தனித்துவஅம்சம் கொண்ட கிலாபத் அமைப்பு -نظام الخلافة தொடர்பாக இங்கு விவாதிக்கப்படும் விஷயங்கள் ஒரு அரசியல் ஆய்வாகும், மேலும் இது ஆட்சியமைப்பின் மிகஉயர்ந்த பதவி குறித்தும் அதில் இடம்பெற்றுள்ள சிந்தைனைகள் குறித்தும் மேற்கொள்ளப்படும் ஆய்வாகும், முஸ்லிம்கள் அல்லாத வாசகர்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ள சிந்தனைகளின் உண்மைத்தன்மையை தீர்மானித்து அறிந்துகொள்வதற்கு எதார்த்த உண்மைகளைத் தவிர்த்து வேறு எந்த அளவுகோலின் அடிப்படையிலும் ஆய்வு செய்வார்கள் என்றால் அது மிக்பெரும் தவறாகும், அதுபோலவே முஸ்லிம்களும் அல்லாஹ்(சுபு) வின் வேதம் மற்றும் அல்லாஹ்வின்தூதரின்(ஸல்) சுன்னா ஆகியவற்றை அளவுகோலாகக் கொண்டே இந்த சிந்தனைகளை சீர்தூக்கி ஆய்வுசெய்து தீர்மானிக்கவேண்டும், இதுஏனெனில் இந்த சிந்தனைகளின் உண்மைத்தன்மையை இதனுடன் தொடர்பு இல்லாத வேறு சிந்தனையை வைத்து தீர்மானிக்க முடியாது, இந்த சிந்தனையை எதார்த்த உண்மைகளோடு பொருந்திப்போகும் தன்மையை வைத்தோ அல்லது சத்தியத்தின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட இதன் அசலான விஷயத்தோடு (இஸ்லாம்) வைத்தோதான் தீர்மானிக்க முடியும், ஆகவே இந்நூலை படிக்கும் வாசகர்கள் இந்த சிந்தனைகளை துல்லியமாகவும் கவனத்துடனும் எதார்த்த உண்மைகள் பற்றிய விழிப்புணர்வுடனும் மட்டுமே படிக்கவேண்டும் என்று எச்சரிக்கை செய்கிறோம், ஆகவே இஸ்லாமிய நாடுகளில் இடம்பெற்றுள்ள ஆட்சியமைப்புகளிலும் உலகின் மற்ற பகுதிகளில் இடம்பெற்றுள்ள ஆட்சியமைப்புகளிலும் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளையும் குழப்பங்களையும் வெளிப்டையாகவும் தெளிவாகவும் நாம் அறிந்திருக்கும் நிலையில் இந்த ஆட்சியமைப்பின் சிந்தனைகளை ஆழ்ந்து சிந்திப்பதின் மூலமாக உலகிலுள்ள ஆட்சியமைப்புகளில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வையும் மனிதர்கள் மீது ஆட்சிசெலுத்துவதில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் மக்களின் வாழ்வியல் விவகாரங்களை கவனித்துக் கொள்வதில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் நாம் தீர்வுகளை பெற்றுக்கொள்ளமுடியும், மக்களை ஆட்சிபுரியும் விவகாரத்தில் சரியான தீர்வுகள் காணப்படவேண்டுமானால் எதார்த்த உண்மைகளுக்கு பொருத்தமான முறையில் அல்லது இறைசட்டங்களுக்கு இணக்கமான முறையில் சிந்தனைகளை வழிநடத்தும் விதமாக அதன் அளவுகோல்கள் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்பதை முதலில் உறுதிசெய்து கொள்ளவேண்டும், அதாவது சிந்தனையை மேற்கொள்வதற்கு ஒன்று எதார்த்த உண்மைகளை (reality-الواقع) அளவுகோலாக எடுத்துக்கொள்ளவேண்டும் அல்லது ஷரியா ஆதாரங்களை(الدليل الشرعي - shar'ia evidence) அளவுகோலாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஆட்சியமைப்பு (ruling system-نظام الحكم) பற்றிய சரியான கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கு ஜனநாயக ஆட்சிமுறையை அளவுகோலாக ஆக்கிக்கொண்டு சிந்தனை