Monday, July 11, 2011

கிலாஃபத் எவ்வாறு வீழ்த்தப்பட்டது

கிலாஃபத் எவ்வாறு வீழ்த்தப்பட்டது

'கிலாஃபத் எவ்வாறு வீழ்த்தப்பட்டது' என்பதை மிக ஆழமாக ஆராயும், காலம் சென்ற பலஸ்தீனிய அறிஞர் அஷ் ஷேக் அப்துல் கதீம் ஸல்லும் (ரஹ்) எழுதிய 'கைப குதிமத்துல் கிலாஃபா' என்ற அரபு நூலின் தமிழாக்கத்தை இங்கே பகுதி பகுதியாக வழங்குகிறோம்!

இஸ்லாத்திற்கும் குஃப்ருக்கும் இடையிலான போராட்டம்

இஸ்லாம் அருளப்பட்ட நாளிலிருந்து இஸ்லாமிய சிந்தனை களுக்கும் குஃப்ர் சிந்தனைகளுக்கும் மத்தியிலும் முஸ்லிம்களுக்கும் காஃபிர்களுக்கும் மத்தியிலும் போராட்டம் உருவாகிவிட்டது. அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அனுப்பப்பட்ட துவக்க காலத்தில் இந்த போராட்டம் அறிவார்ந்த போட்டமாகவே (Intellectual struggle) இருந்து வந்தது. அதில் எத்தகைய ஆயுத போராட்டமும் இடம் பெறவில்லை. மதினா மாநகரில் இஸ்லாமிய அரசு நிறுவப் படும் வரை இத்தகைய சூழலே நீடித்து வந்தது. இஸ்லாமிய அரசு நிறுவப்பட்ட பின்னர் இராணுவமும் அதிகார அமைப்பும் உரு வாக்கப்பட்டன. அதன் பின்னர் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அறிவார்ந்த போராட்டத்தை ஆயுதபோரட்டத்துடன் இணைத் தார்கள். இதைத் தொடர்ந்து ஜிஹாது தொடர்பான வசனங்கள் அருளப்பட்டன. காஃபிர்களுக்கு எதிரான முஸ்லிம்களின் போராட் டமும் தொடர்ந்தது. அறிவார்ந்த போராட்டத்துடன் இணைந்த இந்த இரத்தம் சிந்தும் ஆயுத போராட்டம் கியாமநாள் வரை தொடர்ந்து நடைபெறும் என்று அல்லாஹ்வின் தூதர் அறிவித் திருக்கிறார்கள். அந்த நாள் வரும்போது அல்லாஹ் பூமியையும் அதில் வசிப்பவர்களையும் சுவீகரித்துக் கொள்வான். இதன் காரணமாகத்தான் குஃபர் என்பது இஸ்லாத்தின் கடும்பகையாக இருந்து வருகிறது! இவ்வாறே இந்த உலகத்தில் குஃபர் இருக்கும் வரை காஃபிர்கள் முஸ்லிம்களுக்கு எதிரியாகவே இருந்து வருவார்கள்! மறுமை நாள் வரும் வரை முஸ்லிம்களுக்கும் காஃபிர் களுக்கும் இடையில் நடக்கும் இந்த போராட்டம் தொடர்ந்துகொண்டேயிருக்கும்! இது திட்டவட்டமானதும், என்றும் மாறாதது மான சத்தியமாகும். எனவே இந்த கருத்து எப்போதும் முஸ்லிம் களின் உள்ளத்தில் தெளிவாக நிலைத்திருக்க வேண்டும், மேலும் இந்த அளவுகோலின் அடிப்படையில் மட்டுமே இஸ்லாத்திற்கும் குஃப்ருக்கும் இடையிலுள்ள உறவும் முஸ்லிம்களுக்கும் காஃபிர் களுக்கும் இடையிலுள்ள உறவும் தீர்மானிக்கப்பட வேண்டும்.



கடுமையும் உக்கிரமும் நிறைந்த திட்டவட்டமான அறிவார்ந்த போராட்டம் பதிமூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றது. இஸ்லாமிய சிந்தனைகளுக்கும் குஃப்ர் சிந்தனைகளுக்கும் மத்தியில் நடந்த இந்த கடுமையான போராட்டத்தில் இஸ்லாமிய சிந்தனைகள் வெற்றிபெற்றதன் விளைவாக அல்லாஹ் இஸ்லாத்திற்கு வெற்றியளித்தான். முஸ்லிம்களை பாதுகாக்கக்கூடியதும், இஸ்லாத் தின் பாதுகாப்பு கேடயமாக இருக்கக் கூடியதும், ஜிஹாது மூலமாக மக்களுக்கு நேர்வழியை காட்டுவதற்கு ஆற்றல் கொண்டதுமான ஓர் அரசு மதினாவில் நிறுவப்பட்டது. அடுத்தடுத்து நிகழ்ந்த தொடர்ச்சி யான யுத்தங்களில் இஸ்லாத்திற்கும் குஃப்ருக்கும் மத்தியிலும் முஸ்லிம்களின் படைகளுக்கும் காஃபிர்களின் படைகளுக்கும் மத்தி யிலும் உக்கிரமான போர்கள் நிகழ்த்தப்பட்டன. அனைத்து போர் களிலும் முஸ்லிம்கள் வெற்றியை தக்கவைத்துக் கொண்டனர். சில யுத்தங்களில் முஸ்லிம்களுக்கு பின்னடைவு ஏற்பட்டபோதிலும் எப்போதும் போர்க்களத்தில் முஸ்லிம்களே வெற்றிவாகை சூடி னார்கள். ஏறத்தாழ ஐந்து நூற்றாண்டுகளுக்கு மேலாக முஸ்லிம்கள் தொடர்ந்து வெற்றிக் கொடி நாட்டினார்கள்.



இந்த காலகட்டத்தில் இஸ்லாமிய அரசு முன்னணி அரசாகவும் முஸ்லிம்கள் உலகின் முன்னணி சமுதாயமாகவும் திகழ்ந்து வந்தார்கள். மானுட வரலாற்றில் முஸ்லிம்கள் நீங்கலாக வேறெந்த சமுதாயமும் இத்தகைய ஒரு மாபெரும் வெற்றியை அடைந்திட வில்லை. மாறாக இந்த ஒப்பற்ற வெற்றி இஸ்லாமிய அரசிற்கு மட்டுமே உரியதாக இருக்கிறது. எனினும் காஃபிர்கள் குறிப்பாக ஐரோப்பிய ஆட்சியாளர்களாக இருந்துவந்தவர்கள் இஸ்லாத்தின் இந்த வெற்றியை நோட்டமிட்டு வந்தார்கள். ஏனெனில் இஸ்லாத்தை தாக்கி அழித்துவிட அவர்கள் சரியான தருணம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். முஸ்லிம்கள் குறித்து காஃபிர்கள் தங்கள் நெஞ்சங்களில் வஞ்சக எண்ணம் கொண்டிருந்தார்கள், ஏனெனில் முஸ்லிம்களையும் இஸ்லாத்தின் எழுச்சியையும் அவர்கள் பெரும் அச்சுறுத்தலாகவே கருதினார்கள். ஆகவே
முஸ்லிம்களை சுவடுதெரியாமல் அழித்துவிட அவர்கள் விரும்பி னார்கள். வாய்ப்புகள் கிடைத்தபோதெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் தொகுப்பதிலும் இஸ்லாத்திற்கு எதிராக சதித் திட்டங்கள் தீட்டுவதிலும் அவர்கள் பெருமுயற்சி எடுத்துக் கொண்டார்கள்.




ஹிஜ்ரி ஆறாம் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்திலும் (கி.பி. பதினோராம் நூற்றாண்டு) ஹிஜ்ரி ஏழாம் நூற்றாண்டின் துவக்கத் திலும் இஸ்லாமிய அரசின் மாகாணங்களில் (Wilayah) பிளவு ஏற்பட்டிருந்த நிலையையும், உள்விவகாரக் கொள்கை, நிதியியல், இராணுவம் மற்றும் அதிகாரம் ஆகிய விஷயங்களில் சில முக்கிய பிராந்தியங்களிலும் மாகாண ஆளுநர்கள் தன்னிச்சையாக செயல் பட்டு வந்த நிலையையும் காஃபிர்கள் கண்ணுற்றார்கள். ஒருமைத் துவம் கொண்ட அரசாக (Unitary state) இல்லாமல் கூட்டாட்சி முறையில் (Federal state) இயங்கும் அரசு போன்றே இஸ்லாமிய அரசு இயங்கிவந்து. மிம்பர்களில் நின்றவாறு கலீஃபாக்களுக்காக துஆ மேற்கொள்வது, கலீஃபாவின் பெயர் பொறித்த நாணயங்களை அச்சிடுவது மற்றும் கராஜ் நிதியின் ஒரு பகுதியை கலீஃபாவுக்கு அனுப்புவது போன்ற சில சம்பிதாயங்களை மட்டும் மாகாண ஆளுநர்கள் பின்பற்றுவது என்ற நிலைக்கு கலீஃபாவின் அதிகாரம் சுருட்டப்பட்டது. இந்த நிலையை கண்ணுற்ற ஐரோப்பிய அரசுகள் முஸ்லிம்களுக்கு எதிராக சிலுவை யுத்தக்காரர்களை அனுப்பி கடும்போர் தொடுத்தன. கடுமையாக நடந்த இந்த யுத்தத்தில் முஸ்லிம்கள் தோல்வியை தழுவினார்கள். பாலஸ்தீனம், லெபனான் மற்றும் சிரியா ஆகியவை அடங்கிய ஷாம் பிராந்தியத்தை காஃபிர்கள் கைப்பற்றினார்கள். இந்த பிராந்தியத்தை அவர்கள் பல ஆண்டுகளுக்கு தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்தார்கள். திரிபோலி என்ற பகுதியை ஒரு நூற்றாண்டிற்கு மேலாக தங்கள் கட்டுப் பாட்டில் வைத்திருந்தார்கள்.



