Tuesday, July 26, 2011

இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ளும் வழிமுறை - (Daw'ah)




இஸ்லாமிய அழைப்புப்பணி பற்றி சிந்திக்கும்போது சில முக்கிய விடயங்களை தெளிவாக முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவேண்டும். அவற்றில் முக்கியமானதொரு விடயம்தான் இஸ்லாத்தை பின்பற்றுவதால் முஸ்லிம்கள் உலகில் பின்னடைவு எய்திடவில்லை. மாறாக, இஸ்லாத்தை பின்பற்றுவதை கைவிட்ட நாளிலிருந்துதான் அவர்களின் பிற்போக்கு நிலை துவங்கியது என்பதுபற்றிய விடயமாகும். அந்நியக் கலாச்சாரம் தங்கள் மண்ணில் நுழைவதற்கும், மேற்கத்திய சிந்தனை தங்கள் நெஞ்சங்களை ஆட்கொள்வதற்கும் முஸ்லிம்கள் அனுமதித்தார்கள். இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமையை கைவிட்டதாலும், அதனுடைய அழைப்புப் பணியை (Daw'ah) புறக்கணித்ததாலும், அதன் சட்டங்களை தவறாக செயல்படுத்தியதாலும் அவர்கள் வீழ்ச்சியுற்றார்கள். ஆகவே, இன்று முஸ்லிம்கள் வந்து அடைந்திருக்கும் அதளபாதாளத்திலிருந்து அவர்கள் மறுமலர்ச்சி அடைய வேண்டும் வேண்டுமெனில் முஸ்லிம்கள் முற்று முழுதாக இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு கட்டாயம் திரும்பிட வேண்டும். எனினும் இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்வதன் மூலமும், இஸ்லாமிய அறிவார்ந்த தலைமையை உலகெங்கிலும் எடுத்துச் செல்வதன் மூலமும், ஒரு இஸ்லாமிய அரசை நிறுவினாலன்றி முழுமையான இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு முஸ்லிம்களால் திரும்பிவிட இயலாது. பின்னர் அந்த அரசு இஸ்லாமிய அறிவார்ந்த தலைமையை அழைப்புப்பணி மூலம் உலகெங்கிலும் எடுத்துச் செல்லும்.ஏனெனில், இஸ்லாம் மட்டுமே உலகை சீர்திருத்தும் ஆற்றல் பெற்றது. மேலும் இஸ்லாத்தின் மூலமாக அல்லாமல் உண்மையான மறுமலர்ச்சியை கொண்டு வர இயலாது. அது முஸ்லிம்களுக்கு என்றாலும் அல்லது மற்றவர்களுக்கு என்றாலும் சரியே.

அறிவார்ந்த தலைமையாக உலகெங்கும் அழைப்புப்பணி எடுத்துச் செல்லப்பட வேண்டும். அதிலிருந்து செயலாக்க அமைப்பு (முறைமை) (System - நிதாம்) பிறக்கிறது. மேலும் அனைத்து சிந்தனைகளும் இந்த அறிவார்ந்த தலைமை மீதுதான் கட்டமைக்கப்படுகின்றன. மேலும் இத்தகைய சிந்தனையிலிருந்துதான் விதிவிலக்கு ஏதுமின்றி ஒருவரை ஆதிக்கம் செலுத்தும் வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டத்தின் அனைத்துக் கருத்துக்களும்(Concepts) பிறக்கின்றன.

கடந்த காலங்களில் அழைப்புப்பணி மேற்கொள்ளப்பட்ட அதே முறையில், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன் உதாரணத்தோடு அவர்களின்(ஸல்) வழிமுறையிலிருந்து சற்றும் விலகிச் செல்லாமல் இன்றைய நாட்களிலும் அழைப்புப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும். கால மாற்றத்தின் வேறுபாட்டிற்கு எந்தவிதமான முக்கியத்துவமும் கொடுக்கக்கூடாது. ஏனெனில் இவை சாதனங்களிலும், தோற்றங்களிலும் ஏற்பட்ட மாற்றங்களே ஒழிய அடிப்படையில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படவில்லை. யுகங்கள் மாறிய போதிலும், மக்களும் இடங்களும் மாறியப் போதிலும் வாழ்க்கையின் சாரமும் (Essence of life) உண்மை நிலையும் மாறிவிடவில்லை. அவை மாறவும் இயலாது.

ஆகவே அழைப்புப்பணி மேற்கொள்வதற்கு வெளிப்படையான அணுகுமுறையும், மன உறுதியும் ஆற்றலும் சிந்தனையும் தேவைப்படுகின்றன. மேலும், இஸ்லாத்தின் சிந்தனைக்கும் அதன் வழிமுறைக்கும் (Fikrah & Tareeqah - Thought and Method) முரண்பாடாக உள்ள அனைத்தையும் தீவிரமாக எதிர்க்கக்கூடிய மனோதிடமும் வேட்கையும் அழைப்பின்போது தேவைப்படுகின்றன. அழைப்புப்பணியைச்சூழவுள்ள சூழலும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளும் அழைப்பாளர்களுக்கு பாதகமாகவோ, அல்லது சாதகமாகவோ இருந்த போதிலும் சமூகத்தில் ஊடுருவியிருக்கின்ற தவறான அடிப்படைகளை வெட்ட வெளிச்சமாக்குவதும் அவற்றை எதிர்ப்பதும் அழைப்பாளர்களுக்கும் அதன் இயக்கத்திற்கும் மிக முக்கிய கடமையாகிறது.

இங்கே மக்களோடு ஒத்துப் போவதாக இருந்தாலும், அல்லது ஒத்துப்போகவில்லையென்றாலும், அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் அல்லது ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்தாலும் மக்களின் மரபுகளுக்கு இணக்கமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் இறுதியான இறையாண்மை (Sovereignty - Siyadah) இஸ்லாமிய சித்தாந்தத்திற்கே மட்டுமே உரியது என்பதை நிலைநாட்டும் விதமாக அழைப்புப்பணி மேற்கொள்வது அவசியமாகிறது.

அழைப்புப்பணி செய்பவர்கள் மக்களுக்கு முகஸ்துதி செய்ய மாட்டார்கள். அதிகாரமுடையவர்களுக்கு அடிபணிய மாட்டார்கள். மக்களின் மரபுகளையும், பாரம்பரியத்தையும் லட்சியம் செய்ய மாட்டார்கள். மக்கள் தங்களை ஏற்றுக் கொள்கிறார்களா அல்லது ஏற்றுக்கொள்ளவில்லையா என்பதில் கவனம் செலுத்த மாட்டார்கள். மாறாக, அவர்கள் சித்தாந்தத்தை மட்டும் பின்பற்றுகிறவர்களாகவும், அதைத் தவிர வேறு ஒன்றையும் பொருட்டாக எண்ணாதவர்களாகவும், அதனை மட்டுமே முழுமையாக எடுத்துரைப்பவர்களாகவும் இருப்பார்கள். மேலும் ஏனைய சித்தாந்தங்களை பின்பற்றுகிறவர்களிடம் அதனை அவர்கள் பின்பற்றிவருமாறு கூறுவதற்கு எங்கும் அனுமதியில்லை. இதற்கு மாறாக, நிர்பந்தம் ஏதுமில்லாமல் இந்த சித்தாந்தத்தை (இஸ்லாம்) தழுவுவதற்கு அவர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். ஏனெனில் அழைப்புப் பணிக்கு தேவைப்படுவது என்னவென்றால், இஸ்லாத்திற்கு இணையாக எந்த சித்தாந்தமும் இருக்க முடியாது என்றும், இஸ்லாத்திற்கு மட்டும்தான் இறையாண்மை (Sovereignty - Siyadah) உரியது என்றும் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதும் அதனை எடுத்தியம்புவதும்தான்.

அவன்தான் தனது தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் ஏனைய தீன்களை(வாழ்வொழுங்குகளை) மிகைக்கும் பொருட்டு அனுப்பி வைத்தான். இதனை இணை வைப்பவர்கள் வெறுத்த போதிலும் சரியே. (அத்தவ்பா : 33)

இறைதூதர்(ஸல்) அவர்கள் தங்களின் மகத்தான செய்தியுடன் இந்த உலகத்திற்கு வந்தார்கள். முழு உலகத்திற்கும் வெளிப்படையாக அறைகூவல் விடுத்தார்கள். அவர்கள்(ஸல்) தனது சத்தியத்தை உறுதியுடன் விசுவாசித்தார்கள். மக்களை சத்தியத்தின் பால் அழைத்தார்கள். மேலும், கருப்பர்களையும், வெள்ளையர்களையும், ஆட்சியாளர்களையும், சாமானியர்களையும் அவர்களின் பாரம்பரியம், மரபு, மதம், கோட்பாடு ஆகியவற்றின் வேறுபாடு எதையும் பாராமல் அனைவரையும் இஸ்லாத்தின் பால் அழைத்தார்கள். இஸ்லாத்தின் மகத்தான செய்தியை விடுத்து வேறு எது ஒன்றின்பாலும் அவர்கள் (ஸல்) கவனம் செலுத்தவில்லை. குறைஷியர்களின் பொய்யான தெய்வங்களை கடுமையாக சாடுவதின் மூலம் தங்கள் அழைப்புப்பணியை ஆரம்பித்தார்கள். அவர்கள்(ஸல்) தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தன்னந்தனியாக நின்ற போதிலும் குறைஷியர்களின் அடிப்படை கோட்பாட்டினை கடுமையாக எதிர்த்து அதை சாடினார்கள். அவர்களுக்கு (ஸல்) உதவி செய்பவர்கள் யாரும் இல்லை. அவர்கள்(ஸல்) அழைப்பு விடுக்கும் இஸ்லாத்தின் மீது கொண்டிருந்த அசைக்க முடியாத தீவிரமான நம்பிக்கை ஒன்றைத் தவிர எந்தவிதமான ஆயுதமோ உதவியோ அவர்களிடத்தில்(ஸல்) இல்லை. அரபு மக்களின் பாரம்பரியம், மரபு, மதம் கோட்பாடு ஆகியவற்றை அவர்கள்(ஸல்) துளியளவு கூட லட்சியம் செய்யவில்லை. இந்த வகையில் அவர்கள்(ஸல்) எந்த விதமான மரியாதையையோ அல்லது பணிவையோ அவர்களிடம் காண்பிக்கவில்லை.

இதுபோலவே, அழைப்புப்பணி செய்பவர்கள் அனைத்தையும் எதிர்த்து ஆக வேண்டும். அவர்கள் எதிர்ப்பவற்றில் மக்களின் பாரம்பரியம், மரபு, தவறான சிந்தனை மற்றும் தவறான கருத்துக்கள் ஆகியவைகள் அடங்கும். வெகுஜனக் கருத்து (Public Opinion) தவறாக இருக்கும்பட்சத்தில் அதற்கு எதிராக கடும் போராட்டம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டாலும் அதை செய்ய வேண்டும். அவற்றை பின்பற்றுகிறவர்களுடைய வெறித்தனங்களுக்கு ஆளாக நேரிடினும், உருக்குலைந்த கொள்கைகளில் ஒட்டிக் கொண்டிருப்பவர்களின் கடும் பகையை எதிர்கொள்ள நேரிடினும், அவர்களின் மதத்தையும், அடிப்படை கோட்பாட்டினையும் எதிர்த்தெ ஆக வேண்டும்.

இலேசான சலுகை கூட காட்டாமல், இஸ்லாமிய நெறிமுறைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கரிசனம் அழைப்புப்பணி மேற்கொள்கிறவர்களுக்கு அவசியமாக இருக்க வேண்டும். எந்தவிதமான சமரசத்தையோ, சலுகையையோ ஏற்றுக் கொள்ளக்கூடாது. கவனக்குறைவையும், காரியங்களை ஒத்திப்போடும் பழக்கத்தையும் அறவே விட்டொழிக்க வேண்டும். இதற்கு மாறாக பிரச்சினைகளை, முழுமையாக நிர்வாகம் செய்து, உறுதியான முறையில் அவறிற்கான உடனடித் தீர்வு காண வேண்டும். சத்தியத்திற்கு இடையூறான எந்த பரிந்துரையையும் ஏற்றுக் கொள்ளக்கூடாது. தாக்கீஃப் கோந்திரத்தார், இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு நிபந்தனையாக, தமது வழிபபாட்டுச்சிலையான அல் லாத்தை (Al laat) உடைத்தெறியாது, மூன்று வருடங்கள் தம்முடன் வைத்துக் கொள்வதற்கும், தொழுகையிலிருந்து விலகி இருப்பதற்கும் அனுமதிகோரி அனுப்பி வைத்த தூதுக்குழுவினரின் வேண்டுகோளை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இரண்டு வருடங்களுக்கு அல்லாத்தை விட்டு வைக்க வேண்டும். அல்லது ஒரு மாதத்திற்கேனும் அதை விட்டு வைக்க வேண்டும் என அவர்கள் கேட்டதைக்கூட இறைதூதர்(ஸல்) மறுத்துவிட்டார்கள். இந்த வேண்டுகோளை அவர்கள் உறுதியாகவும், இறுதியாகவும் எந்தவித தயக்கமோ அல்லது இரக்கமோ காட்டாமல் மறுத்து விட்டார்கள். இது ஏனெனில் ஒன்று மனிதன் விசுவாசம் கொள்ள வேண்டும் அல்லது நிராகரித்து விட வேண்டும். அதன் விளைவாக ஒன்று சுவனம் செல்ல வேண்டும் அல்லது நரகம் செல்ல வேண்டும் என்பதுதான். எனினும் தங்கள் கைகளால் அந்த உருவச்சிலை உடைபட வேண்டாம் என்ற அவர்களின் கோரிக்கையை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதன்படி அபூ சுஃப்யானையும், அல்மூஹீரா இப்னு ஷீஆபாவையும் அதனை உடைக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். முழு அகீதாவிற்கும், அதனை நடைமுறைப்படுத்த தேவையானவற்றிற்கும் குறுக்கே நிற்கும் எந்த ஒன்றையும் நிச்சயமாக அவர்கள்(ஸல்) ஏற்றுக் கொள்ளவில்லை. நடைமுறைப்படுத்துவதில் இடம்பெறும் சாதனத்தையும் (Means) தோற்றத்தையும், அமைப்புகளையும் (Forms) பொறுத்தவரை அவைகளுக்கு இஸ்லாமிய அகீதாவோடு எந்தவித தொடர்பும் இல்லை என்ற காரணத்தினால் அவற்றை அவர்கள் (ஸல்) ஏற்றுக் கொண்டார்கள். ஆகவே இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ளும் தருணத்தில் இஸ்லாமிய சிந்தனையிலும் அதன் வழிமுறையிலும் (குமைசயா ரூ வுயசநநஙயா) எந்தவிதமான சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் சிந்தனை மற்றும் அதன் செயலாக்க அமைப்பு (Fikrah & Tareeqah) ஆகியவற்றை முழுமையாக பாதுகாக்கும் விதத்தில் செயல்பட வேண்டும். அதற்கு தேவைப்படும் எந்த சாதனத்தையும் (Means) பயன்படுத்துவதில் கேடு ஒன்றும் கிடையாது.

இஸ்லாமிய அழைப்புப்பணி மேற்கொள்ளப்படும்போது, ஒரு குறிப்பிட்ட இலக்கோடு ஒவ்வொரு செயலும் மேற்கொள்ளப்பட வேண்டும். பணியாளர்கள் எப்பொழுதும் இந்த நோக்கத்தைக் குறித்து விழிப்புணர்வோடு இருந்து அதை நிறைவேற்ற வேண்டும். இதில் அவர் தன்னைத்தானே ஈடுபடுத்திக் கொண்டு, அதை நிறைவேற்றுவதற்கு அயராது பாடுபட வேண்டும். ஆகவே, பணியாளர் செயலாக்கம் இல்லாத சிந்தனையில் நிறைவு கொள்ள மாட்டார். அவ்வாறெனில் அதை உறக்க நிலை தத்துவம் (Hyprotic Philosophy) என்றோ அல்லது அலங்கார தத்துவம் (Fanciful Philosophy) என்றோதான் கருதுவார். அதுபோலவே குறிக்கோள் இல்லாத சிந்தனையிலும் செயலிலும் அவர் நிறைவு அடைய மாட்டார். இறுதியில் அக்கறை இன்மையிலும், அவநம்பிக்கையிலும் முடிவுறும் சுழற்சி இயக்கமாகவே (Spiral Motion) அதை கருதுவார். இதற்கு மாறாக, அழைப்புப் பணியாளர் சிந்தனையுடன் செயலை இணைப்பதை வலியுறுத்த வேண்டும். இவ்விரண்டையும் ஒரு குறிப்பிட்ட லட்சியத்திற்காக இணைத்து செயல்படுத்த வேண்டும். அது நடைமுறைக்கு ஏற்றாற்போலவும் குறிக்கோளை நிறைவேற்றக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

மக்கமா நகரத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமையை மக்களிடம் எடுத்துச் சென்றார்கள். அங்குள்ள சமூகம் இஸ்லாத்தை செயலாக்க அமைப்பாக (System) ஏற்றுக் கொள்ளாது என்பதை உணர்ந்தபொழுது மதினாவின் சமூகத்தை தயார்படுத்தினார்கள். மதினாவில் அவர்கள்(ஸல்) இஸ்லாமிய அரசை நிறுவினார்கள். அதன் மூலம் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தினார்கள். இஸ்லாத்தின் செய்தியை மக்களிடம் எடுத்துச் சென்றார்கள். அவர்களுக்கு பின்னர் அதை எடுத்துச் செல்லும் விதமாக இஸ்லாமிய உம்மாவை தயார்படுத்தினார்கள். இறைத்தூதர்(ஸல்) காட்டித்தந்த அதே வழியில் இந்த பணியினை முஸ்லிம்கள் தொடர்ந்தார்கள். ஆகவே கிலாஃபா அரசு இல்லாத இந்த சூழலில், இஸ்லாமிய அழைப்புப் பணியினை மேற்கொள்ளும்போது இஸ்லாத்தை நோக்கி மக்களை அழைப்பது, இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தி, அதன் செய்தியை உலகெங்கிலும் எடுத்துச் செல்லும் இஸ்லாமிய அரசை நிறுவுவதற்கு செயலாற்றுவதன் மூலம் மக்களை இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு திரும்பச் செய்வது ஆகிய பணிகள் அதில் அடங்கியிருக்க வேண்டும். இதன்மூலம், இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு திரும்புவதற்காக உம்மாவில் மேற்கொள்ளப்படும் அழைப்புப்பணி உலகம் முழுவதையும் இஸ்லாத்தின்பால் அழைக்கும் இஸ்லாமிய அரசின் அழைப்புப்பணியாக மாற்றம் பெறும். மேலும் இஸ்லாமிய உலகில் மட்டும் மேற்கொள்ளப்படும் அழைப்புப்பணி (Local Da’wah) அகிலம் அனைத்திற்கும் உரிய பொதுவான அழைப்புப்பணியாக மாற்றம் பெறும்.

தற்சமயம் நிலைபெற்றுள்ள அடிப்படை கோட்பாடுகளை (Doctrines- Aqeedah) சரிபடுத்துவது, அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள தொடர்பை பலப்படுத்துவது ஆகியவற்றை தெளிவாக உள்ளடக்கியதாக இஸ்லாமிய அழைப்புப்பணி இருக்க வேண்டும். மேலும் எல்லா துறைகளிலும் அழைப்புப்பணி பிரகாசமாக மேற்கொள்ளப்பட்டு மக்களின் அனைத்து விவகாரங்களுக்கும் தீர்வுகள் வழங்கப்படும் விதமாக இருக்க வேண்டும். எனவேதான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் மக்கள் எதிர்நோக்கிய அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும், அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கின்ற ஒவ்வொரு வினாவுக்கும் முழுமையாக விடையளிக்கும்படியாக திருமறை வசனங்களை இறக்கிக்கொண்டேயிருந்தான். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கீழ்கண்ட இறைவசனங்களை மக்காவில் ஓதுபவர்களாக இருந்தார்கள்.

அபூலஹபின் இருகரங்களும் நாசமடைவதாக. (அல் மஸ்த்:1)

நிச்சயமாக இது கண்ணியமிக்க ஒரு தூதரின் வார்த்தையாகும். இது கவிஞனின் வார்த்தையல்ல. நீங்கள் சொற்பமாகவே விசுவாசம் கொள்கிறீர்கள். (அல் ஹாக்க:40,41)
(அளவிலும், நிறுவையிலும்) மோசடி செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து வாங்கும் போது முழு அளவை வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் மனிதர்களுக்கு கொடுக்கும் போது அளவையிலும், நிறுவையிலும் (குறைபதன்மூலம்) நஷ்டம் ஏற்படுத்துகிறார்கள். (அல் முதாஃப்பிஃபின்:1,3)
விசுவாசம் கொண்டு நற்கருமம் செய்பவர்களுக்கும் சுவனம் உண்டு. அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அதுதான் மகத்தான் வெற்றியாகும். (அல் புருஜ்:11)
மேலும் மதினாவில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்வரும் வசனங்களை ஓதிக்காட்டினார்கள்.

தொழுகையை நிலை நிறுத்துங்கள். ஸகாத்தை கொடுத்து வாருங்கள். (அல்பகரா:43)
கனத்தவர்களாகவோ, இலேசானவர்களாகவோ புறப்படுங்கள். உங்கள் செல்வங்களைக் கொண்டும் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் போராடுங்கள். (அத்தவ்பா:41)

மேலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்வரும் வசனங்களை ஓதினார்கள்.

விசுவாசம் கொண்டவர்களே! உங்களுக்கிடையில் குறிப்பிட்ட தவணைக்கு கடன் கொடுக்கும் சமயத்தில் அதை எழுத்து மூலம் பதிவு செய்து கொள்ளுங்கள். (அல் பகரா:282)

உங்கள் மத்தியிலுள்ள செல்வந்தர்களுக்கு இடையில் மட்டும் செல்வம் சுற்றிக் கொண்டிருக்காதிருக்கும் பொருட்டு...(அல்ஹஷர்:7)

நரகத்தின் தோழமையைக் கொண்டவர்களும் சுவனத்தின் தோழமையை கொண்டவர்களும் சமமானவர்கள் அல்ல. சுவனத்தின் தோழமையை பெற்றுக் கொண்டவர்களெ வெற்றியாளர்கள். (அல் ஹஷ்ர்:20)

இவ்வாறு மனிதனை மனிதன் என்ற அந்தஸ்த்தில் வைத்து, அவனைப் பற்றி முழுமையாக இஸ்லாம் உரையாடுகிறது. அதன் மூலம் அவனிடம் முழுமையான மற்றும் தீவிரமான மாற்றத்தை அது கொண்டு வருகிறது. இதனடிப்படையில் இஸ்லாமிய அழைப்புப்பணியின் வெற்றி என்பது, மக்கள் தங்கள் அன்றாட வாழ்வியல் விவகாரங்களை தீர்த்துக் கொள்ளும் பொருட்டு இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பை (System of Islam - Nidam al Islam) அவர்களிடம் எடுத்துச் செல்வதிலேயே தங்கியிருக்கிறது. எனவே இந்த அழைப்புப்பணியை வாழ்வின் இலக்காகக்கொண்டு அழைப்புப்பணியாளர்கள் தமது பயணத்தை மிக மிக முனைப்புடன் தொடரவேண்டும்.

குறையற்ற வகையிலும், நிறைவாகவும், முழுமையாகவும் பணியாற்ற வேண்டும் என்ற உந்துதலை தங்களிடத்தில் ஏற்படுத்திக் கொள்ளாத வரையில் அழைப்புப் பணியாளர்கள் தீவிரமான முறையில் பணியாற்றி தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவது என்பது சாத்தியம் இல்லாத விஷயமாகும். நிரந்தரமாக சத்தியத்தை தேடுபவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். எந்த அந்நிய சிந்தனையிலிருந்தும் தங்களை பரிசுத்தப்படுத்திக் கொள்ளும் விதமாக தொடர்ந்து சத்தியத்தை தேடுபவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். அவர்களிடத்தில் தொற்றிக் கொள்ள வாய்ப்புள்ள அந்நிய சிந்தனைகளிலிருந்தும் அவற்றிற்கு நெருக்கமாக உள்ள சிந்தனைகளிலிருந்தும் அவர்கள் தங்களை தூரமாக்கிக் கொள்ள வேண்டும். இத்தகைய நடவடிக்கை தாங்கள் சுமந்து செல்லும் சிந்தனையை பரிசுத்தமாகவும் தெளிவாகவும் வைத்துக் கொள்ள உதவிடும். சிந்தனையில் பரிசுத்தம் (Purity in Thought), அதில் தெளிவு (Clarity in Thought) ஆகிய இரண்டு மட்டும்தான் இஸ்லாத்தின் வெற்றிக்கும், தொடர்ந்து அந்த வெற்றியை நிலைபடுத்துவதற்கும் உத்திரவாதம் அளிக்கக்கூடியதாகும்.
அல்லாஹ்(சுபு)விடமிருந்து வந்த கட்டளையாக எண்ணி இந்த கடமையை அழைப்புப் பணியாளர்கள் நிறைவேற்ற வேண்டும். அல்லாஹ்(சுபு)வின் உவப்பை மாத்திரம் எதிர்பார்த்தவர்களாக ஆனந்தத்துடனும், மிகுந்த உற்சாகத்துடனும் இந்த பணியினை அவர்கள் மேற்கொள்ள வேண்டும். மக்களிடமிருந்து கிடைக்கும் பாராட்டையோ அல்லது வேறு எந்த உலக இலாபங்களையோ நிச்சயமாக அவர்கள் தேடக்கூடாது. அல்லாஹ்(சுபு)வின் உவப்பை பெறுவதற்கு முயற்சிப்பதைத் தவிர வேறு எதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது.

இறை சட்டங்கள் - தவ்ஹீதின் ஒரு அங்கம்


இறை சட்டங்கள் - தவ்ஹீதின் ஒரு அங்கம்
إن الحكم إلا لله அல்லாஹ் தான் சட்டத்தை இயற்றுகின்றவன். அந்த அல்லாஹ்வினுடைய சட்டங்களே எங்களை ஆள வேண்டும் என்ற அகீதாவைச் சொல்லுங்கள். இதனை யாரும் அழுத்திச் சொன்னதாகத் தெரியவில்லை. இது அகீதாவிலே ஒரு விசயம். தவ்ஹீதிலே ஒரு முக்கியமான அங்கம். இதனை யாரும் மறைக்க முடியாது. மறுக்க முடியாது. இதைப் பற்றிப் பேசாமல் தவ்ஹீதைப் பற்றிப் பேச முடியாது சகோதரர்களே!! எப்படி அல்லாஹ் வணங்கப்படக் கூடியவனாக இருக்கின்றானோ! எப்படி அவன் உதவி செய்யக் கூடியவனாக இருக்கின்றானோ! அதே மாதிரி அல்லாஹ்! எங்களை வழிநடத்தக் கூடியவன். எங்களுக்கு சட்டங்களை வகுத்துத் தரக் கூடியவன். அவனது சட்டம் எல்லாக் காலத்திற்கும் பொருத்தமானது. எந்தக் காலத்திற்கும் ஒவ்வாதது அல்ல என்ற அந்தக் கருத்தை ஓங்கி நம்முடைய அழைப்பு பணியிலே முழங்குவோம்.ஏன் அதனை நாம் அழுத்திப் பேச வேண்டும் என்றால், அது தவ்ஹீதிலே ஒரு பகுதி. யூசுப் (அலை) அவர்களது வரலாற்றிலே நாம் இதனைப் பார்க்கின்றோம், சூரா யூசுப் - லே இறைவன் கூறுகின்றான் :إن الحكم إلا للهசட்டங்களை இயற்றுகின்ற அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உரியது. அந்த சட்டம் வேறு மக்களுடைய கைகளிலே இருப்பதால் இந்த உலகத்திலே என்ன நடக்கின்றது என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். ஹலால் ஹராமாக்கப்பட்டுள்ளது. ஹராம் ஹலாலாக்கப்பட்டுள்ளது. அதனை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொள்ளக் கூடிய மக்களாக நாம் இருக்கின்றோமே!! நிச்சயமாக இந்தக் கருத்துக்களை நாம் அனைத்து மக்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். அவற்றை நடைமுறைப்படுத்துவது இரண்டாவது விசயம். முதலில் கருத்து மாற்றம் அனைத்து மக்களிடமும் உருவாக வேண்டும். சிந்தனை மாற்றம் வர வேண்டும்.கருத்துப் புரட்சியை முடுக்கி விட வேண்டும். இந்தக் கருத்து எப்படிப் பேசப்பட வேண்டும், எப்படித் தாக்கம் விளைவிக்க வேண்டும் என்றால், தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது, இன்றைய இளைஞர்கள் கிரிக்கெட்டைப் பற்றிப் பேசிக் கொண்டு போகின்றார்கள் அல்லவா?! ஸலாம் சொன்னால் பதில் சொல்வதற்குக் கூட அவர்களுக்கு முடியாமல், அந்தக் கிரிக்கெட்டைப் பற்றிப் பேசிக் கொண்டு செல்கின்றார்கள் அல்லவா? அந்தளவுக்கு அந்தக் கிரிக்கெட் அவர்களது மூளையைத் தாக்கி இருக்கின்றது. அந்த மூளையை அந்த அளவு சலவை செய்திருக்கின்றதல்லவா? அந்த அளவுக்கு இந்த அடிப்படையான விசயங்கள் இந்த உலக மக்களிடையே பேசப்பட வைக்க வேண்டும். ஏன்? நம்மால் முடியவில்லை. அது தான் நம்மிடையே நிலவும் சில சூழ்நிலைகளினால் தாக்கமுற்று விடுகின்றோம். நம்முடைய அழைப்புப் பணியை மறந்து விடுகின்றோம்.சமூகத்திலே மணமாகாத குமரிப் பெண்களுடைய விசயத்தைப் பற்றிப் பேசப்படும் பொழுது, எங்களது அடிப்படையான அழைப்புப் பணியை மறந்து விடுகின்றோம். வட்டியைப் பற்றிப் பேசும் பொழுது, அதற்கு அழுத்தம் கொடுத்து விட்டு, அடிப்படையான அகீதாவை மறந்து விடுகின்றோம். சமூகப் பிரச்னைகள் என்று வரும்பொழுது அதனைத் தீர்க்க ஓடுகின்றோம். அதனடியாகப் பின்பற்ற வேண்டிய அகீதாவை மறந்து விடுகின்றோம். அழைப்புப் பணியை மறந்து விடுகின்றோம். சகோதரர்களே! இது அழைப்புப் பணியில் ஈடுபடுகின்றவர்களுக்கு அழகல்ல! உண்மையிலேயே அழைப்பாளர்கள் எந்தநிலையிலும் தங்களுடைய அடிப்படை விசயங்களிலிருந்து மாறிவிடக் கூடாது.அவர்கள் சமூக மாற்றத்தைக் கண்ணால் காணலாம். அல்லது காணாமலும் போகலாம்.ஷஹீத் செய்யித் குதுப் (ரஹ்) அவர்கள் தன்னுடைய திருமறைக்கு விளக்கவுரையாக எழுதிய திருக்குர்ஆன் நிழலிலே என்னும் தப்ஸீரின் முன்னுரையிலே கூறுகின்றார்கள் - ஒரு அழைப்பாளன் தன்னுடைய ஆயுளால் இந்த அழைப்புப் பணியை வரையறுக்க முடியாது. எனது ஆயுளுக்குள் இஸ்லாமியக் கிலாபத்தைக் கண்டே ஆக வேண்டும் பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆசை வேண்டாம் என்று சொல்லவில்லை. அந்த ஆசை அனைவருக்கும் இருக்கத் தான் வேண்டும். அதனை நான் என்னுடைய வாழ்நாளிலே கண்டு தான் ஆக வேண்டும். இல்லை என்றால் அவற்றை நான் குறுக்கு வழியிலே கண்டு கொள்வேன் என்று நினைப்பதும், அதன் அடிப்படையில் செயல்படுவதும் கூடாது. எனவே இஸ்லாமியக் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த அடித்தளத்தைப் போடுவோம்.அந்த சுமையா, யாஸிர் தம்பதிகள் அவ்வாறு நினைத்தார்களா? இஸ்லாமிய ஆட்சியைக் கண்டார்களா? யாஸிர் (ரலி) அவர்களுக்கு அந்த இஸ்லாமிய ஆட்சியைக் காண முடிந்ததா? சகோதரர்களே! பத்ரிலும், உஹதிலும், அகழ் யுத்தத்திலும், ஷஹீதாகிப் போனார்களே! எத்தனையோ உத்தம ஸஹாபாக்கள்!! அவர்களெல்லாம் இஸ்லாமிய ஆட்சியைக் கண்டார்களா? சகோதரர்களே!! ஆனால், அவர்கள் அனைவரும் இந்த அடிப்படையான அகிதாவிலே நின்று கொண்டு. தங்களது ஆயுளிலே இந்த இஸ்லாமிய ஆட்சிக்கான, அந்த இஸ்லாமிய ஆட்சி உருவாகுவதற்கான தங்களது பங்களிப்பைக் கொடுத்து விட்டுச் சென்றார்கள். அத்தகைய பங்களிப்பை இந்த அழைப்புப் பணிக்கு வழங்கி விட்டுச் செல்வோம்.எனவே சகோதரர்களே! அரசியல் ரீதியாக, ஒழுக்க ரீதியாக, பொருளாதார ரீதியாக, சமூக சேவை ரீதியாக, மாற்றம் வேண்டும் என்று யோசிக்கின்றவர்கள், எமது சமூகத்தைப் பீடித்திருக்கின்ற ஒழுக்கச் சீர்கேடுகள், நூதனங்கள், பித்அத்துக்களை ஒழிக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் - பித்அத்துக்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அதே போன்று பொருளாதார மாற்றம் வேண்டும். அதனையும் நாங்கள் விரும்புகின்றோம். ஒழுக்கம் மேம்பட வேண்டும். அதனையும் நாங்கள் விரும்புகின்றோம். சமூகத்தில் ஏழை மக்களுடைய நிலமைகள், அவை தரமுயர்த்தப்பட வேண்டும். விரும்புகின்றோம். ஆனால், இதனை இந்த அடிப்படையை மறந்து விட்டு, அகீதாவை மறந்து விட்டு மனம் போன போக்கில் செல்வதையும், அகீதாவைப் புறக்கணித்து விட்டு நாங்களும் இஸ்லாமிய அழைப்புப் பணியில் தான் ஈடுபடுகின்றோம் என்று கூறப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.அழைப்புப் பணியில் ஈடுபடுகின்ற நாம் ஒரு இறுதியான முடிவுக்கு வர வேண்டும். ஒரு உறுதியான முடிவுக்கு வர வேண்டும். அந்தத் தீர்மானத்திலே நாங்கள் இறுதி வரைக்கும் தடம் மாறாமல் இருக்க வேண்டும். அது முக்கியம்.அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களிடத்தில் ஒரு ஸஹாபி வந்து சொன்னார்கள். யா ராசூலுல்லாஹ்!! எனக்கு இஸ்லாத்தைப் பற்றி ஒரு விசயத்தைச் சொல்லித் தாருங்கள். அந்த விசயத்தைப் பற்றி இனி யாரிடமும் நான் கேட்டுத் தெரிந்து கொள்ளக் கூடாத, அந்த அவசியத்தை ஏற்படுத்தாத அளவில் அந்த விசயத்தைப் பற்றி எனக்குச் சொல்லித் தாருங்கள் என்று கேட்கின்றார்.قل أمنت بالله ثم الستقمஅல்லாஹ்வை ஈமான் கொண்டேன் என்று சொல். அதிலே உறுதியாக இருந்து கொள் என்று கூறுகின்றார்கள்.அதாவது அகீதாவிலே உறுதியாக இருந்து கொள். அதனை விட்டும் தடம் புரண்டு விடாதே என்று கூறுகின்றார்கள்.உனது அழைப்புப் பணியிலே எத்தனை பிரச்னை வந்தாலும், சமூகத் தீமைகள் குறுக்கிட்டாலும், அந்த அஸ்த்திவாரத்தின் மீது நின்று கொண்டு யோசி! சிந்தி! என்று தான் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.இத்தகைய மனிதர்களுக்குத் தான் அந்த மலக்குமார்களின் சுபச் செய்தி இருக்கின்றது. நிச்சயமாக அல்லாஹ் தான் எங்கள் ரப்பென்று கூறி, அதிலே உறுதியாக இருந்தார்கள் அல்லவா! அவர்கள் மரணிக்கின்ற வேளையில் மலக்குகள் இறங்கி, நீங்கள் பயப்பட வேண்டாம். நீங்கள் துக்கப்படவும் வேண்டாம். சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் பெற்றுக் கொள்ளுங்கள். உலகத்திலும், மறுமையிலும் நாங்கள் உங்களுக்கு நேசர்களாக இருக்கின்றோம். உங்களுக்குத் தேவையானவைகள் எல்லாம் அந்த சொர்க்கத்திலிருந்து, அந்த அல்லாஹ்வின் விருந்தாக உங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும். உங்களுக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கும் என்று அந்த மலக்குகள் இத்தகையவர்களுக்கு சுபச் செய்தியைத் தெரிவிக்கின்றார்கள்.

ரமதான்-வெற்றியின் மாதம்!


புகழனைத்தும் அகில உலகங்கள் அனைத்தின் அதிபதியாகிய அல்லாவிற்கே உறித்தாகுக. அவனே தனது அருள்மறையில் விவரிக்கின்றான்..

உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). (2:185)

ரமதான் எனும் இப்புனித மாதத்தில் அல்லாஹ்(சுபு) தனது படைப்பினங்களை சோதனைக்கு ஆட்படுத்தி தனது அருட்கொடையைப்பெற ஒரு வாய்ப்பினை வழங்குகின்றான். முஸ்லிம்களின் ஈமானும் இஸ்லாத்தின் மீதான ஈடுபாடும் ஒரே தலைமையின் கீழ் போர்க்களத்தில் எவ்வாறு வெளிப்பட்டது என்பதும் இம்மாதத்தின் ஒரு முக்கிய அம்சமாகும்.

நபிகளார்(ஸல்) அவர்களும் சஹாபா பெருமக்களும் கூட்டாக ஒன்பது ரமதான்களை கடந்து வந்தனர். அக்காலங்களில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன.

அல்லாஹ்(சுபு)ன் கட்டளைகளை உயர்வாகப்போற்றி அதனை மெய்ப்பிக்கப் பாடுபடுவதற்கான மும்மாதிரியாக அவை விளங்குகின்றன. அல்லாஹ்(சுபு)வின் பாதையில் தியாகம் செய்வதற்கும், அவனது கட்டளைகட்கு கீழ்படிந்து அவைகளை மெய்ப்பிக்கப் பாடுபடுவதற்கும் சிறந்த உதாரணங்களாக அச்சம்பவங்கள் திகழ்ந்தன.

மதீனாவிலிருந்த பொய்யர்கள் முஸ்லிம்களின் ஒற்றுமையை குலைப்பதற்கு எண்ணி அல்திரார் எனும் ஒரு மசூதியை கட்டினர். ரமதான் மாதத்தில் தபூக்கிலிருந்து திரும்பிய நபிகளார்(ஸல்) அதனை உடனடியாக இடித்துவிடுமாறு உத்தரவிட்டனர்.

ரமதான் 17ம்நாள் 2ம் ஹிஜிரி அல்லாஹ்(சுபு) பத்ர் போரின் போது முஸ்லிம்கட்குசிறந்த ஒரு வெற்றியை அளித்தான்.

'பத்ர்" போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான். ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.(நபியே!) முஃமின்களிடம் நீர் கூறினீர்: 'உங்கள் ரப்பு (வானிலிருந்து) இறக்கப்பட்டமூவாயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப்போதாதா?" என்று.(ஆல் இம்ரான் 3:123 124)

இஸ்லாமிய வரலாற்றில் இது முதல் போரும் முதல் வெற்றியுமாகும். 313 படைவீரர்கள்2 குதிரைகள் 70 ஒட்டகங்களுடன் நபிகளார் தலைமையில் மதீனாவினின்று சென்றஇஸ்லாமிய படையானது 1000 வீரர்கள் 100 குதிரைகள் 700 ஒட்டகங்களுடன் மக்காவினின்றும்அபு ஜஹல் தலைமையில் வந்த படையை வீழ்த்தியது. அப்போரின் போது இறைவன்நபிகளாருக்கு(ஸல்) வஹீ மூலம் அறிவிக்கின்றான்.

உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது: '(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்" என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான். (8:9)

இதனைக் கேட்ட நபிகளார்(ஸல்) மகிழ்சியுற்று 'ஓ அபூபக்கர்! அல்லாவின் வெற்றி நம்மை வெகுவிரைவில் வந்தடையும். அல்லாவின் மீதாக ஜிப்ரயீல் குதிரையில் வருவதை என்னால் காணமுடிகிறது" என்றனர். இதனைப்போன்றே யூத அரசுக்கெதிரான போரில் வெற்றி பெருவோம் என்பது மட்டுமன்றி இஸ்லாத்தின் ஆதிக்கம் உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் என்பதையும் பல ஹதீத்கள் விளக்குகின்றன. அதற்காக நாம் துஆ செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் முஸ்லிம்கள் அனைவரும் இணைந்து ஒரே உம்மத்தாக நின்று ஒரே இஸ்லாமிய அரசினை நிலைநாட்டி அதன்மூலம் அவ்வெற்றிகளுக்காக பாடுபடவேண்டும் என்பது இஸ்லாம் நம்மீது விதித்த கடமையாகும்.

பத்ர் போரின் வெற்றி முஸ்லிம்களின் இறைநம்பிக்கையை வலுப்படுத்தி மதினாவில் ஒரு வலுவான அரசினை நிலைநாட்டி அதனை அரசியல், ஆன்மீக, ராணுவ மையமாக ஆக்கியது.
ஆறாம் ஹிஜிரி ஆண்டில் வாதி அல் குரா எனுமிடத்தின் அரசியாய் திகழ்ந்தஃபாத்திமா பின் ராபியாவை எதிர்கொள்ள சயித் இப்ன் ஹரிதா அனுப்பப்பட்டார். அதற்குமுன்பு ஒருமுறை அவ்வரசி சயித் தலைமை தாங்கிச்சென்ற குழுமத்தை தாக்கி அவர்களின்பொருட்களை அபகரித்தார். ஃபாத்திமா பின் ராபியா அரேபியப் பகுதிகளில் மிகவும் காவல்மிகுந்த அரசியாகக் கருதப்பட்டார். மேலும் அவர் வெளிப்படையாக இஸ்லாத்தைஎதிர்ப்பவராகவும் அறியப்பட்டார். அவர் ரமதான் மாதத்தில் நடைபெற்ற முஸ்லிம்கட்குஎதிரான போரில் கொல்லப்பட்டார்.

எட்டாம் ஹிஜிரி ரமதானில் ஹ_தைபியா ஒப்பந்தம் மீறப்பட்டதனால் இஸ்லாமியப்படையானது பைசன்டைன் படையை எதிர்த்துப் போரிட்டது.
அரேபிய தீபகற்பத்தில் இறைமறுப்பை அடியோடு அழிக்க எண்ணிய நபிகளார்(ஸல்) ரமதான் மாதத்தில் மக்கா நகரை வெற்றி கொண்டனர். இது இஸ்லாமிய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இதன் பிறகே இஸ்லாம் அரேபியாவில் வலுவாக வேறு}ண்றியது. அச்சமயம் மக்காவின் தொழுவுருவங்களை

அழித்தபிறகு, அரேபியாவின் மற்ற பகுதிகளில் சிறப்பானதாகக் கருதப்பட்ட அல்-லாத், மனாத், சுவா போன்ற தெய்வவுருவங்களும் அழிக்கப்பட்டன.

இவ்வாறாக ரமதான் மாதம் நபிகளார்(ஸல்) அவர்களின் காலத்தில் பல வெற்றிகளைக் கொண்டதாக இருந்தது. நல்லவற்றை ஏற்று தீமையை ஒதுக்கித்தள்ளி தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் அல்லாஹ்(சுபு)வின் வார்த்தைகளை மெய்ப்படுத்திஇஸ்லாமை ஒரு மேன்மையான தீனாக நடைமுறைப்படுத்த விழைந்தனர். நபிகளாரின்(ஸல்) மறைவிற்குப்பிறகு முஸ்லிம்கள் அந்த சுன்னாவை தொடர்ந்தனர். இவ்வாறாகரமதான் மாதம் பல முக்கிய நிகழ்வுகளை தம்மிடத்தே கொண்டதாக இருந்தது.

ஹிஜ்ராவின் 92 ஆண்டுகட்குப்பிறகு ரமதான் மாதத்தில் வடஆப்பிரிக்காவின் உமையத் ஆளுநரான மூசா இப்ன் நுசைர் என்பவர் தன்; வீரமிக்க தளபதியான தாரிக் இப்ன் சையத் உடன் சேர்ந்து ஸ்பெயின், சிசிலி மற்றும் ஃபிரான்சின் ஒரு பகுதியை இஸ்லாமிய அரசுடன்இணைத்தனர். இது அப்பகுதிகளின்(அல்-அந்தலுஸ்) பொற்காலத்தின் தொடக்கமாயிற்று.இங்கு முஸ்லிம்கள் 700 ஆண்டுகட்கும் மேலாக ஆண்டனர்.

682ம் ஹிஜிரி சலாஹ_தீன் அல் அய்யூபி சிலுவைப்போர்ப் படைவீரர்களை சிரியாவினின்றும் விரட்டியடித்து ஆக்கிரமிப்பிலிருந்த அனைத்துப் பகுதிகளையும் ரமதான் மாதத்தில் விடுவித்தார்.

ஹிஜிரி ஏழாம் நு}ற்றாண்டில் மங்கோலியர்கள் ஆசியா முழுவதும் தமது ஆதிக்கத்தை பரப்பினர். செங்கிஸ்கான் தன்னை மனிதகுலத்தின் பாவத்திற்காக தண்டிக்கும் கடவுளின் சாட்டை எனக் கருதினான். 617 ஹிஜிரியில் சமர்க்கண்ட், ரே, ஹம்தான் போன்ற பகுதிகள் அவனின் வாள் வீச்சிற்கு 70,000 மக்கட்கும் மேலானோர் கொல்லப்பட்டனர்.656ஹிஜிரி யில் செங்கிஸ்கானின் பேரனான ஹ_லாகு அப்பேரழிவினைத் தொடர்ந்தான்.இஸ்லாமிய அரசின் தலைநகரான பாக்தாதும் இதிலிருந்து தப்பவில்லை. இப்படையெடுப்பில்1,800,000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கிறிஸ்தவர்களும்முஸ்லிம்களும் சொல்லொணாத் துயரங்கட்கு ஆட்படுத்தப்பட்டனர். மசூதிகளில் மதுபானம்தெளிக்கப்பட்டது. தொழுகைக்கு அதான்(பாங்கு) சொல்வதும் தடைசெய்யப்பட்டது.

இத்தகைய கொடுமைகட்கு மத்தியில் இஸ்லாமிய பகுதிகள் அனைத்துமே அதே நிலைக்கு ஆளாகிவிடலாம் என்ற நிலையில் ஸைபுதீன் குத்ஸ் என்பவர் முஸ்லிம் படையை ஒருங்கிணைத்து ஐன் ஜலுத் எனுமிடத்தில் 26ம் ரமதான் 658ல் மங்கோலியப் படையை வீழ்;த்தினார். இறைவனது உதவியால் கிட்டிய இவ்வெற்றியினால் முழு உலகும் நிம்மதிப்பெருமூச்சுவிட்டது.

இதுவே ரமதான் மாதம் தரும் ஊக்கமாகும். இந்த ஊக்கத்தின் காரணமாகவே நமது முன்னோர்கள் சவாலாகத்தோன்றிய செயல்களையும் செவ்வெனே செய்து முடித்தனர். பகலை போர்க்களத்திலும், இரவை இறைவனிடம் இறைஞ்சியும் அவர்கள் தமது ரமதானை கழித்தனர்.

இன்றைய காலகட்டத்தில் இஸ்லாமிய உலகமானது அன்னிய ஆக்கிரமிப்புகளாலும், தாக்குதல்களாலும், பரவலான ஊழல் மிக்க கொடுங்கோல் ஆட்சியாலும் வியாபிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கட்கு எதிரான போரானது முழு வீச்சில் நடைபெறுகிறது. ஆகவே இறைவனின் விசுவாசிகளே எழுச்சி கொள்வீராக. நபிகளாரும்(ஸல்), சஹாபா பெருமக்களும், தாரிக் இப்ன் சையித், குத்து}ஸ், சலாஹ_தீன் போன்றோரும் காட்டிய வழியில் சென்று வெற்றி காணப்பாடுபடுவீர். இறைமறுப்பாளர்கள் அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் இருந்து, இறைவிசுவாசிகளிடம் அன்புடன் நடந்து முழுமையான நோன்பு நோற்று ரமதானில் இறையருளை பெருவீராக.

அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்(சுபு), கிலாஃபாவை மறுபடியும் நிலைநாட்டி இஸ்லாத்தை உலகெங்கும் பரவச்செய்யும் தலைமுறையில் நம்மை ஆக்கியருள்வானாக. அதற்கான முறையான அடித்தளத்தை அமைக்க நமக்கு ஊக்கமும் சக்தியும் அளிப்பானாக! ஆமீன்!

