நாகரீகம் என்பது வாழ்க்கையைப் பற்றிய அனைத்து சிந்தனைகளையும் உள்ளடக்கியதாகும். ஆனால் பொருளியல் முன்னேற்றம் என்பது வாழ்வியல் நடவடிக்கைகளில் பயன்படுத்தும் புலன் உணர்வுக்கு உட்பட்ட (Sensed Objects) பொருட்களின் தொகுப்பு ஆகும். நாகரீகம், வாழ்க்கையைப் பற்றிய குறிப்பிட்ட கண்ணோட்டத்தின் அடிப்படையில் உருவான சிந்தனையாக இருப்பதுடன், பொருளியல் முன்னேற்றம் குறிப்பிட்ட ஒன்றாகவோ அல்லது பொதுவானதாகவோ இருக்கலாம். ஆகவே, நாகரீகத்தின் படைப்பான உருவச்சிலைகள் போன்றன குறிப்பானவைகளாக இருக்கும் அதே வேளையில் அறிவியலாலும், (Science) அதன் முன்னேற்றத்தாலும், தொழிற்துறைகளாலும், அதன் பரிணாம வளர்ச்சியினாலும் உற்பத்தியாகும் பொருளியல் படைப்புகள் பொதுவானவைகள். மேலும் அவை குறிப்பிட்ட சமுதாயத்திற்கோ அல்லது நாட்டுக்கோ மட்டும் சொந்தமானவைகள் அல்ல. மாறாக அவை தொழிற்துறைகள், விஞ்ஞானம் ஆகியவற்றைப் போன்று பொதுவானவைகளாகும் (universal). நாகரீகத்திற்கும், பொருளியல் முன்னேற்றத்திற்கும் இடையிலுள்ள வேறுபாட்டினை நாம் எப்பொழுதும் கவனிக்க வேண்டும். மேலும் நாகரீகத்தின் விளைவாக ஏற்படும் பொருளியல் முன்னேற்ற அம்சங்களுக்கும், அறிவியல் மற்றும் தொழிற்சாலைகளால் உருவாகும் பொருளியல் முன்னேற்ற அம்சங்களுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டினையும் நிச்சயமாக நாம் கவனிக்க வேண்டும். பொருளியல் முன்னேற்றத்தினால் உருவான ஒரு பொருளை நாம் ஆராயும்போது அதற்கும் நாகரீகத்திற்கும் இடையிலுள்ள வேறுபாட்டினை அறிந்திட இது அவசியமாகிறது. அறிவியல் மூலமாகவும், தொழிற்துறையாலும் விளைந்த மேற்கத்திய பொருட்களை பயன்படுத்துவது தொடர்பாக எவ்வித தடையுமில்லை. எனினும் எக்காரணத்தைக் கொண்டும் மேற்கத்திய நாகரீகத்தின் விளைவாக உருவான பொருட்களை நாம் ஏற்றுக்கொள்ளவே கூடாது. ஏனெனில் மேற்கத்திய நாகரீகத்தை ஏற்றுக் கொள்வதற்கு நமக்கு அனுமதியில்லை. இதற்கு காரணம் அந்த நாகரீகம் நிறுவப்பட்டிருக்கும் அடித்தளத்தின் முதற்படியோடும், வாழ்க்கையைப் பற்றிய அதன் கண்ணோட்டத்தோடும், மனிதனின் மகிழ்ச்சி தொடர்பாக அதன் அர்த்தத்தோடும் இஸ்லாம் முற்றாக முரண்பட்டு நிற்கிறது. மார்க்கத்தை வாழ்வியலிலிருந்து பிரிக்கும் கொள்கையிலிருந்து மேற்கத்திய நாகரீகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் வாழ்வியல் விவகாரங்களில் மார்க்கம் ஆதிக்கம் செலுத்துவதை அது மறுக்கிறது. எனவே அரசியலிலிருந்து மார்க்கத்தை அது பிரித்து வைத்திருக்கிறது. வாழ்க்கையிலிருந்து மார்க்கத்தை பிரித்து, வாழ்வியல் விவகாரங்களில் அதன் பங்களிப்பை மறுப்பவர்களுக்கு இந்த பிரிவினை இயல்பான ஒன்றாக இருக்கக்கூடும். இந்த அடித்தளத்தில்தான் அதன் வாழ்வியலும், வாழ்வியல் செயலாக்க அமைப்புகளும் (System of life) நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நாகரீகம், மனிதனின் முழு வாழ்க்கையையும், உலக பயன்களை மட்டும் தேடி அடைந்து கொள்ளும் செயல்பாட்டுத் தளமாக கருதுகிறது. எனவே வாழ்க்கையின் செயல்பாடுகளுக்கு அதன் அளவுகோள் ஆதாயமேயாகும். ஆகையால் ஆதாயத்தின் அடிப்படையிலேயே அதன் வாழ்வியல் செயலாக்க அமைப்புகளும் (System of life - Nidam) அதன் நாகரீகமும் நிர்மானிக்கப்பட்டிருக்கின்றன. அதன் செயலாக்க அமைப்புகளிலும் நாகரீகத்திலும் உலக பயன்கள்தான் முக்கியமான சிந்தனையாகவும் (Thoughts) வெளிப்படையான அம்சமாகவும் திகழ்கின்றன. இது ஏனெனில் வாழ்க்கையை உலக பயன்கள் அடிப்படையில்தான் அது விளக்குகிறது. அவர்களுடைய பார்வையில் மகிழ்ச்சி என்பது அதிகபட்சமான புலன் இன்பத்தை மனிதனுக்கு கொடுக்கக்கூடியதாகவும், அதனை அடையும் சாதனங்களை பெற்றுக் கொள்வதாகவும், இருக்கிறது. இதனடிப்படையில் உலக பயன்களை அறுவடை செய்ய வேண்டும் என்ற ஆசையின் மீது மேற்கத்திய நாகரீகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. உலக பயன்களைத் தவிர வேறு எந்த ஒன்றுக்கும் அங்கீகாரமோ அல்லது பரிசீலனையோ கொடுப்பதற்கு முகாந்திரமே இல்லாத விதத்தில் அதன் வாழ்வியல் செயலாக்க அமைப்புகளின் அளவுகோள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே ஆன்மீக விவகாரம் தனிமனித அளவில் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. சமூக கட்டமைப்பில் அதற்கு எந்த தலையீடும் கிடையாது. கிருஸ்தவ தேவ ஆலயத்திற்குள்ளும் அதன் மதகுருமார்களின் கைகளுக்குள்ளும் ஆன்மீக விவகாரங்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. இதன் முடிவாக மேற்கத்திய நாகரீகத்தின் எந்தவிதமான ஒழுக்க மாண்புகளோ அல்லது ஆன்மீக மற்றும் மனித பண்புகளோ கிடையாது. மாறாக பொருளியல்வாத அடிப்படை மட்டுமே இருக்கிறது. இதன் காரணமாக மனிதநேய நடவடிக்கைகள் அரசிடமிருந்து பிரிக்கப்பட்டு செஞ்சிலுவை சங்கம், மிஷனரிகள் போன்ற சமூக அமைப்புகளிடத்தில் தஞ்சம் புகுந்துவிட்டன. பொருளியல்வாத அடிப்படையிலுள்ள உலக பயன்கள் நீங்களாக மற்ற அனைத்து மாண்புகளும் வாழ்க்கையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டன. இவ்வாறான வாழ்வியல் சிந்தனைகளைக் கொண்டதாகவே மேற்கத்திய நாகரீகம் இருக்கிறது. இஸ்லாமிய நாகரீகத்தைப் பொருத்தவரை அது மேற்கத்திய நாகரீகம் கட்டமைக்கப்பட்டுள்ள அடிப்படைக்கு முற்றிலும் முரண்பட்ட அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதன் வாழ்வியல் கண்ணோட்டமும், மகிழ்ச்சி பற்றி அது கொண்டிருக்கும் அர்த்தமும் மேற்கத்திய நாகரீகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அல்லாஹ்(சுபு)வின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலும் அவன்(சுபு) பிரபஞ்சம், வாழ்வு, மனிதன் ஆகியவற்றிற்கு ஒரு செயலாக்க அமைப்பை ((Nidam- System) அமைத்திருக்கின்றான் என்ற