கிலாபத் இன்றி 87 ஆண்டுகள் கிலாபத் நோக்கி முஸ்லிம் உம்மாஹ் மீண்டும் எழுச்சி பெறுகின்றது
இன்று 3.3.2011 இதே திகதியில் 3.3.1924 ஆம் ஆண்டு திங்கள் கிழமை காலை வேளையில் கிலாபத் உலகை விட்டும் அழிக்கபட்டது மனித குலத்துக்கு விடுதலையாய் இருந்த முஸ்லிம்களின் சாம்ராஜ்யம் வீழ்த்தப்பட்டது மேற்கு கண்ட கனவு நிஜமானது இஸ்லாத்தின் கிலாபத்தின் எஞ்சிய பகுதிகளையும் எதிரிகள் துருக்கிய இஸ்லாமிய சாம்ராஜியத்தை தமது முகவர்களின் ஊடாக வெற்றி கொண்தன் மூலம் அழித்தனர்
இஸ்லாமிய ஆட்சி உலகில் அல்லாஹ்வின் தூதரினால் நிலை நிறுத்தப்பட்டு 7ஆம் நூற்றாண்டு தொடக்கம் 19 ஆம் நூற்றாண்டு வரை 1300 ஆண்டுகள் மனித இனத்திற்கு அருளாய் இருந்த வந்துள்ளது கிலாபத்தை உலகை விட்டும் அழிக்க தேசியவாதம் என்ற மேற்கின் விஷம் ஊட்டப்பட்டு முஸ்லிம் உம்மாஹ் பல ஆண்டுகள் ஹோமா நிலையில் போடப்பட்டது, இன்று கிலாபத் அழிக்கப்பட்டது 87 ஆண்டுகள் முஸ்லிம் உம்மாஹ் ஹோமா நிலையில் இருந்து விழிக்க தொடங்கியுள்ளது விரிவாக
முஸ்லிம் உம்மாஹ் கிலாபத் நோக்கிய நகர்வுகளை மீட்டும் ஆரம்பித்துள்ளது அதன் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது இன்ஷால்லாஹ் கிலாபத் மீண்டும் உலகில் நிலை நிறுத்தப்படும் என்ற அல்லாஹ்வின் தூதரின் வாக்குறுதி நிஜமாகும் காலம் மிகவும் அண்மித்து வருகின்றது என்பதைத்தான் முஸ்லிம் உம்மாஹ்விம் எழுச்சி முழக்கம் சொல்லி நிற்கின்றது
கிலாபத் அழிப்பு பற்றிய எமது கட்டுரை:
கிலாபத் அழிக்கப்பட்டு இன்றுடன் 86 வருடங்கள் கிலாபத் அழிப்பு ஒரு வரலாற்று பார்வை
No comments:
Post a Comment