மேற்கொள்வதோ அல்லது அதன் கருத்துக்களில் தாக்கம் அடைந்த நிலையில் சிந்தனை மேற்கொள்வதோ தவறான அனுகுமுறையாகும், பிரபலமான பல நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு ஜனநாயக ஆட்சிமுறை சிறந்த கொள்கை என்று கருதப்பட்டு உலகநாடுகளில் பரவியிருக்கின்ற காரணத்தால் அதன் அர்த்தத்தை விளங்கிக்கொண்டதில் வேறுபாடுகள் இருந்தபோதிலும் மேற்குநாடுகள் அதை ஏற்றுஅமல்படுத்திய பின்னர் கீழைநாடுகளும் அதை ஏற்றுஅமல்படுத்தின, அல்லாஹ்(சுபு) வும் அவனுடைய தூதரும்(ஸல்) கிலா*பாத்தை ஆட்சியமைப்பாக வழங்கியிருக்கிறார்கள் என்பதில் நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களும். கிலா*பத்தை முஸ்லிம்கள் நிலைநாட்டினார்கள் என்பதை தெளிவாக விளங்கியிருக்கும் முஸ்லிம்களும் வேறுபாடின்றி ஜனநாயகத்தின் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர், ஜனநாயகம் என்ற பெயரில் அல்லது ஜனநாயக சிந்தனைகள் என்ற போர்வையில் இந்த முஸ்லிம்கள் தங்கள் அபிப்ராயங்களை மற்றவர்களுக்காக சமரசம் செய்துகொள்கின்றனர், ஆகவே கிலா*பத் பற்றிய இந்த சிந்தனைகளை ஆய்வுசெய்யும்போது வேறெந்த சிந்தனைகளையும் குறிப்பாக ஜனநாயக சிந்தனைகளை அளவுகோலாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று மறுமுறையும் நாம் வாசகர்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம், உதாரணமாக. ஆட்சியமைப்புகள் பற்றி ஆய்வுசெய்யும் சிலர் தங்கள் நாடுகளில் பிரபலமாக இருக்கும் அரசமைப்புகளை (form of governments) கவனித்திருப்பார்கள். மேலும் வரலாற்றிலிருந்து சிலவகை அரசமைப்புகளை படித்தறிந்திருப்பார்கள், தர்க்கவாதத்தினால் ஏற்பட்ட யூகத்தின் அடிப்படையில் இந்த அரசமைப்புகளைப் பற்றி அவர்கள் சிலாகித்துக்கூற முற்படுகிறார்கள், ஓர் அரசில் அனைத்து மக்களும் அல்லது பெரும்பான்மை மக்கள் பொறுப்பு வகித்தார்கள் என்றால் அந்த அரசு ஜனநாயகஅரசு என்று அழைக்கப்படுகிறது. ஓர் அரசு சில மனிதர்களின் கைகளுக்குள் மட்டும் கட்டுண்டு கிடக்குமாயின் அது ஏகாதுபத்தியஅரசு என்று அழைக்கப்படுகிறது. இன்னும் ஓர் அரசில் ஆட்சிஅதிகாரம் ஒருவர் கையில் மட்டும் இருக்கும் நிலையில் மற்றவர்கள் அவரிடமிருந்து அதிகாரத்தை பெறுவார்களாயின் பிறகு அது மன்னராட்சி (monarchy) என்றோ அல்லது அரசகுடும்பத்தின் ஆட்சி(empire of royalty) என்றோ அழைக்கப்படுகிறது, ஆட்சியமைப்பு என்றால் சட்டம்இயற்றுதல் (legislation) மற்றும் ஆட்சிசெய்தல் (ruling) ஆகியவற்றின் அதிகாரத்தை பெற்றுள்ள அமைப்பு என்று பொருளாகும், இந்த இரண்டு அடித்தளங்கள் மீதுதான் ஆட்சியமைப்புகள் அனைத்தும் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்துதான் அரசுகளின் வகைகள். கூட்டாட்சி அமைப்புகளின் (federal governments) வகைகள். ஆகியவைகள் உருவாகின்றன, மேலும் இதிலிருந்துதான் அரசாங்க அமைப்புகளின் (government structures) வகைகள். தேர்தல்முறைகள். ஓட்டுரிமை மற்றும் இதுபோன்ற ஆட்சியமைப்பு விவகாரங்கள் அனைத்தும் பிறக்கின்றன.
