சிறைகளில் வதைக்க பட்ட ஆபியா சித்தீகி மேலும் 86 வருடங்கள் சிறையில்: அமெரிக்க நீதி
டாக்டர் ஆபியா சித்தீகி மீதான வழக்கின் தீர்ப்பு நேற்று 23.9.2010- அறிவிக்கப்பட்டுள்ளது அவர் ஆப்கானிஸ்தான் சிறையில் அமெரிக்க உளவுத் துறை சிப்பாயை சுட முயன்றார் என்ற வழக்கு பதியப்பட்டது இந்த வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு 86 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது இந்த தீர்ப்பு முஸ்லிம் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
டாக்டர் ஆபியா சித்தீகி அமெரிக்காவின் பெருமைமிக்க மாஸ்சூசெட்ஸ் நிருவனத்தின் உயிரியல் பட்டதாரி. அவரது முனைவர் பட்டத்துக்காக ப்ரெண்டிஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தைசார் நரம்பியல் விஞ்ஞானம் பாடமாக எடுத்து கலாநிதிப் பட்டம் பெற்றவர். தனது பட்டப்படிப்பை மேற்கொள்ளும்போது “பாகிஸ்தானை இஸ்லாமிய மயமாக்கலும் பெண்களின் மீது அதன் தாக்கமும்” என்ற தலைப்பில் அவர் மேற்கொண்டிருந்த ஆய்வுக்காக கரோல் வில்ஸன் விருது பெற்றவர் விரிவாக பார்க்க
……
இந்த தீர்ப்பு முஸ்லிம் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது அவைகள் எதிர்ப்பு ஆர்பாட்டங்களாகவும், இணைய பதிவுகளாகவும் , வெளிவருகின்றன அப்படி வெளியான ஒரு பதிவைத்தான் இங்கு நீங்கள் வீடியோவாக பார்க்கின்றீர்கள்
…..
ஆபியாவின் தந்தை பிரிட்டனில் கல்வி பயின்ற ஒரு மருத்துவர். அவரது மூத்த சகோதரர் ஒரு கட்டடக்கலை நிபுணர், மூத்த சகோதரி ஒரு பெண் மருத்துவர். ஆபியாவின் கணவர் அமெரிக்க மருத்துவமனையொன்றில் வைத்தியராக பணிபுரிந்தவர். 1990ஆம் ஆண்டிலிருந்தே ஆபியா அமெரிக்காவின் பொஸ்டன் என்ற இடத்தில் அவரது பெற்றோரோடு வசித்து வந்தார்.திடீரென ஆபியா காணாமல் போனார்
டாக்டர் ஆபியாவுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் ஒட்டு மொத்த மக்களும் திணறிக் கொண்டிருந்த வேளையில், ஆப்கானிஸ்தானின் பக்ரம்(Bagram) சிறையில் Prisoner 650 என்ற பட்டப் பெயர் கொண்ட ஒரு பெண் சித்திரவதைப்படுத்தப்படுவதாக செய்திகள் கசியத்துவங்கின. கொடுமைகளின் உக்கிரம் தாங்க இயலாமல் கைதி எண் 650 சுய நினைவை இழந்துள்ளதாக அத்தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து சுயாதீன ஊடகங்களின் பார்வை அந்தப் பக்கம் திரும்பியது.
மீடியக்களின் அழுத்தம் தாங்க முடியாமல் பிரிட்டிஷ் மேலவை உறுப்பினர் நஜீர் அஹ்மத் இது தொடர்பான கேள்வியை அவையில் எழுப்பி ஆதாரங்களை முன்வைத்துள்ளார். அதன்படி Prisoner 650 என்று பெயரிடப்பட்ட அப்பெண்மணி உடல் ரீதியாக கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகிஇருப்பதாகவும் சிறைக்காவலர்களால் தொடர்ந்து வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. கொடுமையின் உச்சகட்டமாக Prisoner 650 என்ற அப்பெண், பெண்களுக்கான கழிப்பறைகளைப் பயன்படுத்த மறுக்கப்பட்டார் என்றும் ஆண் கைதிகளின் முன்னிலையில் தன் இயற்கை உபாதைகளை நிறைவேற்றப் பலவந்தப்படுத்தப்பட்டார் என்றும் அதனால் ஆண் கைதிகள் அவரை பெண்கள் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரி உண்ணாவிரதம் இருந்ததாகவும் தகவல்கள் கசிந்தன.
ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ரம் சிறைச்சாலையில் ஒரு பெண் கடந்த நான்கு ஆண்டுகளாக விவரிக்க இயலாத அளவுக்கு துன்புறுத்தப்பட்டு வருவதாக குரல் எழுப்பியவர், ஜூலை 6, 2008இல் பிரபல பிரிட்டிஷ் பத்திரிக்கையாளராகவிருந்த இவோன் ரிட்லி. செய்திச் சேகரிப்பிற்க்காக சிறைச்சாலை சென்றிருந்த அவர் அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கும் வன்கொடுமைகளைக் கண்டு பதறிப் போனார். நொடி கூட தாமதிக்காமல் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பினை ஏற்பாடு செய்து இச்செய்தியை வெளி உலகிற்குக் கொண்டுவந்தார்.
அப்பெண்ணை நான் சாம்பல் நிறப் பெண்மணி என்றுதான் சொல்வேன். ஏனெனில் அப்பெண் பார்ப்பதற்கு ஒரு பிசாசு போன்றிருந்தாள். ஈனஸ்வரத்தில் புலம்புவதையும் அழுவதையும் அலறுவதையும் சிறைச்சாலையில் உள்ளவர்கள் எப்போதும் கேட்பார்களாம் என்று மனம் வெதும்பினார் இவோன் ரிட்லி. அப்பெண் யார் என்று தெரியாத நிலையில் மனிதாபிமான அடிப்படையில் அவரை மீட்டெடுப்பதற்க்காக பாகிஸ்தான் விரைந்தார்.
இதேவேளை, முஆசம் பெக் என்ற முந்தைய குவாண்டனாமோ சிறைவாசி தன் சிறை அனுபவங்களை நூலாக எழுதியிருந்தார். தான் இஸ்லாமாபாத்தில் வைத்து பெப்ரவரி 2003ல் கைது செய்யப்பட்டு பக்ரம் சிறையில் ஒரு வருடம் அடைக்கப்பட்டதாகவும் அதன் பின் குவாண்டனாமோ சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறியிருந்தார். தனது அறைக்குப் பக்கத்து அறையில் ஒரு பெண், பல ஆண் காவலர்களால் கொடுமைப்படுத்தப்படும் ஒவ்வொரு வேளையிலும் தனது நெஞ்சு விம்மி வெடித்து விடுவதை உணர்ந்ததாக தனது நூலில் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ‘ஜஸ்டிஸ் கட்சி’யின் தலைவரான இம்ரான் கான், கொடுமைகளைச் சந்திக்கும் அப்பெண் டாக்டர் ஆபியாதான் என்று தனது ஐயத்தினை வெளிப்படுத்தினார்.
2008 ஆகஸ்ட் 4ஆம் தேதி அமெரிக்க அரசு ஆபியா சித்தீகி ஆப்கானில் வைத்து கைது செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஜூலை 17ஆம் தேதி பாரியளவிலான தாக்குதலுக்கான வரைபடங்களுடன் குண்டு தயாரிப்பிற்கான குறிப்புக்களுடனும் அவரையும் அவரது மூத்த மகனையும் கைதுசெய்ததாக அறிவித்த அமெரிக்கா, 18ஆம் தேதி ஆபியா அமெரிக்க அதிகாரி ஒருவரை அவரது துப்பாக்கியைப் பறித்து சுட்டுக்கொலை செய்ய முயற்சித்ததாகவும் குற்றம் சுமத்தியது. அத்தோடு ஆபியா கடந்த 5 வருடங்களாக எங்கிருந்தார் என்பது தனக்கு தெரியாது என்று முழுமையாக மறைத்தது அமெரிக்க அரசு.
ஆகஸ்ட் 4ஆம் தேதி ஆபியா அமெரிக்காவின் நியூயார்க் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அவரது தோற்றம் முழுமையாக மாறியிருந்தது. சக்கர நாற்காலியொன்றில் ஆபியா கொண்டுவரப்பட்ட காட்சி அங்கிருந்த சகலரையும் கண்ணீர் மல்கச்செய்தது. சிறைச்சாலை சீருடை, குவாண்டனாமோவில் அணிவிப்பது போன்ற கையில்லாத மேலங்கியுடன் வந்தவர், அதற்கு மேலால் பக்கத்திலிருந்த ஒருவரிடம் ஒரு துணியை வாங்கி தலையையும் எலும்பில் சதை போர்த்தியது போன்ற கரங்களையையும் மறைத்துக் கொண்ட ஆபியாவின் இஸ்லாமிய உணர்வு கண்டு பார்வையாளர்கள் அதிர்ந்துபோயினர்.
டாக்டர் ஆபியா சிறையிலிருந்தபோது, அவரது ஒரு சிறுநீரகம் அகற்றப்பட்டுள்ளதோடு அவரது மனநிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என அவரது வழக்குரைஞர்கள் சொல்கிறார்கள். அவரது உடம்பிலிருந்த துப்பாக்கிச்சூட்டுக் காயத்தில் இரத்தம் உறைந்து சரியாகக் கவனிக்கப்படாமல் இருந்ததோடு பற்களும் உடைந்திருந்தன. மூக்கு உடைக்கப்பட்டு உதடு கிழிந்துள்ள ஆபியாவின் உடல் நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கவை தளமாக கொண்டு இயங்கும் சர்வதேச மனித உரிமைகளுக்கான அமைப்பான அமஷ்டி இன்டர்நேஷனல் இவரின் விடையம் சமந்தமாக எந்த ஒன்றையும் செய்ய முனையவில்லை என்பது அதிர்ச்சியான தகவல்
Monday, September 27, 2010
Wednesday, September 22, 2010
பாபரி மஸ்ஜித் அடிப்படையான உண்மைகள்
பாபரி மஸ்ஜித் அடிப்படையான உண்மைகள்
இந்தியாவின் உத்தரபிரதேசம் மாநிலத்திலுள்ள அயோத்தி நகரில் அமைந்திருந்த நூற்றாண்டு கால பழமைவாய்ந்த பாபரி மஸ்ஜித் 1992ஆம் ஆண்டு ஹிந்து பயங்கரவாத அமைப்புகளால் முற்றிலுமாகத் தகர்க்கப்பட்டது. சுமார் 450 ஆண்டுகால பழமைவாய்ந்த மஸ்ஜித் இருக்கும் இடம் இந்துக் கடவுளான ராமர் பிறந்த இடம் என்றும், எனவே அவ்விடம் தங்களுக்கே சொந்தம் என்றும் கூறி, கடந்த நாற்பதாண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் 24.09.2010 அன்று தீர்ப்பளிக்கப்படவுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பு முஸ்லிம்களுக்கு சாதகமாக அமைந்தாலும் நடைமுறையில் உண்மையான நீதி கிடைக்குமா என்பது இந்திய அரசின் முன்னைய நடவடிக்கைகளை வைத்து பார்க்கும் போது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இந்த நிலையில் இந்திய தளங்களில் -ஏ1ரியலிஸம்.காம் -முன்பு வெளியான கட்டுரைகளின் முக்கிய பகுதிகள் இங்கு தொகுப்பாக தரப்படுகின்றது விரிவாக பார்க்க
டிசம்பர் 06 1992 ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட நாள்
டிசம்பர் 06 1992 ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் தகர்க்க பட்டது முழு உலக முஸ்லிம்களும் அதிர்ந்து போன நாள் அன்று முஸ்லிம் தலைவர்களாக தம்மை அடையாள படுத்திக் கொண்டவர்கள் அவமானத்தையும் கையாலாகாத தனத்தையும் ஏற்றுக்கொண்ட நாள் ஹிந்து பாஸிஸச் சக்திகளால் இந்திய முஸ்லிம்கள் வகை தொகையின்றி கொலை செய்யப்பட்ட நாள்
பள்ளிவாசல் இடிக்கப்பட்டவுடன் தங்கள் அதிருப்தியை வெளியே காட்டிட வந்த அத்தனை முஸ்லிம்களும் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்கள். ஒரு பெரும் பகுதியினர் நரசிம்மராவ் அரசின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியானார்கள். எஞ்சியோர் தடா என்ற காட்டுமிராண்டிச் சட்டத்தின் வாயில் சிக்கிச் சிறைச்hலைகளில் தங்கள் வாழ்நாள்களைத் கழித்திட வேண்டியவர்களானார்கள்.
கி.பி. 1528 ல் பாபரி மஸ்ஜித் கட்டப்பட்ட வரலாறு
இப்பள்ளிவால் உண்மையில் மிர்பக்கி என்பவரால் கட்டப்பட்டது. இந்த மிர்பக்கி பேரரசர் பாபர் அவர்களின் கீழ் பணிபுரிந்த ஓர் படைத்தலைவர். இவரது சொந்த ஊர் தாஷ்கண்ட். இப்பள்ளிவாசல் அந்தப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் தங்கள் தொழுகையை நிறைவேற்றிடும் முகத்தான் நிறுவப்பட்டது.
ஆட்சியாளர் ஜஹாங்கீர் அவர்கள் காலம் முதற்கொண்டு தான் இந்தப் மஸ்ஜித் பாபரி மஸ்ஜித் என்றழைக்கப்பட்டது. மஸ்ஜித் கட்டி முடிக்கப்பட்ட அந்த நாள் முதல் முஸ்லிம்கள் தொழுகைகளைக் கூட்டாக இந்தப் மஸ்ஜித்தில் நிறைவேற்றி வந்தார்கள்.
1950 ம் ஆண்டு பைஸாபாத் சிவில் நீதிமன்றம் ஓர் தடை உத்தரவைப் போட்டு முஸ்லிம்கள் மஸ்ஜித்திலுள் நுழைவதைத் தடுத்தது.அன்று வரை முஸ்லிம்கள் தங்கள் தொழுகையை அந்தப் மஸ்ஜித்தில் நிறைவேற்றியே வந்தார்கள்.
1855 ஹனுமன் கார்ஹி வழக்கு
19ம் நூற்றாண்டின் நடுவில் அதாவது 1855 ஆம் ஆண்டில் ஹனுமான்கார்ஹி என்பது குறித்து வழக்கொன்று எழுந்தது. இந்த வழக்கு முஸ்லிம்களுக்கும் நாகா சாதுக்களுக்குமிடையில் எழுந்தது. அப்போது அப்பகுதி நவாப் வாஜித் அலீ ஷா என்பாரின் ஆட்சியின் கீழிருந்தது.
இந்த ஹனுமான்கார்ஹி அயோத்தியில் இருக்கின்றது. இந்த ஹனுமான்கார்ஹியில் மஸ்ஜித் ஒன்று இருந்தது எனவும் அது இடிக்கப்பட்டு கோயில் கட்டப்பட்டுள்ளது என்றும் முஸ்லிம்கள் கூறினார்கள்.
இது குறித்து எழுந்த கலவரங்களில் 200 இறந்துள்ளனர். பல முஸ்லிம்கள் உயிரைத் தந்தும் மஸ்ஜித் இடத்தை மீட்க இயலவில்லை.
முஸ்லிம்கள் ஹனுமன் கார்ஹியிலிருந்த மஸ்ஜித்தை மீட்கக முயற்சி செய்தார்கள் என்பதற்காக இந்துக்கள் எதிர் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டார்கள். பாபரி மஸ்ஜித் முன்பு ராம் சாபுத்ரா ஒன்றிருந்தது என்பதே அந்த எதிர் நடவடிக்கை.
முஸ்லிம்கள் தங்கள் மஸ்ஜித்தை மீட்க நடவடிக்கை எடுக்கின்றார்ள் என்று கோபங் கொண்டெழுந்த அந்தப் பகுதிய பூர்வீக இந்துக்கள் கூட ஜென்மஸ்தான் என்றொரு முழக்கத்தை முன் வைக்கவில்லை.
அவர்கள் ஒரு எதிர் நடவடிக்கையாகத் தான் மஸ்ஜித் முன்பாக ஒரு இடத்தை இட்டுக் கட்டிப் பேசினார்கள். ஆகவே பாபரி மஸ்ஜித்தை இராமர் பிறந்த இடம் என்பது ஆதாரமற்ற அரசியல் பிழைப்புக் கோஷம் என்பதே உண்மை. (ஆதாரம் : பேராசிரியர் க. சம்பக லஷ்மி. வரலாறு மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர் மற்றும் டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் தலைவர்)
1857 நாம் சாபுத்ரா
பாபரி மஸ்ஜித் முன்பாக சற்றுத் தொலைவில் மேடு போன்றிருக்கும் இடம் ராம் சாபுத்ரா என்றும் அதுவே ராம் ஜென்ஸ்தான் என்று சாமியார் ஒருவர் திருவாய் மலர்ந்தார். அத்தோடு அங்கு பூஜா புனஸ்காரங்கள் செய்யும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றார்.
1857 ல் பாபரி மஸ்ஜித் முன்பாக சற்று தொலைவில் மேடு போன்றிருந்த இடம் ராம் சாபுத்ரா என்ற யெரில் உயர்த்தப்பட்டு இந்துக்கள் பூஜா புனஸ்காரங்களைச் செய்து வந்தார்கள். ஒரே வளாகத்திற்குள் முஸ்லிம்கள் மஸ்ஜித் தங்கள் தொழுகையை நிறைவேற்றினார்கள். இந்துகள் தங்கள் பூஜா புனஸ்காரங்களை நிறைவேற்றினார்கள்.
இரு வகுப்பரிடையேயும் பிரச்னைகள் எழுந்து விடக் கூடாது என்பதற்காக ஆங்கிலேயர்கள் இரண்டு வணக்க இடங்களை வேறுபடுத்திடும் அளவில் ஓர் சுவரை எழுப்பிட விரும்பினார்கள். அதன்படி 1859 ல் இந்தப் சுவர் எழுப்பப்பட்டும் விட்டது.
1883 ம் ஆண்டு மே மாதம் ராம் சாபுத்ராவில் இராமர் கோயில் கட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. பின்னர் பைஸாபாத் துணை ஆணையாளரிடம் இந்த இராமர் கோயில் கட்ட அனுமதி கேட்டு விண்ணப்பம் தரப்பட்டது.
இந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
பட்டவர்த்தனமான வகுப்ப வெறியேயன்றி வேறு எண்ணங்கள் இதற்குப் பின்னால் இல்லை. இதனால் அனுமதி வழங்கப்படவியலாது எனக் கூறி விட்டார் பைஸாபாத் துணை ஆணையாளர்.
1885 ராம் சாபுத்ராவில் கோயில் கட்ட வழக்கு
ஜனவரி 15 1885 ல் ஜென்ஸ்தான் காப்பாளராகக் காட்டிக் கொண்ட ரகுபீர்தாஸ் பைஸாபாத் கீழ் நீதிமன்றத்தில் ராம் சாபுத்ராவில் இராமர் கோயில் கட்ட அனுமதி கேட்டு வழக்குத் தொடர்ந்தார்.
மஸ்ஜித்க்கு முன்னால் கோவில் கட்டுவது இரண்டு வகுப்பாருக்குமிடையே கொந்தளிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. மாவட்ட நீதிபதி முன்பு தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் எதிலும் பாபரி மஸ்ஜித் சர்ச்சையாக்கப்படவில்லை என்பது தெளிவு.
1934 ல் நடந்த வகுப்புக் கலவரங்கள் அயோத்தியைத் தாக்கியது. சில தீவிரவாதிகள் முஸ்லிம்களைத் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்த முஸ்லிம்களையும் தாக்கி துதை தாக்கினார்கள். எனினும் முஸ்லிம்கள் தொடர்ந்து தொழுகைகளை நிறைவேற்றி வந்தார்கள்.
இராமர் சிலைகள்
1949 டிசம்பர் 23 ல் இராமர் லாலா சிலைகள் மூட நம்பிக்கையின் அடிப்படைமஸ்ஜிதுக்குள் வைக்கப்பட்டன. இது சட்ட விரோதமான செயல் என அப்போதே அறிவிக்கப்பட்டது. இந்தக் கிரிமினல் குற்றம் சம்பந்தமாக ஒரு முதல் குற்றப்பத்தரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
22.12.1949 அன்று சுதந்திர இந்தியாவில் ஒரு மஸ்ஜித் கோயிலாக மாற்றப்பட்டு விட்டது.
கே.கே.நய்யார்
பாபரி மஸ்ஜித்தில் சிலை வைக்கப்பட்டது குறித்து தொடரப்பட்ட வழக்கு கே.கே. நய்யார் என்பார் நீதிபதியாக இருந்த நீதிமன்றத்தில் தான் நடந்தது. இவர் பிற்றை நாட்களில் ஜனசங்க அதாவது முன்னாள் பிஜேபி யின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மட்டுமல்ல அவருடைய மனைவி சகுந்தலா அம்மையாரும் அதே ஜனசங்க நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆக முஸ்லிம்கள் ஒரு பிஜேபி குடும்பத்திடம் தான் பாபரி மஸ்ஜிதில் சிலை வைக்ப்பட்டது சம்பந்தமாக நியாயம் கேட்டிருக்கின்றார்கள்.
இந்த கே.கே.நய்யார் பைஸாபாத்திலும் உத்திரப் பிரதேசத்திலும் அரசு பொறுப்புகளிலும் பல ஆண்டுக்ள இருந்தார். முஸ்லிம்கள் – இந்துக்கள் இடையே ஏற்பட்ட பல பிரச்னைகளில் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன்களின் தலைவராக இருந்தார். கிஞ்சிற்றும் கவலைப்படாத ஓர் இந்து தீவிரவாதி என்பதை யாரும் அறிந்திடவில்லை.
மஸ்ஜித்தில் சிலைகள் வைக்கப்பட்டவுடன் அவற்றை அகற்றி விட்டு தொழுகையை நிறைவேற்றிக் கொண்டே இருந்திருக்க வேண்டும் முஸ்லிம்கள். பாவம்.. அவர்கள் இந்த நாட்டு நீதிமன்றமும் நீதிபதிகளும் நியாயம் வழங்குவார்கள் என எதிர்பார்த்திருக்கின்றார்கள்.
சிலைகள் வைக்கப்பட்டவுடன் வழங்கப்பட்ட (அ)நீதி
சிலைகள் வைக்கப்பட்டவுடன் மாவட்ட நீதிபதி சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்திய தண்டனைச் சட்டம ;பிரிவு 145 ன் கீழ் மஸ்ஜித்தை கைப்பற்றினார். மஸ்ஜித் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு நீதிபதியைக் கொண்டு நிர்வாகம் என்ற பெயரில் மஸ்ஜித்க்குள்ளிலிருந்த சிலைகளுக்குப் பூஜை புனஸ்காரங்களை அனுமதித்தார்.
நீதிபதி கே.கே.நய்யாரின் ராஜ துரோகச் செயல்
பாபரி மஸ்ஜிதில் சிலை வைக்கப்பட்டு விட்டது. அவற்றை அப்புறப்படுத்திட வேண்டும் என்ற வழக்கு தன் முன்னால் வந்த போது அதனை சட்டை செய்யாமலிருந்தார் இவர். மாவட்ட நீதிபதி என்ற அளவில் அவர் செய்ததெல்லாம் பள்ளிவாசலுக்குள் பூஐஜகள் நடத்த ஆவன செய்தது தான். தொழுகைகள் முறையாக நடைபெற்று வந்த பள்ளிவாசல் சிலைகளின் இருப்பிடமாக ஆக்கப்பட்டு விட்டது என்பதை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களுக்குத் தெரிவித்தார்கள் முஸ்லிம்கள்.
………
ஜவஹர்லால் நேரு அவர்கள் 23.12.1949 அன்று உத்திரப்பிரதேச முதலமைச்சர் ஜி.பி.பந்த் அவர்களுக்கு ஒரு தந்தியை அனுப்பினார். அந்தத் தந்தியில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார் :
‘னுயபெநசழரள நுஒயஅpடந ளை டிநiபெ ளநவ வாநசநஇ றாiஉh றடைட hயஎந டியன உழளெநஙரநnஉநள’. (மிகவும் ஆபத்தான முன்மாதிரி ஒன்று அங்கே ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்).
பாபரி பள்ளிவாசல் விவகாரத்தில் அக்கறை காட்டிக் கொண்டதாகக் கண்ணீர் வடித்தவர்கள் யாரும் அங்கிருந்து சிலைகளை அகற்றிடுவதில் ஆர்வம் காட்டவில்லை என்பதை முஸ்லிம்கள் கவனிக்க வேண்டும்.
பிரதமர் நேருவின் தந்தி கிடைத்ததும் உத்திரப்பிரதேச முதல் ஜி.கே.பந்த் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார்.
அவர் பைஸாபாத் நீதிபதி கே.கே. நய்யார் அவர்களிடம இரண்டு கேள்விகளை வைத்து விளக்கம் கேட்டார்:
அந்தக் கேள்விகள் : 1. சிலைகளை பள்ளிவாசலுக்குள் வைத்து விடாமல் தடுத்திட ஏன் முன் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை? 2. சிலைகளை ஏன் இன்னும் அகற்றிடவில்லை?
இந்த வினாக்களுக்கு விளக்கம் கேட்ட கடிதத்தில் அப்போதைய உத்திரப்பிரதேச அரசின் முதன்மை செயலர் பகவான் ஷாகே அவர்கள் கையெழுத்திட்டிருந்தார். இந்தக் கடிதம் டிசம்பர் 27 1949 அன்று அனுப்பப்பட்டது.
இதற்கு விளக்கம் தந்த கே.கே.நய்யார் முஸ்லிம்களிடம் பேசி அந்த மஸ்ஜித்தை இந்துக்களுக்கு விட்டுக் கொடுத்திட செய்திடலாம் என்று கூறி விட்டார்.
அத்துடன் முஸ்லிமக்கள் போல் தோற்றந்தந்த சிலரைத் தனது லட்சியம் நிறைவேறத் தயாரித்தார். அவர்களில் 15 பேரை ஒன்று திரட்டி ஒரு குழவை அமைத்தார். அந்தக் குழவின் கையில் ஓர் விண்ணப்பத்தை வடிவமைத்துத் தந்தார். அந்த விண்ணப்பத்தில் அந்த மஸ்ஜித்துகுள் சிலைகள் வைக்கப்பட்டு விட்டதால் மஸ்ஜித் செயல்படவில்லை. அது கோயிலாகவே செயல்படுவதால் அதை இந்துக்களுக்கே தந்து விடலாம் என முஸ்லிம்களே முறையிடுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
(ஆதாரம் : அயோத்தியா முழு உண்மைகள் பக்கம். 3 வெளியீடு : Dangerous Example is being set there, which will have bad consequences? 500 044).
மஸ்ஜித்தை இந்து அராஜகவாதிகளிடமிருந்து மீட்டே தீர வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்ட முஸ்லிம்கள் கவர்னர் ஜெனரல் இராஜகோபால் ஆச்சாரியார் அவர்களுக்குத் தகவல்கள் தந்தார்கள்.
இராஜகோபால் ஆச்சாரியார் அவர்கள் பிரதமர் நேரு அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் மஸ்ஜித்தை சுற்றி நடப்பவை தனக்கு அதிர்ச்சியைத் தருகின்றன. முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து நான் கலங்கிப் போயிருப்பதாகவும் குறிப்பிட்டார். கவர்னர் ஜெனரல் கடிதத்திற்கு நேரு அவர்கள் உடனேயே பதில் எழுதினார்.
அந்தப் பதில் இது தான் : United Academics International, Vidyanagar, Hyderabad ? 500 044 (உத்திரப்பிரதேசத்தின் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கும் எண்ணத்திலிருக்கின்றார்.
5.12.1950 அன்று ஜவஹர்லால் நேரு அவர்கள் தான் அயோத்தியாவுக்கு வர விரும்புவதாக கடிதம் எழுதினார். அவரை வரவிடாமற் தடுத்து விட்டார் உ.பி. முதல்வர் ஜி.பி.பந்த்.
முஸ்லிம்களுக்கு நீதி வழங்குவதற்குப் பதில் 1950 ல் நீதிமன்றம் இன்னொரு தீர்ப்பை வழங்கிற்று. அது வேறொன்றுமில்லை. இந்துக்கள் பூஐஜ நடத்தவார்களாம். முஸ்லிம்கள் அதில் எந்த இடையூறுகளையும் செய்து விடக் கூடாதாம்.