நம்பிக்கை மீதும் இஸ்லாமிய நாகரீகம் நிறுவப்பட்டுள்ளது. அவன்(சுபு) மனித குலத்திற்கு இஸ்லாம் என்ற ஒரே மார்க்கத்துடன், முஹம்மது(ஸல்) அவர்களை அனுப்பி இருக்கிறான். இதற்கு பொருள் என்னவென்றால், அல்லாஹ்(சுபு) மீதும் அவனுடைய (சுபு) மலக்குகள் மீதும், அவனுடைய(சுபு)வேதத்தின் மீதும் அவனுடைய(சுபு) தூதர்கள் மீதும், மறுமைநாள் மற்றும் அல்களா வல்கத்ர் ஆகியவற்றின் மீதும் உள்ள நம்பிக்கையை உள்ளடக்கிய இஸ்லாமிய அகீதாவின் மீதுதான் இஸ்லாமிய நாகரீகம் நிறுவப்பட்டுள்ளது என்பதாகும். ஆகவே, அகீதாதான் நாகரீகத்தின் அடித்தளமாக இருப்பதால் ஆன்மீக அடிப்படை மீது அதன் நாகரீகம் அமைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய நாகரீகத்தில் வாழ்க்கை முறை என்பது இஸ்லாமிய அகீதாவிலிருந்து பிறக்கும் இஸ்லாமிய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. அகீதாவின் மீதுதான் வாழ்க்கை மற்றும் அதன் செயல்பாடு ஆகிய இரண்டும் நிர்மானிக்கப்பட்டிருக்கின்றன. ஆன்மாவையும் (Spirit) இயற்பொருட்களையும் (Matter) ஒன்று கலக்கக்கூடியதாக இஸ்லாமிய தத்துவம் இருக்கிறது. அதாவது அஹ்காம் ஷரிஆவினால் மனிதனின் செயல்பாடுகள் வழிநடத்தப்படும் இந்த வழிமுறைதான் வாழ்க்கையின் அடிப்படையாக விளங்குகிறது. அதே வேளையில் மனிதனின் செயல்பாடுகள் பொருளியல் அடிப்படையில் இருக்கும் நிலையில் அவன் செயல்பாடுகளை ஹராம் ஹலால் அடிப்படையில் மேற்கொள்ளும்போது அல்லாஹ்(சுபு)வுடன் அவனுக்கு இருக்கும் தொடர்பை அவன் கவனத்தில் கொள்வதுதான் ஆன்மா (Spirit - RUH) எனப்படுகிறது. இதன் மூலம்; ஆன்மாவையும் இயற்பொருட்களையும் ஒன்று கலக்கும் செயல் ஏற்படுகிறது. இதன்படி, அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகள் முஸ்லிம்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறன. அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு இணக்கமாக தன் செயல்பாடுகளை மேற்கொள்ளும் ஒரு முஸ்லிமுடைய இறுதி லட்சியம் அல்லாஹ்(சுபு)வின் உவப்பை எய்துவதே அல்லாமல் உலக பயன்களாக இருக்க முடியாது. எனினும், செயல்பாடுகளை மேற்கொள்ளும்போது உடனடியாக தேடப்படுவது பொருளியல் பயனாக இருக்கலாம். அது செயல்களுக்கு ஏற்ப மாறுபடும். வர்த்தகத்திலோ அல்லது வியாபாரத்திலோ ஈடுபட்டிருக்கும் ஒருவரின் எண்ணம் இலாபம் ஈட்ட வேண்டும் என்ற பொருளியல் பயனாக இருக்கலாம். எனினும் அவருடைய வியாபாரம் பொருளியல் பயன் (Meterialistic) சார்ந்த செயல்பாடாக இருந்தாலும்கூட அல்லாஹ்(சுபு)வின் உவப்பை எய்திடும் பொருட்டு அவனுடைய(சுபு) ஏவல் விலக்கல் கட்டளைகள் மூலமாக அவனுடன்(சுபு) அவருக்குள்ள தொடர்பை உணர்ந்து கொள்ளும் விதமாக அவர் அதில் இயக்கப்படுகிறார். அதே வேளையில் அந்த செயல்பாட்டை மேற்கொள்வதன் மூலம் அவர் அடைந்து கொள்ள எண்ணிய இலாபம் பொருளியல் பயனாக இருக்கிறது. தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ் போன்ற ஆன்மீகம் சார்ந்த பயனாகவும் அது இருக்கலாம். உண்மையை கடைபிடித்து நேர்மையாக இருத்தல், நன்றி உணர்வை வெளிப்படுத்துதல் போன்ற ஒழுக்க மாண்புகள் சார்ந்த பயனாகவும் இருக்கலாம். நீரில் மூழ்க இருக்கும் ஒருவரை காப்பாற்றுதல் அல்லது ஏழைகளுக்கு உதவுதல் போன்ற மனித நேயம் சார்ந்த பயனாகவும் இருக்கலாம். மனிதன் தன் செயல்பாட்டை மேற்கொள்ளும்போது இந்த பயன்களை கவனத்தில் கொண்டு அவைகளை அடைய எண்ணுகிறான். எனினும், மனிதனின் செயல்பாடுகளுக்கு பின்னணியிலிருந்து அவனை இயக்கும் ஆற்றல் இந்த பயன்களாகவோ, அவன் நோக்கமாக கொண்ட இறுதி இலட்சியமாகவோ அவை இருப்பதில்லை. அவை செயல்பாட்டின் பலன்களாக இருப்பதுடன் அவை செயல்பாட்டின் தன்மைக்கு ஏற்ப மாறுபடுகின்றன. மகிழ்ச்சி என்பது அல்லாஹ்(சுபு)வின் உவப்பை எய்துவதேயன்றி மனிதன் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் இல்லை. ஒருவன் தன்னுடைய வாழ்வை பாதுகாத்துக் கொள்வதற்காக உடல்சார்ந்த தேவைகளையும் (Organic Needs) உள்ளார்ந்த உணர்வுகளின் விருப்பங்களையும் (Instinctual Desise) நிறைவு செய்து கொள்வது அவசியமான விதிமுறையாக இருக்கிறது. ஆனால், இவைகளை நிறைவு செய்து கொள்வது மட்டும் மகிழ்ச்சிக்கு உத்திரவாதம் அளிக்காது. இங்கு தொகுத்துக் கூற விரும்பும் சுருக்கமான கருத்து யாதெனில்: வாழ்வியல் பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் இதுதான். இந்த கண்ணோட்டம்தான் இஸ்லாமிய நாகரீகத்தின் அடிப்படை. ஒவ்வொரு அம்சத்திலும் மேற்கத்திய நாகரீகம் இஸ்லாமிய நாகரீகத்திலிருந்து முரண்படுகிறது என்பது தெளிவாக விஷயம். இஸ்லாமிய நாகரீகத்தின் விளைவாக உருவாகும் பொருளியல் முன்னேற்றத்தின் அடிப்படையிலுள்ள குறிப்பிட்ட பொருட்கள் இஸ்லாத்திற்கு மட்டும் பிரத்தியோகமாக உரியவை. அவை மேற்கத்திய நாகரீகத்தின் விளைவாக உருவாகும் பொருளியல் முன்னேற்ற அடிப்படையிலுள்ள பொருட்களோடு முரண்படுவதாக இருக்கின்றன. உதாரணமாக ஒரு நிழற்படம் (Photograph) என்பது பொருளியல் முன்னேற்றத்தின் விளைவாக உருவான பொருளாகும். (Madaniyya Objects) ஒரு பெண்ணின் உடல் அழகை வெளிப்படுத்தும் நிர்வான நிழற்படத்தை மேற்கத்திய நாகரீகம் ஒரு கலை அம்சமாக கருதுகிறது. அந்த நிழற்படம் மேற்கத்திய நாகரீகத்தின் விளைவாக உருவாகிய பொருளியல் முன்னேற்றத்தின் குறிப்பிட்ட பொருளாக இருக்கிறது. மேலும் அது பெண்கள் குறித்த அதன் வாழ்க்கை கண்ணோட்டமாகவும் இருக்கிறது. ஆகவே மேற்கத்திய சமூகத்தைச் சார்ந்த ஒரு மனிதன் அதை கலை அம்சமாக கருதுகிறான். அதில் பெருமை பாராட்டுகிறான். எனினும், இந்த பொருள் இஸ்லாமிய நாகரீகத்திற்கும், பெண்களின் கௌரவம் என்று கருதி எவைகளை பாதுகாக்க வேண்டும் என்று இஸ்லாம் கருதுகிறதோ அத்தகைய சிந்தனைகளுக்கும் முரண்படுகிறது. இதன் முடிவாக இத்தகைய நிழற்படங்கள் தடை செய்யப்பட வேண்டும். ஏனெனில் அவை பாலியல் வேட்கையை தூண்டக்கூடியதாக இருக்கின்றன. இதன் விளைவாக சமூகத்தின் ஒழுக்க மாண்புகள் தளர்ந்து போவதற்கு இவை உடனடி காரணங்களாக இருக்கின்றன. இது போலவே வீடு என்பது மற்றொரு பொருளியல் முன்னேற்றம் சார்ந்த பொருளாக இருக்கிறது. ஒரு முஸ்லிம் தனக்கு வீடு கட்ட எண்ணும் போது வெளியில் இருப்பவர்களுக்கு வீட்டினுள் இருக்கும் பெண்கள் தெரியாத வகையில் வீட்டின் அமைப்பு இருக்க வேண்டும் என்பதில் அவர் கவனம் செலுத்துவார். இதனடிப்படையில் ஒரு முஸ்லிம் வீட்டைச் சுற்றி மதில் சுவர் எழுப்புகிறார். ஆனால் மேற்கத்தியர்கள் இதில் கவனம் செலுத்துவதில்லை. மேற்கத்திய நாகரீகத்தின் அடிப்படையில் உருவான பொருளியல் முன்னேற்றம் சார்ந்த அனைத்து பொருட்களுக்கும் இது பொருந்தும். உதாரணமாக உருவ சிலைகளை கூறலாம். இது போலவே நிராகரிப்பவர்களின் பிரத்தியோகமான ஆடைகளை அணிவது முஸ்லிம்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் அவைகள் வாழ்க்கையைப் பற்றிய ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தைப் பெற்றிருக்கின்றன. எனினும் இதர ஆடைகளை அணிவதற்கு தடையில்லை. உதாரணமாக, தேவைக்காக அணியும் ஆடைகள் அழகூட்டும் ஆடைகள். இவைகளில் குஃப்ர் அம்சங்கள் இல்லையெனில் அவற்றை அணியலாம். அவைகள் பொதுவான பொருட்களாகும். அவற்றை உபயோகிப்பதற்கு முஸ்லிம்களுக்கு அனுமதி உண்டு. அறிவியல் மற்றும் தொழிற்துறைகள் மூலமாக உருவாக்கப்பட்ட பரிசோதனை கூட உபகரணங்கள், மருத்துவத்துறை மற்றும் தொழிற்துறை கருவிகள், வீட்டு உபயோக பொருட்கள் ஆகிய பொருளியல் முன்னேற்றம் சார்ந்த பொருட்கள் பொதுவானவைகளாகும். நாகரீகத்தின் விளைவாக உருவாகாததும், அதனோடு தொடர்பு இல்லாததுமான இத்தகைய பொருட்களின் உபயோகத்திற்கு முஸ்லிம்களுக்கு அனுமதி உண்டு. இன்றைய உலகை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் மேற்கத்திய நாகரீகத்தை மேலோட்டமாக பார்வையிட்டால் மனிதனின் மன அமைதிக்கு அதனால் உத்திரவாதம் அளிக்க முடியாது என்பது தெளிவாக விளங்கும். இதற்கு மாற்றமாக மனித சமூகத்தில் ஆழமாக இடம்பெற்றுள்ள துன்பத்திற்கும் துயரத்திற்கும் அதுவே காரணமாகவும் இருக்கிறது. வாழ்வியலிலிருந்து மார்க்கத்தைப் பிரிப்பதை அடிப்படையாக ஏற்றுள்ள இந்த நாகரீகம், மனிதனின் இயற்கை தன்மைக்கு முரண்படுகிறது. ஆகவே சமூகத்தில் ஆன்மீக விஷயங்களுக்கு அது முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வாழ்க்கையை உலக இலாபங்களின் தொகுப்பாக அது கருதுகிறது. உலக இலாபங்களை அடைவதுதான் மனிதர்களுக்கிடையிலுள்ள உறவின் அடிப்படையாக அது கருதுகிறது. எனவே, ஓயாத துன்பத்தையும் மனப்போராட்டங்களையும் அது உருவாக்குகின்றது. வாழ்வின் அடிப்படையாக உலக இலாபங்கள் கருதப்படும்வரை இயல்பாகவே அதற்கான போராட்டமும் கூடுதலாகவே இருப்பதுடன் இங்கே மனிதர்கள் மத்தியில் உறவைப்பேணுவதற்கு வலிமையை பிரயோகிக்கவேண்டிய நிலையும் இயல்பாகவே காணப்படும். எனவே இந்த நாகரீகத்தை பின்பற்றுகிறவர்களுக்கு காலனியாதிக்க சிந்தனை ஏற்படுவது இயல்பான விஷயமாகும். ஏனெனில் வாழ்க்கையின் அடிப்படையாக உலக பயன்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன. அங்கு எந்த வகையான ஒழுக்க மாண்புகளுக்கும் இடம் கிடையாது. ஆகையால், ஆன்மீக மாண்புகள் உதாசீனப்படுத்தப்பட்ட அதே வழியில் அனைத்து ஒழுக்க மாண்புகளும் அந்த சமூகத்தில் மங்கிப்போவது இயற்கையான நிகழ்வுதான். எனவே அங்கு போட்டி, போராட்டம், ஆக்கிரமிப்பு, காலனியாதிக்கம் ஆகியவற்றின் மீது வாழ்வு நிறுவப்பட்டுள்ளது. மக்களிடம் ஆன்மீக நெருக்கடி ஏற்பட்டதன் காரணமாக ஓயாத மனப்போராட்டம் ஏற்பட்டுவிட்டது. இதனால் உலகம் முழுவதிலும் பரவலாக தீமை விளைந்திருப்பது மேற்கத்திய நாகரீகம் ஏற்படுத்தியிருக்கின்ற தீய விளைவுகளாக இருக்கின்றன. இதனால் மனித சமூகம் கடும் கோபமுற்று குற்றம் சாட்டும் வகையில் இன்று நிலைமை இருக்கிறது. உலகில் இந்த நாகரீகம் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பதின் காரணமாக அழிவை கொண்டுவரும் பல விளைவுகளை நோக்கி மனித சமூகம் சென்று கொண்டிருக்கிறது. முடிவாக மனித வர்க்கத்தின் செயல்பாட்டிற்கு இன்று மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு வரை உலகில் ஆதிக்கம் பெற்றிருந்த இஸ்லாமிய நாகரீகத்தை ஆய்வு செய்யும் பட்சத்தில், அது காலனி ஆதிக்க கொள்கையை ஒருபோதும் கொண்டதாக இருக்கவில்லை. உண்மையில் இஸ்லாத்தின் கொள்கைக்கு காலனி ஆதிக்கம் அந்நியமானது. ஏனெனில் முஸ்லிம்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் எந்தவித வேறுபாடும் அது காட்டுவதில்லை. எனவே, அதன் நெடிய ஆட்சிகாலம் முழுவதும் தங்களை அதனிடம் ஒப்படைத்துக் கொண்ட மக்கள் அனைவருக்கும் நீதத்தை பெற்றுத் தந்திருக்கிறது. இது ஏனெனில், ஆன்மீக அடிப்படை மீது கட்டமைக்கப்பட்டுள்ள நாகரீகமாக அது இருக்கிறது என்பதுதான். பொருளியல், ஆன்மீகம், ஒழுக்க மாண்புகள் மற்றும் மனித நேயம் ஆகிய அனைத்து மதிப்பீடுகளையும் அது நிறைவு செய்கிறது. வாழ்வியலில் அகீதாவிற்கு உச்சகட்டமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகளினால் வாழ்க்கை கட்டுப்படுத்தப்படுகின்றது. மகிழ்ச்சி என்பது முற்றிலும் அல்லாஹ்(சுபு)வின் உவப்பை அடைந்து கொள்வதுதான் என இஸ்லாம் கருதுகிறது. கடந்த காலங்கள் போல மறுமுறையும் இஸ்லாமிய நாகரீகம் ஆதிக்கம் செலுத்தும் பட்சத்தில் இன்று உலகம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்கும் என்பதற்கு உத்திரவாதம் உண்டு. மேலும் மனித வர்க்கம் முழுமைக்கும் அது நன்மையை பெற்றுத் தரும் என்பதில் ஐயமில்லை.

ஜனநாயகம் இஸ்லாத்திற்கு அன்னியமானதா ?