முஸ்லிம்களுக்கும் சிலுவையுத்தக்காரார்களுக்கும் மத்தியில் நடைபெற்ற யுத்தங்கள் ஒரு நூற்றாண்டு காலம் நடைபெற்று வந்தது. காஃபிர்கள் கைப்பற்றிய பகுதிகளை மீட்பதற்கு கடுமை யான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், இந்த யுத்தத்தின் விளைவாக முஸ்லிம் உம்மா குழப்பமான நிலையையே எதிர் கொள்ள நேரிட்டது. மேலும் இஸ்லாமிய அரசின் அந்தஸ்தை இந்தயுத்தம் வெகுவாக குறைத்துவிட்டது. இந்த யுத்தத்தில் முஸ்லிம்கள் தோல்வியை தழுவினார்கள். அவர்கள் மீது காஃபிர்கள் தங்கள் வெற்றியை நிலைநாட்டினார்கள். இந்த யுத்தத்தில் காஃபிர்கள் திட்டவட்டமான வெற்றியை நிலைநாட்டினார்கள். இஸ்லாத்திற்கு எதிராக காஃபிர்கள் அறிவார்ந்த முறையிலோ அல்லது ஆன்மீக ரீதியாகவோ வெற்றி பெறுதல் என்பது ஒருபோதும் நிகழமுடியாது என்றபோதிலும் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு இழிவும் தலைக்குனிவும் முஸ்லிம்கள் மீது விழுந்தன. சிலுவை யுத்தங்களின் இறுதிக் கட்டத்தில் ஷாம் பிராந்தியத்தில் இருந்து காஃபிர்களை விட்டியடிப்பதில் வெற்றி கண்ட போதிலும் சிலுவை யுத்தம் நடந்த காலகட்டம் முஸ்லிம்கள் தோல்வியுற்ற காலகட்டமாகவே கருதப்படுகிறது. ஏனெனில், காஃபிர்களுடன் நிகழ்ந்த சிலுவை யுத்தத்தை முஸ்லிம்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் சிலுவை யுத்தம் முடிந்த உடனேயே மங்கோலியர்களின் படையெடுப்பும் பாக்தாத் நகரில் அவர்கள் நிகழ்த்திய படுகொலை சம்பங்களும் அடுத்தடுத்து நிகழ்ந்தன. இந்த பின்னடை வின் தொடர்ச்சியாக அதே வருடத்தில் (ஹிஜ்ரி 656, கி.பி. 1258) டமாஸ்கஸ் நகம் மங்கோலியர்களின் கைகளில் வீழ்ந்தது. இதன் பின்னர் (ஹிஜ்ரி 658, கி.பி. 1260) செப்டம்பர் 3ல் அய்ன் ஜாலூத் யுத்தம் நிகழ்ந்தது. அதில் மங்கோலியர்கள் முறியடிக்கப்பட்டனர். மங்கோலியர்களுக்கு எதிராக பெற்ற மாபெரும் வெற்றியின் காராணமாக முஸ்லிம்கள் உள்ளத்தில் பெரும் எழுச்சி தோன்றியது. அவர்கள் சிந்தனையில் ஜிஹாது பற்றிய புத்துணர்வு எழுந்து அலைமோதியது. உலகமெங்கும் இஸ்லாத்தின் செய்தியை எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை அவர்கள் உணர்ந்து கொண் டார்கள். எனவே, ஜிஹாதின் வழியிலான முஸ்லிம்களின் வெற்றிப் பயணம் மீண்டும் தொடர்ந்தது. பைஸாந்திய பேரரசிற்கு எதிரான ஜிஹாது மறுபடியும் தொடர்ந்தது. அடுத்தடுத்து யுத்தங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மேற்கொள்ளப்பட்டன. முஸ்லிம்கள் வெற்றிக்குமேல் வெற்றியை ஈட்டினார்கள். ஹிஜ்ரி ஏழாம் நூற்றாண்டு வாக்கில் முஸ்லிம் உம்மா மறுபடியும் ஜிஹாது என்ற வெற்றிப் பயணத்தை தொடங்கியது; தொடர்ச்சியாக பல யுத்தங்கள் நிகழ்ந்தன. சில தருணங்களில் முஸ்லிம்கள் பின்னடைவு எய்தியபோதிலும் எப்போதும் அவர்களே வெற்றி வீரர்களாக திகழ்ந்தார்கள். பல யுத்தங்களில் வெற்றியை ஈட்டியதன் மூலமாக பல நிலப்பரப்புக்களை முஸ்லிம்கள் கைப்பற்றினார்கள். ஹிஜ்ரி 12ம் நூற்றாண்டு (கி.பி. 18ஆம் நூற்றாண்டு) வரை அது உலகின் முன்னணி அந்தஸ்து பெற்ற மாபெரும் வல்லரசாக விளங்கியது!




பிற்காலத்தில் ஐரோப்பாவில் நிகழ்ந்த மாற்றங்கள் முஸ்லிம் உம்மத்தில் எதிர் விளைவுகளை ஏற்படுத்தின. ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட தொழிற்புரட்சி (Industrial revolution) உலக நாடுகளில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தின. தொழிற்புரட்சியால் விளைந்த தாக்கங்களின் முடிவாக முஸ்லிம்கள் குழப்பம் அடைந்து செயலற்றுப் போகும் நிலை ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக உலக நாடுகளின் அரசியல் அணிகளிலும் அவற்றின் பலத்திலும் மாற்றம் ஏற்பட்டு இஸ்லாமிய அசு தனது உயர்ந்த நிலையிலிருந்து சிறிது சிறிதாக வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டது! இறுதியாக, ஐராரோப்பியர்களின் கட்டுக்கடங்காத பேராசைகளுக்கு இரையாகிப் போகும் கொள்ளைப் பொருளாக மாறி அழிவை எதிர்கொண்டது! இதன்விளைவாக இஸ்லாமிய அரசு வெற்றிகொண்ட நிலப்பரப்புகளையும் ஏற்கனவே அதன் அதிகாரத்தில் இருந்துவந்த நிலப்பரப்பு களையும் காஃபிர்களிடம் விட்டுவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. இஸ்லாமிய அரசின் நிலப்பரப்புகளை காஃபிர்கள் சிறிதுசிறிதாக ஆக்கிரமித்தார்கள்.



இஸ்லாமிய அரசு பலவீனம் அடைந்துவிட்டதைவும் முஸ்லிம் களின் எழுச்சி முற்றாக முடிந்துபோய்விட்டதையும் இந்நிகழ்ச்சி உறுதிப்படுத்தியது! அதன் பின்னர் இஸ்லாமிய அரசை சர்வதேச அரசியல் அரங்கிலிருந்து முழுமையாக நீக்குவதற்கும் அதன் மூலமாக மக்களின் வாழ்க்கை விவகாரங்களிலிருந்து இஸ்லாத்தை அகற்றுவதற்கும், ஐரோப்பிய அரசுகள் திட்டம் தீட்டி செயல் பட்டன. வேறு வகையில் கூறுவதென்றால் முஸ்லிம்களின் மீது புதிய சிலுவையுத்தத்தை துவக்குவதற்கு ஐரோப்பியர்கள் திட்டம் வகுத்தார்கள்! எனிலும் முதல் சிலுவை யுத்தம் போல அல்லாமல் முஸ்லிம்களின் மீது போர் தொடுப்பது மற்றும் இஸ்லாமிய அரசை வெற்றி கொள்வது ஆகிய நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு பல வஞ்சக நோக்கங்களுடன் புதிய சிலுவை யுத்தம் தொடுக்கப்பட்டது. இந்த சிலுவை யுத்தத்தின் பின்னணியில் படுபயங்கரமான நோக்கங்களும் ஆழமான சதித்திட்டங்களும் இடம்பெற்றிருந்ததால் அதன் விளைவு மிக ஆழமானதாகவும் தீவிரமானதாகவும் இருந்தது. இஸ்லாமிய அரசை முற்றாக வீழ்த்தி அதன் ஆழமான வேர்களை அடிச்சுவடு தெரியாமல் அழித்துவிடுவது புதிய சிலுவையுத்தத்தின் நோக்கமாக இருந்தது. மேலும் சில புரோகித சம்பிரதாயங்களையும் ஆன்மீக சடங்குகளையும் தவிர்த்து இஸ்லாத்தின் வேறொன்று மில்லை என்ற சிந்தனையை உருவாக்குவதன் மூலம் முஸ்லிம்களின் உள்ளங்களிலிருந்து இஸ்லாத்தை வேரோடு பிடுங்கி எறிந்து
விடுவது புதிய சிலுவை யுத்தக்காரர்களின் நோக்கமாக இருந்தது.

