Tuesday, August 31, 2010

“தினமணி”யில் மதவெறிப் பிரச்சாரம்!- தமிழ் பத்திரிகை

“தினமணி”யில் மதவெறிப் பிரச்சாரம்!- தமிழ் பத்திரிகை

தினமணி (26.8.10) ஏட்டில் பாஜக தலைவர் இல.கணேசன் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் தனக்குள்ள முஸ்லிம் வெறுப்பைக் கக்கியுள்ளார். காஷ்மீர் தொட்டு தென்காசி வரை வந்திருக்கிறார். அவ்வளவிலும் அதே துவேஷம்
“இப்போது மன்மோகன் சிங் காஷ்மீருக்கு சுயாட்சி தருவோம் என்கிறார். பாகிஸ்தானுக்கு வேலையே இல்லாமல் அல்வாத்துண்டு போல வெள்ளித்தட்டில் வைத்து வழங்க இசைந்துவிட்டாரே!”- என்று இல.கணேசன் பொருமியிருக்கிறார். காஷ்மீருக்கு மாநில சுயாட்சி தருவது எப்படி அந்தப் பகுதியைப் பாகிஸ்தானுக்கு கொடுப்பதாகும்? பாஜகவுக்கு கூட்டாட்சி முறையில் நம்பிக்கை கிடையாது. அதனுடைய கனவெல்லாம் ஒற்றையாட்சி முறைதான் என்பதை இது அம்பலப்படுத்துகிறது விரிவாக பார்க்க
விஷயம் என்னவென்றால், நமது அரசியலமைப்புச்சட்டத்தின் 370வது பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு இதர இந்திய மாநிலங்களை விடவும் கூடுதல் சுயாட்சி வழங்கியுள்ளது. காரணம், அந்த அடிப்படையில்தான் ஜம்மு-காஷ்மீரை இந்தியாவோடு இணைக்க 1947 அக்டோபரில் ஒப்புக்கொண்டார் முஸ்லிம்கள் அதிகமாக இருந்த அந்த ராஜியத்தின் இந்து மகாராஜா. அந்த அடிப்படையில்தான் அந்த இணைப்பை ஒப்புக்கொண்டார் அந்த ராஜியத்தின் மக்கள் தலைவராகிய ஷேக் அப்துல்லா.
இந்த 370வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று ஆரம்பம் முதலே வம்படி வழக்கடி செய்து வந்தது இன்றைய பாஜகவின் அன்றைய வடிவமாகிய ஜனசங்கம். இதற்கு காங்கிரசிலும் சில சக்திகள் இரையாகின. கொஞ்சங்கொஞ்சமாக ஜம்மு-காஷ்மீரின் சுயாட்சி உரிமைகள் பறிக்கப்பட்டன அல்லது நீர்த்துப்போகச் செய்யப்பட்டன.
இதோ இல.கணேசனின் தலைவர் எல்.கே.அத்வானி “எனது நாடும் எனது வாழ்வும்” எனும் தனது சுயசரிதையில் எழுதியிருப்பதை வாசியுங்கள்.
“வெறுக்கப்பட்ட ‘அனுமதி முறையை’ அரசு ரத்து செய்தது. ஜம்மு-காஷ்மீரில் இந்தியக் குடியரசின் நிறுவனங்களுக்கு இருந்த பல கட்டுப்பாடுகளையும் அது ரத்து செய்தது. இப்படியாக தேர்தல் கமிசன் மற்றும் தலைமைத் தணிக்கையாளர் அலுவலகத்தின் அதிகாரங்கள் அந்த மாநிலத்திற்கும் நீட்டிக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீரின் ‘பிரதம மந்திரி’ எனும் பெயர் ஒழிக்கப்பட்டது. ஆனாலும் ஐம்பதாண்டுகளுக்கு மேலாகியும் “தோல்விதான்” இரண்டு அரசியலமைப்புச் சட்டங்கள் – என்பது பற்றிய நமது கவலை, குறிப்பாக 370வது சரத்து பற்றிய நமது கவலை, இன்னும் போக்கப்படவில்லை.”
விரிந்த சுயாட்சி தருவதாகச் சொல்லி அந்த ராஜியத்தை நம்மோடு இணைத்துக் கொண்ட பிறகு அந்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டது. இதற்கு மூலகாரணம் ஜனசங்கம் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் முஸ்லிம் வெறுப்பு. அந்த மாநில மக்களில் ஆகப்பெரும்பாலோர் முஸ்லிம்கள் என்கிற ஒரே காரணத்தால் இத்தகைய நிலையை எடுக்குமாறு காங்கிரஸ் அரசை நிர்ப்பந்தித்து வந்தார்கள். அதுவும் பல சமயங்களில் அவர்களது நிர்ப்பந்தத்திற்கு பணிந்தது. ஜம்மு-காஷ்மீரின் இந்த இணைப்பு வரலாறை மூடி மறைத்துவிட்டு, 370வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று இப்போதும் விவகாரம் செய்து வருகிறது பாஜக.
ஜம்மு-காஷ்மீரில் இப்போது எழுந்துள்ள பிரச்சனைக்கு மூலகாரணம் இதுவே. இதை இப்போதாகிலும் உணர்ந்து அந்த மக்களின் நியாயமான உரிமைகளை இந்திய அரசு மதிக்க வேண்டும். பறிக்கப்பட்ட அல்லது நீர்த்துப்போகச் செய்யப்பட்ட மாநில சுயாட்சியை அவர்களுக்கு வழங்க வேண்டும். இது எந்த வகையிலும் அங்குள்ள பிரிவினை சக்திகளை ஆதரிப்பதாகாது. உண்மையில் இதுவே அந்தப் பிரிவினை சக்திகளை தனிமைப்படுத்தும். மன்மோகன் அரசு இந்தச் சரியான பாதையில் சற்றே காலடி எடுத்து வைக்கப் பார்ப்பது போலத் தெரிகிறது. உடனே இல.கணேசன் கோஷ்டியார் அதை எதிர்த்துச் சண்டமாருதம் செய்கிறார்கள்.
காஷ்மீர் எனும் அந்த அழகான பள்ளத்தாக்கைத் தொடர்ந்து கலவர பூமியாக்குகிறார்கள் அங்குள்ள பிரிவினைவாதிகள் அல்லது பாகிஸ்தான் ஆதரவாளர்கள் மட்டுமல்ல. ஆர்.எஸ்.எஸ்.பரிவாரமும்தான், அவர்களது இந்த அடாவடிப்போக்கும்தான் என்பதைத் தமிழக மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
காஷ்மீர் முஸ்லிம்களுக்கு எதிராக மட்டுமல்ல இந்தியா முழுக்கவுள்ள முஸ்லிம்களுக்கு எதிராகவும் விஷத்தைக் கக்குகிறார் இல.கணேசன். “மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு எந்தவிதச் சிரமமும் இல்லாமல் பல பாகிஸ்தான்களை உருவாக்கத் துணைபோகிறது. பாரத நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாவட்டங்கள் எனப் பல மாவட்டங்களை அரசே அடையாளம் கண்டு முத்திரை குத்தியுள்ளது. அங்கு வாழும் முஸ்லிம்களுக்கு கூடுதல் வசதிகள். ஏற்கெனவே முஸ்லிம்கள் பெருவாரியாக உள்ள இடங்களில் இந்துக்களுக்கு உள்ள நியாயமான உரிமைகள் பறிபோய்விட்டன” என்று வெறித்தனமாக எழுதியிருக்கிறார் இந்த ஆர்.எஸ்.எஸ். கொடுக்கு.
பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டதற்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், முஸ்லிம் லீக் காங்கிரஸ் ஆகியவை மட்டும் காரணமல்ல. ஆர்.எஸ்.எஸ் இந்து மகாசபை ஆகியவற்றின் முஸ்லிம் எதிர்ப்பும், அவை கிளப்பிவிட்ட மதப் பகைமையும் காரணமே. இவர்களது கொடூர வெறுப்பையும் வெறியையும் கண்டே முஸ்லிம் மக்கள் லீக்கின் பிரிவினைவாதத்திற்கு இரையானார்கள். அந்த வரலாற்று உண்மையை கவனமாக மறைத்துக் கொண்டே இவர்கள் பாகிஸ்தான் பிரிவினை பற்றிப் பேசுகிறார்கள்.
இப்போதும் கூடப் பாருங்கள், முஸ்லிம்களுக்கு ஏதேனும் நன்மைகள் செய்யப் புறப்பட்டால் உடனே “பல பாகிஸ்தான்களை” உருவாக்குகிறது அரசு என்று கூசாமல் வெறித்தனத்தைக் கிளப்புகிறார்கள். இந்தியாவில் பத்து சதவீதத்திற்கும் மேலே முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஆங்காங்கே பிறமதத்தவருடன் கலந்து வாழ்கிறார்கள். அதையே சிதறிக் கிடக்கிறார்கள். எனவும் கூறலாம். இதனால் இந்தியக் குடிமக்கள் என்ற முறையில் தங்களது நியாயமான உரிமைகளை உரத்துப்பேச வழியில்லாமல் வதங்கிக் கிடக்கிறார்கள் என்றும் கூறலாம்.
அதனால்தானே சச்சார் குழுவின் அறிக்கையில் அவர்களது இன்றைய பரிதாப வாழ்வு வெளிப்பட்டுள்ளது. கல்வியில், அரசுப்பணியில், பொது வாழ்வில் அவர்களது எண்ணிக்கைக்கு ஏற்ப இடம் கிடைக்க வில்லை என்கிறது அந்த அறிக்கை. அது மட் டுமல்ல, இந்து மதமாச்சரியம் உள்ள காவல் துறை அதிகாரிகளால் அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்கிறது அறிக்கை. இதைச் சரிசெய்ய சில நல்ல ஆலோசனைகளையும் அது வழங்கியுள்ளது. இவற்றை இன்னும் அமல்படுத்தவில்லை மத்தியிலுள்ள மன்மோகன் அரசு. ஏதோ ஒரு சில நடவடிக்கைகளை எடுக்கப் பார்க்கிறது. அதற்கும் கட்டையைக் கொடுக்கிறது இல.கணேசன் கோஷ்டி.
இவர்களது நோக்கம் எல்லாம் முஸ்லிம்கள் பற்றிய வெறுப்புணர்ச்சியை பாமர இந்துக்கள் நெஞ்சில் விதைத்து இங்கே மதக்கலவரங்களை உருவாக்குவதுதான். இதற்காக முஸ்லிம்களுக்கு அரசு ஏகப்பட்ட சலுகைகளை வழங்குவதாக ஒரு பொய்ப்பிரச்சாரத்தை திட்டமிட்டு நடத்தி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து கலவரத்தை உருவாக்க ஆங்காங்கே கொளுத்திப்போடுகிறார்கள். மசூதிகளுக்கு முன்னால் வேண்டுமென்றே கொட்டடிப்பது முதல் அரசமரத்துப் பிள்ளையாரை வீதிக்கு இழுத்து வந்து விவகாரம் செய்வதுவரை விதவிதமான வேலைகளில் இறங்குகிறார்கள்.
இதன் உச்சமாய் பயங்கரவாதச் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். உதாரணமாக, மாலேகாவின் ஜனநெருக்கடியான பிக்குசவுக் எனும் இடத்தில் குண்டு வெடித்தது. இதில் ஆறு பேர் மாண்டார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது நடந்தது 2008 செப்டம்பரில். இந்தக் கொடூரத்தைச் செய்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தினர் என்று புலனாய்வுகள் சொல்லின. இதைப் பிரமாதமாகத் துப்புதுலக்கி வெளிக்கொணர்ந்தவர் ஹேமந்த் கார்க்கரே எனும் காவல்துறை அதிகாரி. ஆனால், அவரும் அதே ஆண்டு நவம்பரில் நடந்த மும்பைத் தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த மர்மம் இன்னும் விடுபடவில்லை.
“கடந்த பத்து ஆண்டுகாலமாகத் தென்காசி நகரில் எந்த இந்து நடவடிக்கையையும் நடத்த அனுமதியில்லை” என்று அநியாயமாய் பொய் சொல்லியிருக்கிறார் இல.கணேசன். இந்து மக்கள் தங்கள் இயல்பான மதவாழ்வை அங்கு நடத்தித்தான் வருகிறார்கள் என்பது வெள்ளிடை மலை. அனேகமாக, இவருக்குள்ள வருத்தம் 2008 ஜனவரியில் அங்கு ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் ஒரு குண்டு வெடித்ததே, அப்படி அதற்குப் பிறகு நடக்கவில்லையே என்பதாக இருக்கும்! தங்கள் அலுவலகத்திற்கு ஆர்.எஸ்.எஸ்காரர்களே இப்படியொரு குண்டை வைத்துக் கொண்டார்கள்! சங் பரிவாரத்தைச் சார்ந்த 8 பேர் கைதானார்கள். மதக்கலவரத்தைத் தூண்டவே இப்படிச் செய்ததாக வாக்குமூலம் தந்தார்கள்.
இவர்கள் எவ்வளவு பயங்கரமானவர்கள் என்பதை மக்கள் ஒருநாளும் மறந்துவிடக் கூடாது. நல்ல வேளையாக காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் “காவி பயங்கரவாதம்” பற்றியும் எச்சரிக்கை செய்திருக்கிறார். இப்படி ஒருபுறம் இவர்களே பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, மறுபுறம் நமது சகோதரர்களாகிய முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை வளர்த்து வருகிறார்கள்.
இவர்களது மதவெறிப் பிரச்சாரத்திற்கு பாமர இந்துக்கள் பலியாகிவிடக்கூடாது. முஸ்லிம்கள் மீது சங் பரிவாரத்தின் கோபம் எல்லாம் தங்களது வர்ணாசிரமக் கட்டமைப்பிலிருந்து விலகிவிட்டார்களே என்பதுதான். பஞ்சமர்கள், சூத்திரர்கள் மீது இவர்களுக்கு என்ன கோபமோ அதே கோபம்தான் முஸ்லிம்கள் மீதும். இதைப் புரிந்து கொண்டால் போதும் இவர்களது சதி வேலைகளுக்கு யாரும் இரையாகமாட்டார்கள்.
இதில் வருந்தத்தக்க இன்னொரு விஷயம், பொதுவான பத்திரிகை எனும் தோற்றம் காட்டிக்கொண்டு ‘தினமணி’யானது பாஜக வின் மதவெறிப்பிரச்சாரத்திற்கு மேடை போட்டுத் தருவது, அந்த ஏட்டின் வாசகர்கள்தாம் இதைத் தட்டிக்கேட்க வேண்டும்.
நன்றி- www.theekkathir.in

Saturday, August 28, 2010

ரமதான்-வெற்றியின் மாதம்!

ரமதான்-வெற்றியின் மாதம்!
புகழனைத்தும் அகில உலகங்கள் அனைத்தின் அதிபதியாகிய அல்லாவிற்கே உறித்தாகுக. அவனே தனது அருள்மறையில் விவரிக்கின்றான்..
உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). (2:185)
ரமதான் எனும் இப்புனித மாதத்தில் அல்லாஹ்(சுபு) தனது படைப்பினங்களை சோதனைக்கு ஆட்படுத்தி தனது அருட்கொடையைப்பெற ஒரு வாய்ப்பினை வழங்குகின்றான். முஸ்லிம்களின் ஈமானும் இஸ்லாத்தின் மீதான ஈடுபாடும் ஒரே தலைமையின் கீழ் போர்க்களத்தில் எவ்வாறு வெளிப்பட்டது என்பதும் இம்மாதத்தின் ஒரு முக்கிய அம்சமாகும்.
நபிகளார்(ஸல்) அவர்களும் சஹாபா பெருமக்களும் கூட்டாக ஒன்பது ரமதான்களை கடந்து வந்தனர். அக்காலங்களில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன.
அல்லாஹ்(சுபு)ன் கட்டளைகளை உயர்வாகப்போற்றி அதனை மெய்ப்பிக்கப் பாடுபடுவதற்கான மும்மாதிரியாக அவை விளங்குகின்றன. அல்லாஹ்(சுபு)வின் பாதையில் தியாகம் செய்வதற்கும், அவனது கட்டளைகட்கு கீழ்படிந்து அவைகளை மெய்ப்பிக்கப் பாடுபடுவதற்கும் சிறந்த உதாரணங்களாக அச்சம்பவங்கள் திகழ்ந்தன.
மதீனாவிலிருந்த பொய்யர்கள் முஸ்லிம்களின் ஒற்றுமையை குலைப்பதற்கு எண்ணி அல்திரார் எனும் ஒரு மசூதியை கட்டினர். ரமதான் மாதத்தில் தபூக்கிலிருந்து திரும்பிய நபிகளார்(ஸல்) அதனை உடனடியாக இடித்துவிடுமாறு உத்தரவிட்டனர்.
ரமதான் 17ம்நாள் 2ம் ஹிஜிரி அல்லாஹ்(சுபு) பத்ர் போரின் போது முஸ்லிம்கட்குசிறந்த ஒரு வெற்றியை அளித்தான்.
'பத்ர்" போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான். ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.(நபியே!) முஃமின்களிடம் நீர் கூறினீர்: 'உங்கள் ரப்பு (வானிலிருந்து) இறக்கப்பட்டமூவாயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப்போதாதா?" என்று.(ஆல் இம்ரான் 3:123 124)
இஸ்லாமிய வரலாற்றில் இது முதல் போரும் முதல் வெற்றியுமாகும். 313 படைவீரர்கள்2 குதிரைகள் 70 ஒட்டகங்களுடன் நபிகளார் தலைமையில் மதீனாவினின்று சென்றஇஸ்லாமிய படையானது 1000 வீரர்கள் 100 குதிரைகள் 700 ஒட்டகங்களுடன் மக்காவினின்றும்அபு ஜஹல் தலைமையில் வந்த படையை வீழ்த்தியது. அப்போரின் போது இறைவன்நபிகளாருக்கு(ஸல்) வஹீ மூலம் அறிவிக்கின்றான்.
உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது: '(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்" என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான். (8:9)
இதனைக் கேட்ட நபிகளார்(ஸல்) மகிழ்சியுற்று 'ஓ அபூபக்கர்! அல்லாவின் வெற்றி நம்மை வெகுவிரைவில் வந்தடையும். அல்லாவின் மீதாக ஜிப்ரயீல் குதிரையில் வருவதை என்னால் காணமுடிகிறது" என்றனர். இதனைப்போன்றே யூத அரசுக்கெதிரான போரில் வெற்றி பெருவோம் என்பது மட்டுமன்றி இஸ்லாத்தின் ஆதிக்கம் உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் என்பதையும் பல ஹதீத்கள் விளக்குகின்றன. அதற்காக நாம் துஆ செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் முஸ்லிம்கள் அனைவரும் இணைந்து ஒரே உம்மத்தாக நின்று ஒரே இஸ்லாமிய அரசினை நிலைநாட்டி அதன்மூலம் அவ்வெற்றிகளுக்காக பாடுபடவேண்டும் என்பது இஸ்லாம் நம்மீது விதித்த கடமையாகும்.
பத்ர் போரின் வெற்றி முஸ்லிம்களின் இறைநம்பிக்கையை வலுப்படுத்தி மதினாவில் ஒரு வலுவான அரசினை நிலைநாட்டி அதனை அரசியல், ஆன்மீக, ராணுவ மையமாக ஆக்கியது.
ஆறாம் ஹிஜிரி ஆண்டில் வாதி அல் குரா எனுமிடத்தின் அரசியாய் திகழ்ந்தஃபாத்திமா பின் ராபியாவை எதிர்கொள்ள சயித் இப்ன் ஹரிதா அனுப்பப்பட்டார். அதற்குமுன்பு ஒருமுறை அவ்வரசி சயித் தலைமை தாங்கிச்சென்ற குழுமத்தை தாக்கி அவர்களின்பொருட்களை அபகரித்தார். ஃபாத்திமா பின் ராபியா அரேபியப் பகுதிகளில் மிகவும் காவல்மிகுந்த அரசியாகக் கருதப்பட்டார். மேலும் அவர் வெளிப்படையாக இஸ்லாத்தைஎதிர்ப்பவராகவும் அறியப்பட்டார். அவர் ரமதான் மாதத்தில் நடைபெற்ற முஸ்லிம்கட்குஎதிரான போரில் கொல்லப்பட்டார்.
எட்டாம் ஹிஜிரி ரமதானில் ஹ_தைபியா ஒப்பந்தம் மீறப்பட்டதனால் இஸ்லாமியப்படையானது பைசன்டைன் படையை எதிர்த்துப் போரிட்டது.
அரேபிய தீபகற்பத்தில் இறைமறுப்பை அடியோடு அழிக்க எண்ணிய நபிகளார்(ஸல்) ரமதான் மாதத்தில் மக்கா நகரை வெற்றி கொண்டனர். இது இஸ்லாமிய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இதன் பிறகே இஸ்லாம் அரேபியாவில் வலுவாக வேறு}ண்றியது. அச்சமயம் மக்காவின் தொழுவுருவங்களை
அழித்தபிறகு, அரேபியாவின் மற்ற பகுதிகளில் சிறப்பானதாகக் கருதப்பட்ட அல்-லாத், மனாத், சுவா போன்ற தெய்வவுருவங்களும் அழிக்கப்பட்டன.
இவ்வாறாக ரமதான் மாதம் நபிகளார்(ஸல்) அவர்களின் காலத்தில் பல வெற்றிகளைக் கொண்டதாக இருந்தது. நல்லவற்றை ஏற்று தீமையை ஒதுக்கித்தள்ளி தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் அல்லாஹ்(சுபு)வின் வார்த்தைகளை மெய்ப்படுத்திஇஸ்லாமை ஒரு மேன்மையான தீனாக நடைமுறைப்படுத்த விழைந்தனர். நபிகளாரின்(ஸல்) மறைவிற்குப்பிறகு முஸ்லிம்கள் அந்த சுன்னாவை தொடர்ந்தனர். இவ்வாறாகரமதான் மாதம் பல முக்கிய நிகழ்வுகளை தம்மிடத்தே கொண்டதாக இருந்தது.
ஹிஜ்ராவின் 92 ஆண்டுகட்குப்பிறகு ரமதான் மாதத்தில் வடஆப்பிரிக்காவின் உமையத் ஆளுநரான மூசா இப்ன் நுசைர் என்பவர் தன்; வீரமிக்க தளபதியான தாரிக் இப்ன் சையத் உடன் சேர்ந்து ஸ்பெயின், சிசிலி மற்றும் ஃபிரான்சின் ஒரு பகுதியை இஸ்லாமிய அரசுடன்இணைத்தனர். இது அப்பகுதிகளின்(அல்-அந்தலுஸ்) பொற்காலத்தின் தொடக்கமாயிற்று.இங்கு முஸ்லிம்கள் 700 ஆண்டுகட்கும் மேலாக ஆண்டனர்.
682ம் ஹிஜிரி சலாஹ_தீன் அல் அய்யூபி சிலுவைப்போர்ப் படைவீரர்களை சிரியாவினின்றும் விரட்டியடித்து ஆக்கிரமிப்பிலிருந்த அனைத்துப் பகுதிகளையும் ரமதான் மாதத்தில் விடுவித்தார்.
ஹிஜிரி ஏழாம் நு}ற்றாண்டில் மங்கோலியர்கள் ஆசியா முழுவதும் தமது ஆதிக்கத்தை பரப்பினர். செங்கிஸ்கான் தன்னை மனிதகுலத்தின் பாவத்திற்காக தண்டிக்கும் கடவுளின் சாட்டை எனக் கருதினான். 617 ஹிஜிரியில் சமர்க்கண்ட், ரே, ஹம்தான் போன்ற பகுதிகள் அவனின் வாள் வீச்சிற்கு 70,000 மக்கட்கும் மேலானோர் கொல்லப்பட்டனர்.656ஹிஜிரி யில் செங்கிஸ்கானின் பேரனான ஹ_லாகு அப்பேரழிவினைத் தொடர்ந்தான்.இஸ்லாமிய அரசின் தலைநகரான பாக்தாதும் இதிலிருந்து தப்பவில்லை. இப்படையெடுப்பில்1,800,000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கிறிஸ்தவர்களும்முஸ்லிம்களும் சொல்லொணாத் துயரங்கட்கு ஆட்படுத்தப்பட்டனர். மசூதிகளில் மதுபானம்தெளிக்கப்பட்டது. தொழுகைக்கு அதான்(பாங்கு) சொல்வதும் தடைசெய்யப்பட்டது.
இத்தகைய கொடுமைகட்கு மத்தியில் இஸ்லாமிய பகுதிகள் அனைத்துமே அதே நிலைக்கு ஆளாகிவிடலாம் என்ற நிலையில் ஸைபுதீன் குத்ஸ் என்பவர் முஸ்லிம் படையை ஒருங்கிணைத்து ஐன் ஜலுத் எனுமிடத்தில் 26ம் ரமதான் 658ல் மங்கோலியப் படையை வீழ்;த்தினார். இறைவனது உதவியால் கிட்டிய இவ்வெற்றியினால் முழு உலகும் நிம்மதிப்பெருமூச்சுவிட்டது.
இதுவே ரமதான் மாதம் தரும் ஊக்கமாகும். இந்த ஊக்கத்தின் காரணமாகவே நமது முன்னோர்கள் சவாலாகத்தோன்றிய செயல்களையும் செவ்வெனே செய்து முடித்தனர். பகலை போர்க்களத்திலும், இரவை இறைவனிடம் இறைஞ்சியும் அவர்கள் தமது ரமதானை கழித்தனர்.
இன்றைய காலகட்டத்தில் இஸ்லாமிய உலகமானது அன்னிய ஆக்கிரமிப்புகளாலும், தாக்குதல்களாலும், பரவலான ஊழல் மிக்க கொடுங்கோல் ஆட்சியாலும் வியாபிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கட்கு எதிரான போரானது முழு வீச்சில் நடைபெறுகிறது. ஆகவே இறைவனின் விசுவாசிகளே எழுச்சி கொள்வீராக. நபிகளாரும்(ஸல்), சஹாபா பெருமக்களும், தாரிக் இப்ன் சையித், குத்து}ஸ், சலாஹ_தீன் போன்றோரும் காட்டிய வழியில் சென்று வெற்றி காணப்பாடுபடுவீர். இறைமறுப்பாளர்கள் அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் இருந்து, இறைவிசுவாசிகளிடம் அன்புடன் நடந்து முழுமையான நோன்பு நோற்று ரமதானில் இறையருளை பெருவீராக.
அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்(சுபு), கிலாஃபாவை மறுபடியும் நிலைநாட்டி இஸ்லாத்தை உலகெங்கும் பரவச்செய்யும் தலைமுறையில் நம்மை ஆக்கியருள்வானாக. அதற்கான முறையான அடித்தளத்தை அமைக்க நமக்கு ஊக்கமும் சக்தியும் அளிப்பானாக! ஆமீன்!

Saturday, August 21, 2010

பாலஸ்தீன்....

கண்ணிருண்டு அதற்க்கொரு
கதையுண்டு;
விழிப்பிதிங்கி நிற்க்கும்
வரலாறும் விக்கித்துப் போகும்..

கற்களோடு காட்சித்தரும்
கண்மணிகள்;
வெட்கத்தோடு குருதிப் பார்க்கும்
குண்டு மழைகள்..





வளைகுடா....

வளைந்துக் கொடுடா
என்பதின் சூட்சமம்தானோ
வளைகுடா;

வறண்டுப் போன
வாழ்க்கைக்கு
விவசாயம் செய்ய ஏற்ற இடம்
பாலைவனம்....

புனித ரமழான்

கருணையாளா உன்னிடம்.....


கரம் ஏந்தி
கண்ணீர் சிந்துகிறேன்
கருணையாளா உன்னிடம்;

வெருங்கையாய் திருப்பி விட
வெட்கப்படும் என்
மறையோனே!

முட்டியக் கண்ணிர்
பூமியை முத்தமிடுவதற்க்கு முன்னே
தட்டியப் பொடியாய்
தவிடு பொடியாக்குகிறாய் எங்கள் பாவத்தை!

ஒட்டு மொத்த நன்மையும்
தட்டிப் பறிக்க தேவையில்லை என
திறந்து விட்டாய் புனித மாதத்தை!

அடுத்தவரை பதம் பார்த்தே
பழகிப்போன என் நாவை;
அடக்கிவைக்க அற்புதமாய் ஒரு மாதம்!

வேகமாய் ஓடும் நாட்களை எண்ணி
சோகமாய் என் மனம் – விரைவில்
போய்விடுமோ பொக்கிஷமான
புனித மாதம்!

நெற்றியால் பூமியை
முத்தமிட்டு;
முணங்குகிறேன் உன் துதியை!

முட்டி நிற்கும்
முஸ்லிம் சமுதாயத்தை – ஒற்றுமையால்
கட்டிப் போட அருள் செய்வாய்
கருணையாளனே!!

Thursday, August 12, 2010

இஜ்திஹாத் ஒரு நோக்கு!

இஜ்திஹாத் ஒரு நோக்கு!

