சிறைகளில் வதைக்க பட்ட ஆபியா சித்தீகி மேலும் 86 வருடங்கள் சிறையில்: அமெரிக்க நீதி
டாக்டர் ஆபியா சித்தீகி மீதான வழக்கின் தீர்ப்பு நேற்று 23.9.2010- அறிவிக்கப்பட்டுள்ளது அவர் ஆப்கானிஸ்தான் சிறையில் அமெரிக்க உளவுத் துறை சிப்பாயை சுட முயன்றார் என்ற வழக்கு பதியப்பட்டது இந்த வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு 86 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது இந்த தீர்ப்பு முஸ்லிம் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
டாக்டர் ஆபியா சித்தீகி அமெரிக்காவின் பெருமைமிக்க மாஸ்சூசெட்ஸ் நிருவனத்தின் உயிரியல் பட்டதாரி. அவரது முனைவர் பட்டத்துக்காக ப்ரெண்டிஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தைசார் நரம்பியல் விஞ்ஞானம் பாடமாக எடுத்து கலாநிதிப் பட்டம் பெற்றவர். தனது பட்டப்படிப்பை மேற்கொள்ளும்போது “பாகிஸ்தானை இஸ்லாமிய மயமாக்கலும் பெண்களின் மீது அதன் தாக்கமும்” என்ற தலைப்பில் அவர் மேற்கொண்டிருந்த ஆய்வுக்காக கரோல் வில்ஸன் விருது பெற்றவர் விரிவாக பார்க்க
……
இந்த தீர்ப்பு முஸ்லிம் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது அவைகள் எதிர்ப்பு ஆர்பாட்டங்களாகவும், இணைய பதிவுகளாகவும் , வெளிவருகின்றன அப்படி வெளியான ஒரு பதிவைத்தான் இங்கு நீங்கள் வீடியோவாக பார்க்கின்றீர்கள்
…..
ஆபியாவின் தந்தை பிரிட்டனில் கல்வி பயின்ற ஒரு மருத்துவர். அவரது மூத்த சகோதரர் ஒரு கட்டடக்கலை நிபுணர், மூத்த சகோதரி ஒரு பெண் மருத்துவர். ஆபியாவின் கணவர் அமெரிக்க மருத்துவமனையொன்றில் வைத்தியராக பணிபுரிந்தவர். 1990ஆம் ஆண்டிலிருந்தே ஆபியா அமெரிக்காவின் பொஸ்டன் என்ற இடத்தில் அவரது பெற்றோரோடு வசித்து வந்தார்.திடீரென ஆபியா காணாமல் போனார்
டாக்டர் ஆபியாவுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் ஒட்டு மொத்த மக்களும் திணறிக் கொண்டிருந்த வேளையில், ஆப்கானிஸ்தானின் பக்ரம்(Bagram) சிறையில் Prisoner 650 என்ற பட்டப் பெயர் கொண்ட ஒரு பெண் சித்திரவதைப்படுத்தப்படுவதாக செய்திகள் கசியத்துவங்கின. கொடுமைகளின் உக்கிரம் தாங்க இயலாமல் கைதி எண் 650 சுய நினைவை இழந்துள்ளதாக அத்தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து சுயாதீன ஊடகங்களின் பார்வை அந்தப் பக்கம் திரும்பியது.
மீடியக்களின் அழுத்தம் தாங்க முடியாமல் பிரிட்டிஷ் மேலவை உறுப்பினர் நஜீர் அஹ்மத் இது தொடர்பான கேள்வியை அவையில் எழுப்பி ஆதாரங்களை முன்வைத்துள்ளார். அதன்படி Prisoner 650 என்று பெயரிடப்பட்ட அப்பெண்மணி உடல் ரீதியாக கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகிஇருப்பதாகவும் சிறைக்காவலர்களால் தொடர்ந்து வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. கொடுமையின் உச்சகட்டமாக Prisoner 650 என்ற அப்பெண், பெண்களுக்கான கழிப்பறைகளைப் பயன்படுத்த மறுக்கப்பட்டார் என்றும் ஆண் கைதிகளின் முன்னிலையில் தன் இயற்கை உபாதைகளை நிறைவேற்றப் பலவந்தப்படுத்தப்பட்டார் என்றும் அதனால் ஆண் கைதிகள் அவரை பெண்கள் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரி உண்ணாவிரதம் இருந்ததாகவும் தகவல்கள் கசிந்தன.
ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ரம் சிறைச்சாலையில் ஒரு பெண் கடந்த நான்கு ஆண்டுகளாக விவரிக்க இயலாத அளவுக்கு துன்புறுத்தப்பட்டு வருவதாக குரல் எழுப்பியவர், ஜூலை 6, 2008இல் பிரபல பிரிட்டிஷ் பத்திரிக்கையாளராகவிருந்த இவோன் ரிட்லி. செய்திச் சேகரிப்பிற்க்காக சிறைச்சாலை சென்றிருந்த அவர் அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கும் வன்கொடுமைகளைக் கண்டு பதறிப் போனார். நொடி கூட தாமதிக்காமல் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பினை ஏற்பாடு செய்து இச்செய்தியை வெளி உலகிற்குக் கொண்டுவந்தார்.