இஸ்லாமிய அரசிற்கு எதிராக ஐரோப்பிய அரசுகள் மேற்கொண்ட சதித்திட்டங்கள்



முஸ்லிம்களின் நிலப்பரப்புகளை பங்கீடு செய்துகொள்வது தொடர்பாக காஃபிர்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடுகள் இருந்துவந்த போதிலும் இஸ்லாத்தை அழிக்கும் சிந்தனையில் அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தை கொண்டிருந்தார்கள். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அவர்கள் பல்வேறு வழி முறைகளை கையாண்டார்கள். துவக்கத்தில் முஸ்லிம்களை சிந்தனை ரீதியாக பலவீனப்படுத்தும் நோக்கத்தோடு தேசியவாதம் (Nationalism) தேசப்பற்று (Patriotism) மற்றும் விடுதலை (Freedom) ஆகிய குஃப்ர் சிந்தனைகளை அவர்களிடம் உருவாக்கினார்கள். மேலும் இஸ்லாமிய அரசிற்கு எதிராக மக்களை தூண்டிவிட்டதோடு பணத்தையும் ஆயுதத்தையும் அதற்காக விநியோகம் செய்தார்கள். செர்பியாவிலும், கிரேக்கத்திலும் இத்தகைய சதிச்செயல்களை அரங்கேற்றியதன் மூலம் ஐரோப்பிய அரசுகள் இஸ்லாமிய அரசின் முதுகில் குத்தும் இழிசெயலை மேற்கொண்டன. கி.பி. 1798ல் ஃபிரான்ஸ் எகிப்து பிராந்தியத்தை ஆக்கிரமித்தது. பின்னர் பாலஸ்தீனத்தின் மீது படையெடுத்து அதை ஆக்கிரமிப்பு செய்துகொண்டது. இஸ்லாமிய அரசுக்கு மரணஅடி கொடுக்கும் நோக்கத்தோடு ஷாம் பகுதி முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்ய அது திட்டமிட்டது. ஆனால் அடுத்து நிகழ்ந்த யுத்தத்தில் தோல்வியை தழுவியதால் தான் ஆக்கிரமிப்பு செய்துவந்த பகுதி களை இஸ்லாமிய அரசிடம் ஒப்படைத்துவிட்டு எகிப்திலிருந்து வெளியேறியது.

வஹ்ஹாபிகளின் தோற்றமும் சவூதி அரசின் உருவாக்கமும்


இஸ்லாமிய அரசிற்குள் இருந்தவாறு அதன்மீது தாக்குதல் மேற்கொள்ளும் விதமாக தனது கங்காணி (Agent) அப்துல் அஜீஸ் இப்னு முஹம்மது இப்னு சவூது மூலமாக பிரிட்டன் முயற்சி மேற்கொண்டது. இக்காலகட்டத்தில் இஸ்லாமிய அ ரசிற்கு எதிராக வஹ்ஹாபிகள் ஓர் அரசை உருவாக்கி, அதன் ஆட்சியாளர்களாக முஹம்மது இப்னு சவூதும் பின்னர் அவரது மகன் அப்துல் அஜீஸும் இருந்துவந்தார்கள். இவர்களுக்கு பிரிட்டன் ஆயுதங்களும் பணமும் வழங்கியது. பிரிவினை வாதத்தின் அடிப்படையில் இவர்கள் கலீஃபாவின் அதிகாரத்திற்கு உட்பட்ட இஸ்லாமிய நிலப்பரப்புகளை கைப்பற்றிக் கொள்வதற்கு திட்டம் வகுத்து செயல்பட்டார்கள். அவர்கள் கலீஃபாவுக்கு எதிμõக ஆயுதமேந்தி இஸ்லாமிய இμõணுவத்திற்கு எதிராக போர் செய்தார்கள்! அதாவது அமீருல் மூஃமினீனின் படைகளுக்கு எதிராக போர் செய்தார்கள். ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு ஆயுத தளவாடங்களை வழங்கி இஸ்லாமிய அரசிற்கு எதிராக கலகம் புரிவதற்கு பிரிட்டன் உறுதுணையாக இருந்தது. இஸ்லாமிய அரசின் கீழிருந்த நிலப்பரப்புகளை கைப்பற்றி அவற்றில் வஹ்ஹாபி மத்ஹப் அடிப்படையில் உள்ள ஆட்சியை நிறுவிடவும் தங்கள் மத்ஹபிற்கு முரண்படும் மற்ற மத்ஹபுகளை பலவந்தமாக வீழ்த்திடவும் வஹ்ஹாபிகள் விரும்பினார்கள். இதனடிப்படையில், அவர்கள் கி.பி. 1788ல் குவைத் பகுதியை சூறையாடி அதை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். பிறகு வடக்குமுகமாக முன்னேறி பாக்தாக் நகரை கைப்பற்றிக் கொண்டார்கள். கர்பலாவையும் அதில் அமைந்துள்ள ஹுஸைன் அவர்களின் கபுரையும் கைப்பற்றி, முஸ்லிம்கள் ஜியாரத் செய்வதை தடைசெய்யவும் அதை அழித்துவிடவும் திட்டமிட்டார்கள். இதன்பின்னர் மக்காவின் மீது தாக்குதல் தொடுத்து கி.பி. 1803ல் அதை கைப்பற்றிக் கொண்டார்கள்.





கி.பி. 1804ம் ஆண்டு துவக்கத்தில் மதினா மாநகர் அவர்களின் கைகளில் வீழ்ந்தது. அல்லாஹ்வின் தூதர் அவர்களின் மண்ணறையை நிழலிட்டுக் கொண்டிருந்த பெரும் மண்டபத்தை உடைத்தெறிந்துவிட்டு அதில் பதிக்கப்பட்டிருந்த இரத்தின கற்களையும் பொன் ஆபரணங்களையும் பெயர்த்து எடுத்துவிட்டார்கள். ஹிஜாஸ் பகுதி முழுவதையும் கைப்பற்றிய பின்னர் ஷாமை நோக்கி அவர்கள் படையெடுத்தார்கள். கி.பி. 1810ல் ஹிம்ஸ் பகுதியை நெருங்கியவுடன், இரண்டாம் முறையாக டமாஸ்கஸ் நகரைத் தாக்கியதோடு நஜஃப் பகுதியையும் தாக்கினார்கள். டமாஸ்கஸ் நகரத்தில் நிலைகொண்டிருந்த இஸ்லாமிய இராணுவம் வீரத்துடன் போராடி தன்னை தற்காத்துக் கொண்டது. டமாஸ்கஸ் நகரை கைப்பற்றுவதற்கு தாக்குதல் மேற்கொண்ட வஹ்ஹாபிகள் அதே சமயத்தில் வடக்குமுகமாக முன்னேறி அலிப்போ பிராந்தியம் வரையுள்ள சிரியாவின் பெரும்பாலான பகுதிகளில் தங்கள் அதிகார எல்லையை விரிவாக்கிக்கொண்டார்கள்.





பிரிட்டனின் தூண்டுதலின் அடிப்படையில்தான் வஹ்ஹாபிகள் தங்களின் திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என்பது தெளிவான உண்மையாகும். ஏனெனில் முஹம்மது இப்னு சவூது பிரிட்டனின் கங்காணியாக இயங்கிவந்தார். வஹ்ஹாபி மத்ஹப் இஸ்லாத்தில் ஒரு மத்ஹபாகவும் அதை உருவாக்கிய முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ஒரு முஜ்தஹிதாகவும் இருந்த காரணத்தால் வஹ்ஹாபிகள் தங்கள் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு அதை தவறாக பிர யோகித்து வந்தார்கள். இஸ்லாமிய அரசிற்கு எதிராக கலகம் செய்யும் தங்களின் அரசியல் செயல்பாடுகளுக்கும், மற்ற மத்ஹபுகளுடன் மோதல் ஏற்படுத்துவதற்கும், பிரிவினைவாதத்தின் அடிப்படையில் உஸ்மானிய அரசுடன் போர் செய்வதற்கும் இந்த மத்ஹபை வஹ்ஹாபிகள் பயன்படுத்திக் கொண்டார்கள். வஹ்ஹாபிகளின் இந்த செயல்பாடுகள் குறித்து அந்த மத்ஹபை பின்பற்றி வந்த முஸ்லிம்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால் சவூதியின் ஆட்சியாளர்களுக்கும் அதில் வசித்துவந்த அரபு மக்களுக்கும் இது முழுமையாக விளங்கியிருந்தது. ஏனெனில் பிரிட்டன் அரசுக்கும் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபிற்கும் மத்தியில் எந்தவிதமான தொடர்பும் இருந்துவரவில்லை. மாறாக பிரிட்டனுக்கும் அப்துல் அஜீஸ் இப்னு முஹம்மது இப்னு சவூதுக்கும் அதன் பின்னர் அவரது மகன் சவூதுக்கும் நேரடியான உறவு இருந்துவந்தது. ஹன்பலி மத்ஹபை பின்பற்றி வந்த முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் பல்வேறு விஷயங்களில் இஜ்திஹாது மேற்கொண்டு வந்தார். இந்த விஷயங்களில் மற்ற மத்ஹபுகளை பின்பற்றி வந்த முஸ்லிம்கள் தன்னுடைய அபிப்பிராயங்களுக்கு முரண்படுவதாக முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் கருதினார். எனவே தனது அபிப்பிராயத்தை நோக்கி அவர் மக்களை அழைக்கத் துவங்கினார். தனது அபிப்பிராயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சி மேற்கொண்டதோடு மற்ற இஸ்லாமிய அபிப்பிராயங்களை கடுமையாக தாக்கினார். பல்வேறு அறிஞர்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. இஸ்லாமிய பிரதேசத்தின் பல்வேறு அமீர்களும், அறிஞர்களும், முக்கிய பிரமுகர்களும் அல்லாஹ்வின் வேதத்திலிருந்தும் அல்லாஹ்வின் தூதரின் சுன்னாவிலிருந்து தாங்கள் விளங்கிக் கொண்டதற்கு முரண்பாடாக முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் அபிப்பிராயங்கள் இருப்பதாக கருதினார்கள். உதாரணமாக, அல்லாஹ்வின் தூதர் அவர்களின் மண்ணறையை ஜியாரத் செய்வது பாவமான செயல் என்றும் ஹராம் என்றும் அவர் கூறிவந்தார். மேலும் எவர் அல்லாஹ்வின் தூதர் அவர்களின் மண்ணறையை ஜியாரத் செய்ய பிரயாணம் மேற்கொள்கிறாரோ அவர் தொழுகையில் கஸர் செய்யக்கூடாது; ஏனெனில் ஒரு பாவமான செயலை மேற்கொள்வதற்காக பிரயாணம் மேற்கொள்கிறார் என்று கூறும் அளவுக்கு முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் துணிந்தார். அல்லாஹ்வின் தூதர் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ள ஒரு ஹதீஸை தனது அபிப்பிராயங்களுக்கு ஆதாரமாக அவர் எடுத்துக் காட்டினார்.



