Saturday, July 11, 2009

கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும்

கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும்
கிலாஃபா முற்றாக அழிக்கப்பட்டு 85 வருடங்களையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் இன்றைய சூழலில் முஸ்லிம் உம்மத் தாம் உலகின் பற்திசைகளிலும் எவ்வாறு அதிகாரத்துடனும், கண்ணியத்துடனும் இருந்தோம் என்பதை விரிவாகவும், ஆழமாகவும் புரிவது இன்றியமையாததாகும். மேலும் கிலாஃபத்தின் வரலாறு குறித்தும் அது எவ்வாறு படிப்படியாக மறைய ஆரம்பித்து பின்னர் முற்றாக வீழ்த்தப்பட்டது தொடர்பாகவும் ஆராய வேண்டியதும் முக்கியமானதாகும், மேலும் சிலர் தவறாகக்கூறுவதைப்போல கிலாஃபத்தின் வீழ்ச்சியின் போது அப்போதிருந்த மார்க்க அறிஞர்களும் முஸ்லிம்களும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்ற கருத்தின் உண்மைநிலை குறித்தும் நாம் முற்றாக ஆராய வேண்டும். உண்மையில் அந்தக்கூற்று மிகவும் தவறானதாகும். ஏனெனில் து}ய்மையான முஸ்லிம்கள் பலர் கிலாஃபத்தை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்பதில் காட்டிய அக்கறையையும், அது தமது கண்முன்னால் அழிக்கப்படும்போது அதனால் அவர்கள் அடைந்த வேதனைகளையும் வரலாறு பதிந்து வைத்திருக்கிறது. இதற்கொரு சிறந்த சான்றே இந்திய முஸ்லிம்களும், இந்தியாவில் உருவான கிலாஃபத் இயக்கமுமாகும்.

கிலாஃபத் அழிக்கப்பட்டபோது இந்திய முஸ்லிம்களின் எதிர்நடவடிக்கை எவ்வாறிருந்தது என்பதை ஆராய முன் எவ்வாறு இஸ்லாமிய ஆட்சி இந்திய துணைக்கண்டத்தை வந்தடைந்தது என்பதை ஆராய்வது அவசியமாகும். இன்று முஸ்லிம்களின் உலக சனத்தொகையில் ஏறக்குறைய அரைப்பகுதியை அதாவது அரை பில்லியன் பேரை இன்றைய இந்தியாவின் 250 மில்லியன் முஸ்லிம்கள், பாகிஸ்தானின் 160 மில்லியன் முஸ்லிம்கள், பங்களாதேஸின் 120 மில்லியன் முஸ்லிம்கள் உள்ளடக்குகின்றனர் என்பதும், இன்றைய முஸ்லிம் உம்மத்தின் பெரும்பான்மையோரின் மொழியாக (அரபைவிடவும்) உருது மொழி மாறிவிட்டது என்பதும் இங்கே கவனத்திற்கொள்ளத்தக்கது.


இந்தியாவில் கிலாபத்தின் சுருக்க வரலாறு

முஸ்லிம் வர்த்தகர்கள் சிலர் கி.பி 711ம் ஆண்டு சிந்து நதிக்கரை ஓரமாக இந்து சமுத்திரத்தில் பயணித்துக்கொண்டிருந்தார்கள். இதன்போது இவர்கள் பயணம் செய்த கப்பல் கடத்தப்பட்டு கொள்ளையிடப்பட்டு பின் பயணம் செய்த அனைவரும் சிறைப்பிடிக்கப்பட்டார்கள். இந்தச் செய்தி இஸ்லாமியக் கிலாபத்தின் தலைமையகத்தை எட்டியது. அன்றைய கலிஃபா அல் வலித் இப்னு அப்துல் மலிக்; இதுபற்றி அறிந்து இடம்பெற்ற அநீதிக்காக சிந்தின் ஆட்சியாளர்களை மன்னிப்புக்கேட்குமாறும் சிறைப்பிடிக்கப்பட்ட முஸ்லிம்களை விடுவிக்குமாறும் கோரும்படி, பக்தாத்திலே தனது ஆளுநராக இருந்த ஹஜ்ஜாஜ் பின் யூசுபிற்கு பணித்தார்கள். இப்பாரிய பணிக்காக முஸ்லிம்களின் படையொன்றும் சிந்து பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தப் இஸ்லாமியப் படைக்குத் தலைமை தாங்கியபடி வெறுமனவே 17 வயதே நிரம்பிய முஹம்மது பின் காஷிம் அல் தகாபி தனது படையுடன் சிந்திற்கு புறப்பட்டார்.இஸ்லாமியப்படை சிந்துப்பிரந்தியமான தபெலை (தற்போதைய கராச்சி) அடைந்தவுடன் படைத் தளபதி கலீஃபாவின் கோரிக்கையை சி;ந்தை ஆட்சி செய்துகொண்டிருந்த ராஜா தாஹிரிடம் முன்வைத்தார். எனினும்; இந்த நியாயமான கோரிக்கையை ராஜா தாஹிர் அடாத்தாக மறுத்தார். எனவே முஸ்லிம் படையினர் ராஜா தாஹிரை எதிர்த்து தோற்கடித்ததுடன் சிந்தை கைபற்றி கிலாஃபத்தின் கீழ் கொண்டு வந்தனர்.அல்லாஹ்வின்; கட்டளையை மேலொங்கச் செய்யும் நோக்குடன் முஹம்மது பின் காஸிம் முஸ்லிம்கள் சிந்தில் பெற்ற வெற்றியை மேலும் விரிவுபடுத்தினார். இஸ்லாமிய அகிதாவால் உந்தப்பட்ட இந்த இராணுவம் முன்;றே ஆண்டுகளில் முல்தான் வரை படையெடுத்து சிந்தை முழுமையாக கைபற்றியதுடன் பஞ்சாப்பின் கீழ்ப்பகுதியையும் கிலாஃபத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.இந்திய உபகண்டத்தின் வடமேற்கு பிரதேசத்தையும் கைபற்றிய இஸ்லாமிய இராணுவம் அங்கு சிலைகளை வைத்து வணங்கிக்கொண்டிருந்தவர்களை இஸ்லாத்தின்பால் அழைத்து அவர்களை இஸ்லாத்தின் கீழ் கொண்டு வந்தது. முஹம்மது பின் காஸிமின் நிர்வாகம் முஸ்லிம்களையும் முஸ்லிம் அல்லாதவர்களையும் ஒரே விதமாகவே பரிபாலித்ததுடன் கைபற்றப்பட்ட பகுதிகளின்; அதிகாரிகளாக முன்பு கடமையாற்றிய முஸ்லிம் அல்லாதவர்களையே மீண்டும் அவர்களின் பதவிகளில் அமர்த்தியது. முஹம்மது பின் காஸிம் “மக்களுடனும், அரசுடனும் நேர்மையாக இருங்கள். மக்களின் இயலுமைக்கேற்ப வரிகளை தீர்மானித்துக் கொள்ளுங்கள்” என கிலாஃபத்தின் அதிகாரிகளிடம் பணித்தார்.

கலிஃபா இசாம் பின் அப்துல் மாலிக்கி;ன் ஆட்சிக் காலத்தில் (கிபி 724 - கிபி 743) முஸ்லிம்கள் காஷ்மிரையும் கங்ராவையும் கைபற்றினர். கிபி 754 கிபி - 775 காலப்பகுதியில் ஆட்;சி செய்த அப்பாசிய கலிஃபா அபு ஜாபர் அல் மன்சூரின் ஆட்சிக் காலத்தில் கந்தஹாரும் கைப்பற்றப்பட்;டதுடன் இந்திய உபகண்டம் முழுவதையும்; இஸ்லாமிய கிலாஃபத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற முனைப்பு தீவிரம் பெற்றது.

No comments:

Post a Comment