ஜனநாய சிந்தனை இஸ்லாமிய ஆட்சியமைப்பு சிந்தனையிலிருந்து அடிப்படையிலும் அதன் விரிவாக்கத்திலும் முற்றிலும் வேறுபட்டது, அவைகளுக்கிடையிலுள்ள வேறுபாடு மிக ஆழமானதாகும் ஏனெனில் இஸ்லாத்தில் உள்ள ஆட்சியமைப்பு கிலா*பத்தாகும், இந்த ஆட்சியமைப்பின் மாதிரி (model) மற்ற எந்தவொரு ஆட்சியமைப்பிலிருந்தும் முற்றிலும் தனித்தன்மை வாய்ந்தது, இந்த ஆட்சிமுறையில் குடிமக்களின் விவகாரங்களை கவனித்துக்கொள்ளுதல் (உள்நாட்டு விவகாரம்) மற்றும் வெளிநாட்டு விவகாரம் ஆகியவற்றின் ஆட்சியமைப்பு அம்சங்களில் இடம்பெற்றுள்ள சட்டங்கள் அனைத்தும் ஷரியாவிலிருந்து பெற்ப்பட்டவையாகும், இந்த சட்டங்கள் மக்களிடமிருந்தோ அல்லது ஒருசில அறிவுஜீவிகளிடமிருந்தோ அல்லது எந்தவொரு தனிமனிதரிடமிருந்தோ பெற்பட்டதல்ல, இஸ்லாத்தை தழுவுகின்ற ஒவ்வொரு மனிதருக்கும் அவருடைய அரபுமொழி அறிவின் அடிப்படையில் ஷரியாவை விளங்கிக்கொள்வதற்கும் ஷரியாஉரை இயம்புவதை புரிந்துகொள்வதற்கும் உரிமையுண்டு, மேலும் அரபு மொழியியல் வரம்புகளுக்கும் ஷரியாவின் வரம்புகளுக்கும் உட்பட்டு அவரது அறிவின் மூலம் ஷரியாஉரையிலிருந்து அவர் விளங்கிக்கொள்வதை அடிப்படையாகக்கொண்டு உருவாகும் அவருடைய அபிப்ராயத்தை ஷரியாவின் தீர்ப்பாக ஆக்கிக்கொள்வதற்கும் அவருக்கு பரிபூரணமான உரிமை உண்டு, அதுபோலவே அவர் விளங்கிக்கொண்ட அபிப்ராயத்தை ஷரியாவின் தீர்ப்பாக மற்றவர் ஏற்றுக்கொண்டு பின்பற்றுவதற்கும் உரிமையுண்டு, அவர் ஒரு ஆட்சியாளராக இருக்கும்பட்சத்தில் இந்த அபிப்ராயத்தின்படி ஆட்சிபுரியவும். அவர் ஒரு நீதிபதியாக இருக்கும்பட்சத்தில் இந்த அபிப்ராயத்தின்படி தீர்ப்பு வழங்கவும் அவருக்கு உரிமையுண்டு, ஆனால் இஸ்லாமிய அரசின் தலைவராக உள்ள கலீ*பா ஏதேனும் ஒரு இஸ்லாமிய அபிப்ராயத்தை ஏற்றுஅமல்படுத்தினால்(adoption of rule) பின்னர் கலீ*பா ஏற்றுஅமல்படுத்தியது மட்டும்தான் இறைசட்டமாக இருக்கும். மேலும் இந்த இறைசட்டங்களை அனைத்து குடிமக்களும் ஏற்றுக்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்தவேண்டியது அவர்கள் மீது கடமையாகும், இதற்கு அவர்கள் அபிப்ராயங்களை கைவிட்டுவிடுவது என்று பொருளாகாது மாறாக அவர்கள் கலீ*பா ஏற்றுஅமல்படுத்தியுள்ள விதிகளின் வரம்புகளுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டியதும் அதற்கு மட்டுமே கட்டுப்பட்டு நடக்கவேண்டியதும் அவர்கள் மீது சட்டரீதியாக உள்ள கடமையாகும், அதேவேளையில் அவர்கள் தங்கள் அபிப்ராயத்தின்படி மக்களுக்கு கல்வி கற்பிக்கவும் அதனடிப்படையில் மக்களை இஸ்லாத்திற்கு அழைக்கவும் அவர்களுக்கு எந்தவிதமான தடையுமில்லை, இஸ்லாம் கட்டமைக்கப்பட்டுள்ள அடித்தளமான இஸ்லாமிய அகீதாவின்(العقيدة الإسلامية) அடிப்படையில் சுதந்திரமாக சிந்தனை மேற்கொள்வதற்கு மக்கள் அனைவருக்கும் பூரண உரிமை வழங்கப்பட்டுள்ளது, ஆகவே அகீதாவிலிருந்து பிறந்துள்ள அனைத்து விஷயங்கள் பற்றியும் சட்டம் இயற்றுதல் பற்றியும் சிந்திப்பதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு.