""மூன்று மஸ்ஜிதுகளை தரிசிப்பதற்காக மட்டுமே பிராயாணம் மேற்கொள்ள வேண்டும்; அவை மஸ்ஜிதுன்னபவீ, மஸ்ஜிதுல் ஹரா ம் மற்றும் மஸ்ஜிதுல் அக்ஸா ஆகியவையாகும்.''(புஹாரி)



இந்த மூன்று மஸ்ஜிதுக்கு பிராயாணம் மேற்கொள்வதைத் தவிர்த்து மற்றவைகளுக்கு பிμயாணம் செய்வது ஹராம் என்று இந்த ஹதீஸிலிருந்து முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் விளங்கிக் கொண்டார். ஆகவே ஒருவர் அல்லாஹ்வின் தூதர் அவர்களின் மண்ணறையை ஜியாராத் செய்ய பிராயாணம் மேற்கொள்வாரேயானால் அது மூன்று மஸ்ஜிதுகளுக்கு பிராயாணம் மேற்கொள்வதில் அடங்காது என்பதால் அது ஹராமானதும் பாவமான செயலுமாகும் என்று அவர் கூறினார். அல்லாஹ்வின் தூதர் அவர்களின் மண்ணறையை ஜியாராத் செய்வது சுன்னா என்றும் நன்மையான செயல் என்று அதற்கு நற்கூலி உண்டு என்றும் மற்ற மத்ஹபுகள் கூறுகின்றன.



அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: ""கடந்த காலத்தில் கப்ருகளை ஜியாராத் செய்வதை நான் தடைசெய்திருந்தேன். ஆனால், இப்போது நீங்கள் கப்ருகளுக்கு சென்று வராலாம்.'' (முஸ்லிம்)


பொதுவாக மண்ணறைகளுக்கு சென்று வருதல் அனுமதிக்கப் பட்டிருக்கும்போது அல்லாஹ்வின் தூதர் அவர்களின் மண்ணறைக்கு செல்வது கூடும் என்பதற்கு இந்த ஹதீஸும் மற்ற சில ஹதீஸ்களும் ஆதாராமாக இருக்கின்றன. முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் மஸ்ஜிதுகளை தரிசிப்பதற்கு பிரயாணம் மேற்கொள்வது தொடர்பான ஹதீஸை ஆதாராமாக காட்டுகிறார் என்றும் மஸ்ஜிதுகளுக்கு பிராயாணம் செய்தல் என்ற விஷயத்தோடு மட்டும் பொருந்தக் கூடியது என்றும் மற்ற விஷயங்களுக்கு இதை ஆதாராமாக கொள்ள முடியாது என்றும் மற்ற மத்ஹபுகளை பின்பற்றுபவர்கள் கூறுகிறார்கள். இந்த ஹதீஸைப் பொறுத்தவரை பொதுவான ஹதீஸ் அல்ல. மாறாக ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி கூறும் ஹதீஸாகும். அதாவது, ""மூன்று மஸ்ஜிதுகளை தரிசிப்பதற்கு மட்டுமே பிரயாணம் மேற்கொள்ள வேண்டும்'' என்று கூறும் ஹதீஸ் பியாணம் செய்தல் என்ற விஷயத்தோடு மட்டும் தொடர்புடையது. எனவே இஸ்தான்பூல் நகரத்திலுள்ள அயாஸோஃபியா மஸ்ஜிதையோ அல்லது டமாஸ்கஸ் நகராத்திலுள்ள உமய்யா மஸ்ஜிதையோ தரிசிப்பதற்கு பிராயாணம் மேற்கொள்வது ஹராமாகும். ஏனெனில் இத்தகைய பிரயாணத்தை மேற்கொள்வது மூன்று மஸ்ஜிதுகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் வரையறை செய்துள்ளார்கள். எனவே வேறெந்த மஸ்ஜிதுகளை தரிசிப்பதற்கு பிரயாணம் மேற்கொள்வது முஸ்லிம்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வியாபாரம் செய்யும் நோக்கத்துடனோ அல்லது நண்பர்களையும் உறவினர்களையும் சந்திக்கும் நோக்கத்துடனோ அல்லது சுற்றுலா செல்லும் நோக்கத்துடனோ அல்லது இதுபோன்ற எத்தகைய நோக்கங்களுக்காகவோ இந்த இடங்களுக்கு பிராயாணம் மேற்கொள்வதற்கு அனுமதியுண்டு. ஆகவே, மூன்று மஸ்ஜிதுகள் உள்ள இடத்திற்கு அல்லது மற்ற இடங்களுக்கு பிராயாணம் செய்யக்கூடாது என்று திட்டவட்டமான மறுப்பு எதையும் இந்த ஹதீஸ் தெரிவிக்கவில்லை, மாறாக நன்மையை நாடி மூன்று மஸ்ஜிதுகளை தவிர்த்து மற்றவைகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்வதை மட்டுமே இந்த ஹதீஸ் தடைசெய்கிறது. இதுபோலவே முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் அபிப்பிμõயம் குர்ஆன், சுன்னா ஆகியவற்றிலிருந்து தாங்கள் விளங்கிக் கொண்டதற்கு முரண்பாடாக இருப்பதாக மற்ற மத்ஹபுகளை பின்பற்றுகிறவர்கள் எண்ணினார்கள். ஆகவே அவருக்கும் மற்றவர்களுக்கும் கருத்து வேறுபாடு அதிகரித்தபோது முஹம்மது அப்துல் வஹ்ஹாப் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.





