அரபு முஸ்லிம் உலக மக்கள் எழுச்சிக்கு ஆதரவு தெரிவித்து லண்டனில் பேரணி
நேற்று லண்டனில் அரபு முஸ்லிம் நாடுகளில் நடைபெறும் மக்கள் எழுச்சிக்கு ஆதரவான மக்கள் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது இதில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர் பேரணியில் கலந்து கொண்டவர்கள் லிபியா,சிரியா, யெமன், பஹ்ரைன், ஆகிய நாடுகளில் ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுச்சி பெற்றுள்ள மக்களுக்கு தமது ஆதரவை தெரிவித்து இந்த பேரணியை நடத்தியுள்ளனர்.
லண்டனில் அரபு முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் எட்வேர்ட் பகுதியில் இருந்து லிபியா,சிரியா, யெமன், பஹ்ரைன் ஆகிய நாடுகளின் தூதராளையங்கள் அமைந்திருக்கும் பகுதியை நோக்கி அந்த பேரணி சென்றுள்ளது அங்கு கலந்து கொண்டவர்கள் ‘Arab Puppet Rulers Must Go!’; ‘Syria – Yemen – Bahrain – Libya:Time for Real Change’; ‘No to Colonialism. Yes to Khilafah’; and ‘One Ummah .. Want Justice .. Want Unity .. Want Change .. Khilafah is the Answer’. போன்ற செய்திகளை கொண்ட பதாகைகளை சுமந்தவர்களாக கலந்து கொண்டுள்ளனர் இந்த பேரணியை பிரிட்டன் ஹிஸ்புத் தஹ்ரீர் ஏற்பாடு செய்துள்ளது
ஹிஸ்புத் தஹ்ரீரின் பேச்சாளர்கள் பேரணியில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளனர் இங்குஉரையாற்றிய பிரிட்டன் ஹிஸ்புத் தஹ்ரீரின் ஊடக பேச்சாளர் முஸ்தபா இந்த பேரணி லிபியா,சிரியா, யெமன், பஹ்ரைன், ஆகிய நாடுகளில் பிரிட்டனில் வாழும் மக்களை ஒன்றுபடுத்தியுள்ளது நாங்கள் இங்கு மேற்கு உலகு சார்பான அரசுகளுக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளோம் ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுச்சி பெற்றுள்ள மக்களுக்கு ஆதரவாக கூடியுள்ளோம் இங்கு கூடியுள்ள அனைவரும் இஸ்லாமிய பெறுமானங்களை கொண்ட கிலாபத்தான் மத்திய கிழக்கிலும் , வட ஆபிரிக்காவிலும் பொதுவாக முஸ்லிம் உலகிலும் ஒன்றுமைகும் அமைதிக்குமான சிறந்த சந்தர்பத்தை வழங்கும் என்று நம்புகின்றோம் என்று தெரிவித்துள்ளார.
No comments:
Post a Comment