Friday, July 22, 2011

அல்லாஹ்வின் தீனை அனைத்து தீன்களுக்கும் மேலானதாக மிகைக்கச் செய்தல்

هُوَ ٱلَّذِىٓ أَرْسَلَ رَسُولَهُۥ بِٱلْهُدَىٰ وَدِينِ ٱلْحَقِّ لِيُظْهِرَهُۥ عَلَى ٱلدِّينِ كُلِّهِۦ وَلَوْ كَرِهَ ٱلْمُشْرِكُونَ


அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.)

(9:33)

உலகில் உள்ள அனைத்து கொள்கைகள், கோட்பாடுகள், மார்க்கங்கள், மதங்கள், வழிமுறைகள் என்ன பெயர் வைத்தாலும் சரி, மக்களால் பின்பற்றப் படுபவை இவை அனைத்தையும் நீக்கி, வழித்து துடைத்து விட்டு, இஸ்லாம் எனும் அல்லாஹ் பொருந்திகொண்ட மார்க்கத்தை, வழிமுறையை நிலை நாட்டுவதே நபி (ஸல்) அவர்களின் பணி என்று அல்லாஹ் கூறுகிறான்.

இங்கு 'மார்க்கம்' - தீன் எனும் வார்த்தையை வெறும் வணக்கமாக, சாஷ்டாங்கம் செய்வதையும், பூஜிப்பதையும், வழிபடுவதையும் தான் குறிக்கும் என்று யாராவது அர்த்தப் படுத்தினால், ஒன்று அவருக்கு சரியான அரபு மொழி பற்றிய அறிவில்லை, அடுத்து, அல்லாஹ்வின் பரந்து விரிந்த சக்தியின் மீதும், அவனது தீன் (உலகின், மறுமையின்) அனைத்துக்கும் வழிகாட்டி என்பதிலும் நம்பிக்கையில்லை என்றுதான் பொருள்.

குர்ஆனுக்கு விளக்கம் தேடும் போது, அந்த குர்ஆனிலேயே விளக்கம் (வேறு இடத்தில்) இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். உதாரணமாக, வுழு முறிவது சம்பந்தமாக வரும் 'மஸ்ஸ' எனும் சொல்லுக்கு இரு கருத்துக்கள் இருக்கின்றன. ஒன்று தொடுதல், மற்றது இச்சையோடு மனைவியை / ஒரு பெண்ணை தொடுதல். குர்ஆன் பெண்ணைத் தொட்டால் வுழு செய்யுமாறு சொல்கிறது. இங்குள்ள தொடுதல் என்பதை சில அறிஞர் வெறுமனே தொடுதல் என்று விளங்கினர். சிலர், அது இச்சையோடு (உறவு கொள்ளும் நோக்கோடு) தொடுதல் என்று விளங்கினார்கள்.

இரண்டாமவர்கள் சொன்ன விளக்கம், குர்ஆனின் பிறிதொரு இடத்தில், அதுவும் பெண்ணை தொடும் விடயமாக அல்லாஹ் பாவித்துள்ள அதே சொல், இச்சையோடு உறவு கொள்ளும் நோக்கோடு தொடுதல் எனும் கருத்திலேயே பாவிக்கப் பட்டுள்ளது என்பதாகும். அதே சொல், மர்யம் (அலை) அவர்கள் கேட்பதாக வருகிறது, " நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்") என்று கூறினார்" -(19:19)

இவ்வாறு வானவர் கூறிய போது, அவர்,

" அதற்கு அவர் (மர்யம்), "எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?" என்று கூறினார். " (10:20)

மேற்கண்ட வசனத்தில், பாவித்த சொல்லும் அதே சொல் தான். எனவே, ஒரு ஆடவன் இச்சையோடு தொடுவதையே இது தெளிவாக காட்டுகிறது. இதுவே ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்தும் ஆகும். (நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை முத்தமிட்ட பின் தொழுகைக்கு சென்ற ஹதீஸ் பதியப் பட்டுள்ளது இந்த சட்டத் தீர்ப்புக்கு இன்னொரு ஆதாரம் ஆகும்)


இந்தவகையில், நாங்கள் ஆராய எடுத்துள்ள குர்ஆன் வசனத்தில், எல்லா விடயங்களும் தெளிவாக இருக்கின்றன. ஒரே ஒரு சொல் தான் அங்கும் சில மயக்கங்களை ஏற்படுத்துகிறது. அது 'தீன்' என்ற சொல். அதற்கு சிலர் மார்க்கம், மதம் என்று விளக்கம் கொடுப்பதால், இந்த மேலோங்கச்செய்யும் பணி வெறுமனே மார்க்கத்தை மற்ற மார்க்கங்கள், மதங்களை விட மேலோங்கச் செய்ய என்று சுருக்கி விட்டார்கள். எனவே தான் ஏகத்துவத்தை எத்தி வைத்து விட்டால் மட்டும் போதுமானது என்றும் வாதம் செய்கிறார்கள்.

இனி, நான் மேலே சொன்ன அடிப்படையில், அல்லாஹ் தனது குர்ஆனில் இந்த வார்த்தையை எந்த கருத்தில் பாவித்துள்ளான் என்று பார்த்தால், பிரச்சனை தீர்ந்து விடும்.

بِٱلْهُدَىٰ وَدِينِ ٱلْحَقِّ لِيُظْهِرَهُۥ عَلَى ٱلدِّينِ كُلِّهِ

அல் ஹுதா என்றால் நேர்வழி, 'தீனுல் ஹக்' என்றால் சத்திய தீன் - இதை சத்திய மார்க்கம் என்று சொல்லி தமிழில் மொழிபெயர்த்தாலும் அது, அந்த கருத்துச் செறிவு மிக்க வார்த்தையின் சரியான பொருளை ஒரு போதும் தரமாட்டாது. இந்த தீன் எனும் வார்த்தைக்கு அல்லாஹ் கொடுக்கும் கருத்து மிகவும் பரந்தது.

சூரா யுசுபில் அல்லாஹ் யூசுப் நபி (அலை) அவர்கள் தமது தம்பி புன்யாமீனை பிடித்து வைத்துக் கொண்ட சம்பவத்தை கூறுகிறான். அங்கே அங்குள்ள மன்னனது சட்டம் என்ற என்ற விடயத்தை விளக்க 'தீன்' என்ற சொல்லை பாவிக்கிறான். இங்கு தீன் = சட்டம் (அரச சட்டம்)

فِى دِينِ ٱلْمَلِكِ

"ஆகவே அவர் தம் சகோதர(ன் புன்யாமீ)னின் பொதி(யைச் சோதி)க்கு முன்னே, அவர்களுடைய கொதிகளை (சோதிக்க) ஆரம்பித்தார்; பின்பு அதனை தம்(சொந்த) சகோதரனின் பொதியிலிருந்து வெளிப்படுத்தினார்; இவ்வாறாக யூஸுஃபுக்காக நாம் ஓர் உபாயம் செய்து கொடுத்தோம்; அல்லாஹ் நாடினாலன்றி, அவர் தம் சகோதரனை எடுத்துக் கொள்ள அரசரின் சட்டப்படி இயலாதிருந்தார் - நாம் நாடியவர்களின் பதவிகளை நாம் உயர்த்துகின்றோம்; கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்!" (12:76)

இங்கு அல்லாஹ் அதே வார்த்தையை, அதையும் குறிப்பாக ஒரு நபியோடு சம்பந்தப் படுத்தி சொல்லியிருப்பது யாராலும் மறுக்க முடியாத அளவு இந்த சொல்லுக்கான கருத்தை வலுப்படுத்துகிறது.

இப்போது இந்த கருத்தை வைத்துக்கொண்டு இந்த வசனத்தை பாருங்கள்.

"அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் (வழிமுறை, சட்டங்கள் என்பனவற்றுடன்) அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் (வழிமுறைகளையும், சட்டங்களையும்) இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.)

(9:33)

அரபு மொழி புரிபவர்கள் இதை அழகாக விளங்க கூடியதாக இருக்கும் இன்ஷா அல்லாஹ். இன்னுமொரு வசனத்தை பாருங்கள்:

وَقَـٰتِلُوهُمْ حَتَّىٰ لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ ٱلدِّينُ لِلَّـهِ ۖ فَإِنِ ٱنتَهَوْا۟ فَلَا عُدْوَٰنَ إِلَّا عَلَى ٱلظَّـٰلِمِينَ

" ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் (சட்டம், வழிமுறை) என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்;. ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது." (2:193)

இன்னுமொரு வசனத்தில்,

وَلَا تُؤْمِنُوٓا۟ إِلَّا لِمَن تَبِعَ دِينَكُمْ قُلْ إِنَّ ٱلْهُدَىٰ هُدَى ٱللَّـهِ

""உங்கள் மார்க்கத்தைப் (வழிமுறையை, சட்டங்களை) பின்பற்றுவோரைத் தவிர (வேறு எவரையும்) நம்பாதீர்கள்" (என்றும் கூறுகின்றனர். நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக நேர்வழியென்பது அல்லாஹ்வின் வழியே ஆகும்;." (3:73)

எனிவே, 'தீன்' எனும் இந்த சொல் மார்க்கம், வழிமுறை, சட்டங்கள் என்ற மூன்று விடயத்தையும் பிரதானமாக உள்ளடக்கி இருப்பதை குர்ஆனிலேயே நாம் காணலாம். குர்ஆனை விட குர்ஆனுக்கு வேறு யார் விளக்கம் தரக்கூடியவர் இருக்கிறார்கள்?

இந்த தீனை மேலோங்கச் செய்வது என்றால், மார்க்கத்தை (மதம் என்ற கருத்தில் மட்டும்) மேலோங்கசெய்வது மட்டும் தான் என்று நினைப்பது, அதை பரப்புவது, அல்லாஹ் நபிக்கு (ஸல்) கொடுத்த பாரிய பொறுப்பை தட்டிக்கழித்து தனக்கு சாதகமான விடயங்களுக்குள் மட்டும் அல்லாஹ்வின் மார்க்கத்தை சுருக்கிக் கொள்ள முயற்சிப்பதே ஆகும். அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

Thursday, July 14, 2011

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை

அன்பின் வாசகர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும். அல்ஹம்து லில்லாஹ். புனிதமிக்க இஸ்லாமிய மார்க்கத்தில் நாமனைவரும் இணையப் பெற்றிருக்கின்றோம். அவ்வாறு இஸ்லாத்தில் சங்கமித்த எம்மத்தியில் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்யும் பண்பு காணப்பட வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டே நானும் உங்களுடன் இவ்வலையமைப்பில் இணைந்துள்ளேன்.

அப்படியிருக்க எனது உபதேசத்தின் முதற்கட்டமாகஅகீதாவின் பால் அழைப்பு விடுப்பதைத் தேர்ந்தெடுத்துள்ளேன். நிச்சயமாக ஒவ்வொரு முஸ்லிமும் தன்னுடைய இறைவனைப் பற்றியும் அவனது தூதரைப் பற்றியும் அவனது மார்க்கத்தைப் பற்றியும் அறிந்திருப்பது அவசியமாகும். அவற்றை செவ்வனே அறிந்திறாவிட்டால் எம்மை முஸ்லிம் என்று சொல்வதில் அர்த்தற்றுப் போய்விடும். அத்தோடு எம்மை அறியாமலேயே வழிகேட்டில் வாழ்;ந்து கொண்டிருப்போம். அல்லாஹ் இந்நிலையைவிட்டும் எம்மைப் பாதுகாப்பானாக.

எனவே, இதனை விளக்கும் ஒரு சிறு முயற்சியாகவே எனது இந்த வகுப்பை அமைத்துள்ளேன்..

இம்முயற்சி தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்ற நோக்கில் இவ்விணையதளத்தில் பிரசுரிக்க ஆரம்பித்துள்ளோம். எல்லாம் வள்ள அல்லாஹ் எம்மனைவரினதும் பணிகளை ஏற்றும் கூலி தரப்போதுமானவனாக இருக்கின்றான். வஸ்ஸலாம்

———–

முன்னுரை:
எல்லாம் வள்ள நாயன் அல்லாஹூத்தஆலாவைப் போற்றிப் புகழ்ந்தவனாக, இறுதித் தூதர் கண்மணி நாயகம் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் மீதும், அன்னாருடைய குடும்பத்தினர் மீதும், அன்னாருடைய வாழ்க்கை வழிமுறைகளை அப்படியே பின்பற்றிய ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபஉத்தாபயீ;ன்கள் மற்றும் முஃமினான முஸ்லிமான நல்லடியார்கள் அனைவர் மீதும் என்றென்றும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

இவ்வாக்கம் ‘ஷைஹுல் இஸ்லாம் இப்னு தைமியா’ (ரஹ்) அவர்களின் நூலான ‘அல் அகீததுல் வாஸிதிய்யா’ வின் விரிவுரையாகும். இஸ்லாம் பல நம்பிக்கை சார்ந்த அம்சங்களைத் தன்னகத்தே கொண்ட மார்க்கமாகும். அவ்வம்சங்களைப்பற்றி ஒவ்வொரு இஸ்லாமியனும் அறிந்திருப்பது இன்றியமையாத ஒன்றாகும். அதற்கான முயற்சிகள் புத்திஜீவிகளினாலும் அறிஞர்பெருமக்களினாலும் காலத்திற்குக் காலம் மேற்கொள்ளப்படவேண்டும்.

அம்முயற்சிகள் நனிசிறக்கும் உரைகளாகவோ எழுத்துருப்பெற்ற நூட்களாகவோ சஞ்சிகைகளாகவோ மொழிபெயர்ப்புக்களாகவோ இருக்கலாம். இத்தகைய முயற்சிகள் அற்றுப்போகும் பட்சத்தில் எம் சமூகத்தினர் துடுப்பற்ற ஓடம்போலாகிவிடுவர்.

இம்முயற்சியின் ஓரங்கமாக எனது இந்த விளக்கவுரை இருக்கும் என நினைக்கின்றேன். எம் முன்னோர்களில் பலர் உருக்குலைந்த இந்த அகீதாவை தர்க்கவாதிகள் மற்றும் வழிகேடர்கள் கரங்களில் இருந்து மீட்டி எமக்கு தெளிவுபடுத்தித்தந்துள்ளார்கள். புத்திக்கு முதலிடம் கொடுத்து இஸ்லாத்தை அரட்டை அரங்கமாக மாற்றியவர்களின் நாவை அடக்கிய அவர்களின் பணிகள் போற்றத்தக்கவை அல்லாஹ் அவர்களுக்கு அருள்புரியட்டும்.

இத்தகைய செயல் வீரர்கள் பட்டியலில் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் பிரதானமானவராவார். இஸ்லாத்தைத் தூய்மைப்படுத்தும் பணியில் இவர் ஆற்றிய சேவைகள் எண்ணிடங்காது. அவற்றின் அடையாளச் சின்னங்களே எம்மத்தியில் தவலக்கூடிய அவரின் நூட்களாகும். இத்தகைய நூட்கள் அவர் வாழ்ந்த காலத்தில் காணப்பட்ட வழிகேடர்களுக்கு மாத்திரமல்லாது அவை என்றென்றும் வரலாற்றில் தோன்றக்கூடிய பகுத்தறிவுவாதிகளுக்கு சாவுமணியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இதனைக் கருத்தில் கொண்டே அன்னாரின் நூட்களில் ஒன்றான இந்நூலை விளக்கவுரைக்காக எடுத்துக்கொண்டுள்ளேன். இந்நூல் தம்மை அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினரைச் சார்ந்தவர்கள் என்று பறைசாட்டிக்கொண்டு அவர்களின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக நடக்கின்றவர்களுக்கு சிறந்த தெளிவாக இருக்கும். அதிலும் குறிப்பாக அல்லாஹ்வின் திருநாமங்கள் பண்புகள் விடயத்தில் தெளிவற்றுக்கிடப்பவர்களுக்கும் சிறந்த முன்மாதிரி நூலாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.

எனது இவ்விளக்கவுரையை அறிஞர்களின் கருத்துக்களுக்கு முதலிடமளித்து அமைத்துள்ளேன். இந்த நூலை வியாக்கியானம் செய்த அறிஞர்களின் விளக்கவுரைகளை மயிற்கட்களாகக்கொண்டே என்பிரயானத்தை ஆரம்பித்துள்ளேன். இப்பணியைப் பூரணமாக நிறைவேற்றி முடித்திட எல்லாம் வள்ள நாயன் அல்லாஹ் துனை புரிவானாக.

அல் அகீததுல் வாஸிதிய்யா நூலின் ஆசிரியர்ஷைஹுல் இஸ்லாம் இப்னு தைமியா’ (ரஹ்) அவர்கள் பற்றிய குறிப்பு:

இவரின் பெயர் ‘அஹ்மத்’ ஆகும். இவரின் தந்தையின் பெயர் ‘அப்துல் ஹலீம்’ ஆகும். இவரின் பாட்டனார் ‘அப்துஸ்ஸலாம்’ ஆவார். இவரின் பூட்டனார் ‘தைமியா’ ஆவார். மேலும், இவர் ஹிஜ்ரி 661ம் ஆண்டு ரபீஉல் அவ்வல் மாதம் 10ந் நாள் ‘ஹர்ரான்’ என்ற இடத்தில் பிறந்தார். பின்பு தனது குடும்பம் சகிதம் ‘திமஸ்ஸுக்’ நகரை நோக்கிப் புறப்பட்டு அங்கேயே வாழ்ந்து வந்தார்.

இமாமவர்கள் மிகப்பெரிய அறிஞராகவும் பிரசித்திபெற்ற போராளியாகவும் இருந்தார்கள். இவர் உயிர்வாழும் காலத்தில் தனது சிந்தனை, அறிவு, தேகம் ஆகியவற்றைக் கொண்டு அல்லாஹ்வின் மார்க்கத்திற்காகப் போராடக்கூடியவராக இருந்தார். மேலும், இமாமவர்கள் அறிவின் உச்சநிலையை அடைந்திருந்தார்கள். தனக்கு மார்க்கத்திலிருந்து தெளிவான விடயங்களை செயலுருப்படுத்துவதில் மிகவும் துணிச்சல் மிக்கவராகக் காணப்பட்டார்;. இதனால் இவருக்கு அதிகமான விரோதிகள் காணப்பட்டனர்.

இவரின் பிற்பட்ட கால வரலாற்றில் இவருக்கு ஆட்சியாளர்களால் பல இடைஞ்சல்கள் நிகழ்ந்தன. பலமுறைகள் சிறையில் அடைக்கப்பட்டார். ஈற்றில் ஹிஜ்ரி 728ம் ஆண்டு ஸவ்வால் மாதம் 20ந் நாள் ‘திமஸ்க்’ கோட்டையில் சிறைவாழ்க்கை அனுபவித்துக் கொண்டிருக்கையில் மரணத்தைத் தழுவினார். அல்லாஹ் அன்னாரது பாவங்களை மன்னித்து சுவனபதியில் நுழையச் செய்வானாக.

இது இமாமவர்களின் அகீதா தொடர்பான பிரதான நூலாகும். அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள், பண்புகள், மற்றும் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் ஈமான் கொள்வது தொடர்பான விடயங்களில் ‘அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்’தினரின் நிலைப்பாடு, அவர்களின் செயல்சார்ந்த அம்சங்களுடன் தொடர்புபட்ட விடயங்கள் போன்றவற்றைத் தெளிவுபடுத்தக்கூடியதாக இந்நூல் அமைந்துள்ளது.

‘வாஸித்’ என்ற பிரதேசத்தைச் சேர்ந்த சில நீதிபதிகள் இமாமவர்களிடத்தில் வந்து, மக்கள் மன்றத்தில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நூதன அனுஸ்டானங்கள், மற்றும் மார்க்கத்திற்குப் புறம்பான அம்சங்கள் பற்றிக்கூறி அங்கலாய்த்தார்கள். அவர்களின் அங்கலாய்ப்பின் முடிவுரையில் அல்லாஹ்வின் திருநாமங்கள், பண்புகள், மற்றும் இந்நூலில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் தொடர்பாக ‘அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்’தினரின் கொள்கை கோட்பாடுகளைப்பற்றி எழுதித்தருமாறு விண்ணப்பித்தார்கள். இதன் பேறாகவே இந்நூல் பிரசவித்தது. இக்குழந்தைக்கு ‘அல் அகீததுல் வாஸிதிய்யா’ என்றும் நாமம் சூட்டப்பட்டது.


بسم الله الرحمن الرحيم
الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وأشهد أن لا إله الا الله وحده لا شريك له إقرارا به وتوحيدا وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم تسليما مزيدا

நூலாசிரியர் கூறுகின்றார்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தைக் கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்.

அல்குர்ஆனில் ஸூரதுல் பராஆ தவிர்ந்த ஏனைய அத்தியாயங்களின் ஆரம்பத்தில் பிஸ்மில் வந்திருப்பதையும் நபியவர்கள் பிஸ்மிலை முற்படுத்தி தனது மடல்களை எழுதுவதையும் கருத்தில் கொண்டும் இந்நூலாசிரியர் தனது நூலையும் இவ்வாசகத்தைக் கொண்டே ஆரம்பித்துள்ளார் எனக் கருதமுடியும்.

இவ்வார்த்தையில் இடம்பெற்றிருக்கக்கூடிய ‘ب’ வானது ‘உதவிதேடல்’ என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இவ்வாசகத்தின் பொருளானது ‘ அல்லாஹ்வின் துணையுடன் எனது இந்தக் காரியத்தைத் துவங்குகின்றேன்’ என்று அமையும்.

மேலும், பிஸ்மிலில் இடம்பெற்றிருக்கும் ‘الله’ என்ற வார்த்தையானது பரிசுத்தமான, ஒருவனான எமது இறைவனைக் குறிக்கின்றது. இவ்வார்த்தை ‘أله’ என்ற வார்த்தையில் இருந்து பிறந்ததாகும். இவ்வார்த்தைக்கு ‘வணங்கப்பட்டான்’ என்று பொருள் கொள்ளப்படும். இதனடிப்படையில் ‘اله’ என்ற சொல்லின் பொருள் ‘வணங்கப்படுபவன்’ என்றாகும். எனவே, அல்லாஹ் வணங்கப்படுபவனாக உள்ளான்.

‘الرحيم’ இ ‘الرحمن’ என்பன அல்லாஹ்வின் திருநாமங்களில் உள்ளனவாகும். இவ்விருசொற்களும், ‘அவனது அந்தஸ்துக்குத்தக்கவிதத்தில் அவன் விசாலமான கிருபையுள்ளவனாக இருக்கின்றான்,’ என்ற கருத்தை உணர்த்துகின்றது. ஆயினும், இவ்விருவார்த்தைகளும் ஒரே கருத்தைக் கொண்டது போன்று விளங்கினாலும் இரண்டுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. ‘الرحمن’ என்பது, ‘அனைத்துப்படைப்பினங்கள் மீதும் கிருபையுள்ளவன்’ என்றும் ‘الرحيم’ என்பது, ‘முஃமீன்களுடன் மாத்திரம் கிருபையுள்ளவன்’ என்றும் வேறுபட்ட இரு விளக்கங்களைக் கொடுக்கின்றன. அதிலும் ‘الرحيم’ என்ற வார்த்தை முஃமின்களுடனான தனியான அன்பைப் பிரதிபளிக்கின்றது. இது குறித்து அல்லாஹூத்தஆலா கூறுகையில்:

‘மேலும், அல்லாஹ் விசுவாசி(களாகிய உங்)கள் மீது மிக்க கிருபையுடையோனாக இருக்கின்றான்.’ (அஹ்ஜாப்: 43)

இமாமவர்கள் தனது நூலின் துவக்கத்தை அல்லாஹ்வைத் துதி செய்து, இரு சாட்சிகளையும் கூறி, நபியவர்கள் மீது ஸலாத்தையும் ஸலாமையும் காணிக்கையாக்கி அமைத்துள்ளார்கள். அதன் தமிழ் வடிவம் பின்வருமாறு:

எல்லாப் புகழும் அல்லாஹூத்தஆலாவுக்கே! அவன் எத்தகையவனென்றால் தன்னுடைய தூதரை நேர்வழியைக்கொண்டும், சத்திய மார்க்கத்தைக்கொண்டும் அனுப்பி வைத்தான், சகல மார்க்கங்களையும் விட அதை மேலோங்கச் செய்வதற்காக (தன் தூதரை அனுப்பி வைத்தான்); இன்னும், (இதற்கு) சாட்சியாக இருக்க அல்லாஹ்; போதுமானவன். –அல்பத்ஹ்:28 – நிச்சயமாக அல்லாஹ்வைத்தவிர வேறு கடவுள் இல்லை என்றும், அவன் தனித்தவன், அவனுக்கு எவ்வித இணையுமில்லை என்பதை உறுதிப்படுத்தியவனாகவும் ஒருமைப்படுத்தியவனாகவும் நான் சாட்சி கூறுகின்றேன். மேலும், நிச்சயமாக முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அவனுடைய அடியானும் திருத்தூதருமாவார் என்றும் சாட்சி சொல்கின்றேன். அல்லாஹ் அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் மென்மேலும் ஸலாத்தையும் ஸலாமையும் சொல்வானாக.

