Wednesday, June 30, 2010

ஆப்கானிஸ்தானின் கனிமத் தாதுக்கள் ஒரு பார்வை

அது அல்லாஹ்வின் அருட்கொடை . அவன் நாடியவருக்கு அதனை வழங்குகிறான் (அல் குர்ஆன் 5:54)
leave a comment »
M.ஷாமில் முஹம்மட்
ஆப்கானிஸ்தானின் கனிமத் தாதுக்கள் ஒரு பார்வை
உலகில் இன்று அதிகமாம ஆச்சரியமாக பார்க்கப்படும் விடையமாக ஆப்கானிஸ்தானின் கனிமத் தாதுக்கள் விடயம் கருதபடுகின்றது ஆப்கானிஸ்தானில் கண்டறியப்பட்டுள்ள கனிமத் தாதுக்களின் மதிப்பு மட்டும் ஒன்று தொடக்கம் இரண்டு ட்ரில்லியன் டொலர்கள் என தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும் அதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஒரு ட்ரில்லியன் டொலர்கள் என வைத்து கொண்டாலும் 1 ட்ரில்லியன் டொலர் இதை பில்லியன் கணக்கில் -மில்லியன் கணக்கில் அல்ல – சொன்னால் 1000 பில்லியன் டொலர்கள் ஆகும் இவ்வளவு பெரிய கனிமத் தாதுக்களை ஆப்கானிஸ்தான் எப்படிப் பயன்படுத்தப் போகிறது இதை அமெரிக்காவும் மற்ற மேலாதிக்க நாடுகளும் எப்படி சுருட்டப் போகிறது என்பது தான் இன்றைய பொருளாதார உலகின் பிரதான வினா இந்த வினாக்களுக்கு அப்பால் சில விடையங்களை நாம் பார்போம்
லித்தியம் ,இரும்பு, தாமிரம், தங்கம், கோபால்ட் மற்றும் இரத்தினம் போன்ற கனிமங்களின் தாதுக்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இருப்பதை முதலில் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையான பெண்டகன் தான் கண்டுகொண்டது என்று அமெரிக்கா கூறியது ஆனால் முதல் முதலில் 1974ஆம் ஆண்டு தெற்கு காபூல் பகுதியில் பல மில்லியன் தொன் நாகம் இருப்பதாக அறியப்பட்டது இந்த தெற்கு காபூலின் நாகப் படிவு பற்றிய ஆய்வை 1974 ஆண்டு ஆப்கானிஸ்தான் அரசு ரஷ்யா உதவியுடன் மேற்கொண்டது தொடர்ந்து வந்த காலபகுதியில் ரஷ்யா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது 1979 தொடக்கம் 1989 வரையிலான 10 வருட ஆக்கிரமிப்புக்கு விரிவாக பார்க்க ஆப்கான் உள்ளானது இதனால் ஆப்கானிஸ்தான் மக்கள் சுயமாக ஆய்வுகளை செய்து தமது புதையல்களை கண்டு கொள்ள ரஷ்ய ஆக்கிரமிப்பு அனுமதிக்க வில்லை என்று கூறவேண்டும் ரஷ்யா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது அங்கு எதையும் சாதிக்க முடியவில்லை இந்த ஆக்கிரமிப்பு மிக பாரிய தோல்வியாக ரஷ்யாவுக்கு அமைந்தது ரஷ்யா ஆப்கான் இஸ்லாமிய போராளிகளிடம் மிகவும் மோசமாக தோற்றதாலும் அதை தொடர்ந்து சோவித் ரஷ்யா பல துண்டுகளாக உடைந்தமையாலும் கனிமங்களின் தாதுக்கள் பற்றிய ஆய்வுகளை அகழ்வுகளை ரஷ்யா செய்ய முடியாது போய்விட்டது
ரஷ்ய ஆக்கிரமிப்பு ஆப்கானிஸ்தான் மக்கள் சுயமாக முழுமையான ஒரு ஆய்வை செய்து தமது புதையல்களை கண்டு கொள்ள ஆப்கானிஸ்தான் மக்களை அனுமதிக்க வில்லை என்று கூறவேண்டும் எனினும் தாதுகள் பற்றிய முதல் கண்டுபிடிப்பை ஆப்கானிஸ்தான் மக்கள் தான் மேற்கொண்டார்கள் ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு பின்னர் சிறிய காலம்தான் ஆப்கான் மக்கள் ஆப்கானிஸ்தானை ஆண்டார்கள் தாலிபான் அரசு மிகவும் சிறப்பான ஊழல் அற்ற அரசாக மேற்கு நாடுகளாலும் பார்க்கப்பட்டது இந்த இஸ்லாமிய அரசு தன்னை பலப் படுத்த முன்னர் 2001 ஆண்டு அமெரிக்க ஆக்கிரமிப்பு படை ஆப்கானிஸ்தானை தனது கட்டுபாட்டின் கீழ் கொண்டுவந்தது இந்த அமெரிக்க ஆக்கிரமிப்பு இன்று வரை தொடர்கின்றது
இந்த ரஷ்ய அமெரிக்க மேலாதிக்க சக்திகள் ஆப்கானிஸ்தான் மக்களை சுதந்திரமாக வாழ அனுமதித்திருந்தால் ஆப்கானிஸ்தான் இன்று இஸ்லாமிய பொருளாதார வல்லரசாக வளர்த்திருக்கும் , உலகின் கிலாபத் மீள் எழுச்சியின் தலை நகராகவும் மிளிர்ந்திருக்கும் ரஷ்ய அமெரிக்க மேலாதிக்க பேய்களின் வெறியாட்டத்தால் ஆப்கான் மக்கள் தொடர்ந்து வதைக்கப்படும் நிலையில் அவர்கள் எப்படி ஆய்வுகளையும் , அகழ்வுகலையும் செய்யவார்கள் ஆகவே ஆப்கானிஸ்தான் மக்களின் இன்றைய நிலைக்கு ஆப்கான மக்கள் காரணமல்ல இந்த மேலாதிக்க சக்திகள் தான் முழு காரணம்
அதேபோன்று ஆப்கானிஸ்தானுடன் முதல் கனிமத் தாதுக்கள் தொடர்பான ஒப்பந்தம் செய்து கொண்ட நாடு சீனா, சீனாவின் – China Metallurgical Group என்ற அரச நிறுவனம் இந்த ஒப்பந்ததை 2007 ஆண்டு செய்து கொண்டது சீனா காபூலின் தொன்பகுதியில் காணப்பட்ட தாது அகழ்வுக்கான ப்ராஜெக்ட்டை 3.4 பில்லியன் டாலர் செலுத்தி பெற்றுக்கொண்டது தன்னுடன் போட்டியிட்ட மற்ற நாடுகளை விடவும் 1.0 பில்லியன் டாலர் அதிகமாக செலுத்தியும் 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆப்கானிஸ்தான் முக்கிய அமைச்சர் ஒருவருக்கு லஞ்சமாக வழங்கியும் இந்த ஒப்பந்ததை ஆப்கானிஸ்தானுடன் செய்து கொண்டது என்று அன்று அமெரிக்க செய்திகள் தெரிவித்தன ஒப்பந்ததை செய்வதில் சீனா அமெரிக்காவை விடவும் ஏனைய மேற்கு நாடுகளை விடவும் முந்திக்கொண்டு இந்த இந்த ஒப்ந்ததை செய்துகொண்டது சினாவுக்கு போட்டியாக அமெரிக்க நிறுவனமான Phelps Dodge, ரஷ்ய நிறுவனமான Strikeforce ,பிரிட்டன் நிறுவனமான Kazakhmys Consortium, மற்றும் கனடா நிறுவனமான Hunter Dickinson ஆகியன கடும் போட்டி போட்டன இறுதியல் சீனா வென்றது