இன்றைய இஸ்லாமிய வாதிகளிடையே மிக பரபரப்பாக உச்சரிக்கப்படும் பெயராக ஜனநாயகம் உள்ளது மாத்திரமல்லாமல் ஆராதிக்கப்படும் நிலைக்கும் மாறி விட்டது என்றால் அது மிகையானதல்ல. ஒவ்வொரு இயக்கத்தை சார்ந்தவர்களும் தங்கள் சிந்தனைக்கு ஏற்றவாறு ஜனநாயகத்துக்கு விளக்கம் கொடுத்தாலும் அனைவரும் ஜனநாயகம் என்பது நிராகரிப்பாளர்களால் உருவாக்கப்பட்டது என்றும் இஸ்லாத்துக்கு முரணானது என்பதிலும் கருத்தொற்றுமை கொள்கின்றனர். வேறு சிலரோ ஜனநாயகத்தில் இஸ்லாத்தின் ஷூரா அமைப்பை போன்ற ஆலோசனைகள், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் போன்ற சில அம்சங்கள் இருப்பதால் ஜனநாயகம் இஸ்லாத்துக்கு முரணானதல்ல என்று கருதுகின்றனர்.இக்கட்டுரையில் நாம் பார்க்க இருப்பது ஜனநாயகம் என்பது இஸ்லாத்துக்கு முரணான ஒன்று தான், ஆனால் இஸ்லாத்துக்கு முரணான கொள்கை அல்லது மதம் என்று கருத கூடிய அளவு அபாயகரமானது அல்ல, எனவே கால சூழலுக்கேற்ப ஜனநாயகத்தின் அடிப்படையில் வாழ்வது, அதற்காக பாடுபடுவது தவறல்ல என்று வாதிடுவோரின் வாதங்கள் சரி தானா ? ஜனநாயகம் என்பது அந்நிய மதமா என்பது குறித்து குரான் மற்றும் சுன்னாவின் ஒளியில் பார்க்க இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ்.குரானினோ, ஹதீஸ் கிரந்தங்களிலோ, ஸலபுஸ் ஸாலிஹீன்களின் புத்தகங்களிலோ நாம் ஜனநாயகம் என்ற வார்த்தையை பார்க்க முடியாது. ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலோ அல்லது அதற்கு முன்னரோ ஜனநாயகம் என்ற சொல்லாடலோ அல்லது சித்தாந்தமோ இல்லை.ஜனநாயகத்தின் தன்மையை இஸ்லாமிய கண்ணோட்டத்தில் விளங்கி கொள்ள முஸ்லீமின் அடிப்படை கடமையான ஈமானை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். ஒருவர் ஈமான் எனும் உறுதி மொழியை முழுமையாய் தன் வாழ்வில் கடைபிடிக்கும் போதே அவர் முஸ்லீமாய் கணிக்கப்படுவார். ஈமான் எனும் அம்சமே முஸ்லீமை நிராகரிப்பாளரிடமிருந்து வேறுபடுத்தி காட்ட கூடிய ஒன்றாய் விளங்குகிறது. ஈமான் இல்லாமல் ஒருவர் எத்துணை நல்ல செயல்கள் செய்தாலும் அவற்றிக்கு மறுமையில் எப்பயனும் இல்லை என்பது நாம் அனைவரும் தெரிந்ததே. ஒரு முஸ்லீமின் ஈமான் குறித்து விளங்கி கொள்ள கீழ்காணும் குரான் வசனங்களை பார்க்கலாம்.இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (திருக்குரான் 51:56)மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; தாகூத்துகளை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம். (திருக்குரான் 16:36)(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் (திருக்குரான் 2 : 256)எவர்கள் தாகூத்களை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வின் பால் முன்னோக்கியிருக்கிறார்களோ, அவர்களுக்குத் தான் நன்மாராயம்; ஆகவே (என்னுடைய) நல்லடியார்களுக்கு நன்மாராயங் கூறுவீராக! (திருக்குரான் 39 : 17)மேற்காணும் திருமறையின் வசனங்களை ஆழ்ந்து சிந்தித்தால் ஒரு முஸ்லீம் ஈமான் கொண்ட பின்னர், அல்லாஹ்வை தவிர மற்றவைக்கு தலை வணங்கவோ, கட்டுபடவோ, அவற்றின் கட்டளைகளுக்கு கீழ்படியவோ கூடாது என்பதை வலியுறுத்துவதை காணலாம். எனவே ஒருவரின் ஈமான் முழுமை அடைய வேண்டுமானால் இஸ்லாம் தவிர அனைத்து கொள்கைகளின் தாக்கங்களிலிருந்தும் விடுபட வேண்டும்.யார் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ, அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹராமாக்குகிறாரோ, அல்லாஹ் ஹராமாக்கியதை ஹலாலாக்குகிறாரோ அவரை தாகூத் என அல்லாஹ் வர்ணிக்கிறான். யாரெல்லாம் தங்களை முஷ் அரியாக (சட்டமியற்றுபவர்) கருதுகிறார்களோ, அவர்களும் தாகூத்தின் எல்லைக்குள் வருவார்கள். சட்டமியற்றும் அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே இருக்க, அதற்கு மாற்றமான சட்டங்களை வகுப்பவர் ஆட்சியாளராக இருந்தாலும், இயக்க தலைவராக இருந்தாலும், எம்.எல்.ஏ, எம்,பி என மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும் சரி, சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி அவர்களும் இஸ்லாத்தின் பார்வையில் தாகூத்தாக கருதப்படுவார். ஏனெனில் அவர்களை அல்லாஹ் தன் அடிமைகளாக படைத்து தன்னுடைய சட்டத்துக்கு கீழ்படிய சொல்லி இருக்கும் போது, அதற்கு மாற்றமாக இறைவனின் வரம்புகளை மீறி அல்லாஹ்வை போல் தன்னையும் சட்டம் இயற்றும் தன்மை கொண்டவனாக நினைக்கிறான்.இறைவன் இயற்றும் சட்டத்தை அமுல்படுத்தும் பொறுப்பு மட்டுமே கொண்டுள்ள அடிமையான மனிதன் “இலாஹ் முஷ் அரி” எனும் இறைவனின் தன்மைக்கு சவால் விடுகிறான். இம்மாதிரி இறைவனின் அதிகாரத்துக்கு நேரடியாக சவால் விடும் இத்தகையவர்கள் நிச்சயமாக தாகூத் என்பது மாத்திரமல்லாமல் தாகூத்தின் முண்ணணி தளபதிகளாகவே கருத வேண்டியதிருக்கிறது. தாகூத்திடம் தீர்வு தேட வேண்டாம் என்று மார்க்கம் தடுத்திருக்கும் போது தாகூத்தின் தளபதிகளாகவே மாறி போனவர்களின் ஈமான் குறித்து என்ன சொல்வது? இவர்களை குறித்து தான் அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்” (நபியே!) உம்மீது இறக்கப்பட்ட இ(வ் வேதத்)தையும், உமக்கு முன்னால் இறக்கப்பட்ட (வேதங்கள் அனைத்)தையும் நம்புவதாக வாதித்துக் கொண்டிருப்போரை நீர் பார்க்கவில்லையா? - (எந்த ஷைத்தானை) நிராகரிக்க வேண்டும் என்று அவர்களுக்கு கட்டளையிடப்பட்டிருக்கிறதோ அந்த ஷைத்தானைத் தீர்ப்புக் கூறுபவனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென விரும்புகிறார்கள் - அந்த ஷைத்தானோ அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் தள்ளிவிட விரும்புகிறான். (திருக்குரான் 4 : 60)இமாம் முஜாஹித் ரஹிமஹுல்லாஹீ இது குறித்து கூறும் போது “ தாகூத் என்பது மனித வடிவில் உள்ள ஷைத்தானாகும்.அவனுடைய சட்டத்தை ஏற்று கொண்டு மனிதர்கள் தங்கள் பிரச்னையை முறையிடுகின்றனர். அதன் மூலம் ஷைத்தான் அவர்களை தன் கட்டுக்குள் கொண்டு வருகிறான் என்கிறார்.ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹ்) இது குறித்து கூறும் போது அல்லாஹ்வின் புத்தகம் அல்லாமல் வேறு ஒன்றின் அடிப்படையில் யார் ஆள்கிறாரோ, அவர் தாகூத் ஆவார் என்கிறார்கள்.இமாம் இப்னுல் கையூம் (ரஹ்) அவர்களோ “ அல்லாஹ் தன் அடிமைகளுக்கு ஏற்படுத்தியுள்ள வரம்புகளை மீறுபவர்கள் எல்லோரும் தாகூத்களே. அது வணக்கமாக அல்லது பின்பற்றுதலாக அல்லது கீழ்படிதலாக எதுவாக இருப்பினும் வரம்புகளை மீறுபவர்கள் அனைவரும் தாகூத்களே. ஒவ்வொரு சமூகத்தின் தாகூத்கள் யாரெனில் அல்லாஹ் மற்றும் அவனது தூதர் வகுத்த சட்டத்திற்கு மாற்றமானதை பின்பற்றுபவர்களும், அல்லாஹ், அல்லாஹ்வின் தூதரின் சட்டத்திற்கு முரணானவற்றின் அடிப்படையில் தீர்ப்பு கூறுபவர்களுக்கு அடிபணிபவர்களுமே ஆவார்கள்” என்கிறார்.மேலும் “ இறைவனின் வேதம், நபிகளாரின் வழிமுறை அல்லாமல் அதற்கு முரண்படும் வேறொன்றிடத்தில் தன் பிரச்னைக்கான தீர்வை தேடினால் அது நிச்சயம் தாகூத்திடம் தீர்வு தேடியதை போன்றதேயாகும் என்றும் இப்னுல் கையூம் (ரஹ்) கூறுகிறார். ஜனநாயகம் இஸ்லாமிய பார்வையில் ஹராம் என்பதை இந்திய அரசியல் ஹராமா ?, ஜனநாயகம் நவீன கால இணைவைப்பு உள்ளிட்ட பல கட்டுரைகள் இதர கொள்கைகள் மற்றும் தீனை நிலைநாட்டல் லேபிள்களின் கீழ் தரப்பட்டுள்ளது. எனவே அனைத்து சகோதரர்களுக்கும் இப்ராஹீம் (அலை) அவர்களின் கூற்றாக குரானில் வரும் வசனத்தை நினைவுபடுத்தி இக்கட்டுரையை முடிக்கிறேன்.”இப்றாஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது; தம் சமூகத்தாரிடம் அவர்கள், “உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம்; அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன” என்றார்கள்.” (திருக்குரான் 60 : 4)

Wednesday, April 6, 2011

உங்கள் பொன்னான வாக்குகள்!

