Wednesday, February 9, 2011

உமர் சுலைமான் இஸ்ரேலும் அமெரிக்காவும் முன்பே தெரிவு செய்யதுள்ள அதிபர்: விக்கிலீக்

உமர் சுலைமான் இஸ்ரேலும் அமெரிக்காவும் முன்பே தெரிவு செய்யதுள்ள அதிபர்: விக்கிலீக்

OurUmmah: விக்கிலீக் லண்டனை தளமாக கொண்டு செயல்படும் The Daily Telegraph க்கு வழங்கியுள்ள தகவலை The Daily Telegraph பத்திரிகை வெளியிட்டுள்ளது அதில் தற்போது எகிப்தின் துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள எகிப்தின் உளவு துறை தலைவர் உமர் சுலைமான் எகிப்தின் அடுத்த ஜனாதிபதியாக நியமிக்கப் படவேண்டும் என்று இஸ்ரேல் அமெரிக்காவிடம் தெரிவித்தமை வெளியிடப்பட்டுள்ளது, கடந்த 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இரகசிய பாதுகாப்பு கலந்துரையாடலின் போது உமர் சுலைமானை எகிப்தின் அடுத்த ஜனாதிபதிக்கு பொறுத்த மாணவராக இஸ்ரேல் எடுத்துரைத்துள்ள இரகசிய ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது
இஸ்ரேலின் யுத்த அமைச்சின் மூத்த ஆலோசகர் டேவிட் ஹாச்ஹம் -David Hacham- என்பவர் பல தடவைகள் இந்த வேண்டுதலை விடுத்துள்ளார் என்றும் இஸ்ரேலிய அமைச்சுக்கும் எகிப்து புலனாய்வு துறைக்கும் இடையான விசேட தொலை தொடர்பு தினமும் இயங்கி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது விரிவாக
வளைகுடா சமாதான முயற்சிகளுக்காக செயல்பட்டு வந்தவரான உமர் சுலைமான் ஒரு தடவை இஸ்ரேல் இராணுவம் எகிப்தை ஆக்கிரமித்தால் அதை நான் வரவேற்பேன் என்று தெரிவித்துள்ளார் இவர் தெரிவித்ததாக வெளியாகியுள்ள தகவலில் அயல் நாடான காஸாவில் இயங்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதை நிறுத்த இஸ்ரேல் இராணுவம் எகிப்தை ஆக்கிரமித்தால் அதை நான் வரவேற்பேன் என்று தெரிவித்துள்ளார்
வயதாகிக்கொண்டிருக்கும் ஹுஸ்னி முபாரக் வயது 83 தொடர்பில் கெய்ரோவில் இருக்கும் அமெரிக்கா தூதரகமும் , டெல் அவியும் எகிப்தின் உளவுத்துறை தலைவர் உமர் சுலைமானுடன் அடுத்த எகிப்தின் தலைவர் பற்றி தொடர்ந்து ஆலோசிக்கப் பட்டுவந்ததாகவும் தெரிவித்துள்ளது
அரபு முஸ்லிம் நாடுகளில் முக்கிய நாடாகவும் இஸ்ரேலுடனும் அமெரிக்காவுடனும் நெருங்கிய உறவு கொண்ட நாடான எகிப்தின் அரசியல் நிலைப்பாடு தொடர்ந்து பேணப்படவேண்டும் என்பதில் அமெரிக்காவும் இஸ்ரேலும் மக்களின் உரிமைகளுக்கு மேலாக மிகுந்த கரிசனை கொண்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டி காட்டுகின்றனர் தற்போது துணை ஜனாதிபதியாக முபாரக்கினால் நியமிக்கப்பட்டுள்ள உமர் சுலைமான் அமெரிக்காவின் முழு ஆதரவையும் பெற்றுள்ளார் என்பது குறிபிடத்தக்கது

No comments:

Post a Comment