மார்க்க ஒற்றுமையே எங்கள் உம்மி நபியின்! உம்மி சமுதாயத்தின்! உம்மி முஸ்லிமாகிய எனது அன்பான வேண்டுகோள்.
அன்பிற்கினிய சகோதர சகோதாிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்தஹீ (உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமுன் என்றென்றும் நிலவட்டுமாக!)
அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள், பிரிந்து விடாதீர்கள். – இது திருக்குர் ஆன் 3:103ன் வசனமாகும். இதன் விளக்கம் என்ன தெரியுமா? எல்லோரும் ஒரு அணியில் நின்று ஒரு கொள்கையை இறுக்கி பிடித்து சருகிவிடாமல் ஒற்றுமையாக இருப்ப்தே,
உலகப் பொதுமறை திருக்குர்ஆன் மற்றும் நபிவழி சுன்னத் ஆகிய இரண்டுதான்அல்லாஹ்வின் கையிறாகும்,
லா இலாஹா இல்லல்லாஹீ முஹம்மதுர் ரசூலில்லாஹி
(வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள)
எல்லோரும் மேற்கண்ட ஓரிரை கொள்கையை பற்றிப் பிடிக்க அல்லாஹ் நமக்கு தனது திருக்குர்ஆன் எனும் வார்த்தைகள் முலம் முஸ்லிம்களுக்கு
கட்டளையிடுகிறான், ஆனால் நாம் அவ்வாறு ஒன்றுபட்டு நிற்கிறோமா? இல்லவே இல்லை
ஆலுக்கொரு ஜமாஅத். ஆலுக்கொரு கொள்கை. ஆலுக்கொரு தலைவன் என பிாிந்து நிற்கின்றனர் நம் முஸ்லிம் சகோதரர்கள் கீழே கொடுக்கப்பட்டது போன்று
நான் சுன்னத்வல் ஜமாஅத்துக்காரன்,
நான் தப்லிக் ஜமாஅத்துக்காரன்,
நான் அஹ்லே ஹதீஸ்,
நான் பாக்கவி,
நான் ரப்பானி,
நான் காதிரி,
நான் மாலிகி,
நான் ஹம்பலி
நான் ஜாக் ஜமாத்,
நான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,
நான் இந்திய தவ்ஹீத் ஜமாத்,
நான் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகக்காரன்
எவரும் அல்லாஹ்வின் புனிதமிக்க மார்க்கமான இஸ்லாத்தைச் சேர்ந்த உண்மையான இஸ்லாமியன் என்று சொல்வதில்லையே ஏன் இந்த அவலம். இந்த பிரிவினைக்கு காரணமாகியவர்களை அல்லாஹ் நாளை மறுமையில் கேள்வி கேட்பானே!
அல்லாஹ்வுக்கும் மறுமையில் அவனுடைய கேள்விகளுக்கும் பயந்துக்கொள்ளுங்கள்!
நம் அன்பிற்கினிய மதிப்பிற்கும், கண்ணியத்திற்கும் ஏன் எங்கள் உயிருக்கும் மேலாக மதிக்கக் கூடிய ஒரு சில தவ்ஹீத் சகோதரர்கள் இணைந்தால் போதுமே நம் மார்க்க ஓற்றுமைக்கு. அல்லாஹ் உறுவாக்கிய இஸ்லாமிய மார்க்கத்தை பிளவுபடுத்த யாருக்கு அதிகாரமிருக்கிறது! அல்லாஹ் விதித்த ஒற்றுமை எனும் சட்டத்தை மீற யாருக்குக்கேனும் தனி சுநத்திரம் அளிக்கப்பட்டுள்ளதோ?,
தமிழகத்தில் முழுவதுமாக மக்களிடமிருந்து குப்ரு எனும் இறைநிராகரிப்பை நீங்கி விட்டதா? நாம் நமக்குள் சண்டைபோட்டுக்கொண்டு பிரிந்து நிற்க? இந்த இணைவைப்பவர்களை நேர்வழிப்படுத்து ஏகத்துவ வாதிகளே ஒன்றுபடுங்கள்! சுவனம் செல்ல முந்திக்கொள்ளுங்கள்!
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும அவர்களே வெற்றி பெற்றோர், இது உலகப்பொதுமரை திருக்குர்-ஆன் 3:104ன் வசனமாகும்
இந்த வசனத்தின் முலம் அல்லாஹ் நமக்கு அறிவுறுத்துவது என்னவென்றால் ஒரு சமுதாயமாக இருந்து நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழையுங்கள் என்றுதான் ஆனால் இன்றைக்கோ தமிழகத்தில் மட்டும் தவ்ஹீத்வாதிகள் 72 சமுதாய பிரிவினர்களாக பிரிந்து நானா? நீயா எனறு பலப்பரிட்சையில் இறங்கிவிட்டனரே இது நியாயமா?
திருக்குர் ஆன் 3:105ன் வசத்தின் முலம் அல்லாஹ் நமக்கு இவ்வாறு கட்டளையிடுகிறான், தம்மிடம் தெளிவான் சான்றுகள் வந்த பின்பு முரண்பட்டுப் பிரிந்து விட்டோரைப் போல் ஆகாதீர்கள், அவர்களுக்கே கடும் வேதனை உண்டு
வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன, அல்லாஹ்விடமே காரியங்கக் கொண்டு செல்லப்படும் – என்ற திருக்குர் ஆன் 3:109ன் வசனத்தை இவர்கள் படிக்கவில்லை போலும்,
முடிவுரை
என அருமை சகோதர, சகோதரிகளே நாம் அரபி இலக்கணம் அறியாத உம்மிகள் நமது நபியும் நம்மைப் போன்று உம்மிதான் ஆனால் அல்லாஹ் நமக்கு அறிவை கொடுத்துள்ளான் இனியும் இந்த பிறிந்து நின்று பிறிவினைவாதிகளின் பின் நிற்காமல் உலகப் பொதுமறை திருக்குர்ஆன் மற்றும் நபிவழி சுன்னத் ஆகிய அல்லாஹ்வின் கயிற்றை பலமாக பற்றிப்பிடித்து தைரியமாக முஸ்லிம்கள் என்று சொல்வோமாக, யார் சொன்னாலும் காது கொடுத்து கேட்போம் ஆனால் உலகப் பொதுமறை திருக்குர்ஆன் மற்றும் நபிவழி சுன்னத் ஆகிய இரண்டின் பக்கம் தான் தலை
சாய்ப்போம் என்று சூளுரைத்து அல்லாஹ்வின் பக்கம் திரும்புவோமாக, மஹஷர் வெற்றிக்காக பொறுத்திருந்து, ஏகத்துவத்தை நிலைநாட்டி நம்மால் இயனற் அளவு
இஸ்லாத்தை எல்லோரிடமும் எத்தி வைத்து இல்வாழ்க்கையிலும் மறுமையிலும் பிரியாமல் மறுமை வெற்றிக்காக காத்திருப்போமாக, இன்ஷா அல்லாஹ் சுவனம் செல்வோமாக,
அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள், பிரிந்து விடாதீர்கள். – திருக்குர் ஆன் 3:103
மேற்கண்ட விளக்கம் எனது சொந்தக் கருத்துத்தான் இதில் தவறு கண்டால் எனக்கு தெரியப்படுத்தவும் நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன் ஏனெனில் ஒருமுறை நபிகளார் (ஸல்) அவர்கள் தேன் அருந்தமாட்டேன் என்று தன்னிச்சையாக முடிவெடுத்து அதனை அல்லாஹ் கண்டித்தவுடன் தனது தவற்றை உணர்ந்து தவறுகளை திருத்திக் கொண்டார்கள் இநத் மனோ பக்குவத்தை எனக்கும் உங்களுக்கும் ஏக இறைவன் வழங்கி அருள்புரிவானாக,
(கொண்ட கொள்கைதான் பெரியது என நம்பி வாழும் நம் ஆலிம் பெருமக்களுக்கும் சேர்த்து துவா செய்து கொள்வோமாக! அல்லாஹ் நம் பிாிந்து நிற்கும் சமதாயத்திற்கு ஒற்றுமையை அருளி நம்மை தனது அர்ஷின் நிழலில் நிற்கச்செய்து கேள்விக்கணக்கின்றி சுவனத்தில் புகுத்துவானாக! ஆமீன்!)
நாம் முஸ்லிம்கள்! நாம் அமைதியாக இஸ்லாத்தை கடைபிடித்து எவருக்கும் எந்த மனிதனுக்கும், இந்து, முஸ்லிம். கிருத்தவ ஏன் எந்த இன, மத, மொழி பேசக்கூடியவர்களுக்கும் தீங்கிழைக்காமால் வாழுவோம் என்று சபதமேற்று சுவனப்பதையை வளமாக்கிக்கொள்வோமாக!
No comments:
Post a Comment