أما بعد : فهذا اعتقاد الفرقة الناجية المنصورة إلى قيام الساعة

குறிப்பு (1), குறிப்பு (2)

‘ஹிதாயத்’ என்ற வார்த்தை இரு கருத்துக்களில் பயன்படுத்தப்படும்:
1. ‘அத்தலாலா வல்பயான்’
2. ‘அத்தவ்பீக் வல் இல்ஹாம்’

‘அத்தலாலா வல்பயான்’ என்பது, நேர்வழியை தெளிவுபடுத்தும் பணியாகும். இப்பணியை நபியவர்கள் மேற்கொள்வார்கள். இதனை அல்லாஹூத்தஆலா பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தில் பிரஸ்தாபிக்கின்றான்.
(நபியே!) நிச்சயமாக நீர் (மனிதர்களுக்கு) நேரான வழியின் பால் வழிகாட்டுவீர். (அஷ்ஷூரா:52)

‘அத்தவ்பீக் வல் இல்ஹாம்’ என்பது, நேர்வழியை வழங்கும் பணியாகும். இப்பணியை அல்லாஹூத்தஆலாவைத் தவிர வேறு எவராலும் செய்ய முடியாது. இது குறித்து அல்லாஹூத்தஆலா பின்வருமாறு கூறுகின்றான்.

(நபியே!) நிச்சயமாக நீர் விரும்பியோரை நேர் வழியில் செலுத்திவிடமாட்டீர், எனினும் அல்லாஹ் தான் நாடியோரையே நேர் வழியில் செலுத்துகின்றான். மேலும், நேர்வழி பெறுகிறவர்களை அவனே மிக அறிந்தவன். (அல்கஸஸ்: 56)

(1) பொருள்: அடுத்து, இது மறுமை நாள்வரை வெற்றி மற்றும் உதவி பெறக்கூடிய கூட்டத்தின் கொள்கையாகும்.

(2) விளக்கம்:
(أما بعد) இவ்வாசகமானது ஒரு விடயத்திலிருந்து மற்றொரு விடயத்திற்கு நகரும் போது உபயோகிக்கப்படும்;. நபியவர்களின் வழிமுறை என்ற அடிப்படையில் இவ்வாசகத்தை அழைப்புப் பணியில் ஈடுபடக்கூடிய அனைவரும் உபயோகிப்பது கடமையாகும்.

(فهذا) இவ்வாசகத்தின் மூலம், இந்நூலில் இடம்பெற்றிருக்கக்கூடிய அனைத்து அகீதா சார்ந்த அம்சங்களும் நாடப்படுகின்றன.

(اعتقاد) இச்சொல் اعتقد என்ற மூலச் சொல்லில் இருந்து பிறந்ததாகும். اعتقد என்பது ஒரு விடயத்தை கொள்கையாக –அகீதா – எடுத்துக் கொள்வதாகும். எனவே, அகீதா என்பது, ‘ஒருவர் ஒரு விடயத்தை மனதால் ஏற்றுக் கொள்ளல்’ என்ற மையக்கருத்தை உணர்த்துகின்றது. இவ்வார்த்தையின் மூலச் சொல் கயிற்றால் ஒரு பொருளை பிணைத்துக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டது. பின்பு இதே வாசகம் ஒரு விடயத்தை உள்ளத்தால் உறுதியாக நம்புவதற்குப் பயன்படுத்தப்பட்டது.

(الفرقة) கூட்டம், அமைப்பு என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

(الناجية) இப்பண்பானது இன்பங்கள் பல பெற்று இன்மையிலும் மறுமையிலும் அழிவு, மற்றும் தீங்குகளை விட்டும் ஈடேற்றம் பெற்ற ஒரு கூட்டத்தைக் குறிக்கின்றது. மேலும், இப்பண்பானது புகாரி, முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில் இடம்பெற்றுள்ள ஒரு ஹதீஸில் இருந்து பெறப்பட்டதாகும். அந்த செய்தியின் தமிழ் வடிவமானது, ‘என்னுடைய உம்மத்தில் ஒரு கூட்டம் உதவி பெறும் நிலையில் உண்மையில் நிலைத்திருப்பார்கள். அல்லாஹூத்தஆலாவின் (மறுமை தொடர்பான) கட்டளை அவர்களுக்கு மத்தியில் வரும் வரை உதவி புரியாது விட்டுவிட்டவர்களினால் எவ்விதத் தீங்கும் இழைக்க முடியாது.

(المنصورة) அதாவது, இக்கூட்டத்தினருக்கு மாறு செய்பவர்களைவிட்டும் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு கூட்டமாக இருக்கும் என்ற கருத்தைக் கொடுக்கின்றது. இத்தகைய பல சிறப்பியல்புகளைத் தன்னகத்தே கொண்ட கூட்டம் எது? என்ற விடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் பலவாறான கருத்துக்கள் காணப்படுகின்றன. அந்த அடிப்படையில் பின்வரும் கூற்றுக்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகின்றேன்.

- அக்கூட்டமானது அஹ்லுல் ஹதீஸினரைக் குறிக்கின்றது : இக்கருத்தை அறிஞர்களான யஸீத் இப்னு ஹாரூன், அஹ்மத் இப்னு ஹன்பல், இப்னுல் முபாரக், அலீ இப்னு மதீனி, அஹ்மத் இப்னு ஸினான், புகாரி (ரஹ்) போன்றோர் கூறுகின்றனர்.

- அக்கூட்டமானது அரேபியர்களைக் குறிக்கின்றது : இக்கருத்தை இப்னு மதீனி (ரஹ்) அவர்கள் பிறிதோர் அறிவிப்பில் கூறியுள்ளார்.

குறிப்பு (1)

- ‘அக்கூட்டமானது முஃமீன்களில் உள்ள அனைத்து குழுவினரையும் உள்ளடக்கியதாக இருக்கும். அதனடிப்படையில், முஃமீன்களில் உள்ள போராளிகள், இஸ்லாமிய சட்டக்கலை அறிஞர்கள், ஹதீஸ்களை அறிஞர்கள், அல்குர்ஆன் விரிவுரையாளர்கள், நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பவர்கள், இஸ்லாம் கூறும் துறவறத்தைப் பேணுபவர்கள் மற்றும் வணக்கஸ்தாரிகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட குழுவினரை தன்னகத்தே கொண்டதாக இருக்கும். மேலும், அவர்கள் அனைவரும் ஒரே நாட்டில் ஒன்றாக வேண்டும் என்ற நிபந்தனையும் கிடையாது. அவர்கள் ஓரிடத்திலோ அல்லது உலகின் பல பாகங்களிலோ பரந்து வாழலாம். இன்னும், அவர்கள் அனைவரும் ஒரே பிரதேசத்தில் ஒன்றாக வாழ வேண்டும் என்ற நிபந்தனையும் கிடையாது. மாற்றமாக, அவர்கள் அனைவரும் கடைசியில் ஒன்று சேரும் வரை தத்தம் பிரதேசங்களில் உள்ளவர்களோடு மாத்திரம் தொடர்புள்ளவர்களாகக் கூட இருக்கலாம்.’ இக்கருத்தை இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

- இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறும் போது: அக்கூட்டமானது பைதுல் முகத்தஸ்ஸில் இருக்கும் என்றும் அவர்கள் அனைவரும் ஷாம் வாசிகளாகவும் ஜிஹாத் செய்வதற்கு ஆற்றல் படைத்தவர்களாகவும் இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார். (பத்ஹூல் பாரி)

- இந்த ஹதீஸ் தொடர்பாக ‘பத்ஹூல் மஜீத்’ இன் ஆசிரியர், ‘அஷ்ஷேய்க் அப்துர் ரஹ்மான் இப்னு ஹஸன் ஆலி ஷெய்க்’ (ரஹ்) அவர்கள் கூறும் போது: ‘அக்கூட்டத்தினர் சொற்ப தொகையினராக இருந்தும் கூட அவர்களை ஒதுக்கியவர்களினாலும் அவர்களுடன் முரண்பட்டுச் சொன்றவர்களினாலும் எவ்விதத் தீங்கும் செய்ய முடியாது போய்விடும். இந்நிலை அவர்கள் என்றென்றும் முழுமையாக உண்மையில் நிலைத்திருப்பவர்கள் என்ற நன்மாராயத்தை தெரிவிக்கக்கூடியதாக இருக்கின்றது’ என்கிறார்.

நிச்சயமாக இத்தகைய நன்மாராயத்தைப் பெற்ற கூட்டம் ‘அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாஅத்’ ஆகத்;தான் இருக்க வேண்டும் என்பதை இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களே மேற்குறிப்பிடப்பட்ட அறபி வாசகத்தின் ஈற்றில் கூறியுள்ளார். அது தொடர்பான விரிவான விளக்கத்தை பிறகு காண்போம்.

(إلى قيام الساعة) இவ்வாசகத்தின் மூலம் ‘அவர்கள் மரணிப்பதற்கான வேளை வரும் வரை’ என்ற பொருள் நாடப்படுகின்றது. அவ்வேளையானது முஃமின்கள் மற்றும் காபிர்கள் என்ற பிரிவினருக்கு ஏற்ற விதத்தில் அமைந்திருக்கும். முஃமின்களைப் பொருத்தளவில் அவர்களை நோக்கி ஒரு மெல்லிய காற்று வீசப்படும். அதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரினதும் உயிர்கள் கைப்பற்றப்படும். ஈற்றில் உலகில் கெட்டமனிதர்கள் மாத்திரம் எஞ்சியிருக்கும் நிலையில் மறுமை ஏற்படும். இதனைப் பின்வரும் நபிமொழிகளின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

‘பூமியில் ‘அல்லாஹ்’ ‘அல்லாஹ்’ என்று சொல்வதற்குக் கூட ஒருவரும் இல்லாது போகும் வரை மறுமை ஏற்படமாட்டாது.’ (முஸ்லிம்) பிறிதோர் அறிவிப்பில், ‘பிறகு அல்லாஹூத்தஆலா ஒரு காற்றை அனுப்புவான், அக்காற்றானது ‘மிஸ்க்’ எனும் வாடையை உடையதாகவும் பட்டைவிட மென்மையானதாகவும் இருக்கும். மேலும், அக்காற்றானது உள்ளத்தில் அணுவாளவு கூட ஈமான் உள்ள எவரையும் விட்டுவைக்காது. இறுதியில் கெட்ட மனிதர்கள் மாத்திரம் எஞ்சியிருக்கும் நிலையில் மறுமை ஏற்படும். (முஸ்லிம், ஹாகிம்)

குறிப்பு (1) (أهل) இங்கு أهل என்ற வாசகத்தை கஸ்ரு (ـــِ) செய்தும் ரப்உ (ـــُ) செய்தும் வாசிக்கலாம். கஸ்ரு செய்து வாசித்தால் முன்பு வசனத்தில் இடம்பெற்ற فِرْقَة (கூட்டம்) என்பதற்குப் பகரமாக வந்துள்ளது என்றும், ரப்உ செய்து வாசித்தால் மறைமுகமாக هم (அவர்கள்) என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டு விளக்கமாக வந்துள்ளது என்றும் கூற முடியும்.

குறிப்பு (1)

விளக்கம்:
குறிப்பு (1) இச்சொல்லுக்குப் ‘பாதை’ என்று பொருளாகும். அப்பாதையானது நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றை அடியொட்டியதாக இருக்கும். இங்கு ‘அஹ்லுஸ் ஸூன்னத்’ (ஸூன்னாவை சார்ந்தவர்கள்) என்பதின் மூலம் அக்கூட்டத்தாருக்கும் ஸூன்னாவுக்கும் இடையிலான தொடர்பை பிரதிபளிக்கச் செய்கின்றது.மாற்றமாக, பித்அத்வாதிகளுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்களைப் பொருத்தளவில் அவர்களின் குணாதிசயங்களுக்குத் தக்கவாறு அவைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில், அவர்களில் சிலர் தாங்கள் புரிகின்ற பித்அத்களை மையமாகக் கொண்டு அழைக்கப்படுகின்றனர். இதற்கு உதாரணமாக கதரிய்யாக்களையும் முர்ஜிய்யாக்களையும் குறிப்பிடலாம். மேலும் சிலர், தாங்கள் பின்பற்றுகின்ற தலைவர்களை அடிப்படையாகக் கொண்டு அழைக்கப்படுகின்றனர். இதற்கு ஜஹ்மிய்யாக்கள் சிறந்த உதாரணமாகும். வேறு சிலர், தாங்கள் புரிகின்ற மோசமான செயல்களைக் கொண்டு அழைக்கப்படுகின்றனர். இதற்கு உதாரணமாக றாபிழாக்களையும் ஹவாரிஜ்களையும் கூறலாம்.

கதரிய்யாக்கள்

அறிமுகம்:
‘கதர்’ என்னும் அறபுப் பதத்திற்கு ‘விதி’ என்று பொருளாகும். இதனடிப்படையில் விதியை மறுப்பவர்களே ‘கதரிய்யாக்கள்’ என்று அழைக்கப்பட்டனர். ஸகாப்பாக்களின் இறுதிக்காலத்தில் மஃபத் அல் ஜூஹனி என்பவனால் இக்கொள்கை உலகில் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, ஈராக் நாட்டின் பஸரா நகரத்தின் ஆளுநராக இருந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூஸூப் என்பவரால் இவன் கொலை செய்யப்பட்டான். இக்கொள்கை கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த ஸோஸான் என்பவன் வழியாகவே மஃபத் அல் ஜூஹனிக்குக் கிடைத்தது.
இமாம் அவ்ஸாஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘முதன் முதலில் விதியைப் புறக்கணித்துப் பேசியவன் ஸோஸான் என்பவனே, இவன் ஈராக் நாட்டைச் சார்ந்த கிறிஸ்தவன் ஆவான். இவன் இஸ்லாத்தைத் தழுவி இஸ்லாத்தில் சிறிது காலம் இருந்துவிட்டு மீண்டும் மதம்மாறி கிறிஸ்தவ மதத்தில் இணைந்து கொண்டான்.
எனவே, ஸோஸான் வழியாக இக்கொள்கை முறையே மஃபத் அல் ஜூஹனிக்கும் அவனிடமிருந்து டமஸ்கஸ் நகரத்தைச் சார்ந்த கயலான் என்பவனுக்குத் கிடைத்தது. பின்னர் இக்கொள்கை பரிணாமம் பெற்று உலகின் பல நாடுகளிலும் பரவ ஆரம்பித்தது. (அஷ் ஷரீஆ: 243)

கொள்கை:
பின்வரும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்N;டார் கதரிய்யாக்களாவர்.
1. உலகில் நடைபெறுகின்ற செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வின் கற்பனைக்கோ அல்லது அவனது அறிவுக்கோ அப்பாற்பட்டதாகும்.

2. எல்லாச் செயல்களும் நடைபெற்று முடிந்த பின்னரே அவன் அவைகளைப் பற்றி அறிந்து கொள்கிறான்.
இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘செயல்கள் நடைபெறாதவரை அவைகளை அல்லாஹ் அறியமாட்டான் என்று கூறுபவர் கதரிய்யாக்களைச் சார்ந்தவராவார்.’
(அல்லாலகாஈ: 4:701)

இமாம் அபூ ஸவ்ர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘மனிதனது செயல்களை அல்லாஹ் படைக்கவில்லை. மற்றும், பாவச் செயல்களை அல்லாஹ் மனிதன் மீது விதியாக்கவோ அவைகளைப் படைக்கவோ மாட்டான் என்று கூறுபவர்களே கதரிய்யாக்களாவர்.’

கதரிய்யாக்களின் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம்:
இமாம் குர்துபி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘இக்கொள்கை காலப்போக்கில் அழிந்துவிட்டது. இன்று இக்கொள்கையைப் பின்னபற்றுபவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இன்று உலகில் உள்ள கதரிய்யாக்களைப் பொறுத்தவரை ‘கருமங்கள் நடைபெற முன்னால் அல்லாஹ் அவைகளைத் தெரிந்து வைத்துள்ளான்’ என்ற முதலாவது அடிப்படையில் அஹ்லுஸ் ஸூன்னாவுடன் உடன்படுகின்றனர். எனினும், ‘மனிதனுடைய செயல்கள் இறைவனால் கற்பிக்கப்பட்டு விட்டன, ஆனால், அவைகள் மனிதன் புறத்திலிருந்து தனியாக நடைபெறுகின்றன, இறைவன் அவைகளைப் படைப்பதில்லை’ என்ற தமது கொள்கையில் அஹ்லுஸ் ஸூன்னாவுடன் மாறுபடுகின்றனர். இவர்கள் ஆரம்ப காலத்தில் இருந்த கதரிய்யாக்களைவிட கொள்கையில் சிறிது தெளிவுடையவர்களாக இருந்தாலும் அன்றைய கதரிய்யாக்களும் இன்றைய கதரிய்யாக்களும் அசத்தியத்திலேயே நிலைத்திருக்கின்றனர்.’

கதரிய்யாக்கள் தொடர்பான மார்க்கத் தீர்ப்பு:
நம் முன்னோர்களான ஸலபு ஸாலிஹீன்கள் கதரிய்யாக்கள் இறை நிராகரிப்பாளர்களா? அல்லது இறை விசுவாசிகளா? என்பது பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் போது, ‘அல்லாஹ்வின் அறிவைப் புறக்கணிப்பவர்கள் இறை நிராகரிப்பாளர்களே. எனினும், மனிதனுடைய செயல்களை அல்லாஹ் படைப்பதில்லை அவைகள் நடைபெற முன்னர் அல்லாஹ் அவற்றை அறிந்து வைத்திருக்கிறான் என்போர் இறை நிராகரிப்பாளர்களல்லர்’ என்கின்றனர்.

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களின் புதல்வரான அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது: ‘எனது தந்தையிடம் கதரிய்யாக்கள் இறை நிராகரிப்பாளர்களா? என்று வினவப்பட்டது. அதற்கவர்கள், நடைபெற இருக்கின்ற செயல்கள் பற்றி அல்லாஹ் அறியமாட்டான் என்று கூறி அல்லாஹ்வுடைய அறிவைப் புறக்கணித்தால் அவர்கள் இறை நிராகரிப்பாளர்களே என்று பதிலுரைத்தார்கள்.’

இமாம் மர்வஸீ (ரஹ்) அவர்கள் கூறுவதாவது: இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களிடம் கதரிய்யாக்கள் பற்றிக் கேட்டபோது அல்லாஹ்வின் அறிவைப் புறக்கணிக்காதவர்கள் இறை நிராகரிப்பாளர்களல்லர் என்றார்.

மேற்கூறப்பட்ட கருத்தை இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கீழ்வருமாறு தெளிவுபடுத்துகிறார்கள்: விடயங்கள் நடைபெற முன்னர் அவைகளை அல்லாஹ் அறியமாட்டான், அவ்வாறான விடயங்களை அவன் லௌஹூல் மஹ்பூளில் பதிவு செய்து வைக்கவில்லை என்று கூறுபவர்கள் இறை நிராகரிப்பாளர்களே. என்றாலும் விடயங்கள் நடைபெற முன்னர் அல்லாஹ் அவற்றை அறிந்து வைத்துள்ளான். எனினும், அவற்றை அல்லாஹ் படைப்பதில்லை என்று கூறுபவர்கள் இறை நிராகரிப்பாளர்களல்லர் என்கிறார். (மஜ்மூஉல் பதாவா: 3: 352)

இமாம் இப்னு ரஜப் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது: கதரிய்யாக்கள் இறை நிராகரிப்பாளர்களா? இல்லையா ? என்பதில் மார்க்க அறிஞர்களின் மத்தியில் முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன. இமாம் ஷாபிஈ (ரஹ்) இமாம் அஹ்மத் (ரஹ்) போன்றோர் அல்லாஹ்வின் அறிவைப் புறக்கணிப்பவர்கள் இறை நிராகரிப்பாளர்கள் ஆவர் என்று தெளிவாகக் கூறியுள்ளார்கள் என்கிறார். (ஜாமிஉல் உலூம் பக்கம்: 26)

கதரிய்யாக்களின் புதிய பரிநாமம்:
இஸ்லாமிய வரலாற்றில் பிரபலமாக இருந்த கதரிய்யாக்கள் மறைந்து விட்டனர். எனினும், முஃதஸிலாக்கள் இவர்களது அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாத்து வருகின்றனர். எனவே தான் முஃதஸிலாக்கள், கதரிய்யாக்கள் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டு வருகின்றனர். (முஃதஸிலா: பக்கம்:40)

முர்ஜிஆக்கள்

அறிமுகம்:
முர்ஜிஆ என்பது ‘இர்ஜாஃ’ என்ற பதத்திலிருந்து பிறந்த சொல்லாகும். இதற்கு அறபு மொழியில் ‘பிற்படுத்துதல்’, ‘ஆதரவு வைத்தல்’ போன்ற கருத்துக்கள் உள்ளன. (அல்மிலல் வந்நிஹல்: 139)

கொள்கை:
முர்ஜிஆக்களின் கொள்கை தொடர்பாக இமாம் அஹ்மத் இப்னு அன்பல் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது : ‘ஈமான் என்பது, கலிமாவை நாவினால் மொழிவது மாத்திரமாகும். மனிதர்கள் மத்தியில் ஈமானின் தரத்தில் வித்தியாசம் கிடையாது. எனவே, மனிதர்கள் நபிமார்கள், மலக்குகள் அனைவருடைய ஈமானும் ஒரே தரத்தையுடையதாக இருக்கும். மேலும், ஈமான் கூடவோ குறையவோ மாட்டாது. இன்னும், எவரேனும் கலிமாவை தனது நாவினால் மாத்திரம் கூறி விசுவாசம் கொண்டு (அமல் செய்யாவிடினும் கூட) அவர் உண்மையான முஃமின் ஆவார். மேலே சொல்லப்பட்ட கருத்துக்களையும் கொள்கைகளையும் கொண்டோர் முர்ஜிஆக்கள் எனப்படுவர்’ என்கிறார்.
மேற்கூறப்பட்ட முர்ஜிஆக்களது கருத்துக்களைப் பார்க்கும் போது, ‘ஈமானுக்கும் அமலுக்கும் இடையில் எந்த உறவும் இல்லை’ என்ற கருத்தை அவர்கள் கூறுகின்ற காரணத்தினால், இறைநிராகரிப்பாளர்களுக்கு தாம் செய்த நல்லறங்கள் பயனளிக்காதது போன்று முஃமின்களுக்கும் தமது பாவச் செயல்கள் எந்தத் தீங்கும் செய்யாது என்று நம்பிக்கை கொள்வதே இவர்களது கோட்பாடாக உள்ளது என்பதை புரிய வைக்கின்றது.

வகைகள்:
இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: முர்ஜிஆக்கள் மூன்று வகைப்படுவர்.

1. ஈமான் என்பது உள்ளத்தில் இருக்கின்ற நம்பிக்கையாகும் என்போர் முதலாம் வகையினர். இவர்களில் பெரும்பாலானோர் ஈமானுக்கும் அமலுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு என்கின்றனர். எனினும், மற்றும் சிலர் ஈமானுக்கும் அமலுக்கும் எந்தத் தெடர்பும் இல்லை என்கின்றனர். மேலே குறிப்பிட்ட இரண்டாது கருத்தையே ‘ஜஹம் இப்னு ஸப்வான்’ என்பவனும் அவனைப் பின்பற்றியோரும் ஏற்றுக் கொண்டிருந்தனர்.

2. ஈமான் என்பது கலிமாவை நாவினால் மொழிவது மாத்திராகும். இவர்கள் ‘கராமிய்யாக்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர்.

3. ஈமான் என்பது கலிமாவை நாவினால் மொழிந்து அதனை உள்ளத்தல் விசுவாசம் கொள்வதை மட்டுமே குறிக்கும் என்போர் மூன்றாவது வகையினர், இவர்கள் ‘முர்ஜிஅதுல் புகஹா’ என்று அழைக்கப்படுவர்.

