துனீசியாவில் ஏற்பட்டுள்ள புரட்சி அரபுநாடுகள் முழுவதும் தாக்கம் -
யெமென் நாட்டில் ஆயிரக்கணக்கான பல்கலைகழக மாணவர்கள் மற்றும் சமுக செயல்பாட்டாளர்கள் , எதிர் கட்சிகளின் உறுப்பினர்கள் என்று பலரும் நாட்டின் ஜனாதிபதிக்கு எதிரான ஆர்பாட்டம் ஒன்றை ஷனா பல்கலைகழகத்தில் நடத்தியுள்ளனர் யெமென் 98 வீதம் முஸ்லிம்களை கொண்ட ஒரு நாடு இது தென்மேற்கு ஆசியாவில் அரேபிய தீபகற்பத்தின் தென்மேற்குக் கரையில் அமைந்து உள்ளதுடன் வடக்கில் சவூதி அரேபியாவையும் வடகிழக்கில் ஓமானும் எல்லைகளாக கொண்டுள்ளது.
1999 ஆம் ஆண்டு வடக்கு தெற்காக பிரித்திருந்த யெமென் ஒன்றாக இணைக்கப்பட்டு அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாக இருந்து வருகின்றார்.
நேற்று நடைபெற்றுள்ள ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நாட்டைவிட்டும் தலைமறைவான துனீசியா ஜனாதிபதி பின் அலியுடன் யெமென் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ்வை ஒப்பிட்டு கோசங்களை எழுப்பியுள்ளனர் இந்த ஆர்பாட்டம் நாட்டின் ஜனாதிபதிக்கு எதிராக நடைபெற்றுள்ள பாரிய ஆர்ப்பாட்டமாக பதிவாகியுள்ளது இதில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் துனீசியாவில் ஏற்பட்டு வரும் மக்கள் புரட்சி அரபுநாடுகள் முழுவதும் தாக்கம் -domino effect- செலுத்த தொடங்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காடுகின்றனர்.
இதேபோன்று ஜோர்டான் , அல்ஜீரியா , எகிப்து , போன்ற நாடுகளிலும் மேற்குலக ஆசான்களுக்கு வழிப்படும் அரசுகளுக்கும் அரச தலைவர்களுக்கும் ஆபத்து நெருங்கி வருவதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்
யெமென் நாட்டில் வறுமை, ஊழல் என்பன அதிகரித்துள்ளதுடன் அமெரிக்காவின் செறிவான புலனாய்வாளர்களின் கோட்டையாக விளங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது அமெரிக்கா பல தடவைகள் நடாத்திய விமான தாக்குதலை யெமென் அரசு தாம் நடத்துவதாக கூறிவருகின்றது என்று குற்றம் சாட்டப்படுகின்றது
ஆசியாவின் நுழைவாசல் என்று கூறப்பட்டு Aden port – the “gate to Asia” யெமென் நாட்டின் அடேன் போர்ட் என்ற துறைமுக பகுதியை அமெரிக்கா தனது மறை முகமான கட்டுபாட்டின் கீழ் வைத்துள்ளது என்பதுடன் யெமென் ஜனாதிபதி அமெரிக்காவுடன் மிகவும் ரகசியமான உறவுகளை கொண்டுள்ளார் என்று விமர்சிக்க படுகின்றார் யெமென் நாட்டின் இஸ்லாமிய பயங்கரவாதிகளை தாக்குகின்றோம் என்று கூறி பல நூறு அப்பாவி பொதுமக்களை அமெரிக்காவின் குண்டுகள் கொன்று குவித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது
No comments:
Post a Comment