Monday, March 28, 2011
மக்களின் நலனுக்காக மீண்டும் மறு பதிவு : ஜனநாயகம் : நவீன கால இணைவைப்பு
ஜனநாயகம் : நவீன கால இணைவைப்பு ஜனநாயகம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள கொள்கையாகும். முஸ்லிம்கள் கூட ஜனநாயகத்தை வானளாவ புகழ்ந்து வருகின்றனர். ஆனால் இந்தியாவில் அமுலில் இருக்கும் மதசார்பற்ற ஜனநாயக முறை இஸ்லாத்திற்கு முற்றிலும் புறம்பான ஒரு கோட்பாடாகும். இஸ்லாம், ஆட்சி அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமானது என்று கூறுகின்றது. அல்லாஹ் தனது திருமறையில் “ஆட்சி செலுத்தும் அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. அவனைத் தவிர வேறு யாருக்கும் நீங்கள் அடிபணியக் கூடாது” என்று கட்டளை இட்டுள்ளான். (அல்குர்ஆன்12:40) ''“எனவே அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப அவர்களுடைய விவகாரங்களில் தீர்ப்பளியுங்கள். அவர்களுடைய ஆசாபாசங்களைப் பின்பற்றாதீர்கள்! அவர்கள் உம்மை குழப்பத்திலாழ்த்தி, அல்லாஹ் உம்மீது இறக்கியருளிய அறிவுரைகள் சிலவற்றிலிருந்து (உம்மை) இம்மியளவும் நழுவச் செய்திடா வண்ணம் நீர் அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக! பிறகும் அவர்கள் இதனைப் புறக்கணித்தார்களாயின், அல்லாஹ் அவர்களுடைய சில பாவங்களின் காரணமாக அவர்களை துன்பத்திலாழ்த்திடவே நாடிவிட்டான் என்று அறிந்து கொள்ளுங்கள். மேலும் திண்ணமாக அந்த மக்களில் பெரும்பாலோர் வரம்பு மீறியவர்களாவர். அவர்கள் அல்லாஹ்வின் சட்டத்தைப் புறக்கணிக்கிறார்கள் என்றால் பிறகு ஜாஹிலியத்தின் (அறியாமைக்காலத்தின்) தீர்ப்பினையா அவர்கள் விரும்புகின்றார்கள்? ஆயினும் அல்லாஹ்வின் மீது உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களை பொறுத்தவரை அல்லாஹ்வைவிட நல்ல தீர்ப்பு வழங்குபவன் யார்?"(அல்குர்ஆன் 5 : 49,50)எனவே இஸ்லாத்தை பொறுத்தமட்டில் ஆட்சிஅதிகாரமும், சட்டமியற்றும் அதிகாரமும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. இதில் அவனுக்கு இணை துணை யாருமே கிடையாது. ஆனால் இந்தியாவில் நடைமுறையிலுள்ள ஜனநாயகம் ஆட்சி அதிகாரமும், சட்டமியற்றும் அதிகாரமும் மக்களுக்கே உரியது என்று கூறுகின்றது. ஜனநாயகத்தில் பெரும்பான்மை மக்களின் விருப்பமே அது சரியாக இருந்தாலும் தவறாக இருந்தாலும் நடைமுறைப்படுத்தப்படும். இறைவனது வழிகாட்டுதல்களை குறித்து சிந்திக்க மத சார்பற்ற ஜனநாய முறையில் சிறிதளவும் வாய்ப்பில்லை.''பூமியில் வசிப்பவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றினால் இறைவனின் பாதையிலிருந்து உம்மை அவர்கள் வழி கெடுத்துவிடுவார்கள். ஆதாரமற்ற வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள்."(அல்குர்ஆன் 6 : 116)எனவே இஸ்லாமும், ஜனநாயகமும் எதிரும் புதிருமான கொள்கைகளாகும். இறைவனுக்கு இணைவைக்கும் அரசியல் வடிவமே ஜனநாயகமாகும். அது மனிதனை கடவுள் ஆக்குகின்றது. ''தமது மனோ இச்சையை தெய்வமாக கொண்டோரை.. .." (25:43) (M.Pமற்றும் MLA க்கள்) கண்ணியப்படுத்தி அவர்களது தவறுகளுக்கெல்லாம் நியாயம் கற்பிக்கும் நிறுவனங்களை (பாராளுமன்றம், சட்டமன்றம்) உற்பத்தி செய்கின்றது ஜனநாயகம்.