Monday, December 13, 2010

அமைதிப் பேரணி மீது இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் படை தாக்குதல்

கடந்த சனிக்கிழமை -11.12.2010- நேற்று அல் கலீல் அருகில் பெய்ட் உம்மார் பகுதியில் இஸ்ரேலிய பிரிவினைச் சுவருக்கு எதிராக இடம்பெற்ற வாராந்த அமைதிப் பேரணியினை இடைமறித்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை மேற்கொண்ட அடாவடித் தாக்குதலினால் பலஸ்தீனர்கள் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரின் தாக்குதலினால் பலஸ்தீனர்கள் பலரும் வெளிநாட்டு செயற்பாட்டாளர்களும் படுகாயமடைந்துள்ளனர். அமைதிப் பேரணியினர்மீது வீசியெறியப்பட்ட கண்ணீர்ப் புகைக்குண்டுகள், கைக்குண்டுகளினால் அனேகர் மயக்கமுற்றதோடு இன்னும் பலர் சுவாசிக்க முடியாமல் அவதிப்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் சாட்சியமளித்துள்ளனர் விரிவாக பார்க்க
மேற்படி பேரணியில் பலஸ்தீனர்களோடு பிரேஸில், ஆர்ஜென்டீனா மற்றும் அமெரிக்க நாட்டுச் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவர்கள் தத்தமது நாட்டுக் கொடிகளோடு, 1967 ஆம் ஆண்டு எல்லைகளுடனான பலஸ்தீனைப் பெற்றுக்கொள்வது பலஸ்தீனர்களின் உரிமை என்பதான சுலோகங்களையும் ஏந்தியவாறு பேரணியில் கலந்துகொண்டனர்.
எதிர்பாராதவிதமாக அங்கே வந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் அமைதிப் பேரணியினர்மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடாத்தியதோடு, அமெரிக்கப் பிரஜையான செயற்பாட்டாளர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.

No comments:

Post a Comment