இங்கு சீனா அமெரிக்காவையும் ஏனைய மேற்கு நாடுகளையும் முந்திக்கொண்டு ஒப்பந்தம் செய்தமை அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் பொருளாதார வளங்கள் என்பதையும் விட இஸ்லாமிய எழுச்சியை தடை செய்வதில் முழு கவனத்தையும் கொண்டுள்ளமையை காட்டுகின்றது ஈராக்கிலும் , ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளைவிடவும் சீனா பொருளாதார தளத்தில் ஆழமாக கால் பதித்துள்ளது
வாஷிங்டனை தளமாக கொண்டு இயங்கும் மத்திய ஆசிய கவ்காஸ் என்ற சுதந்திர ஆய்வு நிறுவனத்தின், -The Central Asia-Caucasus Institute- தலைவர் எஸ் . பேட்ரிக் ஸ்டார் -S. Frederick Starr – ‘ இது ஆச்சரியமான விடையம் அமெரிக்காவும் , நேட்டோவும் ஆப்கானில் சீனாவின் பொருளாதார உள்நுளைவுக்கு அறிவிக்கபடாத ஒரு தயாரிப்புகளை செய்கிறார்களா என்றும் நாங்கள் சுமைகளை சுமக்கிறோம் அவர்களோ- சீனா- பலனை அறுவடை செய்கின்றார்கள்’-“We do the heavy lifting,” he said. “And they pick the fruit.”- என்றும் குறிபிட்டார்
ஆகவே அமெரிக்க , மற்றும் மேற்கு நாடுகளின் ஆக்கிரமிப்புகளின் பிரதான நோக்கமாக உலகின் வளங்களை தமது கட்டுபாட்டின் கீழ் வைத்திருத்தல் என்பது ஈராக் , ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் ,யமன் போன்ற முஸ்லிம் நாடுகளில் மாறுபடுகின்றது அமெரிக்கா உலகில் 75 நாடுகளில் தமது தளங்களை அமைத்துள்ளது இதன் பிரதான நோக்கம் வேறாகவும் ஈராக் , ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் ,யமன் போன்ற நாடுகளின் மீதான மேலாதிக்க அல்லது ஆக்கிரமிப்பின் நோக்கம் வேறாகவும் இருக்கிறது இங்கு பொருளாதாரம் இவர்களுக்கு இரண்டாவதாகவும் இஸ்லாமிய எழுச்சியை அடக்குதல் முதல்மையனதாகவும் இருக்கிறது
கடந்த வருடம் ஓய்வு பெற்ற பிரிட்டிஷ் இராணுவ தளபதி றிச்சர்ட் டன்னட் General Richard Dannatt – ஆப்கான மீதான போர் கிலாபத்- இஸ்லாமிய ஆட்சிமுறை – மீண்டும் ஏற்படுத்தப்படாமல் தடுக்கும் போர் என்பதை உறுதிப்படுத்தினார் இவர் BBC’s Today program இக்கு வழங்கிய செவ்வியில் ‘ இஸ்லாமிய திட்டமுறை Islamist agenda ஒன்று இருக்கிறது அதை நாம் தென் ஆப்கானிஸ்தானில் அல்லது ஆப்கானிஸ்தானில் அல்லது தெற்கு அசியாவில் அவற்றை எதிர்க்காவிட்டால் , அதன் செல்வாக்கு வெளிப்டையாக வளரும் அது நன்றாக வளரக்கூடியது அது தெற்கு அசியாவில் இருந்து மத்திய கிழக்கு , வட ஆபிரிக்கா நோக்கி 14 ஆம் , 15 ஆம் நூற்றாண்டு கிலாபத்தின் பதிவுகளை கொண்டு நகர்வதை நாம் காணமுடியும்’ என்று கூறினார்
ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்தது ஆனால் ஈராக்கில் அதிகமான பொருளாதார ஒப்பந்தங்களை செய்திருப்பது அமெரிக்கா அல்லாத நாடுகள் தான் அதிலும் சீனா தான் அதிகமான பொருளாதார ஒப்பந்தங்களை செய்துள்ளது அதேபோன்று ஆப்கானிஸ்தானில் ஒரு துப்பாகி குண்டையும் பயன்படுத்தாமல் எந்த உயிர் இழப்பும் இன்றி அமெரிக்காவை புறம் தள்ளி சீனா 2007 ஆண்டு கனிமத் தாது ஒப்ந்ததை செய்து கொண்டது இவைகள் அமெரிக்க ஆக்கிரமிப்பின் பிரதான நோக்கத்தை மிகவும் தொளிவாக காட்டுகின்றது ஆகவே அமெரிக்க ஆக்கிரமிப்பின் பிரதான நோக்கமாக எண்ணெய் வளங்களை கைப்பற்றுதல் , வளங்களை தமது கட்டுபாட்டின் கீழ் வைத்திருத்தல் என்பதற்கு அப்பால் உலகில் எழுச்சி பெற்றுவரும் இஸ்லாமிய சக்திகளை அழிப்பதுதான் பிரதானமாக இருக்கிறது.
நிச்சயமாக அல்லாஹ் வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும், உங்களுக்கு வசப்படுத்தி இருக்கிறான் என்பதையும்; இன்னும் தன் அருட் கொடைகளை உங்கள் மீது புறத்திலும், அகத்திலும் நிரம்பச் செய்திருக்கிறான் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? ஆயினும், மக்களில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் போதிய கல்வியறிவில்லாமலும்; நேர்வழி இல்லாமலும், ஒளிமிக்க வேதமில்லாமலும் அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்கின்றனர். (அல்குர்ஆன்:31:20)

Wednesday, June 23, 2010

பிளக் வேட்டர் -Blackwater Worldwide-

பிளக் வேட்டர் -Blackwater Worldwide- பற்றி சுதந்திர ஊடகவிலாளரும் நூல் ஆசிரியருமான Jeremy Scahill
பிளக் வேட்டர் -Blackwater Worldwide- பற்றி சுதந்திர ஊடகவிலாளரும் -Blackwater: The Rise of the World’s Most Powerful Mercenary Army -என்ற மிகவும் பிரபல்யமான நூலை எழுதியவருமான ஜெர்மி இஸ்காஹில் -Jeremy Scahill- வழகியுள்ள பேட்டி
இவரின் பேட்டியை பார்பதற்கு முன்னர் இங்கு தரப்படும் Blackwater Worldwide சமந்தமான விபரங்களை படித்து விட்டு பார்க்கவும் விளங்குவதற்கு இலகுவாக அமையும்
பிளக் வேட்டர் 1997 இல் எரிக் பிரின்ஸ் – Erik Prince- என்பவனால் உருவாக்கபட்ட அமெரிக்க தனியார் இராணுவ கம்பனி. இது Xe Services LLC என்றும் அழைக்கபட்டது இந்த நிறுவனம் 2007 இல் Blackwater Worldwide என்று பெயர்மாற்றம் பெற்றது இந்த தனியார் இராணுவ அமைப்பு ஒரு வருடத்துக்கு 400,00 உறுபினர்களை பயிற்சி வித்து வருகின்றது. இது இரண்டு பிரதான பிரிவாக இயங்கி வருகின்றது ஒன்று அமெரிக்க தேசிய பாதுகாப்புகான வெளிப்பாட்டையான நடவடிக்கை பிரிவு இரண்டாவாது அமெரிக்க தேசிய பாதுகாப்புகான இருண்ட அல்லது இரகசிய பிரிவு இந்த அமைப்பின் வெளிப்பாட்டையான நடவடிக்கை பிரிவு பொதுவாக அமெரிக்காவிலும் அமெரிக்கா தளம் அமைத்துள்ள 75 நாடுகளிலும் செயல் படுகின்றது இருண்ட அல்லது இரகசிய பிரிவு குறிப்பாக ஈராக் , ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் , யமன் போன்ற நாடுகளில் இயங்கு கின்றது இந்த இருண்ட அல்லது இரகசிய பிரிவு அமெரிக்க CIA உளவு அமைப்புடன் மிகவும் நெருக்கமான உறவை கொண்டுள்ளது ,இந்த பிரிவு கொலை , கடத்தல் , அழிவு நாசவேலை போன்றவற்றை செய்து வருகின்றது இதை செய்வதற்கு அமெரிக்க ஒபாமா நிர்வாகம் முழு அனுமதி வழங்கிவருகின்றது என்று குற்ற சாட்டுகள் உள்ளன.விரிவாக பார்க்க
இந்த அமைப்பு ஈராக்கில் நடத்திய மக்களால் அறியப்பட்ட படுகொலைகள் காரணமாக ஈராக்கிள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனிலும் இரகியமாக இயங்கி வருவதாக ஈராக் போராளிகள் தெரிவிக்கின்றனர் இந்த Blackwater Worldwideதான் ஈராக்கில் ஷியா சுன்னாஹ் என்ற முரண்பாட்டை தினமும் ஓட்டப்படும் இரத்த ஆறாக விரிவாக்கினார்கள் என்ற குற்றசாட்டு மிக பலமாகவுள்ளது இந்த ஷியா சுன்னாஹ் என்ற பலமான இரத்த முரண்பாட்டின் பின்னர் இஸ்லாமிய போராளிகளை இலகுவாக அமெரிக்க ஆக்கிரமிப்பு படை ஒடுக்க வழி கிடைத்தது தற்போது அந்த வேலையை ஆப்கானிஸ்தானிலும் , பாகிஸ்தானிலும் , யமனிலும் இந்த அமைப்பு செய்து வருகின்றது
2007 ஆண்டு ஈராக்கில் நிசூர் சதுக்கம் என்ற இடத்தில் பிளக் வேட்டர் நடத்திய கொலை வெறியாட்டம் ஒரு வழக்காக அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் பதிவாகியது எனிலும் போதுமான ஆதாரங்கள் இருந்தும் வழக்கின் நீதிபதி கடந்த வருடம் பிளக் வேட்டரை வழக்கில் இருந்து விடுவித்தார் மனித உரிமை அமைப்புகளின் அழுத்தத்தால் தற்போது இந்த வழக்கு மீட்டும் நீதிமன்றம் வளரவுள்ளது அமெரிக்க நீதித்துறை இந்த வழக்கை நடாத்த போதுமான ஆதாரங்கள் இருப்பதால் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளது இந்த அறிவிப்பால் சிக்கலில் மாட்டியுள்ள எரிக் பிரின்ஸ்- Erik Prince- என்ற அமெரிக்க தனியார் பயங்கரவாத – Blackwater Worldwide- அமைப்பின் தலைவன் துபாய்க்கு சென்றுவிட தீர்மானிதுள்ளதாக தெரிவிக்க படுகின்றது துபாய் சென்றால் இவனை துபாய் அரசால் திரும்பவும் அமெரிக்கா அனுப்பதேவையான ‘தேடப்படுவோர் பரிமாற்ற ஒப்பந்தம்’ எதுவும் இல்லை என்று தெரிவிக்க படுகின்றது
இந்த விடையங்கள் பற்றி சுதந்திர ஊடகவிலாளரும் Blackwater: The Rise of the World’s Most Powerful Mercenary Army என்ற மிகவும் பிரபல்யமான நூலை எழுதியவருமான ஜெர்மி இஸ்காஹில் -Jeremy Scahill- வழகியுள்ள பேட்டியை பார்க்கவும்

Wednesday, June 9, 2010

காஸா மீதான இஸ்ரேலிய முற்றுகையின் காரணமாக குழந்தைகளின் மரணம் 374 ஆக உயர்ந்துள்ளது

காஸா மீதான இஸ்ரேலிய முற்றுகையின் காரணமாக குழந்தைகளின் மரணம் 374 ஆக உயர்ந்துள்ளது


இரண்டாவது முறையாக சென்ற கப்பலும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையால் தடுக்கப்பட்டுள்ளது
முற்றுகைக்கு உள்ளாகியுள்ள காஸா மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க மேலும் ஒரு கப்பல் புறப்பட்டது றீஹல் கோரி -Rachel Corrie என்ற அந்த கப்பல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளால் தடுக்கப்பட்டு இஸ்ரேல் ஆக்கிரமிப்பு துறைமுகமான அஷ்டோட்க்கு- Ashdod- பலவந்தமாக இழுத்து செல்லபட்டுள்ளது காஸா முற்றுகையை உடைத்து இந்த கப்பல் உள்நுழைய முயன்றது எனிலும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு கடற்படையின் சுற்றிவளைப்பில் சிக்குண்டது தற்போது இதனுடனான தொடர்புகள் அனைத்தும் துண்டிக பட்டுள்ளது மலேசிய முன்னாள் பிரதமர் மஹாதிர் முஹம்மத் தலைமையில் இயங்கும் Perdana Global Peace Organisation- என்ற அமைப்பு இந்த ஐரிஷ் கப்பலை ஏற்பாடு செய்திருந்தது இந்த கப்பல் இன்று காஸாவை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது விரிவாக பார்க்க...

முஸ்லிம் உலகின் படைகள் காஸாவை மீட்க வேண்டும்! அல் ஜெஸீராவில் ஒரு செய்தி!!

முஸ்லிம் உலகின் படைகள் காஸாவை மீட்க வேண்டும்! அல் ஜெஸீராவில் ஒரு செய்தி!!

Thursday, June 3, 2010

இமாம் அன்வர் அல் அவ்லாகி

இமாம் அன்வர் அல் அவ்லாகி பணி அமெரிக்க குண்டுகள் மத்திலும் தொடர்கிறது

டாக்டர் அன்வர் அல் அவ்லாகி ஐரோப்பிய மேலாதிக்க பயங்கரவாதத்தை மிகவும் கடுமையாக எதிர்க்கும் முதன்மையான அமெரிக்க இஸ்லாமிய சிந்தனையாளர் என்பது குறிபிடதக்கது யமனில் அமெரிக்க தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டதாக யமனும் , அமெரிக்காவும் கூறி வந்தன , இதனை டாக்டர் அன்வர் அல் அவ்லாகி தானே நேரடியாக மறுத்து இருந்தார் இவரை கொலை செய்யுமாறு அமெரிக்க ஒபாமா நிர்வாகம் கட்டளை இட்டுள்ளது அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் இவரை போலியாக பயங்கரவாதியாக சித்தரிக்க முற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன டாக்டர் அன்வர் அல் அவ்லாகியின் தந்தையான டாக்டர் நசீர் அல் அவ்லாகி அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஒரு மடல் எழுதியுள்ளார் அதில் தனது மகன் நிரபராதி என்றும் அல் கைதா அமைப்புடன் எந்த தொடர்பும் அவருக்கு இல்லை என்றும் போலியாக சோடிக்கப்பட்ட கதைகளை கூறி தனது மகனான டாக்டர் அன்வர் அல் அவ்லாகியை கொலை செய்ய முற்பட வேண்டாம் என்று அவர் குற்றவாளியாக இருப்பின் அமெரிக்க நீதி மன்றத்தின் ஊடாக அதை கையாள வேண்டும் என்றும் கேட்டுள்ளார்
அல்-காயிதாவின் கிளையொன்ரை யமனில் வழிநடத்துவதாக இவர் மீது குற்றம் சாட்டும் அமெரிக்கா தனது இராணுவத்துக்கு இவரை கண்ட இடத்தில் கொலை செய்யுமாறு கட்டளை பிறப்பித்துள்ளது அங்கு “அரேபிய தீபகற்பத்தில் அல்-காயிதா” (Al-Qaeeda in Arabian Peninsula) எனும் அமைப்பை போசிக்கும் நபராக இவரை அமெரிக்கா காண்கின்றது
1971-ம் வருடம் அமெரிக்காவில் பிறந்தவர். அவரது பெற்றோர்கள் யமன் நாட்டைச் சார்ந்தவர்கள். அமெரிக்காவில் வாழ்ந்து வந்தார்கள். இவர் அமெரிகாவில் பிறந்து அமெரிகாவில் பொறியியல் பட்டம் பெற்று பின்னர் மனித வள அபிவிருத்திதுறையில் Phd பட்டம் பெற்றவர் என்பதும் பல காலமாக அமெரிகாவில் ஒரு சிறந்த இமாம்மாகவும் கடமை புரிந்துள்ளார் என்பதும் குறிபிடதக்கது அன்வர் அல் அவ்லாகி அதற்கு முன் 11 வருடங்கள் யமனில் மார்க்கக் கல்வி பயின்றுள்ளார் அவரது தந்தை இவரும் அமெரிக்காவில் டாக்டர் பட்டம் பெற்றவர். யமனில் விவசாயத்துறை அமைச்சராகவும் யமன் ‘ஸான’ பல்கலை கழகத்தின் உபவேந்தராகவும் கடமை புரிந்தவர் என்பது குறிபிடதக்கது விடையம்
நான்கு வருடங்கள் அமெரிக்காவின் சான் டியாகோ நகரில் உள்ள மஸ்ஜிதில் இமாமாகப் பணிபுரிந்து வந்த இவர் அங்கு தொடர் சொற்பொழிவு பிரசங்கம் நிகழ்த்தி வந்தார். தனது துணிவு அறிவு போன்றவற்றால் பிரபலமடைந்த இமாம் . எளிய, அழகான மொழி நடை , சரியான ஆதாரங்களுடன் மிக அழகான நேர்த்தியான பேச்சு. அமெரிக்க முஸ்லிம்கள் மத்தியில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியது இதை அவதானித்த அமெரிக்கா உளவு அமைப்புகள் இவர்மீது குறிவைத்து . இவர் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் பகுதியில் உள்ள ஜோர்ச் வாஷிங்டன் பல்கலை கழகத்திலும் இஸ்லாமிய போதனைகளை மேற்கொண்டார் அமெரிக்க மாணவர்கள் மத்தியில் இவரின் துணிவும் நேர்மையும் செல்வாக்கு செலுத்தியது . பிரசங்கங்கள் பல வடிவங்களில் பதிவு செய்யப்பட்டு இணையத்திலும் பதி வேற்றப்பட்டனஅமெரிக்க உளவுத்துறை அவரை தொடர்ந்து கவனிக்க ஆரம்பித்தது. அவர் மீது பெண்களைத் தொடர்பு படுத்தி போலியான வழக்குகள் பதியப்பட்டது. அது எந்தவித ஆதாரமும் இன்றி குற்றசாட்டுகள் நிராகரிக்க பட்டன , அவர் அது பற்றி கவலைப்படாமல் தனது பணியை தொடர்ந்தார் பின்னர் லண்டனுக்குச் சென்றவர், அங்கு தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். இதுவும் பதிவு களாக வெளிவர, அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் அவருக்கு ஆதரவாளர் வட்டம் பெருக ஆரம்பித்தது. ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்களிடம் பெருத்த தாக்கத்தை அவரது சொற்பொழிவுகள் ஏற்படுத்தின. அவர்களுக்கு இஸ்லாம் முறையான மார்க்க நெறியாக மாறியது. அங்கு பல கண்கள் அவரைக் கண்காணிக்க ஆரம்பித்தது. மேற்கு அரசியலுக்கு எதிரான மனோபாவமும் அதனைத் துணிச்சலுடன் ஒளிவு மறைவின்றிப் பேசும் நேர்மையும் கொண்டிருந்த இமாம் அன்வர் யமனுக்குச் சென்று அங்கேயே தங்கினார். பயங்கரவாதி என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து . செப்டம்பர் 11 தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுடன் அவருக்கும் சம்பந்தம் இருப்பதாய்ப் புது கதை கூறியது அமெரிக்க அரசு . அமெரிக்கா கேட்டுக் கொண்டதற்கிணங்க, யமன் அரசாங்கம் எந்த வித ஆதாரமும் இல்லாமல் அவரைக் கடுங்காவல் சிறையில் அடைத்தது. இரு வருடங்களுக்குப் பிறகு இமாம் அன்வர் விடுவிக்கப்பட்டார்.
வெளியே வந்தவுடன் அவரது பிரசங்கங்களின் வீரியம் மேலும் அதிகமானது. அவரது உரைகள் இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதைக் கண்காணித்து வந்த அமெரிக்கா . நிடால் மாலிக் ஹஸன். அமெரிக்க இராணுவத்தில் மனநல ஆலோசகர்.13 இராணுவ த்தினரை சுட்டு கொன்றார் இந்தச் சம்பவத்துடன் “அன்வருடன் நிடால் மின்னஞ்சல் தொடர்பு கொண்டிருந்தார்” என்று அமெரிக்க கூறுகின்றது . ஆனால் தான் “அவரை இதை செய்ய க் கட்டளை அல்லது ஆலோசனை ஏதும் வழங்கவில்லை ” என்று மறுத்ததுள்ளார் அனால் இமாம் அன்வர் அந்த சம்பவத்தை விமர்சித்துத் தனது இணைய தளத்தில் கட்டுரையொன்று வெளியிட்டார். அதில் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு நிகழ்த்தப்படும் முறைகேடுகளுக்கு எதிரான ஒரு முஸ்லிமின் உணர்வுபூர்வமான எதிர்வினை என்ற கருத்தில் எழுதியிருந்தார் . இன்று தனது பணிகளை யமனில் இருந்து தொடரும் இவர் யமன் இஸ்லாமிய போராளிகளுடன் வாழ்ந்து வருகிறார் இவரை பாதுகாக்கும் பொறுப்பை அங்குள்ள போராளிகள் ஏற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்
இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்கள் ஆங்கில , தமிழ், மொழி இணையங்களின் தொகுப்பாக இங்கு தரப் படுகின்றது

இஸ்ரேல் பயங்கரவாத தாக்குதலை மகிழ்ச்சியாக கொண்டாடும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்கள்

இஸ்ரேல் பயங்கரவாத தாக்குதலை மகிழ்ச்சியாக கொண்டாடும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்கள்
leave a comment »

இஸ்ரேலின் முற்றுகைக்கு உட்படுத்தப்பட்டு உணவு , குடிநீர் , மருத்துவ வசதிகள் , மின்சாரம் இன்றி வதைக்கப்பட்டுகொண்டிருக்கும் காஸா மக்களுக்கு நிவாரண பொருட்களை ஏற்றி சென்ற கப்பல்களை ஆக்கிரமிப்பு இஸ்ரேல் தாக்கி 20கும் அதிகமானவர்களை கொலைசெய்தும் 50 தொடக்கம் 60 வரையானவர்களை படுகாயப்படுத்தியுள்ளது ஏனையவர்களில் அதிகமானவர்களை சிறைவைதுள்ளது இந்த சம்பவங்களை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியிரு பாளர்கள் தமது ஆக்கிரமிப்பு படை செய்த கொலை வெறியாட்டத்தை ஆதரித்து வீதியில் இறங்கி ஆரவாரம் செய்து கொண்டாடுவதை இந்த வீடியோவில் பார்க்க முடியும் இந்த மகிழ்ச்சி ஆர்பாட்டம் இஸ்ரேலில் அமைந்துள்ள துருக்கி எம்பசிக்கு முன்னால் கடந்த 31 ஆம் திகதி நடைபெற்றுள்ளது وَلَنْ تَرْضَى عَنْكَ الْيَهُودُ وَلاَ النَّصَارَى حَتَّى تَتَّبِعَ مِلَّتَهُمْ- அல்குர்ஆன் 2:120
Written by poralikall
June 3, 2010 at 4:54 pm
Posted in பலஸ்தீன்
ஆப்கான் , ஈராக் , பாகிஸ்தான் , தற்போது யமனிலும்
with one comment
அமெரிக்க ஆக்கிரமிப்பு படையின் டோன்- Unmanned Drone விமானங்கள் மூலம் அத்துமீறி ஆப்கானிஸ்தானையும் ஈராக்கையும் , பாகிஸ்தானையும் தாக்கும் அமெரிக்க சட்டவிரோத உளவு விமான தாக்குதல்கள் தற்போது யமன் நாட்டையும் தனது கொடூர வேட்டை பற்களால் கொதற ஆரம்பித்துள்ளது எதுவும் அறியாத சிறுவர் சிறுமிகளை தனது பாசிச வேட்டை பற்களால் கொடூரமாக கொன்று இரத்தமும் சதையுமாக குவித்து வருகிறது இங்கு கொலை செய்யபடுபவர்கள் பெண்களும் , எதுவும் அறியாத குழந்தைகளும்தான் அதிகம் அமெரிக்க பாசிச நகரங்களில் ஒரு குழந்தை தவறி விழுந்து விட்டால் ஒப்பாரி வைக்கும் அமெரிக்க , ஐரோப்பிய மாஸ் மீடியாக்கள் இங்கு பிச்சு தூக்கி எறியப்பட்டு சதை வேராகவும் எலும்பு வேராகவும் குவிக்கப்படும் குழந்தைகளை அமெரிக்க பாசிச தேசத்தை நிலை நிறுத்த தேவையான உரமாக பார்கிறது . சில தினங்களுக்கு முன்னர் யமன் நாட்டின் மீது பரந்த அமெரிக்க உளவு விமானங்கள் பயங்கரவாதிகளை தாக்குகின்றோம் என்ற பெயரில் அப்பாவி பெண்களையும் எதுவும் அறியாத குழந்தைகளையும் படு கொலை செய்துள்ளது இந்த தாக்குதல்களில் 13 பெண்களும் 23 சிறுவர் சிறுமிகளும் கொல்லப்பட்டுள்ளனர் புஷ் அமெரிக்கநிர்வாகத்தில் இருந்த 8 வருடங்களில் டோன்- Unmanned Drone மூலம் 45 இராணுவ இலக்குகளை தாக்கியதாகவும் ஒபாமா நிர்வாகத்தில் ஒன்றரை வருடத்துக்கும் குறைவான காலங்களில் 82 இராணுவ இலக்குகளை தாக்கியதாகவும் அமெரிக்க தகவல்கள் கூறுகின்றது இது ஒபாமா யார் என்பதை காட்ட போதுமானது வீடியோ பார்க்க Video Read the rest of this entry »
Written by poralikall
June 1, 2010 at 8:45 pm
Posted in பயங்கரவாதம்
பொருத்தமான பதில் இஸ்ரேலுக்கு வழங்கப்படும்: துருக்கிய பிரதமர் தையிப் அர்பகான்
with 2 comments
காஸாவுக்கு நிவாரண பொருட்களை ஏற்றி சென்ற கப்பல்களை இஸ்ரேல் பயங்கரவாதி தாக்கி 20கும் அதிகமானவர்களை கொலைசெய்தும் 50 தொடக்கம் 60 வரையானவர்களை படுகாயப்படுத்தியுள்ளது இதில் அதிகமானவர்கள் துருக்கிய நாட்டவர்கள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை துருக்கி கொடியுடன் சென்றகப்பல்களை குறிவைத்து தாக்கியுள்ளது என்று குற்றம் சாட்டபட்டுள்ளது சர்வதேச மனிதாபிமான நிவாரண உதவிக்கான அணியை இஸ்ரேல் தாக்கி பலரை கொன்றமைக்கு பொருத்தமான பதில் இஸ்ரேலுக்கு வழங்கப்படும் என்று துருக்கிய பிரதமர் தையிப் அர்பகான்-Recep Tayyip Erdogan தெரிவித்துள்ளார் -Turkish Prime Minister Recep Tayyip Erdogan has vowed a proper response to Israeli attacks on an international convoy which killed dozens of Turkish nationals – இந்த மனித விரோத அரச பயங்கரவாதத்தை பார்த்துகொண்டு நாம் அமைதியாக எந்த பதிலும் இன்றி இருக்கபோவதில்லை என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார் “It should be known that we will not stay silent and unresponsive in the face of this inhuman state terror,” he was quoted as saying by AFP on Monday- , ஐக்கிய நாடுகள் இஸ்தாபனத்தின் பாதுகாப்பு சபையை கூட்டுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்பதுடன் துருக்கி உட்பட பல நாடுகளில் தமது நாட் டுப்படையை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துமாறு கோரி ஆர்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன Read the rest of this entry »
Written by poralikall
May 31, 2010 at 11:13 pm
Posted in பலஸ்தீன்
மனிதாபிமான உதவி கப்பல்கள் மீது இஸ்ரேலிய பயங்கரவாத வெறியாட்டம்
leave a comment »
காஸாவுக்கு நிவாரண் பொருட்களை ஏற்றி சென்ற கப்பல்களை இஸ்ரேல் பயங்கரவாதிகள் தாக்கி பலரை கொலைசெய்துள்ளனர்: முற்றுகைக்கு உள்ளாகியுள்ள காஸா மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமுகமாக சைப்ரஸ் நாட்டின் துறை முகத்திலிருந்து நிவாரண உதவிப் பொருட்கள் கொண்ட ஒன்பது கப்பல்கள் கொண்ட நிவாரண தொகுதியை காஸாவில் இருந்து 65 K.M தூரத்தில் சர்வதேச கடற்பரப்பில் வைத்து இஸ்ரேலிய பயங்கரவாத கடற்படையும் , விமான படையும் சுற்றிவளைத்து இவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது இதில் 6 கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளது ,15 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயம் அடைத்துள்ளதாகவும் இஸ்ரேல் பயங்கரவாத இராணுவம் சற்று முன்னர் அறிவித்துள்ளது ஆனால் கொல்லப்பட்டுள்ளவர்கள் 20 விடவும் அதிகம் என்று இஸ்ரேல ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கப்பல் தொகுதி நேற்று புறப்பட்டு இன்று அதிகாலை காஸாவை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது இந்த கப்பல் தொகுதி முற்றுகைக்கு உள்ளாகியுள்ள காஸா மக்களுக்கு தேவையான மருந்து மற்றும் உணவு பெருட்களை ஏற்றி சென்றுள்ளது மிக மோசமாக தாக்கப்பட்டுள்ள மனிதாபிமான நிவாரண உதவியாளர்கள் 50 நாடுகளிலிருந்து 800 பிரதிநிதிகள் கொண்ட பிரீடம் போளோடில்லா Freedom Flotilla Convoy நிவாரண கப்பல்களை அனுமதிக்க படமாட்டாது என்று இஸ்ரேல ஆக்கிரமிப்பு அரசு கூறிவந்தது இந்த மனிதாபிமான நிவாரண உதவிவை Free Gaza Movement என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது இக்கப்பல்களில் இஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினரான ஹனீன் ஆபியின் தலைமையில் பல இஸ்ரேலிய மனித உரிமை ஆர்வலர்களும் இருந்தனர் என்று கூறப்படுகின்றது. இவர்களை கைது செய்யப் போவதாகவும், பலஸ்தீனர்களை சிறையிலடைப்போம் என்றும் ,வெளிநாட்டவர்களை நாடு கடத்துவோம் எனவும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அரசு எச்சரித்தமை குறிபிடதக்கது.

இரத்தக்காட்டேரி இஸ்ரேல்!

இரத்தக்காட்டேரி இஸ்ரேல்!

Posted by Abu Umar at 5:47 AM 0 comments

இஸ்லாமிய ஆட்சிதான் அமைதி தரும்!'' - முனைவர் அப்துல்லாஹ்

இஸ்லாமிய ஆட்சிதான் அமைதி தரும்!'' - முனைவர் அப்துல்லாஹ்
பரங்கிப்பேட்டை ஐஎன்டிஜே நிகழ்ச்சியில் கடந்த 23-05-2010 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக மாபெரும் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் சின்னக் கடை வாத்தியாப் பள்ளித் தெருவில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் லுக்மான் தலைமை வகித்தார். மாநில தொண்டரணி செயலாளர் பண்ருட்டி யூனுஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில நிர்வாகிகளான எஸ்.எம். சையத் இக்பால், முஹம்மது ஷிப்லி, மாவட்ட துணைத் தலைவர் ஹமீது கவுஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் டாக்டர் அப்துல்லாஹ் "ஆறு நம்பிக்கையும், ஐந்து கடமைகளும்' என்ற தலைப்பிலும், மாவட்டப் பேச்சாளர் மவ்லவி ஏ.கே. ஷிகாபுதீன் "ஒற்றுமை' என்றதலைப்பிலும், தலைவர் எஸ்.எம். பாக்கர் "இஸ்லாமும் இன்றைய இளைஞர்களும்' என்ற தலைப்பிலும், பண்ருட்டி இமாம் முஹம்மது ஷகீர் "இதுதான் இஸ்லாம்' என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.
தலைவர் எஸ்.எம். பாக்கர் பேசுகையில், ""இன்றைய இஸ்லாமிய இளைஞர்களின் நிலை பற்றியும், அவர்களின் சிந்தனையை தூண்டும் வகையில் குர்ஆன் கூறும் குகைத் தோழர்களின் வரலாற்றையும் மேற் கோள் காட்டிப் பேசினார். நபித் தோழர்களில் செல்வந்தர்களாக இருந்த பலர் மரணிக்கும் தருவாயில் கஃபன் துணி கூட போதுமானதாக இல்லாத நிலையில் அடக்கம் செய்யப்பட்டார்கள். அந்த அளவிற்கு அவர்கள் மார்க்கத்திற்காக தங்களை அர்ப்பணித்தார்கள்.
இன்று இஸ்லாமிய இளைஞர்களில் பலர் பெண்களுக்கு இணையாக தொலைக்காட்சி, சினிமா மோகத்தில் மூழ்கி நேரத்தையும், காலத்தையும் வீணடித்து தங்களது வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்களைப் பேணும் விஷயத்திலும் இஸ்லாம் கூறும் நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை. உங்கள் பெற் றோரை "ச்சீ' என்று கூட சொல்லாதீர்கள் என்று அல்லாஹ் கூறுகி றான். ஆனால் பெற்றோரை கொடுமைப் படுத்துவது, அவர்களைக் கவனிக்காமல் தனித்து விடுவது என பெற்றோரின் அருமை தெரியாமல், அவர்களை பராமரிக்காமல் இருப்பதைப் பார்க்கிறோம்.
தவ்ஹீத் பேசும் சகோதரர்கள் கூட ஸுப்ஹு தொழுகையைப் பேணுவதில்லை என்று குறிப்பிட்டு தொழுகையின் அவசியத்தையும், அதன் முக்கியத்துவம் குறித்தும் விரிவாகப் பேசினார்.
இஸ்லாத்தில் ஈமானைக் குறிக்கும் ஆறு நம்பிக்கைகள் குறித்து விரிவாகப் பேசிய டாக்டர் அப்துல்லாஹ், ஐந்து கடமைகளைப் பற்றியும் விளக்கிப் பேசினார். குறிப்பாக தொழுகை குறித்துப் பேசுகையில், தொழுகையில் இந்த சமுதாயம் மிகவும் அலட்சியமாக இருக்கிறது. தந்தையைக் கொண்டு வந்து பள்ளி வாசலில் விடும் மகன் தொழாமல் வெளியே சென்று புகை பிடித்துக் கொண்டிருப்பான். தந்தை தொழுகையில் ஈடுபட்டிருப்பார். இந் நிலையில், மகனை தொழுமாறு அந்தத் தந்தை அவனை அழைப்பதில்லை. மகன் சொர்க்கத் திற்கு செல்ல வேண்டுமென்றஆசை அவருக் கில்லை போல. இது போன்ற காட்சிகளை பார்க்க முடிகிறது.
தொழுகைக்கு அழைத்தால் நேரமில்லை என்ற கெட்ட வார்த்தையை அதிகமானோர் சொல்கின்றனர். இறைவன் கொடுத்த 24 மணி நேரத்தில் நேரமில்லை என்றபொய்யைச் சொல்லுகின்றார்கள்.
ஒவ்வொரு முறையும் நான் தொழுகைக்குச் செல்லும்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வார்த்தை எனக்கு ஞாபகத்திற்கு வரும். வீட்டு வாசலில் ஓடுகிற நீரோடையில் ஒரு மனிதன் ஐந்து முறை குளித் தால் அவன் எவ்வளவு தூய்மை அடைவானோ, அதைப் போன்று ஐவேளை தொழுதால் அவனுடைய உள்ளமும் தூய்மையடையும்'' என்ற நபிமொழியை சுட்டிக் காட்டினார் டாக்டர் அப்துல்லாஹ்.
தொடர்ந்து, ""இஸ்லாம் கூறும் ஏழை வரியான ஜக்காத்தை முறையா கக் கொடுத்தால் இந்த உலகத்தில் இருந்து வறுமையை விரட்டி விடலாம். ஏழைகளே இல்லாத நிலை உருவானால் அமைதியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கக் கூடிய இஸ்லாமிய ஆட்சியை இந்தியாவில் கூட ஏற்படுத்தி விடலாம். இது தொடர்பாக நான் பேசி யதை பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் பொன் ராதா கிருஷ்ணன், "பெரி யார் தாசன் பேசுகிற மேடையில் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி வேண்டுமென்று தீவிரவாதத்தைப் பரப்பி வருகிறார்' என்று விமர்சிக்கிறார்.
நான் கேட்கிறேன், உலகம் முழுவதும் இஸ்லாமிய ஆட்சி வர இருக் கும் சமயத்தில் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி ஏன் வரக் கூடாது? இஸ்லாமிய ஆட்சியில் மட்டும் தான் அமைதி ஏற்படும். சகோதரத்தும் தழைத்தோங்கும். சாதீயக் கட்டுமானங்கள் தகர்த்தெறியப்படும். தீவிர வாதம் தடுக்கப்படும். மக்களுக்கு அமைதியான வாழ்வு கிடைக்கும்'' என்றவர், "நான் இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து இந்துத்துவாவினர் என் வீட் டிற்கு தொலைபேசியில் அடிக்கடி மிரட்டல் விடுத்து வந்தனர். இது குறித்து என் துணைவியார் என்னிடத்தில் சொன்னபோது, இதைக் கேட்க நாதியில்லை என்று எண்ண வேண்டாம். அவர்கள் பேசுவதை அல்லாஹ்வும் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்று சொன்னேன். அன்றிலிருந்து தொலைபேசி மிரட்டல்கள் வருவதில்லை. இது அல் லாஹ் எனக்களித்த வெகுமதி என்றே கருதுகிறேன். என்னைக் கண் காணிக்கிறேன் என்று சொன்னவர்கள் எல்லாம், சில தினங்களுக்குள் என்னை நேரில் வந்து சந்தித்தார்கள்.
தாஃவாவை பொறுத்தவரையில், பிற சமய மக்களிடத்திலே மார்க் கத்தை கொண்டு போய் சேர்க்கக் கூடிய பணியை இந்திய தவ்ஹீத் ஜமா அத் சிறந்த முறையில் செய்து வருகிறது. பிறசமய மக்களிடத்திலே உலகப் பொதுமறைதிருக்குர்ஆனை கொண்டுபோய் சேர்ப்பிக்கின்ற பணியை அவர்கள் செய்து வருகின்றனர். அதனால் தான் நான் இவர்களின் பின்னால் போக வேண்டியிருக்கிறது.
இஸ்லாமிய ஆட்சி தான் மனிதகுலத்திற்கு ஏற்றது. இஸ்லாமியச் சட்டங்கள் தான் மனித வாழ்க்கையின் அமைதிக்கு உத்தரவாதமளிக்க முடியும்'' என்றார் பெரியார் தாசன்.
ஐஎன்டிஜே பரங்கிப்பேட்டை நகரத் தலைவர் சுல்தான் அப்துல் காதர் நிகழ்ச்சியின் நிறைவாக நன்றியுரை நிகழ்த்தினார்.