Thursday, May 13, 2010

ஹிஜாப் அணிந்த பாடசாலை மாணவிகள் பாடசாலையில் இருந்து நீக்கம்

ஹிஜாப் அணிந்த பாடசாலை மாணவிகள் பாடசாலையில் இருந்து நீக்கம்
leave a comment »
ஹிஜாப் அணிந்த காரணத்தினால் கிறிஸ்தவ பாடசாலை நிர்வாகம் முஸ்லிம் மாணவியை பாடசாலையை விட்டு வெளியேற்றியுள்ளது இந்தியாவில் ஆல புழை பிரதேசத்தில் குருபுரம் என்ற பகுதியில் இயங்கும் பிலீவேர்ஸ் Believers church C.P.S.E பாடசாலையில் தரம் ஒன்பதில் பயிலும் T.N. நபாலா என்ற முஸ்லிம் மாணவி பாடசாலைக்கு தலையை மறைக்கும் ஹிஜாப் அணிந்து வருகை தருவதால் இந்த மாணவியை பாடசாலை நிர்வாகம் பாடசாலையை விட்டு நீக்கியுள்ளதாக இந்திய முஸ்லிம் செய்திகள் தெரிவிக்கின்றன .
ஹிஜாப் அணிவது மார்க்க கடமை அது அனுமதிக்க பட வேண்டும் என்று கூறியபோதும் பாடசாலை நிர்வாகம் மோசமாக நடந்துக் கொண்டதாக தெரிவிக்கபடுகின்றது ஆரம்ப தரம் முதல் அந்த முஸ்லிம் மாணவி இப்பபாடசாலையில்தான் பயின்று வந்துள்ளார் . இந்த பாடசாலையை பதிதாக பொறுப்பு ஏற்ற கிருஸ்தவ ஆலைய நிர்வாகம் மாணவியை வெளியேற்றியுள்ளது அதே வேளை அலோசியஸ் என்ற மற்றும் ஒரு கிருஸ்தவ பாடசாலையில் தரம் 8 இல் பயிலும் ஆஸியா என்ற முஸ்லிம் மாணவியையும் ஹிஜாப் அணிந்த காரணத்தினால் பாடசாலை நிர்வாகம் பாடசாலையை விட்டு வெளியேற்றியுள்ளது
இந்த வெளியேற்றம் பற்றி மேலும் தெரிவிக்கபடுவதாவது குறித்த மாணவியின் பெற்றோர் மாணவியை வெளியேற்றியமை பற்றி பாடசாலை நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது விரிவாக பார்க்க பாடசாலையில் ஹிஜாப் அணிந்ததற்காக அனைத்து முஸ்லிம் மாணவிகளையும் வெளியேற்ற வேண்டி ஏற்பட்டாலும் அது எங்களுக்கு ஒரு பிரச்சனையாக அமையாது என்று பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது அதேவேளையில் கிறிஸ்தவ கன்னியாஸ்திரியான அந்த பள்ளிக்கூட தலைமயாசிரியை தலையில் அணிந்திருக்கும் கிறிஸ்தவ முறையிலான ஆடையைக் குறித்து கேட்கபட்டபோது இது எங்களுடைய பாடசாலை எங்கள் விருப்பப்படி ஆடை அணிவோம் என பதிலளித்துள்ளார் என்று தெரிவிக்க படுகின்றது
பிந்திய தகவல்களின் பிரகாரம் ஹிஜாப் அணிந்த காரணத்தினால் பாடசாலையை விட்டு நீக்கிய தரம் ஒன்பதில் பயிலும் நபாலா என்ற முஸ்லிம் மாணவியை உடனடியாக பள்ளிக்கூடத்தில் சேர்த்து கற்க அனுமதிக்க வேண்டும் என்று கேரள மாநில அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன

No comments:

Post a Comment