ஈராக் புதிய ஆக்கிரமிப்பு முறையின் கீழ் இயக்கம் பெறுகின்றது
கடந்த 8 வருடமாக ஈராக்கில் நடைபெற்று வந்த ஆக்கிரமிப்பு போர் புதிய வடிவம் பெறுகின்றது போரை, முடிவுக்கு கொண்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா இரு மாதங்களுக்கு முன்னர் அறிவித்துள்ளார், ஆனால் இன்னமும் சுமார் 50,000 அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகள் நிலைகொண்டுள்ளன அதற்கு அப்பால் ஈராக்கில் அமெரிக்கா மிகவும் பாரிய நாசக உளவு அமைப்பை நிறுவியுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் .
ஈராக்கின் ஒட்டுமொத்த நிர்வாகத்திலும் அமெரிக்க முகவர்கள் நியமிக்கபடுள்ளதாகவும் அமெரிக்க உளவு அமைப்புகள் ஈராக்கின் பலமான அடித்தளம்மிட்டுள்ளதாகவும் ஈராக்கின் ஒவ்வொரு செயல்பாடும் அமெரிக்க வெளிநாட்டு கொள்கைக்கு அமைய உளவு அமைப்புகளால் மறைமுகமாக தீர்மானிக்க படும் என்று தகவல்கள் தெரிவிகின்றன Tamil Video விரிவாக
உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதில் அமெரிக்காவே முன்னணி வகிக்கின்றது. விக்கிலீக் அண்மையில் வெளியிட்ட CIA இரகசிய ஆவணங்களில் இருந்து மேலும் இந்த உண்மைகள் அம்பலத்திற்கு வந்துள்ளன.
இந்த கதை இப்படி இருக்கஅமெரிக்காவின் கதையை கேட்டு ஈராக்கில் எப்படியோ இறுதியில் ஜனநாயகம் வந்துவிட்டது என்று தமது பிரச்சார ஏடுகளில் எழுதும் தமிழ் மொழி இஸ்லாமிய இயக்கமும் உண்டு இவர்கள் தேசிய அல்லது பிரதேச எல்லைகளுக்குள் மட்டும் இஸ்லாத்தின் சில சட்டங்களை பேசும் இஸ்லாமியவாதிகள் ? தமது நாட்டில் வதைக்கப்படும் கஷ்மீர் மக்களை பற்றி வாய் திறக்காதவர்கள் கஷ்மீர் முஸ்லிம்கள் இவர்களுக்கு யாரோ !!
தமிழ் நாட்டு முஸ்லிம்கள் அதிலும் தமது அமைப்பினர் மட்டும் ஒரு உடலின் உறுப்புகளை போன்றவர்கள் மற்ற எல்லையில் உள்ள முஸ்லிம்கள் யார் என்பதில் அவர்களுக்கே குழப்பம் கஷ்மீர் முஸ்லிம்கள் தாக்கப்பட்டால் தமிழ் நாட்டு முஸ்லிம்களுக்கு வலிக்க கூடாது என்று நினைக்கும் இவர்கள் தமது பிரச்சார ஏடுகளில் ஈராக்கில் ஜனநாயகம் வந்துவிட்டது என்று எழுத முற்படுவது அறியாமையை காட்டுகின்றது தவறுகளை உணரவேண்டும்.
ஈராக்கில் 8 ஆண்டுகளை கடந்தும் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்வதுடன் தற்போது புதிய ஆக்கிரமிப்பு ஒன்றை கொண்டு நடாத்த தேவையான அணைத்து கள வேலைகளையும் செய்து முடித்துள்ளது தான் நினைத்தவாறு ஈராக்கை இயக்க போதுமான உளவு கட்டமைப்பை ஏற்படுத்தி விட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன – ஈராக் புதிய ஆக்கிரமிப்பில்.
No comments:
Post a Comment