Wednesday, July 14, 2010

சிலுவை யுத்தம் ஒரு வரலாற்று பார்வை பகுதி 1

பல நூற்றாண்டுகளாக உலகின் வளர்ச்சி பெற்றுவரும் இஸ்லாமிய எழுச்சியை தடுத்து அரசியல் நியாயாதிக்கம் பெற்றுவரும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை அழிக்க வேண்டும் அதற்கு பதிலீடாக கிறிஸ்தவ மத அரசு ஒன்றை நிறுவ வேண்டும் என்ற கிறிஸ்தவ கத்தோலிக்க சமுகத்தை ஐரோப்பாவின் பல போப்பாண்டவயர்கள் உணர்வூட்டி வந்தார்கள் எனிலும் பறந்து விரிந்து வியாபித்திருந்த முஸ்லிம் சாம்ராஜ்யத்தை தாக்குவது என்பது அன்று அவ்வளளவு இலகுவான விடையமான இருக்கவில்லை ஐரோப்பா அன்று எந்த அபிவிருத்தியும் காணாத இருண்ட கண்டமாக இருந்தது.
ஒரு இருண்ட கண்டம் எப்படி அணைத்து அறிவியல் துறைகளிலும் முன்னேரிகொண்டிருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை தாக்கமுடியும் அதனால் சரியான சந்தர்பம் பார்த்து இருந்தது கிறிஸ்தவ உலகம் – கி.பி. 1095-ம் ஆண்டு. போப்பாண்டவராக பதவிக்கு வந்த ஏர்பன் II- Pope Urban II at the Council of Clermont – முஸ்லிம்களை தாக்கி இஸ்லாத்தை வீழ்த்த தகுதியான சந்தர்பமாக கி.பி. 1095-ம் ஆண்டு கால பகுதியை கண்டார் , முஸ்லிம்கள் தமக்குள் மோதிக்கொண்டனர், இஸ்லாம் வணக்க வழிபாடுகளில் மட்டும் பிரகாசித்தது அரசியல், பொருளாதார சமுக கட்டமைப்பு விடையங்களில் பலம் இழந்து கொண்டிருந்தது விரிவாக பார்க்க
அரச தலைவர்கள் தாம் இறைவனின் அடிமைகள் என்பதை மறந்து, சுய இலாபம் கருதி செயல் பட்டுகொண்டிருந்தார்கள் பல நூற்றாண்டு கடின உழைப்பின் விளைவாக அறிவியல், விஞ்ஜானம், பொருளாதாரம் , அரசியல் , இராணுவம் போன்ற துறைகளில் உயர்ந்த இருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை உள்ளிருந்து முஸ்லிம் பெயர் தாங்கிகளும், யூதர்களும் அழித்து கொண்டிருன்தனர் இதை சிறந்த சந்தர்பமாக அனுமானித்த ஏர்பன் II முஸ்லிம்களுக்கு எதிரான யுத்தத்துக்குத் தயாராகும்படி ஒட்டுமொத்த ஐரோப்பா கிறிஸ்துவ சமூகத்தினருக்கும் அழைப்பு விடுத்தார் இந்த யுத்தத்துக்கு சிலுவை யுத்தம் என்று பெயரிட்டார் – The pope called for a “War of the Cross,” or Crusade, to retake the holy lands from the -ஜெருசலத்தை முஸ்லிம்களிடம் இருந்து கைப்பற்ற வேண்டும். இயேசுவின் மரண சுவடுகள் உள்ள பகுதி கிறிஸ்துவர்களின் நிலமாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற இலக்குடன் கிறிஸ்தவ இராணுவம் தயாரிக்கபட்டது.
அந்த கிறிஸ்தவ இராணுவம் ஐரோப்பிய நாடுகளில் இருந்த ஜெருசலம் நோக்கி பாய்ந்தது இதன் பிரதான நோக்கமாக எழுச்சி பெற்று வரும் இஸ்லாத்தை இராணுவ , அரசியல் தளங்களில் தோற்கடிப்பதும், ஆசியாவில் கத்தோலிக்க கிருஸ்தவ மேலாதிக்கத்தை நிறுவி ஐரோபாவின் கட்டுபாட்டில் முஸ்லிம் தேசங்களை கொண்டுவருவதுமாகும் இவரின் அழைப்பு ஐரோப்பிய அரசர்களின் கவனத்தை பெற்றது அன்று அரசர்களின் அரசராக போப் அதிகாரம் பெற்றிருந்தார் . அரசுத்தரப்புப் பிரதிநிதிகள் கலந்து விவாதித்தார்கள்.
ஒட்டுமொத்த கிறிஸ்துவ தேசங்களும் இந்தப் புனிதப்போரில் பங்காற்றியே ஆகவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது 11 நூற்றாண்டின் இறுதியில் கிறிஸ்தவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த போர் 300 ஆண்டுகள் தொடர்ந்த நடைபெற்றுள்ளது.
ஜெருசலத்தை மையமாக வைத்து கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஆரம்பமான இந்த போரை வரலாறு மிக கொடிய போராகவும் கிருஸ்தவ படைகள் முஸ்லிம் பெண்களையும் சிறுவர் சிறுமிகளையும் படு பயங்கரமாக கொன்ற யுத்தமாக குறிபிடுகின்றனர் இந்த யுத்தம் மூன்று கட்டங்களாக நடை பெற்றது முதல் சிலுவைப்போரில் கிறிஸ்தவ உலகம் ஜெருசலத்தை கைப்பற்றியது இரண்டாவது போரில் கட்டத்தில் சுல்தான் ஸலாஹுதீன் ஐயூபி தலைமையில் ஜெருசலம் மீட்கபட்டது இவர் இஸ்லாமிய வரலாறு கண்ட மாபெரும் தளபதி களில் முக்கியமானவர் இவர் ஒட்டுமொத்த மத்திய ஆசியாவையும் கைப்பற்றி சிதறிகிடந்த முஸ்லிம் தேசங்களை ஒன்றிணைத்து மீண்டும் இஸ்லாமிய சாம்ராச்சியத்தை உருவாக்கிய இஸ்லாமிய வரலாறு கண்ட வெற்றி தளபதிகளில் ஒருவர் இரண்டாவது சிலுவைப்போரில் எதிரிகளுக்கு தகுந்த பாடம் புகட்டி எதிரி கைப்பற்றிய மஸ்ஜிதுல் அக்சாவை மீண்டு கைப்பற்றி எதிரிக்கு தோல்விகளை விதியாக மாற்றியவர் இவர் ஒரு அரபியோ அல்லது அன்று கிலாபத் நிர்வாகத்தில் இருந்த துருகியரோ அல்ல இவர் ஒரு அஜமி கேட்- Kurdish- என்ற ஒரு மொழி பேசக்கூடியவர் என்பது குறிபிடதக்கது மூன்றாவது சிலுவைப்போரில் எதிரி ஜெருசலத்தை கைப்பற்றினான்
முதல் சிலுவை யுத்தத்தை பலர் தலைமை தாங்கியுள்ளனர் இவர்களில் முக்கியமானவர் பீட்டர் – Peter the Hermit- என்கிற பாதிரியார் இவர் தலைமையில் யுத்தம் ஆரம்பமானது இவர்தான் முதல் சிலுவைப் போருக்குத் தலைமை தாங்கினார் கி.பி. 1096-ல் மத்திய ஐரோப்பாவிலிருந்து பல பிரிவுகளை கொண்ட படைகளாகப் புறப்பட்டடு திரண்ட படையாக ஜெருசலத்தை நோக்கி முன்னேறத் தொடங்கிய படைகளுக்கு உந்து சக்தியாக இருந்தவர். இவரின் தலைமையில் படைகள் ஐரோப்பாவிலிருந்து 3000 மைல்களுக்கு அப்பால் உள்ள ஜெருசலத்தை நோக்கி திரண்டு குவிந்தது அன்றைய கலீபாவாக இருந்த அல் முஸ்தசிர் பிலாஹ், பாலஸ்தீனை நோக்கிப் போகும் அனைத்து வழிகளையும் தனது படைகளை கொண்டு அடைத்தார், எந்த இடத்தை நோக்கி வந்தாலும் ஜெருசலத்தை நெருங்க விடாமல் எதிரி படைகளை கடுமையாக தாக்கப்பட்டனர்.
இந்த போரில் கிறிஸ்துவர்களின் மாபெரும் தளபதி என்று வருணிக்கப்பட்ட வீரர் ரெஜினால்ட் – உள்பட பெரும்படையணி முஸ்லிம்களிடம் சரணடைந்தது. இவர்களில் பலர் பின்னர் இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டனர் தமது இராணுவத்தின் முக்கியத் தளபதி உள்ளிட்ட பெரும்படை சரணடைந்துவிட்டதால் கிறிஸ்தவ இராணுவம் நிலைதடுமாறியது ஜெருசலேத்தை கைப்பற்றும் எண்ணத்தை கைவிட்டு தாம் தப்பினால் போதும் என்று கருதிய கிறிஸ்தவ படைகள் ஓட்டம் எடுத்தது முதல் சிலுவைப்போரின் முதல் கட்டம் கிறிஸ்துவர்களுக்கு படு தோல்வியில் முடிந்தது.
இதனால் ஆத்திரமும் அவமானமும் கொண்ட ஐரோப்பிய நாடுகள் இரண்டாவது முறையாக ஒரு ஜெர்மானிய திருச்சபைத் தலைவரின் தலைமையில் இன்னொரு பெரிய படையை ஜெருசலேத்தை நோக்கி அனுப்பியது ஆனால் இந்தப் படையால் ஐரோப்பிய தேசமான ஹங்கேரியைக் கூடத் தாண்டமுடியவில்லை. உள்மோதல் ஒழுக்கம் இன்மை காரணமாக ஹங்கேரி படைகளுடன் மோதி தோற்றுப்போனது அதை தொடர்ந்து கி.பி. 1097-ல் ஐரோப்பிய நாடுகளின் கிறிஸ்தவ அரசர்கள் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது முஸ்லிம்களிடமிருந்து ஜெருசலத்தை கைப்பற்றுவது இந்தக் கூட்டமைப்பின் பிரதான திட்டமாக அமைந்தது
கிறிஸ்தவ அரசர்கள் அமைப்பால் சுமார் ஏழரை லட்சம் நபர்களை கொண்ட இராணுவத்தை திரட்டினார்கள் இந்த படை ஜெருசலத்தை கைப்பற்றுவது என்கிற இலக்குடன் அனுப்பப்பட்ட சிலுவை இராணுவம் இது துருக்கியில் உள்ள அண்டியோச்சை -Antioch- முற்றுகையிட்டது இந்த நகரம் மிக பலமான கோட்டை ஒன்றுக்குள் மிகவும் பாதுகாப்பாக அமைந்து இருந்தமையால் சிலுவை படைகளின் சுற்றிவளைப்பு முற்றுகை சுமார் எட்டு மாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்ததும் நகரை வெற்றிகொள்ள முடியவில்லை சிலுவை படைக்கு உணவு போதாமை ஏற்பட்டது இதனால் இறந்தவர்களின் மற்றும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் மனித மாமிசத்தை சமைத்து உண்டது கிறிஸ்தவ படை இந்த சம்பவம் எந்த அளவு இரத்த வெறியுடன் சிலுவை இராணுவம் இருந்தது என்பதை காட்டுகின்றது.
இந்த நிலை தொடரும்போது துருக்கியின் வடபகுதியில் இருந்து முஸ்லிம் இராணுவம் ஒன்று நகரை பாதுகாக்க புறபட்டடுள்ளது என்ற தகவல் சிலுவை படைக்கு எட்டியது அதேவேளை அண்டியோச் நகர கோட்டையின் தளபதியாக இருந்த பைரூஸ் என்பவன் சிலுவை படைக்கு விலைபோனான் கோட்டைக்குல் கிறிஸ்தவ சிலுவை படை நுழைய தேவையான துரோகத்தை செய்தான் கோட்டைக்குள் நுழைந்த சிலுவை படை பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை வெட்டி வீழ்த்தியது . அதை தொடர்ந்து வெற்றி வெறியுடன் தொடர்ந்தும் ஜெருசலத்தை நோக்கி முன்னேறிச் சென்றது
இரண்டாவது சிகப்பு சிலுவைப் படை ஜெருசலத்தை சுற்றிவளைத்தது கண்களில் பட்ட முஸ்லிம்கள் அனைவரையும் வெட்டி வீசியது முஸ்லிம் புத்திஜீவிகளை பிடித்து அவர்களை கால்களை இரண்டு குதிரைகளில் கட்டி குதிரைகளை இரண்டு திசை களில் வேகமாக ஓட்டி இரண்டு துண்டுகளாக கிழித்து போட்டது பெண்களை கூட்டம் கூட்டமாக கற்பழித்தது சிறுவர்களை தூக்கி விசி அடித்து கொன்றது. முஸ்லிம் படை செயல் இழந்தது முஸ்லிம்கள் மஸ்ஜிதுல் அக்சாவுகுள் Dome of the Rock, the mosque of al-Aqsa- நுழைந்து அபயம் தேடினர் அங்கும் கதவுகளை உடைத்து கொண்டு சிலுவைகளுடனும் பைபில்களுடனும் நுழைந்த சிலுவை படை எவரையும் உயிருடன் விடவில்லை அனைவரையும் கொன்றது கணவன் முன் மனைவியை கூட்டு பாலாத்காரம் செய்தது தாயிடமிருந்து சிசுக்களை பறித்து எடுத்து மஸ்ஜிதின் தூண்களின் மீது சிசுக்களின் தலைகளை அடித்து சிதறடித்து மேற்கு வரலாற்றின் பிரகாரம் ஜெருசலத்தில் எந்த முஸ்லிமும் இல்லாது அழிக்கபட்டனர் கிறிஸ்தவ படைகள் சென்ற இடமெல்லாம் மனித உடல்கள் குவிந்து கிடந்தது என்று வரலாறு கூறுகின்றது.
முஸ்லிம்களை வயது வித்தியாசம் இன்றி கொல்வதை கிறிஸ்தவ ஆன்மிக பலம் பெற உதவும் என்று கருதினர் வயோதிபர்கள், நோயாளிகள் , குழந்தைகள் , பெண்கள் என்ற எந்த வேறுபாடும் இருக்கவில்லை லட்சகணக்கில் முஸ்லிம்கள் கொல்லப்படனர் சொத்துகள் அனைத்தயும் கொள்ளையிடப்பட்டது முஸ்லிம்களில் அறிவியல் கண்டுபிட்புகள் அனைத்தும் களவாட பட்டது பிரமாண்டமான பல நூல் நிலையங்கள் எரித்து அழிக்கப்பட்டது அங்கு இருந்த லட்ச கணக்கான அறியியல் விஞ்ஜான நூல்கள் அழிக்கப்பட்டது
ஜெருசலத்தின் மஸ்ஜிதுகளில் கிறிஸ்தவ இராணுவத்தின் குதிரைகளின் அரைவாசிக் கால்கள்- முழங்கால் -புதையும் அளவுக்கு முஸ்லிம்களின் இரத்தம் ஓட்டப்பட்டுள்ளது என்று வரலாறு பதிய தவறவில்லை இவ்வாறு சிலுவை படைகள் ஜெருசலத்தை கைப்பற்றி இரண்டாம் சிலுவை போரில் வெற்றி பெற்றது இத்தனையும் நடைபெறும்போது முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் கலிபா அழுதுகொண்டிருந்தார் என்பது உண்மையான வரலாறு நிர்வாக தவறுகளை யார் விட்டாலும் அதன் விளைவு மிக பெரியதாக இருக்கும் என்பதை தான் இந்த சம்பவம் எடுத்து காட்டுகின்றது – தொடரும் ……

No comments:

Post a Comment