எனவே, கி.பி. 1740இல் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அன்ஸா கோத்திர மக்களின் ஷேக் அமீர் முஹம்மது இப்னு சவூதிடம் புகலிடம் தேடிக்கொண்டார். அல்திரிய்யாவில் இருந்த உயய்னாவின் ஷேக்கிற்கும் அன்ஸாவின் ஷேக்கான அமீர் முஹம்மது இப்னு சவூதுக்கும் மத்தியில் சமூகமான உறவு இல்லாமல் இருந்து வந்தது. உயய்னாவிலிருந்து ஆறு மணி நேர பயண தூரத்தில் அல்திரிய்யா நகரம் அமைந்திருந்தது. அன்ஸாவின் ஷேக் முஹம்மது இப்னு, சவூத் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாவை நன்முறையில் வரவேற்று உபசரித்தார். அல்திரிய்யா மற்றும் அதனை சூழ்ந்துள்ள பகுதிகளில் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் தனது அபிப்பிராயங்களையும் சிந்தனைகளையும் பிரச்சாரம் செய்வதற்கு துவங்கினார். குறிப்பிட்ட சில காலத்திற்குப் பின்னர் அவருடைய சிந்தனைகளுக்கும் அபிப்பிராயங்களுக்கும் ஆதரவு கிடைத்தது. சில ஆதரவாளர்கள் அவருக்கு கிடைத்தார்கள். அன்ஸாவின் ஷேக் அமீர் முஹம்மது இப்னு சவூது இந்த சிந்தனைகளில் ஈர்க்கப்பட்டு முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் ஆதாரவாளராக மாறினார். கி.பி. 1847ல் அமீர் முஹம்மது இப்னு சவூது, முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் சிந்தனைகளையும் அபிப்பிராயங்களையும் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்தார். மேலும் இந்த சிந்தனைகளுக்கும் அபிப்பிராயங்களுக்கும் ஆதரவளிப்பதாகவும் உறுதிப்பிராமாணம் செய்தார். இத்தகைய ஒரு கூட்டணியின் அடிப்படையில், வஹ்ஹாபி இயக்கம் உருவாக்கம் பெற்றது. மேலும் பிரச்சாரத்தின் மூலமும் ஆட்சி அதிகாரத்தின் மூலமும் அதற்காக மக்களிடம் அழைப்பு விடுத்து அதன் சட்டங்களை விளக்கிக் கூறினார். அதே வேளையில் தனது அதிகாரத்திற்கு கீழிருக்கும் மக்களிடம் முஹம்மது இப்னு சவூது சட்டங்களை நடைமுறைப்படுத்தினார். தஃவாவின் மூலமாகவும் அதிகாரத்தின் மூலமாகவும் வஹ்ஹாபி இயக்கம் அல்திரிய்யாவிலும் அதற்கு அடுத்துள்ள பகுதிகளிலும் பரவியது. அதில் வாழ்ந்து வந்த பல கோத்திரங்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள். அதே வேளையில் அமீர் முஹம்மது இப்னு சவூதின் அதிகாரமும், இந்த பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டது. இறுதியாக பத்து வருட காலத்தில் அமீர் முஹம்மது இப்னு சவூதின் அதிகாரமும் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் மத்ஹபும் முப்பது சதுர மைல் அளவுக்கு பரவியது. வஹ்ஹாபி இயக்கம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் தஃவா மூலமும் அன்ஸா மக்களின் ஷேக்கான அமீர் முஹம்மது இப்னு சவூதின் அதிகாரத்தின் மூலமும் பரவியபோது இதற்கு எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவுமில்லை; இதற்கு எதிராக செயல்படவுமில்லை. முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபை உயய்னாவை விட்டு வெளியேற்றிய அல் இஹ்ஸாவின் அமீரும். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கி.பி. 1757வரை அவர் வஹ்ஹாபி இயக்கத்திற்கு எதிராக தனது படைகளை திரட்டவில்லை. எனினும் அதன் பின்னர் அமீர் முஹம்மது இப்னு சவூது அவரை வெற்றிகொண்டு அவருடைய அதிகாரத்தை கைப்பற்றினார். முடிவாக, முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் மத்ஹப் சட்டங்களின் அடிப்படையிலும் முஹம்மது இப்னு சவூத் அதிகாரத்தின் அடிப்படையிலும் நிறுவப்பட்ட அன்ஸா இன மக்களின் ஆட்சி அல்திரிய்யாவிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் அல்இஹ்ஸாவிலும் நிறுவப்பட்டது. இவ்வாறாக இந்த பிராந்தியங்களில் வஹ்ஹாபி மத்ஹப் மக்கள் மத்தியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அல் இஹ்ஸா ஆட்சியாளருடன் நிகழ்ந்த போரில் அமீர் முஹம்மது இப்னு சவூது வெற்றிபெற்றதால் அவரது அதிகாரம் முறியடிக்கப்பட்டு அவரது நிலப்பரப்புகள் கைப்பற்றப்பட்டன. இந்த தாக்குதலுக்குப் பின்னர் வஹ்ஹாபி இயக்கம் மேலும் பரவாமல் நின்றுபோனது. இதன் பின்னர், அந்த இயக்கம் தொடர்ந்து பரவியதாகவோ அல்லது மேற்கொண்டு எந்த செயல்பாடுகளிலும் ஈடுபட்டதாகவோ எந்த தகவல்களும் அறியப்படவில்லை. மாறாக அந்த பகுதிக்குள் மட்டும் அந்த இயக்கம் சுருண்டு கிடந்தது. இந்த தருணத்தில் அமீர் முஹம்மது இப்னு சவூத் தனது போர் நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டதன் விளைவாக இந்த பகுதியின் எல்லைக்குள் வஹ்ஹாபி மத்ஹப் சுருட்டப்பட்டதோடு அந்த இயக்கம் தேக்கத்திற்கும் செயலற்ற நிலைக்கும் உள்ளானது.





கி.பி. 1765இல் அமீர் முஹம்மது இப்னு சவூது மரணம் எய்தினார். அதன் பின்னர் அன்ஸா கோத்திரத்தின் ஷேக் பதவியை அவரது மகன் அப்துல் அஜீஸ் அடைந்து கொண்டார். அப்துல் அஜீஸ் தனது தந்தையாரின் அடிச்சுவடுகளை பின்பற்றி அவரது அதிகாரத்தின் கீழுள்ள பகுதிகளை ஆட்சிசெய்தார். எனினும் வஹ்ஹாபி இயக்கத்திற்கான எத்தகைய செயல்பாடுகளையும் அவர் மேற்கொள்ள வில்லை என்பதோடு அல்திரிய்யாவை சுற்றியுள்ள பகுதி களில் தனது அதிகாரத்தை விரிவுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. ஆகவே வஹ்ஹாபி இயக்கம் செயலற்ற நிலையில் இருந்தது. இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தோ அல்லது அது ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்தோ அல்லது இந்த கால கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட படையெடுப்பு பற்றிய அச்சத்தைக் குறித்தோ எந்த தகவலும் இல்லை. எனினும் வஹ்ஹாபி இயக்கம் தோற்றம் பெற்ற 41 ஆண்டு களுக்கு பின்னர் கி.பி. 1747லிருந்து கி.பி. 1788 வரையுள்ள 31 ஆண்டுகளின் தேக்க நிலைக்குப் பின்னர் திடீரென்று அதன் செயல்பாடுகள் மறுபடியும் துவக்கப்பட்டன. தனது மத்ஹபை பிரச்சாரம் செய்வதற்கு அந்த இயக்கம் ஒரு புதிய வழியைக் கையாண்டது. அந்த இயக்கம் பரவியிருந்த எல்லைகளை தாண்டி இஸ்லாமிய அரசின் அனைத்து நிலப்பரப்புகளையும் மற்ற வல்லரசுகளின் நிலப்பரப்புகளிலும் விரிவான முறையிலும் மிகவும் அழுத்தமான விதத்திலும் மேற்கொள்ளப்பட்ட வலுவான பிரச்சாரத்தின் மூலம் அது அறிமுகப்பட்டது. இதன் விளைவாக அண்டை நிலப்பரப்புகளில் பிரச்சினைகளை தோற்றுவித்ததோடு இஸ்லாமிய அரசின் அனைத்து பகுதிகளிலும் அமைதியின்மையையும் பதட்டத்தையும் இந்த இயக்கம் ஏற்படுத்தியது.






கி.பி. 1787ல் பரம்பரை வாரிசுமுறையில் அதிகாரத்தை பெற்றுக்கொள்ளு ம் ஆட்சியமைப்பை அப்துல் அஜீஸ் ஏற்படுத்தினார். இதன் மூலம் அப்துல் அஜீஸின் மகன் சவூது ஆட்சி அதிகாμத்தை பெற்றுக் கொள்வதற்கு வழி ஏற்பட்டது. முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் தலைமையில் ஒரு பெருங்கூட்டம் கூட்டப்பட்டது. இந்த கூட்டத்தில் அப்துல் அஜீஸ் உரையாற்றினார். அப்போது ஆட்சியதிகாரம் தனது குடும்பத்திற்கு மட்டும் உரியது என்றும் தனக்குப் பின்னர் ஆட்சியதிகாரத்தை அடைந்து கொள்ளும் உரிமை தனது மகனுக்கு மட்டுமே உரியது என்றும் பிரகடனம் செய்தார். மேலும் தனது மகன் சவூதை ஆட்சியதிகாரத்திற்கு வாரிசாகவும், அவர் பிரகடனப்படுத்தினார். இவ்வாறாக முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் தலைமையில் ஒன்று திரண்டிருந்த இந்த மக்கள் கூட்டம் அப்துல் அஜீஸின் அறிவிப்பை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டது. எனவே ஒரு கோத்திரத்தின் ஆட்சி தலைமை என்பதைவிட பல்வேறு கோத்திர மக்களை உள்ளடக்கிய ஓர் அரசின் ஆட்சித் தலைமை ஒன்று இங்கு உருவாக்கப்பட்டது. இது குறித்து அறியப்படுவது என்னவென்றால் வஹ்ஹாபி மத்ஹபின் தலைமைத்துவமும் பரம்பரை வாரிசு முறையில் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் குடும்பத்தினருக்கு மட்டும் உரியது என்று உறுதி செய்யப்பட்டது. ஆட்சி அதிகாரத்தின் தலைமைத்துவமும் வஹ்ஹாபி மத்ஹபின் தலைமைத்துவமும் பரம்பரை வாரிசுரிமையின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு விட்டதைத் தொடர்ந்து இந்த இயக்கம் தனது செயல்பாடுகளை மறுபடியும் துவக்கியது. ஆக்கிரமிப்புகளும் ஆட்சி எல்லைகளை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. வஹ்ஹாபி மத்ஹபை பரப்புவதற்கு இந்த போர்கள் மேற்கொள்ளப்பட்டன. கி.பி. 1788ல் அப்துல் அஜீஸ் பெரும் இராணுவ தாக்குதலை மேற்கொள்வதற்காக ஆயுதங்களையும் போர்ப்படைகளையும் பெருமளவில் தயார் செய்தார். குவைத் மீது தாக்குதல் தொடுத்து அதை கைப்பற்றினார். உஸ்மானிய பேரரசின் அதிகாரத்திலிருந்துவந்த குவைத்தை கைப்பற்றுவதற்கு பிரிட்டன் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. ஜெர்மனி, ரஷ்யா மற்றும் ஃபிரான்ஸ் போன்ற நாடுகள் கடுமையாக எதிர்த்ததாலும் கிலாஃபா அரசு எதிரிகளுக்கு எதிராக கடுமையான தற்காப்பு யுத்தம் மேற்கொண்டதாலும் பிரிட்டனால் குவைத்தை கைப்பற்ற இயலவில்லை. இவ்வாறாக வஹ்ஹாபிகள் உஸ்மானிய கிலாஃபத்தின் அதிகாரத்திலிருந்து குவைத்தை துண்டித்து வடக்கு எல்லையில் தனது பாதுகாப்பை பலப்படுத்திக் கொண்டார்கள். வஹ்ஹாபிகள் அடைந்த இந்த வெற்றி குறித்து உஸ்மானிய அரசும் மேற்கத்திய அரசுகளும் மிகுந்த ஆச்சரியம் கொண்டன. வஹ்ஹாபிகள் மேற்கொண்ட இந்த யுத்தங்கள் ஆன்மீக எழுச்சி போன்ற தோற்றத்தை பெற்றிருந்தாலும் உண்மையாக அவை இனவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டன. பல ஆண்டுகள் செயலற்ற நிலையிலிருந்த வஹ்ஹாபிகள் திடீரென்று தங்கள் செயல்பாடுகளை துவக்கியதன் பின்னணி இதுதான். அவர்கள் மற்ற மத்ஹபுகளை அகற்றிவிட்டு வஹ்ஹாபி மத்ஹபை நிலைநாட்டுவதற்காக போர் மூலம் ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டார்கள். அதிகாரத்தின் மூலமாக தங்கள் மத்ஹபை நிலைநாட்டுவதற்கு முயன்றார்கள். குவைத்தை தாக்கி அதை ஆக்கிரமிப்பு செய்வதிலிருந்து தங்கள் செயல்பாடுகளை அவர்கள் துவக்கினார்கள். இதன் பின்னர் இதுபோன்ற பல்வேறு ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டு தங்கள் எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டார்கள். இதனடிப்படையில் அண்டைநிலை பரப்புகளிலும் அராபிய தீபகற்பத்திலும், ஷாம் மற்றும் ஈராக் போன்ற பகுதிகளிலுள்ள உஸ்மானிய கிலாஃபத்தின் நிலப்பரப்புகளிலும் பெரும் தொல்லைகளையும் பெரும் துயரங்களையும் ஏற்படுத்தி வந்தார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக போர் புரிவதற்காகவும் தங்கள் மத்ஹபைத் தவிர்த்து மற்ற மத்ஹபுகளை பின்பற்றும் முஸ்லிம்களை தடுப்பதற்காகவும் தங்கள் வாட்களை சுழற்றினார்கள். கலீஃபாவுடன் போர் செய்து வஹ்ஹாபிகள் இஸ்லாமிய நிலப்பரப்புகளை கைப்பற்றிக் கொண்டார்கள். கி.பி. 1792ல் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் மரணமடைந்தபோது தனது தந்தை அப்துல் அஜீஸின் ஆட்சியதிகாரத்தை அவரது மகன் சவூது எவ்வாறு அடைந்து கொண்டாரோ அதே முறையில் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் மகன், வஹ்ஹாபி மத்ஹபின் தலைமைப் பதவியை அடைந்து கொண்டார். இதன்பின்னர் சவூதி ஆட்சியாளர்கள் உஸ்மானிய கிலாஃபா அரசை தாக்கும் ஆயுதமாகவும் முஸ்லிம்கள் மத்தியில் பிரிவினைவாத போர்களை தூண்டும் கருவியாகவும் வஹ்ஹாபி மத்ஹபை ஆக்கிக்கொண்டு தங்கள் ஆட்சிப்பயணத்தை தொடர்ந்தார்கள்.



இஸ்லாமிய அரசிற்கு எதிராக பிரிட்டன் மேற்கொண்ட சதித்திட்டங்கள்

சவூதி ஆட்சியாளர் பிரிட்டன் அரசின் விசுவாசமிக்க கங்காணி என்பதை கிலாஃபா அரசும் ஜெர்மனி, ஃபிரான்ஸ் மற்றும் ரஷ்யா போன்ற மேற்கத்திய வல்லரசுகளும் நன்கு அறிந்திருந்தன. மேலும் சவூதி ஆட்சியாளர், பிரிட்டன் அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் இயங்கினார் என்பதும் நன்கு அறியப்பட்ட ஒன்றாகும்.



சவூதி ஆட்சியாளருக்கு அளித்துவந்த ஆதரவை பிரிட்டன் ஒரு போதும் மறைவாக வைத்திருக்கவில்லை. மேலும் போருக்கு தேவையான பெருமளவு ஆயுதங்களையும் போர்ச்செலவினங்களுக்கு தேவையான கணிசமான பணத்தையும் பிரிட்டன், இந்தியா வழியாக சவூதிக்கு அனுப்பி வைத்தது. ஆகவே மற்ற ஐரோப்பிய அரசுகள், குறிப்பாக ஃபிரான்ஸ் அரசு வஹ்ஹாபி இயக்கத்தை எதிர்த்தது. ஏனெனில் வஹ்ஹாபிகளை பிரிட்டன் அரசு பின்னணியில் நின்று இயக்கிவந்தது. கிலாஃபா அரசு வஹ்ஹாபிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு முயற்சி மேற்கொண்டும் அதை நிறைவேற்ற இயலவில்லை. மதினாவிலும் பாக்தாதிலும் இருந்த கிலாஃபா அரசின் ஆளுநர்களால் வஹ்ஹாபிகளின் ஆக்கிரமிப்பை தடுக்க முடியவில்லை.




இதன் விளைவாக வஹ்ஹாபிகளுக்கு எதிராக ஒரு வலுவான படையை அனுப்பி வைக்கும்படி எகிப்திலுள்ள தனது ஆளுநர் முஹம்மது அலிக்கு கிலாஃபா அரசு கட்டளையிட்டது. முதலில் இதற்கு அவர் தயக்கம் காட்டினார். ஏனெனில் உண்மையாக அவர் ஃபிரான்ஸ் அரசின் கங்காணியாக இருந்துவந்தார். அதிகாராத்தை பலவந்தமாக கைப்பற்றும் அவரது முயற்சிக்கு ஃபிரான்ஸ்உதவியாக இருந்தது. பின்னர், கிலாஃபா அரசை நிர்பந்தம் செய்து அவரது அதிகாராத்தை அங்கீகரிக்கும்படி செய்தது. ஃபிரான்ஸ் அரசுடன் செய்திருந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் அதன் தூண்டுதலின் அடிப்படையிலும் துருக்கி சுல்தானின் (கலீஃபா) கட்டளையை ஏற்றுக்கொண்ட முஹம்மது அலி தனது மகன் தவ்ஸுன் தலைமையில் கி.பி. 1811ல் வஹ்ஹாபிகளுக்கு எதிராக படையை அனுப்பி வைத்தார்.




எகிப்திலிருந்து புறப்பட்ட இராணுவத்திற்கும் வஹ்ஹாபிகளுக்கும் மத்தியில் பல யுத்தங்கள் நடைபெற்றன. இந்த யுத்தங்களின் முடிவில் எகிப்திய இராணுவம் கி.பி. 1812ல் மதினாவை வெற்றிகொண்டது. இதன்பின்னர், முஹம்மது அலி தனது மற்றொரு மகன் இப்ராஹிமை கி.பி. 1816ல் கெய்ரோவிலிருந்து அனுப்பி வஹ்ஹாபிகளுக்கு எதிராக போரிடும்படி செய்தார். இப்ராஹிம் தலைமையில் போரிட்ட எகிப்து இராணுவம் வஹ்ஹாபிகளை முறியடித்தது. அவர்கள் தங்கள் தலைநகர் அல்திரிய்யாவுக்கு சென்று தங்களை பாதுகாத்துக் கொண்டார்கள். இதன்பின்னர் கி.பி. 1818ல் இப்ராஹிம் அல்திரிய்யாவை கைப்பற்றினார். கோடைக்காலம் முழுவதும் நிகழ்ந்த யுத்தமானது கி.பி. 1818 செப்டம்பர் 9ந்தேதியில் வஹ்ஹாபிகள் சரணடைந்ததுடன் முடிவுற்றது. இப்ராஹிமின் இராணுவம் அல்திரிய்யாவை துவம்சம் செய்தது. அல்திரிய்யா நகரத்தின் கட்டமைப்பில் எதுவொன்றையும் விட்டு வைக்காமல் முற்றாக சூறையாடியது. இஸ்லாமிய அரசுக்கு எதிரான பிரிட்டனின் திட்டமிட்ட நடவடிக்கை இதன் மூலம் தற்காலிகமாக முடிவுற்றது.