அப்பெண்ணை நான் சாம்பல் நிறப் பெண்மணி என்றுதான் சொல்வேன். ஏனெனில் அப்பெண் பார்ப்பதற்கு ஒரு பிசாசு போன்றிருந்தாள். ஈனஸ்வரத்தில் புலம்புவதையும் அழுவதையும் அலறுவதையும் சிறைச்சாலையில் உள்ளவர்கள் எப்போதும் கேட்பார்களாம் என்று மனம் வெதும்பினார் இவோன் ரிட்லி. அப்பெண் யார் என்று தெரியாத நிலையில் மனிதாபிமான அடிப்படையில் அவரை மீட்டெடுப்பதற்க்காக பாகிஸ்தான் விரைந்தார்.
இதேவேளை, முஆசம் பெக் என்ற முந்தைய குவாண்டனாமோ சிறைவாசி தன் சிறை அனுபவங்களை நூலாக எழுதியிருந்தார். தான் இஸ்லாமாபாத்தில் வைத்து பெப்ரவரி 2003ல் கைது செய்யப்பட்டு பக்ரம் சிறையில் ஒரு வருடம் அடைக்கப்பட்டதாகவும் அதன் பின் குவாண்டனாமோ சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறியிருந்தார். தனது அறைக்குப் பக்கத்து அறையில் ஒரு பெண், பல ஆண் காவலர்களால் கொடுமைப்படுத்தப்படும் ஒவ்வொரு வேளையிலும் தனது நெஞ்சு விம்மி வெடித்து விடுவதை உணர்ந்ததாக தனது நூலில் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ‘ஜஸ்டிஸ் கட்சி’யின் தலைவரான இம்ரான் கான், கொடுமைகளைச் சந்திக்கும் அப்பெண் டாக்டர் ஆபியாதான் என்று தனது ஐயத்தினை வெளிப்படுத்தினார்.
2008 ஆகஸ்ட் 4ஆம் தேதி அமெரிக்க அரசு ஆபியா சித்தீகி ஆப்கானில் வைத்து கைது செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஜூலை 17ஆம் தேதி பாரியளவிலான தாக்குதலுக்கான வரைபடங்களுடன் குண்டு தயாரிப்பிற்கான குறிப்புக்களுடனும் அவரையும் அவரது மூத்த மகனையும் கைதுசெய்ததாக அறிவித்த அமெரிக்கா, 18ஆம் தேதி ஆபியா அமெரிக்க அதிகாரி ஒருவரை அவரது துப்பாக்கியைப் பறித்து சுட்டுக்கொலை செய்ய முயற்சித்ததாகவும் குற்றம் சுமத்தியது. அத்தோடு ஆபியா கடந்த 5 வருடங்களாக எங்கிருந்தார் என்பது தனக்கு தெரியாது என்று முழுமையாக மறைத்தது அமெரிக்க அரசு.
ஆகஸ்ட் 4ஆம் தேதி ஆபியா அமெரிக்காவின் நியூயார்க் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அவரது தோற்றம் முழுமையாக மாறியிருந்தது. சக்கர நாற்காலியொன்றில் ஆபியா கொண்டுவரப்பட்ட காட்சி அங்கிருந்த சகலரையும் கண்ணீர் மல்கச்செய்தது. சிறைச்சாலை சீருடை, குவாண்டனாமோவில் அணிவிப்பது போன்ற கையில்லாத மேலங்கியுடன் வந்தவர், அதற்கு மேலால் பக்கத்திலிருந்த ஒருவரிடம் ஒரு துணியை வாங்கி தலையையும் எலும்பில் சதை போர்த்தியது போன்ற கரங்களையையும் மறைத்துக் கொண்ட ஆபியாவின் இஸ்லாமிய உணர்வு கண்டு பார்வையாளர்கள் அதிர்ந்துபோயினர்.
டாக்டர் ஆபியா சிறையிலிருந்தபோது, அவரது ஒரு சிறுநீரகம் அகற்றப்பட்டுள்ளதோடு அவரது மனநிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என அவரது வழக்குரைஞர்கள் சொல்கிறார்கள். அவரது உடம்பிலிருந்த துப்பாக்கிச்சூட்டுக் காயத்தில் இரத்தம் உறைந்து சரியாகக் கவனிக்கப்படாமல் இருந்ததோடு பற்களும் உடைந்திருந்தன. மூக்கு உடைக்கப்பட்டு உதடு கிழிந்துள்ள ஆபியாவின் உடல் நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கவை தளமாக கொண்டு இயங்கும் சர்வதேச மனித உரிமைகளுக்கான அமைப்பான அமஷ்டி இன்டர்நேஷனல் இவரின் விடையம் சமந்தமாக எந்த ஒன்றையும் செய்ய முனையவில்லை என்பது அதிர்ச்சியான தகவல்
No comments:
Post a Comment