ஜாஹிலிய்யா - இஸ்லாம் அல்லாத - அமைப்போடு ஒத்தாசை செய்வதைப்பற்றி பேசும்போது அண்ணல் யூசுப் (அலை) அவர்களுடைய எகிப்து வாழ்க்கை ஆதாரமாக காட்டப்படுகின்றது. உண்மையில் இது ஆதாரம் அல்ல, ஆதாயம் ஆகும். தங்களுடைய சிந்தனை செயல்பாடுகளுக்கு ஆதாயமாக இதை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த பிரச்சனையை கொண்டு போய் போற்றுதலுக்குரிய இறைத்தூதரின் நிகழ்ச்சியோடு இணைப்பது அறியாமையின் வெளிப்பாடு ஆகும்! தங்களுடைய நிலைப்பாட்டுக்கு ஆதாரமாக அண்ணல் யூஸீஃபின் வரலாற்றை சுட்டிக்காட்ட அவர்கள் நினைத்தால் மூன்று விஷயங்கள் நிருபிக்கப்பட வேண்டும்.
1)அண்ணல் யூசுஃப் முழுமையான ஆட்சி அதிகாரத்தைப் , பகுதி அதிகாரத்தையே பெற்றிருந்தார்.
2)அதிகாரத்தில் அமரும் போது அவர் இறைத்தூதராக ஆக்கப்பட்டு விட்டிருந்தார்.
3)அந்நிகழ்வின் போது எகிப்திய மன்னர் முஸ்லிமாக இல்லை.
இம்மூன்றையும் நீருபிக்க முடியாது என்பது ஒரு புறமிருக்க நடந்த உண்மை இதற்கு நேர்மாறாகத்தான் உள்ளது. இங்கு இன்னொரு முக்கியமான விதியைப் பற்றி முதலில் தெரிந்து கொள்வோம். ஷரீஆ பிரச்சனையில் அலசி ஆராய்வதெற்கென்று ஒரு நியதி நெறிமுறை உள்ளது.
எப்போதும்
1)மூலத்திலிருந்து சார்பையும் (Branch from Root)
2)நிர்ணயிக்கப்பட்டதிலிருந்து புரிந்து கொண்டதையும் (Under stood from Fixed and determined)
3)தெளிவான வரையறுக்கப்பட்டதிலிருந்து பொதுமையையும் (General Concept From Described)
4)விளக்கமானதிலிருந்து விளங்காததையும் (Obscure from Clear)
5)துல்லியமானவற்றிலிருந்து சந்தேகத்திற்கிடமானதையும் (obscure from firmed) அடையவேண்டும்.
அதாவது முதலாவதாக கூறப்பட்டவைகளிருந்துதான் இரண்டாவதாக கூறப்பட்டவைகளை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு விஷயத்தைப் பற்றி துல்லியமான விளக்கமான சட்டங்கள் இருக்கும் போதுமான பொதுமைப் பண்புடைய வசனங்களிலிருந்து அல்லது நபிமொழிகளிலிருந்து கிடைக்கும் குறியீடுகள் மூலமாக அவ்விஷயத்தைப் பற்றிய கண்ணோட்டத்தை வகுக்க நினைப்பது அறிவுக்கு தவறான நடைமுறையாகும்!. உம்மத்தின் வரலாற்றில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திய கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகளை நீங்கள் அலசி ஆராய்ந்து பார்த்திர்கள் என்றால் அபாயகரமான அந்த ஃபித்னாக்களுக்கு எல்லாம் அடிப்படைக் காரணமாக தவறான இந்த சிந்தனையே விளங்கி வந்துள்ளதைக் காணலாம். இறைவனின் யாவற்றையும் தெளிவாக விளக்கவந்த கையேடு என தன்னைப்பற்றி அறிவித்துக்கொண்டே உள்ளது.ஆனாலும் நிலை தடுமாறிய உள்ளங்கள் அதன் பக்கம் கவனம் செலுத்துவதே இல்லை! துல்லியமான கட்டளைகள் இருந்தபோதும் பொதுமைப் பண்புடைய நபிமொழிகளையே இவர்கள் நாடிச்சென்றனர். புதுப்புது கருத்துகளை சிந்தனைகளை தீனின் பெயரால் கண்டுபிடிக்கத் தொடங்கினர்.வான்மறைக் குர்ஆனின் சில வசனங்களிலிருந்து தமக்குத் தேவையான விருப்பமான ஒரு கருத்து கிடைத்து விட்டால் அதன் பின்பு அப்பிரச்சனையைப் பற்றி தெளிவான துல்லியமான கருத்தைத் தெரிவிக்கும் வசனங்களின் பக்கம் முகம் திரும்பி வந்தனர்.(சொல்லப் போனால் இத்தகைய வசனங்களை ஆராய்ந்து தான் அப்பிரச்சனையைப் பற்றி முடிவையே எடுக்கவேண்டும்) அதன் பின்பு அத்தெளிவான வசனங்களைப் பார்த்த பின்பாவது தாங்கள் கண்டெடுத்த முடிவுகள் தவறானவை என்று விளங்கி திருத்திக் கொண்டார்களா? என்றால் அதுதான் இல்லை! தங்கள் முடிவுகளையே சரி என வாதிட்டு அத்தெளிவான வசனங்களில் கைவைத்து திரிக்கும் கைங்கரியத்தைச் செய்யலாயினர் உருக்குக்கத்தியினால் வெட்டிச் செதுக்கி தமக்குத் தோதான வகையில் தம்முடைய வாதத்திற்கு எற்ப அவ்வசனங்களை வார்த்தெடுத்தனர் பரிதாபத்துக்குரிய மிகவும் வருந்ததக்க விஷயம் தான் இது! ஆனால் என்ன செய்ய? இது தானே நடந்துவந்திருக்கினறது.
தெளிவான திட்டவட்டமான மார்க்கச்சட்டங்களை பின்னுக்குத்தள்ளி குறியிடுகள் சைகைளை தமக்கு முன்னால் பரப்பி வைத்துக் கொண்டனர்.பிறகு தமது விருப்பங்களுக்கு எற்றவாறு தோதான தத்துவங்களை கருத்துக்களை கண்டுபிடிக்கலாயினர்.பின்பு அவற்றை குர்ஆனோடு இணைக்கத் தொடங்கினர்! இப்பரிதாபகரமான நிலையின் இக்கோணல் சிந்தனையின் விளைவே இது! ஆனால் அமைதி சமாதானத்திற்கான பாதையோ இதற்குத் நேர் திசையில் செல்கின்றது! இந்நெறிமுறையை மனதில் கொண்டு இனி அண்ணல் யூஸ{ஃப் (அலை) எகிப்தில் பணியாற்றிய பிரச்சனையை ஆராயுங்கள்.
(அ)இஸ்லாம் அல்லாத இஸ்லாமிற்குப் புறம்பான குஃப்ரு மற்றும் ஜாஹிலிய்யத் அமைப்புக்கு ஒத்துழைக்கலாமா? கூடாதா? ஒத்தாசை செய்யலாமா? கூடாதா? என்பது குறித்த தெளிவான துல்லியமான விளக்கமான சட்டங்கள் உள்ளன! எடுத்துகாட்டாக
குற்றத்திற்கோ வரம்பு மீறலுக்கோ ஒரு போதும் துணை சென்று விடாதீர்கள் (அல்-குர்ஆன் 5:2 )
நன்மையை ஏவு தீமையை தடுத்து நிறுத்து! (அல்- குர்ஆன் 31:18 )தாஃகூத்தை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்று தான் அவர்களுக்கு கட்டளையிடப்பட்டிருந்தது! (அல்- குர்ஆன் 4:60 )
ஆட்சி அதிகாரம் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! (அல்- குர்ஆன் 12:40 )
அல்லாஹ் இறக்கி அருளாத சட்டங்களை கொண்டு தீர்ப்பளிப்பவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்களே! (அல்- குர்ஆன் 5:44 )
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கியருளப்பட்டதையே பின்பற்றுங்கள் அவனை விட்டுவிட்டு மற்றவர்களைப் பின்பற்றாதிர்கள்! (அல்- குர்ஆன் 7:3 )
நேர்வழியைக் கொண்டும் சத்தியமார்க்கத்தை கொண்டும் அவனே தன் தூதரை அனுப்பிவைத்தான் மற்றெல்லா மார்க்கங்களை விடவும் அதுவே மேலோங்க வேண்டும் என்பதற்காக! (அல்- குர்ஆன் 61:9) யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய உற்ற தோழர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள் (அல்- குர்ஆன் 5:51 )
இறைநம்பிக்கையாளர்களை விட்டுவிட்டு இறைநிராகரிப்பாளர்களான காஃபிர்களை உங்களது உற்ற தோழர்களாக ஆக்கிக் கொள்ளாதிர்கள். (அல்- குர்ஆன் 4:144)
உற்ற தோழர்கள் என்றால் உங்களுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இறைநம்பிக்கையாளர்களும் தான். (அல்- குர்ஆன் 5:2)
உங்களில் யாரேனும் ஒருவர் தீயகாரியம் ஒன்றைக் கண்டால் அதனைத் தமது வலிமையைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்த வேண்டும்.அவ்வாறு முடியவில்லை என்றால் தமது நாவைக் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும் அதுவும் முடியவில்லை என்றால் தம்முடைய உள்ளத்தால் அதனை வெறுத்து ஒதுக்க வேண்டும் என்று இறைத்தூதர் சல்லல்லாஹ(அலை) கூறியுள்ளார்கள்.
இறைவனுக்கு இணைவைக்கும் முஷ்ரிக்கீன்களின் நெருப்பிலிருந்து வெளிச்சத்தைப் பெற்றுக்கொள்ள முயற்ச்சிக்காதிர்கள் என்று இறைத்தூதர் சல்லல்லாஹ் அலை) கூறியுள்ளார்கள்.( நஸாயி, அஹ்மத்)
இறைவனுக்கு இணைவைக்கும் முஷ்ரிக்கீன்களினடயே தென்படுகின்ற முஸ்லிமிற்கும் எனக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்று இறைத்தூதர் சல்லல்லாஹ{(அலை) கூறியுள்ளார்கள். (அபுதாவுது)
(ஆ) ஒரே ஒர் இறைவனை வழிபடுமாறு மக்களை அழைக்க வேண்டும் (அதாவது வணங்க வேண்டும் கீழ்படியவும் வேண்டும் இபாதத்தும் செய்ய வேண்டும் இதா அத்தும் செய்ய வேண்டும்.)அல்லாஹ்வினால் இறக்கியருளப்பட்ட தீனை (கொள்கை கோட்பாடுகள் வாழ்க்கைக் செயல்கள் என்று யாவற்றையும்) அல்லாஹ்வுடைய இந்தப்பூமியில் நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் (விதிவிலக்கே இல்லாமல்) எல்லா நபிமார்களும் அனுப்பிவைக்கப்பட்டார்கள்.
அல்லாஹ்வை வணங்கி வழிபட்டுவறுமாறும் தாஃகூத்தை விட்டு முற்றிலும் விலகி இருக்குமாறும் (மக்களிடம் போதிப்பதற்காகத் தான்) ஒவ்வொரு சமுகத்திற்கும் நாம் இறைத்தூதர்களை அனுப்பிவைத்தோம்! (அல்- குர்ஆன் 16:36)
“தீனை நிலைநாட்டுங்கள் (அல்- குர்ஆன் 42:13)
(இ) அனைத்துத் தரப்பு மக்களும் பின்பற்றியே ஆக வேண்டியவர் என்பதுதான் அனைத்து இறைத்தூதர்களின் நிலையாக இருந்தது.
“அல்லாஹ்வின் அனுமதி –கட்டளையோடு தூதரைப் பின்பற்றியே ஆகவேண்டும் என்பதற்காக அன்றி வேறு எதற்காகவும் நாம் எந்தத் தூதரையும் அனுப்பவில்லை!”(அல்குர்ஆன் 4:64)இவ்விஷயங்களையெல்லாம் கருத்தில் கொண்டு அண்ணல் யூசுஃப்பின் வரலாற்றை விளக்கும் வான்மறை குர்ஆன் வசனங்களை பார்வையிடலாம். “என்னை நாட்டின் களஞ்சியங்களுக்கு பொறுப்பாளராக ஆக்குக!” (அல் குர்ஆன்12:55) என்று அவர் (வேண்டுகோள் விடுக்கவில்லை) கேட்டுப்பெற்றார். இந்த நிகழ்ச்சியிலிருந்து குஃப்ரான அமைப்புக்கு ஒத்துழைப்பதற்கான சான்றிதழ் எங்ஙனம் கிடைக்கும்?- என்று சிந்தித்துப்பாருங்கள்.ஒருபக்கம், இப்பிரச்சனை தொடர்பான தெளிவான வழிகாட்டுதல்கள், துல்லியமான கருத்துகள் விளக்கப்பட்டுள்ளன. இன்னொருபக்கம் “என்னை பொறுப்பாளராக நியமியுங்கள்!” என்று அண்ணல் யூசுஃப் எகிப்து மன்னனிடம் கூறியதாக குர்ஆன் பொதுப்படையாக அறிவிக்கின்றது.இவ்விரண்டு சொற்களைத் தவிர வேறெந்த விளக்கத்தையும் வான்மறை குர்ஆன் அளிக்கவில்லை. அண்ணல் யூசுஃபுடைய அப்போதைய மார்க்கநிலை என்ன? அவர் அப்போது இறைத்தூதராக ஆக்கப்பட்டிருந்தாரா, இல்லையா? இந்த நியமனத்தின் போது எகிப்து மன்னருடைய நிலைதான் எவ்வாறு இருந்தது? அவருக்கு முன்பாக தவ்ஹீத்–ஓரிறைக் கொள்கைக்கான அழைப்பு வைக்கப்பட்டிருந்ததா,இல்லையா? வைக்கப்பட்டிருந்தது என்றால், மன்னர் அதற்கு என்ன பதில் அளித்தார்? அழைப்பை ஏற்றுக்கொண்டாரா, இல்லை நிராகரித்தாரா?முழுமைபெறா இப்பொதுமைக் கருத்துக்கு நிறைவான விளக்கத்தைப்பெற நாம் முயற்சிசெய்தே தீரவேண்டும்.இல்லாவிட்டால் ஒத்துழைப்புப் பிரச்சனைக்கு இதைக் கொண்டு நம்மால் ஆதாரம் காட்ட முடியாது. இதற்கான முழுமையான விளக்கம்தான் என்ன? ஏற்கனவே தெளிவாக விளக்கப்பட்டுள்ள குர்ஆன் வசனங்களுக்கு நேர்எதிரான விளக்கமா? இல்லை,அவற்றோடு ஒத்துப்போகின்ற விளக்கமா?......
தீனுடைய தெளிவான சட்டங்கள், குர்ஆனுடைய அடிப்படைப் பேருண்மைகள்–இவற்றைப்பற்றியெல்லாம் கவலையேபடமாட்டேன் என்று கூறுபவர்களுக்கு எல்லாப்பாதைகளும் திறந்தேதான் உள்ளன. சர்வ சுதந்திரமாக அவர்கள் எதில் வேண்டுமானாலும் பயணிக்கலாம்.இறைத்தூதர் ஒருவரைப்பற்றி எந்த முடிவுக்கு வேண்டுமானாலும் அவர்கள் வரலாம்.எகிப்து மன்னருக்கு முன்னால் வேலைக்கான விண்ணப்ப மனுவோடு அண்ணல் யூசுஃப்பை அவர்கள் நிற்கவைக்கலாம்: ஃகஸாயினுல் அர்ழ் எனபதற்கு வருவாய்துறை அமைச்சகம் என்று விளக்கம் தரலாம் இந்தப்பணியில் நியமிக்கப்பட்டபோது அண்ணல்யூசுஃப் நபியாக ஆக்கப்பட்டுவிட்டார்கள் என்று அவர்கள் கூறலாம் அச்சமயம் எகிப்துமன்னர் காஃபிராகவும், முஷ்ரிக்காகவும் தான் இருந்தார் என்று கூறலாம்: வேலைக்கான கோரிக்கையை வைத்தபோது கனிவோடு அதற்கு அவர் ஒப்புதல்அளித்தார் என்று கூறலாம்:கண்ணியத்துக்குரிய ஒரு நபியாக இருந்தவாறே அண்ணல் யூஸுஃப் எகிப்திய காஃபிர்–முஷ்ரிக் மன்னரின் ஆட்சியின் கீழ் விசுவாசமிக்க, பொறுப்புள்ள ஆளுனராகப் பணியாற்றினார் என்று அவர்கள் கூறலாம்.......ஆனால், யாருடைய உள்ளத்தில் இந்த அளவுக்கு தைரியம் இல்லையோ,அவர்கள் இத்தகைய ஆராய்ச்சிகளையெல்லாம் செய்யவே தயங்குவார்கள். இதைப்பற்றி அவர்கள் யோசிக்கத் தொடங்கினாலே, மேற்கண்ட தெள்ளந்தெளிவான குர்ஆன் வசனங்கள் எல்லாம் அவர்களுக்கு முன்னால்வந்து நின்றுகொண்டு கேள்விகளைத் தொடுக்கும். பின்பற்றப்படுவதற்காகத்தான் இறைத்தூதர்கள் என்றால்,இவ்விதிக்கு யாரும் விதிவிலக்கே கிடையாது என்றால், அண்ணல்யூஸுஃப் ஒரு காஃபிர்+முஷ்ரிக் மன்னரைப் பின்பற்றினார் என்று கூற உங்களுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது?–என்று கேட்கும்.இவ்வுலகத்தில் இறைவனின் தீனை நிலைநாட்டுவதுதான் ஒவ்வொரு நபியின் பணியுமாகும். அப்படி இருக்கையில் அண்ணல்யூஸுஃப் எகிப்திய மன்னனின் தீனுக்காக பாடுபடுவராக, அந்தத்தீன் காவலராகச் சித்தரிக்க எப்படி மனம் வந்தது?– என்று அவை கேட்கும்!இறைவனைமட்டுமே வழிபடவேண்டும் தா:கூத்தை எதிர்த்து நிற்கவேண்டும் என்று தான் எல்லா நபிமார்களும் பணிக்கப்பட்டுள்ளார்கள்.அப்படி இருக்கும் போது யூஸுஃப் மட்டும் எப்படி எகிப்திய மன்னன் போன்ற தா:கூத்துக்கு கீழ்படிபவராக, இதாஅத் பண்ணுபவராக இருந்தார்?–என்று அவை கேட்கும்!---இத்தகையகேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வது மிகவும் கஷ்டம்!!
ஆகையால், ஆரோக்கியமான சிந்தனை என்பது கண்டிப்பாக வேறொன்றாகத்தான் இருந்தாக வேண்டும். மேற்கண்ட தெளிவான கட்டளைகளுக்கு முரண்பட்டதாக இல்லாமல் அவற்றோடு ஒத்திசைந்து போகக் கூடியதாகவே இதுவரைக்கும் நீங்கள் விளங்கிக் கொண்டே நியதிகளோடு பொருந்திப் போகக்கூடியதாக அது இருக்கும். இந்த ஆரோக்கியமான சிந்தனை பிரச்சனையின் வேறொரு கோணத்தையே நாடிநிற்கும். அதன்படி, உண்மை நிலவரம் எப்படி இருந்தாக வேண்டுமென்றால்.
1)அண்ணல் யூஸுஃப் ஆட்சிப் பொறுப்புக்காக விண்ணப்பித்திருக்கமாட்டார். கேட்டுப் பெற்றிருப்பார்.
2)அதிகாரத்தின் ஏதேனும் ஒரு பகுதியை பெற்றிருக்கமாட்டார். முழு அதிகாரத்தையுமே பெற்றிருப்பார்.
3)இந்நிகழ்வின்போது அண்ணல் யூஸுஃபுக்கு நபிப்பட்டம் அருளப்பட்டிருந்தது எனறு கருதத் தேவையில்லை.
4)அதிகார மாற்றத்தின் போது எகிப்தின் மன்னர் இஸ்லாமை தழுவியிருக்கவும் பெருமளவு வாய்ப்புண்டு.
இப்படித்தான் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று எவ்வாறு நாம் கருதுகிறோம்? அப்போதுதான் இறைத்தூதர்களுடைய இலக்கணமாக குர்ஆன் கூறுகின்றவை மிகச்சரியாக இதனோடு பொருந்திப்போகும்.
ஆதாரங்களின் வெளிச்சத்தில்
இப்படித்தான் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று வெறுமனே நியதிகளின் அடிப்படையில் மட்டும் நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை.நாம் அதை விரும்பவும் இல்லை. ஆகையால், உங்களுடைய உள்ளம் மேலும் அமைதி பெறுவதற்காக வான்மறை குர்ஆனுடைய சில விளக்கங்கள் போன்றவற்றை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். நிகழ்ச்சி எப்படி நடந்திருக்கவேண்டுமோ, அப்படியே நடந்துள்ளது எனபதைப் புரிந்து கொள்வீர்கள். ஏனென்றால், இறைவேதத்தின் கருத்துகளில் அணுஅளவு கூட முரண்பாடு காணப்படாது! அதனுடைய சிறப்பம்சங்களில் இதுவும் ஒன்று!ஒரு விஷயத்தைப்பற்றி வான்மறை எக்கருத்தையும் தெரிவிக்காமல் இருக்கவும்-அதைப்பற்றிய குறியீடுகளைக்கூட எங்கும் வெளிபடுத்தாமல் இருக்கவும்-கூட வாய்ப்புண்டு! ஆனால், ஒருவிஷயத்தைப்பற்றிய கருத்தை அது தெரிவிக்கின்றது என்றால்,அதே விஷயத்தைப்பற்றி அது வேறு இடங்களில் தெரிவித்துள்ள கருத்துகள்,செய்திகளோடு முரண்படுவதற்கு கொஞ்சமும் கூட வாய்ப்பே இல்லை!!
வான்மறை குர்ஆன், நுபுவ்வத்(தூதுத்துவம்) என்றால் என்ன? நுபுவ்வத்தின் அளவுகோல் என்ன? என்பதை நிறுவிய பின்பு,அந்த அளவுகோலோடு மாறுபடுமாறு, அந்த இலக்கணத்தோடு பொருந்திப போகாதவாறு ஒரு நபியின் நிகழ்ச்சியை விவரிப்பதற்கு சாத்தயமே கிடையாது! அண்ணல் யூஸுஃப்பும் ஒர் இறைத்தூதரே! இந்த நியதி அவருக்கும் கண்டிப்பாகப் பொருந்தியே தீரும்.ஆகையால் எப்படி நடந்திருக்க வேண்டும் என்று நாம் நியதிகளை முன்வைத்து கணித்துள்ளோமோ, வான்மறை குர்ஆன் மற்றும் தவ்ராத்தின் வார்த்தைகளும், வரிகளின் இடைவெளிகளில் விளக்கப்படும் விஷயங்களும் அதையே உணர்த்துகின்றன. அவற்றைப்பற்றிய சிறுவிளக்கம்.
1)அணணல் யூஸுஃப் ஆட்சி பொறுப்பை வேண்டி விண்ணப்பிக்கவில்லை; கேட்டுப்பெற்றார்கள்! அதற்கான ஆதாரம் வான்மறை குர்அனின் வார்த்தைகளில் உள்ளது.“அரசர் ‘அவரை என்னிடம் அழைத்து வாருங்கள். அவரை எனக்கே உரியவரய் வைத்துக்கொள்கிறேன்!’என்றார்.யூஸுஃப் அவரிடம் உரையாடினார். அப்போது அரசர் கூறினார்: ‘இன்று முதல் நீர் நம்மிடம் பெரும் அந்தஸ்த்துக்கு உரியவராகவும்,முழு நம்பிக்கைக்கு உரியவராகவும் ஆகிவிட்டீர்!’ அதற்கு யூஸுஃப், ‘நாட்டின் கருவூலங்களுக்கு என்னைப்பொறுப்பாளராக்குங்கள்.....!’ என்றுகூறினார்!” (அல்குர்ஆன் 12:55) மிகவும் தெளிவான விஷயம்! நெருங்கிய உதவியாளாராக ஆக்கிக் கொண்டார்;தன்னுடைய பார்வையில் அவர்மிகவும் கண்ணியம் வாய்ந்தவர்; மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவர் என்பதையும் மன்னர் அறிவித்துவிட்டார்! அதன் பின்னேதான் ‘நாடடின் கருவூலங்களுக்கு என்னைப் பொறுப்பாளராக்குங்கள்!’ என்று யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் கூறுகிறார்கள். ‘இன்றுமுதல் நீர் நம்மிடம் பெரும் அந்தஸ்த்துக்குரியவராகவும், முழு நம்பிக்கைக்கு உரியவராகவும் ஆகிவிட்டீர்!’ என்று யூஸுஃப் அவர்களைப் பற்றி தன்னுடைய அபிப்பிராயத்தை மன்னர் வெளியிடுகிறார் என்றால் அவரை அரசவையை அலங்கரிக்கும் இரத்தின கல்லாக சூட்டிக்கொள்ள மட்டும் மன்னர் விரும்பவில்லை, மாறாக, ஆட்சிப்பொறுப்பில் நம்பிக்கைக்கு உரியவராக ஆக்கி அதிகார ஆளுமை கொண்ட பொறுப்பாளாராக ஆக்க விரும்பியே அவ்வாறு கூறினார்! இதனைத் தொடர்ந்து ‘நாட்டின் கருவூலங்களுக்கு என்னைப் பொறுப்பாளாராக்குங்கள்!" என்று அண்ணல் யூஸுஃப் கூறியதை வேண்டுகோளாக,விண்ணப்பமாக எப்படி கருதமுடியும்? வெளிப்படையான கேட்பு இது! அண்ணலுடைய ஈமானியப் பேரொளியின் அசாதாரணமான வெளிப்பாடு இது!!
இதே இருபதாம் நூற்றாண்டின் வீரப்போராளியாக இருந்திருந்தால் சிறைக் கொட்டடியிலிருந்து இப்படியொரு பொன்னான வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் மன்னனுக்கு முன்னால் நெடுஞ்சாண்கிடையாக விழுந்திருப்பார்! கம்யூனிச காம்ரேடாக இருந்திருந்தால் நன்றிப் பெருக்கில் கண்ணீர் மல்க மௌனமாக நின்றிருப்பார் இப்படியெல்லாம் மன்னர் புகழ்வதன் பொருள் என்னவோ,பார்க்கலாம் என்று எதிர்ப்பார்த்திருப்பார்! ஆனால் அண்ணல் யூஸுஃப்பிடம் குடிபொண்டிருந்த ஈமானியப் பேரொளி- நுபுவ்வத்தின் பிரகாசமும் அதன் பிண்னணியில் இருந்தது-காலம்கனிந்து வந்துள்ளதைப் புரிந்து கொண்டது. அவர் நன்றியை வெளிப்படுத்தவோ,மன்னரின் பெருந்தன்மையைப் புகழுவோ செய்யவில்லை. அதிகாரத்தோரணையுடன் கேட்கலானார்கள்; “ நீங்கள் வழங்குகின்ற இந்த அந்தஸ்த்தை ஒப்புககொள்ள வேண்டுமென்றால் புவிக்களஞ்சியம் முழுவதையும் என்பொறுப்பில் ஒப்படைத்;துவடுங்கள். மற்றப்படி, உங்களுடைய அரசு இயந்திரத்தை இயக்கவெல்லாம் நான் தயாராக இல்லை; அந்தப் பணிக்காக நான் உலகிற்கு அனுப்பப்படவும் இல்லை!”
2)ஏதோ பகுதி அதிகாரத்தையும் அவர் கேட்கவில்லை! அதாவது வருவாய்த்துறை அமைச்சுப் பணியை அவர் கேட்கவில்லை, மாறாக முழுமுற்று அதிகாரத்தையும் தான் கேட்டார்,ஆட்சி அதிகாரத்தை இஷ்டப்படி நடத்தும் அளவுக்கு முழுமையான அதிகாரம்! மன்னர், ராஜாதிராஜன், ஃபிர்அவ்ன் என்ற பட்டப்பெயர்களோ, நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட பொற்கீரிடங்களோ, அலங்கரிக்கப்பட்ட ஆட்சிக்கட்டிலோ-மக்கள் மத்தியில் இவை என்னதான் மதிப்பை பெற்றிருந்தாலும் சரியே - ஆட்சி அதிகாரத்திலோ,நாட்டு நிர்வாகத்திலோ எந்த பங்கையும் ஆற்றிடப்போவதில்லை.இவை அனைத்தும் எகிப்து மன்னரிடமே இருக்கட்டும்,மற்றபடி ஆட்சிக்கடிவாளத்தை என் வசமே முழுமையாக ஒப்படைத்து விடுங்கள்! வான்மறை குர்ஆனில் இம்முழு அதிகாரத்தைச்;;;;;; சுட்டிக்காட்டும் குறியீடுகளும்,தவ்ராத்தில் தெளிவான விளக்கங்களும் உள்ளன! குர்ஆனிய கூற்றின்படி... ‘புவியின் களஞ்சியங்கள்’ (Khazayinul Arzh) முழுமையாகத் தம்வசம் ஒப்படைக்கப்படவேண்டும் என்று அண்ணல் யூஸுஃப் கேட்டிருந்தார்கள். அதிகாரத்திற்கான ஆளுமைக்கான மூலவளங்கள்!” என்பதே இதன் பொருள்! ஃக:ஜாயின் என்கிற குர்ஆனிய கலைச்சொல் பொதுவாக நினைக்கப்படுவதைப் போல தானியங்கள் நிரம்பம்பிய உணவுக் களஞ்சியங்களையோ, பொற்குவியல், பணக்குவியல் நிறைந்த கஜானாக்களையோ குறிக்காது. அவற்றைக்குறிக்க ‘கன்:ஜ்’,‘மால்’,‘ஸமராத்’ என்ற சொற்களையே குர்ஆன் பயன்படுத்துகிறது.
உள்துறை முழுக்க அண்ணலின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டிருந்தது! இறைவனுடைய ஒரு சிறப்பான திட்டத்தின் மூலம் அண்ணலின் சகோதரர் பின்யாமீன் அண்ணலோடு வந்து சேர்ந்துகொண்டார். அதைப்பற்றி விவரிக்கையில் குர்ஆன் குறிப்பிடுகின்றது: “மன்னனின் சட்டத்திட்டத்தின் படி தம் சகோதரரைப்பிடித்து வைத்துகொள்வது அவருக்கு ஏற்புடையதாய் இருக்கவில்லை!”குற்றவாளியைப் பிடித்து வைத்துக் கொள்ளவேண்டுமென்றால் காவல்துறையின் அதிகாரங்களும் அவர் கைவசம்இருந்தன. அதுமட்டுமல்ல, நீதி வழங்கும் நீதித்துறையும் அவரிடமே இருந்தது.அரகாங்கத்தின் “நீதி” என்பதே அவராகத்தான் இருந்தார்! அவர் வெறுமனே வருவாய்த்துறை அமைச்சராக மட்டும் இருந்திருந்தால்,வழக்கு விசாரணை அவரிடம் வந்திருக்காது! தங்களுடைய தம்பி பின்யாமீனை விட்டுவிடுமாறு சகோதரர்கள் அவரிடம் முறையிட்டிருக்க மாட்டார்கள். ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பவராகவும் அவரே இருந்தார். அவருடைய பெற்றோர்கள் தங்களுடைய நாடான கண்ஆனை விட்டு விட்டு எகிப்துக்குக் குடிபெயர்ந்தபோது: அவர் தம்முடைய தாய் தந்தையரை சிம்மாசனத்தில் அமர வைத்தார்! நன்றியுணர்வோடு தன்னுடைய ஆட்சியதிகாரத்தின் நிலையை அவர்களுக்கு முன்னால் வெளிப்படுத்தினார். என் இறைவா! நீ எனக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கினாய்! அண்ணல் யூஸீஃப் இவ்வார்த்தைகளை சொன்ன போது எகிப்து மன்னர் உயிரோடுதான் இருந்தார்என்பதை மறந்துவிடக் கூடாது. இந்த சொற்கள், இந்த சாதனைகள்,ஏதேனும் ஓர்உணவு அமைச்சர், வருவாய்துறை அதிகாரி உடையதா? இல்லை, சர்வவல்லமை படைத்த ஓர் ஆட்சியாளருடையதா?
தவ்ராத்தின் கூற்றின்படி.....எகிப்து மன்னர் முதன்முறையாக அண்ணல் யூஸுஃப்பைச் சந்திக்கும்போதே அண்ணலுடைய ஈர்ப்பு விசையால் கவரப்பட்டடு விடுகிறார். அப்போதே தமமுடைய பணியாளர்களைப் பார்த்து அவர் கூறுகிறார். பார்வோன் தன் அலுவலர்களை நோக்கி, ‘இறையாவி பெற்றுள்ள இவரைப்போல் வேறொருவரையும் நாம் காணமுடியுமோ?’ என்றான். பின்பு, பார்வோன்யோசப்பை நோக்கி,இவற்றையெல்லாம் கடவுள் உம் ஒருவருக்கே அறிவித்துள்ளார். உம்மை விட மதிநுட்பமும் ஞானமும் செறிந்தவர் யாருமில்லர்! எனவே,நீரே என் அரண்மனையின் பொறுப்பை ஏற்பீர்!உம் வார்த்தைக்கு என் மக்கள் எல்லோரும் பணியட்டும்! அரியணையில் மட்டும் நான் உமக்குமேற்பட்டவனாய் இருப்பேன் என்றான். பார்வோன் யோசப்பை நோக்கி, இதோ எகிப்து நாடு முழுவதற்கும் உம்மை அதிகாரியாக நியமிக்கிறேன்! என்று சொன்னான். உடனே, பார்வோன் தன்கையில் அணிந்திருந்த அரச கணையாழியைக் கழற்றி அதை யோசேப்பு கையில் அணிவித்து, அவருக்கு பட்டாடை உடுத்தி,பொன் கழுத்தணியை அணிவித்தான்.மேலும் அவரை தன் இண்டாம் தேரில் வலம் வரச் செய்து இவருக்கு முழந்தாளிடுங்கள் என்று ஏவலர் கட்டியும் கூறச்செய்தான்.இவ்வாறு எகிப்து நாடு முழுவதற்கும் அவரை அதிகாரியாக்கினான்.மேலும்,அவன் யோசப்பை நோக்கி,பார்வோனாகிய நான் கூறுகிறேன், உமது ஓப்புதலின்றி எகிப்து நாடெங்கும் எவனும் கையையோ, காலையோஉயர்த்தக்கூடாது!’ என்றான். பின் பார்வோன் யோசப்புக்கு ‘சாபனாந்து பனேகா’ என்ற புதிய பெயர் சூட்டினான்.”(அத்:41 வச37-45)
திருவிவிலியம் பொதுமொழிபெயர்ப்பு பட்டப்பகலைவிடவும் வெட்டவெளிச்சமாக இருக்கும் இவ்விளக்கங்களைப் படித்துப்பாருங்கள்.எகிப்து மன்னரிடத்தில் அண்ணல் யூஸுஃப் ஒரு வருவாய்அதிகாரியாக மட்டுமே இருந்தார் என்று கூறுபவர்களை பார்த்து, அண்ணலிடம் ஆளுமை அதிகாரங்கள் அனைத்தும் குவிந்திருந்தன என்று ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாதவர்களைப்பார்த்து பரிதாபப்படுங்கள்!!
3) எகிப்திய மன்னரிடமிருந்து முழு அதிகாரங்களையும் கைவரப்பெற்ற சமயத்தில் அண்ணல் யூஸுஃப் நபியாக ஆக்கப்படவில்லை என்று கருதுவதற்குத்தான் அதிக வாய்ப்பு உள்ளது. ஆதாரங்கள் இதோ: (அ) தவ்ராத்தின் அறிவிப்பின் படி அப்போது அண்ணல் யூசுஃப் உடைய வயது முப்பது.(தொடக்கநூல் 41:46)
வான்மறை குர்ஆனில் வயதைப்பற்றி தெளிவாக ஒன்றும் கூறப்படவில்லை என்றாலும்,தவ்ராத்தின் அறிவிப்பை ஊர்ஜிதப்படுத்தும் விஷயங்கள் உள்ளன.குர்ஆனின் அறிவிப்பின் படி எகிப்தில் விற்கப்படும்போது வாலிபப்பருவத்தை அவர் அடைந்து விட்டிருக்கவில்லை. அமைச்சர் வீட்டில் சிலகாலம் கழித்தபின்பே அவர் வாலிபப்பருவத்தை அவர் அடைகிறார். அதைத்தொடர்ந்து உடனேயே சிறை செல்ல நேர்கின்றது. ஒருசில ஆண்டுகளை சிறையில் கழித்தபின்னர் விடுதலையாகி வெளியே வருகிறார். இவற்றை கணக்கிட்டுப் பார்த்தால் இந்நிகழ்வின் போது குர்ஆன்படியும் 30,32வயதுதான் இருந்திருக்கும். ஆகையால், இது குறித்த தவ்ராத்தின் அறிவிப்பு சரியல்ல என்று ஒதுக்கித் தள்ள வழியில்லை. அறிவும் மனமும் பக்குவமடைகின்ற வயதுஎன்ன? இப்போது யோசிக்க வேண்டும்! பொதுவாக நுபுவ்வத்திற்கு எந்த வயதை இறைவன் நிர்ணயத்துவைத்துள்ளான்?-நம்முடைய கணிப்பின்படி நாற்பதுவயதில்தான் நபிமார்கள் பொதுவாக ரிஸாலத் பொறுப்பில் நியமிக்கப்பட்டு உள்ளார்கள. இதன்படி,ஆட்சிக்கட்டிலில் அமரும்போது அண்ணல் யூஸுஃப் நபியாக ஆக்கப்பட்டிருக்கவில்லை! என்றுகூறுவதில் தப்பேகிடையாது! அதுவரைக்கும் உம்மத்தே யஃகூப்-பைச் சேர்ந்தவர் என்கிறஅடிப்படையில்தான் அவர்ஒரிறைக் கொள்கையை பிரச்சாரம் செய்துவந்துள்ளார். சத்திய அழைப்பிற்க்கான இப்பயிற்சியை சிறுவயதிலேயே கண்ணியம் பொருந்திய தன் தந்தையிடமிருந்து அவர் பெற்றிருந்தார். அறிவும்,உணர்வும் பக்குவமடைய. பக்குவமடைய இந்த பயிற்சியும் பரிணாம வளர்ச்சி கண்டுவிட்டது.
(ஆ) ஆட்சிப்பொறுப்புக்கு வந்து ஏழெட்டு ஆண்டுகள் சென்ற பிறகு, தானியம் வாங்க வரும் சகோதரர்கள் ஒருமுறை இவ்வாறு கூறுகிறார்கள்: “அரசாதிபதியே!இவருடைய தந்தை மிகவும் வயது முதிர்ந்தவராய் இருக்கிறார்!” ஓர் இறைத்தூதரை ‘நபி’ என்று அழைக்காமல் அது அல்லாத வேறு எந்த வார்த்தையில் அழைத்தாலும், நுபுவ்வத் எனும் தனித்தன்மைக்கு இழுக்கானதாகும்! அந்தச்சமயத்தில் அண்ணல் யூஸ{ஃப் நபியாக இருந்திருந்தால்,அவருடைய சகோதரர்கள் அவரை ‘அஜீஸ்’ என்று அழைத்திருக்கவே மாட்டார்கள். கணடிப்பாக ‘அல்லாஹ்வின்தூதரே!’ என்றுதான் அழைத்திருப்பாhகள்.தூதர் என்ற சொல்,அரசாதிபதி என்ற சொல்லைவிட கண்ணியம் வாய்ந்தது என்பதற்காக அல்ல, மாறாக எந்த நோக்கத்திற்காக முன்னால் நிற்கிறார்களோ அது நிறைவேற வேண்டுமென்றால் நபி என்று அழைப்புதான் சாலச்சிறந்தது. தங்களுடைய சகோதரர் பின்யாமீனை விட்டு விடுமாறு அவர்கள் முறையிட்டுக் கொண்டிருந்தார்கள். இறைத்தூதர் யூஸுஃப் இருக்கும் போது அரசாதிபதி யூஸுஃப்பிடம் போய் கருணை மனு கொடுப்பது முட்டாள்தனம் என்று கூடத்தெரியாத அளவுக்கு அவர்கள்அறிவற்றவர்கள் அல்லர்.
அதிகாரம்,ஆளுமை,வல்லமை இவற்றின் மறுபெயர் தாம் அஜீஸ்! அங்கு கருணையையோ,கனிவையோ எதிர்பார்க்க முடியாது. அதேசமயம் கருணை,கிருபை,அன்பு இவற்றின் மறுபெயர்தான் நுபுவ்வத். கேட்பவர்களுக்கு இல்லை என்றுசொல்வது நுபுவ்வத்தின் இலக்கணத்திலேயே கிடையாது!
4)எகிப்தின்மன்னர், அண்ணல்யூஸுஃப்பின் கரங்களால் இஸ்லாமை தழுவிவட்டிருந்தார். ஆதாரங்கள் இதோ: (அ) தவ்ராத்தின் விளக்கத்தை ஏற்கனவே கண்டு வந்துள்ளோம். மீண்டும் நினைவுப்படுத்திக் கொள்வோம். ‘இறையாவி பெற்றுள்ள இவரைப்போல் வேறொருவரையும் நாம் காணமுடியுமா?’ ......... “பார்வோன் யோசப்பை நோக்கி, இவற்றையெல்லாம் கடவுள் உம் ஒருவருக்கே அறிவித்துள்ளார்.! ” ஒருகாஃபிரோ, முஷ்ரிக்கோ, இறைவனுக்கு எதிரான சதிகாரனோ இவ்வார்த்தைகளைச் கொல்வானா? தவ்ஹீதின் குறியீடுகளை உணர்ந்தவன் போல் அல்லவா, எகிப்துமன்னர் ‘இறையாவி,’ ‘கடவுள் அறிவித்துள்ளார்’ போன்ற சொற்களை பயன்படுத்தியுள்ளார்?
(ஆ)குஃப்ரையும்,ஷிர்க்கோ பின்பற்றுகின்ற எகிப்துமன்னர் முழு அதிகாரத்தையும் ஓர் இறைநம்பிக்கையாளரிடம் ஒப்படைத்துவிட்டார் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சிரியமான விஷயம்! அதுவும் எப்படிப்பட்ட ஆளிடம் தெரியுமா? சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் அடைபட்டுகிடந்த போதும் ஷிர்க்குக்கும்,கு.ப்ருக்கும் எதிராக வாளை உருவியவரிடம்! சிறையிலேயே இந்தப்பணி என்றால் வெளியே வந்தால் அவர் என்னவெல்லாம் செய்திடமாட்டார்?
இரண்டு எதிர் எதிர் துருவங்கள், இயற்கையாகவே ஒன்றையொன்று எதிர்த்து,களம் காண்பவர்கள் இணக்கமாகப் பணியாற்றினர் என்பதற்கு தத்துவ வரலாற்றில் ஒரே ஒரு உதாரணத்தைக்கூட நம்மால் பார்க்கமுடியாது! அது மட்டுமல்லாமல், அண்ணல்யூஸுஃப் கண்டிப்பாக எகிப்து மன்னருக்கு முன்னால் இஸ்லாமிய அழைப்பை வைத்திருப்பார். இறையாவி பெற்ற மனிதராக தான் கருதும் மனிதர் ஒருவரின் அழைப்பை கண்டிப்பாக- கண்டிப்பினும் கணடிப்பாக- எகிப்து மன்னர் ஏற்றிருப்பார்! இல்லாவிட்டால் ஒரு காஃபிர்,ஒரு முஷ்ரிக், காஃபிர் மற்றும் முஷ்ரிக்காக இருந்து கொண்டே,ஒர் இறை அழைப்பாளரிடம், ஒருமுஃமினிடம்-அதுவும் எப்பேற்பட்ட முஃமின்! உத்வேகமான இறைஅழைப்பாளன்! தன்னிடமுள்ள அனைத்தையும் நம்பி ஒப்படைத்துவிடும் அளவுக்கு திருப்தியை எங்ஙனம் பெற்றிருக்க முடியும்?- இவ்வாறு எப்போது நிகழுமென்றால் குஃப்ரும்,ஈமானும் தத்தமது நிலைகளிலிருந்து ஒரு சிறியதை விட்டுக்கொடுத்து சமரசம் செய்து கொள்ளும்போது!அவற்றில் ஒன்று கூட விடாப்பிடியாக தனது நிலையில் உறுதியாக நின்றாலும் இத்தகைய ஒற்றுமை சாத்தியப்படாது!இருபதாம்நூற்றாண்டின் குஃப்ரிடமும், ஈமானிடமும் வேண்டுமானால் இத்தகைய “பரந்த மனப்பான்மையும் மதநல்லிணக்கத்தையும்” காணலாம். ஆனால் கி.மு 20-ம் நூற்றாணடில் இந்த நிலை நிலவியது என்பதை கற்பனைகூட செயது பார்க்க முடியாது. சரி ஒரு வேளை குஃப்ராவது விட்டுக்கொடுத்திருக்கலாம். ஆனால்,ஈமான்!(அதுவும் சாதாரண ஈமான் அல்ல,யூஸுஃபின் ஈமான்ஐப்பற்றி இவ்வாறு யோசிப்பது கூட பெருந்தவறு!! எனவேதான், இஸ்லாமிய உலமாக்களில் பலரும்எகிப்து மன்னரைப்பற்றி இதே எண்ணத்தையே கொண்டுள்ளார்கள். புகழ்பெற்ற அல்குர்ஆன் விரிவுரையாளராகிய முஜாஹித் அவர்களும் எகிப்திய மன்னர் முஸ்லிமாகிவிட்டிருந்தார் என்றுதான் கூறுகிறார்(காண்க: இப்னு ஜரீர்,கஷ்ஷாஃப்) இந்த பேருண்மைகள்,சாத்தியக்கூறுகள் இவற்றையெல்லாம் நிதானமாக ஆராய்ந்து பாருங்கள். அண்ணல் யூஸுஃபுடைய வாழ்க்கையின் மிகச்சரியான கோணம் எதுவாக இருக்க முடியும்?என்று சிந்தித்துப்பாருங்கள்!
தெளிவான ஆதாரங்கள்,பேருண்மைகள் உள்ள போது இப்பிரச்சனைக்கு முறையற்ற வடிவம் ஒன்றைக் கொடுத்து, அதுதான் சரி என்று அடம்பிடிப்பது சரிதானா? கண்ணியம் பொருந்திய இறைத்தூதர் ஒருவருடைய நடைமுறையை பயங்கரமாகத்தரம் தாழ்த்தி தம்முடைய கருத்துக்கு ஆதாரமாக முன்வைப்பது முறைதானா? தம்முடைய நிலைப்பாட்டுக்கு அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லையே மிஞ்சி மிஞ்சி இருப்பெதல்லாம் ‘கஸாயின்’ என்ற சொல்!பணம், செல்வம் என்று அதை நாம் தவறாக மொழிபெயர்த்து வைத்துள்ளோம். அடுத்து எகிப்துமன்னர்! எகிப்து மன்னர் எனறால் அவன் ஃபிர்அவ்னாகத்தான் இருப்பான். ஃபிர்அவ்ன் என்ற பெயர் கொண்டவர் இஸ்லாமின் கொடிய எதிரி என்றுதான் விளங்கிவைத்துள்ளோம். அதை அடுத்து வான்மறை குர்ஆன் அண்ணல் யூஸுஃப் ஓர் இறைத்தூதர் என்று கூறுகின்றது.ஆகையால், அவரைப்பற்றி என்ன கூறப்பட்டாலும் அது அவர் இறைத்தூதராக ஆனதற்குப்பிறகு நடைபெற்றதுதான் எனறே விளங்கி வைத்துள்ளோம்!அப்படியே வைத்துக் கொண்டாலும் அப்போதும் நம்முடைய கருத்தே சரியானதாக இருக்கும்- இத்தகைய தூய சான்றோர், தூதர்களை தெரிந்தோ தெரியாமலோ இந்த மாதிரியெல்லாம் பயன்படுத்திக் கொள்வது ஈமானுக்கே விரோதமான செயல் என்பதில் இரண்டு விதமான கருத்துக்கே இடமில்லை!!
(இந்த பகுதி 20 ம் நூற்றாண்டின் இஸ்லாமிய பேரறிஞர்களில் ஒருவரான சத்ருத்தின் இஸ்லாஹியின் “தாகூத்தை விட்டு தூர விலகு” எனும் புத்தகத்தில் இருந்து கையாளப்பட்டுள்ளது)
Sunday, July 19, 2009
மார்க்க ஒற்றுமை
மார்க்க ஒற்றுமையே எங்கள் உம்மி நபியின்! உம்மி சமுதாயத்தின்! உம்மி முஸ்லிமாகிய எனது அன்பான வேண்டுகோள்.
அன்பிற்கினிய சகோதர சகோதாிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்தஹீ (உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமுன் என்றென்றும் நிலவட்டுமாக!)
அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள், பிரிந்து விடாதீர்கள். – இது திருக்குர் ஆன் 3:103ன் வசனமாகும். இதன் விளக்கம் என்ன தெரியுமா? எல்லோரும் ஒரு அணியில் நின்று ஒரு கொள்கையை இறுக்கி பிடித்து சருகிவிடாமல் ஒற்றுமையாக இருப்ப்தே,
உலகப் பொதுமறை திருக்குர்ஆன் மற்றும் நபிவழி சுன்னத் ஆகிய இரண்டுதான்அல்லாஹ்வின் கையிறாகும்,
லா இலாஹா இல்லல்லாஹீ முஹம்மதுர் ரசூலில்லாஹி
(வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள)
எல்லோரும் மேற்கண்ட ஓரிரை கொள்கையை பற்றிப் பிடிக்க அல்லாஹ் நமக்கு தனது திருக்குர்ஆன் எனும் வார்த்தைகள் முலம் முஸ்லிம்களுக்கு
கட்டளையிடுகிறான், ஆனால் நாம் அவ்வாறு ஒன்றுபட்டு நிற்கிறோமா? இல்லவே இல்லை
ஆலுக்கொரு ஜமாஅத். ஆலுக்கொரு கொள்கை. ஆலுக்கொரு தலைவன் என பிாிந்து நிற்கின்றனர் நம் முஸ்லிம் சகோதரர்கள் கீழே கொடுக்கப்பட்டது போன்று
நான் சுன்னத்வல் ஜமாஅத்துக்காரன்,
நான் தப்லிக் ஜமாஅத்துக்காரன்,
நான் அஹ்லே ஹதீஸ்,
நான் பாக்கவி,
நான் ரப்பானி,
நான் காதிரி,
நான் மாலிகி,
நான் ஹம்பலி
நான் ஜாக் ஜமாத்,
நான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,
நான் இந்திய தவ்ஹீத் ஜமாத்,
நான் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகக்காரன்
எவரும் அல்லாஹ்வின் புனிதமிக்க மார்க்கமான இஸ்லாத்தைச் சேர்ந்த உண்மையான இஸ்லாமியன் என்று சொல்வதில்லையே ஏன் இந்த அவலம். இந்த பிரிவினைக்கு காரணமாகியவர்களை அல்லாஹ் நாளை மறுமையில் கேள்வி கேட்பானே!
அல்லாஹ்வுக்கும் மறுமையில் அவனுடைய கேள்விகளுக்கும் பயந்துக்கொள்ளுங்கள்!
நம் அன்பிற்கினிய மதிப்பிற்கும், கண்ணியத்திற்கும் ஏன் எங்கள் உயிருக்கும் மேலாக மதிக்கக் கூடிய ஒரு சில தவ்ஹீத் சகோதரர்கள் இணைந்தால் போதுமே நம் மார்க்க ஓற்றுமைக்கு. அல்லாஹ் உறுவாக்கிய இஸ்லாமிய மார்க்கத்தை பிளவுபடுத்த யாருக்கு அதிகாரமிருக்கிறது! அல்லாஹ் விதித்த ஒற்றுமை எனும் சட்டத்தை மீற யாருக்குக்கேனும் தனி சுநத்திரம் அளிக்கப்பட்டுள்ளதோ?,
தமிழகத்தில் முழுவதுமாக மக்களிடமிருந்து குப்ரு எனும் இறைநிராகரிப்பை நீங்கி விட்டதா? நாம் நமக்குள் சண்டைபோட்டுக்கொண்டு பிரிந்து நிற்க? இந்த இணைவைப்பவர்களை நேர்வழிப்படுத்து ஏகத்துவ வாதிகளே ஒன்றுபடுங்கள்! சுவனம் செல்ல முந்திக்கொள்ளுங்கள்!
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும அவர்களே வெற்றி பெற்றோர், இது உலகப்பொதுமரை திருக்குர்-ஆன் 3:104ன் வசனமாகும்
இந்த வசனத்தின் முலம் அல்லாஹ் நமக்கு அறிவுறுத்துவது என்னவென்றால் ஒரு சமுதாயமாக இருந்து நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழையுங்கள் என்றுதான் ஆனால் இன்றைக்கோ தமிழகத்தில் மட்டும் தவ்ஹீத்வாதிகள் 72 சமுதாய பிரிவினர்களாக பிரிந்து நானா? நீயா எனறு பலப்பரிட்சையில் இறங்கிவிட்டனரே இது நியாயமா?
திருக்குர் ஆன் 3:105ன் வசத்தின் முலம் அல்லாஹ் நமக்கு இவ்வாறு கட்டளையிடுகிறான், தம்மிடம் தெளிவான் சான்றுகள் வந்த பின்பு முரண்பட்டுப் பிரிந்து விட்டோரைப் போல் ஆகாதீர்கள், அவர்களுக்கே கடும் வேதனை உண்டு
வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன, அல்லாஹ்விடமே காரியங்கக் கொண்டு செல்லப்படும் – என்ற திருக்குர் ஆன் 3:109ன் வசனத்தை இவர்கள் படிக்கவில்லை போலும்,
முடிவுரை
என அருமை சகோதர, சகோதரிகளே நாம் அரபி இலக்கணம் அறியாத உம்மிகள் நமது நபியும் நம்மைப் போன்று உம்மிதான் ஆனால் அல்லாஹ் நமக்கு அறிவை கொடுத்துள்ளான் இனியும் இந்த பிறிந்து நின்று பிறிவினைவாதிகளின் பின் நிற்காமல் உலகப் பொதுமறை திருக்குர்ஆன் மற்றும் நபிவழி சுன்னத் ஆகிய அல்லாஹ்வின் கயிற்றை பலமாக பற்றிப்பிடித்து தைரியமாக முஸ்லிம்கள் என்று சொல்வோமாக, யார் சொன்னாலும் காது கொடுத்து கேட்போம் ஆனால் உலகப் பொதுமறை திருக்குர்ஆன் மற்றும் நபிவழி சுன்னத் ஆகிய இரண்டின் பக்கம் தான் தலை
சாய்ப்போம் என்று சூளுரைத்து அல்லாஹ்வின் பக்கம் திரும்புவோமாக, மஹஷர் வெற்றிக்காக பொறுத்திருந்து, ஏகத்துவத்தை நிலைநாட்டி நம்மால் இயனற் அளவு
இஸ்லாத்தை எல்லோரிடமும் எத்தி வைத்து இல்வாழ்க்கையிலும் மறுமையிலும் பிரியாமல் மறுமை வெற்றிக்காக காத்திருப்போமாக, இன்ஷா அல்லாஹ் சுவனம் செல்வோமாக,
அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள், பிரிந்து விடாதீர்கள். – திருக்குர் ஆன் 3:103
மேற்கண்ட விளக்கம் எனது சொந்தக் கருத்துத்தான் இதில் தவறு கண்டால் எனக்கு தெரியப்படுத்தவும் நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன் ஏனெனில் ஒருமுறை நபிகளார் (ஸல்) அவர்கள் தேன் அருந்தமாட்டேன் என்று தன்னிச்சையாக முடிவெடுத்து அதனை அல்லாஹ் கண்டித்தவுடன் தனது தவற்றை உணர்ந்து தவறுகளை திருத்திக் கொண்டார்கள் இநத் மனோ பக்குவத்தை எனக்கும் உங்களுக்கும் ஏக இறைவன் வழங்கி அருள்புரிவானாக,
(கொண்ட கொள்கைதான் பெரியது என நம்பி வாழும் நம் ஆலிம் பெருமக்களுக்கும் சேர்த்து துவா செய்து கொள்வோமாக! அல்லாஹ் நம் பிாிந்து நிற்கும் சமதாயத்திற்கு ஒற்றுமையை அருளி நம்மை தனது அர்ஷின் நிழலில் நிற்கச்செய்து கேள்விக்கணக்கின்றி சுவனத்தில் புகுத்துவானாக! ஆமீன்!)
நாம் முஸ்லிம்கள்! நாம் அமைதியாக இஸ்லாத்தை கடைபிடித்து எவருக்கும் எந்த மனிதனுக்கும், இந்து, முஸ்லிம். கிருத்தவ ஏன் எந்த இன, மத, மொழி பேசக்கூடியவர்களுக்கும் தீங்கிழைக்காமால் வாழுவோம் என்று சபதமேற்று சுவனப்பதையை வளமாக்கிக்கொள்வோமாக!

Friday, July 17, 2009
Saturday, July 11, 2009
தவ்ஹீத் அல் அஸ்மா வஸ் ஸிஃபத்
தவ்ஹீத் அல் அஸ்மா வஸ் ஸிஃபத்
· அல்லாஹ்வின் பெயர்கள், குணங்கள் இணைவைக்காமல் இருத்தல்· அல்லாஹ்வின் திருநாமங்கள், குணங்கள் குர் ஆன் மற்றும் ஹதீஸில் சொல்லப்பட்டவாறு முழுமையாக நம்புதல் வேண்டும்.· அல்லாஹ்வின் தன்மைகளை எப்படைப்புக்கும் இணையாக்கமல் இருத்தல்அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று குர் ஆன் சொன்னால் இருக்கிறது என்று நம்ப வேண்டும். எப்படி இருக்கும், நம்முடைய கையை போல் இருக்குமா என்றெல்லாம் ஆராயக் கூடாது. ஏனென்றால் நிச்சயமாக அவை நாம் நினைப்பது போல் அல்லது நம்மை போல் இருக்காது. அல்லாஹ் தன்னை பற்றி திருமறையில் அவ்வாறு தான் கூறுகிறான் : “அவனைப் போன்று எப்பொருளும் இல்லை” (திருக்குரான் 42 :11)அல்லாஹ்வுக்கு அர் ரவூப் (கருணை மிக்கவன்), அர்ரஹீம் (கிருபை மிக்கவன்), அஸ்ஸமது (தேவையற்றவன்) என 99 பெயர்கள் உள்ளன. இப்பெயர்கள் ஒவ்வொன்றும் அவனது பண்பை எடுத்துக் காட்டுகின்றன. எனவே இறைவனின் பெயர்களை இறைவனின் அடிமைகளுக்கு சூட்டும் போது அப்து என்ற பெயருடன் சேர்த்து சொல்ல வேண்டும். உதாரணத்துக்கு ரஹ்மான் என்று வைக்காமல் அப்துர் ரஹ்மான் என்று பெயர் வைப்பதின் மூலம் பெயரிலும் ஷிர்க்கின் வாடை இல்லாமல் காப்பாற்றப்படுகிறோம். அது போல் அல்லாஹ் அல்லாத வேறு பெயர்கள் வைக்கும் போது அதற்கு முன்னால் அடிமை என்று பொருள்படும் அப்து சேர்த்து வைக்க கூடாது. முஸ்லீம்களிடையே புழக்கத்தில் இருக்கும் அப்துன் நபி, அப்துர் ரஸீல், அப்துல் ஹுசைன், நாகூர் பிச்சை போன்ற பெயர்கள் வைப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்
ஷிர்க் அர் ருபூபியா
ஷிர்க் அர் ருபூபியா
ஷிர்க் அர் ருபூபியாவை இரண்டாக பிரிக்கலாம்1. படைப்பாளனுடைய ஆளுமையில் பிற தெய்வங்களை கூட்டாக்கல்2. இறைவனே இல்லை என்ற நாத்திக கொள்கைமுதலாவது வகை ஷிர்க் அர் ருபூபியாவுக்கு அடையாளமாக பிற மதத்தை பின்பற்றுபவர்களை சொல்லலாம். உதாரணத்துக்கு இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் நிறைய தெய்வங்களை வணங்குபவர்களாக இருந்தாலும் மூன்று முக்கிய கடவுள்களை வணங்குவதோடு மட்டுமல்லாமல் அந்த ஓரே படைப்பாளனின் அதிகாரங்களை பிரம்மனுக்கு படைத்தல் என்றும் விஷ்ணுக்கு பரிபாலித்தல் என்றும் சிவனுக்கு அழித்தல் என்றும் பங்கிட்டு கொடுத்தனர். அது போல் கிறித்துவர்கள் கடவுளை பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்று ஒன்றை மூன்றாகவும் மூன்றை ஒன்றாகவும் சித்தரித்து இணை கற்பித்தனர். யூதர்கள் அல்லாஹ்வுக்கு மகன் இருப்பதாக இணை கற்பித்தனர். பாரசீகர்கள் நல்லவைகளுக்கு காரணமாக நெருப்பையும் தீயவைகளுக்கு காரணமாக இருட்டையும் சித்தரித்து இணை வைத்தனர்.இரண்டாவது வகை ஷிர்க் அர் ருபூபியாவுக்கு அடையாளமாக தத்துவஞானிகள், அறிஞர்கள் (?, ? ) என சொல்லப்படுபவர்களை பார்க்கலாம். கடவுள் இல்லை என்று சொன்ன புத்தர் (பின்னாளில் புத்தரையே கடவுளாக்கி தனி மதமானது வேறு விஷயம்), நானே கடவுள் என தன்னை தானே பிரகடனப்படுத்திய பிர் அவ்ன், குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என இறைவனின் படைப்பாற்றலை மறுத்த டார்வின் போன்றோர் உட்பட நாத்திகவாதிகளை இப்பட்டியலில் சேர்க்கலாம்.
தவ்ஹீத் அல் அஸ்மா வஸ் ஸிஃபத்
தவ்ஹீத் அல் அஸ்மா வஸ் ஸிஃபத்
· அல்லாஹ்வின் பெயர்கள், குணங்கள் இணைவைக்காமல் இருத்தல்· அல்லாஹ்வின் திருநாமங்கள், குணங்கள் குர் ஆன் மற்றும் ஹதீஸில் சொல்லப்பட்டவாறு முழுமையாக நம்புதல் வேண்டும்.· அல்லாஹ்வின் தன்மைகளை எப்படைப்புக்கும் இணையாக்கமல் இருத்தல்அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று குர் ஆன் சொன்னால் இருக்கிறது என்று நம்ப வேண்டும். எப்படி இருக்கும், நம்முடைய கையை போல் இருக்குமா என்றெல்லாம் ஆராயக் கூடாது. ஏனென்றால் நிச்சயமாக அவை நாம் நினைப்பது போல் அல்லது நம்மை போல் இருக்காது. அல்லாஹ் தன்னை பற்றி திருமறையில் அவ்வாறு தான் கூறுகிறான் : “அவனைப் போன்று எப்பொருளும் இல்லை” (திருக்குரான் 42 :11)அல்லாஹ்வுக்கு அர் ரவூப் (கருணை மிக்கவன்), அர்ரஹீம் (கிருபை மிக்கவன்), அஸ்ஸமது (தேவையற்றவன்) என 99 பெயர்கள் உள்ளன. இப்பெயர்கள் ஒவ்வொன்றும் அவனது பண்பை எடுத்துக் காட்டுகின்றன. எனவே இறைவனின் பெயர்களை இறைவனின் அடிமைகளுக்கு சூட்டும் போது அப்து என்ற பெயருடன் சேர்த்து சொல்ல வேண்டும். உதாரணத்துக்கு ரஹ்மான் என்று வைக்காமல் அப்துர் ரஹ்மான் என்று பெயர் வைப்பதின் மூலம் பெயரிலும் ஷிர்க்கின் வாடை இல்லாமல் காப்பாற்றப்படுகிறோம். அது போல் அல்லாஹ் அல்லாத வேறு பெயர்கள் வைக்கும் போது அதற்கு முன்னால் அடிமை என்று பொருள்படும் அப்து சேர்த்து வைக்க கூடாது. முஸ்லீம்களிடையே புழக்கத்தில் இருக்கும் அப்துன் நபி, அப்துர் ரஸீல், அப்துல் ஹுசைன், நாகூர் பிச்சை போன்ற பெயர்கள் வைப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்
ஷிர்க் அல் அஸ்மா வஸ் ஸிஃபாத்
Wednesday, April 29, 2009
ஷிர்க் அல் அஸ்மா வஸ் ஸிஃபாத்
ஷிர்க் அல் அஸ்மா வஸ் ஸிஃபாத் இரண்டு விதமாக ஏற்படலாம்.1. அல்லாஹ்வுக்கு மனிதன் உட்பட படைப்பினங்களின் தன்மைகள் இருப்பதாக கருதி செய்யப்படும் ஷிர்க்குக்கு உதாரணமாக ஹிந்துக்கள் தாங்களாகவே கற்பனையில் உதித்த உருவத்தின் அடிப்படையில் சிலைகளை அமைத்து வழிபடுவதை கூறலாம். அந்த உயிரற்ற உருவத்துக்கு, தன் மேல் அமரும் ஈயை கூட ஓட்ட சக்தியில்லாத அந்த கற்சிலைகளுக்கு தங்களை போன்ற மனிதர்களின் வடிவத்தை கொடுப்பதை காண்கின்றோம். அதனால் தான் ஹிந்துக்களின் கடவுளர்களின் உருவம் பெரும்பாலும் இந்திய மனிதர்களின் சாயலை ஒத்திருப்பப்பதை காண்கின்றோம். அது போல் கிறித்துவர்கள் தாங்கள் கடவுள் என கருதும் இயேசுவின் உருவம் ஐரோப்பியர்களின் உருவத்தை ஒத்தது போல் தோன்றுவதற்கு காரணம் இயேசுவை வரைந்த ஓவியரான மைக்கேல் ஏஞ்சலா ஐரோப்பியராக இருந்தது தான். அதனால் தான் Message எனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பற்றிய வரலாற்று படத்தில் கூட தூதராக நடித்தவரின் முகத்தை காட்டவில்லை.2. படைப்பினங்களுக்கு படைப்பாளனின் தன்மை இருப்பதாக கருதி செய்யப்படும் ஷிர்க்கும் ஷிர்க் அல் அஸ்மா வஸ் ஸிஃபாத்தை சாரும். இஸ்லாத்துக்கு முந்தைய ஜாஹிலிய்யா காலத்தில் குறைஷிகள் தாங்கள் வணங்கிய தெய்வங்களுக்கு அல்லாஹ்வின் 99 பெயர்களில் சிலவற்றை தான் சூட்டியிருந்தார்கள். குறைஷிகள் வணங்கிய சிலைகளுள் பிராதனமான அல் – லாத் அல்லாஹ் என்பதிலிருந்தும், அல்-உஸ்ஸா அல்லாஹ்வின் பெயர்களுள் ஒன்றான அல்-அஜீஸிலிருந்தும், அல்-மனாத் என்பது அல்-மன்னான் எனும் அல்லாஹ்வின் பெயரிலிருந்தும் எடுக்கப்பட்டதாகும். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் தன்னை நபி என்று அறிவித்து கொண்ட பொய்யன் முஸைலமா தனக்கு வைத்து கொண்ட பெயர் அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றான ரஹ்மான் என்பதாகும். ஸிரியாவில் உள்ள ஷியா பிரிவு நுஸய்ரியர்கள் அலீ (ரலி) அவர்களை அல்லாஹ்வின் அவதாரமாக கருதி ஷிர்க் வைக்கின்றனர். திருமறையின் 55:26 வசனத்தில் “பூமியாக இதன் மீது இருப்பவை ஒவ்வொன்றும் அழியக் கூடியதே” என்று சொல்வதற்கு மாற்றமாக சக்தியை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது எனும் விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் Theory of Relativity யும் ஷிர்க்கின் பால் இட்டுச் சொல்லக் கூடியதே.மேலும் அல்லாஹ்வைத் தவிர உமக்கு யாதொரு பயனையும், தீமையையும் விளைவிக்காதவற்றை நீர் அழைக்க வேண்டாம். அவ்வாறு செய்வீராயின், அப்பொழுது நிச்சயமாக நீர் அநிநாயக்காரர்களில் ஒருவராக ஆகிவிடுவீர். அல்லாஹ் ஒரு தீமையை உமக்கு அடையச் செய்தால், அவனையன்றி அதனை நீக்குபவர்கள் (வேறு எவரும்) இல்லை. அவன் உமக்கு ஒரு நன்மையை நாடிவிட்டால், அவனது அருட்கொடையைத் தடுப்போர் எவருமில்லை. அவனது அடியார்களில், அவன் நாடியவருக்கே அதனை வழங்குகிறான். அவன் மிக்க மன்னிப்போனும், மிகக் கிருபையுடையோனுமாவான். (10 : 106,107)மேற்கண்ட வசனத்தில் இறைவன் அவனை தவிர வேறு யாரிடமும் பிராத்திக்காதீர்கள் என சொல்கிறான். ஆனால் நம் சமுதாயத்திலும் சிலர் இறைவனிடம் பிராத்திப்பதை போல் பெரியவர்களிடமும் அவுலியாக்களிடமும் பிராத்திக்கின்றனர். சிலர் ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் கூட யா அல்லாஹ் என்று கூட அழைக்காமல் யா முஹையதீனே என்றும் அழைக்க கூடியவர்களாக உள்ளனர். இது ஷிர்க்காகும். அது போல் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு நேர்ச்சை செய்தலும், தாயத்து கட்டுவதும் ஷிர்க் அல் அஸ்மா வஸ் சிஃபாத்தை சாரும்.அது போல் கப்ரு எனப்படும் சமாதி வழிபாட்டையும் அல்லாஹ்வின் தூதர் கடுமையாக கண்டித்துள்ளார்கள். அது எவ்வாறு வேதம் கொடுக்கப்பட்ட சமுதாயத்தில் உருவானது என்பதை பற்றி சொல்லும் போது “ கிறித்துவர்கள் அவர்களில் நல்லவர்கள் மரணித்து விட்டால் சமாதியின் மீது மஸ்ஜிதை கட்டி படங்களை உருவமைத்து விடுவார்கள். அத்தகையோரே அல்லாஹ்வின் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் (ஆயிஷா (ரலி) – முஸ்லீம்). மேலும் சொன்னார்கள் “யா அல்லாஹ் ! என்னுடைய கப்ரை வணங்கப்படும் விக்ரகமாக ஆக்கி விடாதே ! தங்கள் நபிமார்களின் சமாதிகளை மஸ்ஜிதுகளாக எடுத்துக் கொண்டார்களோ அந்த சமூகத்தார் மீது அல்லாஹ்வின் கோபம் கடுமையாக இருக்கிறது” (அல்முஅத்தா) என்று கப்ர் வழிபாட்டை கண்டித்தார்கள். அது போல் ஜோதிடத்தை பற்றி கூறும் போது “எவர் ஜோதிடனிடம் வந்து அவன் கூறுபவற்றை உண்மைப்படுத்துகிறாரோ அவர் அல்லாஹ் இறக்கிய வேதத்தை நிராகரித்து விட்டார்” என்று கூறினார்கள் (அபூஹீரைரா (ரலி) – அபூதாவூத்).இது போல் ஷிர்க் அல் அஸ்மா வஸ் ஸிஃபாத்க்கு இட்டுச் செல்லும் மூடநம்பிக்கைகள் ஐரோப்பியாவிலும் உள்ளது. உதாரணத்திற்கு உப்பு என்பது எல்லா பொருட்களையும் கெடாமல் பாதுகாக்க கூடிய ஒன்றாக இருப்பதால் உப்பு தவறி விழுந்தால் துரதிருஷ்டம் தொடரும் என எண்ணி அதற்கு பரிகாரமாக சிந்திய உப்பை எடுத்து இடது தோளிற்கு மேல் வீசி எறிவர். கறுப்பு பூனைகளை பாதுகாப்பிற்காக வைத்துக் கொள்பவர்கள் கூட பூனை குறுக்கே போவதை அபசகுணமாக கருதுபவர்களாகவும் 13ம் எண்ணை துரதிருஷ்டமாக எண்ணுகின்றனர். கேரள சட்டசபை M.L.A. Hostel-ல் சமீப காலம் வரை 12ம் நம்பர் ரூமுக்கு அடுத்த ரூமுக்கு 13 என்று போடாமல் 12 B என்று தான் போடப்பட்டுள்ளது. அது போல் நாகரீகத்தின் உச்சாணிக்கொம்பில் இருப்பதாக சொல்லப்படும் அமெரிக்காவில் 1970-ல் அப்போலோ விண்கலம் விபத்திலிருந்து தப்பியது. அதற்கு அந்த விஞ்ஞானி சொன்ன இது போல் ஏற்படும் என நினைத்ததாக சொன்னதற்கு காரணம், விண்கலம் ஏவப்பட்ட நாள் 13ம் தேதி மற்றும் அன்றைய நாள் வெள்ளிக்கிழமை ஆகும். மேலும் ஏவப்பட்ட நேரம் மதியம் 1 மணி அதாவது 13 மணி. இந்த ஷிர்க்குக்கான மூடநம்பிக்கைக்கு வேர் கிறித்துவர்கள் ஈஸா (அலை) அவர்கள் வெள்ளிகிழமை அன்று சிலுவையில் அறையப்பட்டதாக நம்பினார்கள். மேலும் அவர்கள் சொல்லக் கூடிய இறுதி உணவு சம்பவத்தில் 12 சீடர்களுடன் 13வதாக வந்த யூதாஸ் காட்டி கொடுத்ததாக நம்புவதால் தான் வெள்ளிக்கிழமையையும் 13ம் எண்ணையும் துரதிருஷ்டமாக நம்பினார்கள். நமது பகுதிகளில் கூட வெள்ளிக்கிழமையும் பெருநாளும் ஒன்றாக வந்தால் பெரிய தலைவர்கள் மரணமடைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.அல்லாஹ் எங்கும் இருக்கிறான். தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான் என்று நம்புவது ஷிர்க் அல் அஸ்மா வஸ் சிஃபத்தை சாரும். ஹிந்துக்கள் பிரம்மன் எனும் தலையாய ஆத்மா எல்லா இடங்களிலும் இருப்பதாக கருதி கணக்கிலடங்காத சிலைகளையும், மனிதர்களையும் பிரம்மனின் உருவங்களாக கருதி வணங்கினார்கள். இந்த சிந்தனை முஸ்லீம் சமூகத்தில் ஊடுறுவிய போது அஹ்மது இப்னு ஹம்பல் போன்ற இமாம்கள் கடுமையாக எதிர்த்தார்கள். மன்சூர் அல் ஹஜ்ஜாஜ், இப்னு அரபி போன்றோர் இச்சிந்தனையின் உச்சகட்டமாக “ அல்லாஹ்வும் நானும் ஒன்றே” என்று கூற தலைப்பட்டனர். தற்போது நமது நாட்டில் இறைவனின் அவதாரமாக தங்களை கருதிக் கொள்ளும் பங்காரு அடிகளார், சாய்பாபா, நாராயண அம்மா, அமிர்தனாந்தாயி போன்றோர் இவ்வகையை சார்ந்தவர்கள். அது போல் இறைவனின் இருப்பிடம் அர்ஷ் என்பதாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். இமாம் அபூ ஹனீபா அவர்கள் இது குறித்து அல்லாஹ் வானத்தின் மேல் இருக்கிறானா ?, பூமியின் மேல் இருக்கிறானா? என்று தெரியாத ஒருவன் நம்பிக்கை இழந்து விட்டான் என்றார்கள்.

அதிகாரம் அல்லாஹ்வுக்கே
அதிகாரம் அல்லாஹ்வுக்கே
நம்மையும் இந்த உலகத்தையும் ஒரே இறைவன் தான் படைத்துள்ளான். இந்த உலகம் தானாகவே தோன்றியது என்று சொல்வது அறிவுக்குப் பொருந்தாத செயல். யாராலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. உலகத்தில் எந்தப் பொருளும் தானாக உண்டாகிவிட முடியாது. அப்படி இருக்கும் போது இவ்வளவு பெரிய உலகமும் அதில் உள்ள கோள்களும் கிரகங்களும் தானாகவே உண்டாகிவிட்டன என்று சொல்வது உண்மைக்குப் மாற்றமானது. இந்த உலகத்தையும் இதில் உள்ள பொருள்களையும் உண்டாக்கிய ஒரு சக்தி இருக்கின்றது. அது மாபெரும் சக்தி. அந்த சக்தியைத்தான் அந்த ஆற்றலைத்தான் நாம் 'இறைவன்' என்று சொல்கிறோம். இறைவன் என்ற சொல்லைத் தான் அரபி மொழியில் 'அல்லாஹ்' என்று சொல்கிறார்கள். இந்த உலகம் எப்படி உண்டாகியிருக்கும்? இந்த உலகத்தை யார் படைத்திருப்பார்கள்? என்ற கேள்வி உலகத்தில் வசிக்கின்ற எல்லா மனிதர்களுடையு உள்ளத்திலும் எழுகின்றது. இந்த கேள்விக்கான பதிலை உலகில் உள்ள எல்லா பொருள்களும் அவனுக்கு தருகின்றன. 'உன்னையும் எங்களையும் படைத்தது ஒரே ஒரு இறைவன் தான்‚'என்று அவை அனைத்தும் சொல்லிக் கொண்டுள்ளன. இந்தக் கேள்விக்கான பதிலை மனிதன் வெளியே தேட வேண்டிய அவசியமேயில்லை. அவனுடைய உடம்பிலேயே இதற்கான பதில் இருக்கின்றது. அவனுடைய உள்ளமே இந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்லிக் கொண்டு உள்ளது. ஊலகத்தில் இருக்கின்ற எல்லா மனிதர்களும் நீதியை நேசிக்கிறார்கள். நேர்மையை விரும்புகிறார்கள். உண்மையே பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். மனிதனுடைய மனம் இவற்றை எல்லாம் இயல்பாகவே விரும்புகின்றது. அதைப் போலத்தான் மனிதனுடைய மனதில் ஓர் இறைவனை வணங்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கின்றது. எல்லா மனிதர்களுடைய உள்ளமும் 'ஒரே இறைவனையே வணங்கு' என்று சொல்லிக் கொண்டே உள்ளது. குழந்தைகளைப் பாருங்கள், அவர்கள் பொய் பேசுவதில்லை. யாரையும் ஏமாற்ற நினைப்பதில்லை. உண்மையான மனிதனைப் பார்க்க ஆசைப்பட்டால் குழந்தைகளைத்தான் பார்க்க வேண்டும். 'பிறக்கின்ற குழந்தைகள் அனைத்தும் முஸ்லிம்களாகவே பிறக்கின்றன. அந்தக் குழந்தைகளுடைய தாய் - தந்தையர்தாம் அக்குழந்தைகளை யூதர்களாகவோ கிறிஸ்துவர்களாகவோ மாற்றுகிறார்கள்' என்று இறைவனின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஒரே இறைவனையே வணங்கு‚ நம்மையும் இந்த உலகத்தில் உள்ள அனைத்துப் பொருள்களையும் படைத்து பாதுகாத்து வருகின்ற ஒரே இறைவனை வணங்குவது நம் அனைவரின் மீதும் கடமையாகும். நும்மைப் படைத்ததோடு நின்று விடாமல் நம்முடைய வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் இறைவன் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறான். இந்த உலகத்தையும் இதில் உள்ள அனைத்துப் பொருள்களையும் நமக்குப் பணிவிடை செய்வதற்காகவே படைத்துள்ளான். அப்படிப் பட்ட இறைவனை ஒரே அல்லாஹ்வை வணங்கி வழிபடுவது நம்மீது கட்டாயக் கடமையாகும். இறைவனுக்கும் நமக்கும் உள்ள ஒப்பந்தம்நமக்கும் நம்மைப் படைத்த இறைவனுக்கும் ஓர் ஒப்பந்தம் உள்ளது. அது என்னவென்று தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளதா?படைத்தவன் என்ற அடிப்படையில் நம்மையும் மற்ற எல்லா ஜீவராசிகளையும் உணவு கொடுத்து காப்பாற்றுவது இறைவன் மீது கடமையாகும். அதை அவன் தனக்குத்தானே கடமையாக ஆக்கிக் கொண்டுள்ளான். அதைப் போலவே அவனை மட்டுமே வணங்குவதும் அவனைத் தவிர வேறு யாரையும் இறைவனாக நினைக்கதமல் இருப்பதும் நாம் அவனுக்கு செய்தாக வேண்டிய கடமையாகும். இறைவனுடைய வழிகாட்டுதல் மனிதனைப் படைத்ததோடு நின்றுவிடாமல் அவன் இந்த உலகத்தில் எப்படி வாழவேண்டும் என்றும் இறைவன் வழிகாட்டியுள்ளான். அந்த வழிகாட்டுதலைத் தான் நாம் 'இஸ்லாம்' என்று சொல்கிறோம். அவனையே இறைவனாக ஏற்றுக் கொண்டு அவன் காட்டிய வழிமுறைப்படி இந்த உலகத்தில் நாம் வாழவேண்டும். அந்த வழிகாட்டுதலைச் சொல்லி கொடுப்பதற்காக ஒவ்வொரு நாட்டுக்கும், ஒவ்வொரு ஊருக்கும், இறைவனுடைய தூதர்கள் வந்துள்ளார்கள். தம்மோடு இறைவனுடைய வேதத்தையும் அவர்கள் கொண்டு வந்துள்ளார்கள். தான் படைத்த மனிதன் வழிதவறிப் போய்விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு காலகட்டத்திலும் அல்லாஹ் தொடர்ந்து தன்னுடைய தூதர்களை அனுப்பிக் கொண்டே வந்துள்ளான். இறைவனுடைய மிக்பெரிய கருணையாகும் இது‚ ஓர் அடிமை எப்படி இருக்கவேண்டும்? நாம் அல்லாஹ்வால் படைக்கப்பட்டவர்கள். அவனுடைய அடிமைகள். அவன் என்ன சொல்கிறானோ அதனை அப்படியே செய்யக் கடமைப்பட்டவர்கள். துன்னுடைய எஜமானன் சொல்வதை அடிமை செய்ய வேண்டும். எஜமானனுக்கு எதிராக தன்னுடைய இஷ்டப்படி செயல்படுபவன் நல்ல விசுவாசமான அடிமையாக இருக்க முடியாது. அவன் துரோகியாகவே கருதப்படுவான். நுல்ல அடிமை தன்னுடைய எஜமானனுடைய மனம் கோணாமல் நடந்துகொள்வான். அவன் விரும்பிய படியே எல்லா காரியங்களையும் செய்வான். அவனை சந்தோஷப் படுத்துவதையே தன்னுடைய வாழ்க்கையின் லட்சியமாக வைத்திருப்பான். அடிமை என்பதை அரபி மொழியில் 'அப்து' என்று சொல்கிறார்கள். நாம் அல்லாஹ்வுடைய அடிமைகள். அதாவது 'அப்துல்லாஹ்கள்', அப்துல்லாஹ், அப்துர்ரஹ்மான் என்ற பெயர்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் பிடிக்கும் என்று இறைவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லியுள்ளார்கள். ஓர் அடிமை தன்னுடைய எஜமானனுக்கு கட்டுப்பட்டு விசுவாசமாக இருக்கவேண்டும். அதனை நாம் 'அடிமைத்தனம்' என்று சொல்கிறோம். அரபியில் அடிமைத்தனம் என்பதை 'இபாதத்' என்று சொல்கிறார்கள். இபாதத் என்றால் என்ன? இபாதத் என்றால் அடிமைத் தனம். ஒரு அடிமை எப்படி இருக்கவேண்டுமோ அப்படி நாம் இருந்தால் தான் உண்மையான அடிமைகளாக நம்மை அல்லாஹ் அங்கீகரிப்பான். நாளெல்லாம் பொழுதெல்லாம் அவனுக்கு கட்டுப்பட்டு அவன் சொன்னதைக் கேட்டு நடக்க வேண்டும். நாமாக நம்முடைய மனம் சொல்கிறபடி நடக்க முயற்சி செய்யக் மூடாது. வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்பவன் தான் உண்மையான அடிமை. அவனிடம்தான் முழுமையான அடிமைத்தனம் இருக்கின்றது. அல்லாஹ்வின் வேதமான குர்ஆனில் இது தான் சொல்லப்பட்டுள்ளது. 'மனிதர்களையும், ஜின்களையும் என்னை 'இபாதத்' செய்வதற்காக அன்றி வேறு எதற்காகவும் படைக்கவில்லை‚' (அல்குர் ஆன். 51:00) இபாதத் என்பதை நாம் தவறாக விளங்கி வைத்துள்ளோம். தொழுவது, நோன்பு வைப்பது, ஜகாத் கொடுப்பது போன்றவற்றையே நாம் இபாதத் என்று நினைக்கிறோம். இந்த குர்ஆன் வசனத்தில் 'இப்hதத் செய்வதற்காகத்தான் நான் மனிதனை படைத்துள்ளேன்' என்று இறைவன் சொல்கிறான். இந்த மாதிரி தொழுவது, நோன்பு வைப்பது மட்டும் தான் இபாதத் என்றால் இதை 24 மணிநேரமும் செய்து கொண்டிருக்க முடியுமா? அன்றாடம் 24 மணிநேரமும் தொழுது கொண்டிருக்க முடியுமா? வாரம் ஏழு நாளும் மாதம் முப்பது நாளும் நோன்பு வைக்க முடியுமா? சம்பாதிக்கின்ற பணத்தை எல்லாம் ஜகாத் கொடுக்கமுடியுமா? கண்டிப்பாக நம்மால் இவ்வாறு செய்ய முடியாது. அப்படி என்றால் இபாதத் என்று பொதுவாக நாம் நினைத்துக் கொண்டிருப்பது தவறு என்று புரிகிறது. சரி, இபாதத் என்றால் என்னதான் பொருள்? நம்மைப் படைத்த இறைவன் நாம் எப்படி வாழவேண்டும் என்று வழிகாட்டியுள்ளான் என்று முதலிலேயே பார்த்தோம். நாம் எப்படி தூங்குவது, எப்படி எழுவது, எப்படி கழிப்பிடம் செல்வது? எப்படி பல் துலக்குவது என்று தொடங்கி எப்படி சம்பாதிப்பது? எப்படி செலவு செய்வது? எப்படி தொழில் நடத்துவது? எப்படி குடும்பம் நடத்துவது என்று எல்லாவற்றையும் இறைவன் கற்றுக் கொடுத்துள்ளான். அதைச் சொல்லிக் கொடுக்கத்தான் இறைவனின் தூதர்கள் வந்துள்ளார்கள். நம்முடைய வாழ்க்கையில் அவற்றை அப்படியே பின்பற்ற வேண்டும். பின்பற்றினால் தான் நாம் உண்மையான அடிமைகளாக இருக்கமுடியும். ஷைத்தான் எனும் விரோதி முதல் மனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் படைத்து அவருக்கு எல்லா விஷயங்களையும் கற்றுக் கொடுத்து சிறப்பித்த போது அதை சகித்துக் கொள்ள முடியாத ஷைத்தான் ஆதமுடைய விரோதியாக மாறினான். ஆதமுக்கு மட்டுமல்ல, முழு மனித குலத்திற்கே விரோதியாக மாறினான். 'உன்னுடைய அடியார்களை உனக்குக் கட்டுப் படாதவாகளாக ஆக்குவேன். அவர்களை வழிதவற வைப்பேன். ஊன்னுடைய கோபத்துக்கு ஆளாக்குவேன். நரகத்திற்கு கொண்டு போய் சேர்ப்பேன்‚' என்று அவன் அல்லாஹ்விடமே சவால் செய்தான். அதற்கான கால அவகாசத்தை அல்லாஹ்விடமே கேட்டு வாங்கிக் கொண்டான. 'உங்களை நேர்வழியில் செல்லவிடாமல் ஷைத்தான் தடுப்பான். வுழிதவற வைப்பான். எனக்கு மாறு செய்யுமாறு தூண்டுவான். அவனுடைய பேச்சைக் கேட்டு நடந்தால் வழிகெட்டுப் போவீர்கள். நரகத்திற்கு போய் விடுவீர்கள்' என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மை எச்சரித்துள்ளான். சிலைகள் பிறந்த கதை‚ நம்மை எப்படியாவது வழிகெடுக்க வேண்டும், அல்லாஹ்சுடைய கோபத்திற்கு ஆளாக்க வேண்டும் என்பது தான் ஷைத்தானடைய குறிக்கோள். நேராக நம்மிடம் வந்து 'இஸ்லாமைப் பின்பற்றாதீர்கள் ‚ அல்லாஹ்வுடைய அவனுடைய தூதர்களுடைய பேச்சைக் கேட்காதீர்கள்‚' என்று சொல்லமுடியுமா? சொன்னால் தான் நாம் கேட்போமா? கேட்க மாட்டோம் அல்லவா? ஆதற்காக ஷைத்தான் ஒரு திட்டம் தீட்டினான். மனிதர்களிடம் வந்து சுற்றி வளைத்துப் பேசினான். மனிதர்களில் சான்றோர்களாக வாழ்ந்த நல்லடியார்கள் இறந்தவுடன், பிற மனிதர்களிடம் வந்து அவர்களைப் பற்றி விசாரித்தான். அ'அவர்கள் அனைவரும் இறையடியார்கள். இறைவனுடைய அன்பையும் நெருக்கத்தையும் சம்பாதித்துக் கொண்ட தூயவர்கள்' என்று அவர்கள் பதில் சொன்னார்கள். 'அப்படியென்றால், நீங்கள் அத்தகைய நல்லவர்களை அடிக்கடி நினைவு கூர்ந்து கொண்டே இருக்கவேண்டும் அல்லவா?' என்ற கேள்வியை எழுப்பினான். 'ஆம், நாங்கள் அடிக்கடி அவர்களை நினைத்துப் பார்த்துக் கொள்கிறோம்' என்றார்கள் அவர்கள். 'உங்களுடைய பிள்ளைகளிடம் அவர்களைப்பற்றி சொல்வது இல்லையா?' என்று கேள்விக்கு தாவினான். 'கண்டிப்பாக சொல்கிறோம். அவர்களைப் பற்றி அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றி எடுத்துக் கூறி அவர்களைப் போன்றே வாழவேண்டும் என்று போதிக்கிறோம்' என்றார்கள் மக்கள். 'வெறுமனே வார்த்தைகளால் சொல்வதைக் காட்டிலும் அவர்களுடைய உருவங்களை சித்திரங்களாக தீட்டி வைத்துக் கொண்டு அவற்றை எடுத்துக் காட்டி கூறினால் இன்னும் நன்றாக இருக்கும் அல்லவா? என்று ஒரு ஆலோசனையை முன் வைத்தான். அவனுடைய ஆலோசனையை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். உருவப்படங்களை வரைந்து வைத்துக் கொண்டார்கள். அவற்றைச் சுட்டிக் காட்டி தம்முடைய பிள்ளைகளிடம் அந்த நல்லடியார்களைப் பற்றிக் கூறத் தொடங்கினார்கள். அந்த சித்திர சீலைகள் கொஞ்ச நாட்களுக்குள் சாயம் மாறிப் போய் அழியத் தொடங்கின. மறுபடியம் வரைய வேண்டியிருந்தது. இப்படி அடிக்கடி அவற்றை வரையவேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப் பட்டார்கள். 'நான் ஒரு நல்ல ஆலோசனையை தருகிறேன்' என்று சொல்லியவாறு ஷைத்தான் மறுபடியும் வந்து சேர்ந்தான். 'சித்திரங்களுக்கு பதிலாக நீங்கள் ஏன் சிலைகளை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது?' என்று அற்புதமான ஆலோசனையை வழங்கினான். 'அவை சீக்கிரத்தில் அழியாது. சாயம் போய் விடுமோ என்று கவலைப்படவேண்டியதில்லை. சிறிய அளவில் செய்து வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாம்' என்று செய்முறையையும் சொல்லித் தந்தான். மதிகெட்ட மக்கள் அவனுடைய பேச்சை நம்பி சிலைகளைச் செய்தார்கள். கொஞ்ச நாள் கழித்து மறுபடியம் 'வழிகாட்ட' வந்தான். 'வீடுகளில் வைப்பதைவிட சிலைகளைக் கொண்டுபோய் வீதிகளில் வைத்தால் இன்னும் சிறப்பு. அடிக்கடி அவற்றைப் பார்க்க முடியும். பார்க்கும் போதெல்லாம் அவர்களுடைய ஞாபகம் நெஞ்சில் நிழலாடும். அவர்களைப் போன்றே மாறவேண்டும் என்ற உத்வேகம் பிறக்கும்' என்றான். ஆவ்வாறே மக்கள் அவற்றைக் கொண்டுபோய் வீதிகளில் வைத்தார்கள். அந்தச் சிலைகளுக்கு முன்னால் நின்று அவர்களுடைய அருமைபெருமைகளை தம்முடைய குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்கள். சிலைகள் பிறந்த கதை இதுதான் ‚ இப்படித்தான் மனிதர்களிடையே சிலைவணக்கம் பரவியது. நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களடைய காலத்தில் நடந்தது இது. அந்த மக்களை வழிப்படுத்த நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் தன்னுடைய தூதராக அனுப்பி வைத்தான். நம்முடைய நாட்டில் இன்றும் இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்க்க முடியும். சுpலைகளை வணங்காதே என்று சொன்ன பெரியாருக்கும் சிலை உள்ளது. பிறந்த நாள், இறந்த நாளின் போது பூக்களைச் சாற்றி 'அஞ்சலியும்' செலுத்தப்படுகின்றது. இஸ்லாமும் ஜாஹிலிய்யது;தும் மனிதன் உலகத்தில் இரண்டு விதங்களில் வாழலாம். ஒன்று இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்வது. அதற்குப் பெயர் இஸ்லாம். இன்னொன்று இறைவனுக்கு கட்டுப்படாமல் தன்னுடைய இஷ்டப்படி வாழ்வது. அதற்குப் பெயர் ஜாஹிலிய்யத். இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்வதுதான் நேர்வழி. ஆதன் மூலம் சொர்க்கம் கிடைக்கும். கட்டுப்பட்டு வாழாவிட்டால் வழிகேட்டுப் பாதையில் சென்றால் நரகம் கிடைக்கும். நேர்வழிக்கு வாருங்கள் என்றுதான் அனைத்து இறைத்தூதர்களும் அழைத்துள்ளார்கள். அவ்வழியில் போகாதே என்று ஷைத்தான் தடுத்துக் கொண்டே உள்ளான். நேர்வழியின் பக்கம் அழைப்பது மு‡மின்களுடைய வேலை‚ அவ்வழியில் இருந்து விலக்குவது ஷைத்தான்களுடைய வேலை‚ ஒன்றா, இரண்டா சிலைகள் மனிதனை நேர்வழியில் செல்லவிடக்கூடாது என்பதுதான் ஷைத்தானுடைய நோக்கம். எப்படியாவது எதையாவது செய்து மனிதர்களை நேர்வழியிலிருந்து வெளியே இழுத்துவிட வேண்டும் என்று அவன் கடும் முயற்சி செய்கிறான். மனிதர்கள் சிலைகளை வணங்குமாறு ஷைத்தான் செய்தான் என்று பார்த்தோம். எப்போதும் ஒரே சிலையை வணங்கச் செய்ய முடியுமா? வுத், ஸுவா‡,யஊஸ் என்பன நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் மக்கள் வணங்கிய சிலைகளின் பெயர்கள். ஆந்த மக்கள் எல்லாம் அழிக்கப்பட்ட உடன் அந்த சிலைகளும் அழிந்துவிட்டன. கொஞ்சகாலம் கழித்து வேறு பகுதிகளில் வசித்த மக்களிடம் போய் ஷைத்தான் சிலைகளை அறிமுகப்படுத்தினான். அவை வெறு சிலைகள். இந்த குறிபிபட்ட சிலைகளையே மக்கள் வணங்கவேண்டும் என்படிதல்லாம் ஷைத்தானுடைய நோக்கம் கிடையாது. மனிதர்கள் அல்லாஹ்வுடைய வழியில் போகக் கூடாது என்பது ஒன்றுதான் ஷைத்தானுடைய நோக்கம். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் காலத்தில் மக்கள் 'நன்னார்' என்ற சிலையை வணங்கினார்கள். முஹம்மது நபி ஸல்லலாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய காலத்தில் லாத், உஸ்ஸா, மனாத் போன்ற சிலைகளை வணங்கினார்கள். இந்தியாவில் சிவனையும், விஷ்ணுவையும் வணங்கினார்கள். அப்புறம் காளியை வணங்கினார்கள். ஆப்புறம் சிவனுக்கு கணேஷ் என்ற மகன் பிறந்தான். அவனை வணங்கினார்கள். தமிழ்நாட்டில் உள்ள சிவனுக்கு முருகன் என்ற மகனும் பிறந்தான். அவன் பிறந்ததே வடநாட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது. வேனை வணங்கினார்கள். சிலைகளை வணங்காதீர்கள். அது மூடநம்பிக்கை என்று பெரியார் ஈ.வெ.ராமசாமி பிரச்சாரம் செய்தார். அவருக்கும் மக்கள் சிலை வைத்தார்கள். கொஞ்சநாளில் அவருடைய பிறந்த நாளன்று மாலைகளை சூட்டத் தொடங்கினார்கள். இன்னும் கொஞ்ச நாளில் அவரையும் வணங்குவார்கள். நேர்வழி எது? வழி கேடு எது? என்பதை முஹம்மது நபி ஸல்லலாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு முறை வரைபடம் ஒன்றை வரைந்து காட்டி விளக்கினார்கள். நேர்க்கோடு ஒன்றை வரைந்தார்கள். அதன் இரண்டு பக்கங்களிலும் சிறுசிறு குறுக்குக் கோடுகளை வரைந்தார்கள். நேர்க்கோடு என்பது நேர்வழி. இறைவனின் பக்கம் கொண்டு போய்ச் சேர்க்கின்ற வழி. குறுக்குக் கோடுகள் அனைத்தும் நேர்வழியை விட்டும் வெளியே இழுக்கின்ற ஷைத்தானுடைய முட்டுச் சந்துகள். இறைவனும் இறைத்தூதர்களும் காட்டிய முறைப்படி சற்றும் மாறாமல் இங்கும், அங்கும் விலகிவிடாமல் நேர் இலக்கில் தொடர்ந்து செல்வது தான் நேர்வழி. இது சொர்க்கத்திற்கு போய்ச் சேருகின்றது. இந்த வழியில் செல்லவிடாமல் தடுப்பது தான் ஷைத்தானுடைய வேலை. நீங்கள் பயணத்தை ஆரம்பித்த இடத்திலிருந்து உங்களை வழிகெடுக்க அவன் முயற்சிக்கிறான். ஒரு சிலரை ஆரம்ப கட்டத்திலேயே வழி கெடுத்து விடுகிறான். கொஞ்சம் பேரை சற்று தூரம் போகவிட்டு வழிகெடுக்கிறான். இன்னும் கொஞ்சம் பேர் உறுதியோடு பயணத்தைத் தொடருகிறார்கள். ரொம்ப தூரம் போனபிறகு அதையும் இதையும் செய்து அவர்களை வழிகெடுத்து விடுகிறான். இன்னும் கொஞ்சம் பேரோ கடைசிவரை வெற்றிகரமாக போய் விடுகிறார்கள். எல்லையைத் தொட்டு விடுவார்கள் என்ற நிலைமையில் அவர்களை ஷைத்தான் வென்றுவிடுகிறான். சிலைகளின் நவீன வடிவங்கள் 'அல்லாஹ்வை வணங்காதே‚ சிலைகளை வணங்கு‚' என்று சொன்ன போது அந்தக் கால மக்கள் கேட்டார்கள். அல்லாஹ்வை விட்டுவிட்டு சிலைகளை வணங்கத் தொடங்கினார்கள். இந்தக் காலத்தில் போய் முருகனை வணங்கு. முனியம்மாவை வணங்கு என்று சொன்னால் யாராவது வணங்குவார்கள? கல்லால் ஆன சிலைகளை வணங்குவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை ஏறக்குறைய எல்லா மக்களும் உணர்ந்து இருக்கிறார்கள். சிலைகளை தெய்வமாக நினைத்து வணங்கி வருகின்ற இந்துக்கள் கூட அவற்றின் மீது நம்பிக்கை வைப்பதில்லை. தங்களுக்கு ஒரு கஷ்டம் வந்துவிட்டால் சிலைகளை கைவிட்டு விடுகிறார்கள். இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்து மனிதனுடைய அறிவு பல்வேறு விஷயங்களைப் பற்றியும் சிந்திக்கத் தொடங்கிவிட்டது. காக்கின்ற தெய்வம் முருகன் என்றால் அவன் உலக மக்கள் எல்லோரையும் காக்க வேண்டுமில்லையா? பழனியிலேயே குடி யிருந்தால் எப்படி? விஷ்ணு பகவான் அமெரிக்காவில் ஏன் அவதாரம் எடுக்கவில்லை? அங்குள்ள மக்களை எல்லாம் பிரம்மா படைக்கவில்லை? வேறு ஏதேனும் கடவுள் அவர்களை படைத்திருக்கிறாரா? அப்படி என்றால் அவர் யார்? என்றெல்லாம் இன்றைய இந்துக்கள் யோசிக்கிறார்கள். இப்படிப்பட்ட மக்களிடம் போய் 'சிலைகளை வணங்குங்கள் ‚' என்று ஷைத்தானால் சொல்ல முடியுமா? முடியாதல்லவா? ஆகையால், காலத்திற்கு ஏற்ற மாதிரி ஷைத்தான் வேறு ஒரு புதிய கொள்கையைக் கண்டு பிடித்தான். 'உலகத்தையும் உலகத்தில் வசிக்கின்ற ஜீவராசிகளையும் யாருமே படைக்கவில்லை‚' என்பதே அந்தக் கொள்கை‚ கடவுள் மறுப்புக் கொள்கை. சிலைகளை வணங்குவது மடத்தனம். அறியாமை என்று சொன்னவர்களும் அதைத் தீவரமாக எதிர்த்தவர்களும் கடவைள மறுத்தார்கள். நுpராகரித ;தார்கள். கடவுளைப் படைத்தவன் அயோக்கியன்' என்றெல்லாம் பிரச்சாரம் செய்தார்கள். 'இந்த உலகத்தை யாருமே படைக்கவில்லை. அது தானாகவே தோன்றி விட்டது. உலகத்தில் உள்ள உயிரினங்களும், ஜீராசிகளும் சுயமாகத் தோன்றி படிப்படியாக வளர்ச்சி பெற்று பரிணாமம் அடைந்து மனிதன் போன்ற உயர்ந்த நிலையை அடைந்துள்ளன. கடவுளை நம்புவது பைத்தியக்காரத்தனம்‚' என்று கடவுள் மறுப்புக் கொள்கைக்காரர்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறார்கள். கடவுளை நம்பினால் வீட்டோடு வைத்துக் கொள்' கடவுள் நம்மைப் படைக்கவில்லை என்றாகிவிட்ட பிறகு, கடவுளுடைய வேதம், கடவுளுடைய தூதர் என்று சொல்லி பிதற்றிக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது. நாங்கள் சொல்வதை நீங்கள் நம்பவில்லை என்றால், நீங்கள் வணங்கும் கடவுளை உங்களுடைய வீட்டோடு வைத்துக் கொள்ளுங்கள்‚ வீதிக்கு கொண்டு வராதீர்கள்‚ கடவுளுடைய சட்டம், கடவுளுடைய கட்டுப்பாடு என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்‚' எனறு அவர்கள் சொல்கிறார்கள். அதாவது ஷைத்தான் சொல்கிறான். விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் கடவுள் மறுப்புக் கொள்கையை வளர்த்தால் தான் இறைவனுடைய வழியில் செல்லாமல் மக்களைத் தடுக்கமுடியும் என்பது ஷைத்தானுக்கு நன்றாகத் தெரியும். ஆகையால், இந்த இறை மறுப்புக் கொள்கைகளைப் பயன்படுத்தி கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக மக்களை ஆக்குவதில் அவன் பெருமளவு வெற்றி பெற்றுள்ளான் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியும் மக்கள் கடவுள் நம்பிக்கையை கைவிடவில்லை என்றால், அதற்கும் ஒரு மாற்று ஏற்பாடு முன்வைக்கப்படுகிறது. 'கடவுள் நம்பிக்கை என்பது தனிபநர் சார்ந்த விஷயம்‚ நீங்கள் கடவைள நம்புகிறீர்கள் என்றால், உங்களது நம்பிக்கையை வீட்டோடு வைத்துக் கொள்ளுங்கள். வீதிக்கு கொண்டு வராதீர்கள். மக்களோடான கூட்டு வாழ்க்கையில் சமூக வாழ்க்கையில் கடவுள் நம்பிக்கை கடைப்பிடிக்கப்படவேண்டும் என்று விரும்பாதீர்கள். சமூகம், அரசியல், பொருளாதாரம், சம்பாத்தியம், வருமானம், நாட்டு நிர்வாகம் போன்ற விஷயங்களில் கடவுளுக்கு எள்ளளவும் சம்பந்தமில்லை. இவற்றை எல்லாம் நாமே தீர்மானித்துக் கொள்ளலாம் ‚' இதுதான் முன்வைக்கப்படுகின்ற வாதம். இந்த சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு தான் இன்று உலகத்தில் உள்ள எல்லா கொள்கைகளும் உருவாக்கப் பட்டுள்ளன. மக்கள் பெரிதும் போற்றிக் கொண்டாடுகின்ற கொள்கைகளான ஜனநாயகம், தேசிய வாதம், மக்களாட்சி, பொது உடைமை என்று அனைத்து கொள்கைகளுக்கும் இது ஒன்றே அடிப்படை‚. முஸ்லிம்களுடைய தவறான புரிதல் முஸ்லிம்களும் இதனை விளங்கிக் கொள்ளாமல் தவறிழைக்கிறார்கள். நாம் தான் சிலைகளை வணங்குவதில்லையே‚ தர்காக்களும் போவதில்லையே‚ என்று முஸ்லிம்கள் தங்களைத் தாங்களே மெச்சிக் கொள்கிறார்கள். சுpலைகளை கும்பிடாமல் இருந்தால் 'ஷிர்க்' செய்யவில்லை என்றாகிவிடுமா? தர்காவுக்கு போகவில்லை என்றால் 'ஷிர்க்' செய்யவில்லை என்றாகி விடுமா? 'ஷிர்க்' என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். 'ஷிர்க்' என்றால் என்ன? 'ஷிர்க்' என்றால் அரபி மொழியில் 'பங்கு' என்று அர்த்தம். நீங்களும், உங்களுடைய நண்பர்களும் சேர்ந்து ஒரு கம்பெனியை ஆரம்பிக்கிறீர்கள். தமிழில் அதை 'குழுமம்' என்கிறோம். (குழுவாக ஆரம்பித்துள்ளதால்) அரபியில் அதை 'ஷிர்க்கா' என்கிறார்கள். பங்காளியை அதாவது பார்ட்னரை 'ஷரீக்' என்கிறார்கள். எல்லாரும் சமம் என்று கூறுகின்ற பொது உடைமைக் கொள்கையை (கம்யு{னிஸக் கொள்கையை) அரபியில் 'இஷ்திராகிய்யா' என்கிறார்கள். ஷரீஅத்தில் 'ஷிர்க்' என்றால், படைத்த இறைவனோடு இன்னொன்றை இணையாக்குவது என்று பொருள். அதாவது. . . . . 1) அல்லாஹ்வை விட்டுவிட்டு இன்னொருவனை இறைவனாக படைத்தவனாக கருதினால் இது 'ஷிர்க்' 2) நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான வசதிகளையும் வாழ்வாதாரங்களையும் அல்லாஹ் அல்லாத இன்னொருவன் அளிப்பதாகக் கருதினால் அது 'ஷிர்க்' 3) நன்மையையும் தீமையையும் தரக்ககூடிய சக்தி யாருக்காவது இருப்பதாக நினைத்தால் அது 'ஷிர்க்' 4) அல்லாஹ் அல்லாத இன்னொரு சக்தி இருப்பதாக நம்பி அல்லது இன்னொருவருக்கு சக்தி இருப்பதாக நம்பி அவரையோ அதனையோ திருப்திப் படுத்த முயற்சி செய்தால் அது 'ஷிர்க்' 5) அல்லாஹ் அல்லாத ஒரு சக்திக்கு முன்னால் தலை வணங்கினாலோ நேர்ச்சை செய்தாலோ துஆ கேட்டாலோ அது 'ஷிர்க்' 6) அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யும் அளவுக்கு சக்தி இருக்கின்றது என்று யாரைப் பற்றியாவது நம்பினால் இது 'ஷிர்க்' 7) இறந்து போன அவ்லியாக்கள், நல்லடியார்கள் நமக்காக அல்லாஹ்விடம் வாதாடுவார்கள் என்ற நம்பினால் அது 'ஷிர்க்'அதே போன்று 8) அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான ஆற்றலும் வல்லமையும் இன்னொரு பொருளுக்கும் இருப்பதாக நினைத்தால் அதுவும் 'ஷிர்க்' 9) அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான அதிகாரங்களை இன்னொரு பொருளுக்கு அளித்தால் அதுவும் 'ஷிர்க்' 10) அல்லாஹ்வுடைய ஆணைகளையும் கட்டளைகளையும் புறந்தள்ளிவிட்டு இன்னொரு பொருளுக்கு கட்டுப்பட்டு நடந்தால் அதனுடைய கட்டளைகளுக்கு செவி சாய்த்தால் அதுவும் 'ஷிர்க்' 11) அல்லாஹ்வுடைய கட்டளைகளை இப்போது கடைப்பிடிக்க முடியாது என்று ஒதுக்கிவிட்டு இன்னொரு பொருளின் கட்டளையை கடைப்பிடிக்க முன்வந்தால் அதுவும் 'ஷிர்க்' 12) இறைவனின் தூதர் எடுத்துரைத்த இறைவனுடைய சட்ட திட்டங்களை இந்தக் காலத்தில் கடைப்பிடிக்க முடியாது. அவை இந்தக்காலத்துக்கு பொருந்தி வராதவை என்றுமுடிவு கட்டிவிட்டு வேறுவேறு கொள்கைகளை பின்பற்றத் தொடங்கினால் அதுவும் 'ஷிர்க்' முஸ்லிம்களை வழிகெடுப்பது எப்படி? ஓட்டு மொத்த மக்கள் அனைவரையும் இறைவனுக்கு கட்டுப்படாமல் ஆக்கவேண்டும். இறைவனை ஏற்றுக் கொண்டு அவனுடைய வழியில் வாழ்கின்ற மக்களையும் வழிகெடுத்து வெளியில் கொண்டுவர வேண்டும்.. . . இதுதானே ஷைத்தானுடைய திட்டம். குறிக்கோள். முஸ்ரிம்களிடம் போய் சிலைகளை வணங்குங்கள் என்று சொல்ல முடியாது. வேறுவகையில் அவர்களை 'டீல்' பண்ண வேண்டும். ஆகையால், கொஞ்சம் கொஞ்சமாக முஸ்லிம்களிடையே ஷைத்தான் 'தர்கா' வழிபாட்டைப் புகுத்தினான். சிலைகளுடைய இடத்தில் அவ்லியாக்களைக் கொண்டுவந்து வைத்தான். ஒரு சில நாட்களிலேயே தர்கா வழிபாடு கூடாது ன்று நல்லடியார்கள், நல்ல முஸ்லிம்கள் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். தர்காவுக்கு போவது மிகப்பெரிய தீமை என்பதையும் இதை ஒருபோதும் இஸ்லாம் ஆதரிக்கவில்லை என்பதனையும் அந்த இறையடியார்கள் முஸ்லிம்களுக்கு தெளிவாக உணர்த்தினாhகள். இதனால் பெரும்பாலான முஸ்லிம்கள் தாங்கள் செய்து வந்த தீமையை உணர்ந்து நேர்வழிக்கு திரும்பினார்கள். நவீன சிலைகள் முஸ்லிம்கள் சிலைகளையம் வணங்குவதில்லை, தர்காக்களுக்கும் போவதில்லை. அவ்வளவுதான் இனிமேல் அவர்களை வழிகெடுக்கவே முடியாது என்று ஷைத்தான் சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டானா என்றால் அதுதான் கிடையாது. நாம் ஏற்கனவே பார்த்தது போல, சிலைகளுடைய பெயர்கள் மாறிக் கொண்டே வந்துள்ளன. சிலைகளுக்கு பதிலாக மக்கள் தர்காக்களுக்கு போய் அவ்லியாக்களிடம் கையேந்தத் தொடங்கினார்கள். ஏதேனும் ஒருவகையில் அல்லாஹ்வை விட்டும் அல்லாஹ்வுடைய பாதையை விட்டும் மக்களை அப்புறப்படுத்தவேண்டும் என்பது தான் ஷைத்தானுடைய நோக்கம். தர்க்காக்களுக்கு போவதை முஸ்லிம்கள் நிறுத்திவிட்டால் ஷைத்தானும் தன்னுடைய முயற்சிகளை நிறுத்திவிடுவானா? அல்லது வேறு ஏதேனும் வழியில் முயற்சி செய்து அல்லாஹ்வுடைய பாதையில் இருந்து அவர்களை அகற்ற நினைப்பானா? நாம் கொஞ்சம் அக்கறையோடு யோசித்துப் பார்க்கவேண்டும். இந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட நவீன கொள்கைகளான மக்களாட்சி, ஜனநாயகம், முதலாளித்துவம் போன்றவற்றை முஸ்லிம்களை வழிகெடுப்பதற்காக, ஷைத்தான் திறமையாக பயன்படுத்தி வருகிறான. 'நிலப்பரப்பில் இன்று வணங்கப்படும் சிலைகளிலேயே கேடுகெட்ட சிலை தேசியவாதம் தான் ‚'என்று மகாகவி அல்லாமா இக்பால் கூறியுள்ளார் என்பதனையம் நினைவில் கொள்ளவேண்டும். வழிபாடு என்றால் என்ன? வழிபாடு என்றால் வழியில் செல்வது என்று அர்த்தம். ஒரே இறைவன் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டு அவனுடைய வழியில் நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் 'இறைவனுடைய வழியில் வாழ்கின்ற முஸ்லிம்கள் நாங்கள்' என்று நம்மை நாம் சொல்லிக் கொள்ளலாம். இறைவனுடைய வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்றால் குடும்பம், தொழுகை, ஜகாத், சொத்து பகிர்மானம் போன்ற நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விஷயங்களில் மட்டும் இறைவனுக்கு கட்டுப்பட்டு அவனுடைய வழியில் வாழ்ந்தால் போதுமா? அல்லது நம்முடைய கூட்டு வாழ்க்கையிலும் ஒரே இறைவன் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வாழவேண்டுமா? என்றொரு கேள்வி இங்கே எழுகின்றது. அதாவது வியாபாரம் பொருளாதாரம், இஸ்லாமிய அழைப்பு பணி, அரசியல், பண்பாடு போன்ற துறைகளிலும் நாம் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட வேண்டுமா? வாழ்க்கையின் எல்லா துறைகளிலும் எனக்கு கட்டுப்படுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறானா? இல்லை ஒரு சில காரியங்களை மட்டும் நான் சொன்னபடி செய்துவிட்டு மற்ற விஷயங்களில் உங்களுடைய இஷ்டப்படி வாழ்ந்து கொள்ளுங்கள் என்று பரிபூரண அனுமதியை அளித்துள்ளான என்று யோசித்துப் பார்க்கவேண்டும். வாழ்க்கையின் அனைத்து விஷயங்களிலும் இறைவனுடைய வழிகாட்டுதலின்படியே வாழ்ந்தாக வேண்டும், இறைவன் அதைத்தான் எதிர்பார்க்கிறான் என்றால் அதற்கு வழிகாட்டுகின்ற அதை செயல்படுத்துகின்ற 'கூட்டமைப்பு' ஒன்று இருந்தாக வேண்டும் அல்லவா? இறைவனை ஏற்றுக் கொள்ளாத இறைவனே இல்லை என்று நிராகரிக்கின்ற ஒரு அமைப்பின் கீழாக ஒன்று திரண்டால் ஏக இறைவனான அல்லாஹ்வுக்கு எப்படி கட்டுப்பட்டு வாழமுடியும்? இஸ்லாமும் ஜனநாயகமும் இரண்டு துருவங்கள் இஸ்லாம் என்றால் ஒரே இறைவனையே வழிபடவேண்டும். முழுக்க முழுக்க இறைவனுக்கே கட்டுப்பட வேண்டும். அவன் விரும்பிய வழியில் தான் நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும். இப்படி கீழ்ப்படிபவனையே 'முஸ்லிம்' என்ற சொல் குறிப்பிடுகின்றது. நாம் ஏற்கனவே பார்த்தது போல அவனை மட்டுமே வழிபடுவதோடு அவனுக்கு மட்டுமே அடிமைப்பட்டு இருக்கவேண்டும். நம்முடைய வாழ்க்கை தொடர்பான எல்லா காரியங்களிலும் அவனுக்கு மட்டுமே கட்டுப்பட வேண்டும். வீட்டில் மட்டுமல்லாமல் வீதியிலும் நாட்டிலும் நிர்வாகத்திலும், சமூகத்திலும் சட்டசபைகளிலும் தொழிற்கூடங்களிலும் சந்தைப்பேட்டைகளிலும் அவனுடைய சட்டதிட்டங்களின் படியே நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயற்சி செய்யவேண்டும். ஜனநாயகம் என்றால், அதிகாரம் மக்களுக்கே‚ என்பது ஜனநாயகத்தின் மையக் கொள்கை. தங்களுக்கு தேவையான சட்டங்களை மக்களே இயற்றிக் கொள்வார்கள். அந்த சட்டங்களை நிறைவேற்ற ஒரு அரசாங்கத்தையு; நிறுவிக் கொள்வார்கள். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசாங்கம் அந்த சட்டங்களை அமுல்படுத்தும். சட்டங்களில் மாற்றங்களையோ கூடுதல் குறைவையோ அவர்கள் செய்து கொள்வார்கள். இந்தக் கொள்கையை இஸ்லாம் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றர். இஸ்லாம் என்ன சொல்கின்றது என்றால், 1. ஒரு பொருளைப் படைத்தவனுக்குத் தான் அதைப்பற்றி முழு விபரங்களும் தெரியும். அதற்கு என்ன தேவை? அதை எப்படி இயக்கவேண்டும்? அதை எங்ஙனட் பயன்படுத்த வேண்டும்? என்கிற முழு விபரங்களும் உருவாக்கியவனுக்குத்தான் தெரியும். தங்களுக்குத் தேவையான சட்டங்களை இயற்றிக் கொள்கின்ற அறிவும், ஆற்றலும், மக்களுக்கு கிடையாது. மனிதனைப் படைத்தவன் அல்லாஹ். ஆகையால், அவன் ஒருவனுக்குத்தான் மனிதனுக்கு எது தேவை? எது தேவையில்லை? என்பது தெரியும். 'படைப்பாற்றலம், அதிகாரம் செலுத்துகின்ற வல்லமையும் அவனுக்கு மட்டும்தான் உள்ளது. இல்லையா? (அல்குர்ஆன் 7ஃ54) 2. சட்டங்களை இயற்றக்கூடிய அருகதை மனிதர்களுக்கு இல்லை என்பதால் தான் அவர்கள் தான் தோன்றித்தனமாக கண்டபடி எல்லாம் சட்டங்களை இயற்றுவார்கள். இறைவனுடைய வழிகாட்டுதல் தேவையில்லை, நமக்கு நாமே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மனிதன் தீர்மானித்தால் கண்டிப்பாக அவன் மனோ இச்சைகளின்படி செயல்படுவான். அதாவது, தன்னுடைய மனம் சொல்கின்றபடியே தன்னுடைய வாழ்வை அமைத்துக் கொள்வான். 'நிச்சயமாக மனிதனுடைய மனது தீமையானவற்றையே தூண்டுகின்றது' என்று அல்குர்ஆன் கூறுகின்றது (அத்தியாயம் 12ஃ53). ஏனென்றால் உலகத்தினுடைய கவர்ச்சியும் ஷைத்தானுடைய தூண்டுதலும் அவனை அவ்வாறு செய்யவைக்கின்றன. அதன்படி செயல்பட்டு தன்னுடைய மனோயிச்சைகளின்படி நடப்பவனைப் பற்றி அல்குர்ஆன் என்ன கூறுகின்றது தெரியுமா? மனோ இச்சைகளை கடவுளாக ஆக்கிக் கொண்டவர்கள் என்று குறிப்பிடுகின்றது. மனோ இச்சைகளை கடவுளாக ஆக்கிக் கொண்டவனைவிட கேடுகெட்டவன் யாருமே கிடையாது என்றும் குறிப்பிடுகின்றது. 3. சட்டமியற்றும் அதிகாரமும் ஹலால், ஹராம் போன்வற்றைத் தீர்மானிக்கும் அதிகாரமும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ளன. அந்த அதிகாரங்களை மற்றவர்களுக்கு கொடுப்பவன் அல்லா1ஹ்வுடைய அதிகாரத்தை பங்கு வைக்கிறான். அதாவது 'ஷிர்க்' செய்கிறான். இறைவனுக்கு மட்டுமே சொந்தமான அதிகாரங்களை மற்றவர்களுக்கு வழங்கினால் அதற்குப் பெயர்தான் 'ஷிர்க்'. எப்படியாவது முஸ்லிம்களை இறைவனுக்கு எதிரான திசையில் திருப்பிவிட வேண்டும் என்று ஷைத்தான் அந்த கொள்கைகளை அழகானவையாகவும் பயனுள்ளவையாகவும் நமக்கு காட்டுகிறான். இன்னொரு பக்கம் இவற்றை பின்பற்றவில்லை என்றால் நம்மை அடியோடு ஒழித்துவிடுவார்கள் என்று பயமுறுத்துகிறான். 'இதைச் செய்யுங்கள் ‚ இதனால் உங்களுக்கு மிகவும் பயன்கள் உண்டாகும் ‚' என்று தான் ஒவ்வொரு முறையும் ஷைத்தான் சொல்கிறான். சொர்க்கத்தில் குடியிருந்த ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையம் அவர்களுடைய மனைவியையும் அங்கிருந்து வெளியேற்ற நினைத்த ஷைத்தான் அவர்களிடம் போய் 'இந்த மரத்தினுடைய பழங்களை சாப்பிட்டால் இங்கேயே நிரந்தராமாக இருப்பீர்கள். அதுமட்டுமல்ல, நீங்கள் வானவர்களைப் போன்று ஆகிவிடுவீர்கள் ‚' என்று சொன்னான். வானவர்களைப் போன்று மாற யாருக்குத் தான் ஆசை இருக்காது? ஆதமும், ஹவ்வாவும் அந்த மரத்தின் பழங்களை சாப்பிட்டார்கள். அல்லாஹ்வுடைய கோபத்துக்கு ஆளானார்கள். எந்தக் காரியமாக இருந்தாலும், இதைச் செய்யுங்கள்‚ இதைச் செய்தால் நன்மை விளையும் என்று சொல்லித்தான் ஷைத்தான் நம்மை அழைக்கின்றான். 'லாஜிக்'காக பல ஆதாரங்களை அடுக்கிக் கூறுகிறான். அவற்றை நாம் நம்பினால் அப்புறம் அவ்வளவுதான், தொலைந்தோம். எதுவாக இருந்தாலும் குர்ஆன் சொல்கின்றபடித் தான் யோசித்துப் பார்க்க வேண்டும். இத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றினால், பெரிய பெரிய பயன்கள், நல்விளைவுகள் கிடைப்பதாகவே வைத்துக் கொள்வோம். அவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்வது? கூடவே, அல்லாஹ்வுடைய கோபத்தையும் சாபத்தையும் அவை பெற்றுத் தருமே‚ அல்லாஹ்வுடைய கோபத்தையும், அவனுடைய சாபத்தையும் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு நமக்கு திராணியிருக்கின்றதா? முஸ்லிம் உம்மாவின் உலகியல் நலன்களுக்காகவும் அவர்களுடைய பொருளாதார வளர்ச்சிக்காகவும் சமூக முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுவதாக நம்முடைய அமைப்புகள் சொல்லிக் கொள்கின்றன. இஸ்லாத்தை பணயம் வைத்துவிட்டு ஈமானை பலி கொடுத்துவிட்டு அப்புறம் எந்த முஸ்லிம்களுக்காக நாம் பாடுபடப் போகிறோம்? ஒன்று, இஸ்லாமை நடைமுறைப்படுத்துவதற்காக முஸ்லிம்கள் கஷ்டப்படவேண்டும். இல்லையென்றால், முஸ்லிம்கள் உலகத்தில் நன்றாக வாழ்வதற்காக இஸ்;லாத்தைக் கண்டபடி வளைக்க வேண்டும். எதை நாம் செய்யப் போகிறோம்? இரண்டாவதாக இந்த நவீன கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணித்தால் நாம் நிறைய கஷ்டப்பட வேண்டியிருக்கும். இது மட்டுமல்ல, நம்முடைய வாழ்வியல் உரிமைகள் எல்லாம் பறி போய் விடும், என்றும் சொல்லப்படுகின்றது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் கண்டிப்பாக கஷ்டப்பட்டுத்தான் ஆகவேண்டும். இதை குர்ஆனே சொல்கின்றது. 'ஆற்றலுக்கம் புகழுக்கும் உரிய அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டதற்காக அல்லாமல் வேறு எதற்காகவும் அவர்கள் கொடுமைப்படுத்தப் படவில்லை' (அத்தியாயம் 85ஃ8). நாம் மேலே சொன்னபடி உண்iமான முஸ்லிம்களாக வாழ்ந்தால் லைசென்ஸ் கிடைக்காது. ரேஷன் கார்டு கிடைக்காது. அது கிடைக்காது, இது கிடைக்காது என்றெல்லாம் சில சகோதரர்கள் பயப்படுகிறார்கள். இவையெல்லாம் கிடைக்காது என்பதற்காக ஈமானை இழந்துவிட முடியுமா? இஸ்லாத்தை விட்டுக் கொடுக்க முடியுமா? 'உங்களை உயிரோடு எரித்தாலும் கண்டந்துண்டமாக வெட்டினாலும் படுபயங்கராமாகச் சித்ரவதை செய்தாலும் ஈமானை – ஓரிறைக் கொள்கையை மட்டும் இழந்து விடாதீர்கள் ‚' என்று அண்ணல் எம்பெருமானார் (ஸல்) எச்சரித்து உள்ளார்களே‚ அதற்கு என்ன தான் அர்த்தம்? அல்லாஹ்விடத்தில் கெடுகெட்டவன் ‚'மற்றவர்களுடைய உலக வாழ்க்கைக்காக தன்னுடைய ஆ‡கிரத்தை அழித்துக் கொண்டவன்தான் மறுமை நாளினல் அல்லாஹ்விடத்தில் மிகவும் கேடுகெட்ட அடியான் ஆவான்‚' என்று இறைவனின் தூதர் முஹம்மத் (ஸல்) சொல்லியுள்ளார்கள். மறுமைக்காக வாழ்க்கையை மனதில் கொண்டு இந்த உலக வாழ்க்கையை மனதில் கொண்டு இந்த உலக வாழ்க்கையை அதற்கு ஏற்றவாறு திட்டமிட வேண்டும். அதுதான் புத்தசாலித்தனம்‚ அதற்குப் பதிலாக, இந்த உலக வாழ்க்கை ஒன்றை மட்டுமே மனதில் கொண்டு இறைவனும் இறைவனுடைய தூதரும் சொன்ன திசைக்கு நேர் எதிரான திசையில் நாம் பயணம் செய்யக் கூடாது. நாம் அல்லாஹ்வுடைய அடிமைகள், அவனை மட்டுமே வணங்கவேண்டும். அவனுடைய புகழ் ஒன்றையே நம்முடைய நாவுகள் போற்ற வேண்டும். அவனுடைய திருப்பெயரையும் அவனுடைய மார்க்கத்தையும் மேலோங்கச் செய்வது ஒன்றே நம்முடைய வாழ்க்கiயின் குறிக்கோளாக இருக்கவேண்டும். நாம் முறைப்படி அவனை வணங்கினால் தான் நம்முடைய உலகியல் பிரச்சனைகளுக்கு அவனிடத்திலிருந்து உதவிகளை எதிர்பார்க்க முடியும். அவனுக்காக, அவனுடைய தீனுக்காக எந்த தியாகத்தையும் செய்யலாம். ஆனால், எதற்காகவும் இஸ்லாத்தை பலி கொடுத்து விடக்ககூடாது

இந்திய அரசியல் முஸ்லீம்களுக்கு ஹராமா?
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்முன்னுரை :“இறை நம்பிக்கையாளர்களே ! நீங்கள் தீனுல் இஸ்லாமில் முழுமையாக நுழைந்து விடுங்கள் “ (அல்குர்ஆன் 2:208) . ஒரு முஸ்லீமின் வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் அடுக்களை முதல் ஆன்மீகம் வரை, பள்ளிவாயில் முதல் பாராளுமன்றம் வரை என அனைத்திற்கும் தீர்வை குர்ஆன் மற்றும் அதன் விளக்கவுரையாக திகழ்ந்த நபி(ஸல்) அவர்களின் வாழ்விலிருந்தே தேட வேண்டும் என குர்ஆன் வலியுறுத்துகிறது. அதனடிப்படையில் வாழ்வின் மற்ற துறைகளை போல் அரசியல் குறித்த இஸ்லாமிய கொள்கையையும் இந்திய அரசியல் குறித்த இஸ்லாத்தின் பார்வையையும் அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.இஸ்லாத்தின் அரசியல் கொள்கைஅல்லாஹ்வின் தூதரிடத்தில் அழகிய முன்மாதிரி இருக்கிறது (அல்குர்ஆன் 33:21) எனும் திருமறை வசனத்திற்கேற்ப அனைத்து விடயங்களிலும் நபி(ஸல்) அவர்களை பின்பற்ற வேண்டிய முஸ்லீம்கள் “என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறு தொழுங்கள்” (மாலிக் –ஸஹீஹுல் புகாரி 9.352) என்ற ஹதீதின் அடிப்படையில் நபி(ஸல்) அவர்களை தொழுகையில் பின்பற்றும் முஸ்லீம்கள் கூட இஸ்லாமிய அரசியல் கொள்கை குறித்து தெளிவற்றவர்களாக உள்ளனர். ஆட்சி செலுத்தும் அதிகாரம் அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் இல்லை. அவனை தவிர வேறு யாருக்கும் அடிபணியக் கூடாதென்று இறைவன் கட்டளையிட்டுள்ளான். (அல்குர்ஆன் 12:40, 4:65, 5:18, 6:57, 7:3) என குர்ஆன் பகர்கின்றது. வானின் அதிபதியே இப்பூமிக்கும் அதிபதி. எந்த இறைவன் பூமியை படைத்தானோ அவனுடைய சட்டங்கள் தான் பூமியை ஆள வேண்டும் என்பதையே பகுத்தறிவு உணர்த்தும்.இந்திய அரசியல் கொள்கைநமது நாடு ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் அமைப்பாகும். ஜனநாயகத்தின் ஆங்கில வார்த்தையான Democracy என்பது கிரேக்க சொல்லாகும். Demo என்றால் மக்கள் என்றும் Cracy என்றால் ஆட்சிமுறை என்றும் பொருள். எனவே ஜனநாயகம் என்றால் மக்களின் ஆட்சிமுறை என்று அர்த்தப்படும். ஆப்ரஹாம் லிங்கனின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் “மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் மக்களின் ஆட்சி” (For the people, of the people, by the people). “ஜனங்களே அதன் நாயகர்கள்” என்பதே ஜனநாயகத்தின் அடிப்படை.ஜனநாயகத்துக்கு முரணான ஜனநாயகம்பெரும்பான்மை மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறது என்பது ஜனநாயகத்துக்கு ஆதரவாக சொல்லப்படும் வாதமாகும். நடைமுறையில் நம் தேர்தல்களை பார்த்தால் மொத்த வாக்குகளில் 60% - 70% தான் பதிவாகும். பதிவான வாக்குகளில் சுமார் 30% - 35% வாங்கும் கட்சி ஆட்சியை பிடிக்கும். எனவே சுமார் 30% மக்களின் அபிமானத்தை பெறும் ஒரு கட்சி 100% மக்களை ஆளுவது எப்படி பெரும்பான்மை மக்களின் கருத்துக்கு மதிப்பளிப்பதாக ஆக முடியும்?. உதாரணமாக இந்தியாவில் சிறுபான்மையினராக இருக்கும் பிராமணர்கள் இந்தியாவை ஆள்வதும், யூதர்கள் அமெரிக்காவை ஆட்டி படைக்கும் சக்தியாக விளங்குவதையும் பார்க்கலாம்.(இந்திய) அரசியல் குறித்த அரசியல்வாதிகளின் பார்வைஜனநாயகம் தோன்றிய கிரேக்க நாட்டிலே அதை உருவாக்கிய தத்துவஞானிகள் கூட அதை “பலவீனமான ஊழல் நிறைந்த ஆட்சி முறை” என்றே குறிப்பிட்டுள்ளனர். மிகச் சிறந்த நாடாளுமன்றவாதியும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான அண்ணா அவர்கள் ஜனநாயகம் குறித்து கருத்து தெரிவிக்கும் போது “ஜனநாயகம் எண்ணிக்கைக்கு மட்டுமே மதிப்பளிக்கும். திறமைக்கோ, தகுதிக்கோ மதிப்பளிக்காது. ஜனநாயகத்தின் அடிப்படையிலேயே அனைத்தையும் தேர்ந்தெடுப்பதாக இருந்தால் இந்தியாவின் தேசிய மிருகமாக புலிக்கு பதில் சொறி நாயையும் தேசிய பறவையாக மயிலுக்கு பதில் காகமும் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும்” என்றார். நமது பாரத முதல் பிரதமர் நேரு அவர்கள் கூட “அரசியல் என்பது கிரிமினல்களின் கடைசி புகலிடம்” என்று சொன்னார்கள். 60 ஆண்டுகள் கடந்தும் நிலை மாறவில்லை. வேண்டுமென்றால் கிரிமினல்களின் முதல் புகலிடமாக அரசியல் உள்ளது என கூறலாம். அதனால் தான் அறிஞர் காண்டேகர் சொன்னார் “ஜனநாயகத்தில் நீங்கள் விரும்பும் தலைவரை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் உங்களை விரும்பும் தலைவரை தேர்ந்தெடுக்க முடியாது”.இஸ்லாமுக்கும் இந்திய அரசியலுக்குமுள்ள அடிப்படை வேறுபாடுகள்”மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என்பது ஜனநாயகத்தின் அடிப்படை நாதமாகும். “இறை தீர்ப்பே மக்களின் விருப்பம்” என்பதே இஸ்லாமின் கொள்கை. ஜனநாயகம் தனது சட்டங்களை மனித மூளையிலிருந்து பெறும் அதே வேளையில் இஸ்லாமோ வஹி மற்றும் தூதரின் வழிகாட்டலிருந்து மட்டுமே பெறுகிறது. ஜனநாயகம் சட்டமியற்றும் அதிகாரத்தை மக்களின் மனோ இச்சையிடம் ஒப்படைத்திருக்கும் போது இஸ்லாமோ இறைசட்டத்தை அமுல்படுத்தும் பொறுப்பை மட்டுமே மனிதனிடம் ஒப்படைத்திருக்கிறது. ஜனநாயகம் மதத்தையும் அரசியலையும் பிரித்து மதத்தை மனிதனின் தனிப்பட்ட வாழ்வுடன் முடக்கிவிடுகிறது. ஆனால் இஸ்லாமோ மனிதனின் முழு வாழ்வுடன் பின்னிப் பிணைந்த ஒன்றாய் மாறி விடுகிறது. ஜனநாயகம் எண்ணிக்கையை மட்டும் பிரதானமாக கருதும் போது இஸ்லாமோ நீதி வழங்குதலை பிரதானமாக வலியுறுத்துகிறது. எனவே மேலோட்டமாக தெரியும் ஒரு சில ஒற்றுமைகளை மட்டும் கருத்தில் எடுத்துக் கொண்டு இஸ்லாமும் ஜனநாயகமும் ஒன்று என்பதோ ஜனநாயகத்தை ஹலாலாக்குவதோ கொக்கும் பாலும் வெண்மை நிறம் என்பதற்காக கொக்கும் பாலும் ஒன்று என்பதற்கு ஒப்பானதாகும்.பெரும்பான்மை குறித்து இந்திய அரசியலும் இஸ்லாமும்இந்திய அரசியல் சட்டம் அல்லது ஜனநாயகம் பெரும்பான்மைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது. 100 பேர் உள்ள சட்டமன்றத்தில் 51 பேர் ஒரு விடயத்தை ஆதரித்தால் அது சட்டமாகி விடும். அது நன்மை x தீமை, நியாயம் x அநியாயம், சரி x தவறு என்றெல்லாம் பிரித்து பார்ப்பதில்லை. மாறாக பெரும்பான்மையினர் ஆதரிப்பதால் இன்று நம் நாட்டில் மதுவும், விபசாரமும் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளதை பார்க்கின்றோம். இஸ்லாமோ மதுவை தீமைகளின் தாய் என்றும் விபசாரத்தின் அருகில் கூட நெருங்க வேண்டாம் என்று எச்சரிக்கின்றது. ஏனென்றால் இஸ்லாம் எண்ணிக்கையின் அடிப்படையில் சிறுபான்மை x பெரும்பான்மை என்று பிரிப்பதில்லை. அதனால் தான் திருமறை “பெரும்பான்மையினரின் விருப்பங்களை நீங்கள் பின்பற்றினால் வழி தவறி போவீர்கள் (அல் குர்ஆன் 6:116 ) என்று எச்சரிக்கின்றது. இந்த பெரும்பான்மை தான் 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை ஈராக்கில் கொன்றொழித்த புஷ்ஷையும், குஜராத் இனப்படுகொலை நடத்திய மோடியையும் அங்கீகரித்து மீண்டும் பதவியில் அமர்த்தியுள்ளது.தேர்தலில் வெற்றி பெறும் முறையும் இலட்சியமும்எத்தகைய முஸ்லீம் தலைவராக இருந்தாலும், அமைப்பாக இருந்தாலும் அரசியலில் சட்டமன்ற உறுப்பினராக வேண்டுமென்றால் கூட இன்றைய சூழலில் குறைந்த பட்சம் சில இலட்சங்களை வாரி இறைக்க வேண்டியதுள்ளது. யாரும் சொந்த பணத்தை செலவு செய்து வெறும் சம்பளத்துக்காக வேலை செய்ய மாட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் “யார் பதவியை கேட்கிறார்களோ அவர்களுக்கு கொடுக்காதீர்கள்” (அபு மூஸா (ரலி) – புகாரி 2261). அண்ணலாரின் வழிகாட்டுதலுக்கு நேர் முரணாக தனிநபர்கள் தங்களை வேட்பாளராக்க கட்சியை நெருக்குவதும் மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளையும் கொடுத்து வெற்றி பெறல் முஸ்லீம்களுக்கு ஹராமான ஒன்றே. நடைமுறை சாத்தியமில்லை என்றாலும் வாதத்திற்காக இஸ்லாமிய வரையறைக்கு உட்பட்டு தேர்தலில் வெற்றி பெற்றாலும் இவர் நிச்சயமாக அல்லாஹ்வுடைய வேதத்தின் படி பைஅத் (உறுதிமொழி) செய்வதற்கு பதில் அம்பேத்கர், ராஜேந்திர பிரசாத் போன்ற இறை நிராகரிப்பாளர்களால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தின் படியே பைஅத் செய்ய முடியும். இஸ்லாமிய அமைப்பில் “பைஅத்” செய்வதை விமர்சிக்கும் நாம் எப்படி இந்த பைஅத்தை சரி காண முடியும்?.நடைமுறை உதாரணங்கள்ஜனநாயகம் மூலம் இஸ்லாத்தை நிலை நாட்ட முடியும் என்று சொல்வோர் பெரும்பான்மை முஸ்லீம்கள் வாழும் பாகிஸ்தான், வங்காளதேசம், துருக்கி போன்ற நாடுகளில் இஸ்லாத்தை நிலை நாட்டுவதில் தோல்வி அடைந்துள்ளதை பார்க்கலாம். துருக்கி பிரதமர் எர்டகானின் மனைவியால் தலை முக்காடு அணிந்து பாராளுமன்றத்துக்கு வர முடியா நிலை தான் இன்றும் உள்ளது. அல்ஜீரியாவில் இஸ்லாமிய கட்சி ஜனநாயக தேர்தலில் வெற்றி பெற்றும் ஆட்சி அமைக்க முடியாமல் தடுக்கப்பட்டது நினைவிருக்கலாம். சமூகத்தை மாற்றாமல், அடிப்படைகளை மாற்றாமல், வெறும் முகங்களை மாற்றுவது கொண்டு எம்மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.இந்திய அரசியல் ஹராமா? – குர்ஆனிய பார்வையில்ஒரு முஸ்லீமை பொறுத்த வரையில் ஒரு விஷயத்தை ஹலால், ஹராம் என முடிவு செய்வது அதன் மூலம் கிடைக்கும் உலகாயத நன்மைகளோ அல்லது சமூகத்திற்கு கிடைக்கும் பயன்களைப் பொறுத்தோ மட்டுமல்ல. மாறாக திருமறை குர்ஆனும் திருத்தூதரின் வழிமுறையும் மட்டுமே ஒன்றை ஹலால், ஹராம் என முடிவு செய்ய கூடிய ஒன்றாக இருக்க முடியும். “யார் அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள் பாவிகள், நிராகரிப்பாளர்கள், அநிநாயக்காரர்கள் (அல் குர்ஆன் 5:44,45,47) என்று அல்லாஹ் கூறுகிறான். நபி (ஸல்) அவர்களே அல்லாஹ்விடத்தில் இவரின் கல்வி ஞானத்துக்காக துஆ செய்த திருக்குர்ஆனின் மிகச் சிறந்த விரிவுரையாளரான இப்னு அப்பாஸ் (ரலி) இவ்வசனத்துக்கு கருத்து தெரிவித்த போது தன் தப்ஸீரிலே “ யார் இறைவனுடைய ஆட்சியை அமுல்படுத்த தேவையில்லை என்று கருதுகிறார்களோ, யார் மனித ஆட்சி இறையாட்சியை விட மேலானது எனக் கருதுகிறார்களோ, யார் இறையாட்சி போல் மனித ஆட்சியும் நன்மை பயப்பது என கருதுகிறார்களோ அவர் நிராகரிப்பாளர்” என்று சொன்னார்கள். மேலும் இன்று நம்மில் பலர் இறையாட்சியை தான் விரும்புகிறோம், ஆனால் இறைவன் இறக்காத சட்டத்தின் படியும் ஆட்சி செய்யலாம் என கருதுகிறோம். இப்படிப்பட்டவர்களையும் காபிர் (இறைநிராகரிப்பாளர்) என்றே குறிப்பிடுகிறார்கள். ஏனென்றால் அவன் ஆட்சி அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதை மறுக்கிறான். அவன் இறையாட்சியை மனித ஆட்சியை விட மேலானது என கருதினாலும் சரியே என குறிப்பிடுகிறார்கள்.இந்திய அரசியல் ஹராமா ? – சுன்னாவின் ஒளியில்நபிமார்களை அனுப்பியதின் நோக்கத்தை பற்றி திருமறையில் இறைவன் பிற மார்க்கங்களை மிகைத்து இஸ்லாத்தை மேலோங்க செய்யவே அனுப்பியதாக (அல்குர்ஆன் 61:9) குறிப்பிடுகிறான்.இந்திய அரசியலின் மூலம் இஸ்லாத்தை மேலோங்க செய்யும் வாய்ப்பிருக்கின்றது என இன்னும் நப்பாசையில் இருப்பவர்கள் நபி (ஸல்) வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூற வேண்டும். ஒரு சமயம் நபி (ஸல்) அவர்கள் “இவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் பாதிரிகளையும், சந்நியாசிகளையும், மர்யமுடைய மகன் மஸீஹையும் தங்கள் கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்” (அல்குர்ஆன் 9:31)எனும் வசனத்தை ஓதிக் கொண்டிருந்த போது அங்கு வந்த கிறிஸ்துவத்திலிருந்து இஸ்லாத்தை தழுவிய அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடத்தில் தாங்கள் மஸீஹை வணங்கியது உண்மை. ஆனால் எக்காலத்திலும் தங்கள் பாதிரிமார்களை வணங்கியதில்லை என்று கூறிய போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன பதில் நாம் ஆழமாக யோசிக்க வேண்டிய ஒன்றாகும்.இன்ஜீலில் ஒன்றை ஹலால் என்று சொல்லும் போது உங்கள் பாதிரிமார்கள் அதை ஹராமாக்கினால் ஹராமாக்கிக் கொண்டீர்களா? என்று கேட்டதற்கு ஆம் என்றார்கள். இன்ஜீலில் ஒன்றை ஹராம் என்று சொல்லும் போது உங்கள் பாதிரிமார்கள் அதை ஹலாலாக்கினால் ஹலாலாக்கி கொண்டீர்களா ? என்று கேட்டதற்கு ஆம் என்றார்கள். உடனே நபி (ஸல்) தெளிவாக சொன்னார்கள் “ அப்படியென்றால் நீங்கள் அவர்களை உங்களுடைய இலாஹ்வாக எடுத்து கொண்டீர்கள் என்றார்கள்(திர்மிதி). மேற்கண்ட சம்பவத்தில் நபி (ஸல்) அவர்கள் கிறித்தவர்களை இணைவைப்பாளர்கள் என்று சொன்னதற்கு காரணம் அவர்கள் தங்கள் பாதிரிமார்களுக்கு சுஜுது செய்தார்கள் என்பதற்காகவோ, பிராத்தனை புரிந்தார்கள் என்பதற்காகவோ அல்ல. மாறாக இறைசட்டத்துக்கு மாற்றமான மனித சட்டத்திற்கு அடிபணிந்தார்கள் என்பதற்காகவே. பாதிரிகளின் சட்டங்களுக்கு அடிபணிதல் ஷிர்க் என்றால் நம் நிலை என்ன?. உங்கள் மார்க்கத்தை பரிபூரணமாக்கி விட்டேன் (அல்குர்ஆன் 5:3) எனும் வசனத்திற்கேற்ப பரிபூரணத்துவம் பெற்ற குர்ஆனை வைத்துக் கொண்டு அதற்கு மாறான சட்டங்களை நிலைநாட்ட போராட முனைந்தால் அது தெளிவான ஷிர்க்கேயாகும்.இந்திய அரசியல் ஹராமா ? – ஸலபுகள், முன்னோர்களின் கூற்றுபடிஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா அவர்கள் தனது அல்பதாவா (Vol 35-1373) வில் கூறும் போது “குர்ஆன் மற்றும் சுன்னாவில் தான் கற்றதை விட்டொழித்து அல்லாஹ், அவன் தூதரின் படி ஆட்சி செய்யாத ஆட்சியாளரை பின்பற்றும் அறிஞர் இறைநிராகரிப்பாளர் ஆவார். இவ்வுலகிலும் மறுமையிலும் தண்டனை பெறுவதற்கு தகுதியானவர்” என்று கூறுகிறார். இமாம் இப்னு ஜரீர், இப்னு ஹஜ்ம் அல் அந்தலூஸி போன்றோரும் இதே கருத்தின் அடிப்படையில் தீர்ப்பு கொடுத்துள்ளனர். தன் வரம்புகளை மீறி செயல்படுவர்கள் அவர்கள் வணங்கப்பட்டாலும், பின்பற்றப்பட்டாலும், அவர்களின் சட்டங்கள் பின்பற்றப்பட்டாலும் அவர்கள் தாகூத்தே என இமாம் இப்னு கய்யூம் அல் ஜவ்ஜியா குறிப்பிடுவது போல் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப், அஹ்மத் ஷாக்கிர் போன்ற எண்ணற்ற முன்னோர்கள், ஸலபுகள் ஜனநாயக அரசியல் ஷிர்க் என்பதில் கருத்தொற்றுமை கொண்டவர்களாக உள்ளனர்இந்திய அரசியல் ஹராமா ? – சமகால அறிஞர்களின் கருத்துசமகால அறிஞர்கள் பலரும் ஜனநாயகம் ஹராம் என கூறுகின்றனர். உதாரணத்துக்கு ஷேக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உதைமீன் அவர்கள் மனித சட்டத்தின் அடிப்படையில் நடைபெறும் ஆட்சியை பற்றி குறிப்பிடும் போது “அல்லாஹ்வின் அதிகாரம் நீக்கப்பட்டு அது இன்னொரு அதிகாரத்தை கொண்டு நிரப்பப்படுகிறது. மக்களிடத்தில் ஷரீஆவின் அதிகாரம் நீக்கப்பட்டு மனித கற்பனைகளில் உருவான அதிகாரத்தை கொண்டு நிரப்பப்படுகிறது. இது தெளிவான குப்ராகும். ஏனென்றால் அவன் இறையடிமையாய் இருக்கும் போது இறைவனுடன் தன்னை சமமாக்கி கொள்கின்றான். இதை அல்லாஹ் கண்டிக்கிறான். இந்த அடிப்படையில் தான் ஷேக் முஹம்மது நஸீருத்தின் அல்பானி அவர்கள் கூட மதசார்பின்மையை அடிப்படையாக கொண்ட முஸ்தபா கமாலின் ஆட்சியை இஸ்லாத்துக்கு முரணானது என தீர்ப்பளித்தார்.இங்கிலாந்தை சேர்ந்த பிரபல அறிஞர் அப்துர் ரஹீம் கீரின் அவர்கள் 2004-ல் சென்னையில் நடைபெற்ற PEACE கருத்தரங்கில் “இஸ்லாமும் ஜனநாயகமும்” எனும் தலைப்பில் பேசும் போது “இஸ்லாம் சொல்லும் கடமையை ஒருவர் செய்யத் தவறினால் அவர் பாவியாக கருதப்படுவார். ஆனால் அவரது செயலை நியாயப்படுத்தினால் அவர் இஸ்லாத்தின் வரையறையை விட்டு வெளியேறியவராக கருதப்படுவார். உதாரணமாக ஒருவர் தொழவில்லையானால் அவர் பாவியாக கருதப்படுவார். ஆனால் தொழுவது தேவையில்லை என்று வாதிட்டால் அவர் நிராகரிப்பாளராக கருதப்படுவார். அது போல் ஒருவர் இஸ்லாத்துக்கு முரணாண மனித சட்டங்களுக்கு அடிபணிந்து வாழ நேரிட்டால் அவர் பாவியாக கருதப்படுவார். அவர் அந்த மனித சட்டங்களை ஆதரித்தால் அதை நியாயப்படுத்தினால் அதற்காக போராடினால் அவர் நிராகரிப்பாளராக கருதப்படுவார்” என்றார். மேலும் அப்துர் ரஹீம் க்ரீன் அவர்கள் “ஜனநாயகமும் இஸ்லாமும் ஒன்று என்று யாராவது சொன்னால் ஒருவர் திருமணம் செய்யும் போது மஹராக பணம் கொடுக்கிறார், விபசாரத்துக்கும் பணம் கொடுப்பதால் இரண்டும் ஒன்று என்று சொல்வதற்கு சமமாகும்” என்று விளக்கினார்.தீர்வுக்கான பாதை – இஸ்லாத்தின் அரசியல் கொள்கையை புரிந்து கொள்ளல்நம்மில் இஸ்லாமிய அடிப்படையில் வாழ தலைப்படும் மனிதர்கள் கூட இந்தியா போன்ற ஒரு நாட்டில் சிறுபான்மையினராக இருக்கும் போது நாம் நம் தனிப்பட்ட வாழ்வில் கடமைகளை நிறைவேற்றினால் போதும் என்று நினைக்கின்றனர். ஆனால் மக்கா வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில் மிக மிகச் சிறுபான்மையினராக முஸ்லீம்கள் இருந்த போது பனூ அம்ரு பின் ஷாஷா எனும் ஒரு கோத்திர தலைவர் நபி (ஸல்) அவர்களிடத்தில் வந்து “உங்கள் மார்க்க கடமைகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி செய்கிறேன். ஆனால் நீங்கள் ஆட்சியை கைப்பற்றும் போது உங்களுக்கு பிறகு ஆட்சியில் எங்களுக்கு பதவியில் பங்கு வேண்டும்” என்று கூறுகிறார். ஆட்சியை கைப்பற்றுவது இருக்கட்டும் அடி விழுந்தால் கூட தடுப்பதற்கு ஆளில்லா நம்முடைய நிலையை விட மிக பலவீனமான அச்சூழலிலும் அல்லாஹ்வின் தூதர் அவர்களின் கோரிக்கையை மறுத்ததோடு “ஆட்சி அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே” என்று சொன்னார்கள் (அத்தபரி, பிதாயா வன் நிஹாயா) என்றால் இஸ்லாம் ஆட்சி பீடம் ஏறும் போது தான் தீன் முழுமைப்படுத்தப்படும் என்பதை உணரலாம்.அல்லாஹ், தூதரின் வாக்குறுதியின் மீது முழுமையான நம்பிக்கைஇஸ்லாமிய ஆட்சி மீண்டும் ஏற்படும் என்ற முழுமையான நம்பிக்கை ஒரு முஃமினுக்கு இருக்க வேண்டும். முஸ்லீம்கள் தற்போது இச்சமூகம் சந்தித்து வரும் சோதனைகளை, வேதனைகளை வைத்து நம்பிக்கையிழந்து விடக் கூடாது. நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு முன்னறிவிப்பு செய்தார்கள் “அல்லாஹ் விரும்பும் காலம் வரைக்கும் நுபுத்துவம் இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். பின் அல்லாஹ் விரும்பும் காலம் வரைக்கும் நுபுத்துவத்தின் வழிமுறையிலான கிலாபத் இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். அதற்கு பின் பரம்பரை ரீதியிலான ஆட்சிமுறை இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். அதற்கு பின் கொடுங்கோலர்கள் ஆட்சி அல்லாஹ் நாடும் வரை இருக்கும், அவன் நாடும் போது அதையும் நீக்கி விடுவான். பின் நுபுத்துவத்தின் வழிமுறையான கிலாபத் (இறையாட்சி) ஏற்படும் என்று கூறி விட்டு பின் அமைதியாக இருந்து விட்டார்கள்” (ஹீதைபா (ரலி) – முஸ்னத் அஹ்மத், திர்மிதி எண் 5378). நபி (ஸல்) அவர்களின் மேற்கண்ட முன்னறிவிப்பின் படி பார்க்கையில் நுபுத்துவம், கிலாபத்தே ராஷிதியா, பரம்பரை முடியாட்சி அனைத்தும் நீங்கி கொடுங்கோலர்களின் ஆட்சியில் இருக்கும் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இஸ்லாமிய ஆட்சி ஏற்படும் என்பது உண்மை. இப்போது நம்முன் உள்ள கேள்வி அல்லாஹ்வும் அவனது தூதரும் அளித்த வாக்குறுதிகளை உண்மையாக நம்பி நம் காலத்தில் வந்தாலும், வரா விட்டாலும் எதிர்கால தொலைநோக்கு அடிப்படையில் அவனுடைய மார்க்கம் மேலோங்க உழைக்க போகிறோமா? அல்லது நம்முடைய பலவீனத்திற்கு நியாயம் கற்பித்து இஸ்லாத்தை இஸ்லாம் அல்லாத வழிமுறைகளின் மூலம் நிலைநாட்டுவதாக எண்ணி இஸ்லாம் ஹராமாக்கிய ஒன்றை செய்ய போகிறோமோ?. அல்லாஹ்வும் தன் திருமறையில் “ மனிதர்களே ! உங்களில் எவரேனும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களையும் செய்து வந்தால் அவர்களுக்கு முன்னர் சென்றவர்களைப் பூமிக்கு அதிபதிகளாக்கி போன்றே இவர்களையும் பூமிக்கு அதிபதியாக்குவதாக அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்” (அல்குர்ஆன் 24:55) என்று உற்சாகமளிக்கிறான்.தியாகமும் மறுமை நம்பிக்கையும்இந்தியாவில் வகுப்புக் கலவரங்களில் ஏராளமான முஸ்லீம்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இஸ்லாத்தை ஒரு கொள்கையாக எடுத்துச் சொன்னதற்காக, இஸ்லாத்தை நிலைநாட்டுவதற்காக நம் உயிரிழப்பும் அர்ப்பணிப்பும் மிக குறைவாகும். மக்காவின் சுடுமணலில் கொடுமைப்படுத்தப்பட்ட போது சுவனத்தின் வாடையை நுகர்ந்த பிலால் (ரலி), எலும்புக்குள்ளும் ஈமான் ஊடுறுவியுள்ளது என்று தூதரால் சொல்லப்பட்ட அம்மார்(ரலி), முழு சொத்தையும் அண்ணலாரோடு வாழ அர்ப்பணித்த சுஹைப் (ரலி), செல்வந்தராக பிறந்து இறக்கும் போது உடலை மூடவும் வழியின்றி மரணித்த முஸைப் (ரலி) ஆகியோரைப் போல் நாம் மறுமையை மனதிலே சுமந்தால் தீனை நிலைநாட்டும் பாதையில் தியாகங்களும் நமக்கு எளிதாக தெரியும், நம் பாதையும் தெளிவாகும்.முடிவுரை”(நபியே!) மார்க்கத்தின் நேரான ஒரு வழியில்தான் நாம் உங்களை ஆக்கியிருக்கின்றோம். ஆகவே அதனையே நீங்கள் பின்பற்றி நடப்பீராக! கல்வி ஞானமற்ற இந்த மக்களின் விருப்பங்களை பின்பற்றாதீர்கள்” (அல்குர்ஆன் 45:18) என்று இறைவன் குறிப்பிடுவது போல் நிச்சயமாக இஸ்லாம் ஒன்று மட்டுமே அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ள கூடிய மார்க்கமாக இருப்பது போலவே அதை அடையும் வழிமுறையும் ஒன்றாக தான் இருக்க முடியும். “Un Islamic are Anti Islamic” என்று சொல்வது போல் அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டிய இஸ்லாத்தின் அடிப்படையிலான அரசியல் தவிர மற்ற அனைத்தும் ஜாஹிலிய்யாவே. அவற்றை விரும்பி பின்பற்றுவதும் அதன் அடிப்படையில் போராடுவதும் அதை நிலை நாட்ட போராடுவதும் நிச்சயமாக ஹராமான ஒன்றே என்பதை குர்ஆன், சுன்னா, ஸலபுகள், சமகால அறிஞர்கள் கூற்று படி பார்த்தோம்.”உலகத்தில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டுமென்றால் முதலில் உங்கள் உள்ளத்தில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துங்கள்” என்று ஹஸன் அல் ஹீஸைபி கூறியதை போன்று நாம் தனி நபராக இருந்தாலும் இப்ராஹீம் (அலை) அவர்களை போன்று ஒரு சமுதாயமாக நாம் செயல்பட வேண்டும். முதலில் நம்மை, நம் குடும்பத்தை, மஹல்லாவை, சமூகத்தை இஸ்லாமிய அச்சில் முழுமையாக வார்த்தெடுக்க நம் நேரம், உடல், பொருளாதாரம், உயிரையும் அர்ப்பணிப்போம். அல்லாஹ் திருமறையில் “நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139) என்று குறிப்பிடுவது போல் நாம் விளங்கும் போது நிச்சயம் இந்த தீன் உலகை ஆளும் கொள்கையாக மாறும் இன்ஷா அல்லாஹ். எத்துனை அடிகள் எடுத்து வைத்தோம் என்பது முக்கியமல்ல. ஆனால் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டிய வழியில் இருக்கிறதா என்பது முக்கியம். பாதை தெரிகிறது என்பதற்காக மேற்கு நோக்கி பயணிப்பவன் ஒரு போதும் சூரிய உதயத்தை காண முடியாது.ஒவ்வொரு கற்களாய் கொண்டுவந்து மாளிகை செய்வோம்நம் வியர்வையாலும் இரத்தத்தாலும்மார்க்கத்துக்கு உரமிடுவோம்அல்லாஹ்வின் உதவியும் நம் முயற்சியும்ஒன்று சேரும் போதுஇன்ஷா அல்லாஹ் இறையாட்சிஎனும் கனவும் நனவாகும்.
இறை சட்டங்கள் - தவ்ஹீதின் ஒரு அங்கம்
إن الحكم إلا للهஅல்லாஹ் தான் சட்டத்தை இயற்றுகின்றவன். அந்த அல்லாஹ்வினுடைய சட்டங்களே எங்களை ஆள வேண்டும் என்ற அகீதாவைச் சொல்லுங்கள். இதனை யாரும் அழுத்திச் சொன்னதாகத் தெரியவில்லை. இது அகீதாவிலே ஒரு விசயம். தவ்ஹீதிலே ஒரு முக்கியமான அங்கம். இதனை யாரும் மறைக்க முடியாது. மறுக்க முடியாது. இதைப் பற்றிப் பேசாமல் தவ்ஹீதைப் பற்றிப் பேச முடியாது சகோதரர்களே!! எப்படி அல்லாஹ் வணங்கப்படக் கூடியவனாக இருக்கின்றானோ! எப்படி அவன் உதவி செய்யக் கூடியவனாக இருக்கின்றானோ! அதே மாதிரி அல்லாஹ்! எங்களை வழிநடத்தக் கூடியவன். எங்களுக்கு சட்டங்களை வகுத்துத் தரக் கூடியவன். அவனது சட்டம் எல்லாக் காலத்திற்கும் பொருத்தமானது. எந்தக் காலத்திற்கும் ஒவ்வாதது அல்ல என்ற அந்தக் கருத்தை ஓங்கி நம்முடைய அழைப்பு பணியிலே முழங்குவோம்.ஏன் அதனை நாம் அழுத்திப் பேச வேண்டும் என்றால், அது தவ்ஹீதிலே ஒரு பகுதி. யூசுப் (அலை) அவர்களது வரலாற்றிலே நாம் இதனைப் பார்க்கின்றோம், சூரா யூசுப் - லே இறைவன் கூறுகின்றான் :إن الحكم إلا للهசட்டங்களை இயற்றுகின்ற அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உரியது. அந்த சட்டம் வேறு மக்களுடைய கைகளிலே இருப்பதால் இந்த உலகத்திலே என்ன நடக்கின்றது என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். ஹலால் ஹராமாக்கப்பட்டுள்ளது. ஹராம் ஹலாலாக்கப்பட்டுள்ளது. அதனை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொள்ளக் கூடிய மக்களாக நாம் இருக்கின்றோமே!! நிச்சயமாக இந்தக் கருத்துக்களை நாம் அனைத்து மக்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். அவற்றை நடைமுறைப்படுத்துவது இரண்டாவது விசயம். முதலில் கருத்து மாற்றம் அனைத்து மக்களிடமும் உருவாக வேண்டும். சிந்தனை மாற்றம் வர வேண்டும்.கருத்துப் புரட்சியை முடுக்கி விட வேண்டும். இந்தக் கருத்து எப்படிப் பேசப்பட வேண்டும், எப்படித் தாக்கம் விளைவிக்க வேண்டும் என்றால், தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது, இன்றைய இளைஞர்கள் கிரிக்கெட்டைப் பற்றிப் பேசிக் கொண்டு போகின்றார்கள் அல்லவா?! ஸலாம் சொன்னால் பதில் சொல்வதற்குக் கூட அவர்களுக்கு முடியாமல், அந்தக் கிரிக்கெட்டைப் பற்றிப் பேசிக் கொண்டு செல்கின்றார்கள் அல்லவா? அந்தளவுக்கு அந்தக் கிரிக்கெட் அவர்களது மூளையைத் தாக்கி இருக்கின்றது. அந்த மூளையை அந்த அளவு சலவை செய்திருக்கின்றதல்லவா? அந்த அளவுக்கு இந்த அடிப்படையான விசயங்கள் இந்த உலக மக்களிடையே பேசப்பட வைக்க வேண்டும். ஏன்? நம்மால் முடியவில்லை. அது தான் நம்மிடையே நிலவும் சில சூழ்நிலைகளினால் தாக்கமுற்று விடுகின்றோம். நம்முடைய அழைப்புப் பணியை மறந்து விடுகின்றோம்.சமூகத்திலே மணமாகாத குமரிப் பெண்களுடைய விசயத்தைப் பற்றிப் பேசப்படும் பொழுது, எங்களது அடிப்படையான அழைப்புப் பணியை மறந்து விடுகின்றோம். வட்டியைப் பற்றிப் பேசும் பொழுது, அதற்கு அழுத்தம் கொடுத்து விட்டு, அடிப்படையான அகீதாவை மறந்து விடுகின்றோம். சமூகப் பிரச்னைகள் என்று வரும்பொழுது அதனைத் தீர்க்க ஓடுகின்றோம். அதனடியாகப் பின்பற்ற வேண்டிய அகீதாவை மறந்து விடுகின்றோம். அழைப்புப் பணியை மறந்து விடுகின்றோம். சகோதரர்களே! இது அழைப்புப் பணியில் ஈடுபடுகின்றவர்களுக்கு அழகல்ல! உண்மையிலேயே அழைப்பாளர்கள் எந்தநிலையிலும் தங்களுடைய அடிப்படை விசயங்களிலிருந்து மாறிவிடக் கூடாது.அவர்கள் சமூக மாற்றத்தைக் கண்ணால் காணலாம். அல்லது காணாமலும் போகலாம்.ஷஹீத் செய்யித் குதுப் (ரஹ்) அவர்கள் தன்னுடைய திருமறைக்கு விளக்கவுரையாக எழுதிய திருக்குர்ஆன் நிழலிலே என்னும் தப்ஸீரின் முன்னுரையிலே கூறுகின்றார்கள் - ஒரு அழைப்பாளன் தன்னுடைய ஆயுளால் இந்த அழைப்புப் பணியை வரையறுக்க முடியாது. எனது ஆயுளுக்குள் இஸ்லாமியக் கிலாபத்தைக் கண்டே ஆக வேண்டும் பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆசை வேண்டாம் என்று சொல்லவில்லை. அந்த ஆசை அனைவருக்கும் இருக்கத் தான் வேண்டும். அதனை நான் என்னுடைய வாழ்நாளிலே கண்டு தான் ஆக வேண்டும். இல்லை என்றால் அவற்றை நான் குறுக்கு வழியிலே கண்டு கொள்வேன் என்று நினைப்பதும், அதன் அடிப்படையில் செயல்படுவதும் கூடாது. எனவே இஸ்லாமியக் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த அடித்தளத்தைப் போடுவோம்.அந்த சுமையா, யாஸிர் தம்பதிகள் அவ்வாறு நினைத்தார்களா? இஸ்லாமிய ஆட்சியைக் கண்டார்களா? யாஸிர் (ரலி) அவர்களுக்கு அந்த இஸ்லாமிய ஆட்சியைக் காண முடிந்ததா? சகோதரர்களே! பத்ரிலும், உஹதிலும், அகழ் யுத்தத்திலும், ஷஹீதாகிப் போனார்களே! எத்தனையோ உத்தம ஸஹாபாக்கள்!! அவர்களெல்லாம் இஸ்லாமிய ஆட்சியைக் கண்டார்களா? சகோதரர்களே!! ஆனால், அவர்கள் அனைவரும் இந்த அடிப்படையான அகிதாவிலே நின்று கொண்டு. தங்களது ஆயுளிலே இந்த இஸ்லாமிய ஆட்சிக்கான, அந்த இஸ்லாமிய ஆட்சி உருவாகுவதற்கான தங்களது பங்களிப்பைக் கொடுத்து விட்டுச் சென்றார்கள். அத்தகைய பங்களிப்பை இந்த அழைப்புப் பணிக்கு வழங்கி விட்டுச் செல்வோம்.எனவே சகோதரர்களே! அரசியல் ரீதியாக, ஒழுக்க ரீதியாக, பொருளாதார ரீதியாக, சமூக சேவை ரீதியாக, மாற்றம் வேண்டும் என்று யோசிக்கின்றவர்கள், எமது சமூகத்தைப் பீடித்திருக்கின்ற ஒழுக்கச் சீர்கேடுகள், நூதனங்கள், பித்அத்துக்களை ஒழிக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் - பித்அத்துக்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அதே போன்று பொருளாதார மாற்றம் வேண்டும். அதனையும் நாங்கள் விரும்புகின்றோம். ஒழுக்கம் மேம்பட வேண்டும். அதனையும் நாங்கள் விரும்புகின்றோம். சமூகத்தில் ஏழை மக்களுடைய நிலமைகள், அவை தரமுயர்த்தப்பட வேண்டும். விரும்புகின்றோம். ஆனால், இதனை இந்த அடிப்படையை மறந்து விட்டு, அகீதாவை மறந்து விட்டு மனம் போன போக்கில் செல்வதையும், அகீதாவைப் புறக்கணித்து விட்டு நாங்களும் இஸ்லாமிய அழைப்புப் பணியில் தான் ஈடுபடுகின்றோம் என்று கூறப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.அழைப்புப் பணியில் ஈடுபடுகின்ற நாம் ஒரு இறுதியான முடிவுக்கு வர வேண்டும். ஒரு உறுதியான முடிவுக்கு வர வேண்டும். அந்தத் தீர்மானத்திலே நாங்கள் இறுதி வரைக்கும் தடம் மாறாமல் இருக்க வேண்டும். அது முக்கியம்.அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களிடத்தில் ஒரு ஸஹாபி வந்து சொன்னார்கள். யா ராசூலுல்லாஹ்!! எனக்கு இஸ்லாத்தைப் பற்றி ஒரு விசயத்தைச் சொல்லித் தாருங்கள். அந்த விசயத்தைப் பற்றி இனி யாரிடமும் நான் கேட்டுத் தெரிந்து கொள்ளக் கூடாத, அந்த அவசியத்தை ஏற்படுத்தாத அளவில் அந்த விசயத்தைப் பற்றி எனக்குச் சொல்லித் தாருங்கள் என்று கேட்கின்றார்.قل أمنت بالله ثم الستقمஅல்லாஹ்வை ஈமான் கொண்டேன் என்று சொல். அதிலே உறுதியாக இருந்து கொள் என்று கூறுகின்றார்கள்.அதாவது அகீதாவிலே உறுதியாக இருந்து கொள். அதனை விட்டும் தடம் புரண்டு விடாதே என்று கூறுகின்றார்கள்.உனது அழைப்புப் பணியிலே எத்தனை பிரச்னை வந்தாலும், சமூகத் தீமைகள் குறுக்கிட்டாலும், அந்த அஸ்த்திவாரத்தின் மீது நின்று கொண்டு யோசி! சிந்தி! என்று தான் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.இத்தகைய மனிதர்களுக்குத் தான் அந்த மலக்குமார்களின் சுபச் செய்தி இருக்கின்றது. நிச்சயமாக அல்லாஹ் தான் எங்கள் ரப்பென்று கூறி, அதிலே உறுதியாக இருந்தார்கள் அல்லவா! அவர்கள் மரணிக்கின்ற வேளையில் மலக்குகள் இறங்கி, நீங்கள் பயப்பட வேண்டாம். நீங்கள் துக்கப்படவும் வேண்டாம். சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் பெற்றுக் கொள்ளுங்கள். உலகத்திலும், மறுமையிலும் நாங்கள் உங்களுக்கு நேசர்களாக இருக்கின்றோம். உங்களுக்குத் தேவையானவைகள் எல்லாம் அந்த சொர்க்கத்திலிருந்து, அந்த அல்லாஹ்வின் விருந்தாக உங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும். உங்களுக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கும் என்று அந்த மலக்குகள் இத்தகையவர்களுக்கு சுபச் செய்தியைத் தெரிவிக்கின்றார்கள்.
வாருங்கள் மாற்றலாம்!
வாருங்கள் மாற்றலாம்!
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹீஅழிவின் விளிம்பில் மனித குலம் நிற்கிறது. மனிதர்களை மனிதர்களே கொன்று வயிறு நிரப்புகிறார்கள். ஆளும் வர்க்கம் மனிதனின் இரத்தத்தை உருஞ்சி தனது அரச இயந்திரத்தை இயக்குகிறது. அஃறினைகள் கூடச் செய்யத்தயங்கும் அசிங்கங்களை மனிதன் அன்றாடம் செய்து வருகின்றான். நாசங்களையெல்லாம் நாகரிகம் என்கிறார்கள். சத்தியத்தின் வாய்களை அசத்தியத்தின் கரங்கள் கிழித்து விடுகின்றன. நீதியின் நிழல் பூமியின் ஒரு அங்குலத்திலேனும் நிலைபெறாமல் நகர்ந்து விடுகிறது. அழிவின் பாதையை அகலத்திறந்து ‘சுதந்திரம்’ என அழைக்கிறார்கள். ஒரு கண்டத்தின் வருவாயை ஒரு கம்பனியின் முதலாளி விழுங்கி ஏப்பம் விடுகிறான். விலங்கிடுபவர்களே ‘விடுதலை’ பற்றி பேசுகிறார்கள். இதுதான் இன்றைய (அ)நாகரிக உலகம். இது தான் மானிடன் இயற்றிய சட்டத்தின் (அவ)லட்சணம்.
அப்படியானால் அந்தோ கதி! மனித குலத்திற்கு தீர்வில்லையா? சத்தியத்திற்கு வாய்ப்பில்லையா? மானிடருக்கு விடுதலை கிட்டாதா? கிட்டும். நிச்சயமாக கிட்டும். இவ்வுலகில் மாத்திரமல்ல; மறுமையிலும் கிட்டும். ஆனால் அதற்கொரு விலை இருக்கிறது. அதுதான் மனிதன் மீதான மனிதனின் ஆட்சியை இல்லாதொழித்து மனிதன் மீதான இறைவனின் ஆட்சியை நிலை நிறுத்துவது. அந்த விலையை செலுத்த நீங்கள் தயாரா? வாருங்கள் அந்த இலக்கை நோக்கி ‘விடுதலை’ உங்களை அழைத்து செல்லும் இன்ஷா அல்லாஹ்.

முதலாளித்துவமும் தானாகவே தனது அழிவைத் தேடிக்கொள்ளும்.
பொதுவுடமை தத்துவத்திலிருந்து தோன்றிய கம்யூனிஸம் தானாக அழிவைத் தேடிக்கொண்டது போல் முதலாளித்துவமும் தானாகவே தனது அழிவைத் தேடிக்கொள்ளும்.
உலகப் பொருளாதாரத்தை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கும் பொருளாதார சீரழிவுகள் ஏற்படாமல் தடுப்பதற்கும் இஸ்லாத்திற்கு மட்டுமே ஆற்றல் இருக்கிறது.
ரியல்எஸ்டேட் விவகாரத்தில் வெடித்துக் கிளம்பிய பொருளாதார நெருக்கடி அமெரிக்காவின் அடமானமுறை வீட்டுக்கடன் திட்டத்தை (subprime mortgage programme) மூழ்கடித்து விட்டது, இந்தத் திட்டத்தில் கடன் பெற்றவர்களில் பெரும்பான்மையினர் கடனை திருப்பிச் செலுத்தாத காரணத்தால் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அமெரிக்காவின் பிரதான வங்கிகளில் சிலவும் முன்னனி நிதிநிறுவனங்களில் சிலவும் அழிவை சந்தித்துவிட்டன இன்னும் சில அழிவின் விளிம்பில் நின்று ஊசலாடிக் கொண்டிருக்கின்றன, கவர்ச்சிமிக்க சலுகைத்திட்டங்கள் மற்றும் பெரும்குவியலாக லாபம் கிடைக்கும் என்ற பகிரங்க அறிவிப்பு ஆகியவற்றால் தூண்டப்பட்டு சர்வதேச வங்கிகளின் பணமும் நிதிச்சந்தை ஜாம்பவான்களாக விளங்கும் பல பன்னாட்டு நிதிநிறுவனங்களின் பணமும் அமெரிக்காவின் அடமானமுறை கடன் திட்டத்தை நோக்கி குவிந்தன, இந்த திட்டம் படுதோல்வி அடைந்து பல்லாயிரம் கோடி டாலர் இழப்பு ஏற்பட்டதால் இதில் முதலீடு செய்த அமெரிக்க வங்கிகளும் நிதிநிறுவனங்கும் நொறுங்கி வீழ்ந்துவிட்டன, இந்த வங்கிகளும் நிதிநிறுவனங்கும் சர்வதேச அளவில் நிதியியல் தொடர்புகள் வைத்திருந்ததால் இதன் தீயவிளைவு முழு உலகத்திலும் பரவ ஆரம்பித்துவிட்டது, அமெரிக்கா என்ற நோயாளி தும்மியதில் வெளிப்பட்ட நோய்க்கிருமி உலக முழுவதிலும் தொற்றிக்கொண்டு நோயை பரப்பிக் கொண்டிருக்கிறது.
அடமானமுறை வீட்டுக்கடன் திட்டத்தில் (subprime mortgage programme) ஏற்பட்ட இழப்பு அமெரிக்காவைப் பொறுத்வரை 300 பில்லியன் டாலர் என்றும் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்பட்ட இழப்பு 550 பில்லியன் டாலர் என்றும் நிதித்துறை அமைப்புகள் சில மதிப்பீடு செய்துள்ளன. இதனடிப்படையில் இந்த திட்டத்தால் பாதிப்பு அடைந்த நாடுகள் குறிப்பாக செல்வந்த நாடுகளின் அரசுகள் நிதிச்சந்தை குறித்த நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்காகவும் நிதிநிறுவனங்களின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு உயிரூட்டுவதற்காகவும் கோடிக்கணக்கான டாலர் பணத்தை ஒதிக்கியிருக்கின்றன, உண்மையாகக் கூறவேண்டுமானால் பிரிட்டன் அரசு செய்ததைப்போல சிலநாடுகள் தங்கள் நாட்டிலுள்ள சில பெரிய வங்கிகளை தேசியமயமாக்கும் நடவடிக்கûயில் இறங்கியிருக்கின்றன.
முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடித்தளம் என்று கருதப்படும் தாராள வர்த்தகம். தடையற்ற வர்த்தகம் என்ற தாரகமந்திரம் தவிடுபொடியான கதையை நாம் கண்கூடாகக் காண்கிறோம், இவ்விரு கோஷங்களும் முதலாளித்துவவாதிகளின் அடிப்படை நம்பிக்கையாக விளங்கிவந்தன, நிதித்துறை நடவடிக்கைகளில் காணப்படும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கிவிட்டு நிதிச்சந்தையில் எத்தகைய கட்டுப்படுகளும் இருப்பதை தடைசெய்யும் சட்டத்தை டிசம்பர் 1999 ல் அமெரிக்கசெனட் கொண்டுவந்தது, முதலாளித்துவ கொள்கையை தலமையேற்று நடத்திச்செல்லும் அமெரிக்காவிலேயே இந்தத் தவறான கொள்கையின் தீயவிளைவு வெளிப்பட ஆரம்பித்தது, அடமானமுறை வீட்டுக்கடன் திட்டத்தில் சிக்கி நெருக்கடிக்கு உள்ளாகியிருந்த அமெரிக்க வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் ஆகியவை வினியோகம் செய்திருந்த பங்குப்பத்திரங்களை கொள்முதல் செய்துகொள்வதன் மூலம் தங்களின் பொருளாதாரத்தை ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்காக அமெரிக்க அரசுக் கருவூலகத்தின் செயலாளர் (US secretary of govt. treasury) ஹென்ரி பால்ஸன் (Henry Paulson) கொண்டு வந்த திட்டத்திற்கு 700 பில்லியன் டாலர் பெய்லவுட் (bailout) தொகையாக ஒதுக்குவதற்கு அமெரிக்க செனட்டும் அமெரிக்க காங்கிரஸýம் அங்கீகாரம் அளித்ததின் மூலமாக நிதிச்சந்தையில் அமெரிக்கஅரசு தலையீடு செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டது, இத்திட்டம் அக்கீகரிக்கப்பட்ட சில நிமிடத்திலேயே கருவூலக செயலாளர் அதை நடைமுறைப் படுத்திவிட்டார், நிதித்துறையில் அரசு எந்தவிதமான தலையீடும் செய்யக்கூடாது என்ற முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படைக் கொள்கை இப்போது மீறப்பட்டிருக்கிறது, இதன்மூலம் முதலாளித்துவ சித்தாந்தத்தை உலகம் முழுவதிலும் நடைமுறைப்படுத்தும் திட்டத்திற்கு தலைமை ஏற்றுள்ள அமெரிக்காவும் பிரிட்டனும் அதன் கொள்கைக்கு முரண்பாடாக செயல்பட்டிருக்கினறன, பொதுவுடமை கோட்பாட்டின் அடிப்பûயிலுள்ள கம்யூனிஸம் தோல்வியுற்று புதையுண்டு போன அதே முறையில் இப்போது முதலாளித்துவமும் மரணப்படுக்கையில் கிடக்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது.
அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் ஏற்பட்ட இந்த நிகழ்வுகளின் காரணமாக உலக நாடுகள் முழுவதிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன, ஐரோப்பாவின் பிரதான நாடுகளான பிரிட்டன். பிரான்ஸ். ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகியவை நிதித்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை ஆய்வு செய்வதற்காக முறையான சந்திப்புகள் நடைபெறவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன, அதுபோலவே G7 (ரஷ்யாவை இதில் சேர்த்துக்கொண்டால் G8 நாடுகள்) நாடுகளின் நிதியமைச்சர்களும் மத்திய வங்கிகளின் மேலாளர்களும் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் சந்தித்து விரிவான ஆய்வு நடத்தவேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சிகள் முதலாளித்துவ பொருளாதாரத்தைக் காப்பாற்றுமா?
முதலாளித்துவ பொருளாதாரத்தின் தற்போதைய நிலையை உற்றுநோக்கிக் கொண்டிருப்பவர்கள் அது அழிவை சந்தித்துவிட்டது என்பதை அல்லது அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்வார்கள், அதை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக முதலாளித்துவவாதிகள் மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் அனைத்தும் தற்காலிகமான நிவாரணத்தை மட்டுமே ஏற்படுத்தக்கூடும் ஏனெனில் முதலாளித்துவ பொருளாதாரம் நொருங்கிப் போனதற்கு காரணம் அது தவறான அடித்தளத்தின் மீது கட்டமைக்கப் பட்டிருக்கிறது என்பதுதான், மேலோட்டமான சீரமைப்புகளால் அதை ஒருபோதும் காப்பாற்றமுடியாது, முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடித்தளம் தவறானது என்பதற்கு நான்கு காரணங்கள் இருக்கின்றன அவற்றை விளங்கிக் கொள்வது அவசியமாகும்.
1) இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் உருவாக்கப்பட்ட பிரட்டன் உட்ஸ் (Bretton woods) உடண் படிக்கையின் அடிப்படையில் நாணயங்களுக்கு ஏற்புநிறை மதிப்பீடாக(gold standard) தங்கம் மட்டும் இருந்ததை மாற்றி அதற்கு இணையாக அமெரிக்க டாலர் கொண்டுவரப்பட்டது, 1970 க்குப் பின்னர் ஏற்புநிறை மதிப்பீட்டில்(gold standard) தங்கத்தை அறவே நீக்கிவிட்டு முழுக்க முழுக்க அமெரிக்க டாலர் மட்டுமே ஏற்புநிறை மதிப்பீடாக கொண்டுவரப்பட்டது, இதன் மூலமாக அமெரிக்கநாட்டின் காகிதநாணயமான டாலர் தங்கத்திற்கு இணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, இதனடிப்படையில் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்படுகின்ற பாதிப்புகள் இயல்பாகவே உலக பொருளாதாரத்தில் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன ஏனெனில் பல்வேறு நாட்டு நாணயங்களும் செலாவணியில் (exchange) தங்கத்துடன் இணைக்கப்படாமல் அமெரிக்க டாலருடன் இணைக்கப் பட்டிருக்கின்றன, ஐரோப்பாவின் யூரோ நாணயம் அறிமுகப் படுத்தப்பட்ட போதிலும் அமெரிக்க டாலர் பல்வேறு நாட்டு நாணயங்களுடன் இணைக்கப்பட்டிருபதால் தொடர்ந்து அதன் மதிப்பு குறையாமல் இருந்து வருகிறது.
எனவே நாணயங்ளுக்கு ஏற்புநிறை மதிப்பீடாக(Gold standards) தங்கத்தை மறுபடியும் கொண்டு வந்தால் ஒழிய இத்தகைய பொருளாதார பாதிப்புகள் உலக நாடுகளுக்கு தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும், இன்றைய சூழலில் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்படும் வீழ்ச்சி உலக நாடுகளின் பொருளாதாரத்தில் வீழ்ச்சியைக் கொண்டு வருகிறது, அமெரிக்க அரசின் சில கொள்கைகளால்(Policies) அமெரிக்க டாலரில் ஏற்படும் பாதிப்புகள் உலக நாடுகளின் நாணயங்களில் பிரதிபலிக்கிறது, உண்மையைக் கூறவேண்டுமானால் ஏகாதிபத்திய செல்வாக்கு பெற்றுள்ள எந்தவொரு நாட்டின் காகித நாணயமும் தங்கத்தின் மதிப்பு அதற்கு பின்னனியாக கொள்ளப்படா விட்டால் உலகப் பொருளாதாரத்தில் இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துவது இயல்பான விஷயம்தான்.
2) வட்டி அடிப்படையில் கொடுக்கப்படும் கடன்களால் பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடிகள் தோன்றுகின்றன, காலஓட்டத்தில் கடன் கொடுக்கப்படும் தொகையின் மதிப்பு சிறிதுசிறிதாக குறைந்துகொண்டு வருகிறது என்றபோதிலும் தனிமனிதராக இருந்தாலும் சரி அல்லது ஒருநாட்டு அரசாக இருந்தாலும் சரி பலசமயங்களில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது, இதன்காரணமாக பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டு நெருக்கடிகள் பலவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது, மேலும் மத்தியதர வகுப்பினர் கடனைத் திருப்பிச் செலுத்தாத காரணத்தால் நிதித்சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டு பொருட்களின் உற்பத்தியிலும் பெரிய பாதிப்புகள் உருவாகின்றன.
3) இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் பொருளாதாரக் கொள்கையின் காரணமாக பொருளாதார நடவடிக்கை. நிதிச்சந்தை. பங்குச்சந்தை. நிதியியல் உபகரணங்கள் (காசோலை (cheque) வரைவுகாசோலை (demand draft) ரொக்கப்பத்தரம் (cash certificate) போன்றவை) . வர்த்தகப் பொருட்கள். கொடுக்கல் வாங்கள்(business transaction) ஆகியவற்றில் யூகவர்த்தக முறை (speculative trading) பின்பற்றப்படுகிறது, இதனடிப்படையில் பொருட்கள் கையிருப்பில் இல்லாத நிலையில் யூகத்தின் அடிப்படையில் வர்த்தகம் நடைபெறுகிறது, இது முறையற்ற வர்த்தகம் என்பதோடு மிக ஆபத்தான பொருளாதார நடவடிக்கையாகவும் இருக்கிறது, பொருட்களின் விலையில் முறையற்ற ஏற்ற இறக்கம் ஏற்படுவதோடு பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் இது காரணமாக இருக்கிறது, பொருளாதார சந்தையில் அதிர்வுகளை ஏற்படுத்துவதற்கு உடனடி காரணிகளாகவும் உண்மையான பொருளாதாரத்திலிருந்து மக்களை திசை திருப்பிவிடும் தவறான வர்த்தகமுறை (wrong commercial practice)) யாகவும் இருக்கிறது, லாபநஷ்டங்கள் யூகத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவதால் குறைகளும் பாதிப்புகளும் சரியான முறையில் அறிந்து கொள்ளப்படாமல் இறுதியில் பெரும் நெருக்கடிகள் எற்பட்டு விடுகின்றன.
4) மிகமுக்கியமான விஷயம் என்னவென்றால் கிழக்கு நாட்டவராக இருந்தாலும் அல்லது மேற்கு நாட்டவராக இருந்தாலும் சொத்துரிமை தொடர்பான எதார்த்தமான உண்மைகள் பற்றிய அறிவை பெறாதவர்களாகவே இருக்கிறார்கள், பொதுவுடமைக் கோட்பாட்டிலிருந்து தோன்றிய கம்யூனிஸ சித்தாந்தம் (communist ideology)அனைத்து சொத்துக்களின் உரிமைகளையும் அரசுடமை ஆக்கியிருக்கிறது எனவே தனிமனிதர் எவரும் எத்தகைய சொத்துக்களையும் அடைந்துகொள்ள முடியாது, அதேவேளையில் முதலாளித்துவ சித்தாந்தம் (capitalist ideology) சொத்துரிமை அனைத்தையும் தனியார்மயம் ஆக்கியிருக்கிறது மேலும் தனிமனிதரின் சொத்துரிமையில் அரசு எந்தவிதமான தலையீடு செய்யாதவாறு தடை செய்யப்பட்டுள்ளது ஏனெனில் இந்த சித்தாந்தம் தாராள வர்த்தகக் கொள்கையை ஆதரிப்பதோடு உலகமயமாக்கல் என்ற கோஷத்தையும் எழுப்பிவருகிறது.
சொத்துரிமை பற்றிய முழுமையான அறியாமையின் காரணமாக அரசுகளிடம் காணப்படும் தவறான கொள்கைகள் பொருளாதாரத்தில் அதிர்வுகளையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்துகின்றன, ஏனெனில் சொத்துக்களை வைத்துக்கொள்ளும் உரிமை அரசிற்கு மட்டுமோ அல்லது தனிமனிதருக்கு மட்டுமோ உரியதல்ல மாறாக சொத்துரிமையில் மூன்று வகைகள் இருக்கின்றன.
பொதுச்சொத்து :
பூமியின் இயற்கை வளங்களான எண்ணெய் வளங்கள். கனிம வளங்கள். நிலவாயு நிலக்கரி போன்ற எரிபொருள் வளங்கள். மின்சாரம் போன்ற ஆற்றல் வளங்கள். காடுகள் மற்றும் புல்வெளிகள் போன்ற பசுமை வளங்கள். ஆறுகள் மற்றும் கடல்கள் போன்ற நீர் வளங்கள் . பூமிக்குள் இருக்கும் புதையல்கள் ஆகியவை பொதுச்சொத்து இனங்களில் அடங்கும், இவைகளை அரசே நேரடியாக நிர்வாகம் செய்து அவற்றிலிருந்து கிடைக்கும் வருவாயில் ஐந்தில் ஒரு பங்கை தன் செலவினங்களுக்கு எடுத்துக்கொண்டு மீதியுள்ள நான்கு பங்கை பொதுமக்கள் நலனுக்காக செலவு செய்யவேண்டும்.
அரசு சொத்து :
அரசினால் வசூலிக்கப்படும் அனைத்து விதமான வரிகளின் (ற்ஹஷ்ங்ள்) மூலம் கிடைக்கும் பணம். தனியார் சொத்து இனங்களில் அடங்காத விவசாயம். வர்த்தகம். கனரக தொழிற்சாலை. ஆயுத தொழிற்சாலை ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் பணம். யுத்த கனீமத் பொருட்களிலிருந்து கிடைக்கும் ஐந்தில் ஒரு பங்கு பணம். இயற்கை வளங்களிலிருந்து கிடைக்கும் ஐந்தில் ஒரு பங்கு பணம் ஆகியவை இதில் அடங்கும், இந்தப் பணம் முழுவதும் அரசு செலவினங்களுக்கும் பொதுமக்கள் நலப்பணிகளுக்கும் பயன்படுத்தப்படும்.
தனியார் சொத்து :
தனிமனிதர்கள் தங்கள் உழைப்பு மூலமாகவோ அல்லது வாரிசுரிமை மூலமாகவோ அல்லது அன்பளிப்புகள் மூலமாகவோ அடைந்து கொள்ளும் அனைத்து சொத்துக்களும் இதில் அடங்கும், ஷரியாவின் விதிமுறைப்படி பொதுச் சொத்துக்களை தனியார் அடைந்து கொள்ள முடியாது அதுபோலவே தனியார் சொத்தையோ அல்லது பொதுச்சொத்தையோ அரசுசொத்தாக மாற்றமுடியாது.
இந்த மூன்று வகை சொத்துரிமைகளும் வெவ்வேறானவை அவை ஒவ்வொன்றும் ஷரியாவின் விதிமுறைப்படியே நிர்ணயிக்கப்படுகின்றன, கம்யூனிஸத்தில் உள்ளது போல் இவை மூன்றையும் ஏகபோகமாக அரசுடமை ஆக்கினாலும் அல்லது முதலாளித்துவத்தில் உள்ளது போல் மூன்றையும் ஏகபோகமாக தனியார்மயம் ஆக்கினாலும் பொருளாதாரத்தில் வீழ்ச்சியும் நெருக்கடியும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும், அனைத்து வகையான சொத்துரிமைகளையும் அரசு எடுத்துக்கொண்டு தனிமனித உரிமைகளைப் பறித்ததால் கம்யூனிஸ பொருளாதாரம் வீழ்ச்சியுற்றது, சோவியத் ரஷ்யாவின் கம்யூனிஸ ஆட்சிக்காலத்தில் எண்ணெய் வளம். கனிம வளம். மற்றும் கனரக தொழிற்சாலை ஆகியவை அரசு நிர்வாகத்தில் இருந்ததால் அதன்மூலம் அதற்கு கணிசமான வெற்றி கிடைத்தது அதேவேளையில் தனியார் வசம் இருக்க வேண்டிய சிறுதொழில். விவசாயம். வர்த்தகம் ஆகியவற்றை அரசு தனக்கு உரிமையாக்கிக் கொண்டு நிர்வாகம் செய்ததால் பெரும் தோல்வி ஏற்பட்டு அந்த அரசு வீழ்ச்சியை சந்தித்தது, அதுபோலவே மேற்கத்திய நாட்டின் முதலாளித்துவ அரசுகளும் தோல்வியின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கின்றன, முதலாளித்துவ நாடுகளில் பொதுச்சொத்துக்கள் தனியார்மயமாக ஆக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் நலனுக்கு பயன்படவேண்டிய பூமியின் அரியவளங்கள் அனைத்தும் ஒரு சில தனிமனிதர்களிடத்தில் குவிந்து கிடக்கின்றன, கனரக தொழிற்சாலைகள். ஆயுத தொழிற்சாலைகள். ஆகியவை தனியாருக்கு சொந்தமாக ஆக்கப்பட்டதால் வர்த்தக சந்தையில் தலையீடு செய்வதிலிருந்து அரசு ஒதுக்கப்பட்டதோடு ஒரு அரசு நிலைத்திருப்பதற்கு உரிய வருவாய் ஆதாரங்களும் அரசின் இயல்பான உரிமைகளும் அதனிடமிருந்து பறிக்கப் பட்டுவிட்டன, தாராள வர்த்தகம். தடையற்ற வர்த்தகம். அரசியல் தலையீடற்ற பொருளாதாரம். உலகமயமாக்கல் ஆகிய கோஷங்களின் பெயரால் இந்த அத்துமீறல்கள் அனைத்தும் அரங்கேற்றப்படுகின்றன, தவறான இந்த பொருளாதாரக் கொள்கை ஏற்படுத்தும் முடிவுகள் தவிர்க்க முடியாததுõ தொடர்ச்சியான வீழ்ச்சி வேகமான அழிவுõ நிதிச்சந்தைகளும் நிதிநிறுவனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக நொறுங்கிவிழும் துயரம். இவைதான் தவறான கொள்கை ஏற்படுத்திய இயல்பான முடிவு.
தவறான பொருளாதாரக் கொள்கையின் விளைவாக அன்று கம்யூனிஸ அரசு வீழ்ந்தது. தவறான பொருளாதாரக் கொள்கையின் விளைவாக இன்று முதலாளித்துவ அரசுகள் வீழ்ந்து கொண்டிருக்கின்றன.எவ்வித சந்தேகமும் இல்லை. இந்தத் துயரங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் அழிவுகளுக்கும் ஒரே மாற்றுத் தீர்வு இஸ்லாம் மட்டுமேõ ஏனெனில் பொருளாதாரத்தில் அழிவுகளை ஏற்படுத்தும் காரணிகள் அனைத்தையும் இஸ்லாம் மட்டுமே தடைசெய்திருக்கிறது.
நாணயங்களுக்கு ஏற்புநிறை மதிப்பீடாக(gold standard) தங்கத்தை மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம் கட்டாயம் ஆக்கியிருக்கிறது, காகித நாணயத்தை அச்சிடும் பட்சத்தில் அதற்கு ஈடான மதிப்பிற்கு தங்கத்தையும் வெள்ளியையும் அரசு இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் மக்கள் விரும்பும்போது நாணயங்களை தங்கமாகவோ அல்லது வெள்ளியாகவோ மாற்றிக் கொள்வதற்கு ஏதுவாக அரசு கருவூலகங்களில் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் இருப்பு இருக்கவேண்டும் என்பதையும் இஸ்லாம் கட்டாயமாக ஆக்கியிருக்கிறது, இதன்முடிவாக ஒரு நாட்டின் நாணயம் மற்றொரு நாட்டின் நாணயத்துடன் பிணைக்கப் படுவதை இஸ்லாம் தடைசெய்துள்ளது, இதனடிப்படையில் ஒரு நாட்டின் நாணயம் இதர நாட்டின் நாணயத்திலிருந்து சுதந்திரமாக இயங்கவேண்டும் என்றும் ஒவ்வொரு நாணயத்திற்கும் நிலையான மதிப்பு இருக்கவேண்டும் என்றும் இஸ்லாம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது.
மேலும் வட்டியை அதன் அனைத்து வடிவங்களிலும் இஸ்லாம் தடைசெய்துள்ளது, தேவையுள்ளவர்களுக்கு எந்தவிதமான வட்டியோ அல்லது கட்டணமோ இல்லாமல் கடனுதவி செய்யவேண்டும் என்பதை இஸ்லாம் கட்டாயமாக ஆக்கயிருக்கிறது, பைத்துல்மால் எனறழைக்கப்படும் அரசு கருவூலகம்(govt. treasury) தேவை உள்ளவர்களுக்கும் விவசாயிகளுக்கும் வட்டியில்லாமல் கடன் கொடுக்கும் வகையில் தனிகணக்கில் பணம் வைத்திருக்க வேண்டும் என்றும் இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது.
இதுபோலவே பொருட்களை கையிருப்பில் வைத்திருக்காத நிலையில் யூகத்தின் அடிப்படையில் விற்பனை செய்வதை இஸ்லாம் தடைசெய்துள்ளது, முறையற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் பங்குப்பத்திரங்கள். நியியல் உபகர்ணங்கள் (செக்.டிரா*ப்ட் போன்றவை) ரொக்கப்த்திரங்கள் மற்றும் டிரைவேடிவ்ஸ்(அசலான மதிப்பு இல்லாத நிதியியல் உபகர்ணங்கள்) ஆகியவற்றில் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்வதை இஸ்லாம் தடைசெய்திருக்கிறது, மேலும் சொத்துரிமை சுதந்திரம் என்ற பெயரில் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கை அனுமதித்துள்ள யூகவணிகம் Lm (speculative trading) போன்றவற்றை மேற்கொள்வதற்கும் இஸ்லாம் தடைசெய்துள்ளது, பொதுச்சொத்து இனங்களில் அடங்குகின்ற எண்ணெய் வளங்கள். கனிம வளங்கள். நிலவாயு போன்ற ஆற்றல் வளங்கள் போன்றவற்றை தனிமனிதர்களோ அல்லது தனியார் நிறுவனங்களோ அல்லது அரசுத்துறை நிறுவனங்களோ தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்வதை இஸ்லாம் தடைசெய்துள்ளது, பொதுமக்களுக்கு சொந்தமான இந்த சொத்துக்களை ஷரியா விதிமுறைகளின் அடிப்படையில் அரசு பராமரித்து வரவேண்டும் என்றும் அவற்றிலிருந்து கிடைக்கும் பலன்கள் பொதுமக்கள் மத்தியில் வினியோகம் செய்யப்படவேண்டும் என்றும் இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது, இவ்வாறாக மனிதனின் வரம்புமீறிய சுயநலத்தினாலும் மனிதநேயத்திற்கு முரண்படும் பேராசைகளாலும் விளையும் அனைத்து பொருளாதார சீரழிவுகளையும் இஸ்லாம் விளக்கிக் கூறியிருப்பதோடு அவற்றைக் குறித்து எச்சரிக்கையும் செய்திருக்கிறது, இஸ்லாம் என்ற இந்த கொள்கை பிரபஞ்சத்தைப் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கும் இறைவனிடமிருந்து வந்துள்ளது அவன் தனது படைப்புகளுக்கு நன்மையானவை எவை என்பதை நன்கு அறிந்தவன்.
(அனைத்தையும்) படைத்த அவன் அறியமாட்டானா? அவன் (தன் படைப்புகளிடத்தில்) மென்மையும் கனிவும் கொண்டவனாகவும் (அவற்றை) நன்கு உற்று நோக்குகிறவனாகவும் இருக்கிறான், ( 67 :14)
முஸ்லிம்களே!
தனது தூதர் முஹம்மது(ஸல்) மூலமாக இஸ்லாம் என்ற உயர்ந்த மார்க்கத்தை உங்களுக்கு வழங்கியிருப்பதால் அல்லாஹ்(சுபு) உங்களுக்கு ஒப்பற்ற கண்ணியத்தை கொடுத்திருக்கிறான்; மேலும் அவன் உங்களை எச்சரிக்கை செய்தும் இருக்கிறான், இஸ்லாத்தின் பொருட்டாகத்தான் அனைத்து சமுதாயத்திலும் சிறந்த சமுதாயமாக உங்களை உயர்த்தியிருக்கிறான், இந்த தீனை முழுமையாக செயல்படுத்துவதில்தான் உங்களுடைய கண்ணியமும் உயர்வும் அடங்கியிருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும், இந்த உயர்வு உங்களுக்கு மட்டும் உரித்தானதல்ல மாறாக அது முழு மனித சமுதாயத்திற்கும் உரித்தானது ஏனெனில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட தவறான கொள்கைகளையும். செயலாக்கஅமைப்புகளையும் (man made systems) பல நூற்றாண்டுகளாக எதிர்த்து நின்று இஸ்லாம் வெற்றி அடைந்திருக்கிறது.
சங்கைக்குரிய குர்ஆனை தடிப்பான அட்டைகளில் மூடி வைத்திருப்பதால் இந்த மகத்தான மார்க்கத்தை நடைமுறைப் படுத்திவிட முடியாது மாறாக இஸ்லாத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதன் சத்திய செய்தியை உலகம் முழுவதற்கும் அழைப்புப்பணி (Daw'ah) மூலம் எடுத்துச்செல்லக்கூடிய கிலா*பாவை அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்களின் முன்மாதிரி அடிச்சுவட்டில் நிர்மாணிப்பதின் மூலமாகவே அதை செய்யமுடியும், மனித சமுதாயத்தின் பாதுகாப்பிற்கும் உயர்வுக்கும் செழிப்பிற்கும் கிலா*பா மட்டுமே உத்திரவாதம் அளிப்பதற்கு ஆற்றல் பெற்றுள்ளது, ஆனால் ஒரு விஷயத்தை நீங்கள் நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் சுகபோகத்தில் மூழ்கி இருப்பீர்கள் எனில் அல்லாஹ்(சுபு) தனது வானவர்களை அனுப்பி கிலா*பாவை நிர்மாணிக்கப் போவதில்லை மாறாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) மதினாவில் இஸ்லாமிய அரசை நிர்மாணித்ததைப் போல் அவர்களது தோழர்களான ஸஹாபா பெருமக்களும் அவர்களை பின்துயர்ந்து வந்த முஸ்லிம்களும் தொடர்ந்து அதை நிலைநிறுத்தியது போல் இஸ்லாமிய அரசை நிர்மாணிப்பதையும் தொடர்ந்து அதை நிலைநிறுத்துவதையும் அல்லாஹ்(சுபு) உங்களுக்கு கடமை ஆக்கியிருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
முஸ்லிம்களே!
உவகை கொள்ளுங்கள். ஏனெனில் அல்லாஹ்(சுபு) வின் திருப்பொருத்தத்தை அடைந்து கொள்ளும் வாய்ப்பபை நீங்கள் பெற்றுள்ளீர்கள். எழுந்து நில்லுங்கள். உங்களை நீங்களே தயார் படுத்திக் கொள்ளுங்கள்õ அல்லாஹ்(சுபு) அருட்செய்துள்ள கூட்டத்தினரோடு இணைந்திருப்பதின் மூலமாக அவனுடைய அருளைத் தேடிக்கொள்ளுங்கள். அல்லாஹ்(சுபு) நமக்கு அதிகாரத்தையும் வாரிசுரிமையையும் வழங்குவதாக வாக்களித்துள்ளான். நபித்துவத்தின் அடிச்சுவட்டில் கிலா*பா ஏற்படும் என்று அண்ணலார்(ஸல்) நமக்கு நற்செய்தி கூறியுள்ளார்கள்.
முஸ்லிம்களே!
மனிதசமுதாயத்திற்கு தலைமை ஏற்பதற்கும் அல்லாஹ்(சுபு) வின் அனுமதி கொண்டு அதை நேர்வழியில் இட்டுச் செல்வதற்கும் உரிய தகுதியை உங்களிடம் மட்டும்தான் அல்லாஹ்(சுபு) வழங்கியுள்ளான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.
இவ்வாறே உங்களை நாம் (நீதி செலுத்தக்கூடிய) நடுநிலைச் சமுதாயமாக ஆக்கியுள்ளோம் மக்கள் மீது நீங்கள் சாட்சியாளர்களாக இருப்பதற்காக ... (2 :143)
முஸ்லிம்களே!
நீங்கள் பின்பற்றுவதற்கு முன்மாதிரியாக அனுப்பப்பட்ட தூதரும்(ஸல்) அவர்களுடைய தோழர்களும் அவர்களை பின்பற்றி வந்த முஸ்லிம்களும் கடந்து வந்த அடிச்சுவட்டை நீங்கள் அறிந்து கொள்ள வில்லையா? அவர்கள் தங்கள் பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்றிய விதத்தை நீங்கள் விளங்கிக் கொள்ள வில்லையா? அல்லாஹ்(சுபு) உங்கள் மீது வாஜிபாக ஆக்கிய கடமையை நிறைவேற்றுவதில் நீங்கள் அசட்டையாக இருந்து விடாதீர்கள். அனைத்து மார்க்கங்களையும் இஸ்லாமிய மார்க்கம் வெற்றி கொண்டே தீரும் என்று அவன்(சுபு) விதித்திருப்பதால் அதன் வெற்றிக்காக உங்களை நீங்களே அர்பணித்துக் கொள்ளுங்கள்.
அல்லாஹ் தன் காரியத்தில் வெற்றியாளனாக இருக்கிறான். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) அறியமாட்டார்கள், (12 : 21)

Subscribe to:
Posts (Atom)