இஸ்லாம் அல்லாஹ்விடமிருந்து வந்த மார்க்கம் என்பதால் அதன் அடிப்படை மூலாதாரங்களாக அல்குர்ஆன், ஸுன்னா ஆகிய இரண்டு மட்டுமே காணப்படுகின்றன. நபி (ஸல்) அவர்களது மரணத்துடன் பூரணப்படுத்தப்பட்ட இந்த மார்க்கத்தில் மேலதிகமாக ஒன்றைச் சேர்ப்பதற்கோ அல்லது இருக்கின்ற ஒன்றை இல்லாமல் ஆக்குவதற்கோ யாருக்கும் உரிமை இல்லை என்பது மிக முக்கியமான அடிப்படையாகும்.
இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள் கூறும் நடைமுறைப் பிரச்சினைகளை விளங்குவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சி ‘இஜ்திஹாத்’ என்றழைக்கப்படுகிறது.
‘இஜ்திஹாத்’ சொல் விளக்கம்:
‘இஜ்திஹாத்‘ என்ற சொல் ‘ஜுஹ்த்’ (முயற்சி) அல்லது ‘ஜஹ்த்’ (கஷ்டம்) என்ற வேர்ச் சொல்லில் இருந்து பிறந்ததாகும். மொழி ரீதியாக இப்பதம் ஒரு விஷயத்தை நிறைவேற்றுவதற்காக அல்லது ஒரு விஷயத்தை அடைந்து கொள்வதற்காக முயற்சித்தல் அல்லது பாடுபடுதல் என்ற கருத்தைத் தருகின்றது.
இஸ்லாத்தின் பார்வையில் ‘இஜ்திஹாத்’ என்றால் என்ன என்பதற்கு பல்வேறு வரைவிலக்கணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் பின்வரும் வரைவிலக்கணம் மிகப் பொருத்தமானதாகக் காணப்படுகின்றது.
‘இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களின் ஆளமான கருத்துக்களில் இருந்து ஷரீஆ உள்ளடக்கும் நடைமுறைப் பிரச்சினைகளுக்கான தீர்ப்புகளைப் பெறுவதற்கு ஒரு சட்டத்துறை அறிஞர் தனது ஆற்றல்களைப் பிரயோகிப்பதே ‘இஜ்திஹாத்’ ஆகும்.
இவ்விளக்கத்திலிருந்து ‘இஜ்திஹாத்’ பிரயோகிக்கப்பட வேண்டிய பகுதி இஸ்லாமிய சட்டத்துறை (பிக்ஹு) தான் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. நம்பிக்கையோடு தொடர்பான (அகீதா) விஷயங்கள் அல்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் தெளிவாகச் சொல்லப்பட்டிருப்பதால் அவற்றில் இஜ்திஹாதைப் பிரயோகிக்க முடியாது என்பது மிகப் பெரும்பாலான் அறிஞர்களின் நிலைப்பாடாகும்.
அவ்வாறே அல்குர்ஆன் ஸுன்னாவில் ஆதாரம் இல்லாத விஷயங்களை மார்க்கத்தில் உருவாக்கி விட்டு அவற்றை உருவாக்குவதற்கு இஜ்திஹாத் காரணம் என்று கூறமுடியாது. ஏனெனில் அவ்வாறு உருவாக்கப்படும் அனைத்தும் பித்அத்தாகும். பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகளாகும்.
இஜ்திஹாதின் தேவை!
இஜ்திஹாத் இஸ்லாமிய சட்டக் கலையின் ஒரு தவிர்க்க முடியாத தேவையாகும். சட்டத்துறையின் வளர்ச்சியும், விருத்தியும் இஜ்திஹாதிலேயே தங்கியுள்ளது எனலாம். அவ்வப்போது எழும் சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளில் இஸ்லாத்தின் நிலைப்பாட்டை விளக்கி வைப்பது இஜ்திஹாதாகும். இஜ்திஹாதின் வாசல் திறக்கப்படாவிட்டால் நவீன காலப் பிரச்சினைகள் பலவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வது சாத்தியமற்றதாகி இருக்கும்.
இஜ்திஹாதிற்கான நபி (ஸல்) அவர்களின் அனுமதி!
‘தீர்ப்புச் சொல்பவர் (ஹாகிம்), இஜ்திஹாத் செய்து அவரது முடிவு சரியாக அமைந்தால் அவருக்கு இரண்டு கூலிகள் உண்டு. அவரது முடிவு தவறாக அமைந்து விட்டால் அவருக்கு ஒரு கூலி உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அமருப்னுல் ஆஸ் (ரழி), நூல்கள் : புகாரி, முஸ்லிம்)
இந்த ஹதீஸின் மூலம் இஜ்திஹாத் செய்வதை நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டுவதை அவதானிக்கலாம்.
உண்மையில் முஸ்லிம் சமூகம் அறிவியல் துறைகளில் முன்னேற்றமடைவதற்கு வழிவகுத்த காரணிகளில் முக்கியமானதாக இருப்பது இஸ்லாம் இஜ்திஹாதிற்கு அளித்த அங்கீகாரமும் உந்துதலுமே என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.
இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் இஜ்திஹாதிற்கான அனுமதியை வழங்கியதனால் தான் நபித்தோழர்கள் நபியவர்கள் உயிருடன இருக்கும்போதே இஜ்திஹாதில் ஈடுபட்டார்கள்.
1) அஹ்ஸாப் யுத்தம் முடிந்து திரும்பிய நபியவர்கள், ஸஹாபாக்கள் சிலரை பனூ குரைழாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்களை அனுப்பும்போது ‘பனூ குரைழாவில் அன்றி யாரும் அஸரைத் தொழ வேண்டாம்’ எனக் கூறினார்கள். பனூ குரைழாவை நோக்கி செல்லும் வழியில் சிலர் அஸர்த் தொழுகைக்கான நேரத்தை அடைந்து கொண்டார்கள். அப்போது ‘பனூ குரைழாவில் அன்றி யாரும் அஸரைத் தொழ வேண்டாம்’ என்ற நபியவர்களின் ஹதீஸைப் புரிந்து கொள்வதில் அவர்கள் மத்தியில் இரண்டு விதமான கருத்துக்கள் தோன்றின. சிலர் பனூ குரைழாவுக்குச் சென்றுதான் அஸரைத் தொழ வேண்டுமெனப் புரிந்து கொண்டார்கள். எனவே, அங்கு சென்றுதான் அதனைத் தொழுவோம் என்று கூற, மற்றும் சிலர் அவ்வாறல்ல. நேரமாகிவிட்டதால் இவ்விடத்திலேயே தொழ வேண்டுமெனக்கூறி அங்கு தொழுதனர். பின்னர் இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எத்தி வைக்கப்பட்டபோது இரு சாராரில் யாரையும் அவர்கள் கண்டிக்கவில்லை என இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்கள் : புகாரி, முஸ்லிம்)
‘பனூ குரைழாவில் அன்றி யாரும் அஸரைத் தொழ வேண்டாம்’ என்ற ஹதீஸைப் புரிந்து கொள்வதற்காக அவர்கள் இஜ்திஹாத் செய்திருப்பதைக் காணலாம். சிலர் இந்நபிமொழியின் நேரடிக் கருத்தைப் புரிந்து கொள்ள, ஏனையோர் அது கூறும் உள்ளார்ந்த கருத்தைப் புரிந்தார்கள். அதாவது, அஸருத் தொழுகைக்கு அங்கு சென்றடையக் கூடியவாறு வேகமாகச் செல்ல வேண்டுமென்பதே நபியவர்கள் அவ்வாறு கூறியதன் நோக்கம் என்பது அவர்களது நிலைப்பாடாகும்.
2) ஸஹாபாக்களில் இருவர் குளிப்புக் கடமையானவர்களாக இருந்தனர். அவர்களிடம் தண்ணீர் இருக்கவில்லை. அவர்களில் ஒருவர் தயம்மும் செய்து கொண்டு தொழுதார். மற்றவர் தொழவில்லை. இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறிய போது அவர்களில் எவரையும் நபியவர்கள் குறை கூறவில்லை என தாரிக் பின் ஷிஹாப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்கள் : அஹ்மத், நஸாஈ)
3) நபித் தோழர்கள் இருவர் ஒரு பயணத்தில் ஈடுபட்டிருந்தனர். தொழுகைக்கு நேரமாகியது. அவர்களிடம் தண்ணீர் இருக்கவில்லை. எனவே, தூய்மையான மண்ணினால் தயம்மும் செய்தனர். பின்னர் தொழுகையின் நேரம் முடிவடைய முன்னரே நீரைப் பெற்றுக் கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தொழுகையைத் திருப்பித் தொழுதார். அடுத்தவர் திருப்பித் தொழவில்லை. பின்னர் இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபியவர்கள் திருப்பித் தொழாதவரைப் பார்த்து ‘சரியாக ஸுன்னாவைச் செய்தீர். உனது தொழுகை உனக்குப் போதுமானதாகும்’ என்றார்கள். திருப்பித் தொழுதவரைப் பார்த்து ‘உனக்கு இரண்டு தடவைகள் கூலி கிடைக்கும்’ என்று கூறினார்கள் என்று அபூ ஸஈத் அல் குத்ரீ (ரழி) அறிவிக்கிறார்கள். (நூல்கள் : அபூதாவுத், பைஹகீ, ஹாகிம், தபரானீ, தாரகுத்னீ)
மேற்படி மூன்று நிகழ்வுகளும் ஸஹாபாக்கள் இஜ்திஹாத் செய்திருப்பதையும் அதனை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்திருப்பதையும் காண முடிகின்றது. இஜ்திஹாத் செய்வதற்கு நபியவர்களின் அங்கீகாரம் இருந்ததனாலேயே அவர்கள் நபி (ஸல்) அவர்கள் உயிருடனிருக்கும்போது இஜ்திஹாத் செய்தது போன்று அவர்கள் மரணித்த பின்னரும் மிகப்பரந்த அளவில் இஸ்லாமிய சட்டத்துறையில் இஜ்திஹாதைப் பிரயோகித்திருப்பதை ஆதாரபூர்வமான செய்திகளினூடாக அறிய முடிகின்றது.
இஜ்திஹாதின் ஒழுக்கங்கள்!
இவ்வாறான செய்திகளிலிருந்து இஜ்திஹாதுடைய விஷயத்தில் நபித்தோழர்கள் கடைப்பிடித்த சில ஒழுக்கங்களைக் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.
குறிப்பிட்ட ஒரு ஸுன்னாவைப் புரிந்து கொள்வதற்காக நபித்தோழர்கள் முயற்சி செய்து ஒரு முடிவுக்கு வரும்போது அதே ஸுன்னாவைப் புரிந்து கொள்வதில் மாற்றுக் கருத்தைக் கொண்டோரை அவர்கள் பாவிகள் பட்டியலில் சேர்க்கவோ அல்லது அவர்கள் வழிகேடர்கள் என்று கூறவோ முயற்சிக்கவில்லை.
தமது கருத்தை மாற்றுக் கருத்தை உடையோரிடம் திணிக்க முற்படவில்லை.
தமது இஜ்திஹாதின் அடிப்படையில் தமக்கு சரி என்று பட்டதைச் செய்வதில் அவர்கள் பின் நிற்கவில்லை.
இஜ்திஹாதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அவர்களிடையே முரண்பாடுகளையும் பிரிவினைகளையும் தோற்றுவிக்கவில்லை.
இந்த ஒழுங்குகள் ஒவ்வொருவரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவைகளாகும்.
ஆக, இஜ்திஹாத் அல்குர்ஆனையும் ஸுன்னாவையும் புரிந்து கொள்வதற்காக இஸ்லாம் அஙகீகரித்து ஆர்வமூட்டிய ஒரு வழிமுறையாக இருக்கின்றது. அதனை சரியாகப் புரிந்து கொண்டு சரியாக அதைப் பிரயோகிக்க அதற்குத் தகுதியானவர்கள் முயற்சி செய்ய வேண்டும்.
அதற்கு அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

Sunday, August 8, 2010

தமிழ் மொழி ஊடகங்கள் மேற்கு கூறும் கதைகளை தமிழில் மொழிபெயர்க்கும் தன்மையை மட்டும் கொண்டவையா ?

தமிழ் மொழி ஊடகங்கள் மேற்கு கூறும் கதைகளை தமிழில் மொழிபெயர்க்கும் தன்மையை மட்டும் கொண்டவையா ?




ஆப்கானிஸ்தானில் தினமும் பலர் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பு படையால் கொன்று குவிக்கபடுகின்றனர் இதில் குழந்தைகளும் இளம் பெண்களும் தான் அதிகம் ஒரு மாதம் ஒன்றுக்கு 120 வரையிலான பெண்களும் குழந்தைகளும் குண்டுகளாலும் ஏவுகனைகளாலும் கொல்லபடுகின்றார்கள் என்றால் அதில் பல மடங்கு காயபடுகின்றனர்.
இவர்களின் முகம் சிதைக்கப்பட்டவர்கள் கண்களை இழந்தவர்கள், கைகளை இழந்தவர்கள், உடல் முழுவதும் காயங்களால் கோரமாக ஆக்கப்பட்டவர்கள் தாக்கபட்ட பின்னர் மருத்துவம் மறுக்கப்பட்டவர்கள், முறையான சிகிச்சை வழங்கபடாமையால் அவயவங்களை இழக்கும் நிலையில் உள்ளவர்கள் என்று ஆயிரகக்னகான ஆப்கான் பொதுமக்கள் ஆப்கானிஸ்தானில் நிறைந்து வரும்போது அவர்களை பற்றி மேற்கு மீடியாக்கள் திட்டமிட்டு அவர்கள் பற்றிய தகவல்களை புறக்கணிகின்றன அவற்றை youtube போன்ற இணையத்தளங்களில் யாரும் பதிவு செய்தாலும் அவைகள் உடனடியாக நீக்கபடுகின்றன அமெரிக்கா செய்தால் அது கொலையல்ல, மேற்குலக பயங்கரவாதம் அது ஜனநாயகம் என்ற காட்டு சட்டம் பின்பற்றபடுகின்றது விரிவாக
இந்த வருடம் கடந்த ஆறு மதங்களில் மட்டும் 1200 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் -என்று ஆப்கான் மனித உரிமை அமைப்புகள் Afghanistan Rights Monitor தெரிவித்துள்ளன இந்த காலபகுதியில் காயம் அடைந்தவர்கள் இறந்தவர்களைவிடவும் மிகவும் அதிகம் என்று அந்த அறிக்கை கூறுகின்றது இந்த தகவல்களுக்கு மேற்கு ஊடகங்கள் எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை அந்த விபரங்கள் சாதாரண செய்தியாக மட்டும் வெளிவருகின்றன இல்லை அவை திட்டமிட்டு அதன் முக்கியத்துவம் புறக்கணிக்கபடுகின்றது இதை மிக சிறந்த ஊடகவியலாளரான Robert Fisk மேற்கத்திய ஊடகங்கள் சுதந்திரமாக சிந்தித்துப் பார்க்கவேண்டும் அவை பக்க சார்பான போக்கை கைவிடவேண்டும் என பிரிட்டன் ஊடகவியலாளர் தெரிவித்து வருகின்றமை மேற்கின் பக்கசார்பு நிலையை எடுத்து காட்டுகின்றது
அதற்கு மாறாக இஸ்லாத்தில் பெண்களின் நிலை அடிமை நிலைக்கு ஒப்பானது என்றும் பெண்கள் அடைமைபடுத் தபப்டுகின்றனர் என்றும் பெண்களுக்கு இஸ்லாத்தில் எந்த வகையான உரிமைகளும் வழங்கபடுவது இல்லை என்றும் உரிமைகளுக்கு பதிலாக பெண்கள் கொடுரங்களை எதிர்கொள்வதாகவும் சித்தரித்து வருகின்றது இந்த வகையில் கடந்த வருடம் பாகிஸ்தான் தாலிபான்கள் ஒரு இளம் பெண்ணை நடுவீதியில் வைத்து அடித்து துன்புறுத்தும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை ஒளி ஒலி பரப்பியது இது பாரிய உணர்வலைகளை எழுப்பியது இதன் பின்னர் இந்த வீடியோ திட்டமிட்ட முறையில் அமெரிக்க , பாகிஸ்தான் உளவு நிறுவனங்கள் இணைந்து அந்த வீடியோ வை உருவாக்கியது என்று தெரியவந்தது ஆனால் திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்டுள்ளது என்ற செய்தி முக்கியத்துவம் கொடுக்கப் படாமல் புறக்கணிக்க பட்டது இங்கு நான் தாலிபான்களின் நடவடிகளைகளை முழுமையாக ஏற்றுகொண்டவனாக இதை கூறவில்லை.
இங்கு கவனிக்க படவேண்டிய விடையம் இஸ்லாத்தையும் அதன் நாமத்தால் செயல்படுபவர்களையும் இழிவுபடுத்த, பயங்கரவாதிகளாகவும், நாகரீகம் அற்றவர்களாகவும் காட்ட முற்படும் மேற்கு மீடியாக்கள் மேற்குலகின் நாகரீகத்தின் விளைவாக மேற்கில் நடைபெறும் மிகவும் பயங்கரமான கொடூரங்களை முதன்மை படுத்தி காட்ட முன்வருவதில்லை என்பதும் மேற்கு உலகம் மற்ற நாடுகளில் புரியும் பயங்கரவாதம் மேற்கு மீடியாக்களில் முக்கியத்துவம் பெறுவதாக இல்லை என்பதும்தான்
மேற்கு ஊடகத்துறையின் மூத்த பத்திரிகையாளரும் சவூதி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைப் பற்றி பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டவருமான ஜோன் பிராட்லி என்ற ஊடகவியலாளர் மேற்கு ஊடகத்துறை பற்றி இப்படி கூறுகின்றார்
அமெரிக்க ஊடகங்களில் அரபுலக சிறுவர்கள் கொலை செய்யப்படுவது மறைக்கப்படுகிறது. அதே வேளையில் ஒரு சிறுவன் இஸ்ரேலில் இறந்தால் அதற்கான ‘சிறப்புப் பார்வை’ நிகழ்ச்சிகள் அமெரிக்க ஊடகங்களில் அரங்கேறுவதைக் காணலாம். காஸா , மேற்குக்கரைப் பகுதிகளை அமெரிக்க ஊடகங்கள் முன்பு குறிப்பிடுகையில் “Occupied” அல்லது “Occupation” போன்ற வார்த்தைகளைக் குறிப்பிட்டு வந்தது. தற்போது அத்தகைய வார்த்தைப் பிரயோகங்கள் அடியோடு நிறுத்தப்பட்டு “Contested அல்லது Disputed” போன்ற பிரயோகங்களாக மாறுதல் அடைந்திருப்பதைக் காணமுடிகிறது. ஒரு படி மேலே போய் பலஸ்தீனின் அப்பகுதிகளையே “இஸ்ரேல்” என்றே அழைக்கும் ஊடங்களும் அமெரிக்காவில் உண்டு.
இந்த வரிசையில் ஆப்கானிஸ்தானில் கணவரின் வீட்டை விட்டு வெளியேறிய குற்றத்துக்காக, இளம் பெண் ஒருவரின் மூக்கு மற்றும் காது, தலிபான்களால் துண்டிக்கப்பட்ட கொடூரம் ஆப்கானில் நிகழ்ந்துள்ளது என்றும் இந்த இளம்பெண்ணின் பெயர் ஆயிஷா. தற்போது அவருக்கு 18 வயதாகிறது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். பத்து வயதாகும்போதே அவரது தந்தை, தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து ஆயிஷாவை பணத்துக்காக விற்பனை செய்து விட்டார் என்றும். அதற்கு பின், இரண்டு ஆண்டுகளுக்கு நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு கொடுமைகளை சந்தித்தார் என்றும் ஆயிஷா. கணவரின் தந்தை, சகோதரர்கள் உள்ளிட்டோர் ஆயிஷாவை தினமும் கொடுமைப் படுத்தி வந்தனர் என்றும்
அதனால் அங்கிருந்து தப்பிச் சென்றார். ஆனால், இந்த நிம்மதி அவருக்கு நீண்ட நாள் நீடிக்கவில்லை. கடந்தாண்டு அவரது கணவர், ஆயிஷாவை கண்டு பிடித்து விட்டார். ஒருஜ்கான் என்ற இடத்தில் செயல்பட்டு வந்த தலிபான் கோர்ட் முன், ஆயிஷா நிறுத்தப்பட்டார். வீட்டை விட்டு ஓடிப்போன குற்றத்துக்காக ஆயிஷாவின் மூக்கையும், காதையும் அறுக்கும்படி தலிபான் கோர்ட், கடுமையான தண்டனை விதித்தது என்றும்
உயரமான மலைப் பகுதிக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். ஆயிஷாவின் கணவரின் சகோதரரும், மற்றவர்களும் அவரை கீழே படுக்க வைத்து, அசையவிடாமல் பிடித்துக் கொண்டனர். பின், அவரது கணவர் கத்தியுடன் வந் தார். முதலில் ஆயிஷாவின் காதை கத்தியால் வெட்டினார். இதன்பின், அவரது மூக்கையும் துண் டித்தார். வலியால் கதறித் துடித்தார், ஆயிஷா. இறந்து விடுவார் என, நினைத்து அவரை மலைப் பகுதியிலேயே விட்டு, விட்டு போய்விட்டனர்.என்றும் இந்த பெண்ணின் துயரை துடைக்க அமெரிக்க நிறுவனங்கள் பல முன்வந்துள்ளது என்றும் இவர் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சைக்காக அமெரிக்கா பயணமாகின்றார் என்றும் அமெரிக்க டைம்ஸ் முகப்பு படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது இந்த செய்தி எல்லா தமிழ் தளங்களிலும் உலாவருகின்றது
இதன் உண்மை தன்மை வழமைபோன்று போலியாக சோடிக்க பட்டதா என்ற தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை , இங்கு கவனிக்க படவேண்டிய விடையம் தமிழ் மொழி ஊடகங்களிலும் இஸ்லாம், முஸ்லிம்கள் பற்றிய மேற்கு ஊடகங்கள் திரித்து கூறுபவை அப்படியே மாற்றங்கள் ஆய்வுகள் இன்றி மொழிபெயர்க்க படுவதால் இஸ்லாமிய எழுச்சி பற்றிய மிகவும் திரிக்க பட்டதகவல்கள் மட்டும் தமிழ் மொழியில் கிடைக்க பெறுகின்றது உலகில் நடைபெறும் இஸ்லாமிய எழுச்சி அலைகளை சரியான முறையில் தமிழ் மொழியில் வழங்க கிடைக்க பெரும் தகவல்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு சரியான தகவல்களை வழங்க வேண்டிய தவிர்க்க முடியாத தேவை எம் மீது உள்ளது
உதாரணமாக பாகிஸ்தானில் மஸ்ஜிதுகளில் வெடிக்கும் குண்டுகள் இவைகள் முஸ்லிம்களால் முஸ்லிம்கள் கொலை செய்யபடுவதாகவும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் இந்த தாக்குதல்களை செய்து வருவதாகவும் மேற்குலக ஊடகங்கள் கூறிவரும் அதே வேளை பாகிஸ்தானில் பல பொது அமைப்புகளும், இஸ்லாமிய அமைப்புகளும் இவை அமெரிக்க உளவு நிறுவனங்களில் சதி நாச வேளை இவற்றுக்கு விதைகளை விதைப்பவர்கள் மேற்கு உளவு மற்றும் அவர்களின் உள்நாட்டு முகவர்கள் என்பதை ஆதாரங்களுடன் கூறிவருகின்றது – அமெரிக்க புலனாய்வு எழுத்தாளரும் ஊடகவியலாலருமான – Webster Tarpley – பாகிஸ்தானில் நடைபெறும் குண்டு வெடிப்புகளுக்கு காரணம் அமெரிக்கா என்றும் பிளக் வேட்டர் -Black-Water என்ற அமெரிக்காவின் தனியார் இராணுவம் இந்த குண்டுகளை வைப்பதாகவும் தொடர்ந்தும் குற்றம் சாட்டிவருகின்றார்- ஆனால் தமிழ் மொழியில் மேற்கு ஊடகங்கள் கூறுபவை மட்டும் எந்த ஆய்வுகளும் இன்றி மொழிபெயர்க்க படுகின்றது இதனால் தமிழ் மொழியில் செய்திகள் பொய்யான தகவல்களுடன் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் மேற்கின் ஊடக பயங்கரவாதம் தமிழிலும் அரங்கேறுகின்றது
தமிழ் மொழி ஊடகங்கள் பொதுவாக உலக விவகாரங்கள் தொடர்பில் சொந்தமான ஆய்வுகளை கொண்டவை அல்ல மேற்கு கூறும் கதைகளை தமிழ் மொழிபெயர்க்கும் தன்மையை மட்டும்கொண்ட வையாக காணப்படுகின்றமை உண்மையான செய்திகள் தமிழ் மொழி உலகிற்கு தவறி விடுவதுடன் சோடிக்கப்பட்ட போலியான தகவல்களால் தமிழ் மொழி உலகம் ஆதிக்கம்பெறுகின்றது
மீடியாக்களின் பாதிப்புகளை விளங்கிக்கொள்ள டாக்டர் சாகிர் நாயிக் இப்படி கூறினார் ஒரு முஸ்லிம் ஒரு சினிமா படத்தை , பாடலை பார்ப்பதை விடவும் ஆபத்தானது இன்றைய செய்திகளை பார்ப்பது சினிமா படம் , பாடல் என்பன பாவத்தை தூண்டும் பாவங்களாக இருக்க செய்திகளை பார்ப்பது குப்ரை இஸ்லாத்தை நிராகரிக்க தூண்டும் விடயமாக இருக்கிறது என்றார் அந்த அளவுக்கு இஸ்லாத்துக்கும் , முஸ்லிம்களுக்கும் எதிரான தகவல்களை கொண்டதாக இன்றைய செய்திகள் உருவாக்கபடுகின்றது என்பதை நாம் விளங்கி கொள்வதுடன் அவற்றை சரியான உண்மை தோற்றத்துடன் முன்வைக்க முயற்சிக்க வேண்டும் ஒரு முஸ்லிம் இவற்றை பார்க்கும் போது இஸ்லாத்தை நிராகரிக்கும் நிலை ஏற்படுகினது என்றால் இஸ்லாத்தை தெரிந்து கொள்ளாத மனிதர்கள் பார்க்கும்போது எந்த நிலை ஏற்படும் என்பதை இலகுவாக விளங்கிக்கொள்ளமுடியும்

Monday, August 2, 2010

10 அறிஞர்கள்+11 மூடர்கள் =21 மூடர்கள் =ஜனநாயகம்!

10 அறிஞர்கள்+11 மூடர்கள் =21 மூடர்கள் =ஜனநாயகம்!
“என்றோ ஓர் அறிஞன் 10 அறிஞர்களுடன் 11 மூடர்கள் இணையும்போது 21 பேரும் முடர்களாகி விடுகிறார்கள். இதுவே ஜனநாயகத் தத்துவம்” என்று ஜனநாயகத்திற்கு விளக்கம் கொடுத்துள்ளார். அதேபோல் இன்னொரு அறிஞர் “அயோக்கியர்களின் இறுதிப் புகலிடம் அரசியல்” என்று முன் மொழிந்துள்ளார். இந்த இரண்டு அறிஞர்களின் கூற்றுகள் இன்று 100% நிறைவேறிக் கொண்டிருக்கின்றன என்பதை பாராளுமன்ற, சட்டசபை நிகழ்வுகள் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
நாட்டிலுள்ள தாதாக்கள், சாராய வியாபாரிகள், விபச்சார விடுதிகள் நடத்துபவர்கள், போதைப் பொருள் கடத்துகிறவர்கள், ரவுடிகள், முடிச்சுமாறிகள், கிரிமினல்கள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், பிறர் சொத்தை அபகரிப்பவர்கள், மக்கள் சொத்தை சிறிதும் கூச்சநாச்சமின்றி விழுங்குகிறவர்கள்தான் இன்று பெரும்பாலும் முதல்வர்களாக, மந்திரிகளாக, மேயர்களாக, எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி. எம்.சி.களாக தேர்ந்தெடுக்கப்பட்டு, இல்லை விலை கொடுத்து இப்பதவிகளை வாங்கிக் கொண்டு வலம் வந்து ஜமாய்க்கி றார்கள். தவறான வழிகளில் வட்டியும், முதலுமாக பல்லாயிரம் கோடிகளை அதுவும் மக்கள் சொத்தைச் சுருட்டுகிறார்கள்.
“உலகின் அழிவுக்குச் சமீபமாக தகுதியற்றவர்களே அதிகாரத்திற்கு வருவார்கள்’’ என்ற இறுதி இறைத்தூதரின் முன் அறிவிப்பிற்கு ஏற்ப இன்று முற்றிலும் தகுதி அற்றவர்களே ஆட்சி பீடங்களில் அமர்ந்துள்ளனர். பானையில் இருப்பதுதானே அகப்பையில் வரும். அவர்களின் அறிவுக்கு ஏற்றவாறே அவர்கள் ஏற்படுத்தும் சட்டங்கள் அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியுமா?
மக்களிடையே ஒழுக்கக் கேட்டையும், அநீதி அராஜகங்களையும், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இரண்டு கால் மிருக வாழ்க்கையான குடி, கூத்தியா, மிருக சல்லாபம் என மனிதப் புனிதனாக உயர வேண்டிய மனிதனை மனித மிருகமாக்கும் அறிவற்ற சட்டங்களே அமுல் படுத்தப்படுகின்றன.
குடிக்கு அனுமதி, விபச்சாரத்திற்கு அனுமதி, அப்பன் பெயர் தெரியா அப்பாவி குழந்தைகளைக் கொண்ட சமுதாயத்தை உருவாக்கும் வகையில் திருமணமின்றி ஆணும், பெண்ணும் இணைந்து வாழ்வதற்கு சட்டத்தில் அனுமதி, ஏன்? இனப் பெருக்கத்தையே கொச்சைப் படுத்தும் வகையில் ஆணும், ஆணும் இணைந்து வாழ்வதற்கு அனுமதி , பெண்ணும், பெண்ணும் இணைந்து வாழ்வதற்கு அனுமதி இப்படி மனிதனாக வாழ விரும்புகிறவர்கள் எழுதவே கூசும் மிருகங்களுக்குரியவற்றை நடைமுறைப்படுத்தும் நீதிமன்றங்கள், நீதிபதிகள், அரசுகள், அரசு அதிகாரிகள். ஏன்? ஐயறிவு மிருகங்களை விட கேடு கெட்ட நிலை. ஆம்! மிருகங்களில் ஆணும் ஆணும், பெண்ணும், பெண்ணும் இணையும் கேடுகெட்ட நிலையைப் பார்க்க முடியுமா? முடியாதே! மிருகங்களுக்கு ஆகும் ஆகாது, கூடும் கூடாது என்ற விதிமுறைகள் எதுவுமே இல்லை. ஒழுக்க விதிகள் என எதுவுமே மிருகங்களுக்கு இல்லை. இந்த நிலையில் அந்த மிருகங்களே ஈடுபடத் துணியாத மிகவும் கேடுகெட்ட ஓரினப் புணர்வில் ஈடுபடும் ஒழுக்க விதிகளுக்குக் கட்டுப்பட்ட ஆறறிவு மனிதனைப் பற்றி என்ன சொல்ல? அதைச் சட்டமாக்கத் துணியும் நீதி மன்றங்களின், நீதிபதிகளின் இழிநிலை பற்றி என்ன சொல்ல?
ஆட்சியாளர்களிலிருந்து, அரசு அதிகாரிகளலிருந்து, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டக் கடமைப்பட்ட காவல்துறையிலிருந்து, நீதிபதி கள், நீதித் துறையிலிருந்து அனைத்துத் துறையினரும் மக்கள் பணத்தைக் கோடிகோடியாக கொள்ளை அடிப்பதில் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு படு உற்சாகமாகச் செயல்படுகிறார்கள்.
முறை தவறி மக்கள் பணத்தை கோடி கோடியாகக் கொள்ளையடிப்பது ஒரு பக்கம் இருக்க, ன்னொரு பக்கம் கொடுமையான வரிகள் மூலம் மக்களைக் கசக்கிப் பிழிந்து, பெரும்பான்மை மக்களை வறுமைக் கோட்டி ற்குக்கீழே தள்ளி அரசு கருவூத்தில் குவியும் பணத்தையும் இவர்களின் ஆடம்பர, அநாவசிய விழாக்களிலும், இவர்களின் பேர் புகழுக்காகவும், இவர்கள் செய்யும் அட்டூழியங்கள் காரணமாக தங்களின் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஏற்படுத்தப்படும் பல அடுக்குப் பாதுகாப்பு வளையங்கள் இப்படி இவர்களுக்காகவே இப்படிப்பட்ட பல்வேறு காரணங்களுக்காக அரசு கருவூலத்திலுள்ள மக்கள் பணம் வாரி இறைக்கப்படுகிறது.இது போதாதென்று மனித சமுதாயத்திற்கு எந்த வகையிலும் உதவாத அதே சமயம் மாநிலங்களுக்கு மாநிலம், நாட்டிற்கு நாடு போட்டி பொறாமையுடன் வீண் பெருமைக்காக பல்லாயிரம் கோடி மக்கள் பணம் வீண டிக்கப்படுவதற்கு ஆட்சியாளர்கள் காரணமாக இருக்கிறார்கள். ஏழைகள், நடுத்தர மக்களுக்கு பல மணி நேரம் மின்தடை; இவர்களின் வீண் ஆடம்பர விழாக்களுக்கு பல ஆயிரம் யூனிட் மின் திருட்டு. மேலும் உலகளாவிய அளவில் தீவிரவாதமும், மத, இன, பிரதேச, மொழிச் சண்டைகளை உரமிட்டு நீர்ப் பாய்ச்சி அவற்றை வளர்ப்பதிலும் இந்த ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் தான் முன்னணியில் இருக்கிறார்கள்.
ஆட்சியாளர்கள் பிரச்சினைகளை அணுகும் முறைப் பற்றிச் சொல்வதாக இருந்தால் “நனைத்துச் சுமப்பது என்று சொல்வார்களே அது போன்ற நிலைதான். விவகாரங்களை முளையிலேயே கிள்ளி எறியாமல் இருந்து விட்டு காலம் கடந்து அது பெரும் அசுர மரமான பின்னர் பெரும் முயற்சி எடுத்து, அரசு பணத்தை அனாவசியமாக செலவிட்டு கோடரியால் வெட்டிச் சாய்ப்பது போல்தான் அரசு நடவடிக்கைகள் இருந்து வருகின்றன.
இக்காலக் கட்டத்தில் பாதிக்கப்பட்டவர் கள் பொறுமை இழந்து ஆர்ப்பாட்டம், பந்த், சாலை மறியல், பேருந்து, சரக்குந்து ஓடாமை, அதனால் மக்களுக்கும் பெரும் பாதிப்பு, அரசு பொது சொத்துக்களுக்குத் தீ வைப்பு, உடைத்து நாசமாக்குவது என பல்லாயிரம் கோடி நட்ட மான பின்னரே அரசு இயந்திரம் நடவடிக்கையில் இறங்கும். இப்படி எழுத்தில் வடிக்க முடியாத எண்ணற்ற துன்பங்களுக்கு இப்போதைய அரசுகளே காரணமாக இருக்கின்றன. 5%பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதிகள் மேலும் பல்லாயிர கோடிகளைச் சுருட்டவும், 95% மக்கள் மேலும் மேலும் பரம ஏழைகளாகித் துன்பப்படும் வகையில்தான் இந்த அரசுகள் சட்டங்கள் இயற்றுகின்றன.
ஆக, ஜனநாயக ஆட்சி முறை அயோக்கியர்கள் ஆட்சியில் அமர்ந்து மக்கள் பணத்தைப் பல வழிகளில் கொள்ளை அடித்து அவர்கள் உண்டு கொழுக்கவும், ஊதாரித்தனமாக செலவு செய்ய வும் வழிவகை செய்கிறதே அல்லாமல் மக்களுக்கு உரிய பலனைத் தருவதாக இல்லை. ஜனநாயக ஆட்சி மட்டுமல்ல, சர்வாதிகார ஆட்சி, கம்யூனிச ஆட்சி, சோசலிச ஆட்சி என மனிதர்கள் அமைக்கும் எப்படிப்பட்ட ஆட்சியாக இருந்தாலும், மதங்களை வைத்து மக்களை மயக்கி இந்த ஆட்சியாளர்களைப் போலவே மக்கள் பணத்தை உண்டு கொழுத்து உல்லாச ஆபாச வாழ்க்கை வாழும் புரோகிதர்கள் கூறும் மதங்களின் வாழ்க்கை முறையாக இருந்தாலும், மனிதனின் உண்மையான ஈடேற்றத்திற்கு அவை ஒரு போதும் வழி வகுக்கா.
இவ்வுலகிலும் பெருந்தோல்வி, நாளை மறுமையிலும் நரக வாழ்க்கையே பரிசாகக் கிடைக்கும். மனித வாழ்க்கைக்கு மனிதனே சட்டம் அமைப்பது திருடனே திருட்டுக்குத் தீர்ப்பு அளிப்பதாகும். பரீட்சை எழுதும் மாணவனே அதைத் திருத்தி புள்ளிகள் போடுவது போலாகும். தன்னைப் போல் அற்ப அறிவுள்ள ஒரு மனிதன் தயாரித்த ஒரு நவீன கருவியை இயக்க அதைத் தயாரித்த மனிதனின் வழிகாட்டலை எதிர்பார்க்கும் இந்த அற்ப அறிவுள்ள மனிதன், முழுமையான அறிவுள்ள சர்வ வல்லமை மிக்க தன்னந்தனியான, இணை துணை இல்லாத இறைவன் படைத்த மனிதக் கருவியை, படைத்த அந்த இறைவனின் வழிகாட்டலைப் புறக்கணித்து, இந்த அற்ப அறிவுள்ள மனிதனே சுயமாக வழிகாட்டல் அமைத்து அதன்படி நடந்தால் அது உருப்படுமா? அந்த அலங்கோலமே நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது. நிம்மதியற்ற, அமைதியற்ற, துன்பங்கள் நிறைந்த வாழ்க்கையை மனித சமுதாயம் அனுபவித்து வருகிறது.
இந்த பரிதாப துன்ப நிலை மாறவேண்டுமா? அற்ப அறிவுள்ள மனிதர்கள் போட்ட வாழ்க் கைத் திட்டத்தைக் குப்பையில் போட்டுவிட்டு, அகிலங்களையும், அவற்றிலுள்ளவற்றையும் மனிதனையும் படைத்து, உணவளித்து வரும் நிறைவான அறிவையுடைய சர்வ வல்லமை மிக்க ஒரே இறைவனின் வழிகாட்டலை எடுத்து நடக்க மனிதன் முன் வர வேண்டும். இறைவன் ஆரம்பத்திலிருந்து அளித்து வந்த ஹிந்து வேதங்கள், யூத தோரா, கிறித்வ பைபிள், இன்னும் இவை போல அனைத்து வேதங்களும் மனிதக் கரம் பட்டு கலப்படமாகி அவற்றின் தூய நிலையை இழந்து விட்டன.
இறைவனும் முன்னைய அனைத்துக் கலப்படமான வேதங்களையும், அரசுகள் பழைய ரூபாய் நோட்டுகளை செல்லாதவை என ஆக்குவதுபோல், செல்லாதவையாக ஆக்கிவிட்டான். செல்லாத நோட்டுகள் அரசால் நிராகரிக்கப்படுவது போல் முன்னைய வேதங்களும் செல்லாத நிலையில் இறைவனால் நிரகாரிக்கப்படும். இறைவனால் இறுதியாகக் கொடுக்கப்பட்டு, அந்த இறைவ னாலேயே ஒரு புள்ளியும் மாற்றப்படாமல், பாதுகாக்கப்படுவதோடு, அது இறங்கிய அரபி மொழியும் பேச்சு வழக்கில் இருக்கிறது. முன்னைய வேதங்கள் இறங்கிய அனைத்து மொழிகளும் நடைமுறையில் இல்லாமல் செத்த மொழிகளாகிவிட்டன. இது ஒன்றே அவை செல்லத்தக்கவையல்ல என்பதை உறுதிப் படுத்துகிறது. எனவே மனிதர்கள் அனைவரும் இறைவன் கொடுத்த இறுதி நெறிநூலான அல்குர்ஆனை பற்றிப் பிடித்து (3:102,103) அதன் படி நடக்க முன்வந்தால் மட்டுமே உலகம் ஈடேறும். மனிதன் வெற்றி பெறுவான். அல்குர் ஆன் படி தாமும் நடந்து, மற்றவர்களையும் நடத்திச் செல்லக் கடமைப்பட்ட முஸ்லிம்கள் அதன்படி நடக்காததால் மிகக் கடுமையான தண்டனைக்கு ஆளாக இருக்கிறார்கள்.

