எங்கே செல்கிறாய்?
மடிந்து விழுந்து நெழிந்து தவழ்ந்து புரண்டு விரைந்து சிதறும் புணலில்...இடிந்து குழைந்து அழிந்து விழுந்து விரண்டு மறைந்த பதராய்… எழுந்து விளைந்து குவிந்து அலைந்து திரண்டு ஒளிர்ந்த படரும் சுடரில்...ஒடிந்து தளர்ந்து குணிந்து வளைந்து மிரண்டு அழிந்த சிறகாய்… நீ… எங்கே செல்கிறாய்? அம்மா வாசைப் பௌணர்மியாய் ஆழிப் பேரலை அகிம்சையாய் இம்மையின் மறுமையாய் ஈராக்கின் அமைதியாய்… நீ… எங்கே செல்கிறாய்? இறக்கப் பிறந்த நீ… பறக்க நினைத்தாய்! உயரப் பறக்க சிறகை ஒடித்தாய்! நீ… எங்கே செல்கிறாய்? ஒரு நாள் நீ வல்லரசு! இன்னாள்…இல்லை… உக்கில்லை ஓர் அரசு! நீ சொன்னாய்… பரவாயில்லை… இன்று நான் நான் அல்ல… இன்று நான் நாம்! ஐம்பது, ஐம்பது சிற்றரசு! பெரிசு…ஐம்பதா ஒன்றா? ஐம்பது… நான் புதுப்பாவை… எனக்கேன் பொல்லாப்பு? பேரரசு பெருமைக்கா? போர் செய்ய முட்டாளா? தேசியம் தேனாக… ஜன நாயகம் பாலாக… கபிடலிஸம் மதுக்கோப்பை! கொம்யூனிஸம் விலைமாது! இஸ்லாம் இருக்கட்டும்…அழையா விருந்தாளி! மொடர்ண் இஸ்லாம்… ஆஹா… உல்லாசம்! நீ பாவை அல்ல – அப்பாவி இல்லை - நீ பாவி! மேற்குலகின் காலனி… அண்ணார் என்றான்- ஐரோப்பா அவனிடமிருந்ததோ இராட்சத சிலந்தி வலை பலம் அல்ல – வெறும் பிரமாண்டம் ஏமாந்தாய்…அண்ணார்ந்தாய் - கொக்கின் கழுத்து கட்டையானது அண்ணார்ந்தாய் - அவனை(அல்லாஹ்வை) அழைக்கவல்ல அன்னியனை அரவணைக்க! நீ… எங்கே செல்கிறாய்? விடுதலை என் முற்றம் சுதந்திரம் என் கொல்லை அதில் வீடு உலகாயதம் பெண்ணாட்டி அமெரிக்கா! வைப்பாட்டி ஐரோப்பா! விளையாட இஸ்ரவேலு… வாரிசு டொமோகரசி! வழக்கென்றால் ஐயன்னா நாவன்னா… இதுதானே உன் உலகம்… நீ… எங்கே செல்கிறாய்? மின்னல் மிலேனியத்தில் மில்லத்துந் இம்ராஹீமா… ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவுமா? குர்ஆனும் ஏடுதானே! ச்ச்சும்மா வாசிக்க வைத்திருப்போம்… அதில் பூஜிக்க ஒன்றுமில்லை… இதுதானே உன் கொள்கை… நீ… எங்கே செல்கிறாய்? அக்ஸா அலுப்பென்றால் கஃபாவை கைமாற்றுவோம்! விசுவாசியின் குருதி அதை விட மேலானது… அதையே ஓட்டி விட்டோம்… இது என்ன கல்தானே…இதுதானே உன் தீர்வு நீ… எங்கே செல்கிறாய்? மறுமையா மண்ணாங்கட்டி… இதுதான்(இம்மை) உள்ளங்கை நெல்லிக்கனி! கேள்வியா கணக்கா…ஐய்யோ… ஐய்யோ நாளைக்கு பிளைப்பைப் பாரப்பா… இதுதானே உன் வாதம் நீ… எங்கே செல்கிறாய்? நில்… நில்…அக்கினிப்பிளம்பொன்றில் அகோரமாய் ஓர் காட்சி! கருகிக் கருகிக் கதறிக் கதறி ஓர் ஓசை! அதோ…அதோ அது பிர்அவ்னா? இல்லை அது ஹாமான்…இல்லை நம்ரூத்… ஐய்யோ அல்ல அது ஜஹ்ல்… அபு ஜஹ்ல்… நீ… எங்கே செல்கிறாய்?
No comments:
Post a Comment