இது சட்டம்இயற்றுதல் மற்றும் சிந்தனை மேற்கொள்ளுதல் ஆகியவற்றைப் பொறுத்து உள்ள நிலையாகும். ஆட்சிபுரிதலைப் பொறுத்தவரை அது சட்டம்இயற்றுதலிருந்து வேறுபட்டது, அதாவது சுல்தான்(அதிகாரம்-السلطان) என்பதும் ஆட்சியமைப்பு (ruling system-نظام الحكم) என்பதும் வெவ்வேறுபட்ட விஷயங்கள், ஆட்சிசெய்யும் அதிகாரம்(சுல்தான்) என்பது இறைசட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய அதிகாரமாகும். ஆனால் ஆட்சியமைப்பு என்பது இறைசட்டங்களிலிருந்து உருவாக்கப்படும் செயலாக்கஅமைப்பாகும் نظام)-system), ஆட்சி செய்யும் அதிகாரம் என்பது ஆட்சியமைப்பில் ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மாவிற்கும் அதிலுள்ள ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் ஷரியா வழங்கியுள்ள அதிகாரமாகும், ஆகவே இந்த உரிமையை உம்மாவிலுள்ள அனைவரும் தேவைப்படும்போது பயன்படுத்தலாம், உம்மா பெற்றுள்ள இந்த அதிகாரத்தின் மூலமாக ஷரியாவை நடைமுறைப்படுத்தும் ஒருவரை தன்மீது நிலைநிறுத்திக் கொள்வதற்காக அல்லாஹ்(சுபு)வின் வேதத்தின் மீதும் அவனுடைய தூதரின்(ஸல்) சுன்னாவின் மீதும் தன்னுடைய ஒப்புதல் மற்றும் விருப்பத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் பைஅத் செய்து ஒரு கலீ*பாவை நியமனம் செய்துகொள்கிறது, கலீ*பாவுக்கும் உம்மாவுக்கும் இடையில் நிறைவேற்றப்படும் கிலா*பத் ஒப்பந்தம் என்பது ஒரு பணிஒப்பந்தம்(service contruct) அல்ல ஏனெனில் அது ஷரியாவை நடைமுறைப்படுத்துவதற்குரிய ஒப்பந்தமே தவிர உம்மா தனது உலகஆதாயத்திற்காக செய்துகொண்ட ஒப்பந்தம் கிடையாது, இருந்தபோதிலும் ஷரியாவை நடைமுறைப்படுத்துதல் என்பது உம்மாவின் சேவையோடும் அதன் நலனோடும் தொடர்புடைய விஷயமாகும் ஏனெனில் ஷரியா என்பது உம்மாவிற்கும் மனிதகுலத்திற்கும் அல்லாஹ்(சுபு) புரிந்த அருட்கொடையாகும், எனினும் கிலா*பத் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் செயலின் நோக்கம் ஷரியாவை நடைமுறைப்படுத்துவதாக இருக்கிறதே தவிர உலகஆதாயமாக இல்லை, உடனடியாக உம்மா பெற்றுக்கொள்ளும் உலகஆதாயம் ஷரியாவிற்கு முரண்பாடாக இருக்கும்பட்சத்தில் ஷரியாவை நடைமுறைப்படுத்துவது மட்டுமே கட்டாயமாக கருதப்படும்.
ஆகவே ஒரு இறைசட்டத்தை விட்டுவிடுவதற்கு உம்மா கோரும்பட்சத்தில் அதற்கு ஒப்புக்கொள்வது கலீ*பாவின் கடமையல்ல மாறாக இவ்வாறு உம்மா செயல்படும்போது அது தனது நிலையை மாற்றிக்கொள்ளும்வரை அதனுடன் போர் செய்யவேண்டியது கலீ*பாவின் கடமையாகும், ஏனெனில் அவர் ஷரியாவை நடைமுறைப்படுத்துவதற்காகத்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார், மேலும் தான் விரும்பும்போது கலீ*பாவை பதவிநீக்கம் செய்யும் உரிமையும் உம்மாவிற்கு இல்லை, அவர் இஸ்லாத்திற்கு அந்நியமானவைகளை நடைமுறைப்படுத்தும்போது அவருக்கு எதிராக ஜிஹாது செய்யும் உரிமையும் கடûயும் உம்மாவிற்கு இருக்கிறது என்றபோதும் கலீ*பாவை பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் ஷரியாவிற்கே உரியது, அதாவது சட்டரீதியான முறையில் அவர்மீது உள்ள குற்றச்சாட்டு அநீதிசட்ட நீதிமன்றத்தில் (محكمة المظالم) நிரூபனம் செய்யப்பட்டால் மட்டுமே அவரை பதவிநீக்கம் செய்யமுடியும், ஆகவே கலீ*பாவை உம்மாதான் பதவியில் அமர்த்துகிறது என்றபோதும் அவர் பதவியில் அமர்ந்த பின்னர் அவர் விவகாரம் ஷரியாவின் கையில் இருக்கிறதே தவிர உம்மாவின் கையில் இல்லை.
ஆனால் ஆட்சியமைப்பு அதிகாரத்தில் உள்ள உம்மாவின் உரிமை கலீ*பாவை நியமனம் செய்வதோடு முடிந்துவிடுவதில்லை. மாறாக அந்த அதிகாரம் எப்போதுமே உம்மாவின் கையில்தான் இருந்துவரும், கிலா*பத் நிலைநாட்டப்பட்டு கலீ*பா இருக்கும்பட்சத்தில் ஷரியாவை மக்கள் மத்தியில் நடைமுறைப்படுத்தும் கடும்பணியையும் உம்மாவின் நலனை பாதுகாக்கும் பொறுப்பையும் அதன் விவகாரங்களை கவனித்துக்கொள்ளும் கடமையையும் ஷரியாவின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உம்மா தீர்மானிக்கும் முறையில் நிறைவேற்றும் அவரது செயல்பாட்டை தட்டிக்கேட்பது(ஹஸ்ரீஸ்ரீர்ன்ய்ற்ஹக்ஷண்ப்ண்ற்ஹ்) உம்மா மீதுள்ள கடமையாகவும் உரிமையாகவும் இருக்கிறது, இந்த விவகாரத்தில் உம்மா அவரை தட்டிக்கேட்கும்போது அதற்கு அவர் கட்டுப்படுவதோடு அது ஆட்சேபிக்கும் விவகாரத்தின் சூழலையும் அது எழுப்பியுள்ள பிரச்சினைக்கு உரிய தீர்வையும் அதனிடம் விளக்கிக் கூறவேண்டியது அவரது கடமையாகும், அவருக்கு எதிராக அது ஆயுதத்தை ஏந்தியபோதும் உம்மா கொண்டுள்ள ஆட்சேபனைகளையும் அதன் சந்தேகங்களையும் அகற்றும் வகையில் முறையான விளக்கத்தை அளிக்காதவரை அதற்கு எதிராக ஆயுதமேந்த அவருக்கு அனுமதியில்லை.
இதுதான் இஸ்லாத்திலுள்ள ஆட்சிமுறையாகும். இந்த அடிப்படை மீதுதான் ஆட்சியமைப்பு நிறுவப்பட்டுள்ளது, இந்த ஆட்சிமுறையை அமல்படுத்தும்போது அது கிலா*பத் என்ற இஸ்லாத்தின் ஆட்சியமைப்பாக இருக்குமே ஒழிய வேறெந்த ஆட்சிமுறையாகவும் இருக்காது, இந்த ஆட்சியமைப்பு ஒருமைத்துவம் கொண்ட ஆட்சியமைப்பாக(unitary system-نظام الوحدة) இருக்குமே தவிர யூனியன் ஆட்சியமைப்பாகவோ அல்லது கூட்டாட்சி அமைப்பாகவோ (union or federal system) இருக்காது, மேலும் கிலா*பத் ஆட்சியமைப்பில் அரசாங்க அமைப்பு (government structure) எதுவும் கிடையாது, கலீ*பாதான் இஸ்லாமிய அரசாக இருக்கிறார் அவரின்றி இஸ்லாமிய அரசு என்ற ஒன்று கிடையாது, ஆகவே அரசு(state) என்பதும் அரசாங்கம்(government) என்பதும் கலீ*பா மற்றும் அவரது உதவியாளர்கள்(المعاونون) என்ற ஒரே அமைப்பாகவே(single body) இருக்கும், கலீ*பாவை நியமனம் செய்யும் வழிமுறை. கலீ*பாவை தேர்வுசெய்வதில் அனைத்து முஸ்லிம்களின் ஒப்புதல் மற்றும் விருப்பத்தேர்வு ஆகியவை இணைந்திருக்கும் விதத்தில் பைஅத்தை நிறைவேற்றும் நடைமுறை. ஆகிய அனைத்து விஷயங்களும் கிலா*பத்திற்குரிய தனிப்பட்ட இறைசட்டங்களிலிருந்தும் ஒப்பந்தத்திற்குரிய பொதுவான இறைசட்டங்களிலிருந்தும் உருவாக்கப்பட்டிருக்கின்றன, சுததந்திர தேர்வுமுறை. அனைவரும் தங்கள் அபிப்ராயத்தை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்துதல் ஆகிய கண்ணோட்டதில் கிலா*பத் ஆட்சிமுறையும் ஜனநாயக ஆட்சிமுறையும் ஒன்றுபோல தோன்றினாலும் இந்த இரண்டு ஆட்சிமுறைகளும் ஒன்றுதான் என்று கருதுவது தவறானதாகும் ஏனெனில் ஜனநாயக ஆட்சிமுறையில் இந்த விஷயங்கள் சுதந்திர உரிமைகள்(freedom of rights) என்ற மனித அறிவிலிருந்து தோன்றிய கொள்கையிலிருந்து உருவாக்கப் பட்டிருக்கின்றன. ஆனால் கிலா*பத் ஆட்சிமுறையில் இவைகள் ஷரியாவிலிருந்து பெறப்பட்ட இறை சட்டங்களிலிருந்து உருவாக்கப்பட்டிருக்கின்றன, ஏனெனில் அனைத்து முஸ்லிம்களின் ஒப்புதலும் விருப்பமும் தேர்வில் இடம்பெற்றிருக்கவேண்டும் என்பது கிலா*பத் ஒப்பந்தத்திற்குரிய நிபந்தனை என்றும் இது நிறைவேற்றப்படா விட்டால் தேர்வுசெய்யப்படும் நபர் சட்டரீதியாக கலீ*பா பதவியை ஏற்கமுடியாது என்றும் ஷரியா விதித்திருக்கிறது.