“மைல் கற்கள்”

திருகுர்ஆன் அமைத்துக் காட்டிய சமுதாயம்
“மைல் கற்கள்” ஷஹீத் செய்யித் குதுப்
இஸ்லாமிய ஆட்சியை மீண்டும் நிலை நாட்டிட வேண்டும்; இஸ்லாத்தின் ஒளியில் முஸ்லிம்களைப் புனரமைத்திட வேண்டும், என விழைவோர் ஓர் வரலாற்று உண்மையை ஊன்றிக் கவனித்திட வேண்டும். இது இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைத்திடவும்; முஸ்லிம்களை முறையாகப் பயிற்றுவித்திடவும் பெரிதும் பயன்படும். வரலாற்றின் ஒரு கால கட்டத்தில் இந்தத திருத்தூது ஒரு பெரும் சமுதாயத்தை உருவாக்கிற்று. அந்த சமுதாயம் நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் என்ற முதல் சமுதாயம்தான்.
இந்த முதல் சமுதாயத்தைப் போன்றதொரு, சமுதாயத்தை வரலாற்றின் பிந்தைய காலக்கட்டத்தில், ஏன் மனித வரலாற்றின், ஒட்டத்தில் இங்கொன்றும், அங்கொன்றுமாக சில மனிதப் புனிதர்கள் தோன்றுகின்றார்கள் என்றாலும், அந்த முதல் சமுதாயத்தைப் போன்றதொரு சமுதாயத்தை நாம் வரலாற்றில் சந்திக்க இயலவில்லை.
அந்த முதல் சமுதாயத்தை உருவாக்கியவை இரண்டு பெரும் பொக்கிஷங்கள்; அவை திருகுர்ஆன், நபி(ஸல்) அவர்களில் சொல், செயல். இந்த திருகுர்ஆன் அன்று போல் இன்றும் நம்மிடம் அப்படியே இருக்கின்றது. அது போல நபி(ஸல்) அவர்களின் வாழ்வின் வாக்கும், அணுவும் திரிபடாமல் நம்மிடம் இருக்கின்றது.
சிலர் இப்படிக் கருதலாம்; அன்று அந்த முதல் சமுதாயத்தினரிடையே நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள். நம்மிடையே அவர்கள் இல்லையே!
இஸ்லாம் என்ற இந்த இறைவழி காட்டுதல் நிலை நாட்டப்படவும், பலன் தரவும் நபி(ஸல்) அவர்கள் இருந்திட வேண்டியது, நிரந்தர தேவை என்றிருந்திருந்தால்,
அல்லாஹ், இஸ்லாம்தான் இந்த உலகம் உள்ளளவும் மனித இனத்திற்கு உள்ள இறுதி இறைவழி காட்டுதல் என்றாக்கி இருக்கமாட்டான். திருகுர்ஆனை இறுதி நாள் வரை அப்படியே பாதுகாத்திடும் பொறுப்பை இறைவனே ஏற்றுக் கொண்டிருக்க மாட்டான்.
ஏனெனில், அவன் நன்றாக அறிவான். இந்த இஸ்லாம் – இந்த இறைவழிகாட்டுதல் நபி(ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்னாலும் பலன் தரும். நிலை நாட்ட முடியும் என்பதை இறைவன் நன்றாக அறிவான்.
அதனால்தான் அந்தக் கருணையாளன் இறைவன், பக்கம் அழைத்துக் கொண்டான். இந்த இஸ்லாத்தை இறைவனின் வழிகாட்டுதலை இந்த உலகம் உள்ளவரை மனிதனின் இறுதியான வழிகாட்டுதல் என அறிவித்தான்.
நபி(ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் நம்மிடையே அப்படியே இருக்கும்போது, நபி(ஸல்) அவர்கள் நம்மிடையே இல்லை என்பது நாம் நமது பொறுப்புகளிலிருந்து தப்பித்து கொள்வதற்கு கண்டெடுத்த வாதமே!
இதனால்தான், வரலாற்றில் அந்த முதல் சமுதாயத்தைப் போல் இன்னொரு சமுதாயம் அமையாமல் போனதற்கு வேறு காரணங்கள் உண்டு என்பதை நம்மால் உணர முடிகிறது இதனை ஆழ்ந்து கவனித்திடும்போது பல உண்மையான காரணங்கள் நமக்கு தெரிகின்றன.
முதல் காரணம்
இறைவனின் இறுதித்தூதர் நபி(ஸல்) அவர்களின் உற்ற தோழர்கள், தங்கள் தாகம் தணித்திட்ட முதல் தடாகம் திருகுர்ஆன்தான். திருகுஆன் மட்டும்தான்.
நபி(ஸல்) அவர்களின் வாழ்வு, வாக்கு என்பவையெல்லாம் இந்த தடாகத்தின் ஊற்றிலிருந்து பிறந்தனவே!
ஆகவேதான் நம்பிக்கையாளர்களின் தாய், ஆயிஷா(ரழி) அவர்களிடத்தில் இறைவனின் தூதர் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை எப்படியிருந்தது என வினவப்பட்ட போது, நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை குர்ஆனாக இருந்தது என பதில் கிடைத்தது. (நஸயீ)
அவர்கள், அப்படித் தங்களைத் திருகுர்ஆனிடம் ஒப்படைத்து அதன் வழியில் தங்கள். வாழ்வை அமைத்துக் கொண்டதற்கான காரணம், அவர்களுக்கு அன்றைய சூழ்நிலையில், வழிகாட்டுவதற்கு வேறு மார்க்கங்களோ, வழிகாட்டுதல்களோ, நெறிமுறைகளோ, இல்லை என்பதினால் அல்ல.
அன்று, அந்த மக்களிடையே, ரோம் நாட்டுச் சட்ட திட்டங்கள், பண்பாடுகள், சித்தாந்தங்கள், சிந்தனைப் போக்கு இவையனைத்தும் இருக்கவே செய்தன.
இந்த ரோம நாட்டுச் சட்ட திட்டங்களும், பண்பாடுகளும் தான், இன்று பீடு நடைபோடும் ஐரோப்பிய பண்பாடுகளின் அடிப்படைகள் எனப்போற்றப்படுகின்றன.
அதே போல் கிரீஸ் நாட்டுப் பண்பாடுகளும், தத்துவங்களும் அறிவு விளக்கங்களும் அந்த மக்களிடையே புழக்கத்திலிருக்கவே செய்தன.
சீனத்து சிந்தனைகளும், இந்தியாவின் புனஸ்காரங்களும் அந்த மக்களின் கைகளுக்கு எட்டவே செய்தன. யூதர்களின் பழக்க வழக்கங்களும், கிருஸ்துவர்களின் மத நம்பிக்கைகளும் அவர்களிடையே செயலில் இருந்தன.
ஆகவே, அந்த முதல் இலட்சியத் திருக் கூட்டம், திருகுர்ஆனை மட்டுமே தங்களைத் தயாரிக்கும் ஆலையாக எடுத்துக் கொண்டது என்றால், வேறு கொள்கைகளோ, கோட்பாடுகளோ வழிமுறைகளோ அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதினால் அல்ல.
அவர்கள், வேற்றுக் கொள்கைகள் அவர்களை வழிநடத்துவதை விரும்பவே இல்லை.
இதனால் தான், அன்று உமர்(ரழி) அவர்கள் தெளராத் வேதத்திலிருந்து சில வரிகளை எடுத்துக் காட்டிய போது, இறைவனின் இறுதித் தூதர் நபி(ஸல்) அவர்கள்.
“இறைவனின் பெயரால், நபி மூஸா(அலை) அவர்களே உங்களோடு இருந்தால், அவர்களுக்கும் என்னைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியிருக்காது”, என்று தெளிவுபடுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சி, நபி(ஸல்) அவர்கள், அந்த முதல் சமுதாயத்தினரை, முழுக்க முழுக்க இந்த இறைமறையாம், திருமறையிலேயே தோய்த்தெடுத்தார்கள். அவர்களை வேறு எந்தப் பாசறையிலும் பயிற்றுவிக்க விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது.
அதனால்தான் உமர்(ரழி) அவர்கள் திருகுர்ஆனுக்கு அப்பாற்பட்ட ஒரு வழிகாட்டுதலை எடுத்துக் காட்டிய போது, தனது அதிருப்தியை வெளிக்காட்டினார்கள் நபி(ஸல்) அவர்கள்.
இதையே வேறு சொற்களால் சொன்னால், இறைவனின் இறுதித்தூதர் நபி(ஸல்) அவர்கள் எண்ணத்தில், நினைப்பில், வாழ்வில் தூய்மையான தோர் சமுதாயததை உருவாக்க விரும்பினார்கள். அந்த தூய்மையான சமுதாயம் திருகுர்ஆன் எனும் தூய்மையான பாசறையில் பயிற்சி பெற வேண்டும் என்று விரும்பினார்கள் ஆகவே அந்த முதல் சமுதாயத்தினர் வரலாற்றில் இணையற்ற தோர் சமுதாயமாக இலங்கினார்கள்.
ஆனால் இதற்குப் பின்னால் வந்த சமுதாயத்தினர், திருகுர்ஆனை மட்டுமல்லாம்ல், இதரக்கொள்கைகளிடம் அடைக்கலம் தேடினார்கள்.
இவர்கள் தங்களைச்சுற்றி இருந்த சித்தாந்தங்களுக்கும் சிந்தனைப் போக்குகளுக்கும் தங்களை அடிக்கடி ஆட்படுத்தி கொண்டார்கள்.
இந்த அறியாமையை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகள் அன்றைய நிலையை விட சற்று வலுவாகவே நம்மை வளைத்துப் பிடித்துள்ளன.
இந்த அறியாமையை அடிப்படையாகக் கொண்ட சூழ்நிலையின் தாக்கம், நமது எண்ணங்களில், சிந்நதனைகளில், பழக்க வழக்கங்களில், நமது இங்கிதங்களில், பண்பாட்டில், கலாச்சாரத்தல், நமது கலைகளில், நமது இலக்கியங்களில் நமது நடைமுறை சட்டதிட்டங்களில் நிறைந்து காணப்படுகிறது.
எந்தளவிற்கு என்றால், இவற்றில் பலவற்றை அதாவது இஸ்லாத்திற்கு எதிரான அறியாமையை, அடிப்படையாகக் கொண்ட வற்றை – நாம் இஸ்லாம் என்று சொல்லி செயல்படுத்தும் அளவிற்கு, இவற்றின் தாக்கம் நம்முள் ஊடுருவி விட்டது.
இதனால் தான் பல இஸ்லாமிய எண்ணங்களும், கோட்பாடுகளும், நம் இதயங்களுக்குள் நுழைய மறுக்கின்றன.
இதனால்தான் நமது உள்ளங்கள் இஸ்லாத்தின் போதனைகளால் விழிப்படையவும், விரிவடையவும் இயலாமற் போயிற்று.
இப்படி மாற்றுச் சித்தாந்தங்களும் , வேற்றுக் கொள்ககைளும் நம்முள் ஊடுருவி நிலை பெற்று விட்டதால்தான். நம்மால் அநத் முந்தைய சமுதாயத்தினரைப் போன்றதொரு சமுதாயமாக உருவாக்கிட இயலவில்லை.
இஸ்லாத்திற்கு எதிரான பழக்க வழக்கங்களையும் கொள்கைக் கோட்பாடுகளையும், விட்டொழித்திட வேண்டும்.
இஸ்லாம் அல்லாத இந்த அறியாமை காலத்து சூழ்நிலைகளிலிருந்தும். அவை ஏற்படுத்திய நிறுவனங்களிலிருந்தும், நாம் பல பயன்களைப் பெற்றுக் கொண்டிருக்கின்றோம். அவற்றையும் விட்டு விட்டு நாம் வெளியே வந்தாக வேண்டும். இவற்றால் நமக்கு எத்துனை இழப்புகள் ஏற்பட்டாலும் சரியே!
இரண்டாவது காரணம்
நபி(ஸல்) அவர்கள் காலத்தில், ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்றால் அந்தக் கணம் முதல், அவர் இஸ்லாம் அல்லாத தனது பழைய பழக்க வழக்கங்களிந்து, தனது முந்தைய சிந்தனைகளிலிருந்து, தன்னை முற்றாக விடுவித்துக் கொள்வார்.
இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வது என்பது, தனது வாழ்க்கையை முற்றாக மாற்றியமைத்துக் கொள்வதாகும் என்பதை நன்றாக உணர்ந்தார்.
அவர்கள் தங்களை பிணைத்திருந்த அத்தனையையும் துறந்து திருகுர்ஆனின் வழிகாட்டுதலுக்குள் தஞ்சம் புகுந்த பின்னர், தங்களுடைய முந்தைய வாழ்விலிருந்து தங்களை முற்றாக விடுவித்துக் கொண்டார்கள் என்பது மட்டுமல்ல,
திருகுர்ஆன் நிழலில் தங்களது வாழ்க்கை, அடி முதல் முடிவரை மாறிப் போய் விட்டதை கண்டனர்.
இஸ்லாத்தில் தங்களை இணைத்துக் கொண்ட நாள் முதல், அவர்கள் திருகுர்ஆனின் நடமாடும் விளக்கங்களாக மாறினார்கள்.
ஜாஹிலியா நாட்களின் பழக்க வழக்கங்கள் -அறியாமை காலத்து – இஸ்லாத்திற்கு முந்தைய காலத்துப் பழக்க வழக்கங்களை பண்பாடுகளை- கொள்கைகளை – கோட்பாடுகளை விட்டுவிடுவதுதான் பல தெய்க கொள்கைகளிலிருந்து விடுபடுவது என்று பொருள்படும்.
பின்னர் தமது வாழ்வை திருகுர்ஆனின் வழியில் திருகுர்ஆனின் வழியல் மட்டும் அமைத்துக் கொள்வது தான், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வது என்று பொருள்படும்.
இன்று, நம்மைச் சுற்றியும் மெளட்டீக கொள்கைகள் - பல தெய்வ கொள்கைகள் மண்டிக் கிடக்கின்றன. அத்தோடு நம்மை அறைகூவி அழைக்கவும் செய்கின்றன.
அல்லாஹ் அந்த வழிகாட்டுதல்களை இறுதிநாள் வரை பாதுகாப்பை தன் பொறுப்பு என ஏற்றுக் கொண்டானோ அந்த வழிகாட்டுதல்களின் பக்கம் திரும்பியாக வேண்டும்.
இந்த மகத்தான பணியை, நம்மை சீரமைப்பது திருகுர்ஆனின் பாதையில் வடிவமைப்பது என்பதில் ஆரம்பித்து இந்த அறியாமையில் உழலும் சமுதாயத்தின் அடிப்படையையே மாற்றி, அதனையும் இஸ்லாமிய மயமாக்கி விடுவது என்பதில் முடிந்திடவேண்டும்.
இஸ்லாத்திற்கு புறம்பான கொள்கைகளின் தற்காலிக கவர்ச்சி எத்துனை அலங்காரமானதாக இருந்தாலும் அவற்றை நாம் கருத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது.
அவற்றை ஊசிமுனை அளவிற்குக் கூட நாம், சமரசம் செய்திடக் கூடாது.
நமது பாதை (திருகுர்ஆனின் பாதை) வேறு; அதன் பாதை (இஸ்லாம் அல்லாத இதரக் கொள்கைகளின் பாதை) வேறு. நாம் அவற்றின் வழியில் கடுகளவு தூரமே சென்று விட்டால் கூட நாம் நமது லட்சியத்தில் முழுமையாக தோல்வியடைந்து விடுவோம். (அல்லாஹ் நம்மை காப்பாற்றட்டும்!)
இன்றைய சூழ்நிலையில், இந்தப் பாதையில் குர்ஆன் காட்டும் இந்த பாதையில் மட்டுமே நாம் பயணத்தை துவக்கினால்.
எண்ணற்ற இன்னல்களுக்கு ஆளாவோம். நாம் கடுமையான – விலை மதிப்பற்றத் தியாகங்ககளைச் செய்திட வேண்டி வரும். இதையெல்லாம் நாம் நன்றாக அறிவோம் ஆனால் நாம் ஒப்புமையற்ற அந்த முதல் சமுதாயத்தைப் போல் ஆகிட வேண்டும் என்றால் இதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.
ஆகவே இஸ்லாமிய எழுச்சியை ஏற்றி வைக்கும் முதல் நடவடிக்கையாக நாம்- நபி(ஸல்) அவர்களின் உற்ற தோழர்களைப் போல் – இஸ்லாம் அல்லாதவற்றிலிருந்து வெளியேறிட வேண்டும். திருகுர்ஆனிடம் முழுமையாக தஞ்சம் புகுந்திட வேண்டும்.