முர்ஜிஆக்கள் தொடர்பான மார்க்கத் தீர்ப்பு:
முர்ஜிஆக்கள் முஸ்லிம்களா? அல்லது இறை நிராகரிப்பாளர்களா? என்ற நிலைப்பாட்டில் கீழ்வரும் கருத்துக்கள் காணப்படுகின்றன:

இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுவதாவது: ‘… முர்ஜிதுல் புகஹாக்கள் பற்றிய தீர்ப்பும் அவ்வாறுதான். இவர்களுடைய பித்அத்துக்கள் புகஹாக்களுடைய பித்அத்களைச் சார்ந்தவைகளோ! அவை இறை நிராகரிப்பை ஏற்படுத்தக் கூடியவைகளல்ல என்பதில் மார்க்க அறிஞர்களுக்கிடையே கருத்து முரண்பாடுகள் காணப்படவில்லை. ஆயினும், இவர்களுடைய பித்அத்துக்கள் இறை நிராகரிப்பை ஏற்படுத்தக் கூடியவைகளே என சில மார்க்க அறிஞர்கள் கருதுகின்றனர், இது மிகவும் தவறான கருத்தாகும். அமல்கள் ஈமான் சார்ந்ததல்ல என்கிற இவர்களது கருத்து குப்ரை ஏற்படுத்தக் கூடியது என்று சில அறிஞர்கள் கூறினர். எனினும், அமல்களை விட்டுவிடுதல் அல்லது அலட்சியம் செய்தல் ஈமானின் கடமையை விட்டுவிடுவதாகக் கருதப்படுமே தவிர ஈமானைப் புறக்கணிப்பதாகக் கருதப்படமாட்டாது. முர்ஜிஆக்களில் சிலர் மறுமையில் தண்டனை வழங்கப்படும் என்கிற விடயத்தைப் புறக்கணிக்கின்றனர். இன்னும் சிலர், அல்குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் யதார்த்தமாக நடைபெற முடியாத சில தண்டனைகளைக் கூறி மனிதர்களை அச்சுறுத்துவதாகக் கூறுகின்றனர். இவ்வாறு மறுமையில் வழங்கப்படும் தண்டனையைப் புறக்கணிக்கும் கூட்டத்தினர் இறை நிராகரிப்பாளர்களாவர். (மஜ்மூஉல் பதாவா: 20:104)

ஜஹமிய்யாக்கள்

அறிமுகம்:
‘ஜஹம் இப்னு ஸப்வான்’ என்பவரைப் பின்பற்றுகின்றவர்கள் ஜஹமிய்யாக்கள் எனப்படுவர். ஜஹம் இப்னு ஸப்வான் குராஸானில் (ஈரான்) உள்ள திர்மித் எனும் பகுதியைச் சேர்ந்தவர். இவர் சில தத்துவங்களையும் சித்தாந்தங்களையும் அடிப்படையாகக் கொண்டவர். இவர் அல்லாஹ்வைப் பற்றியே அதிகமாகத் தர்க்கம் புரிந்துள்ளார்.

கொள்கைகள்:
ஜஹம் இப்னு ஸப்வானுடைய அடிப்படைக் கொள்கைகள் கீழ்வருமாறு:

1. அல் குர்ஆன் படைக்கப்பட்டது என்ற நம்பிக்கை.

2. அல்லாஹ், நபி மூஸா (அலை) அவர்களுடன் பேசவில்லை, அவன் பேசவும் மாட்டான்.

3. அல்லாஹ்வை (மறுமையில்) காணமுடியாது.

4. அல்லாஹ் அர்ஷின் மீது இல்லை,

என்பன போன்ற குர்ஆனுக்கும் நபிவழிக்கும் நேரடியாக முரண்படுகின்ற கருத்துக்களை உலகம் முழுவதும் பரவச் செய்ததன் மூலம் குர்ஆனுக்கும் ஹதீஸூக்கும் எதிராகப் புரட்சி செய்ததுடன் அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாஅத்தினரின் கொள்கைகளையும் எதிர்த்து வந்தார்.

மேற்கூறப்பட்ட அம்சங்களுடன் மேலும் மூன்று முக்கியமான அடிப்படைக் கொள்கைகளையும் அறிமுகம் செய்தார். அவைகளாவன:

1. அல்லாஹ்வின் இயல்புகள் மற்றும் பண்புகள் ஆகியவற்றைப் பாழ்படுத்துதல்: அல்லாஹ்வை பண்புகள் கூறி வர்ணித்து அவனைப் படைப்புகளுக்கு ஒப்பாக்குவதையே இது குறிக்கும். இப்படியான தவறான கருத்தைச் சொல்லி அக்கருத்தை நிலைநிறுத்துவதற்காக அல்குர்ஆனிலும் ஹதீஸிலும் இடம்பெற்றுள்ள அல்லாஹ்வின் பண்புகளை மறுத்துரைக்கின்றனர்.

2. நிர்ப்பந்தம்: மனிதன் எதனையும் தானாகச் செய்ய முடியாது. ஏனெனில், மனிதனுடைய எல்லாச் செயல்களும் அல்லாஹ்வின் நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றன. எனவே, மனிதன் எதனையும் தானாகச் செய்கின்ற ஆற்றலையோ தேர்வு செய்கின்ற சுதந்திரத்தையோ பெற மாட்டான் என்கிறார்.

3. ஈமான் என்பது ஒரு மனிதன் அல்லாஹ்வைப் பற்றி அறிந்து கொள்வதாகும். எனவே, நாவினால் அல்லாஹ்வைப் புறக்கணிக்கின்ற ஒரு மனிதன் இறை நிராகரிப்பாளராகமாட்டான். ஏனெனில், ஒரு மனிதன் அல்லாஹ்வைப் புறக்கணிப்பதால் அவனிடமிருந்து அல்லாஹ்வைப் பற்றிய அறிவு நீங்கிவிடுவதில்லை. மேலும், முஃமின்கள் அனைவரும் ஈமானில் ஒரே தரத்தையுடையவர்களாவர். ஈமானைப் பொறுத்தவரை அவர்களிடையே ஏற்றத்தாழ்வு கிடையாது.

மேலே குறிப்பிடப்பட்ட மூன்று அடிப்படைகளுமே ஜஹமிய்யாக்களின் வழிகேட்டுக்கு மிக முக்கியமான காரணங்களாக இருந்துள்ளன. ஜஹம் இப்னு ஸப்வானுக்கு இக்கொள்கை ‘ஜஃத் இப்னு திர்ஹம்’ மூலம் கிடைத்தது. இவர் தாபியீன்கள் காலத்தில் வாழ்ந்தவர். மேற்கூறப்பட்ட கொள்கைகளால் கவரப்பட்டு வழி கெட்டவர்களில் ஒருவரான ஜஃத் இப்னு திர்ஹம் ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தன்று ஈராக்கில் வைத்துக் கொல்லப்பட்டார். (மீஸானுல் இஃதிதால்: 1:369)

இக்கொள்கையை முதலில் அறிமுகம் செய்தவர் நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்த ‘லபீத் இப்னு அஃஸம்’ தான் எனவும் சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஜஹமிய்யாக்கள் தொடர்பான மார்க்கத் தீர்ப்பு:
இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘ஜஹமிய்யாக்கள் காபிர்கள் என்பதே இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களதும் அஹ்லுஸ் ஸூன்னத் வல்ஜமாஅத்தின் அறிஞர்களதும் கருத்தாகும்.’ (மஜ்மூஉல் பதாவா: 12-4)

ஜஹமிய்யாக்கள் இறைநிராகரிப்பாளர்கள் ஆவார்கள் என ஸலபுஸ்ஸாலிஹீன்களில் 500 அறிஞர்கள் தீர்ப்புக் கூறியுள்ளதாக இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (நூனிய்யா:1:115)

ஜஹமிய்யாக்களின் புதிய பரிநாமம்:
ஜஹமிய்யாக்கள் என்போர் இன்று உலகத்தில் இல்லை என்று சிலர் கருதுகின்றனர். ஜஹமிய்யாக்கள் என்ற பெயரில் இவர்கள் காணப்படாவிடினும் அவர்களது கொள்கைகளுடனும் கோட்பாடுகளுடனும் வாழக்கூடிய மக்கள் காணப்படுகின்றனர். ஜஹமிய்யாக்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் முழுமையாக அஷ்அரிய்யாக்களும் முஃதஸிலாக்களும் பின்பற்றுகின்றனர்.

றாபிழாக்கள்

அறிமுகம்:
‘றாபிழா’ என்ற வார்த்தை ‘றபழ’ என்ற பதத்திலிருந்து பிறந்ததாகும். இதன் பொருள் ‘புறக்கணித்தல்’ என்பதாகும்.

கலீபாக்களான அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரின் ஆட்சியைப் புறக்கணித்தவர்களே றாபிழாக்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் ‘இமாமிய்யாக்கள்’ என்ற பெயரிலும் அழைக்கப்படுவர்.

அப்துல்லாஹ் பின் அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது: ‘எனது தந்தை (அஹ்மத் இப்னு ஹன்பல்) அவர்களிடம் றாபிழாக்கள் எனப்படுவோர் யாவர்? என்று கேட்டேன். அதற்கவர், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரை சபிப்பவர்களே றாபிழாக்கள் ஆவர்’ எனப் பதிலுரைத்தார்.

பிரிவுகள்:
றாபிழாக்களுக்கு மத்தியிலும் பல பிரிவுகள் உள்ளன. அவர்கள் மத்தியில் 15 பிரிவினர்கள் இருப்பதாகச் சில அறிஞர்களும், 20 பிரிவினர்கள் இருப்பதாக வேறு சில அறிஞர்களும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

கொள்கை:
நபி (ஸல்) அவர்கள் தனது மரணத்திற்குப் பின் அலி (ரலி) அவர்கள்தான் அடுத்த ஆட்சியாளர் என்பதைத் தெளிவாகவும், பகிரங்கமாகவும் கூறியிருந்தார்கள். எனினும், நபியவர்கள் மரணித்த பின்னர் அலி (ரலி) அவர்களை ஆட்சித் தலைவராக நியமிக்காததால் பெரும்பாலான ஸஹாபாக்கள் வழிகெட்டு விட்டனர். ஏனெனில், ஆட்சிப் பொறுப்பானது நபியவர்களால் தெளிவாகச் சொல்லப்பட்ட அடிப்படையிலேயே நடைபெற வேண்டும். அதில் மாற்றங்கள் இடம்பெறக் கூடாது. இன்னும், இமாமத் என்பது ஒர் இபாதத் ஆகும்… என்றவாறு அவர்களது கொள்கை விளக்கம்; நீண்டு கொண்டு சொல்கின்றது.

மேலும், றாபிழாக்களின் மிகவும் பிரசித்தி பெற்ற இமாம்களில் ஒருவரான முபீத் (முஹம்மது பின் முஹம்மது) என்பவர் கூறும் போது, மறுமை நாள் ஏற்படுவதற்கு முன்னர் மரணித்தவர்களில் அதிகமானோர் நிச்சயம் உலகிற்கு மீண்டும் திரும்பி வருவார்கள் என்றும், ஈமானில் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றவர்களும், குழப்பம் விளைவிப்பதில் உச்சகட்டத்தை அடைந்தவர்களும் நிச்சயம் இவ்வாறு திரும்பிவருவர் என்றும் கூறியுள்ளார். (அவாஇலுல் மகாலாத்: 51, 95)

அதே போன்று, அல்லாஹ்வின் பண்புகள் விடயத்தில் இவர்கள் இறைவனுக்கு ‘பதாஅத்’ எனும் பண்பு உண்டென்று கூறுகின்றனர். ‘பதாஅத்’ என்பதற்கு இரு கருத்துக்கள் உள்ளன.

1. மறைந்திருந்த பின்னர் தோன்றுதல்,

2. புதிய கருத்துத் தோன்றுதல்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு எதுவுமே மறைந்து விடுவதில்லை. அவ்வாறிருக்க மறைந்திருந்த அல்லது தெரியாதிருந்த ஒரு விடயம் இறைவனுக்குப் பின்னர் தெரியவந்தது என்று எவ்வாறு கூறமுடியும்? அத்தோடு, இறைவனின் அறிவு அனைத்தையும் சூழ்ந்தது, அவன் ஞானம் மிக்க மகத்தானவனாக இருக்கும் போது புதியதொரு விடயம் எவ்வாறு அவனுக்குத் தோன்ற முடியும்? அவன் அறிவு, ஆற்றல் மற்றும் அனைத்திலுமே ஆரம்பமானவனாக இருக்கும்போது, இவ்வாறு அவனுக்கு ‘பதாஅத்’ உண்டென்று கூறுவது, அவன் மீது வேண்டுமென்றே அபாண்டம் கூறுவதைப் போலல்லவா இருக்கின்றது?

மேலும், இவர்கள் இறைவன் மீது ‘பதாஅத்’ எனும் பண்பு உண்டென்று கூறுவதைப் புனித வணக்கமாகக் கருதுகின்றனர். இது போன்ற கருத்துக்களை விளங்குவதில் அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாஅத்தினர் தடம் புரண்டு விட்டனர் எனவும் அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாஅத் இமாம்களைப் பற்றிக் குறை கூறிகின்றனர்.

மேற்கூறப்பட்டவைகள் யாவும் றாபிழாக்களுடைய அடிப்படைகளாகும். அவ்வடிப்படைகள் அனைத்திலும் முஃதஸிலாக்கள், கவாரிஜ்கள், ஸைதிய்யாக்கள், முர்ஜிஆக்கள், மற்றும் அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாஅத்தினர் ஆகிய அனைவரும் முரண்பட்ட கருத்துக்களையே கொண்டுள்ளனர். எம் முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்கள் தமது நூட்களில் றாபிழாக்களைக் கண்டித்திருப்பதோடு மட்டுமின்றி இவர்கள் தான் மிக மோசமான பிரிவினர்கள் என்றும் அடையானப்படுத்தியுள்ளனர்.

மேலும், இவர்களைப் பற்றி இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:

‘இஸ்லாத்தில் தேன்றியுள்ள அனைத்துப் பிரிவினர்களிடமும் பித்அத்களும் வழிகேடுகளும் காணப்படுகின்றன. எனினும், அவர்களில் எவரும் றாபிழாக்களைவிடக் கெட்டவர்கள் அல்லர். மேலும், அவர்களைவிட முட்டாள்களும், பொய்யர்களும், அநியாயக்காரர்களும், பாவச் செயல்களில் ஈடுபடுவோரும் வேறு எவரும் இல்லை. இன்னும், இறை நிராகரிப்பிற்கு மிக நெருக்கமானவர்களும், ஈமானின் அடிப்படைகளைவிட்டும் மிகத்தூரமானவர்களும் இவர்களே’ என்கிறார்.

ஹவாரிஜ்கள்

அறிமுகம்:
‘நேர்வழி நடந்த கலீபாவான அலி (ரழி) அவர்களுக்கு எதிராகப் புரட்சிகளில் ஈடுபட்டோர் ஹவாரிஜ்கள் ஆவர்’. ஆயினும் அறிஞர்களின் கூற்றுக்களில் இருந்து, இஸ்லாமிய ஆட்சியாளருக்கு எதிராகப் புரட்சி செய்பவர்கள் அனைவரும் இப்பெயர் கொண்டு அழைக்கப்படுவார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

உருவாக்கம்:
ஹவாரிஜ்கள் உருவான காலம் தொடர்பாகப் பல கருத்துக்கள் உள்ளன. அக்கருத்துக்களில் பிரதானமான கருத்தாக பின்வரும் கருத்து கருதப்படுகின்றது.

ஹிஜ்ரி 36 மற்றும் 37ல் நடைபெற்ற ஸிப்பீன் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகப் போரில் ஈடுபட்ட இருதரப்பினரும் முடிவு செய்தனர். அதற்காக ஸஹாபாக்களான அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி), அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) ஆகியோரை நடுவர்களாக நியமித்தனர். கலீபா அலி (ரலி) அவர்களின் தரப்பிலிருந்த சிலர் இதனை ஏற்றுக் கொள்ள மறுத்து அவருக்கெதிராகக் கிளர்ச்சி செய்தனர். தம் தரப்பிலுள்ள நியாயங்களைத் தெளிவுபடுத்துவதற்காக இவர்களுடன் கலீபா பல அமர்வுகளை நடத்தினார்கள். எனினும், கிளர்ச்சியாளர்கள் அலி (ரலி) அவர்களின் தரப்பிலிருந்த நியாயங்களை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். இதன் பின்னணியில் தான் கலீபா அலி (ரலி) அவர்களுக்கும் இக்கிளர்ச்சியாளர்களுக்குமிடையில் ஹிஜ்ரி 38ஆம் ஆண்டு ‘நஹ்ர்வான்’ என்ற இடத்தில் யுத்தம் மூண்டது.

பெயர்களும் பிரிவுகளும்:
இஸ்லாமிய அரசியல் வரலாற்றில் இவர்கள் ‘ஹரூரிய்யா’, ‘அஷ்ஷூராத்’, ‘அல்மாரிகா’, ‘அல் முஹக்கிமா’, ‘அந்நவாஸிப்’ போன்ற பல பெயர்களில் பிரபலமாகியுள்ளனர். மேலும், இவர்களுக்குள் பல உப பிரிவுகள் உள்ளன. இப்பிரிவுகளில் ‘அல்முஹக்கிமா’, ‘அல்அஸாரிகா’, ‘அந்நஜ்தாத்’, ‘அஸ்ஸஆலிபா’, ‘அல்இபாழிய்யா’, ‘அஸ்ஸபரிய்யா’ ஆகிய பிரிவுகள் முன்னணியில் திகழ்கின்றன.

கொள்கை:
இவர்கள் கலீபாக்களான உஸ்மான் (ரலி), அலி (ரலி) ஆகியோரையும், ஜமல் யுத்தத்தில் கலந்துகொண்ட ஸஹாபாக்களையும், ஸிப்பீன் யுத்தத்தில் நடுவர்களாக நியமிக்கப்பட்ட இரு ஸஹாபாக்களையும் இறை நிராகரிப்பாளர்கள் என்று கூறுகின்றனர். இது மட்டுமின்றி, நடுவர்களாக நியமிக்கப்பட்ட இரு ஸஹாபாக்களையும் ஏற்றுக் கொண்ட ஏனைய ஸஹாபாக்களையும் இறை நிராகரிப்பாளர்கள் என்றும் கூறுகின்றனர். அத்துடன் ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுவதைத் தங்களது அடிப்படைக் கோட்பாடாகக் கொண்டுள்ளனர். மேலும், பெரும்பாவங்களில் ஈடுபடுவது இறைநிராகரிப்பை ஏற்படுத்தும் என்பதையும் தங்களது அடிப்படைக் கோட்பாடாகக் கருதுகின்றனர்.

மார்க்கத் தீர்ப்பு:
ஹவாரிஜ்கள் இறை விசுவாசிகளா? அல்லது இறை நிராகரிப்பாளர்களா? என்பது குறித்து இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஹவாரிஜ்கள் இறை நிராகரிப்பாளர்கள் அல்ல என்பதே பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தும், ஸஹாபாக்களின் ஏகோபித்த முடிவுமாகும். கலீபா அலி (ரலி) அவர்களோ ஏனைய நபித்தோழர்களோ ஹவாரிஜ்களை இறை நிராகரிப்பாளர்கள் என்று கூறவில்லை. இவர்கள் முஸ்லிம்கள் ஆனால், எல்லை மீறிய அநியாயக்காரர்கள் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார்கள்.

குறிப்பு:
இத்துடன் பித்அத்வாதிகளின் பட்டியலில் இடம்பெறக்கூடிய சில குழுவினர் பற்றிய சுறுக்கமான தகவல் நிறைவு பெறுகின்றது. அவசியம் ஏற்படும் போது எனது விரிவுரையின் இடையில் இன்னும் பல விரிவான தகவல்களைத் தருகின்றேன்.
மேலும், பித்அத்வாதிகளில் உதாரணத்திற்காக எடுத்துக் கொண்டவர்களை மாத்திரமே இங்கு தெளிவுபடுத்தியுள்ளேன். அவர்களல்லாத இன்னும் பலர் உள்ளனர். அவர்களின் பெயர்கள் இடம்பெறும் போது அது குறித்த தகவல்களையும் உங்கள் பார்வைக்குத் தருகின்றேன்.

أهل السنة والجماعة. وهو الإيمان بالله وملائكته وكتبه

விளக்கம்:

(الجماعة)

இப்பதத்தின் மூலம் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு மனித கூட்டம் நாடப்படுகின்றது. அக்கூட்டமானது, அல்குர்ஆன் அஸ்ஸூன்னாவில் உறுதிப்படுத்தப்பட்டதாகவும், உண்மையில் ஒன்றிணைந்ததாகவும் காணப்படும். அவர்கள் ஸஹாபாக்களாகவும், அவர்களை கியாமத் நாள் வரை நல்லமுறையில் பின்பற்றி வருபவர்களாகவும் இருப்பர்.மேலும், அத்தகையவர்கள் சொற்ப தொகையினராக இருந்தாலும் சரியே! இதனைப் பின்வரும் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்களின் கூற்று தெளிவுபடுத்துகின்றது. ‘ஜமாஆத்தானது, எப்போதும் உண்மைக்கு உடன்பட்டதாக இருக்கும். அவ்வாறு உண்மைக்கு உடன்பட்டவர்களில் நீ மட்டும் இருந்தாலும், (அப்போது) நீயும் ஒரு ஜமாஅத்தாகவே கருதப்படுவாய்’.

(هو)

இப்பிரதிச் சொலின் மூலம் ‘வெற்றி பெறக்கூடிய கூட்டத்தின்அகீதா’ நாடப்படுகின்றது.

(الإيمان)

‘ஈமான்’ என்ற வார்த்தைக்கு அறபு மொழிக்கருத்தின் அடிப்படையில் ‘உண்மைப்படுத்தல்’ என்று பொருள் கொள்ளப்படும். இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டே பின்வரும் திருக்குர்ஆன் வசனமும் அமைந்துள்ளது.
‘நாம் உண்மையாளர்களாக இருந்தாலும் நீங்கள் எம்மை நம்புவோராக இல்லை’ (யூஸூப்:17) மேலும், மார்க்க அடிப்படையில் ‘ஈமான்’ என்பது, ‘(குறித்த ஓரு விடயத்தை) நாவால் மொழிவதும், மனதால் உறுதிப்படுத்துவதும், உருப்புக்களால் செயலுருப்படுத்துவதுமாகும்’.

(الإيمان بالله)

அல்லாஹ்வை ஈமான் கொள்வதில் பின்வரும் அம்சங்கள் உள்ளடங்குகின்றன.

  • அவனே அனைத்து வஸ்த்துக்களையும் படைத்துப் பரிபாலிப்பவன் என நம்புதல்.
  • அவனுக்கு பூரண பண்புகள் உள்ளன என நம்புதல்.
  • அவன் அனைத்து விதமான குற்றம் குறைகளுக்கும் அப்பாற்பட்டவன் என நம்புதல்.
  • அவன் மாத்திரமே வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் என நம்புதல்.

மேற்கூறப்பட்ட அடிப்படைகளை முறையாக அறிந்திருப்பதும், செயலுருப்படுத்துவதும் அல்லாஹ் பற்றிய நம்பிக்கையைப் பூரணப்படுத்தக் கூடியதாக இருக்கும்.

(وملائكته)

மலக்குகளைக் கொண்டு ஈமான் கொள்வதாகிறது, பின்வரக்கூடிய அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

  • மலக்குகள் என்ற ஒரு படைப்பு இருப்பதாக எற்றுக் கொள்ள வேண்டும்.
  • அல்லாஹூத்தஆலா, அல்குர்ஆனில் வர்ணித்துக் கூறியுள்ள பிரகாரம் அவர்களுக்கென்று தனியான பல பண்புகள் உள்ளன என நம்ப வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தைக் கவனிக்க.. ‘(அவர்கள் அவனுடைய) கண்ணியமிக்க அடியார்கள், சொல்லைக் கொண்டு அவனை அவர்கள் முந்தமாட்டார்கள், அவர்களோ அவனின் கட்டளையைக் கொண்டு செயல்படுவார்கள்.’ (அல் அன்பியா: 26,27)
  • அல்குர்ஆனும் அஸ்ஸூன்னாவும் மலக்குகளின் பிரிவினர் தொடர்பாகவும் அவர்களின் பண்புகள் தொடர்பாகவும் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்புகள் தொடர்பாகவும் சிலாகித்துப் பேசியுள்ளன. அவை அனைத்தையும் உள்ளபடி ஏற்றுக் கொள்வது எமது கடமையாகும்.

(وكتبه)

வேதங்களைக் கொண்டு ஈமான் கொள்வதாகிறது பின்வரக்கூடிய விடயங்களைப் பொதிந்ததாக இருக்கும்.

  • அல்லாஹ் தன் தூதர்களுக்கு இறக்கிவைத்த வேதங்களை உண்மைப்படுத்தல்.
  • அவ்வேதங்கள் அனைத்தும் அவனது பேச்சி என்று நம்புதல்.
  • அவ்வேதங்களில் இடம்பெற்றுள்ள அனைத்தும் உண்மையானதும், ஒளிமயமானதும், நேர்வழி காட்டக்கூடியதுமாக இருக்கும் என நம்புதல்.
  • அல்லாஹூத்தஆலா பெயர் குறிப்பிட்ட வேதங்களான தவ்ராத், இன்ஜீல், ஸபூர், குர்ஆன் ஆகியவற்றையும் பெயர் குறிப்பிடாத வேதங்களையும் நம்புதல்.

    وَرُسُلِهِ

    விளக்கம்:

    (وَرُسُلِهِ)

    இவ்வாசகத்தின் மூலம் ‘அல்லாஹ்வின் தூதர்கள்’ நாடப்படுகின்றார்கள். அத்தகையவர்கள், மார்க்க சட்டதிட்டங்களைக் கொண்டு வஹி மூலம் தெரியப்படுத்தப்பட்டவர்களாகவும், அவற்றை மக்கள் மன்றத்தில் எத்திவைக்கும் பொறுப்பு வழங்கப்பட்டவர்களாகவும் இருப்பர். அவர்களில் முதலாமவராக நூஹ் (அலை) அவர்களும், இறுதியானவராக முஹம்மத் (ஸல்) அவர்களும் இருக்கின்றார்கள்.