மதசார்பற்ற ஜனநாயக அரசியல் அமைப்பை ஏற்றுக் கொள்வது இந்த அமைப்பை உருவாக்க தேர்தலில் போட்டியிடுவது, அல்லது போட்டியிடுவோரை ஆதரிப்பது இணைவைத்தல் மட்டுமின்றி, பாராளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றின் வடிவில் இன்னொரு இலாஹ்வை உருவாக்குவதற்கு சமமாகும்.எனவே லாஇலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுற் றசூலுல்லாஹ் என்ற கலிமாவை மொழிந்த எவரும் ஓட்டுப் போட்டு நவீனகால தாஃகூத்தான பாராளுமன்றத்தை உருவாக்க முன்வரக் கூடாது.இன்றைய இந்தியாவில் அல்லாஹ் ஹராமாக்கி இருப்பதை ஹலால் ஆக்குவதும், அல்லாஹ் ஹலால் ஆக்கி இருப்பதை ஹராம் ஆக்குவதும் பாராளுமன்றம், சட்டமன்றங்களின் பணிகளாக இருந்து வருகின்றன. உதாரணமாக : எத்தனை குழந்தைகளை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளும் உரிமையை மனிதர்களுக்கு அல்லாஹ் ஹலால் ஆக்கியுள்ளான். அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான், ''நீங்கள் வறுமைக்கு பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்;, அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம். அவர்களை கொல்லுதல் நிச்சயமாக பெரும் பிழையாகும்."(அல்குர்ஆன் 17 : 3)ஆனால் இன்றைய சட்டமியற்றும் பாராளுமன்றம், சட்டமன்ற அவைகள் தமது கரங்களில் சட்டத்தை எடுத்துக் கொண்டு மனித இன உற்பத்தியை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அமுல் படுத்தி வருகின்றன. இதேபோல் சென்ற 1988ல் நாடாளுமன்றத்தில் மத ஆலயங்கள் துஷ்பிரயோக தடைசட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் நோக்கம் மதத்தையும் அரசியலையும் பிரிப்பதுதான். தீனின் பிரிக்க முடியாத பாகமாக அரசியல் விளங்கும்போது, இறைவன் தனது அடிமைகளுக்கு கொடுத்திருக்கும் இந்த சுதந்திரத்தை பறிக்க சட்டமியற்றும் மன்றங்களுக்கு எங்கே உரிமை இருக்கின்றது? அல்லாஹ் ஹராமாக்கி இருப்பதை ஹலால் ஆக்குவதிலும் சட்டம் இயற்றும் கூடாரங்கள் பெரும் பங்கு வகித்துள்ளன. உதாரணமாக மதுக்கடைகள் வைக்க அனுமதிக்கும் சட்டம், விபச்சாரம் செய்வதற்கு கூட லைசென்ஸ், லாட்டரி எனும் சூதாட்டத் திட்டத்தை அமுல்படுத்த அனுமதி. ஆனால் அல்லாஹ் கூறுகின்றான் ''இறைநம்பிக்கை கொண்டவர்களே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை அருவருக்கத்தக்க ஷைத்தானியச் செயல்களாகும். ஆவற்றை தவிர்த்து கொள்ளுங்கள் அதன் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம்."(அல்குர்ஆன் 5 : 90,91 )இப்படி அல்லாஹ் ஹராம் ஆக்கியிருப்பதை ஹலாலாகவும், அல்லாஹ் ஹலால் ஆக்கியிருப்பதை ஹராமாக்கி வைக்கும் அவைகளே சட்டமன்றங்களும், பாராளுமன்றங்களும். இப்படி அல்லாஹ் விதித்துள்ள விதி முறைகளுக்கு நேர் எதிரான சட்டங்களை உருவாக்க பாராளுமன்றத்திற்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முஸ்லிம்கள் எப்படி வாக்களிக்க முடியும்?நாம் மேலே குறிப்பிட்டுள்ள இறைவசனங்களில் இறைவன் கடுமையாக எச்சரிக்கை விடுத்திருப்பினும் குஃப்ரை (இறை நிராகரிப்பை) அழித்து விட்டு அல்லாஹ்வின் வாக்கை மேலோங்க வைக்க பாடுபட வேண்டிய முஸ்லிம்கள் இன்று மதசார்பற்ற ஜனநாயக தேர்தலில் பங்கு கொள்வதில் பெரும் விருப்பமுடையவர்களாக இருக்கின்றார்கள். இதன் மூலம் அவர்கள் இன்னொரு இலாஹ்வை (இறைவனை) பாரளுமன்றத்தின் வடிவில் உருவாக்குகின்றோம் என்பதை உணர்வதில்லை. ஒரு முறை பெருமானார் (ஸல்) அவர்கள், (யூதர்களும், கிருத்தவர்களும்) அல்லாஹ்வை விடுத்து மார்;க்க மேதைகளையும், துறவிகளையும் தங்களின் ரப் (கடவுள்) ஆக ஆக்கிக் கொண்டார்கள் (9:31) என்ற இறை வசனத்தை ஒரு கூட்டத்தார் முன்நிலையில் ஓதிக் காட்டினார்கள். அப்போது அந்த அவையிலிருந்த அதீ பின் ஹாத்திம் என்ற இஸ்லாத்தை தழுவிய கிருத்தவர், கிருத்தவர்கள் தங்கள் மதகுருமார்களை வணங்காதிருக்கும் போது அவர்கள் எப்படி கடவுளராக ஆக முடியும் என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) பதில் சொன்னார்கள்,அந்த அறிஞர்களும் துறவிகளும் எதனை ஹராம் என்று கூறினார்களோ அதனை ஹராமாகவும் எதனை ஹலால் என்று கூறினார்களோ அதனை ஹலால் என்றும் ஏற்றுக் கொள்கின்றீர்கள். இதுதான் அவர்களை கடவுளராக ஆக்கிக் கொள்வதாகும் என்று கூறினார்கள். (அஹ்மத், திர்மிதி)ஓட்டுப் போட்டு சட்டமியற்ற பாராளுமன்றம் சட்டமன்றம் அமைப்பது மற்றொரு கடவுளை உருவாக்குவதுதான் என்பது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பதிலுரையில் இருந்து நமக்கு தெளிவாக புலப்படுகின்றது. இருப்பினும் எல்லா வகையான சமாதானங்களையும் கூறி முஸ்லிம்கள் அவ் அமைப்பில் அங்கம் வகித்து வருகின்றனர். அல்லாஹ் இவ்வாறு செயல்படுவோரை இவ்வாறு எச்சரிக்கின்றான்.''மேலும் தனக்கு நேர்வழி தெளிவாகிவிட்ட பின்னரும், யார் இறைத் தூதரிடத்தில் பகைமை காட்டுவதில் முனைப்பாக இருக்கின்றானோ, இறை நம்பிக்கையாளர்களின் போக்கிற்கு மாறான பாதையில் செல்கின்றானோ அவனை அவன் திருப்பி விட்ட திசையிலேயே நாம் செலுத்துவோம், பின்னர் அவனை நரகத்தில் வீசி எறிவோம். அது மிக்க கெட்ட தங்குமிடமாகும்." (அல்குர்ஆன் 5: 44,45,47)''திண்;ணமாக தனக்கு இணைவைக்கப்படுவதை அல்லாஹ் மன்னிப்பதில்லை. இதைத் தவிர அனைத்து பாவங்களையும் தான் நாடுபவர்களுக்கு மன்னித்து விடுகின்றான். அல்லாஹ்வுக்கு இணைவைப்பவர்கள் திண்ணமாக பெரும் பொய்யை புனைந்தவராவர். மேலும் பாவத்தை புரிந்தவராவர்." (அல்குர்ஆன் 4 : 48 )முஸ்லிம்களுக்கு இறுதி வெற்றி மறுமையில்தான். அந்த இறுதி வெற்றிக்கு பங்கம் விளைவிக்கவல்லது மதசார்பற்ற ஜனநாயக முறையில் பங்கு கொள்வது. எனவே அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் இந்த அமைப்பினை புறக்கணிப்போம். ஈருலகிலும் வெற்றி பெறுவோம்.நன்றி : அருட்ச் செல்வன்(M.H.J) - சிம் செய்திமடல் - டிச.'95
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment