Friday, February 11, 2011

‘வெற்றிவரை புரட்சி’- Revolution until victory

எகிப்தில் மிக பாரிய ஆர்பாட்டம் ‘வெற்றிவரை புரட்சி’ நடைபெறுகின்றது
எகிப்தின் ஜனாதிபதி முபாரக் அரசுக்கு எதிரான ஆர்பாட்டங்கள் 18 ஆவது தினத்தில் இன்று இதுவரை காணாத மக்கள் வெள்ளமாக காணப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன ஹுஸ்னி முபாரக் நேற்று இரவு பதவி விலகுவார் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்த மக்கள் பலத்த ஏமாற்றமும் கோபமும் அடைந்துள்ளனர் இதை தொடர்ந்து இன்று வெள்ளிகிழமை ஜும்மாஹ் தொழுகையின் பின்னர் மிக பாரிய அளவில் ஆர்பாட்டம் வெடித்துள்ளது.
எகிப்தின் தேசிய தொலைக்காட்சி மக்களால் சுற்றிவளைக்க பட்டுள்ளது ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக மக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையில் முறுகல் நிலை காணப்படுவதாகவும் அல் ஜஸீரா தெரிவிக்கின்றது முபாரக்கின் அறிவிப்பை நிராகரித்துள்ள மக்கள் ‘வெற்றிவரை புரட்சி’- Revolution until victory- என்று அறிவித்து நாடு தழுவிய அமைதி ஆர்பாட்டத்தில் குதித்துள்ளனர் விரிவாக எகிப்தின் இராணுவம் தற்போது முபாரக் அரசுக்கு சார்பான நிலை எடுத்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது
இணைப்பு-2 இதேவேளை நேற்று முபாரக்கின் உரை தொடர்பாக கருத்துரைத்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோசி ஒரு சர்வாதிகார அரசுக்கு எதிராக நடைபெறும் ஆர்பாட்டம் இஸ்லாமிய சர்வாதிகாரத்தை ஏற்படுத்தாமல் பார்த்து கொள்ளவேண்டும் ஈரானிலும் மன்னர் ஷா என்ற மேற்குலக ஆதரவாளருக்கு எதிராக நடைபெற்ற ஆர்பாட்டங்கள் இஸ்லாமிய சர்வாதிகாரத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளமை குறிபிடத்தக்கது

No comments:

Post a Comment