இதோ வரப்போகிறது அதோ வரப்போகிறது என்று ஆவலுடன் (?) எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் வந்துவிட்டது! செந்தமிழ் நாட்டுக்கே புதுக்களை வந்துவிட்டது! அலங்கார விளக்குகள்! ஆளுயர சுவரொட்டிகள்! செவிப்பரையைக் கிழிக்கும் ஒலிபெருக்கிகள்! மின்னல் வேக சுற்றுப் பயணங்கள்! மனதை மயக்கும் வாக்குறுதிகள்! இத்தனையும் தாங்கிக் கொள்ள தமிழகம் தயாராகிவிட்டது!எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டங்கள்! வெள்ளையும் கறுப்புமாக ஏது இவ்வளவு பணம்? தேர்தல் முடிந்த பிறகு என்ன தான் நடந்து விடப்போகிறது என்பதைப்பற்றியெல்லாம் அக்கரை காட்டாத தமிழ்ப் பெருங்குடி மக்கள்!யாரைத் தேர்ந்தெடுத்தாலும் லஞ்ச லாவண்யங்கள் ஒழிந்து விடப்போகிறதா? வறுமைக்கோட்டை தாண்டிவிடப்போகிறதா தமிழ்ச் சமுதாயம்? ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஏற்ப்பட்டுவிடப்போகிறதா? குற்றங்கள் குறையப் போகின்றனவா? ஏறிவரும் விலைவாசி இறங்கிவிடத்தான் போகின்றதா? இதில் எதுவுமே ஏற்பட போவதும் இல்லை! அவர்கள் வாங்கிய லஞ்சத்தை, வாரிச்சுருட்டிய வரிப்பணத்தை இவர்கள் வாங்கப் போகிறார்கள். ஏற்படப் போவது ஆட்சி மாற்றம் அல்ல. ஆள் மாற்றம் மட்டுமே. பதவி பித்துப்பிடித்து அலையக் கூடிய எவரைத் தேர்ந்தெடுத்தாலும் தீமைக்குத் துணை நிற்பதைத் தவிர வேறு எதுவுமில்லை. இறைவனைப் பூரணமாக நம்பி அவனை அஞ்சக் கூடிய உண்மை முஸ்லிம் என்னதான் செய்வது? இதோ அல்லாஹ் சொல்கிறான்.”யார் தீமையை பரிந்துறை செய்கிறானோ, அந்த தீமையில் அவனுக்கும் ஒரு பங்கு உண்டு. யார் நன்மைக்கு பரிந்துறை செய்கிறானோ அதில் அவனுக்கும் பங்கு உண்டு. அல்லாஹ் எல்லாவற்றையும் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறான்.” (அல் குர்ஆன் 4:85)நல்ல காரியத்திலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்! தீமையிலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் துணை நிற்கவேண்டாம். (அல் குர்ஆன் 5:2)வட்டியும், மதுவும், சூதும், லஞ்சமும், ஊழலும், ஒழுக்ககேடுகளும், குற்றங்களும் எவராலும் ஒழியப்போவது இல்லை. இறைவன் தீய காரியங்கள் என்று அறிவித்துள்ள இந்தக் குற்றங்களைச் செய்யத்தகுதியானவர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பதால் என்ன வந்துவிடப்போகிறது? அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிய நிலையைத் தவிர வேறு எதுவும் ஏற்படப்போவதில்லை.நன்றி: பி.ஜே., அல் ஜன்னத், நுழைவாயில், ஜனவரி 1989

Monday, April 4, 2011

இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ளும் வழிமுறை - (Daw'ah)

இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ளும் வழிமுறை - (Daw'ah)இஸ்லாமிய அழைப்புப்பணி பற்றி சிந்திக்கும்போது சில முக்கிய விடயங்களை தெளிவாக முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவேண்டும். அவற்றில் முக்கியமானதொரு விடயம்தான் இஸ்லாத்தை பின்பற்றுவதால் முஸ்லிம்கள் உலகில் பின்னடைவு எய்திடவில்லை. மாறாக, இஸ்லாத்தை பின்பற்றுவதை கைவிட்ட நாளிலிருந்துதான் அவர்களின் பிற்போக்கு நிலை துவங்கியது என்பதுபற்றிய விடயமாகும். அந்நியக் கலாச்சாரம் தங்கள் மண்ணில் நுழைவதற்கும், மேற்கத்திய சிந்தனை தங்கள் நெஞ்சங்களை ஆட்கொள்வதற்கும் முஸ்லிம்கள் அனுமதித்தார்கள். இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமையை கைவிட்டதாலும், அதனுடைய அழைப்புப் பணியை (Daw'ah) புறக்கணித்ததாலும், அதன் சட்டங்களை தவறாக செயல்படுத்தியதாலும் அவர்கள் வீழ்ச்சியுற்றார்கள். ஆகவே, இன்று முஸ்லிம்கள் வந்து அடைந்திருக்கும் அதளபாதாளத்திலிருந்து அவர்கள் மறுமலர்ச்சி அடைய வேண்டும் வேண்டுமெனில் முஸ்லிம்கள் முற்று முழுதாக இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு கட்டாயம் திரும்பிட வேண்டும். எனினும் இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்வதன் மூலமும், இஸ்லாமிய அறிவார்ந்த தலைமையை உலகெங்கிலும் எடுத்துச் செல்வதன் மூலமும், ஒரு இஸ்லாமிய அரசை நிறுவினாலன்றி முழுமையான இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு முஸ்லிம்களால் திரும்பிவிட இயலாது. பின்னர் அந்த அரசு இஸ்லாமிய அறிவார்ந்த தலைமையை அழைப்புப்பணி மூலம் உலகெங்கிலும் எடுத்துச் செல்லும்.ஏனெனில், இஸ்லாம் மட்டுமே உலகை சீர்திருத்தும் ஆற்றல் பெற்றது. மேலும் இஸ்லாத்தின் மூலமாக அல்லாமல் உண்மையான மறுமலர்ச்சியை கொண்டு வர இயலாது. அது முஸ்லிம்களுக்கு என்றாலும் அல்லது மற்றவர்களுக்கு என்றாலும் சரியே.அறிவார்ந்த தலைமையாக உலகெங்கும் அழைப்புப்பணி எடுத்துச் செல்லப்பட வேண்டும். அதிலிருந்து செயலாக்க அமைப்பு (முறைமை) (System - நிதாம்) பிறக்கிறது. மேலும் அனைத்து சிந்தனைகளும் இந்த அறிவார்ந்த தலைமை மீதுதான் கட்டமைக்கப்படுகின்றன. மேலும் இத்தகைய சிந்தனையிலிருந்துதான் விதிவிலக்கு ஏதுமின்றி ஒருவரை ஆதிக்கம் செலுத்தும் வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டத்தின் அனைத்துக் கருத்துக்களும்(Concepts) பிறக்கின்றன.கடந்த காலங்களில் அழைப்புப்பணி மேற்கொள்ளப்பட்ட அதே முறையில், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன் உதாரணத்தோடு அவர்களின்(ஸல்) வழிமுறையிலிருந்து சற்றும் விலகிச் செல்லாமல் இன்றைய நாட்களிலும் அழைப்புப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும். கால மாற்றத்தின் வேறுபாட்டிற்கு எந்தவிதமான முக்கியத்துவமும் கொடுக்கக்கூடாது. ஏனெனில் இவை சாதனங்களிலும், தோற்றங்களிலும் ஏற்பட்ட மாற்றங்களே ஒழிய அடிப்படையில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படவில்லை. யுகங்கள் மாறிய போதிலும், மக்களும் இடங்களும் மாறியப் போதிலும் வாழ்க்கையின் சாரமும் (Essence of life) உண்மை நிலையும் மாறிவிடவில்லை. அவை மாறவும் இயலாது.ஆகவே அழைப்புப்பணி மேற்கொள்வதற்கு வெளிப்படையான அணுகுமுறையும், மன உறுதியும் ஆற்றலும் சிந்தனையும் தேவைப்படுகின்றன. மேலும், இஸ்லாத்தின் சிந்தனைக்கும் அதன் வழிமுறைக்கும் (Fikrah & Tareeqah - Thought and Method) முரண்பாடாக உள்ள அனைத்தையும் தீவிரமாக எதிர்க்கக்கூடிய மனோதிடமும் வேட்கையும் அழைப்பின்போது தேவைப்படுகின்றன. அழைப்புப்பணியைச்சூழவுள்ள சூழலும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளும் அழைப்பாளர்களுக்கு பாதகமாகவோ, அல்லது சாதகமாகவோ இருந்த போதிலும் சமூகத்தில் ஊடுருவியிருக்கின்ற தவறான அடிப்படைகளை வெட்ட வெளிச்சமாக்குவதும் அவற்றை எதிர்ப்பதும் அழைப்பாளர்களுக்கும் அதன் இயக்கத்திற்கும் மிக முக்கிய கடமையாகிறது.இங்கே மக்களோடு ஒத்துப் போவதாக இருந்தாலும், அல்லது ஒத்துப்போகவில்லையென்றாலும், அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் அல்லது ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்தாலும் மக்களின் மரபுகளுக்கு இணக்கமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் இறுதியான இறையாண்மை (Sovereignty - Siyadah) இஸ்லாமிய சித்தாந்தத்திற்கே மட்டுமே உரியது என்பதை நிலைநாட்டும் விதமாக அழைப்புப்பணி மேற்கொள்வது அவசியமாகிறது.அழைப்புப்பணி செய்பவர்கள் மக்களுக்கு முகஸ்துதி செய்ய மாட்டார்கள். அதிகாரமுடையவர்களுக்கு அடிபணிய மாட்டார்கள். மக்களின் மரபுகளையும், பாரம்பரியத்தையும் லட்சியம் செய்ய மாட்டார்கள். மக்கள் தங்களை ஏற்றுக் கொள்கிறார்களா அல்லது ஏற்றுக்கொள்ளவில்லையா என்பதில் கவனம் செலுத்த மாட்டார்கள். மாறாக, அவர்கள் சித்தாந்தத்தை மட்டும் பின்பற்றுகிறவர்களாகவும், அதைத் தவிர வேறு ஒன்றையும் பொருட்டாக எண்ணாதவர்களாகவும், அதனை மட்டுமே முழுமையாக எடுத்துரைப்பவர்களாகவும் இருப்பார்கள். மேலும் ஏனைய சித்தாந்தங்களை பின்பற்றுகிறவர்களிடம் அதனை அவர்கள் பின்பற்றிவருமாறு கூறுவதற்கு எங்கும் அனுமதியில்லை. இதற்கு மாறாக, நிர்பந்தம் ஏதுமில்லாமல் இந்த சித்தாந்தத்தை (இஸ்லாம்) தழுவுவதற்கு அவர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். ஏனெனில் அழைப்புப் பணிக்கு தேவைப்படுவது என்னவென்றால், இஸ்லாத்திற்கு இணையாக எந்த சித்தாந்தமும் இருக்க முடியாது என்றும், இஸ்லாத்திற்கு மட்டும்தான் இறையாண்மை (Sovereignty - Siyadah) உரியது என்றும் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதும் அதனை எடுத்தியம்புவதும்தான்.அவன்தான் தனது தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் ஏனைய தீன்களை(வாழ்வொழுங்குகளை) மிகைக்கும் பொருட்டு அனுப்பி வைத்தான். இதனை இணை வைப்பவர்கள் வெறுத்த போதிலும் சரியே. (அத்தவ்பா : 33)இறைதூதர்(ஸல்) அவர்கள் தங்களின் மகத்தான செய்தியுடன் இந்த உலகத்திற்கு வந்தார்கள். முழு உலகத்திற்கும் வெளிப்படையாக அறைகூவல் விடுத்தார்கள். அவர்கள்(ஸல்) தனது சத்தியத்தை உறுதியுடன் விசுவாசித்தார்கள். மக்களை சத்தியத்தின் பால் அழைத்தார்கள். மேலும், கருப்பர்களையும், வெள்ளையர்களையும், ஆட்சியாளர்களையும், சாமானியர்களையும் அவர்களின் பாரம்பரியம், மரபு, மதம், கோட்பாடு ஆகியவற்றின் வேறுபாடு எதையும் பாராமல் அனைவரையும் இஸ்லாத்தின் பால் அழைத்தார்கள். இஸ்லாத்தின் மகத்தான செய்தியை விடுத்து வேறு எது ஒன்றின்பாலும் அவர்கள் (ஸல்) கவனம் செலுத்தவில்லை. குறைஷியர்களின் பொய்யான தெய்வங்களை கடுமையாக சாடுவதின் மூலம் தங்கள் அழைப்புப்பணியை ஆரம்பித்தார்கள். அவர்கள்(ஸல்) தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தன்னந்தனியாக நின்ற போதிலும் குறைஷியர்களின் அடிப்படை கோட்பாட்டினை கடுமையாக எதிர்த்து அதை சாடினார்கள். அவர்களுக்கு (ஸல்) உதவி செய்பவர்கள் யாரும் இல்லை. அவர்கள்(ஸல்) அழைப்பு விடுக்கும் இஸ்லாத்தின் மீது கொண்டிருந்த அசைக்க முடியாத தீவிரமான நம்பிக்கை ஒன்றைத் தவிர எந்தவிதமான ஆயுதமோ உதவியோ அவர்களிடத்தில்(ஸல்) இல்லை. அரபு மக்களின் பாரம்பரியம், மரபு, மதம் கோட்பாடு ஆகியவற்றை அவர்கள்(ஸல்) துளியளவு கூட லட்சியம் செய்யவில்லை. இந்த வகையில் அவர்கள்(ஸல்) எந்த விதமான மரியாதையையோ அல்லது பணிவையோ அவர்களிடம் காண்பிக்கவில்லை. இதுபோலவே, அழைப்புப்பணி செய்பவர்கள் அனைத்தையும் எதிர்த்து ஆக வேண்டும். அவர்கள் எதிர்ப்பவற்றில் மக்களின் பாரம்பரியம், மரபு, தவறான சிந்தனை மற்றும் தவறான கருத்துக்கள் ஆகியவைகள் அடங்கும். வெகுஜனக் கருத்து (Public Opinion) தவறாக இருக்கும்பட்சத்தில் அதற்கு எதிராக கடும் போராட்டம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டாலும் அதை செய்ய வேண்டும். அவற்றை பின்பற்றுகிறவர்களுடைய வெறித்தனங்களுக்கு ஆளாக நேரிடினும், உருக்குலைந்த கொள்கைகளில் ஒட்டிக் கொண்டிருப்பவர்களின் கடும் பகையை எதிர்கொள்ள நேரிடினும், அவர்களின் மதத்தையும், அடிப்படை கோட்பாட்டினையும் எதிர்த்தெ ஆக வேண்டும்.இலேசான சலுகை கூட காட்டாமல், இஸ்லாமிய நெறிமுறைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கரிசனம் அழைப்புப்பணி மேற்கொள்கிறவர்களுக்கு அவசியமாக இருக்க வேண்டும். எந்தவிதமான சமரசத்தையோ, சலுகையையோ ஏற்றுக் கொள்ளக்கூடாது. கவனக்குறைவையும், காரியங்களை ஒத்திப்போடும் பழக்கத்தையும் அறவே விட்டொழிக்க வேண்டும். இதற்கு மாறாக பிரச்சினைகளை, முழுமையாக நிர்வாகம் செய்து, உறுதியான முறையில் அவறிற்கான உடனடித் தீர்வு காண வேண்டும். சத்தியத்திற்கு இடையூறான எந்த பரிந்துரையையும் ஏற்றுக் கொள்ளக்கூடாது. தாக்கீஃப் கோந்திரத்தார், இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு நிபந்தனையாக, தமது வழிபபாட்டுச்சிலையான அல் லாத்தை (Al laat) உடைத்தெறியாது, மூன்று வருடங்கள் தம்முடன் வைத்துக் கொள்வதற்கும், தொழுகையிலிருந்து விலகி இருப்பதற்கும் அனுமதிகோரி அனுப்பி வைத்த தூதுக்குழுவினரின் வேண்டுகோளை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இரண்டு வருடங்களுக்கு அல்லாத்தை விட்டு வைக்க வேண்டும். அல்லது ஒரு மாதத்திற்கேனும் அதை விட்டு வைக்க வேண்டும் என அவர்கள் கேட்டதைக்கூட இறைதூதர்(ஸல்) மறுத்துவிட்டார்கள். இந்த வேண்டுகோளை அவர்கள் உறுதியாகவும், இறுதியாகவும் எந்தவித தயக்கமோ அல்லது இரக்கமோ காட்டாமல் மறுத்து விட்டார்கள். இது ஏனெனில் ஒன்று மனிதன் விசுவாசம் கொள்ள வேண்டும் அல்லது நிராகரித்து விட