இமாம் அன்வர் அல் அவ்லாகி பணி அமெரிக்க குண்டுகள் மத்திலும் தொடர்கிறது
டாக்டர் அன்வர் அல் அவ்லாகி ஐரோப்பிய மேலாதிக்க பயங்கரவாதத்தை மிகவும் கடுமையாக எதிர்க்கும் முதன்மையான அமெரிக்க இஸ்லாமிய சிந்தனையாளர் என்பது குறிபிடதக்கது யமனில் அமெரிக்க தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டதாக யமனும் , அமெரிக்காவும் கூறி வந்தன , இதனை டாக்டர் அன்வர் அல் அவ்லாகி தானே நேரடியாக மறுத்து இருந்தார் இவரை கொலை செய்யுமாறு அமெரிக்க ஒபாமா நிர்வாகம் கட்டளை இட்டுள்ளது அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் இவரை போலியாக பயங்கரவாதியாக சித்தரிக்க முற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன டாக்டர் அன்வர் அல் அவ்லாகியின் தந்தையான டாக்டர் நசீர் அல் அவ்லாகி அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஒரு மடல் எழுதியுள்ளார் அதில் தனது மகன் நிரபராதி என்றும் அல் கைதா அமைப்புடன் எந்த தொடர்பும் அவருக்கு இல்லை என்றும் போலியாக சோடிக்கப்பட்ட கதைகளை கூறி தனது மகனான டாக்டர் அன்வர் அல் அவ்லாகியை கொலை செய்ய முற்பட வேண்டாம் என்று அவர் குற்றவாளியாக இருப்பின் அமெரிக்க நீதி மன்றத்தின் ஊடாக அதை கையாள வேண்டும் என்றும் கேட்டுள்ளார்
அல்-காயிதாவின் கிளையொன்ரை யமனில் வழிநடத்துவதாக இவர் மீது குற்றம் சாட்டும் அமெரிக்கா தனது இராணுவத்துக்கு இவரை கண்ட இடத்தில் கொலை செய்யுமாறு கட்டளை பிறப்பித்துள்ளது அங்கு “அரேபிய தீபகற்பத்தில் அல்-காயிதா” (Al-Qaeeda in Arabian Peninsula) எனும் அமைப்பை போசிக்கும் நபராக இவரை அமெரிக்கா காண்கின்றது
1971-ம் வருடம் அமெரிக்காவில் பிறந்தவர். அவரது பெற்றோர்கள் யமன் நாட்டைச் சார்ந்தவர்கள். அமெரிக்காவில் வாழ்ந்து வந்தார்கள். இவர் அமெரிகாவில் பிறந்து அமெரிகாவில் பொறியியல் பட்டம் பெற்று பின்னர் மனித வள அபிவிருத்திதுறையில் Phd பட்டம் பெற்றவர் என்பதும் பல காலமாக அமெரிகாவில் ஒரு சிறந்த இமாம்மாகவும் கடமை புரிந்துள்ளார் என்பதும் குறிபிடதக்கது அன்வர் அல் அவ்லாகி அதற்கு முன் 11 வருடங்கள் யமனில் மார்க்கக் கல்வி பயின்றுள்ளார் அவரது தந்தை இவரும் அமெரிக்காவில் டாக்டர் பட்டம் பெற்றவர். யமனில் விவசாயத்துறை அமைச்சராகவும் யமன் ‘ஸான’ பல்கலை கழகத்தின் உபவேந்தராகவும் கடமை புரிந்தவர் என்பது குறிபிடதக்கது விடையம்
நான்கு வருடங்கள் அமெரிக்காவின் சான் டியாகோ நகரில் உள்ள மஸ்ஜிதில் இமாமாகப் பணிபுரிந்து வந்த இவர் அங்கு தொடர் சொற்பொழிவு பிரசங்கம் நிகழ்த்தி வந்தார். தனது துணிவு அறிவு போன்றவற்றால் பிரபலமடைந்த இமாம் . எளிய, அழகான மொழி நடை , சரியான ஆதாரங்களுடன் மிக அழகான நேர்த்தியான பேச்சு. அமெரிக்க முஸ்லிம்கள் மத்தியில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியது இதை அவதானித்த அமெரிக்கா உளவு அமைப்புகள் இவர்மீது குறிவைத்து . இவர் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் பகுதியில் உள்ள ஜோர்ச் வாஷிங்டன் பல்கலை கழகத்திலும் இஸ்லாமிய போதனைகளை மேற்கொண்டார் அமெரிக்க மாணவர்கள் மத்தியில் இவரின் துணிவும் நேர்மையும் செல்வாக்கு செலுத்தியது . பிரசங்கங்கள் பல வடிவங்களில் பதிவு செய்யப்பட்டு இணையத்திலும் பதி வேற்றப்பட்டனஅமெரிக்க உளவுத்துறை அவரை தொடர்ந்து கவனிக்க ஆரம்பித்தது. அவர் மீது பெண்களைத் தொடர்பு படுத்தி போலியான வழக்குகள் பதியப்பட்டது. அது எந்தவித ஆதாரமும் இன்றி குற்றசாட்டுகள் நிராகரிக்க பட்டன , அவர் அது பற்றி கவலைப்படாமல் தனது பணியை தொடர்ந்தார் பின்னர் லண்டனுக்குச் சென்றவர், அங்கு தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். இதுவும் பதிவு களாக வெளிவர, அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் அவருக்கு ஆதரவாளர் வட்டம் பெருக ஆரம்பித்தது. ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்களிடம் பெருத்த தாக்கத்தை அவரது சொற்பொழிவுகள் ஏற்படுத்தின. அவர்களுக்கு இஸ்லாம் முறையான மார்க்க நெறியாக மாறியது. அங்கு பல கண்கள் அவரைக் கண்காணிக்க ஆரம்பித்தது. மேற்கு அரசியலுக்கு எதிரான மனோபாவமும் அதனைத் துணிச்சலுடன் ஒளிவு மறைவின்றிப் பேசும் நேர்மையும் கொண்டிருந்த இமாம் அன்வர் யமனுக்குச் சென்று அங்கேயே தங்கினார். பயங்கரவாதி என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து . செப்டம்பர் 11 தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுடன் அவருக்கும் சம்பந்தம் இருப்பதாய்ப் புது கதை கூறியது அமெரிக்க அரசு . அமெரிக்கா கேட்டுக் கொண்டதற்கிணங்க, யமன் அரசாங்கம் எந்த வித ஆதாரமும் இல்லாமல் அவரைக் கடுங்காவல் சிறையில் அடைத்தது. இரு வருடங்களுக்குப் பிறகு இமாம் அன்வர் விடுவிக்கப்பட்டார்.
வெளியே வந்தவுடன் அவரது பிரசங்கங்களின் வீரியம் மேலும் அதிகமானது. அவரது உரைகள் இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதைக் கண்காணித்து வந்த அமெரிக்கா . நிடால் மாலிக் ஹஸன். அமெரிக்க இராணுவத்தில் மனநல ஆலோசகர்.13 இராணுவ த்தினரை சுட்டு கொன்றார் இந்தச் சம்பவத்துடன் “அன்வருடன் நிடால் மின்னஞ்சல் தொடர்பு கொண்டிருந்தார்” என்று அமெரிக்க கூறுகின்றது . ஆனால் தான் “அவரை இதை செய்ய க் கட்டளை அல்லது ஆலோசனை ஏதும் வழங்கவில்லை ” என்று மறுத்ததுள்ளார் அனால் இமாம் அன்வர் அந்த சம்பவத்தை விமர்சித்துத் தனது இணைய தளத்தில் கட்டுரையொன்று வெளியிட்டார். அதில் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு நிகழ்த்தப்படும் முறைகேடுகளுக்கு எதிரான ஒரு முஸ்லிமின் உணர்வுபூர்வமான எதிர்வினை என்ற கருத்தில் எழுதியிருந்தார் . இன்று தனது பணிகளை யமனில் இருந்து தொடரும் இவர் யமன் இஸ்லாமிய போராளிகளுடன் வாழ்ந்து வருகிறார் இவரை பாதுகாக்கும் பொறுப்பை அங்குள்ள போராளிகள் ஏற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்
இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்கள் ஆங்கில , தமிழ், மொழி இணையங்களின் தொகுப்பாக இங்கு தரப் படுகின்றது
copied and pasted from www.ourUmmah.org and you did not mention writer name
ReplyDeleteஇனியாவது இஸ்லாத்தை தாங்கள் கோப்பிசெய்த இணையத்தளம் கட்டுரையை எழுதியவர் என்பன போன்ற விபரங்க களை குறிபிடவும்
ReplyDeleteok ji
ReplyDelete