ஹிஸ்புத் தஹ்ரீர் என்ற மூன்றாவது சர்வதேச இஸ்லாமிய அமைப்பு !
ஹிஸ்புத் தஹ்ரீர் என்ற அமைப்பு ஒரு சர்வதேச இஸ்லாமிய இயக்கமாகும் இந்த அமைப்பு உலகின் நாற்பது நாடுகளில் தற்போது இயங்குவதாகவும் 10 இலட்சம் உறுபினர்களை கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன மற்றைய சர்வதேச இஸ்லாமிய இயக்கங்களான 1928 இல் இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்களால் கிலாபத்தை மீண்டும் ஏற்படுத்தும் நோக்கம் கருதி உருவாக்கப்பட்ட இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பையும் அதேபோன்று இந்திய துணைக்கண்டத்தில் 1940 இல் மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்காளால் உருவாக்கப்பட்ட ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பையும் இதனுடன் ஒப்பிடும்போது ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பு இளையது இந்த அமைப்பு 1953 ஆம் ஆண்டு கிலாபத்தை மீண்டும் ஏற்படுத்தும் நோக்கம் கருதி தக்கியுதீன் அல் -நப்ஹானி (ரஹ்) அவர்காளால் பலஸ்தீன் ஜெருசலத்தில் தோற்றுவிக்கப்பட்டது.
மேற்கண்ட மூன்று அமைப்புகளும் வன்முறையற்ற சாத்வீக வழிமுறைகள் ஊடாக இஸ்லாமிய எழுச்சிக்காக உழைத்தாலும் இஹ்வானுல் முஸ்லிமூன் , ஜமாஅத்தே இஸ்லாமி ஆகிய அமைப்புகள் நடைமுறை அரசியலில் பங்குகொண்டு தேர்தல், பாராளுமன்ற உறுப்புரிமை என்ற அரசியல் நடைமுறை கட்டமைப்புகளையும் உள்ளடக்கிய இஸ்லாமிய எழுச்சி என்ற பரிமாணங்களை கொண்டு செயல்படுகிறது ஹிஸ்புத் தஹ்ரீர் தன்னை முழுமையான ஒரு இஸ்லாமிய அரசியல் கட்சியாக அடையாளப் படுத்துவதிலும் அதேவேளை நடைமுறை அரசியலில் பங்குகொள்வதில் இருந்து முற்றிலுமாக விலகிய போக்கை கடைபிடிப்பதிலும் தன்னை வேறுபடுத்தி நிற்கின்றது.
மேற்சொன்ன மற்றைய இரண்டு இஸ்லாமிய அமைப்புகளையும் விடவும் கிலாபத் என்ற சொல்லை தற்போதைய உலகின் அதிகம் முழங்கும் அமைப்பு ஹிஸ்புத் தஹ்ரீர்தான் , இன்று உலகில் முஸ்லிம் சமுகம் தனது முதற் பணியாக கிலாபத்ததை ஏற்படுத்த வேண்டும் அதற்கு பிறகுதான் இஸ்லாமிய அழைப்பு பணிகூட கடமையாகும் என்ற நிலைபாட்டில் உள்ளவர்கள் இவர்கள் கடந்த பல காலம் இயங்கிவந்தாலும் பிரிட்டனில் இவர்களின் நடவடிக்கைகள் செல்வாக்கு செலுத்தியதன் பின்னர்தான் மேற்குலகின் கவனத்தை பெற்றுள்ளனர் இவர்கள் ஆரம்பத்தில் பயங்கரவாத ,தீவிரவாத அமைப்பு போன்று பார்க்கபட்டாலும் தற்போது இவர்கள் பயங்கரவாதம் ,தீவிரவாதம் போன்ற வற்றுடன் எந்த தொடர்புகளையும் கொண்டிராதவர்கள் என்பதுடன் அதற்கு எதிரானவர்கள் என்ற மேற்கின் நிலைபாட்டை வென்றுவருகின்றனர்.
அண்மையில் துனூசியாவில் ஏற்பட்ட அரசுக்கு எதிரான மக்கள் ஆர்பாட்டங்களிலும் இவர்கள் பங்குகொண்டுள்ளனர் இவர்கள் துனூசியாவில் தொகையில் குறைவாக இருந்தாலும் கிலாபத்தை நோக்கி துனூசிய மக்களை பகிரங்கமாக அழைத்து வருகின்றனர்,
இன்றைய இஸ்லாமிய எழுச்சியுடன் அந்த மூன்று அமைப்புகளும் தொடர்புபட்டாலும் அவை ஒவ்வொன்றினதும் வேலைத் திட்டங்களின் ஆழ அகலங்கள் அதன் பரிமாணங்கள் மிக பாரிய வித்தியாசங்களை கொண்டது சமூகத்தில் இஸ்லாமிய உட்கட்டமைப்பு என்ற விடயத்தில் இஹ்வானுல் முஸ்லிமூன், ஜமாஅத்தே இஸ்லாமி ஆகியன ஆழ ஊடுருவியுள்ளன என்பது குறிபிடத்தக்கது -அண்மையில் ஹிஸ்புத் தஹ்ரீர் துனூசியாவில் செய்த ஆர்ப்பாட்டம் பார்க்கலாம்
ஹிஜ்பூர் தஹ்ரீர் இயக்கம் இஸ்லாமியர்களுக்கு எதிரான இயக்கமாக அல்லவா பிரச்சாரம் செய்யப்படுகிறது . அவர்கள் எங்கேயும் போராடிக்கொண்டு இருப்பதாக அறியமுடியவில்லையே . அவர்களின் கொள்கைதான் என்ன . தயவு செய்து விளக்கவும்
ReplyDelete