    உண்மையில் நூஹ் (அலை) அவர்கள் தூதர்களில் முதலாவது அனுப்பப்பட்டவர் என்பதற்கான ஆதாரங்கள் அல்குர்ஆனிலும் அஸ்ஸூன்னாவிலும் காணக்கூடியதாக இருக்கின்றன. அவற்றுள் பிரதானமான ஆதாரங்களை உங்கள் பார்வைக்குத் தருகின்றேன்.

    • அல்லாஹூத்தஆலா கூறுகின்றான்: ‘(நபியே!) நூஹூக்கும் அவருக்குப் பின் வந்த நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தவாறே, உமக்கும் நிச்சயமாக நாம் வஹீ அறிவித்தோம்’. (அன்னிஸா:163) இந்த வசனத்தில் நூஹ் (அலை) அவர்களுக்கும், அவர்களுக்குப் பிறகு வந்த நபிமார்களுக்கும் அல்லாஹூத்தஆலா வஹீ அறிவித்ததாகக் கூறுகின்றான். நிச்சயமாக அவ்வஹீயானது தூதுத்துவத்தைக் குறிக்கும் வஹீயாகத்தான் இருக்க வேண்டும்.
    • அல்லாஹூத்தஆலா கூறுகின்றான்: ‘மேலும், நூஹையும், இப்றாஹீமையும் திட்டமாக நாம் (நம்முடைய தூதர்களாக) அனுப்பிவைத்தோம் அவ்விருவருடைய சந்ததியில் நபித்துவத்தையும், வேதத்தையும் ஆக்கியிருந்தோம்’. (அல்ஹதீத்:26) இவ்வசனத்தில் மிகத் தெளிவாக தூதர்களாகிறவர்கள், நூஹ் (அலை) மற்றும் இப்றாஹீம் (அலை) ஆகியோரின் சந்ததியில் இருந்து அனுப்பப்பட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இப்படியிருக்க, அவ்விருவருக்கும் முன்வாழ்ந்தவர்களை எப்படி அவர்களின் சந்ததிகளாகக் கூற முடியும்?
    • அல்லாஹூத்தஆலா கூறுகின்றான்: ‘(இவர்கள் அனைவருக்கும்) முன்னர் நூஹூடைய சமூகத்தாரையும் (நாம் அழித்துவிட்டோம்). நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருந்தனர்’. (அத்தாரியாத்:46) இவ்வசனத்தில் இடம்பெறும் ‘ مِنْ قَبْلُ ‘ என்ற வார்த்தை ‘முன்னர்’ என்ற கருத்தை உணர்த்தி நிற்கின்றது. இக்கருத்தானது எல்லாத் தூதர்களுக்கும் ஆரம்பமாக நூஹ் (அலை) தூதராக அனுப்பப்பட்டார் என்ற கருத்தைப் பிரதிபளிக்கச் செய்கின்றது.

    எனவே மேற்குறிப்பிடப்பட்ட அல்குர்ஆன் வசனங்களில் இருந்து நூஹ் (அலை) அவர்களே முதலாவது அனுப்பப்பட்ட தூதர் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். இது தவிர இவ்வாதத்தை ஊர்ஜீதப்படுத்தும் செய்திகள் ஹதீஸ்களிலும் இடம்பெற்றுள்ளன. அவற்றில் மிகப்பிரதானமான ஒரு செய்தியை உங்கள் பார்வைக்குத் தருகின்றேன்.

    புகாரி (7440) முஸ்லிம் (194) ஆகிய கிரந்தங்களில் ஷபாஅத் தொடர்பாக இடம்பெற்ற ஒரு செய்தியில் மஹ்ஷர் மைதானத்தில் குழுமியிருக்கும் மக்கள் நூஹ் (அலை) அவர்களிடத்தில் வந்து ‘நீங்கள் தான் உலகத்தாருக்கு அல்லாஹூத்தஆலாவினால் அனுப்பப்பட்ட தூதர்களில் முதலாமவராக இருக்கின்றீர்கள் ……….’ என்று கூறுவார்கள். இச்செய்தி மிகப்பட்டவர்த்தனமாக நாம் மேலே எடுத்துரைத்த வாதத்தை உறுதி செய்யக்கூடியதாக இருக்கின்றது.

    ஆதம் (அலை) அவர்களைப் பொறுத்தவகையில் அவர் ஒரு நபியாக மாத்திரம் இருந்தார் என்பதே உறுதியான தகவலாகும். மேலும் இத்ரீஸ் (அலை) அவர்களைப் பொறுத்தவகையில் அதிகமான வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் சில அல்குர்ஆன் விரிவுரையாளர்கள் அவரை நூஹ் (அலை) அவர்களுக்கு முன்பு வாழ்ந்தவராகவும் நூஹ் (அலை) அவர்களின் மூதாதையர்களில் ஒருவராகவும் கூறுகின்றனர். ஆயினும் இக்கருத்து மிக பலவீனமானது என்பதை அல்குர்ஆன் அஸ்ஸூன்னா ஆதாரங்கள் தெளிவுபடுத்துகின்றன.

    وَالبَعْثِ بَعْدَ المَوْتِ

    விளக்கம்:

    மேலும், இறைத்தூதர்களில் இறுதியானவராக நபியவர்கள் உள்ளார்கள். இதனைப் பல ஆதாரங்கள் உறுதி செய்கின்றன. எடுத்துக்காட்டாக பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தைக் கவனிக்க.
    ‘எனினும், அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு (க் கடைசி) முத்திரையாகவும், (இறுதி நபியாகவும்) இருக்கிறார்’. (அல் அஹ்ஜாப்: 40)

    இவ்வசனத்தில் தூதர்களில் இறுதியானவர் என்று கூறாமல் நபிமார்களில் இறுதியானவர் என்று கூறப்பட்டுள்ளது.ஏனெனில், நபியவர்களுடன் நுபுவ்வத் நிறைவு பெற்றது என்று கூறுவதின் மூலம் தூதுத்துவமும் அவருடன் நிறைவு பெற்றது என்ற வாதம் உறுதியாகின்றது.

    நபிமார்களை ஈமான் கொள்வதில் உள்ளடங்கக்கூடிய அம்சங்கள்

    • நபிமார்கள் அனைவரும் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்டவர்கள் என நம்பிக்கை கொள்ளல்.
    • அவர்கள் அனைவரும் தமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றினார்கள் என நம்புதல்.
    • அவர்களுக்கு மத்தியில் எவ்வித ஏற்றத்தாழ்வும் பார்க்காதிருத்தல்.
    • மொத்தமாக அல்லாஹுத்தஆலா பெயர் குறிப்பிட்ட நபிமார்களையும் பெயர் குறிப்பிடாமல் விட்ட நபிமார்களையும் ஈமான் கொள்ளல்.
    • அல்லாஹ் சிறப்பித்துக் கூறியவர்களை சிறப்பித்தல். அதன் வரிசையில் ‘உலுல் அஸ்ம்’ எனும் நபிமார்கள் குழு முதலிடத்தை வகிக்கின்றனர். அவர்கள் முறையே, நூஹ் (அலை), இப்றாஹீம் (அலை), மூஸா (அலை), ஈஸா (அலை), முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆகியோர்களாவர். அவர்களைத் தொடர்ந்து ஏனைய தூதர்களும் பிறகு நபிமார்களும் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றனர். ஆயினும், அவர்கள் அனைவரையும் விட சிறப்புக்குரிய நபராக நபியவர்கள் இருக்கின்றார்கள் என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

    ‘நபி’, ‘ரஸூல்’ ஆகிய வார்த்தைகளுக்கிடையிலான வேறுபாடுகள் குறித்து பலரும் பல கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அவற்றுள் மிக ஏற்றமான கருத்தாகவும், பலரால் வரவேற்கத்தக்க கருத்தாகவும் பின்வரும் கருத்து அமையப்பெற்றுள்ளது.
    ‘நபியானவர், மார்க்க சட்டதிட்டங்களைக் கொண்டு வஹீ மூலம் தெரியப்படுத்தப்பட்டவராகவும், அதனை எத்திவைக்கும் பொறுப்பு வழங்கப்படாதவருமாக இருப்பார். ரஸூலானவர், மார்க்க சட்டதிட்டங்களைக் கொண்டு வஹீ மூலம் தெரியப்படுத்தப்பட்டவராகவும், அதனை மக்கள் மன்றத்தில் எத்திவைக்கும் பொறுப்பு வழங்கப்பட்டவராகவும் இருப்பார்’.

    (والبعث بعد الموت)

    இவ்வாசகமானது, மரணித்தவர்கள் தங்களது மண்ணறைகளைவிட்டும் உயிர் பெற்று எழுப்பப்படும் மறுமை நாள் குறித்த நம்பிக்கையைத் தெளிவுபடுத்துகின்றது. அவ்வாறு எழுப்பப்படுவதாகிறது, அவர்கள் உலகில் புரிந்த அமல்கள் குறித்து விசாரணை செய்யப்பட்டு கூலி கொடுக்கப்படுவதற்காகும். இது குறித்த வர்ணனைகள் அல் குர்ஆனிலும் அஸ்ஸுன்னாவிலும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. அவற்றை உள்ளபடி ஈமான் கொள்வது எமது கடமையாகும்.
    இவ்விடயம் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாத்தினரின் கொள்கை கோட்பாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. யுத கிரிஸ்தவர்கள் கூட இதுவிடயத்தில் தெளிவான கொள்கையை உடையவர்களாக இருக்கின்றனர்.

    அல்குர்ஆனில் இவ்விடயம் குறித்து அல்லாஹுத்தஆலா குறிப்பிடும் போது….

    ‘(மரணித்த பின்னர் நிச்சயமாக உயிர் கொடுத்து) அவர்கள் எழுப்பப்படவே மாட்டார்கள் என்று நிராகரிப்போர் எண்ணிக்கொண்டிருக்கின்றனர், (நபியே!) நீர் கூறுவீராக: ‘அவ்வாறல்ல! என் இரட்சகன் மீது சத்தியமாக! நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள்’. (அத்தகாபுன்: 7)

    ‘(மனிதர்களே!) பின்னர், நிச்சயமாக நீங்கள் இறப்பெய்தக் கூடியவர்கள். பின்னர், மறுமை நாளின் போது நிச்சயமாக நீங்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவீர்கள்’. (அல் முஃமினூன்: 15,16)

    மேலும், இது குறித்த பல செய்திகள் ஹதீஸ்களிலும் இடம்பெற்றுள்ளன. அவற்றையும் கருத்திற் கொண்டு மறுமை விடயத்தில் பூரண நம்பிக்கையுள்ள மக்களாக நானும் நீங்களும் ஆகுவோமாக!

    விதி பற்றிய விளக்கம்

    وَالإيْمَانُ بِالقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ

    விளக்கம்:
    இது ஈமானின் கடமைகளில் இறுதிப்பகுதியைத் தெளிவுபடுத்தும் வாசகமாகும். அதன்படி விதியைப்பற்றிய நம்பிக்கை, ஈமான் கொள்ள வேண்டியவற்றில் இறுதியானதும் மிக முக்கியமானதுமாக இருக்கின்றது. விதி எனும் பதத்திற்கு ‘கத்ர்’ என்று அறபு மொழியில் வழங்கப்படும். இப்பதத்தின் மூலம் அல்லாஹுத்தஆலாவினால் அனைத்து வஸ்துக்கள் மீதும் நிர்ணயம் செய்யப்பட்ட அளவீடு நாடப்படுகின்றது.

    அல்லாஹுத்தஆலா அந்நிர்ணயத்தை வானங்கள் மற்றும் பூமையைப் படைப்பதற்கு ஐம்பது ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாக எழுதியுள்ளான். இதனைப் பின்வரும் ஆதாரங்கள் தெளிவுபடுத்துகின்றன. திருமறையில் அல்லாஹுத்தஆலா பிரஸ்தாபிக்கும் போது:

    ‘நிச்சயமாக அல்லாஹ் வானத்திலும், பூமியிலும் இருப்பவற்றை நன்கறிகிறான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இவை (லவ்ஹூல் மஹ்பூல் எனும்) ஏட்டில் உள்ளது. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு எளிதானதாகும்.’ (அல் ஹஜ்: 70)

    நபியவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹுத்தஆலா வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பது ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாக படைப்பினங்களுக்கான விதியை எழுதிவிட்டான்.’ (முஸ்லிம்: 2653)

    (خَيْرِهِ وَشَرِّهِ)

    இது கத்ரினுடைய பண்புகளைப் பற்றிப் பேசும் வாசகமாகும். அதனடிப்படையில் கத்ரானது, நல்லதைக் கொண்டும் தீயதைக் கொண்டும் வர்ணிக்கப்பட்டுள்ளது. எனினும், அவற்றின் விளக்கங்கள் சற்று வேறுபடுகின்றன. கத்ரானது நல்லதாக இருப்பதைப் பொறுத்தளவில் அதன் விளக்கம் பட்டவர்த்தனமானது. ஆயினும், அது தீயதாக இருப்பதைப் பொறுத்தளவில் அதன் விளக்கத்தைச் சற்று விரிவாகப் பார்க்க வேண்டியுள்ளது.

    அல்லாஹுத்தஆலா நிர்ணயம் செய்த கத்ரின் தீய பண்பானது, அல்லாஹ்வின் நாட்டப்படி இடம்பெற்ற செயலில் உள்ள தீய தன்மையை பற்றிக் குறிப்பிடுகிறது. மாற்றமாக, அவனது செயலாகவுள்ள கத்ரின் தீங்கைப் பற்றிக் குறிப்பிடமாட்டாது. ஏனெனில், அல்லாஹ்வின் செயலில் தீயது கிடையாது. அவனது அனைத்துக் காரியங்களும் சிறப்புமிக்கதாகவும், ஞானமுடையாதாகவும் இருக்கின்றன. எனவே, இங்கு தீயதானது, இடம்பெற்ற செயலின் தன்மையைக் கருத்திற் கொண்டேயன்றி அவனின் செயலைக் கருத்திற் கொண்டல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வடிப்படையைக் கருத்திற் கொண்டு தான் நபியவர்கள்: ‘இறைவா! தீங்கு உனக்குறியதன்று’ என்று தனது பிரார்த்தனையில் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்: 771) மேலும், இவ்விடயத்தை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள பின்வரும் விளக்கத்தைக் கூர்ந்து கவனியுங்கள்…..

    நாம் அல்லாஹுத்தஆலாவின் படைப்புக்களில் மற்றும் நிர்ணயித்த அம்சங்களில் மனிதனுக்குத் தீங்கிழைக்கக்கூடிய பலவற்றை அவதானித்து வருகின்றோம். அந்தவிதத்தில் அவனது படைப்புக்களில் பாம்புகள், தேள்கள், வேட்டை மிருகங்கள், நோய்கள், ஏள்மை, வறுமை போன்ற பல அம்சங்களை இனங்காட்டலாம். இவை அனைத்தும் மனிதனுக்குக்கு உகந்ததாக அமையாததினால் தீயதாகக் கருதப்படுகின்றன. அதே போன்று பாவமான காரியங்கள், இறை நிராகரிப்பை எற்படுத்தக் கூடியவைகள், கொலை, கொள்ளை போன்றனவும் மேற்கூறப்பட்ட அடிப்படையைச் சாரும். எனவே, இவையனைத்தும் மனிதனுக்குத் தீயதாக இருந்தாலும் அல்லாஹ்விடத்தில் நன்மை பயக்கக்கூடியனவாக இருக்கின்றன. ஏனெனில், அல்லாஹுத்தஆலா இவற்றை மேலான ஞானத்தைக் கொண்டே நிர்ணயித்துள்ளான். அதனைப் புரியக்கூடியவர்கள் புரிந்து கொள்வார்கள், புரியாதவர்கள் மடமையில் சிக்கித்தவிர்ப்பார்கள்.

    விதி பற்றிய நம்பிக்கை

    மேலும், விதியாக அமையப்பெற்ற ஓர் அம்சம் சில சமயங்களில் தன்னிலே தீங்குடையதாக இருந்தாலும், வேறு ஒர் கோணத்தில் நோக்குகையில் அது நன்மை பயக்கக்கூடியதாகவும் இருக்கும். இவ்வடிப்படையை பின்வரும் திருக்குர்ஆன் வசனம் ஒப்புவைக்கின்றது.

    ‘மனிதர்களின் கைகள் சம்பாதித்த (தீய)வற்றின் காரணமாகக் கரையிலும், கடலிலும் (அழிவு) குழப்பம் வெளிப்பட்டுவிட்டன, அவர்கள் செய்த (தீய)வற்றில் சிலவற்றை அவர்களுக்கு அவன் சுவைக்கும்படிச் செய்வதற்காக (இவ்வாறு சோதித்தான், அதன் மூலம்) அவர்கள் (தவ்பாச் செய்து அவன் பால்) திரும்பிவிடலாம்’. (அர்ரூம்: 41)

    எனவே, இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள பிரகாரம் கரையிலும் கடலிலும் வெளிப்பட்டிருக்கும் அழிவு, மற்றும் குழப்பம் ஆகியன ஒரு விதத்தில் தீங்கானவையாக இருந்தாலும், மற்றொரு விதத்தில் மனிதனுக்கு நன்மை பயக்கக்கூடியனவாக இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம். அதனடிப்படையில், விதியாக அமையப்பெற்ற ஓர் அம்சத்தில் காணப்படும் தீங்கானது, அதனுடன் இணைக்கப்பட்ட ஓன்றாக அன்றி எதார்த்தமான தீங்காக இருக்காது என்ற முடிவுக்கு வரலாம். இதற்கான சில எடுத்துக்காட்டுகளாவன,

    திருமணம் செய்யாத ஒருவர் விபச்சாரம் செய்யும்போது அவருக்கு வழங்கப்படும் தண்டனையை சற்று சிந்தித்துப் பாருங்கள். உண்மையில் அத்தண்டனையானது குறித்த அந்நபருக்கு தீங்குடையாதாக இருந்தாலும் அவருக்கும், அத்தண்டனையை கண்ணுறக்கூடியவர்களுக்கும் அதில் பல நலவுகள் உள்ளன. அந்நலவுகளாவன,

    1. விபச்சாரம் செய்தவனுக்கு குறித்த அத்தண்டனை குற்றப்பரிகாரமாக அமைகின்றது.
    2. விபச்சாரத்திற்கு மறுமையில் வழங்கப்படவிருக்கும் தண்டனையைவிட உலகில் வழங்கப்படும் தண்டனை மிக இலகுவானது.
    3. குறித்த அத்தண்டனையைக் கண்ணுறக்கூடியவர்களுக்கு சிறந்த படிப்பினை கிடைக்கின்றது. அதனால் அவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதைவிட்டும் தூரமாவதற்கு வழியமைக்கின்றது.
    4. விபச்சாரம் செய்தவர் கூட இனிவரும் காலங்களில் தன்னால் இவ்வீனச் செயல் நடைபெறாதவிதத்தில் தற்காத்துக் கொள்வார்.

    மேலும், எமக்கேற்படக்கூடிய நோய்களை ஒரு கணம் சிந்தித்துப்பாருங்கள். உண்மையில் அந்நோய்கள் எமக்கு தீங்களிக்கக்கூடியனவாக இருந்தாலும், அவை தம்மிலே பல நலவுகளை கொண்டனவாகத் திகழுகின்றன. அந்நலவுகளாவன,

    1. எமது சிறுபாவங்களுக்கான குற்றப்பரிகாரமாக அமையும்.
    2. அல்லாஹ் எமக்களித்த ‘ஆரோக்கியம்’ என்ற அருட்கொடையின் பெறுமதியைப் புரிந்து கொள்ளலாம்.
    3. எமது உடம்பில் காணப்படுகின்ற சில வகையான கிருமிகளை அழிப்பதற்கு அந்நோய்கள் உறுதுணையாக இருக்கின்றன. இக்கருத்தை மருத்துவர்களின் ஆய்வுகளில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

    விதிபற்றிய மேலும் பல விளக்கங்கள் இருக்கின்றன. இமாமவர்கள் அடுத்து கூற இருக்கின்ற விடயம் விதியைப்பற்றியதாகவுள்ளதால் அதனைத் தெளிவுபடுத்தும் போது மேலதிக விளக்கங்களைக் காண்போம்.

    وَمِنَ الإيْمَانِ باللهِ : الإيْمانُ بِمَا وَصَفَ بِهِ نَفْسَهُ فِيْ كِتَابِهِ وَبِمَا وَصَفهُ بِهِ رَسُوْلُهُ مُحَمَّد صلى الله عليه وسلم

    விளக்கம்:

    அல்லாஹ் தொடர்பான வர்ணனை விடயத்தில் எமது நம்பிக்கை

    மேற்கூறப்பட்ட வாசகத்தில் இருந்து அல்லாஹ் தொடர்பாக அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னாவில் இடம்பெற்றிருக்கக்கூடிய வர்ணனைகள் விடயத்தில் எமது நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். மேலும், மேற்குறிப்பிடப்பட்ட வாசகமானது அல்லாஹ் தொடர்பான நம்பிக்கையின் ஒரு பகுதியாகும். அதாவது, அல்லாஹ்வை விசுவாசம் கொள்வதானது பிரதானமாக நான்கு விடயங்களை உள்ளடக்கியுள்ளது. அவையாவன,

    1. அவனின் இருப்பை விசுவாசம் கொள்ளல்.
    2. அவனை ருபூபிய்யாவைக் கொண்டு ஒருமைப்படுத்தல்.
    3. அவனை உழூஹிய்யாவைக் கொண்டு ஒருமைப்படுத்தல்.
    4. அவனை அவனது அல் அஸ்மாஉ வஸ்ஸிபாத்தைக் கொண்டு ஒருமைப்படுத்தல்.

    எனவே மேற்குறிப்பிடப்பட்ட வாசகமானது, நான்காம் பிரிவின் ஒருபகுதியான அல்லாஹ்வின் ஸிபாத் (பண்புகள்) பற்றிய நம்பிக்கையைத் தெளிவுபடுத்துகின்றது. அதனால் தான் எமது விளக்கத்தின் துவக்கத்தில் “அல்லாஹ் தொடர்பான நம்பிக்கையின் ஒரு பகுதி” என்று குறிப்பிட்டிருந்தோம்.

    (في كتابه) இங்கு كتابه என்ற வார்த்தையின் மூலம் அல்குர்ஆன் நாடப்படுகின்றது. மேலும், அல்லாஹுத்தஆலாவே அல்குர்ஆனுக்கு இப்பெயரைச் சூட்டியுள்ளான் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அது, லவ்ஹூல் மஹ்பூல் எனும் ஏட்டிலும், சங்கைமிக்க மலக்குகளின் கரங்களில் தவளக்கூடிய ஏடுகளிலும், எம்மத்தியில் காணப்படுகின்றன அல்குர்ஆன் பிரதிகளிலும் எழுதப்பட்டுள்ளது. எனவே, இங்கு كتاب (கிதாப்) என்ற பதத்தில் பயன்படுத்தப்பட்டாலும் مكتوب (எழுதப்பட்டது) என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம். மேலும், அல்லாஹுத்தஆலா இச்சொல்லை தன்னுடன் இணைத்துக் கூறியுள்ளான். அதற்குக் காரணம், அல்குர்ஆனானது அவனது வார்த்தையாக இருப்பதினாலாகும்.

    மேற்கூறப்பட்டுள்ள அறபு வாசகத்தில் விரிவாக ஆராயத்தக்க பல பகுதிகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்.

    1. அல்லாஹ்வை விசுவாசம் கொள்வதில், அவன் தன்னைப்பற்றி வர்ணித்த வி;டயங்களை விசுவாசம் கொள்வதும் உள்ளடங்கும். அதன் விளக்கமாவது,

    நாம் முன்பு குறிப்பிட்ட பிரகாரம், அல்லாஹ்வை விசுவாசம் கொள்வதில் அவனது அல் அஸ்மாஉ வஸ்ஸிபாத்களை விசுவாசம் கொள்வதும் உள்ளடங்கியுள்ளது. ஏனெனில், அல்லாஹுத்தஆலா தன்னைப்பற்றிக் குறிப்பிடும் போது, தனக்குத் தனியான பெயர்களும் பண்புகளும் இருப்பதாகக் கூறியுள்ளான். அவற்றையே நாம் “அல் அஸ்மாஉ வஸ்ஸிபாத்” என்கிறோம்.