உத்திரப்பிரதேச முதல்வர் ஜி.பி. பந்த் அவர்களும் ஓர் இந்து மதவெறியர் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள நீண்ட காலமாகி விட்டது.
1959 ல் அரசு பொறுப்பாளரை அகற்றி விட்டு பள்ளிவாசலை இந்துக்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்றொரு வழக்கு தொடரப்பட்டது. 1961 ல் சுன்னி வக்ப் போர்டு மஸ்ஜித்தையும ;அதைச் சுற்றியுள்ள முஸ்லிம்களின் அடக்கத்தளத்தையும் முஸ்லிம்களிடம் ஒப்படைத்திட வேன்டும் என்று கோரி வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கில் இன்று வரை தீர்ப்பு வழங்கப்படவில்லை. பாபரி மஸ்ஜித்தைக் கோயிலா மாற்றிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்குகளில் உடனுக்குடன் தீர்ப்புகள் வழங்கப்பட்டு விட்டன. ஆனால் முஸ்லிம்கள் தமது நியாயமான உரிமைகளுக்ககாகத் தொடர்ந்த வழக்குகளில் இது வரை தீர்ப்புகள் வழங்க்பபட்வில்லை.
இன்னும் முஸ்லிம்கள் இந்த நீதி மன்றங்களை நம்புகின்றார்கள். இதே போல் தான் 1986 ல் மஸ்ஜித் கதவுகளைத் திறந்து பொதுமக்களின் பூஐஜக்காக அனுமதி வழங்கிட வேண்டும் என்ற தீர்ப்பும் வந்தது!
மஸ்ஜித்தை திறந்து பொதுமக்களின் பூஐஜயை அனுமதிக்க வேண்டும் என வழக்குத் தொடர்ந்தவர் உமேஷ் சந்திர பாண்டே என்பவர். இவர் பாபரி மஸ்ஜித் சம்பந்தமாகத் தொடரப்பட்ட எந்த வழக்கோடும் சம்பந்தப்படவில்லை.
இவர் 1986 ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் மஸ்ஜித்தை பொதுமக்கள் பூஐஜக்காகத் திறந்திட வேண்டும் என்றொரு வழக்கைப் பதிவு செய்கின்றார். மூன்றே நாட்களில் அதாவது பிப்ரவரி மாதம் 1 ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் பூட்டு திறக்கப்பட்டு விட்டது. பாபரி மஸ்ஜித் சம்பந்தப்பட்ட அடிப்படை வழக்குகள் பல உயர்நீதிமன்றத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது பல ஆண்டுகளாக!
அடிப்படை வழக்குகளை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி தீர்த்து வைக்காத வரை அது தொடர்பான எந்த வழக்குகளிலும் கீழ் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கிடக் கூடாது. இந்த நீதிமன்ற நெறிமுறைகளையெல்லாம் எடுத்தெறிந்து விட்டு பைஸாபாத் கீழ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகின்றது. அந்தத் தீர்ப்பு உடனேயே செயல்படுத்தவும்படுகின்றது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்தும் உடனேயே உயர் நீதிமன்றத்திற்குச் சென்றார்கள் முஸ்லிம்கள். உயர்நீதிமன்றம் பிப்ரவரி 3 ம் நாள் (1986) முஸ்லிம்களின் முதகில் குத்தி ஒரு தீர்ப்பை வழங்கியது.
அதாவது பாபரி மஸ்ஜித் இருக்கும் சொத்தின் அப்போதைய நிலை அப்படியே பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அந்தத் தீர்ப்பு!
இதன் பொருள் மஸ்ஜிதில் தொடர்ந்து பூஐஜ நடத்தலாம் என்பதே.
1985 முதல் அயோத்தியாவை யைமாகக் கொண்டு சுளுளுஇ ஏர்Pஇ டீதுP முதலிய கட்சிகள் ஒரு பெரும் இயக்கத்தைத் துவங்கின. 1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த கும்பமேளா திருவிழாவைப் பயன்படுத்தி கிராமம் கிராமமாக இந்த இயக்கத்தைக் கொண்டு சென்றார்கள். ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஸ்ரீராம் எனப் பொறிக்கப்பட்ட செங்கல்கள் அயோத்தியை நோக்கி அனுப்பப்பட்டன. 1989 ஆம் ஆண்டு இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. நவம்பர் மாதம் 9 ம் நாள் நடைபெற்ற இந்த கால்கோள் விழாவில் இராஜிவ் காந்தி அரசு முஸ்லிம்களின் முதகில் குத்தியது.
நீதிமன்றங்களால் தடை செய்யப்பட்ட ஒரு இடத்தில் கோயில் கட்ட அடித்தளம் அமைக்கப்பட்டது. பண்பாடு நாகரீகம் இவற்றின் அடிப்படையில் பார்த்தால் மிகவும் கீழ்த்தரமானதோர் செயல் இது. இந்தக் கீழ்த்தரமான செயலை இந்து வட்டாரங்களில் மிகப் பெரிய சாதனை எனப் பீற்றிக் கொண்டன சங்க் பரிவாரங்கள்.
நவம்பர் 1989 ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்ற இடம் சர்ச்சைக்குரிய இடம் என்றும் அதன் அந்தஸ்தில் எந்த மாற்றமும் கொண்டு வந்திடக் கூடாது அதில் ஒரு துரம்பைக் கூட மாற்றிடக் கூடாது என அறிவித்தது. எனினும் அந்த இடம் பாழ்படுத்தப்பட்டது.
இந்த நாட்டின் நீதிமன்றத்தை ஒட்டு மொத்தமாக அவமானப்படுத்தினார்கள் இந்து மத வெறியர்கள். வெறி கொண்ட இந்த நாட்டுத் துரொகத்திற்குப் பெயர் தாய் நாட்டின் மீதுள்ள மாளாத பற்று.
1989 ஆண்டுத் தேர்தல்கள்.
1989 ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் பாஜக நாடாளுமன்றத்தில் 80 இடங்களைப் பிடித்தது. அதற்கு முந்தைய நாடாளுமன்றத்தில் அது பெற்றிருந்தது வெறும் 2 இடங்களே!
அப்போதைய அரசியல் கதாநாயகனாகவும் சமூக நீதியின் காவலனாகவும் காட்டப்பட்ட வி.பி.சிங் போஃபர்ஸ் ஊழலில் காங்கிரஸ் சிக்கிக் கொண்டது. இவையெல்லாம் இந்தத் தேர்தலை நிர்ணயித்தன.
தேசிய முன்னணி என்ற பெயரில் பிஜேபி வி.பி.சிங்குடன் இணைந்து நின்றது. இவையெல்லாம் பிஜேபி இதில அதிகமான இடங்களைப் பிடித்திட வகை செய்தன. ஆனால் பாஜக வினர் இது கோயிலுக்காகக் கிடைத்த ஓட்டு என்று பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள்.
பிஜேபி கூட்டுடன் பணியாற்றிய தேசிய முன்னணி பல பிரச்னைகளை பிஜேபி பினராலேயே சந்திக்க வேண்டியதாயிற்று. பாபரி மஸ்ஜி பிரச்னையை பிஜேபி பெரிதாக்கவே வி.பி.சிங் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை உடனேயே செயல்படுத்துவதாக அறிவித்தார். இந்நிலையில் பிஜேபி ன் உயர் சாதி வெறி வெளிப்பட்டது.
1990 ல் விஷ்வ இந்து பரிஷத் பாபரி மஸ்ஜித் இருக்குமிடத்தில் கோயில் கட்டும் பணி ஜனவரி 2 ம் தேதி ஆரம்பமாகும் என அறிவித்தது. வி.பி.சிங் அவர்களின் வேண்டுகோளின் கீழ் இது நான்கு மாதம் தள்ளிப் போடப்பட்டது. 1990 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அத்வானி மண்டல் கமிஷன் பரிந்துரை மூலம் கிடைக்கவிருக்கின்ற சமூக நீதியிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பிடவும் இராமர் கோயில் மீது மக்களின் கவனத்தைக் கொண்டு வந்திடவும் ரத யாத்திரையை மேற்கொண்டார். இந்த ரத யாத்திரையின் பெயரால் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களினால் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் உயிர் துறந்தார்கள். ரத யாத்திரை நாடு முழவதும் ஏற்படுத்திய கொந்தளிப்புகளின் அடிப்படையில் அதைத் தடை செய்திட வேண்டும் என விண்ணபித்தனர் மக்கள்.
ரத யாத்திரையைத் தடை செய்தால் வி.பி.சிங் அவர்களின் அரசுக்கு அளித்து வரும் ஆதரவைப் பின் வாங்குவோம் என அறிவித்தார்கள் பிஜேபி யினர். அப்போது உத்திரப்பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் அவர்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள். பீகார் மாநிலத்தில் லல்லு பிரசாத் யாதவ் அவர்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள். அத்வானியும் அவருடைய பரிவாரங்களும் உத்திர பிரதேசத்திற்குள் புகுந்து கலவரங்களை உருவாக்குவதற்கு முன்னால் ரத யாத்திரையைத் தடுத்திட வேண்டும் என முடிவு செய்து ரத யாத்திரை பீகாரில் சமஸ்திப்பூர் வந்த போது 23.10.1990 அன்று அத்வானி கைது செய்யப்பட்டு அரசு விருந்தினர் மாளிகையின் காவலில் வைக்கப்பட்டார். அத்வானியைக் கைது செய்ததும் ஒரு பெரும் கூட்டம் அயோத்தியை நோக்கிப் பாய்ந்தது. முலாயம் சிங் யாதவ் அவர்களின் தலைமையிலான உத்திரப்பிரதேச அரசு உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டது.
இதே அக்டோபர் மாதம் 30 ம் நாள் (1990) நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் முலாயம் சிங் யாதவ் கண்டிப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதனால் மஸ்ஜித் இடிக்கப்படாமல் தடுக்கப்பட்டது. ஆனாலும் மஸ்ஜித் வெளிச்சுவர்கள் சேதப்படுத்தப்பட்டன. சிலர் மஸ்ஜித் மேல் காவிக் கொடியையும் ஏற்றினார்கள். இப்படிப் மஸ்ஜித் தகர்ப்பதைத் தடுத்து விட்டது. மண்டல் கமிஷன் பரிந்துரையைச் செயல்படுத்த முனைந்து சமூக நீதி வழங்கிட முனைந்தது – இவற்றை மனதிற் கொண்டு பிஜேபி யினர் விபிசிங் அரசுக்கு தந்த ஆதரவைப் பின் வாங்கினர்.
வி.பி. சிங் பதவி இழந்தார். பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் சுமூகமான முடிவு காண்போம் எனத் தொடர்ந்து வந்த காங்கிரஸ் சூளுரைத்தது. பாபரி மஸ்ஜித் பள்ளிவாசல் தான் என்பதற்கான ஆதாரங்களை முஸ்லிம்கள் தந்திட வேண்டும். அது கோயில் தான் என்பதை நிரூபித்திட ஆதாரங்கள் இருந்தால் இந்துக்கள் தந்திட வேண்டும் என்றொரு அறிவிப்பு இரு தரப்பாரையும் நோக்கி வைக்கப்பட்டது.
பாபரி மஸ்ஜித் நடவடிக்கைக் குழு என்ற முஸ்லிம்களின் அணி ஆதாரங்களோடு வந்தது. இந்துத் தீவிரவாதிகளோ இது மத நம்பிக்கை. இதற்கு ஆதாரங்கள் என எதுவும் தரத் தேவை இல்லை என்று அறிவித்தார்கள். அத்தோடு மதுரா வாரணாசி ஆகிய இடங்களிலிருக்கும் மஸ்ஜித்களையும் இந்துக்களிடம் ஒப்படைத்திட வேண்டும்எனவும் இந்துத் தீவிரவாதிகள் அறிக்கை விட்டார்கள். இதிலிருந்து இந்துத் தீவிரவாதிகளிடம் ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றும் ஆதாரங்களால் சாதிக்க இயலாதவற்றை அடாவடித்தனங்களால் சாதிக்க முனைகின்றார்கள் என்பதும் தெளிவானது
1991 தேர்தல்களும் பமஸ்ஜித் இடிப்புகளும்
வி.பி.சிங் அவர்களின் அரசு வீழ்ந்தவுடன் சந்திரசேகர் தனது அரசை அமைத்தார். சந்திரசேகரை அரசு அமைக்க பணித்தது காங்கிரஸ் தான். பின்னர் இதே காங்கிரஸ் சந்திரசேகர் அவர்களைப் பதவியிலிருந்து வீழ்த்திற்று. 1991 ம் ஆண்டு ஜுன் மாதம் பொதுத் தேர்தல்கள் நடந்தன. பாரதீய ஜனதா கட்சி இதில் தன்னுடைய எண்ணிக்கையைச் சற்று அதிகப்படுத்திக் கொண்டது. அதாவது 80 அங்கத்தினர்கலிருந்து 117 அங்கத்தினரானார்கள். நாடாளுமன்றத்தில் இடம் பெற்றார்கள்.
பதவி ஏற்ற மறு நாள் பாரதீய ஜனதா கட்சியின் முதல்வர் கல்யாண் சிங் தன்னுடைய அமைச்சரபை; பரிவாரத்துடன் அயோத்தியா சென்று பாபரி மஸ்ஜித்துக்குள் நுழைந்தார். அங்கே ஓர் உறுதி மொழியையும் எடுத்தார். அதில இதில் (மஸ்ஜித்துக்குள்) நிச்சயமாக ஓர் கோயில் கட்டப்படும் என சூளுரைத்தார்.
வழிபாட்டுத் தலங்களின் சட்டம்
1991 ல் நரசிம்ம ராவ் அரசு ஓர் சிறப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது. 1991. இந்தச் சட்டம் செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் எந்தப் பள்ளிவாசலும் ஆலயமாகவோ கோயிலாகவோ மாற்றப்படலாகாது என்றும் எந்தக் கோயிலும் ஆலயமாகவோ பள்ளிவாசலாகவோ மாற்றப்பட முடியாது என்று பறை சாற்றியது
இந்தச் சட்டம் 15.08.1947 அதாவது இந்தியா விடுதலை அடைந்த நாள் முதற் கொண்டு வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்தனவோ அப்படியே பாதுகாக்கப்படும் என்றும் அறிவித்தது. அதே நேரத்தில் பாபரி மஸ்ஜித் இந்தச் சட்டம் கட்டுப்படுத்தாது என்றும் சொல்லிற்று. அதாவது பாபரி மஸ்ஜித்தை வேண்டுமானால் கோயிலாகக மாற்றிக் கொள்ளலாம் என்பதைச் சொல்லாமல் சொல்லிற்று. இந்தச் சட்டத்தை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் வரை தண்டனைகள் தரப்படுமாம். அதாவது 3 ஆண்டுகள் சிறையிலிருக்க சித்தமாக இருப்போர் தங்கள் விருப்பம் போல் செயல்படலாம். இந்தச் சட்டம் இன்னொரு ஏமாற்று மோசடி வேலை அவ்வளவு தான்.
இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததும் முஸ்லிம்களுக்கு ஒரு சிறு ஆறதல். வாரணாசியிலும் மதுராவிலும் இருக்கும் மஸ்ஜிதுகள் காப்பாற்றப்பட்டு விடும் என்பது தான் அந்த ஆறதல். மஸ்ஜிதுகள் சுற்றியுள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. 1991 ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிஜேபி ன் உத்திரப்பிரதேச அரசு பாபரி மஸ்ஜித்தை சுற்றியுள்ள 2774 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியது.
இதற்கு அது கூறிய காரணம் சுற்றுலாவை வளர்ப்பதும் அயோத்தியா வரும் யாத்திரீகர்களுக்கு வசதிகள் செய்து தருவதுமாகும். இந்தப் பிஜேபி அரசு பிறப்பித்த ஆணைகளின் அடிப்படையில் அக்டோபர் மாதம் 12 ம் நாள் 1991 முதல் பாபரி மஸ்ஜித்தை சுற்றியுள்ள 2774 ஏக்கர் நிலம் அரசுக்குச் சொந்தம்.
இதன் உள்நோக்கம் என்னவெனில் பாபரி மஸ்ஜித்தை இடித்து விட்டு இராமர் கோயில் கட்டுவதே! அக்டோபர் 17 1991 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஓர் ரிட்மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ரிட் மனு உத்திரப் பிரதேச அரசின் ஆணை அதாவது பாபரி மஸ்ஜித் உட்பட்ட இடத்தில் 2774 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்திய ஆணை செல்லாது என அறிவிக்கும்படி வேண்டியது.
இதன் அடிப்படையில் அலகாபாத உயர் நீதிமன்றம் 1991 அக்டோபர் 25 ம் நான் அந்த ஆணை செல்லாது என்று சொல்லாமல் கையகப்படுத்திய இடத்தில் நிரந்தரமான கட்டடங்கள் எதையும் கட்டிடக் கூடாது என்றும் இறுதித் தீர்ப்பு வரும் வரை அந்த இடத்தை யாருக்கும் சொந்தமாக்கிப் பெயர் மாற்றம் செய்திடக் கூடாது என்றும் அத்தோடு அந்த இடத்தில் நடக்கும் அத்தனைக் கட்டுமானப் பணிகளையும் உடனேயே நிறுத்தி விட வேண்டும் என்று ஆணையிட்டது.
ஆனால் கல்யாண் சிங் அரசு பாபரி மஸ்ஜித்தை சுற்றியுள்ள 2774 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியதும் விஹெச்பி தொண்டர்கள் அசோக் சிங்காலின் மேற்பார்வையின் கீழும் பஜ்ரங்தள் தொண்டர்கள் வினய் கட்டியார் தலைமையிலும் இந்த நிலப்பரப்பிலிருந்து சிறு சிறு கோயில்களை எல்லாம் இடித்தார்கள். இந்தச் சிறு கோயில்களை இவர்கள் இடித்தற்குக் காரணம் பெரிய இராமர் கோயிலைக் கட்டுவதேயாகும்.
இதே வேகத்திலும் வெறியிலும் அவர்கள் இராமர் கோயில் கட்டுவதற்கான பிரதான வாசலை எழுப்புதவற்கு அடிக்கல்லும் நாட்டி விட்டார்கள். இந்த அடிக்கல் நாட்டுப் பணி 22 அக்டோபர் 1991 ல் நடைபெற்றது. நரசிம்ம ராவ் அரசு இத்தனையையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு கைகட்டி வாய் பொத்தி நின்றது. இத்தனையையும் முடிந்த பின்னர் தான் நீதி மன்றம் தனது ஆணையை அக்டோபர் 25 ல் பிறப்பித்தது.
நீதிமன்ற ஆணைக்குப் பின்னரும் அங்கு கட்டுமாணப் பணிகள் தொடர்ந்தன. 1991 அக்டோபர் 30 ல் கொடியேற்றினார்கள். இந்நாளில் விஹெச்பி தொண்டர்கள் மஸ்ஜித் முன் கூடி 1990 ல் அங்கு வந்த கரசேவைக்காரர்களுக்குப் பாராட்டுக் கூட்டம் நடத்தினார்கள். இதில் இந்து வெறி தலைவர்கள் குழமி இருந்தோரைத் தூண்டி விடும் அளவில் வன்முறைப் பேச்சுக்களைக் கட்டவிழ்த்து விட்டனர்.
………..
ஆத்திரம் கொண்ட கூட்டத்தினர் பள்ளிவாசலின் மேல் ஏறி காவிக் கொடியைக் கட்டினர். கல்யாண்சிங் அரசு அவர்களுக்கு ஊக்கம் தந்தது. நரசிம்ம ராவ் அரசு அமைதி காத்தது.
1992 பிப்ரவரி
8 ம் நாள் உத்திரப்பிரதேச அரசு தான் கையகப்படுத்திய இடத்தைச் சுற்றித் தடுப்புச் சுவர் எழுப்பும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது.
1992 மார்ச்
கல்யாண்சிங்கின் பாஜக அரசு பாபரி மஸ்ஜித்தை சுற்றி இன்னும் 42 ஏக்கர் நிலத்தை இராமஜன்ம பூமி அறக்கட்டளைக்குக் குத்தகைக்கு விட்டது. இந்த இடம் இராமர் கதை சொல்லும் பூங்கா அமைத்திட பயன்படுத்தப்படும் எனவும் அறிவித்தது அரசு.
1992 மார்ச் 22
இதில் உற்சாகம் பெற்ற விஹெச்பி பஜ்ரங்தள் தொண்டர்கள் இன்னுமிருந்த சிறு சிறு கோயில்களை இடித்து இராமர் கதை சொல்லும் பூங்கா அமைத்திட வகை செய்தனர்.
இந்தச் சாக்கில் சுற்றி இருந்த வீடுகளையும் கடைகளையும் இடித்துத் தரைமட்டமாக்கினர். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. மத்திய அரசு மாநில அரசை மிரட்டி சில அறிக்கையை வெளியிட்ட வாளாவிருந்தது.
1992 ஏப்ரல்
7 ம் நாள் நாடாளுமன்றம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய ஒருமைப்பாட்டுக் குழவின் உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்ட 35 உறுப்பினர்கள் அயோத்தியாவில் பாபரி மஸ்ஜித் வளாகத்திற்குள் என்ன தான் நடந்து கொண்டிருக்கின்றது என்பதைப் பார்வையிடச் சென்றனர். இந்தப் பார்வைக் குழுவுக்கு ஜனதா தளத் தலைவர் எஸ்.ஆர். பொம்மை அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
இந்தக் குழு அயோத்தியாவிலும் பாபரி மஸ்ஜித் வளாகத்திற்குள்ளும் நீதி மன்ற ஆணைகளும் நீதிமன்ற நெறிகளும் தொடர்ந்து மீறப்பட்டிருக்கின்றன என்ற அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கரசேவை ஜுலை 1992
9 ம் நாள் 2.774 ஏக்கர் நிலத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் ஆணைகள் புறக்கணிக்கப்பட்டு கரசேவைகள் நடைபெற்றன. நீதிமன்ற ஆணைப் புறக்கணிப்புக்கு நடவடிக்கை ஏதமில்லை. 15 ம் நாள் விஹெச்பி க்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ஓர் ஆணையிட்டது. அந்த ஆணை பாபரி மஸ்ஜித் வளாகத்திற்குள் நடக்கும் அத்தனை கட்டுமானப் பணிகளையும் உடனேயே நிறுத்திட வேண்டும் என்பதே! நீதிமன்ற ஆணை புறக்கணிக்கப்பட்டது. நடவடிக்கை ஏதமில்லை. ஜுலை 22 1992 அன்று உச்ச நீதிமன்றம் ஓர் ஆணையைப் பிறப்பித்து கட்டுமானப் பணிகளை நிறுத்திட வேண்டும் எனப் பணித்தது. 23 ஜுலை 1992 ல் கல்யாண் சிங் உச்ச நீதிமன்றத்தில் இனி அதன் ஆணைகளை நிபந்தனைகளின்றி அடிபணிந்திட சித்தமாய் இருப்பதாக அறிவித்தார்.
பிரதமர் நரசிம்ம ராவ் அவர்கள் சாதுக்களுக்குத் தந்த உறுதிமொழி
ஜுலை 22 1992 அன்று நரசிம்ம ராவ் அவர்கள் சாதுக்களை – சாமியார்களை அழைத்துப் பேசினார். நீதிமன்ற ஆணைகளைச் செயல்படுத்த மனமில்லாத அவர் சாதுக்களை அழைத்துச் சமாதானம் பேசினார். அந்தச் சாதுக்களிடம் கரசேவையை நிறுத்திட வேண்டும் என்று முறையிட்டார். நான்கே மாதங்களில் தான் மொத்தப் பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டு பிடித்து விடுவேன் என்றும் வாக்களித்தார். கரசேவையை நிறுத்திட வேண்டும் என முறையிட்ட அவர் கரசேவை செய்பவர்களின் மீது எந்தப் பலப் பிரயோகமும் செய்யப்பட மாட்டாது என்றும் ஒரு தேவையற்ற யாரும் கேட்காத வாக்குறுதியைத் தந்தார்.
இந்தக் கடைசி வாக்குறதியின் பொருள் நீங்கள் கரசேவையைத் தொடர்ந்து நடத்தலாம் என்பதே! அத்தோடு சாதுக்கள் கரசேவையாளர்களை பக்கத்தில் கிருஷ்ணனுடைய கோயிலைக் கட்டுவதற்காக அனுப்பினார்கள்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் பொய் சொன்னாரா?
சாதுக்களை சந்தித்து ஒரு வாரத்திற்குப் பின் பிரதமர் நாடாளுமன்றத்தில் ஒரு தகவலைச் சொன்னார். தான் சாதுக்களைச் சந்தித்துப் பேசி விட்டதாகவும் பல்வேறு நீதிமன்றங்களிலும் கிடப்பிலிருக்கும் பாபரி பள்ளிவாசல் சம்பந்தப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றத்திடம் ஒப்படைக்கப் போவதாகவும் உச்சநீதிமன்றத்திடம் இந்த வழக்கில் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டிடப் போவதாகவும் அறிவித்தார்.
அத்தோடு பாபரி பள்ளிவாசலைக் கட்டுவதற்கு முன் அங்கிருந்த கோயில் ஏதேனும் இடிக்கப்பட்டதா? என்றொரு வினாவை உச்சநீதிமன்றத்திடம வைத்து விடை கேட்கப் போவதாகவும் அறிவித்தார்.
பாபரி பள்ளிவாசல் இருந்த இடத்தில் முன்னர் ஒரு கோயில் இருந்தது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் இந்து வகுப்புவாதிகள் சொல்வதைக் கேட்டாக வேண்டும். இந்த அறிவிப்பைச் செய்த மறுநாள் சாதுக்கள் மிரண்டார்கள். பிரதமரை மிரட்டினார்கள். பிரதமர் தங்களிடம் (சாதுக்களிடம்) பேசிடும் போது நீதிமன்ற விவகாரங்கள் எதையும் பேசவில்லை ஆகவே பிரதமர் பொய் சொல்லுகின்றார். எனவே நாங்கள் பிரதமரிடம் ஒப்புக் கொண்டவற்றிலிருந்து பின்வாங்குகின்றோம் என்றும் அறிவித்தனர்.
ஆனால் பாபரி பள்ளிவாசல் செயல்பாட்டுக் குழு (யுஐடீஆயுஊ : யுடட ஐனெயை டீயடிசi ஆயளதனை யுஉவழைn ஊழஅஅவைவநந) நீதிமன்றம் சொல்வதை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது.
ஆனால் இந்துத் தீவிரவாதிகள் மத நம்பிக்கை என்பது நீதிமன்ற முடிவுகளுக்கு அப்பாற்பட்டது. ஆகவே இந்த விவகாரத்;தில் நீதிமன்றம் சொல்வதை ஏற்றுக் கொள்வதற்கில்லை என்று அறிவித்தார்கள்.
1992 அக்டோபர் 3031 நாட்களில் .. ..
விஹெச்பி யின் சாதுக்களின் அவை டெல்லியில் கூடி பின்வருமாறு அறிவித்தது:
நீதிமன்ற ஆணைகளைப் பற்றிக் கவலைப் படாமல் டிசம்பர் 6 1992 முதல் கரசேவை துவங்கும். அது கர்ப்பக் கிரகத்திலிருந்து ? அதாவது பாபரி பள்ளிவாசலின் மத்திய (டூம்) பகுதியிலிரந்து ஆரம்பிக்கும். அந்தக் கரசேவை கோயில் கட்டி முடிக்கப்படும் வரை தொடரும்.. ..
1992 நவம்பர் உச்ச நீதிமன்ற உத்தரவு
இந்நாளில் உச்ச நீதிமன்றம் உத்திரப்பிரதேச அரசுக்கு 2.774 ஏக்கரில் எந்தக் கட்டுமானப்பணிகளும் நடக்கக் கூடாது என்றும் ஆணையிட்டது. அத்தோடு கட்டுமானப் பணிகளை அரசு எப்படித் தடுக்கப் போகின்றது என்பதை எழுத்து மூலம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திட வேண்டும் என்றம் கூறியது.
உச்சநீதிமன்றம் பிறப்பித்த இந்த ஆணையின் கீழ் உத்திரப்பிரதேச பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் ஓர் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில் டிசம்பர் 6 1992 அன்று நடக்கவிருக்கும் கரசேவை சமிக்ஞை அளவில் தான் நடைபெறும். அத்துடன் கீர்த்தனைகள் பாடப்படும் எனத் தெரிவித்தார். ஆனால் பிஜேபி தலைவர்களான எல்.கே.அத்வானி முரளி மனோகர் ஜோஸி அவர்களும் கரசேவைக்காரர்கள் பஜனைகளையும் கீர்த்தனைகளையும் பாட வரவில்ல. அவர்கள் முழு அளவில் கோயில் கட்டவே வருகின்றார்கள் என அறிவித்தார்கள்.
ஆனால் பள்ளிவாயிலை இடிப்பதற்குத் தேவையானவற்றையெல்லாம் சங்க் பரிவாரம் முழு அளவில் ஏற்பாடு செய்து கொண்டிருந்தது. இதனை அறிந்தும் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றது.
டிசம்பர் 6 1992 ஞாயிறு அன்று சுமார் 11 மணி அளவில் ஆரம்பித்து மாலை 6 மணி அளவில் பாபரி பள்ளிவாசல் முழமையாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
இதை பாஜக தலைவர்கள் நேரில் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். குடியரசுத் தலைவருக்கும் பிரதமர் அவர்களுக்கும் தவறாமல் செய்திகள் வந்து கொண்டிருந்தன. இடித்து முடித்த பின்னர் அந்த இடத்தில் ராமர் – சீதை (குழந்தைகள்) சிலையை வைத்தார்கள்.
1992 டிசம்பர் 8 ம் நாள் மத்திய அரசின் செலவின் கீழ் கரசேவைக்காரர்கள் இலவசமாக அவரவர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கரசேவைக்காரர்களை இலவசமாக இல்லாங்கொண்டு சேர்த்திட ரெயில்வே துறைக்கு மட்டுமே 300 கோடி செலவு என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்தது.
எதிரொலி
1992 டிசம்பர் 6 அன்று மாலை உத்திரப்பிரதேச முதல்வர் கல்யாண் சிங் முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார். எல்.கே.அத்வானி அன்று வரை தான் வகித்து வந்த நாடாளுமன்ற எதிர்க்கட்சிப் பதவியை இராஜினாமா செய்தார்.
உத்திரப்பிரதேச சட்டசபை கலைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கே அமல்படுத்தப்பட்டது. பாபரி பள்ளிவாசல் இடிக்கப்பட்ட இடத்தில் இராமர் கோயிலுக்கு பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டன. இதற்கிடையே அயோத்தியிலிருந்த முஸ்லிம்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
நாடு முழவதும் முஸ்லிம்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிக்காட்ட அறப் போராட்டங்களை நடத்தினர். பல்லாயிரம் முஸ்லிம்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாக்கப்பட்டனர். இன்னும் பல ஆயிரம் முஸ்லிம்கள் தடா வின் கீழ் கைது செய்யப்பட்டு நிரந்தரமாகச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். (நன்றி : விடியல் வெள்ளி டிசம்பர் 1998)
…………..
இது ஒரு வரலாற்று ஆவணம்
பாபர் மசூதி இடிப்பு விவகாரம் மற்றும் மார்ச் 15 ல் பூமி பூஜை தொடர்பாக நடந்த நிகழ்வுகள்
24 பிப்ரவரி 2002
காவிக் கொடிகளை ஏந்நியபடி குஜராத் மாநிலம் ஆமதாபாத் ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான கரசேவகர்கள் ராமர் கோயில் கட்டுவதற்காக கூடினர்.
அயோத்தி விவகாரத்தில் திமுக அதிமுக மௌனம் வேதனை அளிக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை
உபி – யில் எந்தக் கட்சி வென்றாலும் ராமர் கோயில் கட்டும் திட்டத்தில் மாற்றமில்லை. பஜ்ரங் தளம் அறிவிப்பு
2 மார்ச் 2002
குஜராத் கலவரம் ஆரம்பம். அயோத்தி சென்று விட்டு வந்த கரசேவகர்கள் ரயிலில் எரிப்பு
6 மார்ச் 2002
கரசேவகர்களின் கொலைத் தாக்குதலுக்குப் பயந்து அயோத்தி முஸ்லிம்கள் ஊரைக் காலி செய்து வெளிஊர்களுக்குச் செல்கின்றனர்.
அயோத்தி பிரச்னையில் காஞ்சி சங்கராச்சாரியார் தலையீடு. புதிய யோசனை.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் எவ்விதப் பணியையும் மேற்கொள்ள வேண்டாம் என்று ராம ஜன்ம பூமி அறக்கட்டளையையும் விஎச்பி இயக்கத்தையும் கேட்டுக் கொண்டேன். அரசு கையகப்டுத்தியுள்ள சர்ச்சைக்கு இடமில்லாத பகுதியை ராமர் கோவில் கட்டுவதற்கு ஹிந்து அமைப்புகளிடம் அளித்தால் சர்ச்சை;ககுரிய பகுதியில் எந்தப் பணியையும் மேற் கொள்ள மாட்டோம் என்று விஎச்பி ராமஜென்ம பூமி அறக்கட்டளை ஆகிய இரு அமைப்புகளும் உறுதியளித்துள்ளன.
சர்ச்சைக்கிடமில்லாத பகுதியை விட்டுக் கொடுத்து விட்டால் தங்களுக்கு என்ன கிடைக்கும் என முஸ்லிம் தலைவர்கள் சந்தேகம் எழுப்பினர். ஆனால் அப்பகுதி ராமஜன்ம பூமி அறக்கட்டளைக்குரியது. சர்ச்சைக்குரியது. சர்ச்சைக்குரிய பகுதியில் தற்போதைய நிலை நீடிக்கும் என்று தெளிவுபடுத்தினோம். அதில் அவர்களுக்குத் திருப்தி ஏற்பட்டதாகத் தெரிகிறது. முஸ்லிம் சட்ட வாரியத்தின் பொதுச் செயலாளர் சையத் நிஜாமுதீன் தலைமையிலான 11 பேர் கொண்ட தூதுக்குழுவுடன் ஜயேந்திரரைச் செவ்வாய்க் கிழமை சந்தித்தனர்.
தடையை மீறி அயோத்தியில் கரசேவகர்கள் ஊர்வலம்.
இந்த ஊர்வலம் கரசேவக புரம் வரை ஒரு கிமீ தொலைவுக்கு நடைபெற்றது. அவர்களைத் தடுக்க போலிஸார் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. கரசேவகர்களின் ஊhவலத்தை அமைதி ஊர்வலம் என்று மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். சட்டத்தை அவர்கள் யாரும் மீறவில்லை என்றும் அவர் சொன்னார்.
7 மார்ச் 2002
அயோத்தி வழக்கை விரைவில் தீர்க்க மனு. உச்ச நீதி மன்றத்தில் மத்திய அரசு தாக்கல்.
நிலத்தை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள அரசுக்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தமில்லை. அதனால் அது தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரிக்கப்படக் கூடியதல்ல என்று சன்னி வக்ஃப் போர்டு சார்பாக ஸபர்யாப் ஜீலானி கோர்ட்டில் ஆஜராகி வாதாடினார்.
அயோத்தி பிரச்னையில் நீதிமன்றத் தீர்ப்பை மதிப்போம் என்று உறுதி மொழி அளிக்கப்படவில்லை. இப்பொழுதுள்ள நிலை நீடிக்கப்படும் என்று தான் ராமஜன்ம பூமி அறக்கட்டளை உறுதியளித்தது. பிரச்னைக்குரிய இடத்தில் பாபரி மசூதி கட்ட அனுமதிக்க மாட்டோம். அந்த இடம் ராமர் கோயில் இருந்த இடமாகும். முஸ்லிம்களுக்குச் சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் விஸ்வ இந்து பரிஷத் என்ன செய்யும் என நிருபர்கள் பரிஷத்தின் மூத்த துணைத் தலைவர் ஆச்சார்ய கிரிராஜ் கிஷோர் அவர்களிடம் கேட்டதற்கு வரலாற்றுக்கு எதிராக நீதிமன்றத் தீர்ப்பு இருக்க முடியாது. நீதிமன்ற உத்தரவின் பேரில் தான் கோயிலின் கதவுகள் திறக்கப்பட்டன. பிரச்னைக்குரிய இடத்தில் தடையின்றி பூஐஜ நடத்த அனுமதிக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்ற அவர் வாரணாசியில் கோசிபுரா பகுதியில் உள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான இடுகாடுகளை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 20 ஆண்டுகளுக்கு முன் தீர்ப்பு கூறியது. அத் தீர்ப்பு இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
உச்ச நீதிமன்றத்துக்கு எதிரான கருத்து : புக்கர் விருது பெற்ற அருந்ததி ராய்க்கு ஒரு நாள் சிறை 2000 ரூபாய் அபராதம். அபராதத்தைச் செலுத்தத் தவறினால் 3 மாத சிறை. நர்மதை அணைத் திட்டத்துக்கு எதிராக கடந்த டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட அருந்ததி ராய் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதாக எழுந்த புகாரின் பேரில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.
பாபரி மஸ்ஜித் ற்கு எந்த வித சேதத்தையும் ஏற்படுத்த மாட்டோம் என்று எழுத்து மூலம் நீதிமன்றத்துக்கு வாக்குறுதி அளித்த அத்வானி இன்றைக்கு எந்தவித தண்டனையுமின்றி உள்துறை அமைச்சராகப் பதவியில் இருந்து கொண்டிருப்பது இந்த ஜனநாயகத்தின் நீதித்துறையின் வலிமை?யைக் காட்டுகின்றது.
8 மார்ச் 2002
அயோத்தி பிரச்னையில் நீதிமன்றம் அளிக்கும் எந்தவித தீர்ப்புக்கும் கட்டுப்படுவோம். விஸ்வ இந்து பரிஷத் அறிவிப்பு.
இது குறித்து பிரதமர் வாஜ்பாயிடம் எழுத்து மூலமாக உறுதிமொழி அளித்திருப்பதாகக் கூறியுள்ளது. விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச செயல் தலைவர் அசோக் சிங்கால் அவசரமாகக் கூட்டப்பட்ட பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் இந்த முக்கியமான முடிவை அறிவித்தார். பிரச்னைக்குரிய இடம் யாருக்குச் சொந்தம் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கின்றதோ அப்போது அந்த இடம் அவர்களுக்குத் தரப்படும் என்று நான் பிரதமரிடம் உறுதி அளித்துள்ளேன் என்றார் அவர்.
அயோத்திப் பிரச்னையில் முடிவெடுப்பதில் விஎச்பி க்கு எந்தப் பங்கும் இல்லை – ஜயேந்திரர்.
அயோத்திப் பிரச்னையில் இந்து முஸ்லிம்கள் இடையே அமைதி ஏற்பட பாடுபட்டு வருகிறேன். இது முழு வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. விஸ்வ இந்து பரிஷத்தின் எந்த அறிவிப்பையும் நம்ப வேண்டாம். அயோத்திப் பிரச்னை தொடர்பாக முடிவெடுப்பதில் அதன் பங்கு ஏதமில்லை. இதில் ராம ஜன்ம பூமி அறக்கட்டளை கூறுவதையே கருத்தில் கொள்ள வேண்டும். அயோத்திப் பிரச்னைக்கு அரச ராம ஜென்ம பூமி அறக்கட்டளை முஸ்லிம்கள் இணைந்து ஜுன் மாதம் 2 ம் தேதிக்குள் தீர்வு கண்டு விடுவார்கள்.
9 மார்ச் 2002
அயோத்தியில் சர்ச்சைக்கிடமில்லாத நிலத்தில் ராமர் கோயில் கட்டும் பணி ஜுனில் தொடக்கம். மார்ச் 15 ல் பூமி பூஜை.
சென்னை திரும்பிய ஜயேந்திரர் அறிவிப்பு. அதே நேரத்தில் சர்ச்சைக்குரிய நிலத்தில் இப்போதுள்ள நிலையே தொடரும். இது குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள் முன் வந்துள்ளனர்.
விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : முஹம்மது ஹாஷிம் என்பவர் தாக்கல் செய்த இந்த வழக்கில் அசோக் சிங்கால் ஆச்சார்ய கிரிராஜ் உள்பட விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள் மசூதி இருந்த இடத்தைக் கோயிலாக மாற்ற பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த அடத்தில் தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை இதன் மூலம் அவர்கள் மீறி வருகின்றனர். நீதி மன்ற உத்தரவை செயல்படுத்தத் தவறிய அயோத்தி மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உத்தரப் பிரதேச முதல்வர் ராஜ்நாத் சிங் மத்திய உள்துறை செயலாளர் கமல்பாண்டே ஆகியோர் மீதி நீதிமன்றத்தை அவமதித்தற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். விசுவ இந்து பரிஷத் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் வாஜ்பாயியும் உள்துறை அமைச்சர் அத்வானியும் அறிக்கை வெளியிடவில்லை. எனவே அவர்கள் விஎச்பி தலைவர்களுக்கு ஆதரவு தருகின்றனர் என்றும் அம் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
10 மார்ச் 2002
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அரசு செயல்படும் – பிரதமர் வாஜ்பாய் அறிவிப்பு.
அயோத்திக்கு இராணுவத்தை அனுப்பும்படி உ.பி. கவர்னர் வி.கே.சாஸ்திரி மத்திய அரசுக்கு எழுத்துப் பூர்வ கோரிக்கையை விடுத்துள்ளார். இதனைப் பரிசீலிப்பதாக பெர்ணாண்டஸ் அறிவிப்பு.
அயோத்தியில் தடையை நீக்குவதற்கு முஸ்லிம் அமைப்பு கண்டனம். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அயோத்திக்குள் நுழைய இருக்கும் தடையை நீக்குவதானது கண்டிக்கத்தக்கது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இப்போதுள்ள நிலையை நீடிக்கச் செய்யும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. தடையை நீக்கினால் விசுவ இந்து பரிஷத் மற்றும் ராம ஜன்ம பூமி அறக்கட்டளையினர் கசசேவகர்களை ஒன்று திரட்டுவர். அது மட்டுமல்ல மார்ச் 15 ம் தேதி தங்கள் திட்டத்தையும் செயல்படுத்தத் தொடங்குவர். இதற்கு இடம் தரலாகாது. அயோத்திக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை இணையமைச்சர் ஐ.டி.சுவாமி அங்கு ராமஜன்ம பூமி அறக்கட்டளைத் தலைவரை சந்தித்துப் பேசியுள்ளதும் கண்டிக்கத்தக்கது என் அகில இந்தி முஸ்லிம் மஜ்லிஷே முஷாவரத் அமைப்பின் தலைவர் ஷஹாபுத்தீன் தெரிவித்துள்ளார்.
11 மார்ச் 2002
அயோத்தியில் பூமி பூஜை நடத்தும் பிரச்னையில் ஜயேந்திரரின் யோசனையை முஸ்லிம் சட்ட வாரியம் நிராகரித்தது.
அயோத்தியல் ராமர் கோயில் கட்டுவதற்கு சர்ச்சைக்கு இடமில்லாத பகுதியில் மார்ச் 15 ம் தேதி அடையாளமாக பூமி பூஐஜ நடத்த அனுமதிப்பது தொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறிய யோசனையை அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் நிராகரித்து விட்டது. அயோத்தியில் அடையாள பூமி பூஐஜ நடத்துவதற்குத் தடை விதிக்குமாறு மத்திய அரசை இந்த வாரியம் கேட்டுக் கொண்டது. அயோத்திப் பிரச்னைக்குத் துண்டு துண்டாகத் தீர்வு காண்பது சாத்தியமற்றது என்று அது சுட்டிக் காட்டியுள்ளது.
மேலும் காஞ்சி சுவாமிகள் கூறியிருக்கும் யோசனை முழமையானதாக இல்லை. பிரச்னைக்கு முழமையான தீர்வைக் கூறுவதாக அவரது யோசனை இல்லை. பல முறை கேட்ட பின்னரும் கூட கட்டுமானத் திட்டம் குறித்து விஎச்பி தயாரித்துள்ள கட்டட வரைபட பிரதியோ மனையின் வண்ண வரைபடப் பிரதியோ எம்மிடம் தரப்படவில்லை. வாஜ்பேயிடம் ராமஜன்ம பூமி நியாஸ் கொடுத்திருக்கும் வாக்குறதியின் பிரதியும் எம்மிடம் தரப்படவில்லை.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் திடடத்தை உடனடியாத் தொடங்குவதை அந்த யோசனை உறுதி செய்கிறது. ஆனால் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை காத்திருக்குமாறு முஸ்லிம்களைக் கோருகிறது அந்த யோசனை.
கட்டுமானத் திட்ட வரைபடம் இல்லாமல் ராமஜன்ம பூமி அறக்கட்டளை எழுத்துப்பூர்வ உறுதிமொழி கொடுத்திருப்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
ராமர் கோயில் கட்டும் பணியை மேற்கொள்ள அறக்கட்டளைக்கு எவ்வாறு உரிமை கிடைத்தது. ராமஜன்ம பூமி அறக்கட்டளைக்கும் விஎச்பிக்கும் சங்க பரிவாரத்தின் இதர அமைப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்பது தெளிவாக்கப்படவில்லை.
1980 ம் ஆண்டிலிருந்து விஎச்பி தான் அந்த இயக்கத்தை நடத்தி வருகின்றது. ஆனால் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக விஎச்பி கொடுத்த உறுதி மொழி எதுவும் அந்த யோசனையில் இல்லை. எனவே தொடர்ந்து இயக்கத்தை நடத்தவும் தொண்டர்களைத் திரட்டவும் விஎச்பி க்க எவ்விதத் தடையும் இருப்பதாகத் தெரியவில்லை.
சங்கப் பரிவார அமைப்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு வைத்துக் கொண்டு செயல்படுபவை. ஆனால் அத் தொடர்புகளை அவை சாதுர்யமாக மறைத்துக் கொண்டு சட்டத்தின் பிடியில் தப்பித்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால் சங்கப் பரிவார அமைப்புகள் அனைத்தும் வரம்புக்குள் கொண்டு வரும் வகையில் அந்த யோசனையில் இல்லை.
சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக அலஹாபாத் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றால் அந்த இடத்தில் மசூதியைக் கட்டிக் கொள்ள எவ்விதத் தடையும் ஏற்படுத்தக் கூடாது என்ற உறுதி மொழியோ உத்தேச ராமர் கோயிலின் கர்ப்பக் கிரகப் பகுதி வேறு இடத்துக்கு மாற்றப்படுமா என்பது பற்றிய உறுதிமொழியோ காஞ்சி சுவாமிகளின் யோசனையில் அளிக்கப்படவில்லை என்று முஸ்லிம் சட்ட வாரியம் தனது தீர்மானத்தில் சுட்டிக் காட்டியுள்ளது.
பாபர் மசூதி நடவடிக்கைக் குழு அமைப்பாளர் சையது சஹாபுத்தீன் பாபர் மசூதி ஒருங்கிணைப்புக் குழத் தலைவர் ஜஃபர்யாப் ஜீலானி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா வாரிய உறுப்பினர்கள் உள்பட சுமார் 70 பேர்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
திட்டமிட்டபடி 15 ல் பூமி பூஜை நடைபெறும். நாடு முழுவதும் அயோத்தியாக மாறும்.
ராமர் கொயில் கட்டுமான பணியை தொடங்குவதற்கான அடையாள பூஐஜ செய்வதற்கு ஹிந்துக்களுக்கு உள்ள மத உரிமையில் தலையிட இந்த நாட்டில் யாருக்கும் உரிமை கிடையாது என்று பரிஷத் பொதுச் செயலாளர் பிரவீண் தொகாடியா கூறினார். காஞ்சி சுவாமிகள் தலையிட்டதை அடுத்து பிரச்சினையில் தாங்கள் சிறிது விட்டுக் கொடுக்க முன்வந்ததாகவும் அப்படி இருப்பினும் முஸ்லிம் நண்பர்கள் உச்ச நீதிமன்றம் சென்று தங்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருக்கின்றனர் என்று அவர் சொன்னார்.
ஹிந்துக்களின் ஆதரவை ஒவ்வொரு நாளாக அன்றி ஒவ்வொரு மணி நேரமும் வாஜ்பாயி அரசு இழந்து வருகின்றது. காஞ்சி சுவாமிகள் சில திட்டங்களை முன் வைத்த போது அவற்றை ஏற்று அரசுக்கு உதவி செய்தது பரிஷத். ஆனால் பரிஷத்திற்கு அரசு உதவி செய்யவில்லை. அயோத்திக்குச் செல்ல கரசேவகர்களுக்குள்ள தடைகளை அரசு நீக்க வேண்டும். ஹிந்துக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. சர்ச்சை இல்லாத நிலத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் குறித்துப் பேச எந்த முஸ்லிம் ஸ்தாபனத்துக்கும் உரிமை இல்லை.
இந்த நிலப்பகுதி தொடர்பாக எந்த வழக்கும் இல்லை. முஸ்லிம் ஸ்தாபனங்கள் இந்த நிலத்தில் தலையிட்டு மக்களின் உணர்வுகளைத் தூண்டி விடப் பார்க்கின்றன. இந்த நிலம் சம்பந்தமாக பேச தகுதி உள்ளவர்கள் அரசு மற்றும் ராம ஜன்ம பூமி அறக்கட்டளை மட்டுமே. இதில் மூன்றாவது தரப்பு யாரும் இல்லை. (இந்த இடம் சம்பந்தமாக வழக்குதாரர்கள் முஸ்லிம்களும் சங்கபரிவாரங்களும் இருக்க பிரவீண் தொகாடியாவோ இந்த வழக்கில் அரசும் ஹிந்துக்களும் தான் சம்பந்தப்பட்டவர்கள் என்று கூறி முஸ்லிம்களின் உரிமைகளை மறுக்கின்றார்)
வரும் 15 ம் தேதி அயோத்திக்கு நூற்றுக் கணக்கில் ஆயிரக்கணக்கில் கரசேவகர்கள் வருவர். ராமர் கோயில் கட்டுவதை குறிக்க நாடு முழவதும் ஆங்காங்கே ஊhவலங்கள் நடக்கும். நாட்டில் உள்ள ஒவ்வொரு இடமும் அயோத்தியாக மாறும்.
பூமி பூஐஜ அiதியாக நடக்கும் சூழ்நிலையை அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும். ஹிந்துக்களின் உரிமைகளை மதிக்க வேண்டும் என்றார் பிரவீண் தொகாடியா.
பாபர் மசூதி இயக்கத் தலைவர் கைது?
அயோத்தியில் சர்ச்சைக்கு உட்படாத பகுதியில் 15 ம் தேதியன்று பூமி பூஐஜ நடத்தப் போவதாக விஸ்வ இந்து பரிஷத் அறிவித்திருந்தது. இதற்குப் போட்டியாக தில்லியிலிருந்து அயோத்திக்கு அரசியல் சாசனத்தைக் காக்கக் கோரும் ரத யாத்திரையை நடத்த பாபர் மசூதி இயக்கம் திட்டமிட்டிருந்தது. எனவே இதன் தலைவர் முஹம்மது யூனுஸ் சித்தீகி யை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் அவரை காவலில் வைத்துள்ளது. தில்லியில் ஜாஹிர் நகரிலுள்ள இல்லத்தில் சித்தீகி தங்கியிருந்தார். சனிக்கிழமை நள்ளிரவு அவரைப் போலீஸார் அழைத்துச் சென்றனர் என்று பாபர் மசூதி இயக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மாட்டோம் ஹிந்துக்களின் உணர்வுகளில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று கூறும் சங்க பரிவாரங்கள் வெளியே சுற்றிக் கொண்டு திரிகின்றார்கள்).
13 மார்ச் 2002
அனைவர் கவனமும் உச்ச நீதிமன்றம் மீது!
அயோத்தியில் பிரச்சினைக்குரிய இடத்துக்கு அருகில் பூமி பூஜை நடத்துவது என்று விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு எடுத்துள்ள சர்ச்சைக்குரிய முடிவு குறித்து உச்ச நீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்கின்றது. நீதிபதிகள் பி.என்.கிர்பால் ஜி.பி.பட்டநாயக் வி.என்.கரே அடங்கிய பெஞ்ச் இவ்விசாரணையை மேற்கொள்கின்றது. உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல் கிடைக்காமல் பூமி பூஐஜ நடத்தவோ பிற விஷயங்களுக்கோ அரசு அனுமதி தராவது என்று பிரதமர் திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றார்.
பூமி பூஐஜ நடத்தக் கூடாது என்று விஎச்பி க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அதை;திந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் தனது மனுவில் கோரியிருக்கின்றது. அஸ்லம் பூரே என்பவரும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மநு தாக்கல் செய்திருக்கிறார் சர்ச்சைக்குரிய இடத்துக்கு அருகில் பூமி பூஐஜ நடத்துவது 1994 ல் உச்ச நீதிமன்றம அளித்த தீர்ப்பை மறுவதாக அமையும் என்று இரு தரப்பாரின் மனுக்களும் சுட்டிக் காட்டுகின்றன. (இருப்பவை இருக்கும் விதத்திலேயே இருக்கட்டும். இறுதித் தீர்ப்பு வரும் வரை யாரும் எதையும் மாற்றக் கூடாது என்று உச்ச நீதி மன்றம் அத் தீர்ப்பில் கூறியிருந்தது).
அயோத்தியில் ராணுவத்தை நிறுத்த வேண்டும் அயோத்தி நகரில் உள்ள கரசேவகர்புரத்திலும் ராஜஸ்தானின் பின்ட்வாராவிலும் ராமர் கோயிலுக்காகத் தயார் நிலையில் வைத்திருக்கும் தூண்களையும் கட்டுமானங்களையும் மாவட்ட நிர்வாகம் பறிமுதல் செய்ய வேண்டும். கரசேவகர்புரத்திலும் பின்ட்வாராவிலும் ஆலய கட்டுமானத்துக்காகப் பொருள்களை வைத்திருக்கும் இடங்களை மாவட்ட அதிகாரிகள் சீல் வைத்து தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அஸ்லம் பூரே தனது மனுவில் கூறியிருக்கின்றார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அயோத்திக்கு வரும் ஆயிரக்கணக்கான கரசேவகர்களைத் தடுத்து நிறுத்தவும் ராணுவத்தை அயோத்தியில் நிறுத்தவும் தூண்களையும் இதர தளவாடங்களையும் கைப்பற்றவும் இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கா விட்டால் 1992 ல் நடந்ததைப் போல கலவரங்கள் மூண்டு அப்பாவி மக்கள் உயிரிழக்கும் ஆபத்து இருக்கிறது என்று அவர் தனது மனுவில் அச்சம் தெரிவித்திருந்தார்.
ரவீந்தர் குப்தா என்பவர் ராமரை வழிபட அயோத்தி செல்ல தனக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருக்கிறார். மார்ச் 7 ம் தேதி ஃபைஸாபத்திலிருந்து என்னை விரட்டி விட்டு விட்டார்கள். நாட்டின் எந்தப் பகுதிக்கும் சுதந்திரமாகச் சென்று வரலாம் என்ற அடிப்படை உரிமையைப் பாதிப்பதாக அரசின் இந்த நடவடிக்கை இருக்கிறது என்று தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உச்சநீதிமன்ற ஆணை அமல்படுத்தப்படும். உ.பி. ஆளநர் சாஸ்திரி பேட்டி
அயோத்தி தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளிக்கும் ஆணை அமல்படுத்தப்படும். இப்பிரச்னை தொடர்பான விசாரணையை உச்சநீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்கின்றது. இப்பிரச்னை குறித்து பிரதமர் என்ன கூறினார் எனக் கேட்டதற்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்து அதன்படி நடக்க வேண்டும் என அவர் தெரிவித்ததாகக் கூறினார்.
பூமி பூஐஜ நடத்தியே தீருவோம் என்று விசுவ இந்து பரிஷத் கூறியுள்ளது குறித்துக் கேட்டதற்கு கோயிலில் தரிசனம் செய்யக் கூடாது என்று எப்படிக் கூற முடியும். இன்று மகாசிவ ராத்திரி. கோவிலுக்குச் சென்று மக்கள் வழிபாடு நடத்துவர். உங்களால் அவர்களைத் தடுத்து நிறுத்த முடியுமா? இந்துக்களின் முக்கியப் புனிதத் தளங்களில் ஒன்று அயோத்தி. அங்கு பக்தர்கள் தினந்தோறும் வந்து கொண்டு தான் இருப்பர். வீடுகளிலும் கோயில்களிலும் கடவுளைத் தரிசிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தால் மக்களைத் தடுக்க முடியுமா? (கேள்வி பூமி பூஜையைப் பற்றியது பதிலோ மக்கள் சிவராத்திரி வழிபாடு பற்றியது சிவராத்திரி வழிபாடு பற்றியோ அயோத்தி இந்துக்களுக்கு புனிதத்தளமா என்பது பற்றியோ கேள்வி கேட்கப்படாத பொழுது ஒரு ஆளநராக இருப்பவர் எந்தளவு இந்து வெறியோடு பதிலளித்து இருக்கின்றார் என்பதற்கு அவரது பதிலே சாட்சியமளிக்கின்றது.)
2000 பேருடன் சென்று புனிதத் தூணை ஒப்படைப்போம். தடுத்தால் கைதாவோம்.
அயோத்தியில் வரும் வெள்ளிக் கிழமை சர்ச்சை இல்லாத இடத்தில் புனிதத் தூணை அரசிடம் ஒப்படைப்பது பிரார்த்தனை ஆகியன மட்டுமே நடக்கும் என்று விஎச்பி மற்றும் ராம ஜன்ம பூமி அறக்கட்டளையும் அறிவித்துள்ளன.
அயோத்தி : பூமி பூஜைக்கு முஸ்லிம்கள் ஒப்புதல் அளிக்க ஜயேந்திரர் வலியுறுத்தல்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஐஜ செய்ய முஸ்லிம்கள் பரந்த மனப்பான்மையுடன் ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார். உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு தற்காலிக தீர்ப்பு தான். இந்து மக்கள் இது குறித்து வேதனை அடைய வேண்டாம் என்றும் அவர் கூறினார். அதே போல முஸ்லிம்களும் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டாம். வெற்றி தோல்வி என தீர்ப்பைக் கருதத் தேவையில்லை.
பூமி பூஜை என்பது சிறிய சடங்கு ஆகும். ஜுன் 2 ம் தேதிக்குள் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என கால அவகாசம் தந்துள்ளோம். கடந்த 1994 ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் இது தொடர்பாகத் தீர்ப்பளித்துள்ளனர்.
இதில் 3 நீதிபதிகள் பெரும்பான்மையாக நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என கருத்துத் தெரிவித்துள்ளனர். மற்ற 2 நீதிபதிகளும் கூட பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும் எனக் கூறியுள்ளனர். நிலத்தைத் தரக் கூடாது என கூறவில்லை. அயோத்தியில் கட்டடம் கட்ட 3 மாத கால அவகாசம் கேட்டுள்ளனர். அது குறித்து பிறகு பேசலாம். இப்போது பூமி பூஐஜ செய்ய ஆட்சேபணை இல்லை முஸ்லிம்கள் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.
பெருந்தன்மையுடன் முஸ்லிம்கள் இதைச் செய்தால் பலத்த வரவேற்பு கௌரவம் கிடைக்கும். இரு சமுதாயத்தினரும் விட்டுக் கொடுத்து பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் ஜெயேந்திரர்.
(இங்கு ஜெயேந்திரர் முஸ்லிம்கள் விட்டுக் கொடுத்தால் கௌரவம் கிடைக்கும் என்கிறார். அவர் எதனைக் கேட்கிறார் என்பது புரியவில்லை. முஸ்லிம்கள் ஏற்றுப் பின்பற்றிக் கொண்டிருக்கும் மார்க்கத்தையே விட்டுக் கொடுக்கச் சொல்கின்றாரா? அல்லது பாபர் மசூதியை மட்டும் விட்டுக் கொடுக்கச் சொல்கின்றாரா? அல்லது இன்னும் எங்களது பட்டியலில் 3 ஆயிரம் பள்ளிவாசல்கள் உள்ளன எனக் கூறுகின்றனரே அந்தப் பள்ளிவாசல்களையும் இன்னும் காசி மதுரா வில் உள்ள பள்ளிவாசல்களையும் விட்டுக் கொடுக்கச் சொல்கின்றாரா? இவர் தான் சமாதானத்தூது சென்றவர்?!! இவர் இந்துத்துவாவிற்கு ஆதாயம் பார்க்கச் சென்றிருக்கின்றார் என்பதை விட வேறு என்ன அவரது முயற்சியில் இருக்கின்றது?)
இந்த வரலாற்று ஆவணம் இன்னும் தொடரும்.. இன்ஷா அல்லாஹ்..
ராம்ஜென்ம பூமி பிரசினை பற்றி உங்கள் கருத்து என்ன
;பதிலளிக்கின்றார் : டி.கே.வெங்கட சுப்ரமணியம்
அரசியலுக்காக பெரிதாக்கப்பட்ட பிரசினை அது. புரஃபஸர் பி.பி.லாலுடைய அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகளை ஆதாரமாகச் சொல்கிறார்கள். விஎச்பி யைச் சேர்ந்தவர்கள். ஆனால் பி.பி.லால் முன்னுக்குப் பின் முரணாக எழுதக் கூடியவர். 1978 ல் கி.மு.800 விற்கு முன்னால் அயோத்தியில் மக்கள் வாழ்ந்ததற்கான அறிகுறியே இல்லை என்றவர் 1997 ல் ரிக்வேத காலம் என்பது கி.மு.3500 என்றார். உத்தரப்பிரதேசத்தில் எங்கு தோண்டினாலும் இந்து ஜெயின் புத்த கோயில்களின் மீதங்கள் கிடைக்கும். அதைப் போல் தான் பாபர் மசூதிக்குப் பக்கத்திலும் சில கட்டடப் பகுதிகள் கிடைத்திருக்கின்றன. அதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் இருந்த அது இடிக்கப்பட்டது என்று சொன்னால் அதற்கான அகழ்வாராய்ச்சி நிரூபணத்தைத் தந்தாக வேண்டும். ஃபீல்ட் நோட் புக் என்று சொல்லப்படும் அந்த முக்கிய ஆவணத்தைக் கண்ணிலேயே காட்ட மாட்டேன் என்கிறார்கள். பாபர் மசூதி கட்டப்பட்டது சமீப காலத்தில் தான். (1528) கோயில் இடிக்கப்பட்டிருந்தால் நிச்சயம் அதற்காண நிரூபணம் கிடைத்திருக்கும். அதே காலத்தில் வாழ்ந்த துளசிதாசர் அதைப் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. ராமதாஸரான அவர் கோயில் இடிக்கப்பட்டிருந்தால் எழுதாமல் இருந்திருப்பாரா?
சரித்திரத்தைக் காவிமயமாக்கும் முயற்சி இப்போது நடப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே -ல் இருந்தவர் நீங்கள். உங்கள் கருத்து?
கருத்து வேறுபாடுகளால் அதிலிருந்து வெளியே வந்து விட்டேன். அறிவியல் ஆதாரமில்லாத சில அடிப்படை மாற்றங்களை மத ரீதியாக மாற்றும் முயற்சிகள் நடந்து வருவது உண்மை தான்.
உங்கள் கருத்துப்படி அயோத்தியில் ராமர் பிறந்த இடம் பாபர் மசூதி இருந்த இடம் தான் என்பது சரியானது தானா?
சரியல்ல. அது வெறும் நம்பிக்கை தான். ஆதாரப்பூர்வமானது அல்ல. நம்பிக்கைகளை அரசியலாக்க நினைப்பது ஆபத்தில் தான் போய் முடியும்!.
டிசம்பர் ஆறு.. .. அது என்று தான் ஆறும்?.. ..
டிசம்பர் 6 1992 ஒவ்வொரு முஸ்லிமினுடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாததொரு நாள். ஆம்! இந்துத்துவாக்கள் இந்திய முஸ்லிம்களின் இதயத்தைக் கசக்கிப் போட்ட நாள். இறையில்லம் ஒன்று மண்ணிலே வீழ்த்தப்பட்ட நாள். அந்த நாளின் நினைவுகள் இன்றும் நிழலாய் ஒவ்வொரு நெஞ்சத்திலும் நஞ்சாக நெருடிக் கொண்டிருக்க அந்தப் புனித இல்லம் தரைமட்டமாக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைபெறுகின்றன என்னும் போதும் அந்தப் பள்ளியை இடித்த கயவர்களும் இடிப்பிற்குத் துணை போனவர்களும் இன்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பதையும் நினைத்துப் பார்க்கும் பொழுதும் வரும் மாதங்களில் பள்ளி இடிக்கப்பட்ட இடத்தில் கோயில் கட்டுமாண வேலைகள் ஆரம்பிக்கப்பட இருக்கின்ற என்ற செய்திகள் நாளும் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தும் நீதிமன்றங்களும் நடுநிலையாளர்களும் இதயமுள்ளவர்களும் இந்த தேசத்தில் இருக்கின்றார்களா? இல்லை பள்ளியின் இடிபாடுகளுக்கிடையே அவர்களும் சிதிலமாகிப் போனார்களா? என்று கேட்கத் தோன்றுகின்றது.
இடித்த பள்ளியை திரும்பக் கட்ட முடியவில்லை. இந்திய அரசின் வாக்குறுதி காற்றில் பறந்து 10 வது வருடம். ஒரு வேளை இந்திய அரசும் காவிமயமாகி விட்டதா? என்றே எண்ணத் தோன்றுகின்றது.
இந்த சமுதாயம் என்ன செய்து கொண்டிருக்கின்றது. தனக்கிடையே உள்ள சிறுசிறு வேறுபாடுகளைக் கலைய முற்படாமல் அதைக் கிளறிவிட்டுக் கொண்டு புண்ணைக் காட்டி அதை முகர்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றது.
கடந்த காலங்களில் டிசம்பர் 6 வந்து விட்டாலே போதும் அனைத்து முஸ்லிம்களின் கட்சிகளும் இயக்கங்களும் தங்களது தங்களது போராட்டத்தளங்களை எங்கே நடத்துவது என சென்னை மாநாகரில் இடம் தேடி அலையக் கூடிய கொடுமையையும் ஒவ்வொரு குழுவும் தன்னுடைய தொண்டர் படை சகிதமாக தனக்கு எந்தளவு தொண்டர் படை இருக்கின்றது பார்த்தீர்களா என்று அரசியல் கட்சிக்கு ஆள்பலத்தைக் காட்டும் ஒரு நிகழ்ச்சியாகத் தான் டிசம்பர் 6 இருந்து வந்திருக்கின்றது. ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் குரலை ஒலிக்கச் செய்யும் விதமாக ஓரணியில் நின்று போராடுவதற்கு தங்களது ஈகோக்களை விட்டுக் கொடுத்து சமுதாய நலனே முக்கியம் எனக் கருதும் தலைவர்கள் இல்லாததைத் தான் கடந்த காலம் நமக்குக் காட்டித் தந்திருக்கின்றது.
இந்திய அளவில் ஒன்று பட்டு முஸ்லிம் சமூகம் தனது எதிர்ப்பை அரசுக்குக் காட்டி யிருக்கலாம். குறைந்தபட்சம் அந்தந்த மாநில அளவிலாவது ஓரணியில் நிற்க முடியவில்லையே என்ற ஏக்கமும் உண்டு! குறிப்பாக தமிழ்நாட்டைப் பார்த்தால் இந்திய தேசிய லீக் தலைமையில் ஓர் உண்ணாவிரதம் ஐக்கிய ஜமாத் தலைமையில் ஓர் உண்ணாவிரதம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஒரு தர்ணா இஸ்லாமிய ஜனநாயகப் பேரவை சார்பில் ஓர் உண்ணாவிரதம்.
இவர்களின் நோக்கமெல்லாம் உண்மையில் பாபரி மஸ்ஜிதை மீட்கவா அல்லது கட்டவா என்று தெரியவில்லை. விரும்புபவர்கள் கட்சியை ஆரம்பிக்க வேண்டும். அதில் தலைமைப் பொறுப்பை அல்லது முக்கிய பொறுப்புகளை வகிக்க வேண்டும் என்பது மட்டுமே இலட்சியமாகத் தெரிகிறதே ஒழிய மாறாக சமுதாயத்திற்கு ஒரு புண்ணியமுமில்லை என்பதைத் தான் கடந்த கால வரலாறு காட்டுகின்றது. குறிப்பாக இவர்கள் தனித்தனி தர்ணா போராட்டம் உண்ணாவிரதம் ஆகியவை மூலம் பாபரி மஸ்ஜித் பிரச்னை ஒரு கேலிக் கூத்தாக்கப்பட்டிருக்கின்றது என்பது தான் வேதனை!
உண்மையில் இவர்களுக்கு சுயநலமில்லாத சமுதாயக் கவலை இருக்குமானால் தங்களுடைய ஆதிக்க வெறியை விட்டுக் கொடுத்து ஒட்டு மொத்த எதிர்ப்பைக் காட்டினால் ஓரளவுக்கு பிரயோசனப்படும். நாம் யாரிடம் எதிhப்பைக் காட்டுகின்றோம் என்றுணர்ந்து ஒன்றுபட வேண்டும். இல்லையெனில் இந்த விஷயத்தில் கூட ஒன்றுபடாத சமூகம் எப்படி பள்ளியை மீட்கப் போகின்றது என்பதை சிந்தையில் நிறுத்தி ஆட்சி செய்யும் குற்றவாளிகள் நம்மை அழித்து விடுவார்கள்.
நாம் இப்படியே பிரிந்து நிற்பதனால் எதிரிக்குத் தான் லாபம் என்பதை இனிவரும் காலத்திலாவது கட்சி நடத்துபவர்கள் உணர்ந்து விழிக்கட்டும். இப்பொழுது இருக்கக் கூடிய இயக்கங்கள் போலவே அப்போதும் அதாவது பாபரி மஸ்ஜித் இப்பதற்கு முன்பும் இயக்கங்கள் இருந்தன.
பாபரி மஸ்ஜித் ஆர்கனைசிங் கமிட்டி
பாபரி மஸ்ஜித் பாதுகாப்புக் கமிட்டி
மில்லி கவுன்சில்
போன்ற இயக்கங்களெல்லாம் ஒரு சல்லிக்காசுக்குக் கூட பிரயோஜனமில்லாமல் கடைசியில் மஸ்ஜிதை இடித்தவுடன் ரீபில்டிங் கமிட்டியாக மாறியது தான் மிச்சம்.
இப்படித் தான் இயக்கம் நடத்துபவர்கள் எப்படியாவது தங்களுடைய இயக்கங்களை வளர்ப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றன. இந்த நிலையை வர்ணித்துத் தான் பத்திரிக்கைகள் சமுதாயத்தை இவ்வாறு எள்ளிநகையாடி ஏளனத்துடன் எழுதின :
பாபரி மஸ்ஜித் இடிப்பதற்கு முன்
இந்த இயக்கங்களிளெல்லாம் தலைவர்கள் தான் உள்ளனர் தொண்டர்கள் இல்லை.
பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குப் பின்.. . .
பாபரி மஸ்ஜிதை இடித்த பின் அதை;த தொடர்ந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்களைப் பற்றியும் தடாவில் கைதான முஸ்லிம்களைப் பற்றியும்இப்பொழுது தொண்டர்கள் தான் உள்ளனர் தலைவர்கள் இல்லை என்று பத்திரிக்கைகள் எழுதின.
இதே நிலை அதாவது பள்ளிவாசல இருந்த இடத்தில் கோயில் கட்டும் செயல் நடக்காமல் இருக்க இருக்கும் இயக்கங்கள் எல்லாம் ஒன்று சேரட்டும் ஓரணியில்!!
இல்லை என்றால் குரங்கு கையில் கிடைத்த பூமாலை தான் இந்த சமுதாயத்தின் கதி என்பதைச் சிந்தித்துச் செயல்படுவோமாக!
பாபரி மஸ்ஜித் – அகழ்வாய்வு பயன்தருமா?
பாபரி மஸ்ஜித் பிரச்னையின் இன்னொரு பகுதியாக அகழ்வாராய்ச்சின் மூலமாக பூமிக்கடியில் கிடைக்கக் கூடிய பொருள்களைக் கொண்டு அங்கு கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் கிடைக்கின்றனவா? என்பது குறித்து ஆய்வு செய்யுமாறு நீதிமன்றம் தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இரு சமூகங்களையும் சேர்ந்தவர்களைக் கொண்ட கமிட்டியை நியமித்து அகழ்வாராய்ச்சிப் பணிகள் கடந்த மார்ச் 10 திங்கட் கிழமை முதல் பாபரி மஸ்ஜித் வளாகத்தில் நடைபெற்று வருகின்றன.
நீதிமன்றத்தின் இந்த முடிவு இரு சமூகங்களிடையேயும் மீண்டும் பிரச்னையைக் கிளறி விட்டிருக்கின்றது. நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட மாட்டோம் என்று பிடிவாதம் பிடிக்கின்ற இந்துத்துவவாதிகள் சரியான ஆதாரங்கள் எதனையும் நீதிமன்றத்தின் முன் வைத்தபாடில்லை. இதுவரை நடந்த வழக்குகளின் முடிவுகளைப் பார்த்தோமானால் அது முஸ்லிம்களுக்குச் சாதகமான முடிவாகத் தான் இருக்கும். அந்தளவு ஆதாரங்களுடன் முஸ்லிம்கள் தரப்பு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கின்றது.
இப்பொழுது நீதிமன்றம் அகழாய்வுப் பணிக்கு உத்தரவிட்டு அதனுடைய முடிவுகளும் முஸ்லிம்களுக்குச் சாதகமாக அமைந்து விட்டால் நீதிமன்றத் தீர்ப்பிற்குக் கட்டுப்பட மாட்டோம் என்று குரல் கொடுத்தால் சங்க பரிவாரங்களை நீதிமன்றம் என்ன செய்யும்? என்பது பற்றி தெளிவான அறிக்கையை வெளியிட்டு விட்டு இந்த வழக்கை மீண்டும் எடுத்துச் செல்வது தான் நல்லது என்று முஸ்லிம்கள் தரப்பினர் கருதுகின்றனர். ஏனெனில் பாபரி மஸ்ஜிதை மட்டும் அவர்கள் உரிமை கொண்டாடவில்லை. இன்னும் நாட்டில் உள்ள 3000 மஸ்ஜித்களில் காசி வாரணாசி போன்ற பிரபலமான இடங்களில் உள்ள 7 பள்ளிவாசல்களையும் சேர்த்தே இப்பொழுது உரிமை கொண்டாடி வருகின்றார்கள். இதனை பிரவீண் தொகாடியா பொது மேடைகளில் அறிவித்து மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவித்த வண்ணம் இருக்கின்றார்.
இன்னும் சங்க பரிவார ஆதரவாளரான காஞ்சி சரஸ்வதி சுவாமிகள் தொல்லியல் துறை தரக் கூடிய ஆதாரங்களை இருதரப்பாரும் ஏற்றுக் கொண்டு நீதிமன்றத் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும் என்று அறிக்கை விட்டுள்ளார். இந்த அறிவிப்பு முஸ்லிம்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்புகின்றது. ஏனெனில் இதுவரை முஸ்லிம்கள் தரப்பு ? நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படுவோம் என்றே கூறி வந்திருக்கின்றது. நீதிமன்றத் தீர்ப்புக்கு கட்டுப்பட மாட்டோம் என்று முஸ்லிம்கள் தரப்பில் இதுவரை மறுத்துப் பேசியதில்லை. இந்த நிலையில் தொல்லியல் துறையினரின் ஆதாரங்களும் முஸ்லிம்களின் பக்கம் உள்ள நியாயத்திற்கு சான்று பகர்வதாக இருந்தால் சங்க பரிவாரங்களைச் சரிக்கட்டும் பொறுப்பை சரஸ்வதி சுவாமிகள் ஏற்றுக் கொள்வார்களா? என்பதும் இன்னும் அவ்வாறானதொரு தீர்ப்பு எங்களுக்கு பாதகமாக வந்தாலும் நீதிமன்றத் தீர்ப்புக்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்று சங்கபரிவாரங்களிடமிருந்து வாக்குறுதி பெற்றுத் தர முயல்வாரா? என்பதும் சந்தேகத்திற்கிடமானவைகள்.
சரஸ்வதி சுவாமிகளின் அறிக்கை வெளியான அதே காலத்தில் தான் தொகாடியா இன்னும் 7 பள்ளிவாசல்களைக் கைப்பற்றுவோம் என்றும் அறிக்கை விட்டிருக்கின்றார். இது முன்னுக்குப் பின் முரணாகப் பேசக் கூடிய அவர்களின் நயவஞ்சகப் போக்கைத் தான் காட்டுகின்றது. இன்னும் தொல்லியல் துறை சங்க பரிவாரங்களின் மூத்த தலைவரும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சருமான முரளிமனோகர் ஜோஸி வசம் இருந்து கொண்டிருக்கும் போது நியாயமான முறையில் தீர்ப்புக் கிடைக்குமா? என்பதும் சந்தேகத்திற்கிடமானதே என்று கூறி மத்திய வக்பு வாரியத்தைச் சேர்ந்த முகம்மது ஹஷிம் இந்த அகழ்வாராய்ச்சிப் பணியைப் புறக்கணித்தார். அவரது சந்தேகம் நியாயமானதே. இதுவரை பாபரி மஸ்ஜித் பிரச்னையில் முஸ்லிம்கள் தரப்பிற்கு எந்த நியாயத்தையும் நீதிமன்றமோ அல்லது ஆட்சியாளர்களோ வழங்கவில்லை.
பாபரி மஸ்ஜித் இருந்தபொழுது சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கிய நீதிமன்றம் முஸ்லிம்கள் தொழுவதற்கு அனுமதி மறுத்தது. இப்பொழுது பள்ளிவாசல் இடிக்கப்பட்ட பின்னரும் அங்கு சிலைகள் வைக்க அனுமதித்து பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. இது ஒன்றே போதும் நீதிமன்றங்களும் அரசுகளும் முஸ்லிம்களுக்கு எதிராக ஓரவஞ்சனையுடன் நடந்து கொள்கின்றன என்பதற்கு! இந்த நிலையில் தொல்லியல் துறை முரளி மனோகர் ஜோஸி கை வசம் இருக்கும் போதும் உள்துறையும் பிரதமரும் ஜனாதிபதி உதவி ஜனாதிபதி என அனைத்துத் தரப்பாரும் சங்க பரிவாரங்களாக இருக்கும் நிலையில் முஸ்லிம்களுக்குச் சாதகமான முறையில் தொல்லியல் துறை முடிவுகள் வந்தாலும் அந்த முடிவு முஸ்லிம்களின் கைகளுக்குக் கிடைக்க எத்தனை வருடங்களாகுமோ? என்பதும் கேள்விக்குறியே!
இன்னும் தொல்லியல் முடிவுகள் முஸ்லிம்களுக்குச் சாதாகமாக வரும் பட்சத்தில் சங்க பரிவாரங்களின் எதிர்ப்பு கடுமையாக இருக்கும். இந்த எதிர்ப்பை நீதிமன்றங்களும் அரசும் எவ்வாறு சமாளித்து முஸ்லிம்களுக்கு நியாயம் வழங்கும் என்பதும் சந்தேகத்திற்கிடமானவையே!
இதற்கிடையே ஆட்சியும் அதிகாரம் கையில் இருக்கின்ற காரணத்தால் தொல்லியல் துறையும் அதன் கை வசம் இருக்கின்ற காரணத்தால் அதன் முடிவுகள் இந்துக்களுக்குச் சாதகமாக வர வாய்ப்பை ஏற்படுத்தி விடுவார்களென்றால் இதுவரை நீதிமன்றத்தையே நம்பி இருந்து சரியான ஆதாரங்களைக் கையில் வைத்திருக்கும் முஸ்லிம்களின் நிலை என்ன?
நீதிமன்றம் தனது தீர்ப்பினை ரெகார்டுகளின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளுமா? அல்லது தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளுமா? என்பதனையும் நீதிமன்றமானது மக்கள் மன்றத்தில் உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

Wednesday, September 15, 2010
துருக்கியில் இஸ்லாம் ஆட்சிப்
துருக்கியில் இஸ்லாம் ஆட்சிப் பீடமேற முனைந்து வருகின்றது
துருக்கி உலகளாவிய முஸ்லிம் தலைமைத்துவமான கிலாபத் வீழ்த்தப் பட்ட நாடு அல்லாஹ்வின் இறுதித்தூதர் போதித்த பைஸாண்தியம் கான்ஸ்டான்டிநோப்பிள் போன்ற பிரதேசங்களை தனக்குள் கொண்ட நாடு, இஸ்லாமிய நாகரியத்தை மையங்களாக கொண்டு விளங்கிய பல நகரங்களையும், தேசங்களையும் கொண்ட இஸ்லாமிய சாம்ராகியம், இந்த முஸ்லிம் தேசம் இஸ்லாமிய ஆட்சி உலகில் அல்லாஹ்வின் தூதரினால் நிலை நிறுத்தப்பட்டு 1300 ஆண்டுகள் மனித இனத்திற்கு அருளாய் இருந்த நிலை இறுதியில் 1924 ஆம் ஆண்டு துருக்கியில்தான் நிறுத்தப்பட்டது
கடந்த 86 வருடங்களுக்குப் பின்னர் இஸ்லாம் ஆட்சிப் பீடமேற முனைந்து வருகின்றது என்று இஸ்லாத்தின் எதிரிகள் விமர்சிக்கும் நிலை இன்று துருக்கியில் ஏற்பட்டுள்ளது
இன்று அத்தனை அடக்கு முறைகளையும் கடந்து அங்கு இஸ்லாம் எழுச்சி பெற்று வருகின்றது இஸ்லாமிய கோட்பாடுகளை கொண்ட நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி -Justice and Development Party- 2007 ஆண்டு நடந்த தேர்தலில் 341 ஆசனங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்து பல சாதனைகளையும் புறிந்துள்ளது நேற்று நடை பெற்ற துருக்கியில் அரசியலமைப்பை மாற்றியமைப்பது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பு முடிவு அந்த இஸ்லாமியகட்சிக்கு பெரும் வெற்றியை கொடுத்துள்ளது விரிவாக பார்க்க
நாட்டின் இராணுவ ஆட்சிக்கால அரசியலமைப்புத் தொடர்பான மாற்றத்திற்கு துருக்கி மக்கள் ஆதரவு வழங்கியுள்ளனர் இது இஸ்லாமிய சக்திகளுக்கு கிடைத்த பெரும் வெற்றியாக பார்க்கபடுகின்றது -மதச்சார்பற்ற இராணுவத் துறையில் அரசாங்கம் ஏற்படுத்தி வரும் படிப்படியான மாற்றங்கள் மிக நுணுக்கமானவை. இதற்கு முன்னர் துருக்கியின் மதச்சார்பற்ற சக்திகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சிகள் போன்று இனி ஒருபோதும் ஏற்படா வண்ணம் அவற்றை வேரோடு பிடுங்கி வீசக்கூடியவை. இஸ்லாமிய அடிப்படைவாத நிகழ்ச்சி நிரல் ஒன்று அவர்களுக்குப் பின்னால் உள்ளது என்ற மதச்சார்பற்ற எதிர் கட்சி கூக் குரல்களுக்கு மத்தியில் துருக்கிய இஸ்லாமியவாதிகள் மிகப் பெரும் சாதனைகளை நிலைநாட்டியுள்ளனர் என்று துருக்கிய அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
இஸ்லாமிய தலைமைத்துவத்தை கொண்டிருந்த துருக்கியில் 1924 கிலாபத் கலைக்கபட்டதாக அறிவிக்கப்பட் பின்னர் இஸ்லாத்துக்கு எதிரான அத்தனை நடை முறைகளும் அமுலுக்கு வந்தது நாடு பூராவும் அரை நிர்வாண முழு நிர்வாண பெண்களின் நடன விடுதிகள் திறக்கப்பட்டன , அல் குர்ஆன் மொழியான அறபு மொழி முழு அளவில் தடை செய்யப்பட்டது , அறபு கற்க முற்பட்டால் தேச துரோகமாக பார்க்கும் நிலை தோற்று விக்கப்பட்டது , அறபு மொழியில் பாங்கு சொல்வது தடை செய்யப்பட்டது இஸ்லாமிய உடை தடைசெய்யப்பட்டது, எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ் என்று சொல் தடை செய்யப்பட்டது அல்லாஹ் என்ற சொல்லுக்கு பதிலாக “தன்றி” -Tanri-என்ற சொல் அறிமுகப்படுத்த பட்டது அல்லாஹு அக்பர் என்று சொன்னதுக்காக பலர் சிறையில் அடைக்க பட்டனர்.
ஆனாலும் இன்று அத்தனை அடக்கு முறைகளையும் கடந்து அங்கு இஸ்லாம் எழுச்சி பெற்று வருகின்றது

Subscribe to:
Posts (Atom)