தேர்வில் சுதந்திரத்திற்கு உத்திரவாதம் அளிக்கவேண்டும் என்பதற்கும் ஆட்சிக்குரிய ஒப்பந்தத்தில் மக்களின் ஒப்புதலும் விருப்பத்தேர்வும் கட்டாயம் பெறப்படவேண்டும் என்பதற்கும் வேறுபாடு இருக்கிறது, முந்தய விஷயத்தில் சுதந்திரத்தை நிலைநிறுத்தவேண்டும் என்பதை மக்கள் முடிவுசெய்கிறார்கள், ஆகவே ஜனநாயகஆட்சி முறையில் பரிந்துரைக்கப்படும் இந்த சுதத்திரதேர்வு என்பது நிலைநிறுத்தப்படவில்லை என்றாலும் தேர்வு சட்ட ரீதியானதாகவே கருதப்படும், ஆனால் கிலா*பத் ஆட்சிமுறையில் மக்களின் ஒப்புதலும் விருப்பமும் கட்டாயம் நிலைநிறுத்தப்படவேண்டும் என்பது மக்கள் ஏற்படுத்திய சட்டமாக இல்லை மாறாக அது இறைசட்டமாக இருப்பதால் அது நிறைவேற்றப்படவில்லை என்றால் தேர்வும் நடைபெறாது ஆட்சிக்குரிய ஒப்பந்தமும் நிறைவேற்றப்படாது, கிலா*பத் ஆட்சிறை மற்றும் ஜனநாயக ஆட்சிமுறை ஆகியவை ஏகாதிபத்திய ஆட்சிமுறை அல்லது மன்னராட்சிமுறை அல்லது இராணுவ ஆட்சிமுறை அல்லது ராஜகுடும்ப ஆட்சிமுறை(empire of royalty) ஆகிய ஆட்சிமுறைகளிலிருந்து வேறுபட்டது என்றபோதும் இவ்விரண்டு ஆட்சிமுறையின் அடித்தளத்திலுள்ள சிந்தனைகள் முற்றிலும் வேறானவை, ஆகவே இஸ்லாமிய ஆட்சியமைப்பில் இடம் பெற்றுள்ள சிந்தனைகள் பற்றி ஆய்வுசெய்ய வேண்டுமானால் அது மற்ற ஆட்சிமுறைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஆட்சிமுறை என்ற அந்தஸ்த்தில் அதை ஆய்வுசெய்யவேண்டும், மேலும் அது எதார்த்த உண்மைகளுக்கு இணக்கமாக இருப்பதைக் குறித்து ஆய்வுசெய்யவேண்டுமே ஒழிய மற்ற ஆட்சியமைப்புடன் அதை ஒப்புநோக்கக்கூடாது, மற்ற ஆட்சிமுறைகள் குறித்து ஆய்வுசெய்யும்போது அவை எதார்த்த உண்மைகளுக்கு இணக்கமாக இருக்கிறதா? என்பது குறித்தும். மனிதகுலத்தை உண்மையாக மனிதன் ஆட்சிசெய்வது சாத்தியமா? என்பது குறித்தும். அவ்வாறு ஆட்சிசெய்யும் பட்சத்தில் அதில் உயர்ந்த மாண்புகள் இடம்பெறுமா? என்பது குறித்தும். இந்த ஆட்சியமைப்புகளிலுள்ள சிந்தனைகளுக்கு மனிதர்களை படைத்து பரிபாலிக்கும் இறைவனான அல்லாஹ்(சுபு) விடமிருந்துள்ள ஷரியா ஆதாரம் (divine evidence) இருக்கிறதா? என்பது குறித்தும் ஆய்வுசெய்யவேண்டும்.
இதனடிப்படையில். மற்ற ஆட்சியமைப்புகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட. முன்மாதிரியற்ற. தனித்துவம் பெற்ற ஆட்சியமைப்பு என்ற அந்தஸ்த்தில் கிலா*பத்தை ஆய்வுசெய்யவேண்டும் என்று வாசகர்களிடம் கோரிக்கை வைக்கிறோம், மேலும் தற்போது மனிதகுலத்தை ஆட்சிசெய்து கொண்டிருக்கும் ஆட்சியமைப்போடு ஒப்பிடும்போது அது மிஉயர்ந்த அந்தஸ்த்து பெற்றுள்ளது என்பதையும். அல்லாஹ்(சுபு) வின் வேதத்திலிருந்தும் அவனுடைய தூதரின்(ஸல்) சுன்னாவிலிருந்தும் பிறந்த இந்த ஆட்சியமைப்பு அது உருவான அடிப்படைக்கு முற்றிலும் இணக்கமாக இருக்கிறது என்பதையும். அதில் இடம்பெற்றுள்ள சிந்தனைகள் சரியானவை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு எதார்த்த உண்மைகளை(reality-الواقع) ஆதாரமாகவும் அளவுகோலாகவும் வைத்து இந்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்றும் நாம் வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment