Tuesday, October 30, 2012
முற்றுப் பெறாதது சாத்தானின் தூதே ...
கஸ்தூரியை சுமந்தவர்கள் குப்ரிய சாக்கடையில்
சுகந்தம் தேடி புறண்டதனால் தூய இலட்சியங்கள் நாறிப்போக
இரத்தமும் சதைகளும் உணர்வுகளும் உரிமைகளும்
அற்பமென்றாகி அவல ஊர்வலங்கள் இந்த உம்மாவின்
வீதிகளில் வலம் வரத் தொடங்கின !
கலங்கரை விளக்குகள் குட்டிச் சுவர்களுக்குள்
சுயநல வாழ்க்கை தொடரக் கற்றுக்கொண்டதால் தான்
அதற்காகவே காத்திருந்த ஓநாய்கள்
சாவகாசமாக முற்றுகையிட்டு எம் நிலங்களிலேயே
முகாமிட்டு விஷப்பற்களை பதிக்கத் தொடங்கின !
இன்று ஜாஹிலீய சத்துருக்களின் அரசியல் சதுரங்கத்தில்
நாம் ஒன்றும் 'கிங் மேக்கர்கள் 'அல்ல , 'கிங் ஜோக்கர்கள்'!
அல்லாஹ்வின் அமானிதத்தை அலட்சியம் செய்துவிட்டு
அசத்திய' பொலிடிக்ஸில்' நவீனம் காண்கிறோம் ! இது
அநாகரீக மேடையில் நாகரிக நடனமாம் !
'ஹராத்தில் ' மூழ்கி 'ஹலாலை ' தேடுவது
அற்புதக்கலை என்பது அல்லாஹ்வுக்கே(சுப) தெரியாதது !!!
அவனின் தூதர் (ஸல் ) அவர்களுக்கோ புரியாதது !!!
அதிசயமான இந்த வஹிப்பிரதி, மக்கியா ? மதனியா?
'ஹிராவில்' தொடங்கி' ஹஜ்ஜதுல்விதாவரை' இல்லவே இல்லை.
சத்தியத்தின் தூதுக்குத்தான் பூர்த்தி நடந்து விட்டதே !! ஆனால்
சாத்தானின் தூதுக்குத் தான் பூர்த்தியே இல்லையே !
ஒருவேளை இந்த நூற்றாண்டின்? சதிப்பிரதி
'சியோனிச 'அருளால் 'பென்டகனில் ' இறங்கி
'வைட் ஹவுஸ் ' மொழியால் அரேபிய நுழைந்திருக்கலாம் !!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment