இஸ்ரேல் பயங்கரவாத தாக்குதலை மகிழ்ச்சியாக கொண்டாடும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்கள்
leave a comment »
இஸ்ரேலின் முற்றுகைக்கு உட்படுத்தப்பட்டு உணவு , குடிநீர் , மருத்துவ வசதிகள் , மின்சாரம் இன்றி வதைக்கப்பட்டுகொண்டிருக்கும் காஸா மக்களுக்கு நிவாரண பொருட்களை ஏற்றி சென்ற கப்பல்களை ஆக்கிரமிப்பு இஸ்ரேல் தாக்கி 20கும் அதிகமானவர்களை கொலைசெய்தும் 50 தொடக்கம் 60 வரையானவர்களை படுகாயப்படுத்தியுள்ளது ஏனையவர்களில் அதிகமானவர்களை சிறைவைதுள்ளது இந்த சம்பவங்களை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியிரு பாளர்கள் தமது ஆக்கிரமிப்பு படை செய்த கொலை வெறியாட்டத்தை ஆதரித்து வீதியில் இறங்கி ஆரவாரம் செய்து கொண்டாடுவதை இந்த வீடியோவில் பார்க்க முடியும் இந்த மகிழ்ச்சி ஆர்பாட்டம் இஸ்ரேலில் அமைந்துள்ள துருக்கி எம்பசிக்கு முன்னால் கடந்த 31 ஆம் திகதி நடைபெற்றுள்ளது وَلَنْ تَرْضَى عَنْكَ الْيَهُودُ وَلاَ النَّصَارَى حَتَّى تَتَّبِعَ مِلَّتَهُمْ- அல்குர்ஆன் 2:120
Written by poralikall
June 3, 2010 at 4:54 pm
Posted in பலஸ்தீன்
ஆப்கான் , ஈராக் , பாகிஸ்தான் , தற்போது யமனிலும்
with one comment
அமெரிக்க ஆக்கிரமிப்பு படையின் டோன்- Unmanned Drone விமானங்கள் மூலம் அத்துமீறி ஆப்கானிஸ்தானையும் ஈராக்கையும் , பாகிஸ்தானையும் தாக்கும் அமெரிக்க சட்டவிரோத உளவு விமான தாக்குதல்கள் தற்போது யமன் நாட்டையும் தனது கொடூர வேட்டை பற்களால் கொதற ஆரம்பித்துள்ளது எதுவும் அறியாத சிறுவர் சிறுமிகளை தனது பாசிச வேட்டை பற்களால் கொடூரமாக கொன்று இரத்தமும் சதையுமாக குவித்து வருகிறது இங்கு கொலை செய்யபடுபவர்கள் பெண்களும் , எதுவும் அறியாத குழந்தைகளும்தான் அதிகம் அமெரிக்க பாசிச நகரங்களில் ஒரு குழந்தை தவறி விழுந்து விட்டால் ஒப்பாரி வைக்கும் அமெரிக்க , ஐரோப்பிய மாஸ் மீடியாக்கள் இங்கு பிச்சு தூக்கி எறியப்பட்டு சதை வேராகவும் எலும்பு வேராகவும் குவிக்கப்படும் குழந்தைகளை அமெரிக்க பாசிச தேசத்தை நிலை நிறுத்த தேவையான உரமாக பார்கிறது . சில தினங்களுக்கு முன்னர் யமன் நாட்டின் மீது பரந்த அமெரிக்க உளவு விமானங்கள் பயங்கரவாதிகளை தாக்குகின்றோம் என்ற பெயரில் அப்பாவி பெண்களையும் எதுவும் அறியாத குழந்தைகளையும் படு கொலை செய்துள்ளது இந்த தாக்குதல்களில் 13 பெண்களும் 23 சிறுவர் சிறுமிகளும் கொல்லப்பட்டுள்ளனர் புஷ் அமெரிக்கநிர்வாகத்தில் இருந்த 8 வருடங்களில் டோன்- Unmanned Drone மூலம் 45 இராணுவ இலக்குகளை தாக்கியதாகவும் ஒபாமா நிர்வாகத்தில் ஒன்றரை வருடத்துக்கும் குறைவான காலங்களில் 82 இராணுவ இலக்குகளை தாக்கியதாகவும் அமெரிக்க தகவல்கள் கூறுகின்றது இது ஒபாமா யார் என்பதை காட்ட போதுமானது வீடியோ பார்க்க Video Read the rest of this entry »
Written by poralikall
June 1, 2010 at 8:45 pm
Posted in பயங்கரவாதம்
பொருத்தமான பதில் இஸ்ரேலுக்கு வழங்கப்படும்: துருக்கிய பிரதமர் தையிப் அர்பகான்
with 2 comments
காஸாவுக்கு நிவாரண பொருட்களை ஏற்றி சென்ற கப்பல்களை இஸ்ரேல் பயங்கரவாதி தாக்கி 20கும் அதிகமானவர்களை கொலைசெய்தும் 50 தொடக்கம் 60 வரையானவர்களை படுகாயப்படுத்தியுள்ளது இதில் அதிகமானவர்கள் துருக்கிய நாட்டவர்கள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை துருக்கி கொடியுடன் சென்றகப்பல்களை குறிவைத்து தாக்கியுள்ளது என்று குற்றம் சாட்டபட்டுள்ளது சர்வதேச மனிதாபிமான நிவாரண உதவிக்கான அணியை இஸ்ரேல் தாக்கி பலரை கொன்றமைக்கு பொருத்தமான பதில் இஸ்ரேலுக்கு வழங்கப்படும் என்று துருக்கிய பிரதமர் தையிப் அர்பகான்-Recep Tayyip Erdogan தெரிவித்துள்ளார் -Turkish Prime Minister Recep Tayyip Erdogan has vowed a proper response to Israeli attacks on an international convoy which killed dozens of Turkish nationals – இந்த மனித விரோத அரச பயங்கரவாதத்தை பார்த்துகொண்டு நாம் அமைதியாக எந்த பதிலும் இன்றி இருக்கபோவதில்லை என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார் “It should be known that we will not stay silent and unresponsive in the face of this inhuman state terror,” he was quoted as saying by AFP on Monday- , ஐக்கிய நாடுகள் இஸ்தாபனத்தின் பாதுகாப்பு சபையை கூட்டுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்பதுடன் துருக்கி உட்பட பல நாடுகளில் தமது நாட் டுப்படையை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துமாறு கோரி ஆர்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன Read the rest of this entry »
Written by poralikall
May 31, 2010 at 11:13 pm
Posted in பலஸ்தீன்
மனிதாபிமான உதவி கப்பல்கள் மீது இஸ்ரேலிய பயங்கரவாத வெறியாட்டம்
leave a comment »
காஸாவுக்கு நிவாரண் பொருட்களை ஏற்றி சென்ற கப்பல்களை இஸ்ரேல் பயங்கரவாதிகள் தாக்கி பலரை கொலைசெய்துள்ளனர்: முற்றுகைக்கு உள்ளாகியுள்ள காஸா மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமுகமாக சைப்ரஸ் நாட்டின் துறை முகத்திலிருந்து நிவாரண உதவிப் பொருட்கள் கொண்ட ஒன்பது கப்பல்கள் கொண்ட நிவாரண தொகுதியை காஸாவில் இருந்து 65 K.M தூரத்தில் சர்வதேச கடற்பரப்பில் வைத்து இஸ்ரேலிய பயங்கரவாத கடற்படையும் , விமான படையும் சுற்றிவளைத்து இவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது இதில் 6 கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளது ,15 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயம் அடைத்துள்ளதாகவும் இஸ்ரேல் பயங்கரவாத இராணுவம் சற்று முன்னர் அறிவித்துள்ளது ஆனால் கொல்லப்பட்டுள்ளவர்கள் 20 விடவும் அதிகம் என்று இஸ்ரேல ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கப்பல் தொகுதி நேற்று புறப்பட்டு இன்று அதிகாலை காஸாவை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது இந்த கப்பல் தொகுதி முற்றுகைக்கு உள்ளாகியுள்ள காஸா மக்களுக்கு தேவையான மருந்து மற்றும் உணவு பெருட்களை ஏற்றி சென்றுள்ளது மிக மோசமாக தாக்கப்பட்டுள்ள மனிதாபிமான நிவாரண உதவியாளர்கள் 50 நாடுகளிலிருந்து 800 பிரதிநிதிகள் கொண்ட பிரீடம் போளோடில்லா Freedom Flotilla Convoy நிவாரண கப்பல்களை அனுமதிக்க படமாட்டாது என்று இஸ்ரேல ஆக்கிரமிப்பு அரசு கூறிவந்தது இந்த மனிதாபிமான நிவாரண உதவிவை Free Gaza Movement என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது இக்கப்பல்களில் இஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினரான ஹனீன் ஆபியின் தலைமையில் பல இஸ்ரேலிய மனித உரிமை ஆர்வலர்களும் இருந்தனர் என்று கூறப்படுகின்றது. இவர்களை கைது செய்யப் போவதாகவும், பலஸ்தீனர்களை சிறையிலடைப்போம் என்றும் ,வெளிநாட்டவர்களை நாடு கடத்துவோம் எனவும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அரசு எச்சரித்தமை குறிபிடதக்கது.
No comments:
Post a Comment