இரண்டு தீமைகளில் சிறிய தீமையை செய்யலாம் என்பதால் வாக்களிக்கலாமா – இஸ்லாமிய பார்வை
ஜனநாயகம் இஸ்லாத்திற்கு விரோதமனாது என்பதை நன்கு உணர்ந்தும், இஸ்லாத்திலும் இருந்து கொண்டு ஜனநாயக பதாகையை ஏந்தி கொண்டிருக்கும் முஸ்லீம்கள் தங்கள் வாதத்துக்கு வலுசேர்க்க இரண்டு தீமைகள் காணப்படும் போது சிறு தீமையை ஆதரிக்கலாம் என்ரு கூறுகின்றனர். பிரபல இஸ்லாமிய தலைமைகள் என கருதப்படும் சிலரும் இக்கருத்தை ஆதரிப்பது தான் விநோதம்.ஜனநாயகம் தவிர மாற்று தீர்வே இல்லை எனும் தொனியில் ஜனநாயகத்தை எப்படியாவது இஸ்லாமிய முலாம் பூசி இஸ்லாமிய ஜனநாயகம் என நிலைநாட்ட துடிப்பது உண்மையில் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கும் இறைதூதரின் வழிமுறைக்கும் மாறாகவே இருக்கின்றது. பெருமானார் (ஸல்) அவர்களுக்கு குறைஷிகளுடன் அதிகார பகிர்வு செய்ய வாய்ப்பு கிடைத்த போது அல்லாஹ் அதை மறுத்து " இறை நிராகரிப்பாளர்களே நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்க மாட்டேன், நான் வணங்குபவற்றை நீங்கள் வணங்க மாட்டீர்கள்................ உங்களுக்கு உங்கள் வழிமுறை, எங்களுக்கு எங்கள் வழிமுறை " என்று அல்லாஹ் வசனத்தை தெளிவாக இறக்கி அதிகார பகிர்வு நிராகரிப்பாளர்களுடன் சாத்தியமில்லை என்று தெளிவுபடுத்துகிறான்.ஆனால் இரண்டு தீமைகளில் ஒன்றை தேர்ந்தெடுப்பது என்பது அது இஸ்லாமிய அடிப்படையில் சரியா தவறா என்று ஆராய்வதோ இல்லை எது வரை அவ்வழியில் அல்லது எந்தெந்த நிலைகளில் அதில் ஈடுபடலாம் என்றோ தெளிவுபடுத்தாமல் இரண்டும் தீமை தான் இருந்தாலும் அதில் சிறிய தீமையை தேர்ந்தெடுப்பதன் மூலம் சமூகத்திற்கு நன்மை கிடைக்கும் என வாதிடுகின்றனர்.இரண்டு தீமைகளில் சிறியதை தேர்ந்தெடுப்பது என்பது எப்போது சாத்தியப்படும் என்றால் இரண்டு தீமைகளூம் இஸ்லாத்தால் விளக்கப்பட்டு எது சிறிய தீமை என்பதும் சொல்லப்பட்டிருக்க வேண்டும் அல்லது குரான் சுன்னாவின் அடிப்படையில் தெளிவுபடுத்தப்பட வேண்டும். உதாரணத்துக்கு பசியால் சாகும் தருவாயில் விலக்கப்பட்டதும் அனுமதிக்கப்பட்ட உணவாக மாறுவது போல். உதாரணத்துக்கு1. நாம் சிறிய தீமை என்று நினைப்பது சில வேளைகளில் எதிர்மறையாக முடியலாம். அப்படி சொல்லித் தான் அமெரிக்காவில் முஸ்லீம்கள் 2000-ல் கிளிண்டனுக்கு எதிராகவும் புஷ்ஷுக்கு ஆதரவாகவும் ஓட்டளித்தனர். 2008-ல் ஒபாமாவுக்கு வாக்களித்தனர். விளைவுகள் இன்னும் பயங்கரமாக அல்லவா இருந்தது. இந்தியாவில் கூட பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிராக போராடும் மக்கள் கலை இலக்கிய கழகம் 2006 பாராளுமன்ற தேர்தலில் ஒரு போஸ்டர் ஓட்டினார்கள். எந்த கயவனுக்கு ஓட்டு போட போகிறீர்கள் பாபரியை இடித்தவர்களுக்கா ? அல்லது செங்கல் பூஜைக்காக பள்ளியை திறந்து விட்டவர்களுக்கா?2. வாக்களிப்பதை தவிர வேறு வாய்ப்பிலை எனும் போது நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் வாக்களிக்கலாம். வாக்களிக்காவிட்டால் சிறை செல்ல வேண்டும் அல்லது இறக்க நேரிடும் எனும் சூழ்நிலையில் வேண்டுமானால் வாக்களிக்கலாம். அப்போது கூட வாக்கு சீட்டை செல்லாமலாக்கலாம்.3.வாக்களிப்பாமல் இருப்பதன் மூலம் முடிவுகள் நமக்கு பாதகமாக மாறுவதற்கு நாமே வழிவகுக்கிறோம் என்றும் சிலர் கூறுகினறனர். அப்படியென்றால் நம்மை விட சமூகத்தில் செல்வாக்கு பெற்றிருந்த போதும் ஆட்சி பகிர்வு கிடைத்த போதும் பெருமானார் (ஸல்) அவர்கள் அதை புறக்கணித்ததை முஸ்லீம்களுக்கு பாதகமான முடிவாக கருதுகின்றனரா?4.முஸ்லீம்களுக்கு பயன் என்றாலும் அது ஷரீயாவால் சொல்லப்பட்டிருக்க வேண்டும். மேலும் அது இஸ்லாமிய நெறிமுறையிலேயே நிறைவேற்றப்பட வேண்டும். ஒரு விஷயம் முஸ்லீம்களுக்கு பயனளிக்கும் என்பதை நம் சொந்த அனுமானங்கள் மூலம் நாம் முடிவு செய்வோம் என்றால் அது மனோஇச்சைக்கு அடிமையாவதற்கு சற்றும் குறைவானதல்ல.எனவே குப்ரை அடிப்படையாக கொண்ட ஒரு அரசியல் அமைப்பில் ஓட்டளிக்க ஒரு முஸ்லீமுக்கு அனுமதி இல்லை. ஓட்டளிப்பது எப்படி என்பது மிகப் பெரிய விஷயமல்ல மாறாக எந்த இலக்குக்காக, நோக்கத்துக்காக வாக்களிக்கிறோம் என்பதே இஸ்லாத்தின் பார்வையில் முக்கியமானதாகும்.எனவே குப்ரான ஆட்சி அமைப்பில் பங்கு பெறுவதை விட முஸ்லீம்கள் ஒன்றுபடுதல், தங்களுக்குள் சீர்திருத்தம் மற்றும் பிற மக்களுக்கு இஸ்லாத்தின் பால் அழைப்பு கொடுத்தல், அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தல், ஒடுக்கப்பட்டோருக்காக போராடுதல், இஸ்லாமிய ஆட்சிமுறையின் மேன்மையை மக்களுக்கு எடுத்துரைத்தல், குரான் சுன்னா அடிப்படையில் ஒரு சமூகத்தை வார்த்தெடுத்தல் மூலம் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதே ஒரு முஸ்லீம் அதிக கவனம் செலுத்த வேண்டிய ஒன்றாக இருக்க வேண்டும்
No comments:
Post a Comment