Monday, September 7, 2009

கருவை உறைநிலையில் வைப்பது (Freezing the embryo) , குழந்தையின் பாலினத்தை நிர்ணயிப்பது (determining the child gender ) ஆகியவை தொடர்பான ஹுகும் ஷரியா:

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
கேள்வி:
சில அறிவியல் ஆய்வுகள் முன்பு பேச்சளவில் மட்டும் இருந்துவந்த நிலைமாறி இப்போது நடைமுறையில் நிரூபிக்கப்பட்டு விட்டதால் எதார்த்த வாழ்க்கûயில் அவற்றை மக்கள் செயல்படுத்த துவங்கிவிட்டார்கள், இவற்றில் உறைநிலையில் மனிதக்கருவை வைத்தல் மற்றும் குழந்தையின் பாலினத்தை (ஆணா அல்லது பெண்ணா என்று) நிர்ணயித்தல் ஆகியவை அடங்கும், மேற்கு நாடுகளில் இது சாதாரன விஷயமாகிவிட்ட நிலையில் இப்போது முஸ்லிம் நாடுகளில் இது நடைமுறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது, இந்த ஆய்வுகள் இப்போது சோதனைக் கட்டத்தையும் ஆராய்ச்சி நிலைகளையும் தாண்டி பல முஸ்லிம் நாடுகளில் மக்களால் செயல்படுத்தப்பட்டு வருக்கிறது, ஆகவே இந்த விஷயம் தொடர்பான ஹுகும் ஷரியா(இறைசட்டம்) என்னவென்று விளக்கிக் கூறுங்கள். அல்லாஹ்( சுபு) உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக!
பதில்:
இந்த கேள்விக்கு விடையளிப்பதற்கு முன்பாக சில உண்மைகளை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும், அல்லாஹ்(சுபு) மனித இனத்தை படைத்து மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறான், மேலும் மனிதனிடத்திலும் இந்த பிரபஞ்சத்திலும் குறிப்பிட்ட இயல்புகளையும் நியதிகளையும் அளவுகோல்களையும் பண்புகளையும் அல்லாஹ்(சுபு) படைத்து நிர்ணயித்திருக்கிறான், இதன் காரணமாக மனிதன் ஆய்வுகளையும் ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ளக் கூடியவனாகவும் அதன் மூலமாக அறிவியல் ஞானத்தை பெற்றுக் கொள்ளக் கூடியவனாகவும் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நலனுக்காக அவற்றை பயன்படுத்தக் கூடியவனாகவும் இருக்கிறான். இத்தகைய பயனுள்ள அறிவையும் அதனை மனிதர்களுக்கு எடுத்துக்கூறி விளக்குபவர்களையும் அல்லாஹ்(சுபு) புகழ்ந்து கூறியிருக்கிறான். ஏனெனில் இத்தகைய அறிஞர்கள்தான் அல்லாஹ்(சுபு) இருப்பதை ஆழமாக அறிந்து அந்த நம்பிக்கையில் உறுதியாக இருக்கக் கூடியவர்கள், இந்த பிரபஞ்சத்தையும் மனித வாழ்வையும் ஆய்வுசெய்து அதன் இரகசியங்களை விளங்கிக்கொள்வதன் மூலமாக அவற்றின் படைப்பாளனின் மகத்துவத்திற்கும் அவனுடைய எல்லையற்ற ஆற்றலுக்கும் அவனுடைய மகத்தான ஞானத்திற்கும் இவர்கள் உறுதியான சாட்சிகளாக விளங்குகிறார்கள்,
அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.
إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ
அவனுடைய அடியார்களிலெல்லாம் அவனை அஞ்சி நடப்பவர்கள் அறிவுடையோர்தான் (அல் பாதிர் : 28)
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.
"وا دِينَارًا وَلَا دِرْهَمًا إِنَّمَا وَرَّثُوا الْعِلْمَ فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافر الْعُلَمَاءَ هُمْ وَرَثَةُ الْأَنْبِيَاءِ إِنَّ الْأَنْبِيَاءَ لَمْ "
(உலமாக்கள் எனப்படும்) அறிவுடையோர்தான் இறைத்துனதர்களின் வாரிசுகள் ஆவார்கள், தினாரையோ அல்லது திர்கத்தையோ (தங்கத்தையோ அல்லது வெள்ளியையோ) இறைத்தூதர்கள் வாரிசுரிமையாக விட்டுச் செல்லவில்லை, அவர்கள் விட்டுச் சென்றதெல்லாம் அறிவுதான்! அதை எடுத்துக் கொள்பவர் விசாலமான வாய்ப்புகளை பெற்றவர் ஆவார் (அறிவிப்பவர்: அபூதர்தா(ரலி) நூல்: இப்னுமாஜா)
எனினும். ஷைத்தானும் அவனை பின்பற்றுபவர்களும் நிராகரிப்பவர்களும் இத்தகைய அறிவை தவறாக பயன்படுத்தி மனிதர்களுக்கு பல தீங்குகளை ஏற்படுத்துவதுடன் மனித இனத்திற்கு பெரும் களங்கத்தையும் ஏற்படுத்துகிறார்கள். மேலும் மனிதர்களை வழிகெடுத்து நேர்வழியிலிருந்து விலகிப்போகும்படி செய்கிறார்கள், அறிவியல் நுட்பங்களை சரியான வழியில் பிரயோகிப்பதை விடுத்து தவறான வழியில் பிரயோகிக்கத் தூண்டுகிறார்கள், இவ்வாறாக குளோனிங் முறையை கையாளுதல். மனிதர்களின் ஆண்விந்தணுவையும் பெண்சினை முட்டையையும் இணைத்து கருவூட்டம் செய்து அந்த கருமுட்டைகளை உறைநிலையில் வைத்து மற்றவர்களுக்கு அதை விற்பனை செய்தல். இறந்த உடல்களை அறுத்து பரிசோதனை மேற்கொள்ளுதல். பிறகு அந்த உடல்களிலிருந்து உறுப்புகளை அகற்றி அவற்றை விற்பனை செய்தல். இதற்கும் மேலாக உயிரோடு இருக்கும் மனிதர்களை கடத்திச்சென்று அவர்களை கொலைசெய்து பிறகு அவர்களின் உடல் உறுப்புகளை எடுத்து விற்பனை செய்தல் ஆகிய பாவச்செயல்களை மேற்கொண்டு வருகிறார்கள், கருவுற்ற சினைமுட்டைகள் மற்றும் கருவிலுள்ள சிசுக்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் இத்தகைய சோதனைகளில் அவற்றை உறைநிலையில் வைத்து அந்த சிசுக்களின் வாழ்வை விருப்பம்போல் தவறாக பயன்படுத்துவதற்காக அவற்றின் உறுப்புகளை பிரித்தெடுத்தல் போன்ற பாவச்செயல்களை அறிவியல் ஆராய்ச்சி என்ற பெயரிலும் மருத்துவ பரிசோதனை என்ற பெயரிலும் கட்டுப்பாடின்றி நிகழ்த்தி வருகிறார்கள்.
அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.
وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آَدَمَ
நிச்சயமாக! ஆதமுடைய சந்ததியினரை நாம் கண்ணியப்படுத்தி இருக்கின்றோம் ( அல்இஸ்ரா : 70)
அல்லாஹ்(சுபு) மனிதர்களுக்கு அருட்கொடையாக வழங்கியுள்ள இந்த கண்ணியத்தின் விளைவாகத்தான் உண்மையான அறிவாற்றல் அவர்களிடமிருந்து வெளிப்படுகிறது. மேலும் இந்த கண்ணியத்தின் விளைவாகத்தான் மற்ற படைப்பினங்களிலிருந்து தனித்துவம் கொண்ட சிறந்த படைப்பாக மனிதன் உருவெடுத்திருக்கிறான், இதன் மூலமாக மனிதன் அருள்பெற்றவனாகவும் மனநிறைவு கொண்டவனாகவும் ஆகலாம். மேலும் இதன் மூலமாக அவனுடைய உலக வாழ்க்கையையும் அறிவார்ந்த நிலையையும் உயர்த்திக் கொள்ள்ளலாம், ஆனால் தீயவர்களாகவும் களங்கமுற்ற சிந்தனை உடையவர்களாகவும் இருக்கும் சில அறிவியல் அறிஞர்கள் இந்த அறிவியல் அறிவைக் கொண்டு மனித இனத்தை வழிகெடுத்து அதை தாழ்ந்த நிலையிலுள்ள விலங்குகள் நிலைக்கு இட்டுச்செல்லவும் மனிதனை தீய ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தி மனித குலத்தை பாவத்திற்கும் அழிவிற்கும் உட்படுத்தவும் துணிந்துவிட்டார்கள்.
மேற்கூறப்பட்ட கேள்விக்கு இப்போது விடை காண்போம்:
கருவை உறையவைத்தல் (Freezing the embryo):
குறிப்பிட்ட சில நோய்களின் காரணமாக மனைவியின் சினைமுட்டையோடு கணவனின் விந்தணு இணைந்து கருவுறுதல் நடைபெற்று இயற்கையாக கற்பம் தரிக்க இயலாத நிலை சில தம்பதிகளுக்கு நேரிடுகிறது என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது, பெண்ணின் சினைக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு. சினைப்பையின் இயக்கத்திறன் குறைவு. கருப்பையின் பலவீனம். அல்லது ஆணின் விந்தணுவின் எண்ணிக்கை குறைவு மற்றும் விந்தணுவின் இயக்கத்திறன் குறைவு ஆகிய காரணங்களினால் இயற்கையாக ஒரு பெண் கற்பம் தரிக்கமுடியாத நிலை ஏற்படுகிறது, ஆகவே மகப்பேறு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் பெண்ணின் கருவறைக்கு (uterus) வெளியே தகுந்த சூழலில் ஒரு சோதனைக்குழாயில்(Test tube) மனைவியின் சினைமுட்டையை(ovum) கணவனின் விந்தணுவோடு இணைத்து கருவூட்டம்(fertilisation) செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்கள், இதன் மூலமாக மகப்போறு அற்ற நிலையிலிருக்கும் பெண்ணுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது, குளோமிட்(clomid) எனப்படும் மருத்துவமுறை மூலமாக ஒரு பெண்ணின் சினைமுட்டையை அவளுடைய சினைப்பையிலிருந்து என்டோஸ்கோப்பி(endoscopy) எனப்படும் சிகிச்சைமுறையின் வாயிலாக சரியான தருணத்தில் பிரித்தெடுத்து ஒரு கடினத்தன்மை கொண்ட தட்டில் வைத்து பின்னர் ஒரு சோதனைக்குழாயில் அதை அவளுடைய கணவனின் விந்தணுவுடன் இணைத்து கருவுட்டம் செய்கிறார்கள், பிறகு கருவுற்ற அந்த கருமுட்டையை பெண்ணின் கருவறைக்குள் செலுத்துகிறார்கள். அல்லாஹ்(சுபு) நாடினால் அது குழந்தையாக வளர்ச்சி அடைகிறது அல்லது அல்லாஹ்(சுபு) நாடினால் அது செயலற்று இறந்துவிடுகிறது பின்னர் இயற்கையாக அது கருவறையில் அழிக்கப்பட்டுவிடுகிறது, இத்தகைய மருத்துவ சிகிச்சையை அந்தப் பெண்ணும் அவளது கணவனும் தெரிவுசெய்யும் சிறப்பு மருத்துவ நிபுணர் மேற்கொள்கிறார்.
சில சந்தர்ப்பங்களில் கருவின் இறப்புவிகிதம் 90 சதவீதம் அளவுக்கு இருப்பதாலும் தம்பதிகள் குழந்தைப்பேறுக்காக ஏக்கம் கொள்வதாலும் அவர்கள் இந்த சிகிச்சையை திரும்பத்திரும்ப மேற்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள விழைகிறார்கள், பெண்ணுக்கு இது ஒரு கஷ்டமான மருத்துவ சிகிச்சை என்பதால் அவளிடமிருந்து அதிக எண்ணிக்கையில் சினைமுட்டைகளை பெறுவதற்காக குறிப்பிட்ட மருந்துகள் அவள் உடலில் செலுத்தப்படுகின்றன, சோதனைக்குழாயில் பெண்ணின் சினைமுட்டைகளை கருவூட்டம் செய்யும் செயல்முறையில் முழுவெற்றிக்கு உத்திரவாதம் இல்லை என்ற காரணத்தால் ஒரு சினைமுட்டை கருவூட்டம் பெறாதபோது மற்றொன்றை உபயோகப்படுத்தும் விதமாக சில சினைமுட்டைகளையாவது பெண்ணிடமிருந்து எடுப்பது அவசியமாக இருக்கிறது, இவ்வாறு எடுக்கப்பட்ட சினைமுட்டைகளை கருவூட்டம் செய்து அவற்றை இருப்பில் வைத்துக் கொண்டு அதில் ஒன்றை பெண்ணின் கருவறையில் செலுத்துகிறார்கள், அதை கருவறை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் மற்றொன்றை செலுத்துகிறார்கள். இவ்வாறு இந்த முயற்சி சிலமுறை மேற்கொள்ளப்படுகிறது.
கருவூட்டம் பெற்ற கருமுட்டை ஒரு தனிப்பட்ட கருவியின் துணைகொண்டு பெண்ணின் கருவறையில் செலுத்தப்படுகிறது, வெற்றிவாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்தோடு பொதுவாக மூன்று கருமுட்டைகள் கருவறையில் செலுத்தப்படுவதற்கு தயார்நிலையில் வைக்கப்படுகின்றன, ஒருமுட்டை கருவாக வளர்ச்சி அடைவதில் தோல்வி ஏற்படும்போது மற்றொன்று பயன்படுத்தப்படுகிறது, சோதனைக்குழாயில் கருவூட்டம் ஏற்படுத்தும் இந்த முறையில் ஒரே தடவையில் முயற்சி வெற்றிபெற்று கருமுட்டை கருவாக வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்ற காரணத்தாலும் ஒவ்வொரு முறையும் என்டோஸ்கோப்பி மூலம் சினைமுட்டையை பிரித்தெடுப்பது அந்தப்பெண்ணுக்கு மிகுந்த கஷடத்தை ஏற்படுத்தக்கூடியது என்ற காரணத்தாலும் குறிப்பிட்ட மருந்துகளை அவள் உடலில் செலுத்தி அதன்மூலம் அதிக எண்ணிக்கையில் சினைமுட்டைகள் அவளிடமிருந்து பெறுகிறார்கள், இதன்மூலம் அடிக்கடி மருத்துவ சிகிச்சைக்கு உட்படும் கஷடத்திலிருந்து அவள் காக்கப்படுகிறாள்.
எனினும் கருவறையில் செலுத்தப்பட்ட முதல் கருமுட்டை வளர்ச்சி அடையும் நிலையோ அல்லது செயலற்றுப் போகும் நிலையோ உடணடியாக ஏற்படாது. உண்மையில் பலமணி நேரத்திற்குப் பின்னரோ அல்லது சில நாட்களுக்குப் பின்னரோதான் அதுபற்றி கண்டறியமுடியும், இந்த காலகட்டத்தில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள உபரியான கருமுட்டைகளை தகுந்த சூழலில் சரியான வெப்பத்தில் இருக்கும்படியாக உறைநிலையில் (frozen) பாதுகாத்து வைக்கவில்லை எனில் அவை இறந்துவிடும். ஆகவே இந்த உபரியான கருமுட்டைகள் திரவநிலை நைட்ரஜைன் (liquid nitrogen) எனும் திரவத்தில் உறைநிலையில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன. தேவைப்படும்போது பின்னர் அவை உபயோகப் படுத்தப்படுகின்றன.
இவ்வாறுதான் கருவூட்டம் பெற்ற கருமுட்டைகளை உறைநிலையில் வைத்து பாதுகாக்கும் வழிமுறை ஏற்பட்டது, பலமுறை பெண்ணிடமிருந்து சினைமுட்டைகளை பிரித்தெடுக்கும் கஷ்டத்தை நீக்குவதற்காகவும் பலமுறை அதற்காக மருத்துவ சிகிச்கை பெறும் சிரமத்தை குறைப்பதற்காகவும் ஒரே சமயத்தில் பெண்ணிடமிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட சினைமுட்டைகள் பெறப்பட்டு கருவூட்டம் செய்யப்படுகின்றன, கருவூட்டம் பெற்ற கருமுட்டைகளில் ஒன்று கருவறைக்குள் செலுத்தப்பட்டதற்குப் பின்னர் முயற்சி தோல்வியுறும் பட்சத்தில் மறுமுறை இதே சிகிச்சையை மேற்கொள்வதற்கு ஏதுவாக உபரியாக உள்ள கருமுட்டைகள் உறைநிலையில் பாதுகாத்து வைக்கப்படுகின்றன.
இருந்தபோதிலும் முயற்சி வெற்றி பெற்று மருத்துவ சிகிச்சை முடிவுற்ற பின்னர் உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டைகள் வர்த்தக பொருளாக ஆக்கப்படுகின்றன, குறிப்பாக நிராகரிக்கும் மேற்கத்திய நாடுகளில் இந்த தீயசெயல் சாதாரனமாக நடந்துவருகின்றன, நீண்ட காலத்திற்கு அல்லது சில தருணங்களில் ஒரு வருட காலத்திற்குக்கூட கருமுட்டைகள் உறைநிலையில் வைக்கப்பட்டு எந்த பெண்ணடமிருந்து எடுக்கப்பட்டதோ அந்த பெண்ணிற்கு செலுத்தப்படாமல் மற்ற தம்பதிகளுக்கோ அல்லது திருமணம் ஆகாத பெண்ணிற்கோ விற்பனை செய்யப்படுகின்றன, இத்தகைய மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் உறைநிலைக் கருக்களின் சேமிப்பு வங்கிகளாக செயல்படுகின்றன, செய்தி ஊடகங்களின் ஆய்வறிக்கை அடிப்படையில் வெவ்வேறு பெண்களிடமிருந்து எடுக்கப்படும் சினைமுட்டைகள் வேறுபாடின்றி வெவ்வேறு ஆண்களின் விந்தணுவோடு இணைத்து கருவூட்டம் செய்யப்படுகின்றன, முதல்தடவை கருமுட்டை செலுத்தப்பட்டு முயற்சி தோல்வியடைந்த மற்ற பெண்ணகளுக்கு இத்தகைய அந்நிய கருமுட்டைகள் செலுத்தப்படுகின்றன, இவ்வாறு இவர்கள் பிறக்கப்போகும் குழந்தையின் தாய்தந்தை மரபுவழியை தவறாக மாற்றியமைத்து சந்ததிகளின் மரபுவழி சீர்முறையை (genetical line) திரித்து மனித இனத்தை வழிகேட்டில் ஆழ்த்துகிறார்கள்!
மேலும் இத்தகைய உறைநிலை மருத்துவ தொழில்நுட்பம் கருமுட்டை அளவில் நிறுத்திக் கொள்ளாமல் கருவூட்டம் பெறாத சினைமுட்டைகளையும் கருநிலை சிசுக்களையும்(ச்ர்ங்ற்ன்ள்ங்ள்) உறைநிலையில் சேமித்து வைத்து அவைகளைப் பெற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுபவர்களுக்கு விற்பனை செய்கிறார்கள், இத்தகைய வர்த்தகத்தை மேற்கொண்டிருக்கும் சிலர் சில தருணங்களில் பிரபலமான சில மனிதர்களுடைய சினைமுட்டைகளையோ அல்லது கருநிலை சிசுக்களையோ உள்ளபடியே விற்பனை செய்துவருகிறார்கள்!
இதுதான் உறைநிலை கருமுட்டை மற்றும் கருநிலை சிசுக்கள் ஆகியவற்றைப் பற்றிய உண்மைநிலையாகும், இந்த விஷயம் தொடர்பாக விரிவான விளக்கம் இருந்தபோதிலும் நாம் கூறியுள்ளவை ஒட்டுமொத்த விஷயத்தையும் உள்ளடக்கிய சுருக்கமான விளக்கமாகும்.
இந்த விளக்கங்களின் அடிப்படையில் இதற்குரிய ஹுகும் ஷரியா(இறைசட்டம்) கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
1. சட்டரீதியான தம்பதிகளில் உள்ள பெண்ணின் சினைமுட்டையை அவளுடைய கணவனின் விந்தணுவோடு இணைத்து சோதனைக்குழாயில் கருவூட்டம் செய்வதைப் பொறுத்தவரை அதற்கு அனுமதியுண்டு, திருமணமான தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு இயல்பாக விரும்புவார்கள் என்ற நிலையில் ஏதேனும் உடல்ரீதியான பிரச்சினைகளால் அவள் கருவறையில் இயற்கையாக கருவுறுதல் நடைபெறுவதற்கு வாய்ப்பபில்லை எனும்போது இது அனுமதிக்கப்பட்டதுதான் ஏனெனில் இது மருத்துவ சிகிச்சையை சார்ந்ததாகும், அல்லாஹ்வின்தூதர்(ஸல்) மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கு ஏவியிருக்கிறார்கள். உஸôமா இப்ன் ஷுரைக்(ரலி) அறிவித்து அபூதாவூதில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.
تَدَاوَوْا فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَمْ يَضَعْ دَاءً إِلَّا وَضَعَ لَهُ دَوَاءً غَيْرَ دَاءٍ وَاحِدٍ الْهَرَمُ
ஆம்! நீங்கள் நிச்சயமாக மருத்துவம் செய்து கொள்ள வேண்டும் ஏனெனில் அல்லாஹ் அஸ்வஜல் நிவாரணம் இல்லாத நிலையில் முதுமையைத்தவிர (மரணத்தைத் தவிர) எந்த நோயையும் விட்டுவிடவில்லை.
எனினும் குழந்தைப்பேறுக்காக இந்தமுறையில் சிகிச்சை மேற்கொள்வதற்கு இரண்டு நிபந்தனைகள் உண்டு.
முதலாவதாக: சோதனைக்குழாயில் கருவூட்டுதல் மேற்கொள்வது சட்டரீதியான தம்பதிகளுக்குள் மட்டுமே நடைபெறவேண்டும்,
ருவைபா இப்ன் தாபித் அல்அன்ஸôரி(ரலி) அறிவித்துள்ள ஹதீஸில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.
لَا يَحِلُّ لِامْرِئٍ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ يَسْقِيَ مَاءَهُ زَرْ غَيْرِهِ
அல்லாஹ்வின் மீதும் மறுமைநாள் மீதும் ஈமான் கொண்ட எவருக்கும் மற்றவர்களின் பயிரில் நீர்பாசனம் செய்வதற்கு அனுமதியில்லை.
ஆகவே ஒரு பெண்ணின் சினைமுட்டையை அவளுடைய சட்டரீதியான கணவனின் விந்தணுவைக் கொண்டு அல்லாது கருவூட்டம் செய்வதற்கு அனுமதியில்லை.
இரண்டாவதாக: சோதனைக்குழாயில் கருவூட்டம் செய்யப்பட்ட கருமுட்டைகள் மனைவியின் கருவறையில் மட்டுமே செலுத்தப்படவேண்டும், என்பதோடு மனைவி இந்த சிகிச்சையை மேற்கொள்ளும்போது கணவன் உயிருடன் இருக்கவேண்டும் என்பது கட்டாயமாகும், மேற்குநாடுகளில் நடைபெறுவதைப்போல கணவனின் இறப்புக்குப் பின்னர் இந்த சிகிச்சையை மேற்கொள்வதற்கு அனுமதியில்லை, மேற்குநாடுகளின் மக்களைப் பொறுத்தவரை ஒரு பெண் குழந்தையை விரும்பும்போது கணவன் உயிருடன் இல்லாதபோதும் கருமுட்டையை கருவறையில் செலுத்திக் கொண்டு குழந்தை பெற்றுகொள்வதில் எந்த தீங்கும் இல்லையென்று கருதுகிறார்கள், ஆனால் இஸ்லாத்தில் இதற்கு அனுமதியில்லை ஏனெனில் கணவன் உயிருடன் இல்லாதநிலையில் மனைவி கற்பம் அடைந்தால் பிறகு அவள் பெரும்பாவம் புரிந்தவர்களில் ஆகிவிடுவாள், உமர்(ரலி) மற்றும் அலீ(ரலி) ஆகியோர் அறிவித்துள்ள ஹதீஸில் இது தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த ஹதீûஸ அவர்கள் அறிவித்தபோது ஸஹாபாக்கள் எவரும் அதற்கு எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை, இவ்விருவரும் அறிவித்தது அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதற்கு முரண்பாடாக இருந்திருக்கும் பட்சத்தில் நிச்சயமாக மற்ற ஸஹாபாக்கள் இதற்கு மறுப்பு தெரிவித்திருப்பார்கள், இதனடிப்படையில் இது ஸஹாபாக்களின் ஒருமித்த முடிவாக (இஜ்மா அஸ்ஸஹாபா) இருக்கிறது.
எனவே கணவன் இல்லாத நிலையில் மனைவி கற்பம் அடைதல் என்பது விபச்சாரம் புரிந்ததற்கு ஆதாரமாக கொள்ளப்படுகிறது, (கணவனல்லாத) அந்நிய ஆணுடன் உடலுறவு கொண்டதன் விளைவாக கற்பம் ஏற்படும் பட்சத்தில் அந்த செயல் தண்டனை சட்டங்களுக்கு (hudood law) உட்படக்கூடியது, இதே அடிப்படையில் கற்பம் அடைதல் உடலுறவு கொள்ளாத நிலையில் ஏற்பட்டாலும் அதாவது கணவன் இறந்துவிட்ட நிலையில் சோதனைக்குழாயில் கருவூட்டம் செய்யப்பட்ட கருமுட்டையை கருவறையில் செலுத்திக் கொள்வதன் மூலம் மனைவிக்கு கற்பம் ஏற்பட்டாலும் அது தடுக்கப்பட்ட செயல்களில் உள்ள தண்டனைக்குரிய குற்றமாகும்.
இதனடிப்படையில் சட்டரீதியான கணவன் உயிரோடு இருக்கும் நிலையில் மனைவியின் கருவறைக்கு வெளியே சோதனைக்குழாயில் கணவன் மற்றும் மனைவி ஆகியோரின் இந்திரியங்களை(விந்தணு மற்னும் சினைமுட்டை) இணைத்து கருவூட்டம் ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு அனுமதியுண்டு.
2. உபரியாக கருமுட்டைகளை உறைநிலையில் வைத்திருப்பதைப் பொறுத்தவரை முதல் முயற்சி தோல்வியுறும்போது மறுபடியும் அதே முயற்சியை மேற்காள்வதற்காக அவை உறைநிலையில் பாதுகாத்து வைக்கப்படுகின்றன, இவ்வாறு இருக்கும் நிலையில் உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டைகள் அதே பெண்ணுக்கும் அவளுடைய சட்டரீதியான கணவனுக்கும் உரியதாக இருக்கவேண்டும். இதில் உயிரணுக்களில் கலப்படம் நிகழவில்லை என்பதை நிச்சயமாக உறுதிப்படுத்திக் கொண்டால் பிறகு அவற்றை பயன்படுத்துவதற்கு அனுமதி உண்டு. ஆனால் இச்சமயத்ததில் அவள் கணவன் உயிருடன் இருக்கவேண்டும் என்பது நிபந்தனையாகும்.
எனினும் செய்தி ஊடகங்களின் ஆய்வறிக்கையின் அடிப்படையில் சட்டரீதியான தம்பதிகளின் சினைமுட்டை மற்றும் விந்தணு ஆகியவற்றில் கலப்படம் நிகழ்கிறது என்பது திட்டவட்டமாக உறுதி செய்யபட்டிருக்கிறது, இவ்வாறு நிகழும்போது சோதனைக்குழாய் முறையில் பிறக்கும் குழந்தையின் தாய்தந்தை மரபுவழி குறித்து சந்தேகம் ஏற்படுவதால் அந்த குழந்தையின் வாழ்வு கேள்விக்குறி ஆகிவிடுகிறது. இது மனிதகுலத்தை அழிவுக்கு இட்டுச்செல்லும் மிகப்பாவமான செயலாகும், அறிந்த நிலையிலோ அல்லது அறியாத நிலையிலோ முஸ்லிம்கள் இந்த இழிசெயலுக்கு உடந்தையாக இருந்துவிடக்கூடாது, ஆகவே சட்டரீதியான முஸ்லிம் தம்பதிகள் சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள சிகிச்சை மேற்கொள்ளும்போது கீழ்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் மேற்கொள்ளவேண்டும்.
1, மனைவியின் சினைமுட்டையை உயிருடன் இருக்கும் கணவனின் விந்தணுவோடு இணைத்து கருவூட்டம் செய்யும்போது முறையான கவனம் எடுத்துக் கொள்ளப்படவேண்டும், மனைவியின் கருவறைக்குள் கருமுட்டை செலுத்தப்படும்போதும் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கும்போதும் நிகழ்வுகளை எச்சரிக்கையாக கண்காணித்து வரவேண்டும்.
11, உபரியாக உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டைகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையை கையாள வேண்டும், அவைகள் எந்தவிமாமான கலப்படத்திற்கும் உட்படுத்தப்படாமலும் மற்றவர்கள் அதை பயன்படுத்துவதற்கு எந்த முகாந்திரத்திற்கு இடம் கொடுக்காமலும் அவை மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டும், இந்தமுறையில் கருமுட்டைகளுக்கு மத்தியில் கலப்படம் நிகழ்கிறது என்ற அறிவிப்பின் அடிப்படையில் அவ்வாறு நிகழாமல் இருப்பதற்கு மிகுந்த எச்சரிக்கையும் கவனமும் எடுத்துக் கொள்ளப்படவேண்டும்.
111, கருவறையில் செலுத்தப்பட்ட கருமுட்டை கருவாக வளர்ச்சியடைந்து கற்பம் உறுதிப்படுத்தப் பட்டுவிட்டால் உபரியாக உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டைகள் அனைத்தும் உடணடியாக அழிக்கப்படவேண்டும், அவைகளை அந்நியர்கள் பயன்படுத்தும் விதத்திலோ அல்லது அந்நியர்களுக்கு விற்பனை செய்யப்படும் விதத்திலோ எதுவும் நிகழாமல் பார்த்துக் கொள்ளவேண்டும், எனினும் இதை கண்கூடாக அறிந்துகொள்வதற்கு வழிமுறை எதுவும் இல்லை என்பதுதான் உண்மை நிலையாகும், உபரியாக உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டைகள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம் என்ற இந்த நிபந்தனை முறையாக நிறைவேற்றப்பட்டதா என்பதை திட்டவட்டமாக உறுதிசெய்ய முடியாதவகையில் இந்தவிஷயம் வெறும் யூகமாவே இப்போது இருந்துவருகிறது.
"ஹராமான செயலை செய்வதற்கு ஏதுவாக இருக்கும் அனைத்து சாதனங்களும் (Means) ஹராமானவையே."
என்ற ஷரியா விதிமுறையின் அடிப்படையில் ஹராம் நிகழ்வதற்கு சிறிய வாய்ப்பு கூட இருக்குமானால் பிறகு இந்த சிகிச்சைமுறை ஹராமாகிவிடும், உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள உபரியான கருமுட்டைகள் அந்நியர்களுக்கு விற்பனை செய்யப்படும்போதும் அறிந்த நிலையிலோ அல்லது அறியாத நிலையிலோ அவற்றில் கலப்படம் நிகழும்போதும் அது ஹராமாகிவிடுகிறது, மரபுவழியில் பரிசுத்தத்தை பாதுகாப்பது கட்டாய கடமை என்று இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது.
இப்ன் அப்பாஸ்(ரலி) அறிவித்துள்ள ஹதீஸ் இப்ன் மாஜாவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியிருப்பதாவது.
""தனது தந்தையை அல்லாமல் மற்றொருவரிடம் பிறப்புரிமையை கோருபவர் மீதும் தனது பாதுகாவலரை அல்லாமல் மற்றவரிடம் பாதுகாப்புரிமையை கோருபவர் மீதும் அல்லாஹ்வின் சாபமும் மலக்குகளின் சாபமும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும்.
அபூஹுரைரா(ரலி) அறிவித்து திர்மிதியில் பதிசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.
லிஆன்( (li’aan – சாபமிடுதல்) தொடர்பான வசனம் அருளப்பட்ட தருணத்தில் அல்லாஹவின்தூதர்(ஸல்) கூறினார்கள்.
أيَّما امرأة أدخلت على قوم نسباً ليس منهم فليست من الله في شيء، ولم يدخلها الله جنته
"எவளேனும் ஒருபெண் ஒருகூட்டத்தாருக்கு வாரிசாக இல்லாத சந்ததியை (அவர்களுக்கு உரியது என்று) அறிமுகப்படுத்துவாளாயின் அவளுக்கு அல்லாஹ்வுடன் எந்தவிதமான தொடர்பும் கிடையாது மேலும் அவன் அவளை சுவனத்தில் நுழைவிக்கமாட்டான்."
இதனடிப்படையில் சோதனைக்குழாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளும்போது உபரியாக கருமுட்டைகளை உறைநிலையில் வைத்திருப்பது ஹராமாகும், மனைவியின் கருவறையில் செலுத்தப்பட்ட கருமுட்டையைத் தவிர்த்து உபரியாக கருவூட்டம் செய்யப்பட்ட கருமுட்டைகள் அனைத்தும் உடனே அழிக்கப்பட வேண்டும். அவைகளை உறைநிலையில் வைப்பதற்கோ அல்லது மறுமுறை பயன்படுத்துவதற்கோ அனுமதி கிடையாது, கருவறையில் செலுத்தப்பட்ட முதல் கருமுட்டை செயலற்றுவிடுமாயின் பிறகு மனைவி மறுபடியும் அதே மருத்துவ சிகிச்சைக்கு உட்படவேண்டும், ஒவ்வொருமுறையும் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுவது மனைவிக்கு கஷ்டம் என்ற காரணத்திற்காக கருமுட்டைகளை உறைநிலையில் வைத்துக்கொள்வதற்கு அனுமதியில்லை ஏனெனில் இது குழந்தையின் தாய்தந்தை மரபுவழியில கலப்படம் ஏற்படுவதற்கு வழிவகுத்துவிடும்.
கருமுட்டைகளை உறைநிலையில் வைக்கும்முறை ஷரியாவின் அடிப்படையில் ஹராம் என்று கூறப்பட வேண்டுமானால் கருமுட்டையில் கலப்படம் ஏற்படும் என்ற சந்தேகம் மிகைத்து நிற்கவேண்டும் என்றும் ஆனால் இதில் சாதாரணமான சந்தேகம் நிலவுகிறதே தவிர உறுதியான சந்தேகம் நிலவவில்லை என்றும் சிகிச்சை அளிக்கும் மருத்துவநிலையம் நம்பிக்கைக்குரியதாக இருந்து செயல்முறைகள் உரிய கண்காணிப்புடனும் பாதுகாப்புடனும் நடத்தப்படுமாயின் இது அனுமதிக்கப்பட்டதாக இருக்கும் என்றும் ஒருவர் வாதிடலாம், முதல்தடவை கருவறையில் கருமுட்டை செலுத்தப்பட்டதற்கு பின்னர் உபரியாக உள்ள கருமுட்டைகளை மீண்டும் பயன்படுத்தாமல் முறையாக அழித்துவிடும் நம்பிக்கைக்குரிய மருத்துவநிலையங்கள் இருக்குமானால் திரும்பத்திரும்ப மருத்துவ சிகிச்சைக்கு மனைவியை உட்படுத்தும் கஷ்டத்தை நீக்கும்வகையில் உபரியாக கருமுட்டைகளை உறைநிலையில் வைத்துக்கொள்வதற்கு அனுமதி உண்டா? என்ற கேள்வியைப் பொறுத்தவரை கீழ்கண்ட விளக்கம் அளிக்கப்படுகிறது:
ஷரியாவின் இந்த விதிமுறையை பிரயோகிப்பதற்கு சந்தேகம் உறுதியான முறையில் இருக்கவேண்டும் என்ற வாதம் சரியானதுதான், சிகிச்சை பெறும் மருத்துவநிலையம் நம்பிக்கைக்கு உரியதாக இருக்கும்நிலையில் இத்தகைய உறுதியான சந்தேகம் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்பதும் உண்மைதான், கருமுட்டைகளில் கலப்படம் ஏற்படுவதற்கு அறவே வாய்ப்பில்லை என்றும் கருவறையில் செலுத்தப்பட்ட கருமுட்டை கருவாக வளர்ந்து முயற்சி வெற்றி பெற்றுவிட்ட பின்னர் உபரியாக உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டைகள் முறையாக அழிக்கப்பட்டுவிடும் என்றும் முழுமையான நம்பிக்கை இருக்கும்பட்சத்தில் இது அனுமதிக்கப்பட்டதுதான், எனினும் இது மிகவும் உணர்வுபூர்வமான விஷயமாக இருப்பதாலும் செய்தி ஊடகங்களின் ஆய்வறிக்கை திட்டவட்டமாக குற்றங்கள் நடப்பதை சுட்டிக்காட்டுகின்றன என்ற அடிப்படையிலும் இத்தகைய சிகிச்சைமுறையில் இடம்பெறும் இரண்டு நிலைகளை ஆய்வுசெய்யும்போது இதுபோன்ற நம்பிக்கைகள் நிச்சயமற்றவை என்பது உறுதியாகும்.
முதலாவதாக. கருவறையில் கருமுட்டை செலுத்தப்பட்டு அது கருவாக வளர்ச்சி அடைகிறதா இல்லையா என்பதை உறுதிசெய்வதற்கு காத்திருக்கும் காலகட்டத்தில் அனைவரின் கவனமும் கருவளர்ச்சியின் மீது நிலைத்திருக்குமே ஒழிய உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டை மீது கவனம் நிலைத்திருக்காது.
இரண்டாவதாக. கருவறையில் செலுத்தப்பட்ட கருமுட்டை கருவாக வளர்ச்சி அடைவது உறுதிசெய்யப்பட்ட பின்னர் உபரியாக உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டைகள் அனைத்தையும் அழிக்கும் செயல்முறை முறையான கண்காணிப்போடு நிறைவேற்றப்படவேண்டும், ஆனால் கருவுற்ற மனைவியோ அல்லது அவளது கணவனோ இவ்விஷயத்தில் உரிய கவனத்தையோ அல்லது முறையான அக்கறையையோ எடுத்துக்கொள்வதில்லை, அதிகப்பட்சமாக "உபரியான கருமுட்டைகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டதா?"என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு "ஆம், அழிக்கப்பட்டுவிட்டன" என்ற பொதுவான பதிலை மருத்துவர்கள் தெரிவிப்பார்கள், இவ்வாறு இருக்கும் நிலையில் மருத்துவநிலையங்கள் நம்பிக்கைக்கு உரியவை என்ற யூகத்தை வைத்துக்கொண்டு எவ்வாறு முழுமையாக திருப்தி கொள்ளமுடியும்?
எனவே சந்தேகம் மிகைக்கும்நிலை (strong suspicion – ghalabat dhanni)இடம்பெறாதபோதும் மேற்கண்ட ஷரியா விதிமுறையின் அடிப்படையில் இந்த செயல்முறை ஹராமாக இருக்கக்கூடாது என்பது அவசியமாகும், ஆனால் மிக நிச்சயமாக இது "சந்தேகத்திற்குரியது" என்பதுதான் உண்மைநிலையாகும்.
ஹஸன் இப்ன் அம்ர்(ரலி) அறிவித்து திர்மிதியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹஸன் ஸஹீ ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது
அல்லாஹ்வின்தூதரின்(ஸல்) வார்த்தைகளை நான் மனனம் செய்திருக்கிறேன் அவர்கள்(ஸல்) கூறினார்கள்.
دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لَا يَرِيبُكَ
"சந்தேகத்திற்கு உரியவைகளை விட்டுவிட்டு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவைகளை எடுத்துக்கொள்ளுங்கள்"
முடிவுரை:
இயற்கையாக குழந்தை பெற்றுக்கொள்ள இயலாத தம்பதிகள் சோதனைக்குழாய் மருத்துவமுறையில் மனைவியின் சினைமுட்டையோடு கணவனின் விந்தணுவை இணைத்து கருவறைக்கு வெளியே கருவூட்டம் செய்துகொள்வதன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு அனுமதியுண்டு.
கருவூட்டம் செய்யப்பட்ட கருமுட்டைகள் சோதனைக்குழாயிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு கருவறையில் செலுத்தப்பட்ட பின்னர் எஞ்சியுள்ள கருமுட்டைகள் அனைத்தும் வேறெந்த வகையிலும் பயன்படுத்துவதற்கு இடம் கொடுக்காத வகையில் உடனே அழிக்கப்படவேண்டியது கட்டாயமாகும்.
அல்லாஹ்(சுபு) வின் நாட்டப்படி முதல்முறை செலுத்தப்பட்ட கருமுட்டையின் மூலம் கற்பம் தரிக்குமானால் நிச்சயமாக அந்த தம்பதிகள் அல்லாஹ்(சுபு) வுக்கு நன்றி செலுத்துவார்கள். ஒருவேளை அல்லாஹ்(சுபு) நாடி கருவறையில் செலுத்தப்பட்ட கருமுட்டை செயலற்றுப்போய் முயற்சி தோல்வியுறுமானால் அந்த தம்பதிகள் மறுமுறையும் இந்த மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளவேண்டுமே ஒழிய உபரியாக கருமுட்டைகளை உருவாக்கி அவற்றை உறைநிலையில் வைத்துக்கொள்வதற்கு ஒருபோதும் முயற்சிக்கக்கூடாது.
சட்டரீதியாக திருமணம் செய்துகொண்ட தம்பதிகளின் சினைமுட்டை மற்றும் விந்தணு ஆகியவற்றை கருவறைக்கு வெளியே வைத்து கருவூட்டம் செய்துகொள்வதற்கு அனுமதியுண்டு ஆனால் இதை கணவன் உயிரோடு இருக்கும்போது மட்டுமே மேற்கொள்ளமுடியும்.
குழந்தையின் பாலினத்தை நிர்ணயித்தல் – Determining the child gender:
வரலாற்றுக்கு முந்தைய காலம் தொட்டே மனிதர்கள் குழந்தையின் பாலினத்தை தேர்வுசெய்வதில் விருப்பம் கொள்பவர்களாகவும் விரும்பிய பாலினம் உருவாகும்போது ஏற்றுக்கொள்கிறவர்களாகவும் விரும்பாத பாலினம் உருவாகும்போது அந்தந்த காலகட்டத்தில் கிடைக்கும் செயல்முறையை பிரயோகிகத்து அவற்றை நீக்குபவர்களாகவும் இருந்து வந்திருக்கிறார்கள்.
அறியாமைக் காலத்தில் ஆண்குழந்தை அதிகமாக விரும்ப்பட்டது ஏனெனில் அது போர்க்களத்திலும் மற்ற விஷயங்களிலும் தந்தைக்கு உதவியாக இருப்பதோடு சந்ததியையும் நிலைநிறுத்துகிறது, அதேவேளையில் பெண்குழந்தை துயரத்தை கொடுக்கக்கூடியது என்று கருதப்பட்டதால் உயிருடன் புதைக்கப்பட்டது,அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.
وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنْبٍ قُتِلَتْ
உயிருடன் புதைக்கப்பட்ட (பெண்) குழந்தை எதற்காக கொல்லப்பட்டது என்று வினவப்படும்போது... (அத்தக்வீர் : 8. 9)
பிறகு வந்த காலகட்டத்தில் விரும்பாத குழந்தைகளை கருவிலேயே நீக்கிவிடும் வழிமுறை ஏற்படுத்தப்பட்டது, தாயின் கருவறையில் ஸகேன் செய்து குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து விருப்பத்திற்கு மாற்றமாக இருக்கும் பட்சத்தில் கருவை கலைத்திடும் செயல்முறை மேற்கொள்ளப்பட்டது.
அறிவியல் முன்னேற்றம் அடைந்த இந்தக் காலகட்டத்தில் இவ்விஷத்தில் நவீன தொழில்நுட்பங்கள் பல ஏற்பட்டிருக்கின்றன, கருவறையில் இருக்கும் கருநிலை சிசுவை (foetus) கண்காணிக்கவும் அதன் இயக்கத்தை விரும்பியவாறு கட்டுப்படுத்தவும் இப்போது சாத்தியம் இருக்கிறது, கருவறையிலுள்ள கருவின் மரபணு (gene)அமிலத்தன்மையின் சூழலில் (acidic environment) இருந்தால் பெரும்பாலும் அது பெண் சிசுவாக உருவாகும் என்றும் மரபணு காரத்தன்மையின் சூழலில் (alkaline environment) இருந்தால் அது பெரும்பாலும் ஆண் சிசுவாக உருவாகும் என்றும் கண்டறியப்பட்டிருக்கிறது, இதனடிப்படையில் ஆண்குழந்தை மீது விருப்பம் கொள்பவர்கள் உடலுறவு ஏற்படுவதற்கு முன்பு கருவறைக்குழாயில்(vegina) காரத்தன்மையுள்ள திரவத்தை பீச்சிக்கொள்வதன் மூலம் கருவறையில் காரத்தன்மையின் சூழலை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இதற்கு அல்கலைன் டூஷிஸ்(ஹப்ந்ஹப்ண்ய்ங் க்ர்ன்ஸ்ரீட்ங்ள்) என்று பெயராகும். இதன் மூலமாக ஆண்குழந்தை தரிப்பதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது.
இதற்கு அடுத்தபடியாக பெண்ணின் உடலில் காரத்தன்மையின் சூழல் அல்லது அமிலத்தன்மையின் சூழல் ஆகியவற்றை உருவாக்குவதற்கு உணவுமுறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன, கருவின் பாலின உருவாக்கத்தில் இரண்டு வழிகளில் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் என்று இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.
முதலாவதுமுறை: கருவறை மற்றும் கருவறைக்குழாய் ஆகியவற்றில் காரத்தன்மையையோ அமிலத்தன்மையையோ செயற்கையாக உருவாக்குதல்,பொட்டாஷியம் மற்றும் சோடியம் ஆகியவை காரத்தன்மையை ஏற்படுத்தக்கூடியவை என்றும் இவற்றைக் கொண்டு கருவறையின் சூழலை மாற்றும்போது ஆண்குழந்தை உருவாகுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறதென்றும் அதேவேளையில் மெக்னீஸியம் மற்றும் கால்ஸியம் ஆகியவை அமிலத்தன்மையை ஏற்படுத்தக்கூடியவை என்றும் இவற்றைக் கொண்டு கருவறையின் சூழலை மாற்றும்போது பெண்குழந்தை உருவாகுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறதென்றும் கண்டறியப்பட்டது.
இரண்டாவதுமுறை: உணவுமுறை சினைமுட்டையின் வெளிப்புறசுவரில் விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதையும் அதன் மூலமாக அது விந்தணுவிலுள்ள ஆண்அணுவையோ (male sperm) அல்லது பெண்அணுவையோ (female sperm) ஈர்க்கும் திறனைப் பெற்றுக்கொள்கிறது என்றும் ஆய்வுசெய்யப்பட்டது.
இதனடிப்படையில் ஆண்குழந்தை மீது விருப்பம் கொள்ளும் தம்பதிகளுக்கு குறிப்பாக மனைவிக்கு காரத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் உணவான உப்பேற்றிய மாமிசம்(salty meat) மசாலாபொருட்கள் கலந்த உணவுகள் பழங்கள் மற்றும் பொட்டாஷிய சத்து மிகுந்த மருந்துகள் ஆகியவற்றை உட்கொள்ளவும் பால் மற்றும் பால்பொருட்கள் ஆகியவற்றை தவிர்த்துக் கொள்ளவும் பரிந்துரை செய்யப்பட்டது.
மாறாக பெண்குழந்தை மீது விருப்பம் கொள்ளும் தம்பதிகளுக்கு குறிப்பாக மனைவிக்கு அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் உணவான பால் மற்றும் பால் பொருட்கள். கால்ஸிய சத்து மிகுந்த மருந்துகள் ஆகியவற்றை உட்கொள்ளவும் மாமிசம் குறிப்பாக உப்பேற்றிய மாமிசம் பழங்கள் மசாலா மற்றும் நறுமண உணவுப்பொருட்கள் ஆகியவற்றை தவிர்ந்து கொள்ளவும் பரிந்துரை செய்யப்பட்டது.
இதன்பின்னர் மற்றொரு வழிமுறையும் கண்டறியப்பட்டது: பெண்ணுடைய சினைமுட்டை முன்னதாக வெளிப்பட்டு தயார்நிலையில் இருக்கையில் அதன்பின்னர் ஆணின் விந்தணு வெளிப்பட்டு கருவுறுதல் நடைபெறுமாயின் பெரும்பாலும் ஆண்குழந்தை உருவாகிறது என்றும் மாறாக ஆணின் விந்தணு முன்னதாக வெளிப்பட்டு தயார்நிலையில் இருக்ககையில் அதன்பின்னர் பெண்ணின் சினைமுட்டை வெளிபட்டு கருவுறுதல் நடைபெறுமாயின் பெரும்பாலும் பெண்குழந்தை உருவாகிறது என்றும் கண்டறியப்பட்டது, உதாரணமாக சினைப்பையிலிருந்து சினைமுட்டை வெளிப்பட்ட பின்னர் தம்பதிகளுக்குள் உடலுறவு ஏற்பட்டு கருவுறுதல் நடைபெற்றது எனில் ஆண்குழந்தை தரிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதேவேளையில் தம்பதிகளுக்குள் உடலுறவு ஏற்பட்ட பின்னர் சினைப்பையிலிருந்து சினைமுட்டை வெளிப்பட்டு கருவுறுதல் நடைபெற்றது எனில் பெண்குழந்தை தரிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன, இவ்வாறாக பெண்ணின் சினைமுட்டை வெளிப்பட்டு 24 மணி நேரத்திற்குள் தம்பதிகளுக்குள் உடலுறவு எற்பட்டால் ஆண்குழந்தைக்கு அதிக வாய்ப்பும். உடலுறவு ஏற்பட்டு சில மணி நேரத்திற்குள் சினைமுட்டை வெளிப்பட்டால் பெண்குழந்தைக்கு அதிக வாய்ப்பும் இருக்கிறது, ஆகவே ஆண்குழந்தையை விரும்பும்போது பெண்ணின் சினைமுட்டை கருவறையில் இருக்கும் நாட்களில் உடலுறவு ஏற்படுத்திக் கொள்ளும்படியும் ஆண்குழந்தை விரும்பப்படாதபோது அந்த நாட்களில் உடலுறவு ஏற்படுத்திக் கொள்ளாமலோ அல்லது உடலுறவு கொள்ளும்நிலை ஏற்பட்டால் ஆணின் இந்திரியத்தை கருவறையில் செலுத்தாமல் ஆணுறுப்பை வெளியே எடுத்தும்விடும்படியோ அல்லது உடலுறவின்போது ஆணுறையை பயன்படுத்தும்படியோ மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள்.
இவ்வாறாக இந்திரியத்தை கருவறையில் செலுத்தாமல் ஆணுறுப்பை வெளியே எடுத்துவிடுதல் அல்லது ஆணுறை போன்ற கருத்தடை சாதனங்களை பயன்படுத்துதல் ஆகியவை குழந்தையின் பாலினத்தை தீர்மானிக்கும் செயல்முறைகளாக இருந்துவருகிறது.
பெண்ணின் கருவறையில் சினைமுட்டை இருக்கும் தேதியை அவளது மாதவிடாய் தேதியை வைத்து தீர்மானித்து விடலாம் என்றபோதும் அது தோராயமான கணிப்பாகத்தான் இருக்கும், கருவறைக்குள் என்டோஸ்கோப்பி கருவிமூலம் உற்றுநோக்கி கணிப்பதன் மூலமே சினைமுட்டையின் வெளிப்பாட்டை துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.
தவ்பான்(ரலி) அறிவித்து புஹாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதாக அறிவிக்கப்பட்டிருப்பதாவது.
"ஆணின் இந்திரியத்திற்கு முன்பாக பெண்ணின் இந்திரியம் வெளிப்பட்டால் அது ஆண்குழந்தையாகும். பெண்ணின் இந்திரியத்திற்கு முன்பாக ஆணின் இந்திரியம் வெளிப்பட்டால் அது பெண்குழந்தையாகும்"
தவ்பான்(ரலி) அறிவித்துள்ள மற்றொரு நீண்ட ஹதீஸ் முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது.
யூதரிலுள்ள ரப்பி (அறிஞர்) ஒருவர் அல்லாஹ்வின்தூதரிடம்(ஸல்) ஆண்குழந்தை பற்றி கேள்வி கேட்டார். அதற்கு பதிலுரையாக அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதாவது.
"அவர்கள் (உடலுறவில்) ஒன்றுபடும்போது ஆணின் இந்திரியமும் பெண்ணின் இந்திரியமும் வெளிப்படுகிறது, ஆணின் இந்திரியம் பெண்ணின் இந்திரியத்தை மிகைக்கும்போது அல்லாஹ்வின் விதிப்படி ஆண்குழந்தை உருவாகிறது. பெண்ணின் இந்திரியம் ஆணின் இந்திரியத்தை மிகைக்கும்போது அல்லாஹ்வின் விதிப்படி பெண்குழந்தை உருவாகிறது"
"ஆணின் இந்திரியம் பெண்ணின் இந்திரியத்தை மிகைத்துவிடுதல்" என்றால் பெண்ணின் சினைமுட்டை வெளிப்பட்ட பின்னர் ஆணின் விந்தணு வெளிப்படுதல் என்று பொருள்படும்.
இதன்பின்னர் மருத்துவநிபுணர்கள் மேம்பட்ட அறிவியல் வழிமுறையை உருவாக்கினார்கள் அதற்கு ""தேர்வுசெய்து விந்தணுவை செலுத்தும்முறை அல்லது விந்தணுவை கட்டுப்படுத்தும்முறை - selective sperm vaccination or sperm inhibition என்று பெயராகும், இந்தமுறையில் விந்தணுவில் இடம்பெற்றுள்ள ஆண்பாலுக்குரிய x குரோமோஸோமிலிருந்து பெண்பாலுக்குரிய y குரோமோஸோமை பிரித்துவிடுகிறார்கள். இந்த செயல்முறை பெண்ணின் கருவறைக்கு வெளியே சோதனைக்குழாயில் முறையான மருத்துவ தொழில்நுட்பத்தின் மேற்பார்வயில் நடைபெறுகிறது.
ஆணின் விந்தணுவில் x மற்றும் y குரோமோஸோம்கள் (மரபணு துகள்கள்) இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் பெண்ணின் சினைமுட்டையில் yy குரோமோஸோம்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன, அதாவது ஆணின் விந்தணுவில் ஆண்பாலுக்குரிய குரோமோஸோம்களும் பெண்பாலுக்குரிய குரோமோஸோம்களும் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் பெண்ணின் சினைமுட்டையில் பெண்பாலுக்குரிய குரோமோஸோமகள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன, விந்தணுவிலுள்ள y குரோமோஸோம் சினைமுட்டையுடன் இணைந்து கருவுறுதல் ஏற்பட்டால் அதன் விளைவாக xy என்ற மரபணு உருவாகிறது. அது ஆண்குழந்தைக்குரியது. மாறாக விந்தணுவிலுள்ள x குரோமோúஸôம் சினைமுட்டையுடன் இணைந்து கருவுறுதல் ஏற்பட்டால் அதன் விளைவாக xx என்ற மரபணு உருவாகிறது. அது பெண்குழந்தைக்குரியது, இதனடிப்படையில் மருத்துவ நிபுணர்கள் மருத்துவ தொழில்நுட்பத்தின் துணைகொண்டு விந்தணுவிலுள்ள (ஆண்பாலுக்குரிய) y குரோமோஸோம்லிருந்து (பெண்பாலுக்குரிய) x குரோமோúஸôமை பிரித்துவிட்டு பின்னர் சோதனைக்குழாயில் சினைமுட்டையுடன் விந்தணுவை இணைத்து கருவூட்டம் செய்கிறார்கள், தம்பதிகள் ஆண்குழந்தையை விரும்பும் பட்சத்தில் y குரோமோஸோம்உள்ள விந்தணுவுடன் சினைமுட்டையை இணைந்து கருவூட்டம் செய்கிறார்கள் அதன் மூலம் பெரும்பாலும் ஆண்குழந்தை உருவாகிறது, தம்பதிகள் பெண்குழந்தையை விரும்பும் பட்சத்தில் ஷ் குரோமோúஸôம் உள்ள விந்தணுவுடன் சினைமுட்டையை இணைந்து கருவூட்டம் செய்கிறார்கள் அதன் மூலம் பெரும்பாலும் பெண்குழந்தை உருவாகிறது.
இதேபோன்று மற்றொரு முறையை மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளார்கள். அது மேற்கூறப்பட்ட முறையிலிருந்து சிறிது வேறுபட்டது, இந்த முறையில் சோதனைக்குழாயில் விந்தணுவுடன் சினைமுட்டையை இணைத்து கருவூட்டம் செய்தபின்னர் கருவுற்ற முட்டையை ஆய்வுசெய்கிறார்கள். கருவுற்ற சினைமுட்டை xy மரபணுவை பெற்றிருந்தால் அது ஆண்குழந்தைக்குரிய கருவாகும். கருவுற்ற சினைமுட்டை xx மரபணுவை பெற்றிருந்தால் அது பெண்குழந்தைக்குரிய கருவாகும், ஆகவே ஆண்குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதிகள் விரும்பினால் xy மரபணு கொண்ட கருமுட்டையை மனைவியின் கருவறையில் செலுத்துகிறார்கள். பெண்குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதிகள் விரும்பினால் xx மரபணு கொண்ட கருமுட்டையை மனைவியின் கருவறையில் செலுத்துகிறார்கள்.
இவையனைத்தும் பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை தேர்வு செய்வதற்காக மனிதர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளாகும். இது வரலாற்றுக்கு முந்தைய காலந்தொட்டு இன்றுவரை நிகழந்துகொண்டிருக்கிறது.
இந்த விவகாரத்தின் எதார்த்தநிலை (taHqeeq al ManaaT) இவ்வாறு விளக்கப்பட்ட பின்னர் இதற்குரிய ஹுகும் ஷரியா(இறைசட்டம்) கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
1, விருப்பத்திற்கு மாற்றமாக பிறக்கும் குழந்தையை கொலைசெய்வது ஹராமான செயலாகும் ஏனெனில் இது வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு செய்யப்படும் கொலையாகும், இதற்கு தண்டனை மறுமையில் நரகநெருப்பில் நிரந்தரமாக வீழ்வதாகும். மேலும் இந்த உலகத்தில் அதற்கு உரியவர்களால் அந்தப்பாவம் மன்னிக்கப்படாவிட்டால் அதற்காக பழிதீர்க்கப்பட வேண்டும் (qisas) அல்லது இரத்தஈட்டுத்தொகை(diya) வழங்கப்படவேண்டும்.
அல்லாஹ்(சுபு) கூறுகிறான்
عَذَابًا عَظِيمًا .وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ
எவரேனும் ஒருவர் ஒரு மூ*மினை வேண்டுமென்றே கொலை செய்வாராயின் அவருக்கு உரிய தண்டனை நரகமேயாகும். மேலும் அல்லாஹ் அவர்மீது கோபம் கொள்கிறான் இன்னும் அவரை சபிக்கிறான் அவருக்கு மகத்தான வேதனையை தயாரித்து வைத்திருக்கிறான். (அந்நிஸா: 93)
11, பெற்றோர்கள் விரும்பாதபோது கற்பத்தில் வைத்து கருவில் இருக்கும் சிசுவை கொல்வதும் தண்டனைக்குரிய ஹராமான செயலே.
அபூஹுரைரா(ரலி) அறிவித்து புஹாரி. முஸ்லிம் ஆகியவற்றில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.
"ஹுதைல் கோத்திரத்திலுள்ள பெண்கள் இருவர் (சண்டையிட்டுக்கொண்டு) ஒருவர் மீது மற்றொருவர் கல்லெறிந்துவிட்டார். அதனால் அந்தப்பெண்ணின் கற்பம் கலைந்துவிட்டது, அல்லாஹ்வின்தூதரிடம்(ஸல்) இது முறையிடப்பட்டது. குற்றவாளி ஆண்அடிமையையோ அல்லது பெண்அடிமையையோ தியத்தாக கொடுக்கவேண்டும் என்று அவர்கள்(ஸல்) தீர்ப்புக் கூறினார்கள்"
111, கற்பம் தரிப்பதற்கு வாய்ப்புள்ள நாட்களில் உடலுறவில் ஈடுபடாமல் இருப்பது மூலமாகவோ அல்லது உடலுறவில் ஈடுபட்டபின்னர் இந்திரியத்தை கருவறையில் செலுத்தாமல் ஆணுறுப்பை வெளியே எடுத்துவிடுவது மூலமாவோ அல்லது ஆணுறை போன்ற கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவது மூலமாகவோ தற்காலிகமாக கருவுறுதலை தவிர்த்துக் கொள்வதற்கு அனுமதியுண்டு, உணவுமுறையில் மாற்றம் செய்துகொள்வது. காரம் மற்றும் அமிலத்தன்மை கொண்ட திரவத்தை கருவறைக்குழாயில் பீச்சிக்கொள்வது ஆகியவையும் அனுமதிக்கப்பட்டதே. இவற்றில் எந்தவிதான ஆட்சேபனையும் கிடையாது அவைகளுக்கு உணவு மற்றும் மருத்துவம் ஆகியவை தொடர்பான பொதுவான ஆதாரம் உள்ளது,
அபூஸயீது அல்குத்ரி (ரலி) அறிவித்து புஹாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.
ஆகவே நாங்கள் தொடர்ச்சியாக உடலுறவு கொள்ளாமல் விலகியிருக்கும் முறையை பின்பற்றுவதற்கு தீர்மானித்து அதை அல்லாஹ்வின்தூதரிடம்(ஸல்) கூறினோம், அதற்கு அவர்கள் இவ்வாறு பதில் கூறினார்கள்.
"நீங்கள் இவ்வாறு செய்யாமல் இருக்கவேண்டாமா? அல்லாஹ் இருக்கவேண்டும் என்று விதித்த எந்த ஆத்மாவும் மறுமை நாளுக்குள் இருந்தே தீரும்"
IV. ஆணின் விந்தணுவிலிருந்து பெண்பால் குரோமோúஸôமையும் ஆண்பால் குரோமோúஸôமையும் தனியாக பிரித்துவிட்ட பின்னர் ஆண்குழந்தையை தேர்வு செய்வதற்காக பெண்ணின் சினைமுட்டையுடன் விந்தணுவிலுள்ள ஆண்பால் குரோமோúஸôமைக் (y)கொண்டு கருவூட்டம் செய்வது அல்லது பெண்குழந்தையை தேர்வு செய்வதற்காக பெண்ணின் சினைமுட்டையுடன் விந்தணுவிலுள்ள பெண்பால் குரோமோúஸôமைக் (x) கொண்டு கருவூட்டம் செய்வது ஆகிய செயல்முறையைப் பொறுத்தவரை இவற்றை செய்வதற்கு அனுமதி கிடையாது ஏனெனில் இது குழந்தைப்பேறு இல்லாத பெண் ஒருவர் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக மேற்கொள்ளும் மருத்துவ முறையையோ அல்லது சிகிச்சை முறையையோ சாராது, இயற்கையாக குழந்தை பெற்றுக்கொள்ள வழியில்லாத சட்டரீதியான தம்பதிகள் சோதனைக்குழாய் மருத்துவமுறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு மட்டுமே அனுமதியுண்டு.
குழந்தையின் பாலினத்தை தேர்வுசெய்யும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்படும் இத்தகைய செயல்முறைகளை நிறைவேற்றுவதற்கு ஒரு பெண் தனது அந்தரங்க உடல்பகுதிகளை(aurah) அந்நியர்களிடம் வெளிப்படுத்த நேரிடும் ஏனெனில் இந்த செயல்முறையில் பெண்ணின் சினைப்பையிலுள்ள சினைமுட்டையை பிரித்தெடுப்பதற்கும் கருவுற்ற சினைமுட்டையை கருவறைக்குள் செலுத்துவதற்கும் அந்தரங்க உடல்பகுதிகளை வெளிப்டுத்தவேண்டிய நிலை ஏற்படும், மருத்துவ சிகிச்சை செய்துகொள்வதற்கு மட்டுமே இது அனுமததிக்கப்ட்டிருக்கிறது, குழந்தையின் பாலினத்தை தேர்வு செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய செல்முறைகள் மருத்துவ சிகிச்சையில் அடங்காது என்ற காரணத்தால் இது தடைசெய்யப்பட்ட ஹராமான செயலாகும் இதற்கு ஷரியாவில் அனுமதி கிடையாது.
முடிவுரையாக, இஸ்லாத்தின் அகீதாவோடு தொடர்புடைய முக்கியமான உண்மையை இங்கு குறிப்பிடவேண்டும் ஏனெனில் ஒரு முஸ்லிமுக்கு அது மிகவும் முக்கியமானதாகும், மேற்கூறப்பட்ட அனைத்து செயல்முறைகளையும் சிகிச்சைமுறைகளையும் மனிதன் மேற்கொள்வதற்குக் காரணம் அவன் படைப்பாற்றலை பெற்றிருக்கிறான் என்ற அர்த்தத்தில் அல்ல, ஆணிடத்திலும் பெண்ணிடத்திலும் கருவுறுதல் என்ற நிகழ்விலும் அல்லாஹ்(சுபு) படைத்து நிர்ணயம் செய்துள்ள சில பண்புகளையும் இயல்புகளையும் மனிதன் கண்காணித்து அவற்றை விளங்கிக்கொள்ளலாம், இந்த மகத்தான செயற்பாங்கின் போக்கை மனிதன் கண்காணிக்கலாம் அவைகளைக் குறித்து ஆய்வு மேற்கொள்ளலாம் மற்றும் பல பரிசோதனைகளையும் நடத்தலாம், இந்த ஆய்வின் அடிப்படையில் அவன் குறிப்பிட்ட உணவு முறைகளையும் குறிப்பிட்ட செயல்முறைகளையும் பின்பற்றலாம், மேலும் அவன் ஆணின் விந்தணுவிலுள்ள ஆண் குரோமோúஸôமையும் பெண் குரோமோúஸôமையும் தனித்தனியாக பிரித்து பெண்ணின் கருவறைக்கு வெளியே கருவூட்டம் செய்து அந்த கருமுட்டையை பெண்ணின் கருவறைக்குள் செலுத்தலாம், ஆனால் இதன் விளைவாக படைப்புகள் எதுவும் நிச்சயமாக உருவாகாது. அது முற்றிலும் அல்லாஹ்(சுபு) என்ற படைப்பாளன் கையில் இருக்கிறது, அல்லாஹ்(சுபு) தீர்மானிக்கும்போதுதான் படைப்புகள் உருவாகி இயக்கத்திற்கு வருகிறது, அல்லாஹ்(சுபு) அவ்வாறு நாடவில்லை என்றால் மனிதன் எத்தனை சோதனைகள் மேற்கொண்டாலும் எத்தனை ஆய்வுகள் மேற்கொண்டாலும் எத்தனை செயல்முறைகளை நிறைவேற்றினாலும் எந்தவிதமான படைப்பும் ஒருபோதும் உருவாகாது.
அல்லாஹ்(சுபு) படைக்க நாடும்போது மட்டும்தான் உயிர்கள் ஜனிக்கின்றன. அவன்(சுபு) நாடவில்லை என்றால் உயிர்கள் ஜனிக்காது,அல்லாஹ்(சுபு) மட்டும்தான் படைப்பாளன் என்ற உண்மையும் அவன்தான் ஆணையும் பெண்ணையும் படைக்கிறான் என்ற உண்மையும் மறுக்கமுடியாத வகையில் திட்டவட்டமான ஷரியா ஆதாரங்களால் உறுதிப்படுத்தப் பட்டிருக்கின்றன.
ذَلِكُمُ اللَّهُ رَبُّكُمْ لَا إِلَهَ إِلَّا هُوَ خَالِقُ كُلِّ شَيْءٍ فَاعْبُدُوهُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ 6:102
அவன்தான் உங்கள் இறைவனான அல்லாஹ். அவனைத்தவிர வேறு நாயன் இல்லை. அவன்தான் அனைத்துப் பொருட்களின் படைப்பாளன். ஆகவே அவனையே வணங்கிவழிபடுங்கள் இன்னும் அவனே அனைத்து காரியங்களுக்கும் பொறுப்பாளன் ஆவான், (ற்ம்வ் அல்அன்ஆம் 6:102)
إِنَّ رَبَّكَ هُوَ الْخَلَّاقُ الْعَلِيمُ 15:86
நிச்சயமாக உமது இறைவன் (அனைத்தையும்) படைத்தவனாகவும் எல்லாவற்றையும் அறிந்தவனாகவும் இருக்கிறான், ( அல்ஹிஜ்ர் 15:86)
ஆகவே எவன் படைக்கிறானோ அவன் படைக்காதவனைப்போல் ஆவானா? நீங்கள் சிந்திக்கமாட்டீர்களா? (அந்நஹ்ல் 16:17)
هَذَا خَلْقُ اللَّهِ فَأَرُونِي مَاذَا خَلَقَ الَّذِينَ مِنْ دُونِهِ بَلِ الظَّالِمُونَ فِي ضَلَالٍ مُبِينٍ 31:11
இவை (அனைத்தும்) அல்லாஹ்வின் படைப்பாகும் அவனையன்றி இருப்பவர்கள் எதைப் படைக்கிறார்கள் என்பதை எனக்குக் காண்பியுங்கள் (என்று நீர் கேட்பீராக) அவ்வாறல்ல. அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். ( லூக்மான் 31:11)
يَا أَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوا لَهُ إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ لَنْ يَخْلُقُوا ذُبَابًا وَلَوِ اجْتَمَعُوا لَهُ وَإِنْ يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَا يَسْتَنْقِذُوهُ مِنْهُ
ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ 22:73
மனிதர்களே. (உங்களுக்கு) ஓர் உதாரணம் கூறப்படுகிறது ஆகவே அதை செவிதாழ்த்திக் கேளுங்கள், நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களைப் பிரார்த்திக்கிறீர்களோ அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூட படைக்க முடியாது, இன்னும் ஒர் ஈ அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக்கொண்டு போய்விட்டால் பிறகு அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பவும் கைப்பற்றவும் முடியாது, தேடுபவரும் தேடப்படுபவர்களும் பலஹீனர்களே, ( அல்ஹஜ் 22:73)
يَا أَيُّهَا النَّاسُ إِنْ كُنْتُمْ فِي رَيْبٍ مِنَ الْبَعْثِ فَإِنَّا خَلَقْنَاكُمْ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِنْ مُضْغَةٍ مُخَلَّقَةٍ وَغَيْرِ مُخَلَّقَةٍ لِنُبَيِّنَ لَكُمْ وَنُقِرُّ فِي الْأَرْحَامِ مَا نَشَاءُ إِلَى أَجَلٍ مُسَمًّى ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوا أَشُدَّكُمْ وَمِنْكُمْ مَنْ يُتَوَفَّى وَمِنْكُمْ مَنْ يُرَدُّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ لِكَيْلَا يَعْلَمَ مِنْ بَعْدِ عِلْمٍ شَيْئًا وَتَرَى الْأَرْضَ هَامِدَةً فَإِذَا أَنْزَلْنَا عَلَيْهَا الْمَاءَ اهْتَزَّتْ وَرَبَتْ وَأَنْبَتَتْ مِنْ كُلِّ زَوْجٍ بَهِيجٍ 22:5
மனிதர்களே (மறுமைநாளில்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி நீங்கள் சந்தேகத்தில் இருந்தீர்கள் என்றால் (அறிந்துகொள்ளுங்கள்) நிச்சயமாக நாம் உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும் பின்னர் அலக்கிலிருந்தும் பின்னர் உருவாக்கப்பட்டதும் உருவாக்கம் பெறாததுமான தசைக்கட்டியிலிருந்தும் படைத்தோம், உங்களுக்கு விளங்குவதற்காகவே (இதனை விளக்குகின்றோம்) மேலும் நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம்வரை கருவறையில் தங்கச்செய்கிறோம் பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகறோம், பிறகு உங்களை வாலிபத்தை அடையச்செய்கிறோம், அன்றியும் உங்களில் (இளம் வயதிலேயே) மரணம் அடைபவர்களும் இருக்கிறார்கள். (பெரியவராக வளர்ந்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றும் அறியாதவர்களைப்போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயதுவரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள், இன்னும் நீங்கள் வரண்ட பூமியை பார்க்கிறீர்கள் அதன்மீது நாம் நீரை பொழியச்செய்வோம் எனில் அது பசுமையாகி அழகான பல்வகை புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது, ( அல்ஹஜ் 22:5)
وَلَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنْشَأْنَاهُ خَلْقًا آَخَرَ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ 23:12-14
நிச்சயமாக நாம் (முதல்) மனிதரை களிமண்ணின் சத்திலிருந்து படைத்தோம் பின்னர் அவனை பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம் பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலைக்கு ஆக்கினோம் பின்னர் அலக்கை தசைப்பிண்டமாக ஆக்கினோம் பின்னர் அந்த தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கிளோம் பின்னர் அவ்வெலும்புகளை மாமிசத்தைக் கொண்டு மூடினோம் பின்னர் அதனை நாம் முற்றிலும் வேறொரு படைப்பாக (மனிதனாக) ஆக்கினோம், (ஆகவே படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியம் உடையவன் படைப்பாளர்களில் மிக அழகானவன், (அல்மூ*மினூன் 23:12-14)
لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَخْلُقُ مَا يَشَاءُ يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُورَ أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا وَيَجْعَلُ مَنْ يَشَاءُ عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ 42:49,50
வானங்கள் மற்றும் பூமி ஆகியவற்றின் ஆட்சிஅதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியதாகும் ஆகவே அவன் தான் நாடியவற்றை படைக்கிறான் தான் நாடியவர்களுக்கு பெண்மக்களை அளிக்கிறான் இன்னும் தான் நாடியவர்களுக்கு ஆண்மக்களை அளிக்கிறான் அல்லது ஆண்மக்களையும் பெண்மக்களையும் சேர்த்து அளிக்கிறான் அன்றியும் தான் நாடியவர்களை மலடாகவும் ஆக்குகிறான், நிச்சயமாக. அவன் மிக்க அறிந்தவன் பேராற்றல் உடையவன், (அஷ்ஷூரா 42: 49,50)
فِي أَيِّ صُورَةٍ مَا شَاءَ رَكَّبَكَ الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ يَا أَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ 82:6-8
மனிதனே. அருட்கொடையாளனும் சங்கைமிக்கவனுமான உனது இறைவனுக்கு மாறுசெய்யும்படி உன்னை ஏமாற்றியது எது? அவன்தான் உன்னைப் படைத்து ஒழுங்குபடுத்தி செவ்வையாக்கினான் இன்னும் எந்த வடிவத்தில் நாடினானோ அதில் உன்னைப் பொருத்தினான், (ற்ம்வ் அல்இன்*பிதார் 82: 6-8)
هُوَ الَّذِي يُصَوِّرُكُمْ فِي الْأَرْحَامِ كَيْفَ يَشَاءُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ 3:6
அவன் தான் நாடியவாறு கருவறையில் உங்களை உருவாக்குகின்றான் அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை அவன் யாவரையும் மிகைத்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கிறான், ( ஆலஇம்ரான் 3: 6 )
நேர்வழியிலிருந்து விலகிப்போய் விடாமல் இருப்பதற்காக ஒருவர் இந்த உண்மைகளை மனதில் நிறுத்திக் கொள்ளவேண்டும், அல்லாஹ்(சுபு) வழிகேட்டில் சென்றுவிடாமல் நம்மை பாதுகாப்பானாக!
அல்லாஹ்(சுபு) இந்த பிரபஞ்சம் முழுவதிலும் ஞானத்தை விதைத்திருக்கிறான் மேலும் மனிதன் அறியாதவற்றை யெல்லாம் அவனுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறான் அல்லாஹ்(சுபு) மனிதனுக்கு அறிவாற்றலையும் சிந்தனைத்திறனையும் அருட்கொடையாக வழங்கியிருக்கிறான் மேலும் அல்லாஹ்(சுபு) மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அவன்மீது ஆழமான நம்பிக்கை கொள்வதற்காக அவன்(சுபு) புலனுணர்வு மூலம் விளங்கிக்கொள்ளும் ஆற்றலை அளித்திருக்கின்றான், நிராகரிப்பவர்கள் இந்த உலகத்தில் இழிவையும் மறுமைநாளில் கடுந்தண்டனையையும் அடைந்து கொள்வார்களாக!இந்த பிரபஞ்சத்தை படைத்து பரிபாளித்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்(சுபு) வுக்கே எல்லா புகழும் உரித்தாகுக என்பதுதான் நமது இறுதி துஆவாகும்!

Friday, September 4, 2009

அதிகரிக்கும் பள்ளிவாசல்களும் அழிக்கப் படும் ஒற்றுமையும்.

அதிகரிக்கும் பள்ளிவாசல்களும் அழிக்கப் படும் ஒற்றுமையும்.

அதிகரிக்கும் பள்ளிவாசல்களும்
அழிந்து போகும் ஒற்றுமையும்!
அரபு பணம் இலங்கையில் வந்து குவிந்துக் கொண்டிருக்கிறது. பாதை நெடுகிலும் பள்ளிவாசல்கள் நாளுக்கு நாள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. விரல் ஆட்ட ஒரு பள்ளிவாசல், விரல் நீட்ட ஒரு பள்ளிவாசல், அது அவர்களின் பள்ளிவாசல், இது இவர்களின் பள்ளிவாசல் முஸ்லிம் சமூகம் முரண்பட்டு , பிரச்சினைப் பட்டு, பிரிந்து கிடக்கிறது.
பாவம் பாமர மக்கள் ! இந்த றியால், தீனார் தஃவா காரர்களின் பின்னணி புரியாமல் நடு வீதியில் தட்டுத் தடுமாறி திணறி நின்றுக்கொண்டிருக்கின்றார்கள்.
ஒற்றுமையை உரத்துப் பேசி பேசி ஒருவரின் உதிரத்தை மற்றவர் உறிஞ்சி உறிஞ்சி குடித்துக் கொண்டிருக்கிறார்கள். வஹாபிஸம் என்ற சஊதி, குவைத் மன்னராட்சியை மறைமுகமாய் பாதுகாக்கின்ற சித்தாந்தம் பொது ம்ககளை மட்டுமல்ல அவர்களிடம் பணம் வாங்கும் கூலிப்பட்டாளத்தைக் கூட குறி வைத்து பிரித்துத் தான் வைத்திருக்கிறது.
இலங்கையைப் பொறுத்தவரை தஃவா களத்தில் இருக்கும் தப்லீக் இயக்கத்தை தவிர ஏனைய அத்தனை இயக்கங்களும் இந்த வஹ்ஹாபி பணத்தில் வாழ்ந்துக் கொண்டிருப்பவையே.
தப்லீக் இயக்கம் தனது தஃவா இயக்க செயற்பாட்டில் பாரிய மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்து பொதுவாக நிலவி வருகிறது. ஆனால் தனது சொந்த பணத்தில் தஃவா செய்கின்ற புனிதத் தன்மையை அது என்றும் பேணிப் பாதுகாத்து வ்ந்திருக்கிறது. அது காசு வழங்குபவனுக்கு கைக்கூலியாய் வேலைசெய்ய வேண்டும் என்ற கட்டாயத்திற்கு உட்படாத ஒரு அமைப்பு.
வஹ்ஹாபி பணத்தில் போஷிக்கப்படும் அத்தனை இயக்கங்களும் நாளுக்கு நாள் முரண்பாட்டை தமக்கிடையே வளர்த்து முரண்பட்டு பிரிந்து செல்வதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
வஹ்ஹாபிப் பணம் வருவதால் இங்கு இஸ்லாம் வளர வில்லை.
வன்முறை வளர்ந்திருக்கிறது. ஒற்றுமை குறைந்திருக்கிறது.
இவையெல்லாம் உருவானது தனக்கென தனித்தனி பள்ளிவாசல் உருவாவதன் பின்னால் தான் என்ற உண்மையை நாம் பலாத்கதரமாகவே மறந்தும் இரு்க்கிறோம். தனித்தனி பள்ளிவாசலின் உருவாக்கம் ஒற்றுமையை தவிடுபொடியாக்கி இருக்கிறது.
ஒற்றுமையை சீர்குலைக்கும் தனித் தனி பள்ளிவாசல் கலாசாரத்தை இஸ்லாம் அங்கீகரிக்கின்றதா?
குறைஷிக் காபிர்களால் றசூலுல்லாஹ்விற்கு கஃபாவில் வணங்க தடை வந்த போது மக்காவில் வாழத் தடை வந்த போது நபி (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள்?
தனது கொள்கையை மாற்றிக்கொண்டு, கஃபாவை அபூஜஹ்லுக்கும், அபூலஹபுக்கும் கொடுத்துவிட்டு மதீனாவில் கஃபாவைப்போல் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டிக்கொண்டு மறைந்து வாழ்ந்திருக்கலாமே? அப்படி வாழ்ந்திருந்தால் மக்கா வெற்றி என்று ஒன்று வரலாற்றுக்கு வந்திருக்குமா?
றஸுலுல்லாஹ்வின் தஃவா இஸ்லாத்தின் கொடியின் கீழ், ஒரே தலைமைத்துவத்தின் அனைவரையும் ஒன்று திரட்டுவதாகவே இருந்தது. அனைத்து கோத்திரங்களையும், குழுக்களைகயும் , கொள்கைகளையும் ஓரணியில் திரட்டி பிரிவினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.
பிரிவினையையும் பிரச்சினைகளையும் இல்லாதொழிக்கும் மத்திய நிலையங்களாக மஸஜித்கள் செயலாற்றின.
இன்று நிலைமை தலைகீழாக மாறியிருக்கிது. பிரிவினைக்காகவே பள்ளிவாசல்கள் உருவாகின்றன. உருவாக்கப்படுகின்றன.
“அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாக பற்றிப்பிடியுங்கள். பிரிந்து விடாதீர்கள்” என்று அல்குர்ஆன் அறைகூவல் விடுகிகிறது. அல்லாஹ்வின் இல்லங்களாலேயே நாங்கள் பிளவு பட்டு நிற்கின்றோம். ஒற்றுமையாய் வாழுங்கள் என்ற அல்லாஹ்வின் அறைகூவலையே நாம் அலட்சியப்படுத்தியிருக்கிறோம்.
பிரிவினைக்காகவே உருவாகின்ற இந்த பள்ளிவாசல்களின் பின்னணி என்னவாக இருக்கும் என இதுவரை யாரும் சிந்திக்காமலேயே இருந்து வருகிறோம்.
தஃவா என்ற போர்வையில் நற்செயல்கள் என்ற போலி முலாம் பூசி வந்து சேர்கின்ற இந்த அரபு பணத்தின் பின்னணி என்ன? என்பதை யாரும் சிந்திக்காமல் விட்டதன் விளைவை இலங்கை முஸ்லிம் சமூகம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
தனத நாட்டில் இஸ்லாத்தைப் பாதுகாக்க முடியாத அரபிகள்,
தனது நாட்டில் மனித நேயத்தைப் பாதுகாக்காத அரபிகள்
எப்படி மற்றைய நாடுகளில் இஸ்லாத்தைப் பாதுகாக்க முடியும்?
இந்த அரபு நாடுகளில் மஸ்ஜித்கள் ஏராளம் இருக்கின்றன. ஆனால் அவர்களிடம் இஸ்லாம் இருக்கின்றதா? அந்த நாட்டுக்கு பயணம் செய்யும் மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இஸ்லாத்தின் மீது ஆர்வம் வரும் அளவிற்கு அவர்களின் வாழ்க்கை இருக்கிறதா? இல்லவே இல்லை.
இஸ்லாத்தின் தாயக பூமியை, அரபு பூமியை, மனித நேயத்தாலும், நீதியாலும், நேர்மையாலும் நிரப்பி அல்லாஹ்வின் தீனை பாதுகாக்க முடியாத இவர்களின் பணத்தால் இலங்கையில் இஸ்லாத்தை வளர்க்க முயல்வது மடமையிலும் மடமையன்றோ.
முஸ்லிம்களையே முட்டி மோத வைப்பதால் இஸ்லாம் எப்படி வளரும்? மாற்று மதத்தவருக்கு இஸ்லாத்தின் மீது அச்சம் அல்லவா ஏற்படும்?ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை உருவாக்கி அமெரிக்காவும் சஊதியும் அதைத்தானே சாதித்தன?
அரபுகள் மடையர்களாக இருக்கலாம், அரபுகளிடமிருந்து பணம் பெறுகின்ற
இஸ்லாமிய இயக்க யாசகர்களும் மடையர்களாக மட்டுமல்ல இஸ்லாத்தின் அடிப்படைக்கே மாறு செய்பவர்களாகவே இருக்கின்றார்கள்.
காரணம், இந்த இயக்கங்கள் அரபு அமெரிக்க செயற்திட்டத்தை தஃவாவின் போர்வையில் மனமுரண்டாக நிறைவேற்றியும் வருகின்றார்கள்.
மற்றும்-
அரபுகள் இஸ்லாத்தின் மீது பற்று வைத்துள்ளதாய் தோற்றப்பாட்டை உருவாக்கும்,
பள்ளிவாசல்கள் கட்டுதல்,
உழ்ஹய்யா கொடுத்தல்,
கிணறு வெட்டுதல்
போன்ற குறுகிய வேலைத்திட்டத்தை தஃவா என்ற அடைமொழிக்குள் சிக்கவைத்து பிரசாரம் செய்யும் அரபுகளின் இந்த செயற்பாட்டுக்கு பின்னணியில் ஓர் அரசியல் மறைந்து இருக்கிறது.
அது அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலுக்குள் சிறைபட்டு நிற்கும் சஊதி மன்னராட்சியை பாதுகாக்கும் மகத்தான பணியை செய்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவிற்கு இஸ்லாத்தை உலகிலிருந்து ஒழிக்க வேண்டுமாக இருந்தால் அரபுகளின் மன்னராட்சியை அது பாதுகாத்தே ஆக வேண்டும்.
அரபுகளின் மன்னராட்சி உலகில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால், இஸ்லாத்தின் ஏக போக உரிமை அரபுகளிடம் இருக்கவேண்டும். அப்போது தான் இஸ்லாம் என்ற போர்வையில் தனக்கு தேவையானவற்றை கூட்டியு்ம், தனக்குதேவையில்லாதவற்றை குறைத்தும், மறைத்தும் கூற முடியும்.
அரபுகளின் நிதி பலத்தில் இஸ்லாமிய தஃவாவை சிறைப்பிடித்து வைப்பதன் மூலம்...
0 அமெரிக்காவினதும், சஊதியினதும் நன்மைக்காக
உலகளாவிய ரீதியில் எழும் இஸ்லாமிய அரசியல் எழுச்சியை அடக்கமுடியும்.
0 முஸ்லிம்களின் சிந்தனையை அடிப்படை பிரச்சினைகளிலிருந்து வேறு பக்கம் திசை திருப்பி சில்லரை பிரச்சினைகளில் சிக்க வைக்கமுடியும்.
0 அரபுகளின் அரசியலுக்கேற்ப இஸ்லாத்தை கூட்டியும், குறைத்தும் வடிவமைக்க முடியும்.
இன்று, மத்திய கிழக்கில் தனது ஆதிபத்தியத்தை உறுதிப்படுத்தி, அரபு மண்ணின் எண்ணெய் வளங்களை சூறையாடிக்கொண்டிருக்கும், முஸ்லிம் நாடுகளுக்குள் அத்துமீறி புகுந்து அநியாயம் புரிந்துக்கொண்டிருக்கும் ஏகாதிபத்திய வாதிகளின் அட்டகாங்களை தஃவாவின் போர்வையில் மூடி மறைப்பதற்கு இந்த அரபு பணத்தைப் பெறும் இஸ்லாமிய இயக்கங்கள் நன்றாகவே பயன்படுத்தப் படுகின்றன.
அரபுகளை திருப்தி படுத்தும் இவர்களது தஃவா, பணத்தை மையப்படுத்தி சுழன்று, வியாபார மயப்படுத்தப்பட்ட ஜாஹிலிய்ய சிந்தனையை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. உயிரோட்டமான இஸ்லாத்தின் கட்டளைகளை பணத்திற்கு தாரை வார்த்து அநியாயங்களையும், அக்கிரமங்களையும் அடக்கி வாசிக்கும் அளவிற்கு காசின் கைதிகளாக இவர்கள் மாற்றப்பட்டிருக்கின்றார்கள்.
கடைசியாக உங்கள் சிந்தனைக்காக சில வார்த்தைகளை தர முடியும்

ஈராக்கில் புகுந்து பத்து லட்சம் முஸ்லிம்களை கொல்வதற்கு தனது நாட்டில் அமெரிக்கா கொலைகாரர்களுக்கு தளம் அமைத்துக்கொடுத்து, அமெரிக்கா யுத்த விமானங்களுக்கு இலவசமாக எண்ணெய் வழங்கிய சஊதி அரேபியா
ஆப்கானிஸ்தானை அழிக்க அமெரிக்காவுக்கு துணைபோன சஊதி அரேபியா
பலஸ்தீன் முஸ்லிம்களைக் கொன்று குவி்த்து, முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸை கபளீகரம் செய்த இஸ்ரேலின் தந்தையான, நண்பனான அமெரிக்காவை மிக மிக நேசிக்கும் சஊதி அரேபியா
இஸ்லாத்தை மறந்து புனித மண்ணில் ஆடம்பர மௌட்டீக மன்னர் ஆட்சி நடாத்தும் சஊதி அரேபியா
இஸ்லாத்தை வளர்க்க உதவி புரியுமா? அதன் பணத்தால் இஸ்லாம் வளருமா? அப்படி வளரும் இஸ்லாத்தை அதன் நேச நாடுகளான அமெரிக்காவும், இஸ்ரேலும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா? அங்கீகரிக்குமா?
ஆயிரம் கேள்விகளை இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம்...
ஏகத்துவ பிரசாரம் என்ற போர்வையில் எமக்கு சஊதி ஏற்றுமதி செய்திருப்பது முரண்பாடுகளை, மோதல்களை, சண்டைகளை, சச்சரவுகளை....
தமக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கு தனது எதிரியின் சதியை சரியாக புரிந்துக்கொள்ள அவகாசம் கிடைப்பதில்லை.
அதுதான் சஊதிக்கும் அமெரிக்காவிற்கும் தேவை!
இதனால் ஏற்படும்
இழப்பு...
இஸ்லாத்திற்கும்
முஸ்லிம் உம்மத்திற்கும்,
இலாபம்..
அரபு மன்னர்களுக்கும்
அவர்களின் யெஹுதி நஸாரா தோழர்களுக்கும்..

Tuesday, September 1, 2009

ஸீறாவை கற்பதன் அவசியம்

ஸீறாவை கற்பதன் அவசியம்முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு பன்முகங்களைக் கொண்ட ஒரு மாணிக்க கல்லுக்கு ஒப்பானதாகும். ஆதனை எக்கோணத்திலிருந்து நோக்கினாலும் அது ஒளிவிட்டுப் பிரகாசிப்பதைக் காணலாம்.நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சரிதையைப் படிக்கும் ஒருவர் மனித வாழ்வின் எல்லாத்துறைகளையும் தழுவிய வொன்றாக அவர்களின் வாழ்வு அமைந்திருப்பதைக் காண்பார். இந்த வகையிலேயே கடந்த பல நூற்றாண்டு காலமாக பல நூறு ஆய்வாளர்கள் நபியவர்களின் பன்முக ஆளுமையை பல் வேறு கோணங்களில் அணுகி ஆராய்ந்துள்ளதைப் பார்க்கின்றோம்.நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு தனக்கே உரிய பல தனிப் பெரும் சிறப்புப் பண்புகளைக் கொண்டிருக்கின்றது.1. அது ஒரு திறந்த புத்தகமாக விளங்குகின்றது. நபிகளாரின் பெற்றோர்களான அப்துல்லாஹ், ஆமினா தம்பதிகளின் திருமணம் முதல் நபியவர்களின் பிறப்பு, குழந்தைப் பருவம், இளமைக் காலம் உட்பட மேற் கொண்ட பயணங்கள் வரை அனைத்தம் மிகவும் துள்ளியமாக, ஆதாரபூர்வமாக பதியப்பட்டுள்ளன. இதனால் தான் சூரிய ஒளியில் பிறந்து வாழ்ந்த ஒரு வரலாற்றுப் புருஷர் என நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஒரு மேற்குலக வரலாற்றாசிரியர் வர்ணிக்கின்றார்.நபியவர்களின் உணவு, உடை, நடை, பாவனை அனைத்தும் மிக நுனுக்கமாக அவதானிக்கப்பட்டு வரலாற்றேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.2. உலகிற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்களின் வரலாறுகளில் இன்று வரை அழியாமலும் திரிக்கப்படாமலும் இடைச் செருகல்களில் சிக்காமலும் நம்பகமாகக் கிடைக்கின்ற ஒரு வரலாறு என்ற வகையிலும் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு சிறப்பிடம் பெறுகின்றது.3. நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சரிதை இறைத்தூதைப் பெற்ற ஒரு மனிதனின் வரலாறாகவே எமக்குக் கிடைக்கின்றது. அவர்களை ஒரு தெய்வமாகவோ, தெய்வீகப் பிறவியாகவோ சித்தரிக்கும் முயற்சி அங்கே மேற்கொள்ளப்படவில்லை. அவர்கள் ஒரு மனிதனாகப் பிறந்து ஒரு முன்மாதிரியான மனிதனாக வாழ்ந்துக் காட்டினார்கள். இதனால் தான் அன்னாரின் வாழ்வு அவர்களைப் பின்பற்றியவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.அவர்கள் ஒரு தெயிவீகப் பிறவியாக அறிமுகப்படுத்தப்பட்டிருப்பின் அவர்களை முழுமையாகப் பின்பற்றுவது சாத்தியமானதாக இருந்திருக்காது. இதனாலேயே அல்லாஹ்; நபியாகிய தான் ஒரு மனிதனே என்பதைப் பிரகடனம் செய்யுமாறு அவர்களை வேண்டியுள்ளான்.''(நபியே!), சொல்லுங்கள்: நிச்சயமாகவே நான் உங்களைப் போன்ற மனிதனே. எனக்கு வஹி அறிவிக்கப்படுகின்றது.'' (18:110)ஒரு மனிதன் என்ற காரணத்தினால் நபியவர்களின் வாழ்வில் எல்லா மனிதர்களுக்கும் முழுமையான முன்மாதிரி இருப்பதையும் அல்-குர்ஆன் தெளிவாகக் குறிப்பிடுகின்றது:''அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூர்பவராக இருப்பவர்களுக்கு அல்லாஹ்வின் தூதரில் நிச்சயமாக உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கின்றது'' (33:21)4. முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு மனிதவாழ்வின் எல்லாத் துறைகளையும் தழுவிய ஒருவரின் வாழ்வு என்ற வகையில் அதில் அனைத்து தரப்பினருக்கும் தேவையான வழிகாட்டல்களும் முன்மாதிரிகளும் உண்டு. ஓர் இளைஞன், கொள்கைவாதி, வழிகாட்டி, சீர்திருத்தவாதி, நாட்டின் தலைவர், கணவன், தந்தை, நண்பன் முதலான எந்நிலையில் இருப்பவருக்கும் நபியவர்களின் வாழ்விலிருந்து வழிகாட்டலைப் பெற்றுக் கொள்ளலாம்.5. நபிகளாரின் சரிதை அவர்களின் நுபுவ்வத்திற்கு தெளிவான சான்றாதாரமாகவும் விளங்குகின்றது. ஸீராவைப் படிக்கும் ஒருவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைத்தூதராகவே இருத்தல் வேண்டும் என்பதற்கான ஆதாரங்களைக் கண்டு கொள்வார்.இவ்வாறு பல தனித்துவமான சிறப்புக் கூறுகளைக் கொண்ட நபியவர்களின் ஸீராவை நாம் கற்பது எம்மீது கடமையாகும்

ஒற்றுமை காலத்தின் தேவை, சன்மார்க்கக் கடமை

''முஷ்ரிகீன்களில் நீங்களும் ஆகிவிடாதீர்கள். அவர்கள் தங்கள் மார்கத்தில் பிரிவினையை உண்டு பண்ணி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனர்.(அவர்கள்) ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ளதை வைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.'' (ஸுரா : அர்ரூம் :32)''எவர்கள் தங்கள் மார்க்கத்தை (தம் இஷ்டப்படி) பிரித்து (அவர்களும்) பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் உமக்கு எத்தகைய சம்பந்தமும் இல்லை.'' (அல் அன்ஆம் :159)ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நீங்கள் ஒருவரையொருவர் வெறுத்துக் கொள்ளாதீர்கள்; பொறாமை கொள்ளாதீர்கள்;;(பகைத்துக்கொண்டு) புறம் காட்டிச் செல்லாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களாகிய நீங்கள் சகோதரர்களாக விளங்குங்கள். மேலும் ஒரு முஸ்லிம் தனது சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் பகைத்துக்கொண்டிருத்தல் கூடாது.' (புகாரி,முஸ்லிம்)இன்றைய உலகம் பூகோள ரீதியில் இஸ்லாத்தினதும், முஸ்லிம் சமூகத்தினதும் எழுச்சியை, மறுமலர்ச்சியைக் கண்டுகொண்டிருக்கிறது. எவராலும் மறுக்கமுடியாத அளவுக்கு இவ்வெழுச்சி படியாத பாமரர், படித்த வாலிபர் உட்பட ஆண், பெண் எல்லோரையும் தழுவிய உலகின் சந்து பொந்துகளிலெல்லாம் வியாபித்து நிற்கும் ஒன்று என்ற வகையில் மிகவும் பலமிக்கதாக விளங்குகின்து.இந்த உலகலாவிய இஸ்லாமிய எழுச்சியானது முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் இலங்கை போன்ற நாடுகளிலும் கூட அதன் தாக்கத்தை ஏற்படுத்துத்தியுள்ளது.ஆயினும் இவ்வெழுச்சிக்கு பல தடைகள் உருவாகியுள்ளமை கவலைக்குறியதாகும். அவை இவ்வெழுச்சியின் விளைவுகளைத் தாமதப்படுத்தியும், இல்லாமல் செய்தும் வருகின்றன. அத்தiகைய தடைகளுள், குறிப்பிட்ட சிலரது அவசரப்போக்கு, நிதானமற்ற அணுகுமுறைகள், தீவிரப்போக்கு ஆகியன குறிப்பிடத்தக்கவை.1. தீவிரமும் நிதானமின்மையும்இங்கு நாம் 'தீவிரம்;' என்ற சொல்லை இஸ்லாத்தின் எதிரிகள் குறிக்கும் 'தீவிரவாதம்' என்ற கருத்தில் பயன்படுத்தவில்லை. அவர்களோ தூயமுஸ்லிம்கள் அனைவரையும் மதத்தீவிரவாதிகள், அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் போன்ற பெயர்களில் சுட்டுகின்றனர். ஆயினும் இஸ்லாத்தின் பெயரால் சிலர் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகள் எதிரிகளின் இத்தகைய குற்றச்சாட்டுக்களை உண்மைப்படுத்துவது போல அமைவதுதான்; வேதனைக்குரியதாகும். இத்தகையவர்களின் நிதானமற்ற போக்கு இஸ்லாமிய எழுச்சியையும் அதனடியாக எழுந்துள்ள இஸ்லாமிய மறுமலர்ச்சியையும் பெரிதும் பாதித்து வருகின்றது. எனவே இத்தகையவர்கள் நிதானத்தைக் கைக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். 'அவசரப்படுதல் ஷைத்தானிலிருந்தும் உள்ளது. நிதானமும் அமைதியும் அல்லாஹ்விடமிருந்தும் உள்ளது.' என்ற நபிமொழி எமது கவனத்திற் கொள்ளத்தக்கதாகும். (திர்மிதி)'ஷிர்க்' போன்ற பெரும் பாவங்களை எதிர்ப்பதிலும், ஒழிக்க முற்படுவதிலும் கூட நிதானம் கடைபிடிக்கப்படல் வேண்டும்; நன்மையான விடயங்களை செய்வதில் கூட அளவு கடந்த அவசரமும், நிதானமிழந்த போக்கும் வரவேற்கத்தக்கதல்ல. பதறிய காரியம் சிதறும் என்பார்கள். பொறுத்தவன் புவி ஆள்வான்;. பொறுமை இழந்தவன் காடேருவான் என்பது முதுமொழி. இன்று உலக மட்டத்திலும் சரி எமது நாட்டு மட்டத்திலும் சரி எமது அவசரத்தின் காரணமாகவும், நிதானமிழந்த போக்குகளின் காரணமாகவும் நாம் பல கஷ்டங்களை அனுபவித்தும், நஷ்டங்களை அடைந்தும் வருகின்றோம். சமூக மாற்றம் என்பது ஓரிரவில், ஒருபகலில் ஏற்படக்கூடியதல்ல என்பதை நாம் உணர வேண்டும். அது படிப்படியாக, கட்டம் கட்டமாக ஏற்படக் கூடியதாகும். அத்தகைய மாற்றம்தான் ஆரோக்கியமானதும் நிலைக்கக் கூடியதுமாகும். அவசரத்தில் தோன்றுகின்ற செயற்கையான மாற்றங்கள் போலியானவை. நிலைக்காதவை.எமது முயற்சிகளுக்குரிய விளைவுகளை நாம் கண்டேயாக வேண்டும் என்று சிந்திப்பதும் அதற்காக எத்தகைய வழிமுறைகளையும் கையாள முயற்சிப்பதும் இஸ்லாமிய அணுகுமுறைகளல்ல. முயற்சிப்பதே எமது கடமை; விளைவுகள் அல்லாஹ்வின் கரங்களில். நாம் எமது முயற்சிகள் பற்றி விசாரிக்கப்படுவோமேயன்றி விளைவுகள் பற்றி கேட்கப்படமாட்டோம். மேலும் எமது இலக்குகள் புனிதமானவையாக இருப்பது போலவே அவற்றை அடைவதற்கான வழிமுறைகளும் புனிதமானவையாக அமைதல் வேண்டும் என்ற இஸ்லாமிய சட்டவிதியை நாம் மறந்துவிடக்கூடாது.2. வேற்றுமைகளும் முரண்பாடுகளும்இன்றைய இஸ்லாமிய எழுச்சிக்கு உருவாகியுள்ள மற்றுமொரு பெருந்தடை எம்மத்தியில் தோன்றியுள்ள வேற்றுமைகளும் முரண்பாடுகளுமாகும். அசத்தியக் கொள்கைகளைக் கொண்டவர்கள் கூட தம்மத்தியிலுள்ள வேற்றுமைகளை மறந்து ஒற்றுமை காண முயற்சிக்கின்ற காலமிது. தம்மத்தியில் பயங்கர முரண்பாடுகளைக் கொண்ட பல சக்திகளும் இன்று இஸ்லாம் என்ற பொது எதிரியைச் சந்திப்பதற்காக உடன்பட்டுச் செயற்படுவதைக் காண முடிகின்றது. இந்நிலையில் முஸ்லிம்களாகிய நாம் ஒற்றுமையில் வேற்றுமையைத் தேடுபவர்களாக இருக்கின்றமை எவ்வளவு துரதிஷ்டமானது.!இன்று நாம் எல்லா வளங்களையும், பலங்களையும் நிறைவாகப் பெற்றிருந்தும் எமது விவகாரங்களில் அடுத்தவர் தலையிடும் அளவுக்கும் தீர்மானங்கள் எடுக்கும் அளவுக்கும் உலக அரங்கில் பலயீனர்களாக மாறியுள்ளமைக்கு பிரதானமான காரணம் எமது ஐக்கியமின்மையாகும். அல்-குர்ஆன் இந்நிலைமையைப் பின்வருமாறு விளக்குகின்றது:''நீங்கள் உங்களுக்குள் சர்ச்சைப்பட்டுக் கொள்ளாதீர்கள்; அவ்வாறாயின் நீங்கள் தைரியத்தை இழந்து உங்கள் வலிமை குன்றிவிடும்'' (அன்பால்: 46)நாம் எமது முரண்பாடுகளைக் கண்டு கொள்வது போல எம் மத்தியிலுள்ள உடன்பாடுகளைக் கண்டுகொள்வததில்லை. அவற்றை நாம் காண்பதை ஷைத்தான் விரும்புகின்றானில்லை. எம் மத்தியில் பகைமையும,; குரோதமும் நிலைக்க வேண்டுமென்பதுதானே அவனது விருப்பம்.நாம் முரண்படுகின்ற விடயங்கள் ஐந்து என்றால் உடன்படுகின்ற அம்சங்கள் ஐம்பது இருக்கின்றன. இவ்வுண்மையை எம்மால் புரிந்து கொள்ள முடியுமென்றிருந்தால் எமது சமூக, சன்மாரக்க நிலைகள் எவ்வளவு ஆரோக்கியமடையும்.! அர்க்கானுல் ஈமான் எனும் ஈமானின் அடிப்படைகளிலும், அர்க்கானுல் இஸ்லாம் எனும் இஸ்லாமியக் கடமைகளிலும் எம்மத்தியில் பலத்த கருத்து வேறுபாடுகள் இல்லை என்றே கூற வேண்டும். சன்மார்க்கத்தின் உஸுல் (அடிப்படைகள்) கவாயித் (விதிகள்) புரூழ்கள் (கடமைகள்) கபாயிர் (பெரும் பாவங்கள்) முதலானவற்றிலும் எம்மத்தியில் அபிப்பிராயபேதங்கள் குறைவு எனலாம். கருத்து வேறுபாடு நிலவுவதெல்லாம் புரூஃ (கிளை அம்சங்கள்), நாவாபில் (ஸுன்னத்துக்கள்), ஸகாயிர் (சிறுபாவங்கள்) போன்ற ஒப்பீட்டு ரீதியில் முக்கியத்துவம் குறைந்த விடயங்களிலாகும். 'காயாத்' எனும் இலக்குகளைப் பொறுத்தவரையில் எம்மத்தியில் முரண்பாடுகள் குறைவு. அவற்றை அடைவதற்கான 'வஸாயில்' எனும் வழிமுறைகளிலும், அணுகுமுறைகளிலும்தான் சில உடன்பாடற்ற நிலைகள் காணப்படுகின்றன. இத்தகைய விடயங்களில் முரண்பட்ட நிலைப்பாடுகளை எடுப்பதில் தவறில்லை. ஒவ்வொருவரும் தத்தமது நிலைப்பாடுகளுக்கு உரிய சன்மார்க்க ஆதாரங்களை கொண்டிருக்கும் வரை எத்தகைய ஆட்சேபனையும் தெரிவிப்பதற்கில்லை. ஆனால் இவ்விடயங்களில் ஏற்படும் 'கிலாபுகள்' (வேறுபாடுகள்) எம்மத்தியில் 'ஷிகாக்கை' (பிளவுகளை) தோற்றுவிக்கலாகாது. கருத்து முரண்பாடுகளின் போது எமது முனனோர்கள் கைக்கொண்ட ஒழுங்குகளை கடைபிடிக்கப்படாமையினாலேயே இத்தகைய விளைவுகள் ஏற்படுகின்றன. ஒரு விடயத்தில் நான் ஒரு கருத்தை கொண்டிருக்கலாம், மற்றொருவர் அதில் என்னோடு முரண்படுகின்ற போது அவர் முஃமினாக இருக்கும் வரை அவருடன் மிகவும் பண்பாடாக நடந்து கொள்ள வேண்டும் என்பது மார்க்கக்கடமையாகும்.'இது விடயத்தில் எனது கருத்து சரியானது. அது பிழையாக இருக்கவும் இடமுண்டு. இது விடயத்தில் அடுத்தவரின் கருத்து பிழையானது. அது சரியாக இருக்கவும் இடமுண்டு.' இக் கூற்று எமது முன்னோர்கள் கருத்து வேறுபாடுகளின் போது கைக்கொண்ட 'ஆதாபுகளுக்கு' ஒரு சிறந்த உதாரணமாகும்.காபிரகளுடன் கூட ஆதாரங்களை முன்வைத்து அழகாகவும், பண்பாடாகவும் விவாதிக்குமாறு அல்-குர்ஆன் பணிக்கின்றது.'மேலும் அவர்களுடன் சிறந்த (பண்பாடன) முறையில் விவாதிப்பீராக.' (16:125) ஆனால் நாமோ நமது சகோதர முஸ்லிம்களுடன் முரண்படுகின்ற போதெல்லாம் காரசாரமான வாதப்பிரதிவாதங்களிலும் தர்க்க குதர்க்கங்களிலும் ஈடுபடுகின்றோம். ஈமானிய உறவை மறந்து சொல்லம்புகளால் தாக்குகின்றோம். சொல்லால் மட்டுமன்றி கையால், கல்லால் அடிக்கவும் நாம் தயங்குவதில்லை. சில போது எமது நிலைப்பாடுகளை நியாயப்படுத்துவதற்காக அடுத்த சகோதரர்கள் மீது பழி சுமத்துவதற்கும், அபாண்டங்களைக் கூறுவதற்கும் நாம் துணிந்து விடுவதுண்டு. மொத்தத்தில் மார்க்கத்தின் பெயரிலேயே அது கூறும் சகோதரத்துவம், அன்பு, ஒத்துழைப்பு, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு முதலான பண்புகளுக்கு நாம் சாவு மணி அடிக்கின்றோம். முஃமின்கள் தம்மத்தியில் அன்புடனும் ஆதரவுடனும் இருப்பார்கள். நளினமாகவும் நயமாகவும் நடந்து கொள்வார்கள் என்றெல்லாம் குறிப்பிடும் அல்குர்ஆனின் போதனைகளை காற்றில் பறக்க விடுபவர்களாக நாம் இருக்கின்றோம்.3. குறைந்த சன்மார்க்க அறிவுஉண்மையில் எமது நாட்டைப் பொறுத்தவரையில் எம்மத்தியில்லுள்ள பிரிவுகளும் பிரிவினைகளும் பெரும்பாலும் எமது சன்மார்க்க அறிவிலுள்ள குறைபாட்டினால் உருவானவையாகும். இவ்வாறு சன்மார்க்க அறிவிலுள்ள கோளாரின் காரணமாகவே ஒவ்வொரு குழுவினரும் தாம் மாத்திரமே சரி என்றும் தம்மை மாத்திரம் 'அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆ' அமைப்பாக இனம் காட்டி தம்முடன் சிற்சில விடயங்களில் முரண்படுகின்ற பிற இஸ்லாமியச் சகோதரர்களை அதற்;கு அப்பால் இருப்பவர்களாக பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். மேலும், இலங்கை முஸ்லிம் சமூகத்தில் தஃவாக்களத்தில் - அறிவும் அறிவும் மோதுவதாக தெரியவில்லை; அறிவும் அறியாமையும் முட்டிக்கொள்வதையும் காண்பது அரிது. அறியாமையும் அறியாமையுமே முட்டி மோதி சமூகத்தில் புரளிகளை கிளப்புவதைப் பார்க்க முடிகின்றது. மேலும் குறுகிய இயக்க வாதங்கள், தனிமனித பலவீனங்கள், தப்பபிப்பிராயங்கள் முதலானவையும் சமூகத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைத்து வருகின்றன.4. உலமாக்களின் கடமைஇவ்வாரோக்கியமற்ற நிலை மிக அவசரமாக மாற்றப்படல் வேண்டும். இல்லாத போது இன்று நாம் காணும் இஸ்லாமிய எழுச்சியின் விளைவுகள் பூச்சியமாகி விடும் பேராபத்து ஏற்படுவதை தவிர்க்க முடியாமல் போய்விடும். இங்கு உலமாக்களின் பணி அவசியமாக வேண்டப்படுகின்றது. குறுகிய இயக்க வாதங்களை மறந்து அவர்கள் சமூகத்தின் ஒற்றுமைக்காக உழகை;கும் மகத்தான பொறுப்பை சுமந்தாக வேண்டும்.இஸ்லாமிய வரலாற்றின் எல்லாக் காலங்களிலும் முஸ்லிம் உம்மத் பலயீனமுற்ற சந்தர்பங்களிலெல்லாம் அதனை பலப்படுத்தி கட்டிக்காத்த பெருமை அவ்வக்கால உலமாக்களையே சாரும். இறையச்சமும், நிறைந்த அறிவும், துணிச்சலுமிக்க ஒரு தலைமைத்துவம் எம் சமூகத்திற்கு இன்று தேவைப்படுகின்றது. இது ஒரு தனிமனித தலைமைத்துவமாகவன்றி ஒரு கூட்டு தலைமைத்துவமாக அமைவதே தற்போதைக்கு சாத்தியமானதாகும். இதற்காக நாம் என்றும் வலியுறுத்துவது போல அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் நிழலின் கீழ் எல்லா உலமாக்களும் தம்மத்தியிலுள்ள சிறுசிறு பேதங்களையும் மறந்து அணிதிரளவேண்டும். உடன்பாடான விடயங்களை கண்டறிந்து அவற்றில் அனைவரும் இணைந்து செயற்படவும், முரண்படும் விடயங்களில் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும் எமது உலமாக்கள் முன்வர வேண்டும். இதுவே இஸ்லாமியப் பண்பும், எமது முன்னோர்களின் முன்மாதிரியுமாகும்.இந்த மாற்றம் மிக விரைவில் ஏற்பட வேண்டும் என்பதே இஸ்லாமிய நலன்விரும்பிகளின் வேணவாவாகும். உலமாக்களே! உங்களை கடமை அழைக்கிறது. கட்டுக்களை அவிழ்த்து (உம்மத்தின் நலன்) கருதி களத்திற்கு வர எல்லாம் வல்ல அல்லாஹ்வை இந்தப் புனிதமான மாதத்தில் பிராத்திப்போமாக.

மானுட வசந்தத்தின் வருகை

மானுட வசந்தத்தின் வருகை

ரபிஉல் அவ்வல் மாதம் மனித இனத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ஏனெனில் மனித சமூகத்தை இருளிலிருந்து ஒளியின் பால், வழிகேட்டிலிருந்து நேர் வழியின் பக்கம் வழி நடாத்த வந்த நபி முஹம்மது (ஸல்) அவர்கள் பிறந்த மாதம் இது.'ரபீஉன்' என்றால் வசந்தம் என்பது பொருள். வசந்த காலம் பூமிக்கு பசுமையையும் அழகையும் வனப்பையும் கொண்டு வருகின்றது. அதுபோல் வசந்தம் எனப் பொருள்படும் 'ரபிஉல் அவ்வலில்' பிறந்த நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மனித சமூகத்திற்கு சுபீட்சத்தையும், வெற்றியையும், மகிழ்ச்சியையும், மன நிறைவையும் கொண்டுவந்தார்கள்.ஆன்மீக, லௌகீகத் துறைகளிலெல்லாம் பயங்கர வரட்சி நிலவுகின்ற ஒரு காலம் இது. மீண்டும் ஒரு வசந்தத்தின் தேவையை- வருகையை இன்றைய பூமி அவசரமாக வேண்டி நிற்கின்றது. நிச்சயமாக அந்த வசந்தத்தை சுமந்துவரும் ஆற்றல் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கே உண்டு. ஆனால் அவர்கள் மீண்டும் வரப்போவதில்லை. மற்றுமொரு நபி வரப்போவதுமில்லை. எனினும் அன்னார் விட்டுச் சென்ற அல் குர்ஆனும் ஸுன்னாவும் பசுமையாக எங்களிடம் இருக்கின்றன. இன்றைய உலகில் வரட்சியைப் போக்கிடும் ஆற்றல் அவற்றுக்கு நிறைவாகவே உண்டு. ஒரு புத்துலகை- புதுப்பொழிவுடன் உருவாக்கும் தகுதியும் உண்டு.ஆனால் குர்ஆனினதும் ஸுன்னாவினதும் மைந்தர்களோ தூங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் சிலபோது விழித்துக் கொண்டாலும் அடிப்படைப் பணியை மறந்துவிட்டு வீண் வாதப் பிரதிவாதங்களிலும் அர்த்தமற்ற தர்க்க குதர்க்கங்களிலும் ஈடுபடுகின்றனர். நபிகளார் பிறந்த இம்மாதத்தில் அன்னார் கொண்டுவந்த தூதுக்கு உயிரூட்டுவதை, அதனை உலகறியச் செய்வதை விட்டுவிட்டு அன்னாரை வைத்து வீண் சர்ச்சைகளைக் கிளப்பி குழப்பம் விளைவிக்கின்றனர்.நபிகளாரின் அந்தஸ்து என்ன, அவர்களைக் கொண்டு வஸீலா தேடலாமா, அவர்கள் பேரில் மௌலூது ஓதலாமா, அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடலாமா என்று வம்புப் பட்டியலை நீட்டிக்கொண்டே செல்லலாம். எத்தனை நூற்றாண்டுகளாக இச்சண்டைகள் முடிவின்றி தீர்வின்றி தொடர்கின்றன!! இதனால் எம் சமூகத்தில் எத்தனை, எத்தனைப் பிரிவுகள், பிளவுகள் உருவாகியுள்ளன. இத்தகைய சர்ச்சைகளால் இஸ்லாம் அடைந்த பயன்தான் என்ன? நபிகளாரின் தூதுத்துவப் பணி கண்ட பிரயோசனம் யாது? இவ்வாறு நாம் சிந்திப்பதில்லை. சிலர் எம்மை சிந்திக்க விடுவதில்லை. ஏனெனில் அவர்கள் அந்தப் பிரச்சினைகளில் வாழ்க்கை நடாத்துபவர்கள், வயிறு வளர்ப்பவர்கள்.இனியும் இந்நிலை தொடர அனுமதிக்கலாகாது. நபிகளாரின் பெயராலேயே, அவர்களும் அவர்களின் வழிவந்த நல்லடியார்களும் கட்டியெழுப்பிய இஸ்லாமிய சமூகத்தைத் தகர்க்கும், துண்டாடும் எந்த நடவடிக்கைக்கும் இடமளிக்கக்கூடாது. சிறுசிறு சன்மார்க்க பிரச்சினைகளையெல்லாம் பூதாகரமான பிரச்சினையாக சித்தரித்து சமூகத்தில் விஷமம் செய்வோர் இனங்காணப்பட்டு ஓரங்கட்டப்படல் வேண்டும்.இயக்கங்கள், ஜமாஅத்கள், தரீக்காக்கள் உட்பட ஏனைய சன்மார்க்க அமைப்புகள் இருந்துவிட்டு போகட்டும். அவற்றின் நன்மைகளை சமூகம் பெறத்தான் வேண்டும். ஆனால் அவற்றின் பெயரால் சண்டை போடுவதற்கும், முட்டி மோதிக் கொள்வதற்கும் இனி முற்றுப்புள்ளி வைக்கப்படல் வேண்டும். இதற்காக இஸ்லாத்தில் பொதுவான அடிப்படைகளை வைத்து முழு சமூகத்தையும் வழிநடாத்தக்கூடிய ஒரு நடுநிலை சக்தி உருவாக வேண்டும், அது ஆரம்பத்தில் உலமாக்கள் மட்டத்திலிருந்து தோன்றுதல் வேண்டும். அப்போதுதான் நபிகளார் காண விரும்பும் இலட்சிய முஸ்லிம் சமூகமாக நாம் மாறமுடியும்

கல்வி, கற்றல், கற்பித்தல் - நபிகளாரின் வழிகாட்டல்கள்

இஸ்லாம் கல்வி, கற்றல், கற்பித்தல் தொடர்பாக விரிவாக பேசுகின்ற மார்க்கமாகும். அல்குர்ஆனை நோக்கும் போது இஸ்லாம் அறிவுக்கு வழங்கியுள்ள முக்கியத்துவத்தை தெளிவாக அறிந்து கொள்ளமுடியும்.அல்குர்ஆனைப் போலவே நபியவர்களின் ஹதீஸ்களிலும் அறிவு பற்றி விரிவாகப் பேசப்பட்டுள்ளதை காணமுடிகிறது.பெரும்பாலான ஹதீஸ் கிரந்தங்களில் கிதாபுல் இல்ம் என்ற பெயரில் அறிவைப் பற்றிப் பேசும் ஹதீஸ்களைக் கொண்ட ஒரு தனியான அத்தியாயத்தைக் காண முடியும். அறிவுடன் தொடர்பான பல ஹதீஸ்கள் வேறு பல அத்தியாயங்களிலும் இடம்பெற்றிருக்கின்றன. உதாரணமாக 'கிதாபுத் திப்பி' (மருத்துவம் பற்றியது) என்ற அத்தியாயத்தைக் குறிப்பிடலாம். நூற்றுக்கணக்கான ஹதீஸ் கிரந்தங்களில் ஒன்றான ஸஹீஹுல் புஹாரியில் மாத்திரம் 'கிதாபுல் இல்ம்' என்ற அத்தியாயத்தில் 102 நபிமொழிகள் காணப்படுகின்றன. இனி, அறிவின் சிறப்பைக் கூறும் சில ஹதீஸ்களை பார்ப்போம்.'ஒருவர் அறிவைத் தேடி ஒரு பாதையில் சென்றால், அல்லாஹ் அதனைக் கொண்டு அவருக்கு சுவனம் செல்லும் ஒரு பாதையை இலகுபடுத்திக் கொடுக்கின்றான்.' (முஸ்லிம்)'நிச்சயமாக அறிவைத் தேடிச் செல்பவனுக்கு, மலக்குகள் அவன் செய்யும் அவ்வேலையில் திருப்தியடைந்து தமது இறக்கைகளை விரிக்கின்றனர். அறிஞனுக்காக, நீரில் உள்ள மீன்கள் உட்பட, வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் பாவ மன்னிப்புக் கோருகின்றன. ஓர் 'ஆபித்' (வணக்கவாளிக்கு) முன்னால், ஓர் அறிஞனின் சிறப்பு, நட்சத்திரங்களுடன் ஒப்பிடும்போது சந்திரனுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும். மேலும், அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகளாவர். நபிமார்கள் தங்க நாணயத்தையோ அல்லது வெள்ளி நாணயத்தையோ வாரிசாக விட்டுச் செல்லவில்லை. அவர்கள் அறிவை மட்டுமே வாரிசாக விட்டுச் சென்றனர். அதனைப் பெற்றுக் கொண்டவர் பெரும் பேற்றைப் பெற்றுக் கொண்டவராவர்.' (அபூதாவுத், அஹ்மத்)அறிவு குறைந்து, உலகில் அறியாமை இருள் சூழும் போது உலக வாழ்வு நிலைப்பதற்கில்லை. இந்நிலை உலகின் அழிவுக்குக் கட்டியம் கூறுவதாக இருக்கும் என்ற கருத்தைத்தரும் பல ஆதாரபூர்வமான ஹதீஸ்களைக் காண முடிகின்றது.'அறிவு உயர்த்தப்படுவதும், அறியாமை நிலை பெறுவதும் யுக முடிவின் அடையாளங்களில் ஒன்றாகும்' என நபியவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி)இதிலிருந்து இந்த உலகம் அறிவிலேயே நிலைத்திருக்கின்றது என்ற உண்மையை விளங்கமுடிகின்றது.கற்பித்தலுக்கான நபிகளாரின் வழிகாட்டல்கள்கல்வி, அதன் முக்கியத்துவம், கோட்பாடு பற்றியெல்லாம் விளக்கியுள்ள நபியவர்கள் கல்விப் போதனையின் போது கவனத்திற் கொள்ள வேண்டிய அம்சங்கள், கற்பித்தலுக்குக் கையாளவேண்டிய முறைகள், உத்திகள் பற்றியும் விளக்கியுள்ளார்கள்.மாணவனுக்கு அன்பு காட்டல்:ஆசிரியர், மாணவர்களை அன்பாகவும் பண்பாகவும் நடாத்த வேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கின்றது. முஸ்லிம் சமுதாயத்தின் முதல் ஆசானாகக் கருதப்படும் நபி (ஸல்) அவர்கள், மக்களை அன்பின் அடிப்படையில் வழி நடாத்துபவர்களாகவே இருந்தார்கள். இவ்வுண்மையை அல்குர்ஆன் எத்துணை அழகாக விளக்குகின்றது என்பதனைக் கீழ்வரும் திருமறை வசனம் உங்களுக்கு உணர்த்துகின்றது.''(விசுவாசிகளே!) உங்களிலிருந்து நிச்சயமாக ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் கஷ்டத்துக்குள்ளாகி விட்டால் (அது) அவருக்கு மிகவும் வருத்தமாகவே இருக்கும்.அன்றி, உங்களை பெரிதும் விரும்புகின்றவராகவும், விசுவாசிகள் மீது மிகவும் அன்பும் கிருபையும் உடையவராகவும் இருக்கின்றார்'' (9:28)தம்மைப் பற்றி வர்ணித்த நபியவர்கள்.....,'உண்மையில் நான் உங்களுக்கு, குழந்தைகளுக்குத் தந்தையைப் போன்று இருக்கின்றேன்' என்றார்கள். (அபூதாவூத், அந்நஸாஈ, இப்னு மாஜா, இப்னு ஹிப்பான்)தந்தைக்கும் பிள்ளைகளுக்குமிடையிலான தொடர்பு அன்பினதும் பாசத்தினதும் அடிப்படையில் அமைந்திருக்கும். அவ்வாறுதான் ஆசிரியனுக்கும் மாணவனுக்குமிடையிலான தொடர்பும் அமைய வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு தந்தை, தனது பிள்ளைகள் மத்தியில் பரஸ்பர பாசத்தை வளர்ப்பது போல ஓர் ஆசிரியர் தனது மாணவர்கள் மத்தியில் பரஸ்பர அன்பை வளர்க்கக் கடமைப்பட்டுள்ளார்.மாணவர்களுக்குப் பாடங்களை இலகுபடுத்தியும், ஆர்வமூட்டும் விதத்திலும் போதிப்பது மாணவர்கள் மீது ஆசிரியர்களது அன்பின் வெளிப்பாடாக அமையும். நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களை ஆசிரியர்களாக, அழைப்பார்களாக. நீதிபதிகளாக அனுப்பிய வேளைகளில் இந்த அம்சத்தையே அவர்களுக்கு நினைவூட்டினார்கள்.'இலகு படுத்துங்கள், கஷ்டப்படுத்தாதீர்கள். ஆசையூட்டுங்கள், வெறுப்படையச் செய்யாதீர்கள்' (புகாரி , முஸ்லிம்)'கல்வியூட்டுங்கள், கடுமையாக நடத்தாதீர்கள், கல்வியூட்டுபவன் கடுமையாக நடப்பவனைவிடச் சிறந்தவன்.' (அல்-பைஹகீ -ஷுஅபுல் ஈமான்)மக்களுக்கு அறிவூட்டும் ஆசானாகத் திகழ்ந்த நபியவர்கள் தம்மிடம் போதனைகளைப் பெற வருவோரை அன்பாகவும் பண்பாகவும் நடத்துபவர்களாக இருந்தார்கள் என்பதனை அல்குர்ஆன் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றது.''நபியே! அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே, நீர் அவர்கள் மீது இரக்கமுள்ளவரானீர். கடுகடுப்பானவராகவும் கடின சித்தமுள்ளவராகவும் நீர் இருந்திருப்பீராயின், உம்மிடமிருந்து அவர்கள் வெருண்டோடியிருப்பார்கள்'' (3:159)ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பது, தடியைப் பயன்படுத்துவது இஸ்லாமிய கல்வி முறையில் வரவேற்கப்படுவதில்லை. ஏனெனில், தடியைப் பாவிப்பது, நாம் இதுவரை விளக்கிய மாணவர்களை அன்புடன் நடாத்தும் பான்மைக்கு முரணானதாகும்.'நபி (ஸல்) அவர்கள் தமது கையினால் எந்தவொரு பெண்ணையோ, பணியாளனையோ அல்லது மிருகத்தையோ அடித்ததில்லை' என அன்னாரின் சேவகனாகவிருந்த அனஸ் (றழி) அவர்கள் கூறுகின்றார்கள். (புகாரி)பிள்ளைகள் பத்து வயதை அடைந்த பின்னரும் தொழுகையை நிறைவேற்றாத வேளையில், அவர்களை அடிப்பதற்குப் பெற்றோருக்கு இஸ்லாம் அனுமதி வழங்குகின்றது. இது தொழுகையின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக விதிவிலக்காக அமைந்த ஒரு சட்டமாகும்.தவறு செய்தவனுக்கு அனுதாபம் காட்டல்மாணவர்கள் தவறு செய்யும் போது கடுமையாக நடந்து கொள்வது, தண்டிப்பது, பரிகசிப்பது போன்ற அணுகுமுறைகளை விட, அவர்களின் மீது அனுதாபம் கொள்வதே வரவேற்கத்தக்கதாகும். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் இதனைத் தெளிவாகக் காண்கின்றோம்.ஒரு முறை ஒரு நாட்டுப்புற மனிதர் பள்ளியில் நுழைந்து சிறுநீர் கழிக்க முற்பட்டார். இதனைக் கண்ட நபித்தோழர்கள் அவரைக் கண்டிக்க முனைந்தனர். உடனே நபியவர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி ''அவரைக் கண்டிக்காது விட்டு விடுங்கள்'' என்று கூறினார்கள். அவரையணுகி, ''இப்பள்ளிவாசல்கள் சிறுநீர் கழிப்பது, அசுத்தப்படுத்துவது போன்ற கருமங்களுக்குத் தக்க இடங்களல்ல. இவை அல்லாஹ்வை 'திக்ர்' செய்வது, தொழுவது, குர்ஆன் ஓதுவது போன்றவற்றிற்குரிய இடங்களாகும்'' என்று கூறிவிட்டு, ஒருவரை அழைத்து, ஒரு வாளித் தண்ணீர் கொண்டு வந்து அவ்விடத்தில் ஊற்றுமாறு பணித்தார்கள். (முஸ்லிம்)இங்கு நபியவர்கள், அந்த மனிதர் பிறந்து வளர்ந்த நாட்டுப்புற பின்னணியைக் கவனத்திற் கொண்டு, அவர் செய்த தவறை எவ்வாறு அனுதாபத்துடன் நோக்கி, மிகவும் நாசுக்காக அவரை நெறிப்படுத்தினார்கள் என்பதை காண்கின்றோம்.இவ்வாறு, ஒரு பாடசாலைக்கு வரும் மாணவர்களும் வித்தியாசமான குடும்பங்களிலிருந்து வருவார்கள். முரண்பட்ட பண்புகளுடையவர்களாக இருப்பார்கள். இதனால், அவர்கள் செய்யும் தவறுகளை ஆசிரியர்கள் மிகவும் அனுதாபத்துடன் நோக்குவதே சாலச் சிறந்ததாகும்.அன்புகாட்ட வேண்டும், அனுதாபம் கொள்ள வேண்டும் எனும்போது, தவறு செய்தவர்களை அவர்கள் செய்த தவறுகளைக் சுட்டிக்காட்டாமலேயே விட்டு விட வேண்டும் என்பது அர்த்தமல்ல. மாறாக, நாசுக்காக, தேவையைப் பொறுத்து நேரடியாகவோ மறைமுகமாகவோ அவற்றையுணர்த்துவது பிரதானமாகும்.திறமைகளைப் பாராட்டுதல்மாணவர்களுக்கு அன்பு காட்டுவது, அவர்களின் தவறுகளை அனுதாபத்துடன் நோக்கி, நாசுக்காகத் திருத்துவது போன்றவற்றுடன் மாணவர்களின் திறமைகளை மெச்சுவதும், அவர்களது நன்னடத்தைகளைப் பாராட்டுவதும் முக்கியமானவையாகும். எப்போதும் ஆசிரியர், திறமையை வெளிகாட்டும் மாணவர்களுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் கொடுக்கக் கூடியவராக இருக்க வேண்டும்.இந்தவகையில்தான் நபி (ஸல்) அவர்கள், அழகாக அல்குர்ஆனை ஓதக்கூடியவராக இருந்த அபூமூஸா அல் அஷ்அரி (றழி) அவர்களைப் பாராட்டினார்கள். (புகாரி, முஸ்லிம்)பொதுவாக ஸஹாபாக்கள் நல்ல விடயங்களைச் செய்த சந்தர்ப்பங்களிலெல்லாம் அவர்களை நபியவர்கள் புகழ்ந்திருப்பதையும் பாராட்டியிருப்பதையும் வரலாற்றில் காணமுடிகின்றது. நபி (ஸல்) அவர்கள் அபூ உபைதா (றழி) அவர்களை 'இந்த உம் மத்தின் நம்பிக்கைக்குரியவர் என்றும், அபூபக்கர் (றழி) அவர்களை உம்மத்தினரில் அன்பானவர் என்றும், அலி (றழி) அவர்களைச் சிறந்த நீதிபதியென்றும், ஸைதை வாரிசுரிமைச் சட்ட வல்லுநர் என்றும், முஆத் (றழி) அவர்களை ஹலால் ஹராம் விடயங்களில் தேர்ந்தவர் என்றும் வர்ணித்துப் பாராட்டியுள்ளார்கள்.படிமுறை அமைப்பைப் பேணல்:இஸ்லாம் எல்லா விடயங்களிலும் படிமுறை அமைப்பைப் பேணுகின்றது. இஸ்லாமிய சட்டங்களும் படிப்படியாகவே வழங்கப்பட்டன. கல்விப் போதனையின் போதும் இம்முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என இஸ்லாம் போதிக்கின்றது. முஆத் (றழி) அவர்களை நபியவர்கள் யெமன் பிரதேசத்திற்கு அனுப்ப முற்பட்ட வேளையில் எவ்வாறு படிப்படியாக, ஒன்றன் பின் ஒன்றாக மார்க்கக் கடமைகளை அங்கு வாழும் மக்களுக்கு விளக்க வேண்டுமென்பதைத் தெளிவுபடுத்தினார்கள்.கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர் அளவு, அமைப்பு ஆகிய இரண்டிலும் இப்படிமுறையைப் பேண வேண்டும் அதாவது, மாணவனுக்கு அவன் இருக்கும் தரத்தில் எந்தளவு அறிவைக் கொடுக்க வேண்டுமோ அந்தளவையே வழங்க வேண்டும். ஒரே தடவையில் அதிகமான விடயங்களைப் புகுத்த முற்படும் போது, அவனால் கிரகிக்க முடியுமான சிறிதளவையும் கூட, அவன் இழந்து விடும் நிலையே உருவாகும்.மேலும், பாடங்களைப் பொறுத்தவரையிலும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு முதலில் தெரிந்ததையும் பின்னர், தெரியாததையும் முதலில் தெளிவானதையும் பின்னர் மயக்கமானதையும் முதலில் இலகுவானதையும் பின்னர் கஷ்டமானதையும், முதலில் நடைமுறையையும் பின்னர் சித்தாந்தத்தையும் படிமுறை அமைப்பில் கற்பிக்க வேண்டும். முக்கியமான விடயம் யாதெனில், ஒரு பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியர், முதலில் மாணவர்களுக்கு அப்பாடத்துடன் தொடர்பான சிக்கலான, நுணுக்கமான விடயங்களைக் கற்பிக்கக் கூடாது. அப்பாடத்தின் இலகுவான, மயக்கமற்ற பகுதியில் இருந்தே போதனையை ஆரம்பிக்கவேண்டும்.எனவேதான் எமது ஆரம்பகால அறிஞர்கள், தரத்தைக் கவனத்திற் கொண்டு, நூல்களைக் கட்டங்களாகப் பிரித்து எழுதினார்கள். உதாரணமாக, இமாம் கஸ்ஸாலி அவர்கள் ஷாபிஈ மத்ஹபின் சட்டங்களை விளக்கும் ஓர் ஆரம்ப நூலை அல்வஜீஸ் (சுருக்கம்) என்ற பெயரில் எழுதினார்கள். பின்னர் அல்வஸீத் (இடைநிலை நூல்) என்ற பெயரில் மற்றொரு நூலை எழுதினார்கள். அடுத்து அல்மப்ஸூத் (விளக்கம்) எனும் பெயரில் விரிவான ஒரு நூலை ஆக்கினார்கள்.இவ்வாறு மாணவர்களின் தர வித்தியாசத்தைக் கருத்திற் கொண்டே எமது இமாம்கள் நூல்களை எழுதியுள்ளார்கள்.தனிநபர் வித்தியாசங்களைக் கவனத்திற் கொள்ளல்ஆற்றல்களையும் திறமைகளையும் பொறுத்தவரையில் மாணவர்கள் பல தரத்தினராக இருப்பர். விளங்கும் தன்மை, கிரகிக்கும் ஆற்றல் போன்றவற்றில் ஒருவருக்கொருவர் வேறுபட்டு நிற்பர். ஒருவருக்குப் பொருந்தும் ஒன்று மற்றொருவருக்குப் பொருத்தமாயிருக்காது. ஒரு சூழலுக்கு இயைபாக இருக்கும் ஒன்று மற்றொரு சூழலுக்கு ஏற்புடையதாய் இருக்காது ஒரு காலத்துக்குப் பொருத்தமாயமையும் ஒன்று மற்றொறு காலத்துக்குப் பொருத்தமற்றதாக இருக்க முடியும்.ஒவ்வொரு மாணவனையும் தனித்தனியாக அவதானித்து அவனுக்குத் தேவையான அறிவை அவசியமான அளவிலும் தரத்திலும், பொருத்தமான நேரத்திலும் வழங்கும் திறமையுள்ளவரே சிறந்த ஆசிரியர் ஆவார்.மனித இனத்தின் முதல் ஆசானாகக் கருதத்தக்க நபி (ஸல்) அவர்கள் இத்தகைய வித்தியாசங்களை கவனத்திற் கொள்ளத் தவறவில்லை. கல்விப் போதனையின் போது மேற்குறிப்பிட்ட வேறுபாடுகளை நபி (ஸல்) அவர்கள் கவனத்திற் கொண்ட விதத்தைப் பின்வருமாறு சுருக்கமாக குறிப்பிட முடியும்.1. தம்மிடம் வந்தவர்களின் வேறுபாடுகளைக் கவனத்திற் கொண்டு, அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஏற்ற போதனைகளைப் பொருத்தமானதாக அமைத்துக் கொண்டமை.. நபி (ஸல்) அவர்களிடம் பலர் வந்து தமக்கு உபதேசிக்குமாறு வேண்டிய வேளைகளில், அவர்கள் வித்தியாசமான உபதேசங்களைச் செய்தார்கள்.. ஒருவருக்கு 'நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும். அவனுக்கு 'ஷிர்க்' வைக்கக் கூடாது. தொழுகையை நிலைநாட்டி, ஸக்காத்தையும் கொடுக்க வேண்டும். இனபந்துக்களைச் சேர்ந்து நடக்க வேண்டும்' என்றார்கள்.. மற்றொருவருக்கு, 'எங்கிருந்த போதும் அல்லாஹ்வைப் பயந்து கொள்வீராக. ஒரு தீமையைச் செய்துவிட்டால், அதனைத் தொடரந்து ஒரு நன்மையைச் செய்து விடுவீராக. அந்த நன்மையானது அத்தீமையை அழித்து விடும். மனிதர்களுடன் பண்பாகப் பழகுவீராக' என்றார்கள்.. மேலும் ஒருவருக்கு, 'அல்லாஹ்வை ஈமான் கொண்டேன் என்று கூறிப் பின்னர் அதில் நிலைத்திருப்பீராக' என்று உபதேசித்தார்கள்;.. இன்னொருவருக்கு நபியவர்கள், 'கோபப்படாதீர்' என உபதேசித்தார்கள்.2. ஒரே கேள்விக்கு, அதனைக் கேட்டவர்களைக் கவனத்திற் கொண்டுவித்தியாசமான பதில்களைக் கூறியமை. உதாரணமாக, 'சிறந்த அமல் எது? அல்லது இஸ்லாத்தில் மிகச் சிறந்தது எது? இவ்வாறு பலர், பல சந்தர்ப்பங்களில் நபியவர்களிடம் கேட்டுள்ளனர். இத்தகைய கேள்விகளுக்கு அவர்கள் சிலபோது தொழுகையையும், மற்றொரு போது ஜிஹாதையும். சிலவேளை ஹஜ்ஜையும் சிறந்த அமல்' என விளக்கியுள்ளார்கள்.. இந்த வகையில்தான் 'காலச் சூழல் மாற்றங்களுக்கேற்ப சட்டங்கள் மாறுபடும்' என்ற அடிப்படையை இஸ்லாம் அங்கீகரிக்கின்றது.. நபியவர்கள் தம்மிடம் வந்தவர்களின் வேறுபாடுகளைப் பொறுத்து அவர்களுடன் நடந்து கொள்ளும் முறையையும் வித்தியாசமானதாக அமைத்துக் கொண்டார்கள்.. மேலும், நபியவர்கள் கட்டளைகளைப் பிறப்பிக்கும்போது மனிதர்களின் சக்தி, பின்னணி போன்றவற்றைக் கருத்திற் கொண்டார்கள்.. ஒருவரின் குறித்த ஒரு நடத்தையை அங்கீகரித்த நபி (ஸல்) அவர்கள், மற்றொருவரில் அதே நடத்தை வெளிப்பட்டபோது அதனை அங்கீகரிக்காதிதிருந்ததுண்டு. சந்தர்ப்ப சூழ்நிலைகள், மனிதர்களின் பின்னணிகள் போன்றவற்றைக் கவனித்தே அவர்கள் இவற்றைத் தீர்மானித்துள்ளார்கள்.நடுநிலையைக் கைக்கொள்ளல். கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர் எப்போதும் கவனத்தில் வைத்திருக்க வேண்டிய முக்கியமானதோர் அம்சமாக இது விளங்குகின்றது. மாணவர்களுக்குச் சலிப்பு ஏற்படும் அளவுக்கு விரிவாகவோ, அல்லது பிரயோசனத்தைக் குறைத்துவிடும் அளவுக்குச் சுருக்கியோ கல்விப் போதனையை அமைத்துக் கொள்ளக் கூடாது, மாறாக நடு நிலையைக் கடைப்பிடிக்க வேண்டும்.. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மக்களுக்குப் போதனை செய்பவர்களாக இருந்தார்கள். ஒரு முறை ஒரு மனிதர் அவர்களை அணுகி, 'ஏன் நீங்கள் தினமும் போதனை செய்யக் கூடாது?' என்று கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (றழி) அவர்கள். 'நான் மக்களைச் சலிப்படையச் செய்வதை வெறுக்கின்றேன். இதுவே அப்படிச் செய்ய எனக்குத் தடையாகவுள்ளது. எங்களுக்குச் சலிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் நபி (ஸல்) அவர்கள் மிகக் கவனமாக உபதேசித்தது போன்றே நானும் நடந்து கொள்கின்றேன்' என்றார்கள். (ஆதாரம் : புகாரி)நடைமுறைச் சம்பவங்களைப் போதனைக்குப் பயன்படுத்தல். ஒரு சிறந்த ஆசிரியர் அன்றாட வாழ்வில் நடைபெறும் நிகழ்ச்சிகளை வைத்து மாணவர்களுக்குச் சிறந்த படிப்பினைகளை வழங்கக் கூடியவராகவும் இருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் எந்தவொரு நிகழ்ச்சியையும் இந்த வகையில் பயன்படுத்தாதிருந்ததில்லை.. ஒரு முறை கௌரவமான மக்ஸுமிய்யாக் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி களவாடி அகப்பட்டுக் கொண்டாள். அவளது கை வெட்டப்பட்டுத் தண்டிக்கப்படுவதை அவளது கோத்திரத்தவர்கள் விரும்பவில்லை. எனவே, இது விடயமாக (நபி) ஸல் அவர்களிடம் சிபாரிசு செய்வதற்காக, நபியவர்களின் அன்புக்குரியவரான உஸாமா பின் ஸைதை அனுப்பிவைத்தனர். உஸாமா (றழி) அவர்கள் நபியவர்களிடம் வந்து அந்தப் பெண்ணுக்காகப் பரிந்து பேசியபோது, நபி (ஸல்) அவர்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, சமத்துவம் பற்றியதும் குல, வகுப்புவாதம் பற்றியதுமான இஸ்லாத்தின் கருத்தை வலியுறுத்த விரும்பினார்கள். அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.'உஸாமாவே! அல்லாஹ்வின் தண்டனை விடயத்திலா சிபாரிசு செய்கின்றீர்? உங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் அழிக்கப்பட்டதற்குக் காரணம், அவர்கள் தங்களில் மேன்மகன் திருடினால் அவனை விட்டுவிடுவர்: பலவீனன் திருடினால் அவனைத் தண்டிப்பர். அல்லாஹ்வின் மீது சத்தியமாக, முஹம்மதுடைய மகள் பாத்திமா திருடியிருந்தாலும், நான் அவரது கையையும் வெட்டியேயிருப்பேன்.'நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் மரணித்த நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது! இதனைக் கண்ட மக்கள், ரஸூலின் மகன் இறந்ததுதான் இக்கிரகணத்திற்குக் காரணமாகும் என்று பேசிக் கொண்டனர். பொதுவாக இத்தகைய மூட நம்பிக்கைகள் அன்றைய ஜாஹிலிய்யாக் கால மக்களிடம் நிலவின, இத்தகைய மூட நம்பிக்கைகள் பிழையானவை என்று விளக்குவதற்கு நபியவர்கள் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள். அவர்கள் மக்களுக்கு பின்வருமாறு கூறினார்கள்.'மனிதர்களே!, சூரியனும், சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரு அத்தாட்சிகளாகும். அவை, ஒருவர் பிறப்பதாலோ இறப்பதாலோ? கிரகணத்திற்குட்படுவதில்லை.'கற்பித்தலுக்கு பொருத்தமான சாதனங்களைப் பயன்படுத்தல். நபி (ஸல்) அவர்கள், தமக்குக் கிடைக்கக் கூடியதாகவிருந்த பலதரப்பட்ட கற்பித்தல் சாதனங்களையும் பயன்படுத்தினார்கள்..'ஒரு முறை நபி (ஸல்) அவர்கள், 'மண்ணில் ஒரு கோட்டைக் கீறி, ஸஹாபாக்களுக்கு அதனைச் சுட்டிக் காட்டி, இதுவே அல்லாஹ்வுடைய பாதையாகும்' என்றார்கள். பின்னர் அக்கோட்டின் வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் பல கோடுகளைக் கீறி 'இவை பல பாதைகளாகும். இவை ஒவ்வொன்றின் மீதும் ஒரு ஷைத்தான் இருக்கின்றான். அவன் அதன் பால் அழைத்துக் கொண்டிருக்கின்றான்.' என்று கூறிவிட்டு 'இதுவே நேரான பாதையாகும். இதனையே நீங்கள் பின்பற்றுங்கள். ஏனைய பாதைகளைப் பின்பற்றாதீர்கள். அவை உங்களை அவனது (அல்லாஹ்வினது) பாதையில் இருந்து பிரித்து (வழிகெடுத்து) விடும்' என்ற ஸூறத்துல் அன்ஆமின் 153 ஆம் வசனத்தை ஓதிக்காண் பித்தார்கள்.மேலும், பல சந்தர்ப்பங்களில் நபியவர்கள் சில கருத்துக்களைக் காட்சிகளினூடாக விளக்கி, அவற்றை மனதில் ஆழமாகப் பதியவைக்க முயன்று வந்துள்ளமையைக் காணமுடிகின்றது. 'தக்வாவுக்குரிய இடம் உள்ளமாகும்' என்ற கருத்தைக் கூற விரும்பிய நபியவர்கள் தமது நெஞ்சைக் காட்டி 'தக்வா இருப்பது இங்குதான்' என்று மூன்று முறை கூறியமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். 'நானும், அனாதைகளைப் பராமரித்தவனும் சுவனத்தில் இப்படி இருப்போம்' என்று கூறி, நபியவர்கள் தமது இரண்டு விரல்களை இணைத்துக் காட்டியமையும் இங்கு குறிப்பிடக்கூடிய ஓர் உதாரணமாகும்.. நபி (ஸல்) அவர்கள் போதனைகளின் போது விரிவுரை முறையைக் கையாண்டார்கள். இதற்குச் சிறந்த உதாரணமாக, அவர்களின் இறுதி ஹஜ்ஜின் பிரசங்கங்களை குறிப்பிட முடியும். இத்தகைய பிரசங்கங்களை வெறும் விரிவுரைகளாக அமைத்துக் கொள்ளாது, கேள்விகள் எழுப்பி, சபையோரை விழிப்புடன் வைத்துக் கொள்வார்கள் நபியவர்கள்.உதாரணங்கள், உவமைகள் மூலம் பல கருத்துக்களை விளக்குவதும் நபியவர்களின் கற்பித்தல் முறைகளில் ஒன்றாகும். இதற்குப் பல உதாணரங்களை ஸீராவில் காணலாம். இங்கு இரண்டு ஹதீஸ்களை மாத்திரம் உங்களுக்கு எடுத்துக் காட்டுகின்றோம்.'தன்னை மறந்துவிட்டுப் பிற மனிதர்களுக்குப் போதிக்கும் மனிதன், பிறருக்கு ஒளியைக் கொடுத்து, தன்னை எரித்துக் கொள்ளும் திரியைப் போன்றவனாவான்.''முஃமின் தேனீயைப் போன்றவனாவான். அது நல்லதைச் சாப்பிடும், நல்லதையே வெளியேற்றும். அது ஒரு கொடியில் அமர்ந்தாலும் அதனை முறித்து விடாது.' (அத்தபரானி, அல் பஸ்ஸார்)இவற்றுடன், போதனையின் போது இடைக்கிடையே கேள்விகள் எழுப்புவதன் மூலமும் நபியவர்கள் தாம் கூறவந்த கருத்துக்களை சபையோரின் மனதில் பதியவைக்க முயன்றமைக்கு உதாரணங்களைக் குறிப்பிட முடியும்.