இஸ்லாமிய அரசை தாக்குவதற்கு ஃபிரான்ஸ் மேற்கொண்ட முயற்சி



தனது கங்காணியாக செயல்பட்டு வந்த எகிப்து ஆளுநர் முஹம்மது அலியின் துணைகொண்டு இஸ்லாமிய அரசின் முதுகில் குத்துவதற்கு ஃபிரான்ஸ் முயற்சி மேற்கொண்டது. சர்வதேச அளவிலும் உள்நாட்டு விவகாரங்களிலும் முஹம்மது அலியை ஃபிரான்ஸ் அரசு பகிரங்கமாக ஆதரித்து வந்தது. இதன்விளைவாக அவர் கலீஃபாவுடன் பிளவுபட்டு அவருக்கு எதிராக யுத்த பிரகடனம் செய்தார். கி.பி. 1831ல் ஷாம் பகுதியை கைப்பற்றும் நோக்கத்துடன் முஹம்மது அலி படையெடுத்தார். பாலஸ்தீனம், லெபனான், சிரியா ஆகியவற்றை ஆக்கிரமித்த பின்னர் அனதூலியாவை ஆக்கிரமிப்பதற்கு துவங்கினார். இந்நிலையில் முஹம்மது அலியின் படைகளுக்கு எதிராக போர் செய்வதற்காக ஒரு பலம் வாய்ந்த இராணுவத்தை கலீஃபா அனுப்பிவைத்தார். ரஷ்யாவும் ஜெர்மனியின் இரண்டு அரசுகளும் (கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனி) முஹம்மது அலிக்கு எதிராக திரும்பின.



கி.பி. 1840 ஜூலையில் பிரிட்டன், ரஷ்யா மற்றும் ஜெர்மனியின் இரண்டு அரசுகள் நான்முக கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டன. இதனடிப்படையில் உஸ்மானிய அரசின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பது என்றும், சிரியாவை விட்டு முஹம்மது அலியை வெளியேற்றுவது என்றும் தீர்மானம் செய்தன. ஐரோப்பிய நாடுகள் இத்தகைய ஒரு நிலைப்பாட்டை மேற்கொண்டதால் கலீஃபாவுக்கு ஆதரவாக சர்வதேச அரசியல் சூழல் மாறியது. இந்த அரசியல் பலத்துடன் முஹம்மது அலியுடன் போர் செய்து அவரை சிரியாவிலிருந்தும் பாலஸ்தீனத்திலிருந்தும் லெபனானிலிருந்தும் கலீஃபா வெளியேற்றினார். எனினும் முஹம்மது அலி எகிப்து திரும்பியவுடன் அவர் தொடர்ந்து எகிப்தின் ஆளுநராக இருப்பதற்கு கலீஃபா சம்மதித்தார்.

தேசியவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் மேற்கத்திய அரசுகள் தூண்டுதல்



ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக பிரிட்டன், ஃபிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகியவைகள் கிலாஃபா அரசை வீழ்த்த வேண்டும் என்று தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்தன. எனினும் இந்த முயற்சியில் திட்டமிட்ட யுத்தங்கள், இராணுவ ஆக்கிரமிப்புகள் மற்றும் தொடர்ச்சியான போர்கள் ஆகியவற்றின் மூலம் கிலாஃபா அரசின் முதுகில் குத்தும் முயற்சியை அவைகள் மேற்கொண்டபோதிலும் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்த முயற்சி தோல்வி அடைந்ததற்கு கிலாஃபா அரசின் தற்காப்பு போர்த்திறன் காரணமாக இருக்கவில்லை. மாறாக சர்வதேச அரசியல் சூழலே பிரதான காμணமாக இருந்தது. மேலும் கிலாஃபா அரசை வீழ்த்துவதன் மூலம் கிடைக்கும் கொள்ளைப் பொருளை தங்களுக்குள் பங்கீடு செய்து கொள்வதில் மேற்கத்திய அரசுகளுக்கு மத்தியில் நிலவிய கருத்து வேறுபாடுகள் இதற்கு காரணமாக இருந்தது. செர்பியா, ஹங்கேரி, பல்கேரியா மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளில் பிரிவினையை தூண்டுவதில் ஐரோப்பிய அரசுகள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெற்றன. ஏனெனில் "சுதந்திரம்' மற்றும் "விடுதலை' போன்ற கோஷங்களில் அவைகள் பிரிவினைகளையும் "தேசியவாதம்' என்ற பெயரில் இனவாதத்தையும் தூண்டிவிட்டன.



இவ்வாறாகவே இஸ்லாத்தின் நிழலில் முஸ்லிம்களை ஆட்சி செய்து வந்த கலீஃபாவின் அதிகாரத்திற்கு உட்பட்ட நிலப்பரப்புகளிலும், இனவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் மேற்கத்திய நாடுகள் விதைத்து வந்தன. குறிப்பாக அரபு மக்கள் மத்தியிலும் துருக்கி மக்கள் மத்தியிலும் அவைகள் தங்கள் வஞ்சக திட்டங்ளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தின. இஸ்தான்பூல் நகரத்திலும் இஸ்லாமிய பிரதேசத்தின் இதர பகுதிகளிலும் பிரிட்டன் மற்றும் ஃபிரான்ஸ் தூதரகங்கள் இந்த தூண்டுதல் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வந்தன. பாக்தாத், டமாஸ்கஸ்,பெய்ரூட், கெய்ரோ மற்றும் ஜித்தா ஆகிய நகரங்களில் மேற்கத்திய அரசுகள் மேற்கொண்ட இந்த சதித்திட்டங்கள் கணிசமான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தன. இந்த பணியை நிறைவேற்றுவதற்கு இரண்டு பிரதான மையங்கள் நிறுவப்பட்டன. கிலாஃபா பிரதேசத்தின் பிரதான பகுதியில் பணியாற்றிட இஸ்தான்பூல் மையமும், மாகாணங்களில் பணியாற்றிட குறிப்பாக அரபு மொழிபேசும் முஸ்லிம்கள் வாழும் மாகாணங்களில் பணியாற்றிட பெய்ரூட் மையமும் நிறுவப்பட்டன.



கிலாஃபா அரசுக்கு எதிராக பணியாற்றுவதில் பெய்ரூட் மையத்தின் பங்களிப்பு



இஸ்லாத்தையும் இஸ்லாமிய அரசையும் வீழ்த்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட குஃப்ர் அமைப்புதான் பெய்ரூட் மையமாகும். இஸ்லாமிய பிரதேசத்தில் ஆழமான விளைவுகளையும் தீர்க்கமான முடிவுகளையும் ஏற்படுத்துவதற்காக நீண்டகால திட்டத்துடன் இந்த மையம் உருவாக்கப்பட்டிருந்தது. அதே வேளையில் துரிதமான விளைவுகளையும் அழுத்தமான முடிவுகளையும் ஏற்படுத்துவதற்காக குறுகிய கால திட்டத்துடன் இஸ்தான்பூல் மையம்
உருவாக்கப்பட்டிருந்தது. இவ்வாறாக பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் உள்ளத்தில் குஃப்ர் சிந்தனைகளை விதைக்கும் கொடிய நஞ்சாகவும், இஸ்லாமிய உறவுகளின் அடிப்படையில்
வாழ்ந்துவந்த அந்த மக்களிடத்தில் குஃபர் சட்டங்களில் அடிப்படையில் ஏற்படும் வழிகேடான உறவுகளை ஏற்படுத்தும் குஃப்ரின் அமைப்பாகவும் பெய்ரூட் மையம் செயல்பட்டது. உண்மையில் இந்த மையம் மேற்கொண்ட பணியின் விளைவாக முதல் உலகப்போரில் காஃபிர்களோடு நடந்த யுத்தங்களில் இஸ்லாமிய அரசுக்கு பெரும் சேதங்கள் ஏற்பட்டன.
எகிப்து ஆளுநர் முஹம்மது அலியின் மகன் இப்ராஹிம் பாஷா ஷாம் பகுதியிலிருந்து வெளியேறிய உடனேயே மேற்கத்திய காஃபிர்கள் பெய்ரூட் மையத்தில் தங்களின் இஸ்லாத்திற்கு எதிரான சதி செயல்களை துவக்கிவிட்டன. அமெரிக்கன் மிஷன் (American Vision) என்ற பெயரில் அறிவியல் மன்றம் (Scientific Association) ஒன்றை உருவாக்கும் நோக்கத்தோடு கி.பி. 1842ல் மேற்கத்தியர்கள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கினார்கள். இந்த கூட்டமைப்பு அதன் திட்டத்தின் அடிப்படையில் ஐந்து ஆண்டுகள் செயல்பட்டு வந்தது. கி.பி. 1847ல் "கலை மற்றும் அறிவியல் மன்றம்' (Art and science association) என்ற பெயரில் மற்றொரு கூட்டமைப்பும் உருவாக்கப்பட்டது. பிரிட்டனின் கைக்கூலி என்று பெயர்பெற்ற இரண்டு கிறிஸ்தவர்கள் அந்த இரண்டு மன்றங்களையும் ஒன்றிணைந்து நடத்திச் சென்றார்கள். அவர்களின் பெயர் புட்ரோஸ் அல் புஸ்த்தானி மற்றும் நஸீஃப் அல் யாஜிஸி என்பதாகும். பிரிட்டனை சார்ந்த கலோனல் சர்ச்சில் எலிஸ்மித் மற்றும் கானிலோஸ் வான்டிக் ஆகியோர் இதன் பின்னணியிலிருந்து செயல்பட்டார்கள். திட்டவட்டமான நோக்கங்கள் எதுவுமின்றி இந்த மன்றங்கள் துவக்கப்பட்டன என்றபோதும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பல்வேறு அறிவியல் விஷயங்களை போதிப்பதற்காகவே இந்த மன்றங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாக அவை செயல்பட்டு வந்தன. பள்ளிகளில் குழந்தைகளிடம் உந்துதல் ஏற்படுத்துவது போன்றே பெரியவர்களிடம் இந்த மன்றங்கள் ஒருவகையான மேற்கத்திய கலாச்சார உந்துதலை ஏற்படுத்தின. மேற்கத்திய கலச்சாரம் மற்றும் மேற்கத்திய சிந்தனைகள் ஆகியவற்றை மக்களிடம் உருவாக்கினார்கள். இந்த மன்றங்களில் பணியாளர்கள் தீவிரமான செயல்பாடுகளை மேற்கொண்ட போதும் கணிசமான முயற்சிகளையும் உழைப்பையும் செலவழித்தபோதும் இரண்டு வருட காலத்தில் ஷாம் பகுதியில் தீவிரமாக செயல்படும் ஐம்பது உறுப்பினர்களை மட்டுமே உருவாக்க முடிந்தது. அவர்கள் அனைவரும் பெய்ரூட்டை சார்ந்த
கிறிஸ்தவர்கள் ஆவார்கள். ஆனால் இந்த மன்றங்களில் முஸ்லிம்கள் எவரும் இணைந்து பணியாற்ற முன்வரவில்லை!