வேண்டும். அதன் விளைவாக ஒன்று சுவனம் செல்ல வேண்டும் அல்லது நரகம் செல்ல வேண்டும் என்பதுதான். எனினும் தங்கள் கைகளால் அந்த உருவச்சிலை உடைபட வேண்டாம் என்ற அவர்களின் கோரிக்கையை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதன்படி அபூ சுஃப்யானையும், அல்மூஹீரா இப்னு ஷீஆபாவையும் அதனை உடைக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். முழு அகீதாவிற்கும், அதனை நடைமுறைப்படுத்த தேவையானவற்றிற்கும் குறுக்கே நிற்கும் எந்த ஒன்றையும் நிச்சயமாக அவர்கள்(ஸல்) ஏற்றுக் கொள்ளவில்லை. நடைமுறைப்படுத்துவதில் இடம்பெறும் சாதனத்தையும் (Means) தோற்றத்தையும், அமைப்புகளையும் (Forms) பொறுத்தவரை அவைகளுக்கு இஸ்லாமிய அகீதாவோடு எந்தவித தொடர்பும் இல்லை என்ற காரணத்தினால் அவற்றை அவர்கள் (ஸல்) ஏற்றுக் கொண்டார்கள். ஆகவே இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ளும் தருணத்தில் இஸ்லாமிய சிந்தனையிலும் அதன் வழிமுறையிலும் (குமைசயா ரூ வுயசநநஙயா) எந்தவிதமான சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் சிந்தனை மற்றும் அதன் செயலாக்க அமைப்பு (Fikrah & Tareeqah) ஆகியவற்றை முழுமையாக பாதுகாக்கும் விதத்தில் செயல்பட வேண்டும். அதற்கு தேவைப்படும் எந்த சாதனத்தையும் (Means) பயன்படுத்துவதில் கேடு ஒன்றும் கிடையாது.இஸ்லாமிய அழைப்புப்பணி மேற்கொள்ளப்படும்போது, ஒரு குறிப்பிட்ட இலக்கோடு ஒவ்வொரு செயலும் மேற்கொள்ளப்பட வேண்டும். பணியாளர்கள் எப்பொழுதும் இந்த நோக்கத்தைக் குறித்து விழிப்புணர்வோடு இருந்து அதை நிறைவேற்ற வேண்டும். இதில் அவர் தன்னைத்தானே ஈடுபடுத்திக் கொண்டு, அதை நிறைவேற்றுவதற்கு அயராது பாடுபட வேண்டும். ஆகவே, பணியாளர் செயலாக்கம் இல்லாத சிந்தனையில் நிறைவு கொள்ள மாட்டார். அவ்வாறெனில் அதை உறக்க நிலை தத்துவம் (Hyprotic Philosophy) என்றோ அல்லது அலங்கார தத்துவம் (Fanciful Philosophy) என்றோதான் கருதுவார். அதுபோலவே குறிக்கோள் இல்லாத சிந்தனையிலும் செயலிலும் அவர் நிறைவு அடைய மாட்டார். இறுதியில் அக்கறை இன்மையிலும், அவநம்பிக்கையிலும் முடிவுறும் சுழற்சி இயக்கமாகவே (Spiral Motion) அதை கருதுவார். இதற்கு மாறாக, அழைப்புப் பணியாளர் சிந்தனையுடன் செயலை இணைப்பதை வலியுறுத்த வேண்டும். இவ்விரண்டையும் ஒரு குறிப்பிட்ட லட்சியத்திற்காக இணைத்து செயல்படுத்த வேண்டும். அது நடைமுறைக்கு ஏற்றாற்போலவும் குறிக்கோளை நிறைவேற்றக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.மக்கமா நகரத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமையை மக்களிடம் எடுத்துச் சென்றார்கள். அங்குள்ள சமூகம் இஸ்லாத்தை செயலாக்க அமைப்பாக (System) ஏற்றுக் கொள்ளாது என்பதை உணர்ந்தபொழுது மதினாவின் சமூகத்தை தயார்படுத்தினார்கள். மதினாவில் அவர்கள்(ஸல்) இஸ்லாமிய அரசை நிறுவினார்கள். அதன் மூலம் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தினார்கள். இஸ்லாத்தின் செய்தியை மக்களிடம் எடுத்துச் சென்றார்கள். அவர்களுக்கு பின்னர் அதை எடுத்துச் செல்லும் விதமாக இஸ்லாமிய உம்மாவை தயார்படுத்தினார்கள். இறைத்தூதர்(ஸல்) காட்டித்தந்த அதே வழியில் இந்த பணியினை முஸ்லிம்கள் தொடர்ந்தார்கள். ஆகவே கிலாஃபா அரசு இல்லாத இந்த சூழலில், இஸ்லாமிய அழைப்புப் பணியினை மேற்கொள்ளும்போது இஸ்லாத்தை நோக்கி மக்களை அழைப்பது, இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தி, அதன் செய்தியை உலகெங்கிலும் எடுத்துச் செல்லும் இஸ்லாமிய அரசை நிறுவுவதற்கு செயலாற்றுவதன் மூலம் மக்களை இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு திரும்பச் செய்வது ஆகிய பணிகள் அதில் அடங்கியிருக்க வேண்டும். இதன்மூலம், இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு திரும்புவதற்காக உம்மாவில் மேற்கொள்ளப்படும் அழைப்புப்பணி உலகம் முழுவதையும் இஸ்லாத்தின்பால் அழைக்கும் இஸ்லாமிய அரசின் அழைப்புப்பணியாக மாற்றம் பெறும். மேலும் இஸ்லாமிய உலகில் மட்டும் மேற்கொள்ளப்படும் அழைப்புப்பணி (Local Da’wah) அகிலம் அனைத்திற்கும் உரிய பொதுவான அழைப்புப்பணியாக மாற்றம் பெறும்.தற்சமயம் நிலைபெற்றுள்ள அடிப்படை கோட்பாடுகளை (Doctrines- Aqeedah) சரிபடுத்துவது, அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள தொடர்பை பலப்படுத்துவது ஆகியவற்றை தெளிவாக உள்ளடக்கியதாக இஸ்லாமிய அழைப்புப்பணி இருக்க வேண்டும். மேலும் எல்லா துறைகளிலும் அழைப்புப்பணி பிரகாசமாக மேற்கொள்ளப்பட்டு மக்களின் அனைத்து விவகாரங்களுக்கும் தீர்வுகள் வழங்கப்படும் விதமாக இருக்க வேண்டும். எனவேதான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் மக்கள் எதிர்நோக்கிய அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும், அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கின்ற ஒவ்வொரு வினாவுக்கும் முழுமையாக விடையளிக்கும்படியாக திருமறை வசனங்களை இறக்கிக்கொண்டேயிருந்தான். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கீழ்கண்ட இறைவசனங்களை மக்காவில் ஓதுபவர்களாக இருந்தார்கள்.அபூலஹபின் இருகரங்களும் நாசமடைவதாக. (அல் மஸ்த்:1)நிச்சயமாக இது கண்ணியமிக்க ஒரு தூதரின் வார்த்தையாகும். இது கவிஞனின் வார்த்தையல்ல. நீங்கள் சொற்பமாகவே விசுவாசம் கொள்கிறீர்கள். (அல் ஹாக்க:40,41)(அளவிலும், நிறுவையிலும்) மோசடி செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து வாங்கும் போது முழு அளவை வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் மனிதர்களுக்கு கொடுக்கும் போது அளவையிலும், நிறுவையிலும் (குறைபதன்மூலம்) நஷ்டம் ஏற்படுத்துகிறார்கள். (அல் முதாஃப்பிஃபின்:1,3)விசுவாசம் கொண்டு நற்கருமம் செய்பவர்களுக்கும் சுவனம் உண்டு. அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அதுதான் மகத்தான் வெற்றியாகும். (அல் புருஜ்:11)மேலும் மதினாவில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்வரும் வசனங்களை ஓதிக்காட்டினார்கள்.தொழுகையை நிலை நிறுத்துங்கள். ஸகாத்தை கொடுத்து வாருங்கள். (அல்பகரா:43)கனத்தவர்களாகவோ, இலேசானவர்களாகவோ புறப்படுங்கள். உங்கள் செல்வங்களைக் கொண்டும் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் போராடுங்கள். (அத்தவ்பா:41)மேலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்வரும் வசனங்களை ஓதினார்கள்.விசுவாசம் கொண்டவர்களே! உங்களுக்கிடையில் குறிப்பிட்ட தவணைக்கு கடன் கொடுக்கும் சமயத்தில் அதை எழுத்து மூலம் பதிவு செய்து கொள்ளுங்கள். (அல் பகரா:282)உங்கள் மத்தியிலுள்ள செல்வந்தர்களுக்கு இடையில் மட்டும் செல்வம் சுற்றிக் கொண்டிருக்காதிருக்கும் பொருட்டு...(அல்ஹஷர்:7)நரகத்தின் தோழமையைக் கொண்டவர்களும் சுவனத்தின் தோழமையை கொண்டவர்களும் சமமானவர்கள் அல்ல. சுவனத்தின் தோழமையை பெற்றுக் கொண்டவர்களெ வெற்றியாளர்கள். (அல் ஹஷ்ர்:20)இவ்வாறு மனிதனை மனிதன் என்ற அந்தஸ்த்தில் வைத்து, அவனைப் பற்றி முழுமையாக இஸ்லாம் உரையாடுகிறது. அதன் மூலம் அவனிடம் முழுமையான மற்றும் தீவிரமான மாற்றத்தை அது கொண்டு வருகிறது. இதனடிப்படையில் இஸ்லாமிய அழைப்புப்பணியின் வெற்றி என்பது, மக்கள் தங்கள் அன்றாட வாழ்வியல் விவகாரங்களை தீர்த்துக் கொள்ளும் பொருட்டு இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பை (System of Islam - Nidam al Islam) அவர்களிடம் எடுத்துச் செல்வதிலேயே தங்கியிருக்கிறது. எனவே இந்த அழைப்புப்பணியை வாழ்வின் இலக்காகக்கொண்டு அழைப்புப்பணியாளர்கள் தமது பயணத்தை மிக மிக முனைப்புடன் தொடரவேண்டும்.குறையற்ற வகையிலும், நிறைவாகவும், முழுமையாகவும் பணியாற்ற வேண்டும் என்ற உந்துதலை தங்களிடத்தில் ஏற்படுத்திக் கொள்ளாத வரையில் அழைப்புப் பணியாளர்கள் தீவிரமான முறையில் பணியாற்றி தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவது என்பது சாத்தியம் இல்லாத விஷயமாகும். நிரந்தரமாக சத்தியத்தை தேடுபவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். எந்த அந்நிய சிந்தனையிலிருந்தும் தங்களை பரிசுத்தப்படுத்திக் கொள்ளும் விதமாக தொடர்ந்து சத்தியத்தை தேடுபவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். அவர்களிடத்தில் தொற்றிக் கொள்ள வாய்ப்புள்ள அந்நிய சிந்தனைகளிலிருந்தும் அவற்றிற்கு நெருக்கமாக உள்ள சிந்தனைகளிலிருந்தும் அவர்கள் தங்களை தூரமாக்கிக் கொள்ள வேண்டும். இத்தகைய நடவடிக்கை தாங்கள் சுமந்து செல்லும் சிந்தனையை பரிசுத்தமாகவும் தெளிவாகவும் வைத்துக் கொள்ள உதவிடும். சிந்தனையில் பரிசுத்தம் (Purity in Thought), அதில் தெளிவு (Clarity in Thought) ஆகிய இரண்டு மட்டும்தான் இஸ்லாத்தின் வெற்றிக்கும், தொடர்ந்து அந்த வெற்றியை நிலைபடுத்துவதற்கும் உத்திரவாதம் அளிக்கக்கூடியதாகும். அல்லாஹ்(சுபு)விடமிருந்து வந்த கட்டளையாக எண்ணி இந்த கடமையை அழைப்புப் பணியாளர்கள் நிறைவேற்ற வேண்டும். அல்லாஹ்(சுபு)வின் உவப்பை மாத்திரம் எதிர்பார்த்தவர்களாக ஆனந்தத்துடனும், மிகுந்த உற்சாகத்துடனும் இந்த பணியினை அவர்கள் மேற்கொள்ள வேண்டும். மக்களிடமிருந்து கிடைக்கும் பாராட்டையோ அல்லது வேறு எந்த உலக இலாபங்களையோ நிச்சயமாக அவர்கள் தேடக்கூடாது. அல்லாஹ்(சுபு)வின் உவப்பை பெறுவதற்கு முயற்சிப்பதைத் தவிர வேறு எதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது.

Friday, April 1, 2011

‘இஸ்லாமிய பாடசாலைகளுக்கு பாடத்திட்டம் தயாரிக்கும் அமெரிக்காவும் பிரிட்டனும்’

பயங்கரவாதம் மீதான பிராந்திய போரின் ஒரு பகுதி என்ற வகையில் பிரிட்டிஷ் அரச அதிகாரிகள் பங்களாதேஷ் இஸ்லாமிய கல்வி நடவடிக்கைகளில் தமது செல்வாக்கை செலுத்துவதாக விக்கிலீக் தெரிவித்துள்ளது. விக்கிலீக் பிரிட்டிஷ் சர்வதேச அபிவிருத்திக்கான அலுவலகம்- Department for International Development (DFID)- பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் பொது இலக்கு என்ற வகையில் அவ்வாறு அமெரிக்காவுடன் இணைந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பாடசாலைகளின் பாடத்திட்டங்களை மாற்றுவதில் ஈடுபட்டு வருகின்றது என்பதை தெரிவித்துள்ளது. பங்களாதேஷ்சுக்கான அமெரிக்க தூதுவர் ஜேம்ஸ் மொரியார்ட்டி- James Moriarty- எவ்வாறு தான் பங்களாதேஷ் பிரதமர் ஹசீனாவை- இஸ்லாமிய பாடசாலைகளுக்கு முறையான பாடத்திட்டத்தை – standardized curriculum- உருவாக்கி அமுல்படுத்துமாறு வேண்டினார் என அவர் குறிப்பிட்டதை விக்கிலீக் இவரின் இந்த வேண்டுகோள் அமெரிக்க அரச அபிவிருத்தி நிறுவனம்- US government development agency- மற்றும் USAid ஆகிய அமைப்புகள் பாடவிதான அபிவிருத்தி செயல்திட்டம்- “curriculum development programme” என்ற திட்டத்தின் ஊடாக – இஸ்லாமிய பாடசாலைகளுக்கான பாடத்திட்ட மாதிரியை தயாரித்து பங்களாதேஷ்சுக்கு வழங்கியத்தை தொடர்ந்து அமெரிக்க துதுவர் ஜேம்ஸ் மொரியார்ட்டி பிரதமரை வேண்டியுள்ளார். பங்களாதேஷ்சில் 60,000 இஸ்லாமிய பாடசாலைகள் இருப்தாகவும் அவை பங்களாதேஷ் கல்வி முறையில் முக்கிய பங்காற்றுவதாகவும் சாதாரண பாடசாலைகளுக்கு செல்ல முடியாதவர்களுக்கு இலவச கல்வியை இவை பெரும்பாலும் வழங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு இருக்கும் 15,000 வரையான இஸ்லாமிய சிறிய பாடசாலைகள் முறையான பாடத்திட்டங்கள் இன்றி செயல்படுவதாகவும் பொதுவான கல்வி தரத்தை விடவும் குறைவான கல்வி போதனை முறையை கொண்டிருபதாகவும் பங்களாதேஷ் அரசு தெரிவிக்கின்றது. பங்களாதேஷ் பல இஸ்லாமிய நிறுவனங்களையும் , அமைப்புகளையும் இராணுவ அமைப்புகள் என்று போலியான மேற்கு முத்திரைகளை குத்தி தடை செய்வதாக பல மாக குற்றம்சாட்டப்டுகின்றது ஜமாஅத்தே இஸ்லாமி , ஹிஸ்புத் தஹ்ரீர் போன்ற சிறந்த இஸ்லாமிய அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளாக போலி குற்றசாடுகளின் பெயரில் தடைசெய்யப்பட்டுள்ளன என்பது குறிபிடத்தக்கது மேற்கு உலகம் தான் உருவாக்க நினைக்கும் மனிதர்களை உருவாக்க தேவையான முன்மொழிவுகளை தனது பாடத்திட்டங்களில் கண்டிப்பாக கொண்டிருக்கும் என்பது அவதானிக்கத்தக்கது, அமைதியான அமெரிக்க பொம்மை என வர்ணிக்கப்படும் ஹசீனாவின் ஆட்சியில் பங்களாதேஷ் மிக வேகமாக அமெரிக்க ,மேற்குலகின் குகையா மாறிவருவதாக குற்றம் சாட்டப்டுகின்றது