    மேலும், இவ்விடயம் சாதாரணமாக அனைவரினாலும் ஏற்றுக் கொள்ள முடியுமான ஓர் உண்மையாகும். ஒருவன் எவ்விதப்பண்புகளும் இல்லாமல் இருக்கிறான் என்று கூறுவது சாத்தியமற்ற ஒன்றாகும். எந்த ஒன்றுக்கும் பண்புகள் அவசியம். அப்போது தான் அப்பொருள் இனம் காணப்படுகின்றது. இதனால் தான் அல்லாஹ் தொடர்பான நம்பிக்கையில் ஒரு பகுதியாக அவனது பண்புகளை விசுவாசம் கொள்வதும் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, அவனது பண்புகளை முழுமையாக விசுவாம் கொள்ளாதவன் அல்லாஹ்வை முழுமையாக விசுவாசம் கொள்ளாதவனைப் போலாவான்.

    2. அல்லாஹ்வின் பண்புகளானது மறைவான விடயங்களுடன் தொடர்புடையனவாகும். எனவே, மறைவான விடயங்களில் மனிதனின் நிலைப்பாடானது உள்ளதை உள்ளபடி நம்புவதாகும். அதைவிடுத்து மற்றொரு விளக்கத்தின் பால் செல்வது தடுக்கப்பட்ட காரியமாகும்.

    இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹுத்தஆலா தன்னை எவ்வாறு வர்ணித்துள்ளானோ அல்லது அவனது தூதர் எவ்வாறு அவனைப்பற்றி வர்ணித்துள்ளாரோ அவ்வாறன்றி வேறு விதங்களில் அவனை வர்ணிக்க முடியாது” என்கிறார். (மஜ்மூஉல் பதாவா)

    இக்கூற்றை உறுதி செய்யக்கூடிய பல ஆதாரங்களை அல்குர்ஆனில் இருந்து முன்வைக்கலாம். மேலும் புத்திரீதியான பல ஆதாரங்களும் கூட இதற்குள்ளன.

    அல்லாஹூத்தஆலா கூறுகின்றான்: ‘என்னுடைய இரட்சகன் (ஆகாதென்று) தடுத்திருப்பதெல்லாம் மானக்கேடான செயல்களை அவற்றில் வெளிப்படையானதையும், மறைமுகமானதையும், (இதர) பாவத்தையும், உரிமையின்றி வரம்பு மீறுதலையும், அல்லாஹ்விற்கு நீங்கள் இணைவைப்பதையும் அதற்கு எந்தவித ஆதாரத்தையும் அவன் இறக்கிவைக்காதிருக்க, இன்னும் நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவதையும் தான்’ என்று (நபியே) நீர் கூறுவீராக! (அல் அஃராஃப்: 33)

    மேற்கூறப்பட்ட வசனத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் ஒருவர் அல்லாஹ்வை அவன் வர்ணித்தற்கு மாற்றமாக வர்ணிக்க எத்தனிப்பது தனக்கு அறிவில்லா ஒன்றில் தலையை நுழைப்பதற்குச் சமனாகும். எனவே, இவ்வாறு நடந்து கொள்வது ஹராமாக்கப்பட்டுள்ளது என்பதை மேற்கூறப்பட்ட வசனத்தில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

    பிறிதோர் இடத்தில் அல்லாஹ் பிரஸ்தாபிக்கும் போது, ‘ (நபியே!) எதைப்பற்றி உமக்குத் தீர்க்கமான அறிவில்லையோ அதை நீர் பின் தொடராதீர்! (ஏனெனில்) நிச்சயமாக, செவி, பார்வை, இதயம் (ஆகிய) இவை ஒவ்வொன்றும் – அதனைப் பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படக்கூடியதாக இருக்கின்றது.’ (பனீ இஸ்ராயீல்: 17)

    இவ்வசனத்தில் கூட எவ்விடயத்தில் எமக்குத் தீர்க்கமான அறிவில்லையோ அவ்விடயத்தில் நாம் ஈடுபடலாகாது என்ற பாடம் புகட்டப்பட்டுள்ளது. அதையும் மீறி எவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்களோ நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வால் தடுக்கப்பட்ட ஒன்றில் ஈடுபட்டவர்களாகிவிடுவர்.

    நாம் மேலே குறிப்பிட்ட பிரகாரம் அல்லாஹ்வுடைய பண்புகளானது மறைவான விடயங்களுடன் சம்பந்தப்பட்டவையாகும். அவற்றை புத்தியின் மூலம் அணுகமுடியாது. எனவே, அவனை அவன் வர்ணித்த வர்ணனைகள் மூலமன்றி எம் இஷ்டப்படி வர்ணிப்பதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். மேலும், அவன் எமக்கு இனங்காட்டித்தந்த வர்ணனைகளைக்கூட எம் கற்பனைக்குத்தக்கவிதத்தில் பயன்படுத்தி உருவமைத்துவிடவும் முடியாது. இந்த அடிப்படையை அல்லாஹ் விடயத்தில் நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

    உதாரணமாக, சுவனத்து இன்பங்கள் தொடர்பான எத்தனையோ வர்ணனைகளை நாம் குர்ஆன் ஹதீஸ் மூலாதாரங்களில் இருந்து தெரிந்து வைத்துள்ளோம். ஆயினும் அவை முழுமையாக படைக்கப்பட்டிருந்தும் எங்களில் எவராலும் அதனுடைய உண்மையான அமைப்பை விளக்கிக் கொள்ள முடியாதுள்ளது. சான்றாக, சுவனவாசிகளுக்கு சித்தப்படுத்தி வைக்கப்பட்டுள்ள கனிகள் மற்றும் அக்கனிகளில் உள்ளடங்கக்கூடிய பேரீச்சம் பழம், மாதுளை போன்ற பல கனி வர்க்கங்களை எடுத்துக் கொள்வோம். அவை எமக்கு நன்கு அறிமுகமான கனிகளாக இருந்தாலும் அதன் எதார்த்த தன்மையை எங்களால் கூற முடியாது இருக்கின்றது. அதேநேரத்தில் அவ்வின்பங்கள் பற்றி சற்று வர்ணிக்குமாறு எம்மிடத்தில் வினவப்பட்டாலும் எங்களால் முழுமையாக அதன் இன்பங்களை வர்ணித்துக் கூற முடியாது. காரணம், அல்லாஹ் சுவனம் பற்றிக் குறிப்பிடும் போது, ‘ ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்குக் கூலியாக, அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கனிகளின் குளிர்ச்சியை எந்த ஒர் ஆத்மாவும் அறியாது’ என்கிறான். (அஸ்ஸஜ்தா: 17)

    மேலும், ஹதீஸூல் குத்ஸியில் அல்லாஹ் கூறும் போது, ‘நான் என்னுடைய ஸாலிஹான அடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திறாத, எந்தக் காதும் கேட்டிறாத, எந்த மனித உள்ளமும் கற்பனை செய்திறாத சுவனத்தை தயார் செய்து வைத்துள்ளேன்’ என்கிறான். எனவே, படைக்கப்பட்டு பண்புகளில் பல இனங்காட்டப்பட்ட ஒரு படைப்பையே எம்மால் புரிந்து கொள்ள முடியாதுள்ள நிலையில் எவ்வாறு படைப்பாளனான அல்லாஹ்வைப்பற்றி கற்பனை செய்ய முடியும் ?!!!

    மேலும் புரிந்து கொள்வதற்காக பிறிதோர் உதாரணத்தை முன்வைக்கின்றேன். எம்முடன் இருக்கும் ரூஹைப்பற்றி உங்களில் எவரும் சிந்தித்ததுண்டா? அணு தினமும் அது எம்முடன் இருந்தும் அதனைப்பற்றி அறிவற்றவர்களாகவுள்ளோம். உண்மையில் அர்ரூஹானது கைப்பற்றப்படும் போது கண்களால் பார்க்கமுடியுமான ஒன்றாக இருந்தும் கூட எம்மால் அதனைப் பற்றி வர்ணிக்க முடியாதுள்ளது. காரணம் அதன் வர்ணனைகளில் அல்லாஹ் தெரியப்படுத்தியதைத் தவிர வேறு எதனையும் எம்மால் கூற முடியாததேயாகும். இவ்வாறிருக்க, எப்படி ஒருவர் அல்லாஹ்வின் பண்புகளைக் கண்டறிவதில் தன் சிந்தனையை முடுக்கிவிடுவதை காத்திரமான செயல் எனக்கூற முடியும்?!!!

    எனவே, அல்லாஹ்வின் பண்புகளை உள்ளபடி நம்புவதே எமது கடமை. அதைவிடுத்து அவற்றை விளக்கிக்கூற எத்தனிப்பது தனது மடமையின் வெளிப்பாடே!!! அல்லாஹ் எம்மனைவரையும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதைவிட்டும் பாதுகாப்பானாக.

    இக்கூற்றை உறுதி செய்யக்கூடிய பல ஆதாரங்களை அல்குர்ஆனில் இருந்து முன்வைக்கலாம். மேலும் புத்திரீதியான பல ஆதாரங்களும் கூட இதற்குள்ளன.

    அல்லாஹூத்தஆலா கூறுகின்றான்: ‘என்னுடைய இரட்சகன் (ஆகாதென்று) தடுத்திருப்பதெல்லாம் மானக்கேடான செயல்களை அவற்றில் வெளிப்படையானதையும், மறைமுகமானதையும், (இதர) பாவத்தையும், உரிமையின்றி வரம்பு மீறுதலையும், அல்லாஹ்விற்கு நீங்கள் இணைவைப்பதையும் அதற்கு எந்தவித ஆதாரத்தையும் அவன் இறக்கிவைக்காதிருக்க, இன்னும் நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவதையும் தான்’ என்று (நபியே) நீர் கூறுவீராக! (அல் அஃராஃப்: 33)

    மேற்கூறப்பட்ட வசனத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் ஒருவர் அல்லாஹ்வை அவன் வர்ணித்தற்கு மாற்றமாக வர்ணிக்க எத்தனிப்பது தனக்கு அறிவில்லா ஒன்றில் தலையை நுழைப்பதற்குச் சமனாகும். எனவே, இவ்வாறு நடந்து கொள்வது ஹராமாக்கப்பட்டுள்ளது என்பதை மேற்கூறப்பட்ட வசனத்தில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

    பிறிதோர் இடத்தில் அல்லாஹ் பிரஸ்தாபிக்கும் போது, ‘ (நபியே!) எதைப்பற்றி உமக்குத் தீர்க்கமான அறிவில்லையோ அதை நீர் பின் தொடராதீர்! (ஏனெனில்) நிச்சயமாக, செவி, பார்வை, இதயம் (ஆகிய) இவை ஒவ்வொன்றும் – அதனைப் பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படக்கூடியதாக இருக்கின்றது.’ (பனீ இஸ்ராயீல்: 17)

    இவ்வசனத்தில் கூட எவ்விடயத்தில் எமக்குத் தீர்க்கமான அறிவில்லையோ அவ்விடயத்தில் நாம் ஈடுபடலாகாது என்ற பாடம் புகட்டப்பட்டுள்ளது. அதையும் மீறி எவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்களோ நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வால் தடுக்கப்பட்ட ஒன்றில் ஈடுபட்டவர்களாகிவிடுவர்.

    நாம் மேலே குறிப்பிட்ட பிரகாரம் அல்லாஹ்வுடைய பண்புகளானது மறைவான விடயங்களுடன் சம்பந்தப்பட்டவையாகும். அவற்றை புத்தியின் மூலம் அணுகமுடியாது. எனவே, அவனை அவன் வர்ணித்த வர்ணனைகள் மூலமன்றி எம் இஷ்டப்படி வர்ணிப்பதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். மேலும், அவன் எமக்கு இனங்காட்டித்தந்த வர்ணனைகளைக்கூட எம் கற்பனைக்குத்தக்கவிதத்தில் பயன்படுத்தி உருவமைத்துவிடவும் முடியாது. இந்த அடிப்படையை அல்லாஹ் விடயத்தில் நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

    உதாரணமாக, சுவனத்து இன்பங்கள் தொடர்பான எத்தனையோ வர்ணனைகளை நாம் குர்ஆன் ஹதீஸ் மூலாதாரங்களில் இருந்து தெரிந்து வைத்துள்ளோம். ஆயினும் அவை முழுமையாக படைக்கப்பட்டிருந்தும் எங்களில் எவராலும் அதனுடைய உண்மையான அமைப்பை விளக்கிக் கொள்ள முடியாதுள்ளது. சான்றாக, சுவனவாசிகளுக்கு சித்தப்படுத்தி வைக்கப்பட்டுள்ள கனிகள் மற்றும் அக்கனிகளில் உள்ளடங்கக்கூடிய பேரீச்சம் பழம், மாதுளை போன்ற பல கனி வர்க்கங்களை எடுத்துக் கொள்வோம். அவை எமக்கு நன்கு அறிமுகமான கனிகளாக இருந்தாலும் அதன் எதார்த்த தன்மையை எங்களால் கூற முடியாது இருக்கின்றது. அதேநேரத்தில் அவ்வின்பங்கள் பற்றி சற்று வர்ணிக்குமாறு எம்மிடத்தில் வினவப்பட்டாலும் எங்களால் முழுமையாக அதன் இன்பங்களை வர்ணித்துக் கூற முடியாது. காரணம், அல்லாஹ் சுவனம் பற்றிக் குறிப்பிடும் போது, ‘ ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்குக் கூலியாக, அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கனிகளின் குளிர்ச்சியை எந்த ஒர் ஆத்மாவும் அறியாது’ என்கிறான். (அஸ்ஸஜ்தா: 17)

    மேலும், ஹதீஸூல் குத்ஸியில் அல்லாஹ் கூறும் போது, ‘நான் என்னுடைய ஸாலிஹான அடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திறாத, எந்தக் காதும் கேட்டிறாத, எந்த மனித உள்ளமும் கற்பனை செய்திறாத சுவனத்தை தயார் செய்து வைத்துள்ளேன்’ என்கிறான். எனவே, படைக்கப்பட்டு பண்புகளில் பல இனங்காட்டப்பட்ட ஒரு படைப்பையே எம்மால் புரிந்து கொள்ள முடியாதுள்ள நிலையில் எவ்வாறு படைப்பாளனான அல்லாஹ்வைப்பற்றி கற்பனை செய்ய முடியும் ?!!!

    மேலும் புரிந்து கொள்வதற்காக பிறிதோர் உதாரணத்தை முன்வைக்கின்றேன். எம்முடன் இருக்கும் ரூஹைப்பற்றி உங்களில் எவரும் சிந்தித்ததுண்டா? அணு தினமும் அது எம்முடன் இருந்தும் அதனைப்பற்றி அறிவற்றவர்களாகவுள்ளோம். உண்மையில் அர்ரூஹானது கைப்பற்றப்படும் போது கண்களால் பார்க்கமுடியுமான ஒன்றாக இருந்தும் கூட எம்மால் அதனைப் பற்றி வர்ணிக்க முடியாதுள்ளது. காரணம் அதன் வர்ணனைகளில் அல்லாஹ் தெரியப்படுத்தியதைத் தவிர வேறு எதனையும் எம்மால் கூற முடியாததேயாகும். இவ்வாறிருக்க, எப்படி ஒருவர் அல்லாஹ்வின் பண்புகளைக் கண்டறிவதில் தன் சிந்தனையை முடுக்கிவிடுவதை காத்திரமான செயல் எனக்கூற முடியும்?!!!

    எனவே, அல்லாஹ்வின் பண்புகளை உள்ளபடி நம்புவதே எமது கடமை. அதைவிடுத்து அவற்றை விளக்கிக்கூற எத்தனிப்பது தனது மடமையின் வெளிப்பாடே!!! அல்லாஹ் எம்மனைவரையும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதைவிட்டும் பாதுகாப்பானாக.

    1. அல்லாஹ் குறித்து குர்ஆன் ஹதீஸ் மூலாதாரங்களில் இடம்பெற்றுள்ளவற்றிற்கு வெளிப்படையான கருத்தை மாத்திரமே கொடுக்க வேண்டும். அவற்றில் எல்லை மீறிவிடக்கூடாது. உதாரணமாக, அல்லாஹ் தனக்கு கண் இருப்பதாக தன்னை வர்ணித்துள்ளான். அவ்வர்ணனையைக் கருத்திற் கொண்டு அதற்கு வியாக்கியானம் செய்யும் போது, கண் என்ற வாசகமானது எதார்த்தமாக கண்ணைக் குறிக்காது மாற்றமாக, அதன் மூலம் அவனது பார்வைதான் நாடப்படுகிறது என்று கூறலாகாது.

    அதே போன்று அவனுக்கு இரு கைகள் இருப்பதாக அல்மாயிதா அத்தியாயத்தின் 64ம் வசனத்தில் கூறப்பட்டுள்ளது. அவ்வசனத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய இரு கைகள் என்ற வார்த்தையானது, அவனது எதார்த்தமான கைகளைக் குறிக்காது மாற்றமாக, தனது அடியார்களுக்கு அருள் புரியத்தக்க அருட்கொடைகளைத் தன்வசம் வைத்திருப்பதாகக் கூறுவதைக் குறிப்பிடுகிறது என்று விளக்கம் கூறக்கூடாது. எனவே, சிந்தித்துப்பாருங்கள்! அல்லாஹ்வை இவ்வாறெல்லாம் வர்ணிப்பது அவன் தன்னைப்பற்றி வர்ணித்த வர்ணனையைப்போலாகுமா ?!!!

    2. பொதுவாக இமாமவர்கள் குறிப்பிட்ட, ‘அல்லாஹ்வின் பண்புகள்’ என்ற வாசகமானது அல்லாஹ் தன்னைப்பற்றி வர்ணித்த அனைத்து வகையான பண்புகளையும் உள்ளடக்கியிருக்கின்றது. ஏனெனில், அல்லாஹ்வின் பண்புகளைப் பிரதானமாக இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

    1. அவனது தன்மை சார்ந்த பண்புகள்
    இவ்வகைப் பண்புகளைப் பொருத்தளவில், அவை எப்போதும் அவனுக்கு நிலைத்திருக்கக்கூடிய பண்புகளாக இருக்கும். இதனுள் பிரதானமாக இரு பிரிவுகள் உள்ளடங்குகின்றன.

    1. கருத்து சார்ந்த பண்புகள்
    இவ்வகைப்பண்புகளுக்கு உதாரணங்களாக வெட்கம், அறிவு, ஆற்றல், ஞானம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

    2. விடயம் சார்ந்த பண்புகள்
    இவ்வகையான பண்புகளுக்கு உதாரணங்களாக இரு கரங்கள், முகம், இரு கண்கள் போன்றவற்றைக் குறி;ப்பிடலாம்.

    எனவே, நாம் மேலே குறிப்பிட்ட பண்புகளானது என்றென்றும் அல்லாஹ்வுக்கு நிலைத்திருக்கக்கூடிய பண்புகளாகும். அவை எச்சந்தர்ப்பத்திலும் அவனை விட்டும் நீங்கிவிடாது. இதனைக் கருத்திற்கொண்டுதான் அறிஞர்கள் இத்தகைய பண்புகளை அல்லாஹ்வின் தன்மை சார்ந்த பண்புகள் என்ற பட்டியலில் உள்ளடக்கியுள்ளனர்.

    2. அவனது செயல் சார்ந்த பண்புகள்
    இவ்வகைப்பண்புகள் முழுமையாக அல்லாஹ்வின் நாட்டத்துடன் தொடர்புள்ள பண்புகளாகும். இதனுள் இரு பிரிவுகள் உள்ளடங்குகின்றன.

    1. காரணம் அறியப்பட்ட பண்புகள்
    இத்தகைய பண்புகளுக்கு உதாரணமாக அவனது திருப்பொருத்தத்தைக் குறிப்பிடலாம். ஏனெனில், அவனது திருப்பொருத்தத்திற்குத் தக்க காரணம் பெறப்படும்போது அப்பொருத்தமானது உரியவருக்குக் கிடைக்கின்றது. இவ்வடிப்படையைப் பின்வரும் அல்குர்ஆன் வசனத்தில் காணலாம்.

    ‘(அவனை) நீங்கள் நிராகரித்துவிட்டால், நிச்சயமாக அல்லாஹ், உங்களைவிட்டும் தேவையற்றவன், இன்னும், தன் அடியார்களிடத்தில் நிராகரிப்பை அவன் பொருந்திக்கொள்வதில்லை, மேலும், நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்தினால், உங்களுக்காக அதனை அவன் திருப்தியடைவான்.’ (அல் ஜூமர்:39)

    2. காரணம் அறியப்படாத பண்புகள்
    இத்தகைய பண்புகளுக்கு உதாரணமாக இரவின் கடைசி மூன்றில் ஒரு பகுதியில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்குகிறான் என்ற செய்தியைக் குறிப்பிடலாம்.

    அல்லாஹ்வின் தன்மை மற்றும் செயல் சார்ந்த அம்சங்களை ஒரே பண்பில் ஒன்றித்ததாகவும் சில பண்புகள் உள்ளன. அவற்றை அதற்குரிய கோணத்தில் அணுகுவதின் மூலம் இத்தன்மையைக் கண்டு கொள்ளலாம். உதாரணமாக அவனது பேசுதல் என்ற பண்பை எடுத்துக் கொள்வோம். இப்பண்பானது அவனது பேசும் ஆற்றல் என்ற தன்மையுடனும், அவனது பேசுதல் என்ற செயலுடனும் தொடர்புடையதாக இருக்கின்றது. இருப்பினும் இத்தகைய பண்புகள் அவனது செயலுடன் கூடிய தொடர்பினைக் கொண்டிருப்பதனால் அறிஞர்கள் அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகளில் உள்ளடக்குகின்றனர்.

    مِنْ غَيْر تحْرِيْفٍ وَلا تعْطِيْلٍ وَمِنْ غَيْر تكْيِيْفٍ وَلا تمْثِيْلٍ

    விளக்கம்:
    நாம் முன்பு பார்த்த விளக்கங்களில் இருந்து அல்லாஹ்வின் பண்புகள் விடயத்தில் எமது நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

    மேற்குறிப்பிடப்பட்ட அறபு வாசகமானது நாம் முன்பு புரியவைத்த அம்சங்களை வலுப்படுத்தக்கூடயதாக இருக்கின்றது. அதாவது, அல்லாஹ்வின் பண்புகள் விடயத்தில் இமாமவர்கள் அறபியில் குறிப்பிட்ட تحريف تعطيل , تكييف , تمثيل ஆகிய செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடாது.

    التحريف

    (அத்தஹ்ரீப்)

    அத்தஹ்ரீப் எனும் பதத்திற்கு மாற்றுதல், ஒரு விடயத்தினுடைய எதார்த்த கருத்தில் இருந்து சாய்ந்து செல்லுதல் போன்ற கருத்துக்கள் உள்ளன. இப்பதமானது அல்லாஹ்வின் பண்புகள் விடயத்தில் பிரயோகிக்கப்படும் போது அதன் விளக்கமாவது, ‘அல்லாஹ்வின் பண்புகள் உணர்த்தும் எதார்த்தமான கருத்தை விடுத்து வேறு ஒரு கருத்தின் பால் நாடிச்செல்லல்’ என்று அமையும். பொதுவாக இத்தகைய நடவடிக்கையை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

    1. சொல் ரீதியான மாற்றம்
    2. கருத்து ரீதியான மாற்றம்

    சொல் ரீதியான மாற்றம்
    இப்பிரிவானது ஒரு சொல்லின் தன்மையில் மாற்றத்தை ஏற்படுத்துவதைக் குறிக்கின்றது. அத்தகைய மாற்றமானது, ஒரு சொல்லை அல்லது எழுத்தை அதிகரிப்பது அல்லது குறைப்பதின் மூலமோ அல்லது, உயிர்க்குறியீடுகளில் மாற்றம் ஏற்படுத்துவதின் மூலமோ இடம்பெறலாம். இதனைப் புரிந்து கொள்வதற்காக சில நவீன வாதிகளின் திருவிளையாடல்களைத் தருகின்றேன்.

    - الرَّحْمنُ عَلى العَرْشِ اسْتَوَى இவ்வசனத்தின் ஈற்றில் இடம்பெற்றிருக்கக்கூடிய சொல்லான اسْتَوَى என்ற சொல்லில் ஒரு لَ ஐ அதிகரித்து اسْتوْلَى என்று மாற்றம் செய்து குறித்த அச்சொல்லின் கருத்தில் திருப்பம் செய்துள்ளனர்.

    -وَجَاءَ رَبُّكَ என்ற திருக்குர்ஆன் வசனத்தில் رَبُّكَ என்ற சொல்லுக்கு முன்னால் أمْرُ என்ற சொல்லை அதிகரித்து கருத்தில் மாற்றம் செய்துள்ளனர்.

    وَكَلَّمَ الله مُوْسَى تكلِيْمَا என்ற வசனத்தில் الله என்று இடம்பெற்றிருக்கக்கூடிய வார்த்தைக்கு வரக்கூடிய ـُ ஐ ـَ ஆக மாற்றி வியக்கியானம் செய்துள்ளனர்.

    இவையனைத்தும் அல்லாஹ்வின் பண்புகளை மறுக்கக்கூடியவர்களின் திருவிளையாடல்களாகும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் வார்த்தைகளில் மிக உண்மையான அல்லாஹ்வின் வார்த்தையில் தம் இஷ்டப்படி விளையாடியுள்ளனர். அது மாத்திரமின்றி, அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு தம் கொள்கை கோட்பாடுகளுக்கு இயங்கும் விதத்தில் விளக்கமும் கொடுத்துள்ளனர். இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதைவிட்டும் அல்லாஹ் எம்மனைவரையும் பாதுகாப்பானாக!

    குறிப்பு:
    -استوى என்ற வார்த்தைக்கு உயர்ந்து நிலைபெற்றுவிட்டான் என்றும் استولى என்ற வார்த்தைக்கு ஆக்கிரமித்தான் என்றும் பொருள் கொள்ளப்படும். எனவே, அல்லாஹ் அர்ஷின் மீது உயர்ந்து நிலை பெற்றுவிட்டான் என்று வியாக்கியானம் செய்வதற்குப் பதிலாக அவன் அர்ஷை ஆக்கிரமித்தான் என்று வியாக்கியானம் செய்துள்ளனர்.

    -وجاء ربك என்ற வசனத்திற்கு உமது இரட்சகன் வரும் போது… என்று பொருளாகும். இவ்வசனத்திற்கு விளக்கம் கூற முற்பட்ட சில நவீன வாதிகள் أمر ربك என்று வசனத்தை திரிவுபடுத்தி, அல்லாஹ்வின் கட்டளை வரும் போது என்று வியாக்கியானம் செய்து அல்லாஹ்வின் உண்மையான வருகையை மறுத்துரைத்துள்ளனர்.

    -وكلم الله موسى تكليما என்ற வசனத்தில் الله என்ற வார்த்தையின் இறுதியில் ـُ வந்துள்ளது. அவ்வாறு ـُ வந்தால், அல்லாஹ் மூஸா நபியுடன் பேசினான் என்று பொருளாகும். அல்லாஹ்வின் பண்புகளை மறுக்கக்கூடியவர்கள் அல்லாஹ்வின் பேசுதல் என்ற பண்பை மறுக்கும் விதத்தில் الله என்ற வார்த்தைக்கு ـُ க்குப் பதிலாக ـَ ஐ செய்துள்ளனர். இவ்வாறான மாற்றம், குறித்த அவ்வசனத்தில் இடம்பெறும் போது, மூஸா நபிதான் அல்லாஹ்வுடன் பேசினார் அல்லாஹ் அவருடன் பேசவில்லை என்று கருத்தில் மாற்றம் ஏற்படும்.

    கருத்து ரீதியான மாற்றம்
    ஒரு சொல்லினுடைய அமைப்பை விட்டும் விலகி அதன் எதார்த்த கருத்தைக் கொடுக்காது வேறு ஒரு சொல்லி;ன் கருத்தை அதற்கு வழங்கும் செயற்பாடே கருத்து ரீதியான மாற்றமாகும். இவ்வகைச் செயற்பாட்டுக்கு உதாரணமாக சில நவீன வாதிகளின் விளக்கங்களைத் தருகிறேன்.

    الرحمة

    (அர்ரஹ்மத்) என்ற வார்த்தைக்கு ‘அருள் புரிய நாடுதல்’ என்று விளக்கம் கூறியமை.

    الغضب

    (அல்களப்) என்ற வார்த்தைக்கு ‘பலிவாங்க நாடுதல்’ என்று விளக்கம் கூறியமை.

    التعطيل

    (அத்தஃதீல்)
    ‘அத்தஃதீல்’ என்ற சொல்லுக்கு ‘கலைதல்’ என்று பொருளாகும். அல்லாஹ்வின் பண்புகள் விடயத்தில் இச்சொல் பயன்படுத்தப்பட்டால், அல்லாஹ்வைவிட்டும் அனைத்து வகையான பண்புகளையும் கலைவதாகப் பொருள் கொள்ளப்படும். இச்செயற்பாட்டின் போது சரியான கருத்துக்குப் பிரதியாக வேறு கருத்தைத் தெரிவிக்கக்கூடிய ஒரு சொல் முன்வைக்கப்படமாட்டாது என்பதையும் கவனத்தில் கொள்க.

    التكييف

    (அத்தக்யீப்)
    இச்செயற்பாடானது ஒரு பண்பின் வர்ணனையின் அமைப்பை தெளிவுபடுத்துவதைக் குறிக்கின்றது. ஒருவன் அல்லாஹ்வின் பண்புகளின் அமைப்பை சித்தரித்துக் காண்பிக்கும் போது அவன் ‘அத்தக்யீப்’ எனும் செயற்பாட்டில் ஈடுபட்டவனாகக் கருதப்படுகின்றான். இத்தகைய சித்தரித்தல் முறையை எப்போதும் ஒரு மனிதனால் செய்துவிட முடியாது. ஏனெனில், அவையனைத்தும் மறைவான அறிவுடன் சம்பந்தப்பட்டவைகளாகும். எப்படி அல்லாஹ்வை மனிதனால் அறிந்து கொள்ள முடியாதோ அதேபோன்று அவனது பண்புகளின் எதார்த்த தன்மையையும் அறிந்து கொள்ள முடியாது. இதனால் தான் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடத்தில் الرحمن على العرش استوى என்ற வசனத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய استوى என்ற சொல்லின் விளக்கத்தைப்பற்றி வினவப்பட்டபோது பின்வருமாறு பதிலளித்தார்கள்.

    ‘இஸ்திவா என்ற சொல் அறிமுகமானது, அதனுடைய அமைப்பு அறிமுகமற்றது, அதனை விசுவாசம் கொள்வது வாஜிபாகும், அதனைப்பற்றி வினாத்தொடுப்பது நூதன அனுஷ்டானம் – பித்ஆத் – ஆகும்.’
    இமாமவர்கள் அளித்த இந்த பதில் பொதுவாக அல்லாஹ்வின் அனைத்து பண்புகள் விடயத்திலும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

    التمثيل

    அத்தம்ஸீல்
    இச்சொல் ஒப்பிடுதலைக் குறிக்கின்றது. அதாவது நிச்சயமாக அல்லாஹ்வின் பண்புகளானது படைப்பினங்களின் பண்புகளை ஒத்ததாக இருக்கின்றன என்று கூறுவதாகும். உதாரணமாக, அல்லாஹ்;வுடைய கை எங்களுடைய கைகளைப் போன்றிருக்கின்றது என்று கூறுவதாகும். இப்படி அல்லாஹ்வின் பண்புகளை படைப்பினங்களின் பண்புகளுடன் ஒப்பிடுவது அல்குர்ஆனின் போதனைக்கு மாற்றமான செயலாகும். அதற்குச் சான்றாக பின்வரும் வசனத்தை குறிப்பிடலாம்.

    ‘அவனைப் போன்று எப்பொருளும் இல்லை, அவனே (யாவற்றையும்) செவியேற்கிறவன், பார்க்கிறவன்.’ (அஷ்ஷுரா: 42)

    எனவே, ஏகத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விசுவாசி, அல்லாஹ்வினுடைய அனைத்துப் பண்புகளையும் அவனது அந்தஸ்திற்குத் தக்கவிதத்தில் இருப்பதாகக் கூறி உண்மைப்படுத்தக்கூடியவனாக இருப்பான். அத்தகைய வழிமுறை எம்மிலும் காணப்பட வேண்டும். இது விடயத்தில் ஸஹாபாக்கள் மற்றும் அவர்களைப் பின்துயர்ந்து வந்த அறிஞர் பெருமக்கள் எமக்கு நல்லுதாரணமாகத் திகழ்கின்றார்கள். அல்லாஹ்வின் பண்புகள் விடயத்தில் நாம் காணக்கூடிய அதே அல்குர்ஆன் வசனங்களையும் நபிமொழிகளையும் அவர்களும் பார்த்திருக்கிறார்கள். ஆயினும், அவர்களில் எவரும் அவற்றுக்கு வலிந்துரை செய்யக்கூடியவர்களாக இருக்கவில்லை. அவற்றைக் கேட்ட மாத்திரத்திலே உண்மைப்படுத்தக் கூடியவர்களாகவே இருந்தார்கள். அந்த நிலைப்பாடே எமக்கும் பொருத்தமாகும். ஏனெனில், இந்நிலைப்பாட்டைக் கடைபிடிக்காது பேன பிரிவினர்களுக்கு ஈற்றில் என்ன நேர்ந்தது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அல்லாஹ் எம்மை அவர்களின் சிந்தனைகளைவிட்டும் பாதுகாப்பானாக!

    بل يؤمنون بالله سبحانه ليس كمثله شيء وهو السميع البصير , فلا ينفون عنه ما وصف به نفسه ولا يحرفون الكلم عن مواضعه

    விளக்கம்:
    அல்லாஹ்வின் பண்புகள் விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினரின் நிலைப்பாடு:
    இமாமவர்கள், அல்லாஹ்வின் பண்புகளை விசுவாசம் கொள்வதின் அவசியத்தைத் தெளிவுபடுத்தியதன் பிற்பாடு அவைகள் விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினரின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கின்றது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

    அதனடிப்படையில், அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஆத்தினரைப் பொறுத்தளவில், அவர்கள் ‘அல்லாஹ்வைப் போன்று எப்பொருளும் இல்லை’ என்ற அடிப்படையை வைத்துக் கொண்டு படைப்பினங்களின் பண்புகளுக்கு அவனை ஒப்பாக்குவதைவிட்டும் தூரமாவதற்காக முஅத்திலாக்கள் அவனது பண்புகளை மறுத்ததைப் போன்று மறுக்கமாட்டார்கள். மாற்றமாக, அவர்கள் எப்படி படைப்பினங்களுக்கு தனிப்பட்ட பண்புகள் உள்ளனவோ அதே போன்று அல்லாஹ்வுக்கும் அவனது அந்தஸ்திக்குத் தக்கவிதத்தில் தனிப்பட்ட பண்புகள் உள்ளன எனக் கூறுகின்றனர். மற்றும், அவற்றுக்கிடையே எவ்வித ஒப்பீடுகளும் இருக்காது எனவும் இயம்புகின்றனர்.

    மேலும், அவர்கள் முஅத்திலாக்களைப் போன்று அல்குர்ஆனின் வசனங்களை மாற்றக்கூடியவர்களாகவோ அவற்றின் கருத்துக்களில் மாற்று விளக்கம் சொல்லக்கூடியவர்களாகவோ இருக்கமாட்டார்கள்.

    ولا يلحدون في أسماء الله وآياته , ولا يكيفون ولا يمثلون صفاته بصفات خلقه

    விளக்கம்:
    அல்லாஹ்வின் பண்புகள் மற்றும் அவனது வசனங்கள் விடயத்தில் இல்ஹாத்:
    அல்லாஹ்வின் பண்புகள் விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினரின் அடுத்த நிலைப்பாடு, அவர்கள் அவற்றில் ‘இல்ஹாத்’ எனும் செயலை மேற்கொள்ளக்கூடியவர்களாக இருக்கமாட்டார்கள்.

    இல்ஹாத் என்றால் என்ன?
    இல்ஹாத் எனும் அறபு வாசகத்திற்கு அறபு மொழிக் கருத்தின் அடிப்படையில் ‘ஒரு விடயத்தைவிட்டும் சாய்ந்து செல்லல்’ எனப் பொருள் கொள்ளப்படும். இங்கு அல்லாஹ்வின் பண்புகள் மற்றும் அவனது வசனங்கள் ஆகியவற்றில் இல்ஹாத் செயல்முறை என்பதின் மூலம் நாடப்படுவது, ‘அவற்றினது எதார்த்த கருத்தை விடுத்து தவறான கருத்தின் பால் சாய்ந்து செல்லலாகும்’.

    அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகளில் இல்ஹாத்
    அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகள் விடயத்தில் மேற்கொள்ளப்படும் இல்ஹாத் செயல்முறையை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
    1. அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகளை சிலைகளுக்குப் பெயராகச் சூட்டுதல்

    இச்செயல்முறையின் வெளிப்பாடாகவே அறியாமைக்கால மக்கள் தங்களது சிலைகளுக்குப் பெயர் சூட்டி வந்தனர். அதன்படி ‘இலாஹ்’ என்ற வார்த்தையில் இருந்து ‘லாத்’ என்ற பெயர் பிறந்ததாகவும், ‘அஸீஸ்’ என்ற வார்த்தையில் இருந்து ‘உஸ்ஸா’ என்ற பெயர் பிறந்ததாகவும், ‘மன்னான்’ என்ற வார்த்தையில் இருந்து ‘மனாத்’ என்ற பெயர் பிறந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

    2. அல்லாஹ்வுக்கு பொருத்தமற்ற பெயர்களைச் சூட்டி அழைத்தல்

    இதற்கு உதாரணமாக, கிறிஸ்தவர்கள் அல்லாஹ்வை ‘பிதா’ (தந்தை) என்று அழைப்பதையும், தத்துவவியலாளர்கள் அல்லாஹ்வை ‘மூலகாரணி’ என்று அழைப்பதையும் குறிப்பிடலாம்.

    3. அல்லாஹ்வின் அந்தஸ்திற்குப் பங்கம் விளைவிக்கும் விதத்தில் அவனை வர்ணித்தல்

    இதற்குச் சான்றாக யூதர்கள் அல்லாஹ்வை ஏழை என்றும், அவனது கைகள் கட்டப்பட்டுள்ளன என்றும், அவன் சனிக்கிழமைகளில் ஓய்வு எடுக்கின்றான் என்றும் வர்ணித்தவற்றைக் குறிப்பிடலாம்.

    4. அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகளின் கருத்துக்களையும் அதன் எதார்த்த தன்மைகளையும் மறுத்தல்

    இல்ஹாதின் இப்பிரிவுக்கு ஜஹ்மிய்யாக்களின் செயற்பாடுகளைச் சான்றாக முன்வைக்கலாம். அவர்கள் அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகள் குறித்துக் குறிப்பிடுகையில், ‘நிச்சயமாக அவை எவ்வித பண்புகளையும், கருத்துக்களையும் உள்ளடக்காத வெற்று வார்த்தைகளாகும்’ என்கின்றனர். மேலும், கூறுகையில்: ‘ஸமீஉ’ என்ற வார்த்தை செவியேற்றலைக் குறிப்பிடாது என்றும், ‘பஸீர்’ என்ற வார்த்தை பார்த்தலைக் குறிப்பிடாது என்றும், ‘ஹய்யு’ என்ற வார்த்தை உயிருடன் இருத்தலைக் குறிப்பிடாது என்றும் கூறுகின்றனர்.

    5. அல்லாஹ்வின் பண்புகளைப் படைப்பினங்களின் பண்புகளுக்கு ஒப்பிடுதல்

    இதற்கு உதாரணமாக அல்லாஹ்வின் பண்புகளில் ‘அத்தம்ஸீல்’ எனும் செயற்பாட்டை மேற்கொள்ளக்கூடியவர்களின் கருத்துக்களைக் குறிப்பிடலாம். அவர்கள் அல்லாஹ்வின் கையைப் பற்றிக் கூறும் போது, அவனது கை எமது கையைப்போன்றது என்கின்றனர்.

    அல்லாஹுத்தஆலா தன்னுடைய பெயர்களிலும் அவனது பண்புகளிலும் இத்தகைய இல்ஹாத் நடவடிக்கையை மேற்கொள்வோரைக் கடுமையான வேதனையைக் கொண்டு எச்சரித்துள்ளான். அல்லாஹ் கூறுகின்றான்:

    ‘அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றைக் கொண்டே அவனைப் பிரார்த்தியுங்கள். அவனது பெயர்களில் திரிபுபடுத்துவோரை விட்டுவிடுங்கள். அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்காக அவர்கள் கூலி வழங்கப்படுவார்கள்.’ (அல் அஃராப்: 180)

    மேலும் கூறுகையில்:

    ‘நிச்சயமாக எவர்கள் நமது வசனங்களைத் திரிபுபடுத்துகின்றார்களோ அவர்கள் நம்மிடமிருந்து மறைந்து விட மாட்டார்கள். மறுமை நாளில் நரகத்தில்;; எறியப்படுபவன் சிறந்தவனா? அல்லது அச்சமற்றவராக வருபவரா? நீங்கள் விரும்பியதைச் செய்து கொண்டிருங்கள். நிச்சயமாக அவன் நீங்கள் செய்பவற்றைப் பார்ப்பவன்.’ (புஸ்ஸிலத்: 30)

    لأنه سبحانه لا سمي له ولا كفء له ولا ند له , ولا يقاس بخلقه سبحانه وتعالى . فإنه سبحانه أعلم بنفسه وبغيره وأصدق قيلا وأحسن حديثا من خلقه .

    விளக்கம்:

    அல்லாஹ்வுக்கு ஏன் உவமை கிடையாது?

    இவ்வசனத்தின் துவக்கத்தில் இமாமவர்கள் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் ஏன் அல்லாஹுத்தஆலாவுக்கு ஒப்புவமை கூறுவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

    அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினரைப் பொறுத்தளவில் அவர்கள் பின்வரக்கூடிய அல்குர்ஆன் வசனங்களை கருத்திற்கொண்டு அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகள் விடயத்தில் தமது கொள்கைக்கான காரணங்களைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.

    • ‘அவனுக்கு நிகராக எவரையேனும் நீர் அறிவீரா?’ (மர்யம்: 65)
    • ‘மேலும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை’ (அல் இஹ்லாஸ்: 4)
    • ‘எனவே, அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு இணையாளர்களை ஏற்படுத்தாதீர்கள்.’ (அல்பகரா: 22)

    இத்திருவசனங்களின் கருப்பொருட்களை மையமாக வைத்து அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்தினரைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, அல்லாஹ்வின் பெயருக்குப் பாத்திரமாக உலகில் வேறு எவரும் இல்லை என்றும், அவனுக்கு ஒப்பாக அல்லது நிகராக ஆற்றல்படைத்தவர்கள் எவரும் இருக்க முடியாது எனவும் கூறுகின்றனர்.

    இது தவிர ‘எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணம் கூறாதீர்கள்.’ (அந்நஹ்ல்: 74) என்ற திருக்குர்ஆன் வசனத்தை வைத்து அவனை படைப்பினங்களுடன் ஒப்பிட முடியாது எனக் கூறுகின்றனர். இப்படியிருக்க சிந்திக்கும் ஆற்றல் படைத்த எவராவது பூரணத்துவம் மிக்க படைப்பாளனை குறைகள் நிறைந்த சிருஷ்டிகளுடன் ஒப்பிடுவாரா? மாற்றமாக அல்லாஹுத்தஆலா, தன்னையும் பிறரையும் பற்றி நன்கறிந்தவனாக இருக்கின்றான். எனவே, அதனைக் கருத்தில் கொண்டு அவன் தன்விடயத்தில் உறுதிப்படுத்தியவற்றை நாமும் உறுதிப்படுத்த வேண்டும்.

    மேலும், படைப்பினங்களிடத்தில் அவனைப்பற்றிய பூரண அறிவு கிடையாது. அல்லாஹுத்தஆலாவோ படைப்பினங்களின் சிந்தனைக் கொட்டாத பூரண பண்புகளைக் கொண்டு வரணிக்கப்பட்டுள்ளான். எனவே, அல்லாஹ் தனக்குப் பொருந்திக் கொண்டவற்றை நாமும் அவனுக்குப் பொருந்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், அவனுக்குத்தகுதியானவற்றை அவனே நன்கறிந்தவனாகவுள்ளான். நிச்சயமாக அவன் அறிவித்தவை அழகானதும் உண்மையானதுமாகும். நாம் என்றென்றும் அவற்றை உண்மைப்படுத்தக்கூடியவர்களாகத் திகழ்வோமாக!

    ثم رسله صادقون مصدقون , بخلاف الذين يقولون عليه ما لا يعلمون

    விளக்கம்:
    அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகள் விடயத்தில் தூதர்களின் நம்பகத்தன்மை.
    மேற்குறித்த வசனமானது, இதற்கு முன்னால் நாம் பார்த்த வசனத்தின் தொடராக அமைந்துள்ளது. இவ்வசனத்தில் இமாமவர்கள் அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகள் விடயத்தில் தூதர்களின் நம்பகத்தன்மையைப் பற்றி விளக்கியுள்ளார்கள்.

    அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதர்கள், அவன் குறித்து மக்களுக்குப் போதித்தவற்றில் உண்மையாளர்களாகவும், வானவர்கள் மூலமாக அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட வஹியின் மூலம் உண்மைப்படுத்தப்பட்டவர்களாகவும் இருந்தார்கள். மேலும், அவர்கள் தங்களது மனோ இச்சையின் அடிப்படையில் எதையும் மொழியமாட்டார்கள். இது அவர்களுக்கு இருக்கின்ற நம்பகத்தன்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இதன் மூலம், அவர்களுக்கு அல்லாஹ்வின் விடயத்தில் சொல்லப்பட்டதும், அவர்கள் மக்களுக்கு போதித்ததும் உண்மையை அடிப்படையாகக் கொண்டிருந்தன என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே, அவர்கள் அல்லாஹ்வைப்பற்றி வர்ணித்தவற்றை முழுமையாக ஏற்றுக் கொள்வது எமது கடமையாகும்.

    மேலும், அவர்கள் அல்லாஹ்வின்; விடயத்தில் அறிவின்றிக்கூறக்கூடியவர்களுக்கு மாற்றமானவர்களாக இருந்தனர். அத்தகைய அறிவிலிகள் தமது மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டவர்களாக வெறும் கற்பனைகளையும் யூகங்களையும் வகுத்து ஷைத்தானுக்கு அடிமைப்பட்டவர்களாகத் திகழ்கின்றனர். இதற்குப் பின்வரும் வசனங்கள் சான்று பகருகின்றன.

    ‘ஷைத்தான்கள் யார் மீது இறங்குகின்றனர் என உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர். (ஒட்டுக்) கேட்டவற்றை (இவர்களின் காதுகளில்) போடுவார்கள். அவர்களில் அதிகமானோர் பொய்யர்களே!’ (அஷ்ஷுஅரா: 221-223)

    ‘அற்ப கிரயத்தைப் பெறுவதற்காக தம் கைகளால் ஒரு நூலை எழுதி பின்னர், இது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகின்றவர்களுக்குக் கேடுதான்.’ (அல்பகரா: 79)

    அல்லாஹ் எம்மனைவரையும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதைவிட்டும் பாதுகாப்பானாக!

    ولهذا قال: { سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين } سورة الصافات , الآيات : 180-182 فسبح نفسه عما وصفه به المخالفون للرسل . وسلم على المرسلين لسلامة ما قالوه من النقص والعيب .

    விளக்கம்:
    அல்லாஹ்வினதும் அவனது தூதர்களினதும் வார்த்தைகள் உண்மையானதும் அழகானதுமாகும் என்பதற்கான சான்று.

    இமாமவர்கள் மேற்குறித்த சான்றின் மூலம் அவர்கள் முன்பு குறிப்பிட்ட, அல்லாஹ்வினதும் அவனது தூதர்களினதும் வார்த்தைகள் உண்மையானதும் அழகானதுமாகும் என்பதை நிரூபிக்கின்றார்கள்.

    அதற்காக அவர்கள் முன்வைத்த சான்றின் தமிழ் வடிவமாவது: ‘(நபியே!) அவர்கள் வர்ணிப்பதை விட்டும் கண்ணியத்தின் இரட்சகனாகிய உமது இரட்சகன் தூய்மையானவன். (நமது) தூதர்கள் மீது சாந்தி உண்டாவதாக. அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.’ (அஸ்ஸாப்பாத்: 180-182)

    இச்சான்றானது பின்வரும் சிறப்பம்சங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

    1. அல்லாஹ்வின் அந்தஸ்திற்குத் தகாதவிதத்தில் வழிகேடர்களும் அறிவிலிகளும் அவனை வர்ணித்தவைகளைவிட்டும் அவன் தூய்மையானவனாக இருக்கின்றான்.
    2. தூதர்களின் நம்பகத்தன்மையும், அவர்கள் அல்லாஹ்வின் விடயத்தில் அறித்தவற்றை ஏற்றுக் கொள்வதின் அவசியமும் புலப்படுகின்றது.
    3. தூதர்கள் மீது சாந்தியை வேண்டிப் பிரார்த்தித்தலும், அவர்களை கௌரவப்படுத்தலும்.
    4. தூதர்கள் கொண்டுவந்ததிற்கு மாற்றமான கருத்துக்களைப் புறக்கணித்தல். அதிலும் குறிப்பாக, அவர்கள் அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகள் விடயத்தில் அறிவித்தவற்றிக்கு மாற்றமான கருத்துக்களைப் புறக்கணிப்பது அவசியமாகும்.
    5. அல்லாஹ்வைப் புகழ்வதும், அவனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதும் எமது கடமையாகும். அத்தகைய அருட்கொடைகளில் பிரதானமாக எமக்கு ஏகத்துவம் என்ற அருட்கொடை கிடைத்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!