ஆகவே கி.பி. 1850ல் கீழ்த்திசை மன்றம் (Eastern Association) என்ற பெயரில் மற்றொரு மன்றத்தை உருவாக்கினார்கள். பிராஞ்சு இயேசு சபை (French Jesuit) என்ற கிருஸ்தவ அமைப்பின் பங்குத் தந்தையான ஹென்றி டெப்ரினீர் இந்த மன்றத்தை நிறுவியிருந்தார். இந்த மன்றத்தில் உறுப்பினர்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாக இருந்தார்கள். கி.பி. 1857ல் மற்றொரு மன்றம் உருவாக்கப்பட்டது. இது ஒரு புதிய பாணியை பின்பற்றி செயலாற்றியது. இந்த மன்றத்தின் உறுப்பினர்களாக அரபு மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள்! அரபு அல்லாதவர்கள் எவரும் இதில் அனுமதிக்கப்படவில்லை! மேலும் இதன் நிறுவனர்கள் அனைவரும் அரபு கிறிஸ்தவர்களாகவே இருந்தார்கள். பின்னர் சில அரபு முஸ்லிம்களையும், துருஸ் (Druze) மதத்தைப் பின்பற்றுபவர்களில் சிலரையும் இந்த மன்றத்தில் இணைவதற்கு ஒப்புகொள்ள வைத்தார்கள். ஏறத்தாழ 150 நபர்கள் இதில் இணைந்து செயல்பட முன் வந்தார்கள். துருஸ் மதத்திலிருந்து முஹம்மது அர்ஸலான் என்பவரும் இதர முஸ்லிம்களிலிருந்து ஹூஸைன் பைஹம் என்பவரும் கிறிஸ்தவர்களிலிருந்து இப்ராஹிம் அல் யாஸிஜி, புட்ரோஸ் அல் புஸ்த்தானி மற்றும் அவரது மகள் ஆகியோர் நிர்வாக சபையின் பிரதானபொறுப்புகளை வகித்து வந்தார்கள். இப்ராஹிம் அல் யாஸிஜியும் புட்ரோஸ் அல்புஸ்தானியின் மகனும் மேற்கத்திய கலாச்சாரத்தை முஸ்லிம்கள் மத்தியில் உருவாக்கும் திட்டத்துடன் செயல்பட்டார்கள். இந்த மன்றம் அடைந்த வெற்றியின் காரணமாக ஊக்கம் பெற்ற காஃபிர்கள் தேசியவாதம் என்ற பெயரில் இனவெறியையும், விடுதலை, சுதந்திரம் என்ற பெயரில் பிரிவினைவாதத்தையும் முஸ்லிம்கள் மத்தியில் உருவாக்கி நேரடி செயல்பாட்டு திட்டங்களை வகுத்தார்கள். அறிவியல் விஷயங்களை போதனை செய்யும் சாக்கில் தந்திரமாக குஃப்ரை பிரச்சாரம் செய்வதைவிட நேரடியாகவும் வெளிப்படையாகவும் தங்கள் பிரச்சாரத்தை மேற்கொள்வது சிறந்தது என்று காஃபிர்கள் கருதினார்கள். கி.பி. 1875ல் பெய்ரூட் பிரோட்டஸ்டன் கல்லூரியின் மாணவர்கள் ஐவர் இணைந்து இரகசிய மன்றம் (Secret Association) ஒன்றை நிறுவினார்கள். கிறிஸ்தவர்களாக இருந்த இவர்கள் சிறு எண்ணிக்கையில் மக்களை ஒன்று திரட்டினார்கள். அரசியல் சிந்தனையின் அடிப்படையில் இயங்குவதற்காக இந்த மன்றம் உருவாக்கப்பட்டது. ஓர் அரசியல் இயக்கமாக அது உருவாக்கப்பட்டது என்றபோதும் அரபு தேசியவாத சிந்தனைகளின் அடிப்படையில் இயங்கியது. அரபு தேசியவாதத்தின் அடிப்படையில் இஸ்லாமிய பூமியில் நிறுவப்பட்ட முதல் அரசியல் இயக்கமாக இது கருதப்பட்டது. அரபு மக்களின் நலன்களை பேணுதல், அரபு மக்களின் பெருமை மற்றும் அரபு தேசியவாதம் ஆகிய கோஷங்களை இந்த மன்றம் முன்வைத்தது. உஸ்மானிய கிலாஃபா அரசுக்கு எதிராக மக்களிடம் வெறுப்பை தூண்டிவிட்டதோடு அதை துருக்கியர்களின் அரசு என்றும் இந்த மன்றம் பிரச்சாராம் செய்துவந்தது.



மார்க்கத்திலிருந்து அரசியலை பிரித்து வைக்கும் மதச்சார்பின்மை கொள்கையை நிலை நாட்டிடவும் அரபு மக்களின் ஒற்றுமை என்ற பெயரில் முஸ்லிம்களிடம் இனவாதத்தை தூண்டிவிடவும் இஸ்லாமிய அகீதாவின் மீது முஸ்லிம்கள் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கையை அரபு தேசியவாதத்தின் மீது முழுமையாக திருப்பி விடுவதற்காகவும் இந்த இயக்கம் செயலாற்றியது. இந்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள், இரகசியமான முறையில் மக்களிடம் பிரசுரங்களை விநியோகித்து வந்தார்கள். உஸ்மானிய கிலாஃபா அரசை துருக்கியர்களின் அரசு என்றும், அரபு மக்களிடமிருந்து துருக்கியர்கள் கிலாஃபத்தை பலவந்தமாக எடுத்துக்கொண்டார்கள் என்றும், ஷரியாவின் புனிதமான சட்டங்களின் வரம்புமீறியதன் மூலம் தீனை தவறாக பிரயோகித்தார்கள் என்றும் அந்த பிரசுரங்களில் கூறப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டை கூறியவர்களும் இந்த இயக்கத்தை வழிநடத்தியவர்களும் தங்கள் உள்ளங்களில் இஸ்லாத்தைப் பற்றிய வெறுப்பை சுமந்து கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மன்றங்கள் மேற்கொண்ட பிரச்சாரத்தின் விளைவாக இஸ்லாமிய பிரதேசத்தில் வாழ்ந்த மக்களிடம் தேசியவாத சிந்தனை பரவத்தொடங்கியது. மேலும் தேசியவாதம் என்ற போர்வையில் இனவெறி தூண்டுதல்களும் பிரிவினைவாத பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டன. முஸ்லிம்களின் விவகாரங்களை கண்டறிவதற்காக உளவாளிகள் பலரை மேற்கத்திய அரசுகள் தேர்வு செய்து களமிறக்கியிருந்தன. மேலும் முஸ்லிம்களின் சிந்தனைகளை சேதப்படுத்துவதற்காகவும், அவர்களின் இஸ்லாமிய உணர்வுகளை அழிப்பதற்காகவும்தான் பெய்ரூட் மையம் உருவாக்கப்பட்டிருந்தது. எனவே இந்த இரகசிய இயக்கம் அறிவுரீதியான நாசத்தை முஸ்லிம்களிடம் உருவாக்குதலில் கணிசமான வெற்றி அடைந்திருந்தபோதிலும் அரசியல்
விளைவுகளை ஏற்படுத்துவதில் வெற்றிபெறவில்லை.
தொடரும்...

No comments:

Post a Comment