இஸ்லாமிய ஆட்சிதான் அமைதி தரும்!'' - முனைவர் அப்துல்லாஹ்
பரங்கிப்பேட்டை ஐஎன்டிஜே நிகழ்ச்சியில் கடந்த 23-05-2010 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக மாபெரும் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் சின்னக் கடை வாத்தியாப் பள்ளித் தெருவில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் லுக்மான் தலைமை வகித்தார். மாநில தொண்டரணி செயலாளர் பண்ருட்டி யூனுஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில நிர்வாகிகளான எஸ்.எம். சையத் இக்பால், முஹம்மது ஷிப்லி, மாவட்ட துணைத் தலைவர் ஹமீது கவுஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் டாக்டர் அப்துல்லாஹ் "ஆறு நம்பிக்கையும், ஐந்து கடமைகளும்' என்ற தலைப்பிலும், மாவட்டப் பேச்சாளர் மவ்லவி ஏ.கே. ஷிகாபுதீன் "ஒற்றுமை' என்றதலைப்பிலும், தலைவர் எஸ்.எம். பாக்கர் "இஸ்லாமும் இன்றைய இளைஞர்களும்' என்ற தலைப்பிலும், பண்ருட்டி இமாம் முஹம்மது ஷகீர் "இதுதான் இஸ்லாம்' என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.
தலைவர் எஸ்.எம். பாக்கர் பேசுகையில், ""இன்றைய இஸ்லாமிய இளைஞர்களின் நிலை பற்றியும், அவர்களின் சிந்தனையை தூண்டும் வகையில் குர்ஆன் கூறும் குகைத் தோழர்களின் வரலாற்றையும் மேற் கோள் காட்டிப் பேசினார். நபித் தோழர்களில் செல்வந்தர்களாக இருந்த பலர் மரணிக்கும் தருவாயில் கஃபன் துணி கூட போதுமானதாக இல்லாத நிலையில் அடக்கம் செய்யப்பட்டார்கள். அந்த அளவிற்கு அவர்கள் மார்க்கத்திற்காக தங்களை அர்ப்பணித்தார்கள்.
இன்று இஸ்லாமிய இளைஞர்களில் பலர் பெண்களுக்கு இணையாக தொலைக்காட்சி, சினிமா மோகத்தில் மூழ்கி நேரத்தையும், காலத்தையும் வீணடித்து தங்களது வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்களைப் பேணும் விஷயத்திலும் இஸ்லாம் கூறும் நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை. உங்கள் பெற் றோரை "ச்சீ' என்று கூட சொல்லாதீர்கள் என்று அல்லாஹ் கூறுகி றான். ஆனால் பெற்றோரை கொடுமைப் படுத்துவது, அவர்களைக் கவனிக்காமல் தனித்து விடுவது என பெற்றோரின் அருமை தெரியாமல், அவர்களை பராமரிக்காமல் இருப்பதைப் பார்க்கிறோம்.
தவ்ஹீத் பேசும் சகோதரர்கள் கூட ஸுப்ஹு தொழுகையைப் பேணுவதில்லை என்று குறிப்பிட்டு தொழுகையின் அவசியத்தையும், அதன் முக்கியத்துவம் குறித்தும் விரிவாகப் பேசினார்.
இஸ்லாத்தில் ஈமானைக் குறிக்கும் ஆறு நம்பிக்கைகள் குறித்து விரிவாகப் பேசிய டாக்டர் அப்துல்லாஹ், ஐந்து கடமைகளைப் பற்றியும் விளக்கிப் பேசினார். குறிப்பாக தொழுகை குறித்துப் பேசுகையில், தொழுகையில் இந்த சமுதாயம் மிகவும் அலட்சியமாக இருக்கிறது. தந்தையைக் கொண்டு வந்து பள்ளி வாசலில் விடும் மகன் தொழாமல் வெளியே சென்று புகை பிடித்துக் கொண்டிருப்பான். தந்தை தொழுகையில் ஈடுபட்டிருப்பார். இந் நிலையில், மகனை தொழுமாறு அந்தத் தந்தை அவனை அழைப்பதில்லை. மகன் சொர்க்கத் திற்கு செல்ல வேண்டுமென்றஆசை அவருக் கில்லை போல. இது போன்ற காட்சிகளை பார்க்க முடிகிறது.
தொழுகைக்கு அழைத்தால் நேரமில்லை என்ற கெட்ட வார்த்தையை அதிகமானோர் சொல்கின்றனர். இறைவன் கொடுத்த 24 மணி நேரத்தில் நேரமில்லை என்றபொய்யைச் சொல்லுகின்றார்கள்.
ஒவ்வொரு முறையும் நான் தொழுகைக்குச் செல்லும்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வார்த்தை எனக்கு ஞாபகத்திற்கு வரும். வீட்டு வாசலில் ஓடுகிற நீரோடையில் ஒரு மனிதன் ஐந்து முறை குளித் தால் அவன் எவ்வளவு தூய்மை அடைவானோ, அதைப் போன்று ஐவேளை தொழுதால் அவனுடைய உள்ளமும் தூய்மையடையும்'' என்ற நபிமொழியை சுட்டிக் காட்டினார் டாக்டர் அப்துல்லாஹ்.
தொடர்ந்து, ""இஸ்லாம் கூறும் ஏழை வரியான ஜக்காத்தை முறையா கக் கொடுத்தால் இந்த உலகத்தில் இருந்து வறுமையை விரட்டி விடலாம். ஏழைகளே இல்லாத நிலை உருவானால் அமைதியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கக் கூடிய இஸ்லாமிய ஆட்சியை இந்தியாவில் கூட ஏற்படுத்தி விடலாம். இது தொடர்பாக நான் பேசி யதை பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் பொன் ராதா கிருஷ்ணன், "பெரி யார் தாசன் பேசுகிற மேடையில் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி வேண்டுமென்று தீவிரவாதத்தைப் பரப்பி வருகிறார்' என்று விமர்சிக்கிறார்.
நான் கேட்கிறேன், உலகம் முழுவதும் இஸ்லாமிய ஆட்சி வர இருக் கும் சமயத்தில் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி ஏன் வரக் கூடாது? இஸ்லாமிய ஆட்சியில் மட்டும் தான் அமைதி ஏற்படும். சகோதரத்தும் தழைத்தோங்கும். சாதீயக் கட்டுமானங்கள் தகர்த்தெறியப்படும். தீவிர வாதம் தடுக்கப்படும். மக்களுக்கு அமைதியான வாழ்வு கிடைக்கும்'' என்றவர், "நான் இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து இந்துத்துவாவினர் என் வீட் டிற்கு தொலைபேசியில் அடிக்கடி மிரட்டல் விடுத்து வந்தனர். இது குறித்து என் துணைவியார் என்னிடத்தில் சொன்னபோது, இதைக் கேட்க நாதியில்லை என்று எண்ண வேண்டாம். அவர்கள் பேசுவதை அல்லாஹ்வும் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்று சொன்னேன். அன்றிலிருந்து தொலைபேசி மிரட்டல்கள் வருவதில்லை. இது அல் லாஹ் எனக்களித்த வெகுமதி என்றே கருதுகிறேன். என்னைக் கண் காணிக்கிறேன் என்று சொன்னவர்கள் எல்லாம், சில தினங்களுக்குள் என்னை நேரில் வந்து சந்தித்தார்கள்.
தாஃவாவை பொறுத்தவரையில், பிற சமய மக்களிடத்திலே மார்க் கத்தை கொண்டு போய் சேர்க்கக் கூடிய பணியை இந்திய தவ்ஹீத் ஜமா அத் சிறந்த முறையில் செய்து வருகிறது. பிறசமய மக்களிடத்திலே உலகப் பொதுமறைதிருக்குர்ஆனை கொண்டுபோய் சேர்ப்பிக்கின்ற பணியை அவர்கள் செய்து வருகின்றனர். அதனால் தான் நான் இவர்களின் பின்னால் போக வேண்டியிருக்கிறது.
இஸ்லாமிய ஆட்சி தான் மனிதகுலத்திற்கு ஏற்றது. இஸ்லாமியச் சட்டங்கள் தான் மனித வாழ்க்கையின் அமைதிக்கு உத்தரவாதமளிக்க முடியும்'' என்றார் பெரியார் தாசன்.
ஐஎன்டிஜே பரங்கிப்பேட்டை நகரத் தலைவர் சுல்தான் அப்துல் காதர் நிகழ்ச்சியின் நிறைவாக நன்றியுரை நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment